Spider Man, Spider Man! - புகைப்படங்கள்

காவிரியில் தண்ணீர் பொங்கி வருவதால், மறுபடியும் குளிக்க போனேன் (இன்னும் ஐந்து நாள் தான் இந்தியாவில் என்பதும் ஒரு காரணம் :-( ) ஷட்டர்கள் சென்ற முறையை விட இந்த முறை அதிகம் திறந்திருந்ததால் வேகமும் அதிகம். எதிர்க்கரையில், திரைப்படங்களிலெல்லாம் காட்டுவது போல் கிராமத்து சிறுவர்கள் அட்டகாசம் செய்து கொண்டிருந்தனர். மேலேயிருந்து குட்டி கரணம் அடிப்பது போன்ற சர்க்கஸ் சாகசங்கள் போன்றவைகளூக்கு ஒரு impromptu போட்டியே நடந்து கொண்டிருந்தது.

குட்டி குட்டி மீன்கள் ஆயிரக்கணக்கில் அடித்துக் கொண்டு வந்து கொண்டிருந்தன. தண்ணீருக்குள் இறங்கினால் shorts-க்குள்ளும் எக்கச்சக்கத்துக்கு புகுந்து கொண்டு தொல்லை கொடுத்தன. சரி, கரையோரம் செல்வோம் என்று சென்றபோது, ஒரு தூணில் சாவகாசமாக காற்று வாங்கி கொண்டு சாரலில் குளித்துக் கொண்டிருந்தார் இந்த ஸ்பைடர் மேன். சிலந்திகள் பொதுவாகவே reclusive என்று கேள்விப்பட்டிருந்ததால் அருகில் செல்வதா இல்லை தள்ளியிருந்தே எடுப்பதா என்ற குழப்பமிருந்தது. ஆனால் கடைசியில் super macro அணியே வென்றது. சரி, மிக எச்சரிக்கையாக அருகில் சென்றேன். சரி இப்போது ஓடிவிடப்போகிறது, இதோ இதோ என்று எனக்கு பிரஷர் எகிறியதே ஒழிய, ஸ்பைடர் மேன் காமிராக்கூச்சம் சிறிதுமில்லாமல் அனுபவமுள்ள மாடல் போல் நிலைகுத்தி நின்று போஸ் கொடுத்தார். ரொம்ப அருகில் செல்வதற்கும் பயம். ரொம்ப சிறியதாக இல்லாமல், மீடியம் சைஸ் இருந்ததே காரணம். ஏதாவது விஷமுள்ள வகை சிலந்தியாயிருந்தால் என்ன செய்வது என்ற கவலை.1. கொஞ்சம் தள்ளியிருந்து!

Image hosted by Photobucket.com
2.இப்போ ரொம்பத்தான் தைரியம் வந்துருச்சு!

Image hosted by Photobucket.com
சரி, இதற்கே பயந்தால் நேஷனல் ஜியோ-விலெல்லாம் வேலை செய்வோர் நிலையென்ன என்று ஆறுதல்பட்டு, 3 inch தூரத்திற்கு மாக்ரோ செட் பண்ணிவிட்டு எடுக்க ஆரம்பித்தேன். இந்த நேரம் பார்த்து வெளிச்சம் பத்தவில்லை. 1/30 கீழ் குறைத்தால், தண்ணீரின் குளிரா இல்லை என் பயமா தெரியவில்லை. கை நடுங்கிவிட்டது. settings மாற்ற நாம் கையை நகர்த்தப்போய் விரலை எங்காவது கடித்து விட்டால் என்ன செய்வது. ஏதாவது சின்ன கைகளாக இருந்தாலாவது பரவாயில்லை. reflex இல் தப்பிக்கலாம். நல்ல தவில் வித்துவான் அளவிற்கு விரல்கள் இருப்பதால், ஸ்பைடர்மேனுக்கு ஒரு நொள்ளக் கண் இருந்தாலே கடிப்பது ஒன்றும் அவ்வளவு கடினமான காரியமில்லை. இவருக்கு திசைக்கு ஒன்றாய் எட்டு வேறு. ISO செட்டிங்குகளை மாற்றி சில ஷாட்கள் எடுத்து நான் நிம்மதியாய் தள்ளி வந்துவுடன் இதற்காகவே காத்துக்கொண்டிருந்தது போல் செஷன் முடிந்து ஸ்பைடர் மேனும் அதிவேகமாய் எஸ்கேப் ஆகிவிட்டார். மொத்தத்தில் இனிமையான அனுபவம்.3. இந்தக் கண்ணு போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?

Image hosted by Photobucket.com


reptiles, arachnids போன்றவற்றுடன் அன்று என்ன ராசியோ தெரியவில்லை. குளித்துவிட்டு படித்துறையின் அருகில் நின்று கொண்டு முதல் மரியாதை சிவாஜி ஸ்டைலில் நானும் அம்மாவும் மேல்துண்டில் மீன் பிடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தோம். அப்போது எங்கிருந்தோ தண்ணீரில் ஒரு பாம்பு அடித்துக் கொண்டு வந்தது. படித்துறையில் ஏற மிகவும் முயற்சி செய்தது. ஆனால் வெள்ளத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் தண்ணீரோடவே போய்விட்டது, பாவம். தண்ணிப்பாம்பா, சாதாப்பாம்பா என்று தெரியவில்லை. தண்ணிப்பாம்புக்கு விஷமில்லைன்னு தனக்குத்தானே சொல்லிகிட்டு ஜாலியா நின்னுக்கிட்டிருந்த என் அம்மாக்கிட்ட சும்மா இல்லாமல் என் கஸின் தண்ணிப்பாம்புக்கும் நல்ல விஷம் உண்டுன்னு டிவி யிலப் பாத்ததா கிளப்பிவிட்டுட்டான்.

கையருகில் காமிரா இல்லாமல் இந்த மாதிரி அருமையான photo-opஐ விட்டு விட்டோமே என்பதுவே என் கவலை. ஆனால் அம்மாவோ போறும் குளிச்சது, முதல்ல தண்ணீலேந்து எழுந்து வாங்கடான்னு அதட்டவும் வீட்டுக்கு கிளம்பியாச்சு. அந்த பாம்பு எங்கே போச்சோ தெரியவில்லை.

இந்த மாக்ரோ எடுப்பது ஒரு வகை addiction ஆகவே ஆகிவிட்டது. நம் வாழ்க்கையில் பார்க்கும் பலவிஷயங்களில் இருக்கும் details ஐ நாம் ரசிப்பதில்லை. ரசிப்பதற்கு நேரமுமில்லை. இந்த மாதிரி மாக்ரோக்களில் கிடைக்கும் புகைப்படங்களில், பல சமயம் இந்த மாதிரி details நாம் எதிர்பாராத இடங்களில் கூட கிடைக்கும். இந்த சிலந்தி போல, நம் கண்முன்னே இருந்தும் சாதாரணமாக தென்படாத விஷயங்களில்கூட எவ்வளவு அழகு என்று வியப்பில் ஆழ்த்துகிறது.
எனது முந்தைய மாக்ரோ முயற்சிகள்

1. வயிரவன் கோயில் நெருப்பெறும்புகள்
2. மஞ்சள் பூவில் வண்டு
3. பட்டுப் பூச்சி
4. குட்டீயூண்டு பூ

12 Comments:

 1. வீ. எம் said...

  அருமையான புகைப்படம்.. ! திறமைசாலி தான் நீங்க ராமனாதன்..


 2. -/பெயரிலி. said...

  படங்கள் நன்றாக விழுந்திருக்கின்றன.


 3. Anand V said...

  Nice


 4. kirukan said...

  are you a fan of Montoya/Mclaren ???


 5. Vasudevan Letchumanan said...

  சின்ன வயதில் சின்னஞ்சிறு சிலந்திகளைப் பிடித்து காலியான நெருப்பெட்டியினுள் விட்டு, பிறகு நண்பர்களின் சிலந்திகளுடன் மோதவிட்டு இரசித்த ( அப்போது ஜீவகாரூண்யம் பற்றியெல்லாம் அறியா வயது )பழைய நினைவுகள் சற்றே வந்து சென்றன.......தங்கள் 'சிலந்தி' படங்களைப் பார்த்தபோது...

  நன்றாக இருக்கின்றன இலத்திரன் படங்கள்!

  அன்புடன்,
  'விவேகம்'
  எல்.ஏ.வாசுதேவன், மலேசியா.


 6. rv said...

  வீ.எம், -/பெயரிலி., ஆனந்த், kirukan, vasudevan letchumanan அவர்களே,

  மிக்க நன்றி.


  kirukan அவர்களே,
  montoya எந்த அணியோ அந்த அணியின் விசிறி நான்!
  தமிழ்நாட்டில் பல இடங்களில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தெரியாமல் கடுப்பேத்துகிறது. உங்களுக்கு எப்படி?


 7. Thangamani said...

  //இந்த மாக்ரோ எடுப்பது ஒரு வகை addiction ஆகவே ஆகிவிட்டது. நம் வாழ்க்கையில் பார்க்கும் பலவிஷயங்களில் இருக்கும் details ஐ நாம் ரசிப்பதில்லை. ரசிப்பதற்கு நேரமுமில்லை. இந்த மாதிரி மாக்ரோக்களில் கிடைக்கும் புகைப்படங்களில், பல சமயம் இந்த மாதிரி details நாம் எதிர்பாராத இடங்களில் கூட கிடைக்கும். இந்த சிலந்தி போல, நம் கண்முன்னே இருந்தும் சாதாரணமாக தென்படாத விஷயங்களில்கூட எவ்வளவு அழகு என்று வியப்பில் ஆழ்த்துகிறது.//

  I accept this!


 8. Karthikeyan said...

  அருமையான படம் அருமையான விளக்கம், மொத்ததில் உங்கள் தளம் மிகவும் அருமை

  அன்புடன்
  கார்த்திக்


 9. G.Ragavan said...

  அருமையான படங்கள் ராமநாதன். மிகவும் நன்றாக வந்திருக்கிறது. காமிராவும் கையுமாகத்தான் அலைவீர்கள் என்று சொல்லுங்கள். பாராட்டுகள்.


 10. Ramya Nageswaran said...

  இவ்வளவு கிட்ட சிலந்திகளைப் பார்த்ததே இல்லை.. நல்ல புகைப்படங்கள். உங்கள் அனுபவமும் படிக்க நன்றாக இருந்தது.


 11. rv said...

  karthik, g.raghavan, ramya nageswaran
  உங்களுக்கு மிக்க நன்றி.


  //காமிராவும் கையுமாகத்தான் அலைவீர்கள் என்று சொல்லுங்கள். பாராட்டுகள். //

  நீங்க வேற, சார். ஊருக்கு கிளம்பறச்சே அவசரத்திலே காமிராவை வீட்டிலேயே விட்டுட்டு வந்துட்டேன். :((

  The One Ring-ஐ பிரிந்த Gollum-ஆய் இப்போ தவிக்கிறேன்.


 12. Willie said...

  Hey. Just browsing around getting ideas for a new site. If your intersted just visit mine. Payday Loans Cash Advance


 

வார்ப்புரு | தமிழாக்கம்