கொடுத்து வைத்தவரா நீங்கள்? Are You?

எனக்கு ரொம்ப நாளாய் இந்த சந்தேகம் உண்டு. ஒருவருக்கு அதிர்ஷ்டவசமாக ஏதேனும் மகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடந்தால், அவரை கொடுத்து வைத்தவர் என்று சொல்கிறோம். அவர் என்னத்த, யாரிடம் கொடுத்து வைத்தார்? இந்த அரசாங்க காரியமென்றால் அந்த ஆபிஸில் வேலை செய்யும் எல்லோருக்கும் கொடுத்து வைக்கவேண்டியிருக்கிறதே. அந்த மாதிரி நம்ம ஆள் கொடுத்து வைத்த நபரின் தயவால் காரியம் நடைபெற்றது என்று அர்த்தம் கொள்ள வேண்டுமா?

3 Comments:

 1. Go.Ganesh said...

  இந்த மாதிரி யோசிக்க உண்மையிலேயே நீங்க "கொடுத்து வச்சிருக்கணும்"


 2. G.Ragavan said...

  பாங்குல கொடுத்து வெச்சா அது வேணுங்குறப்போ திரும்ப வாங்கிக்கிரலாம்ல. அது போல ஏதாவது நல்லது நடந்தா, அதுக்கு வேற ஏதாவது ஒரு நல்லத Bank of Bagwan-ல டெபாசிட் பண்ணீருக்கன்னு பொருளாம். நீங்க ஏற்கனவே கொடுத்து வச்சவங்க. அதான் நல்லது கெடைக்குது. புரிஞ்சதா ராமநாதன்?


 3. இராமநாதன் said...

  கணேஷ்,
  ஒரு அரைநாள் கம்ப்யூட்டர் முன்னாடி உக்காந்து, தமிழ்மண குஷ்பு வாரம் கொண்டாடினீங்கனா, இந்த மாதிரியெல்லாம் தானா தோணும்...

  ராகவன் சார்,
  அங்கேயும் கொடுத்துதான் வாங்கணுமா? NO downpayment, instant credit சிஸ்டமெல்லாம் பாங்க் ஆப் பகவானில் இருக்கான்னு உங்க தருமன்கிட்ட கேட்டு சொல்லிடுங்களேன்.. :))

  நன்றி


 

வார்ப்புரு | தமிழாக்கம்