ஆஹா...இத்தாலிக்கும் இந்தியாவுக்குந்தான் என்ன ஓற்றுமை..

சோனியா காந்தி என்னும் வெளிநாட்டில் பிறந்த பெண்மணியை எப்படி இந்தியா தன் மகளாய் தத்தெடுத்துக்கொண்டது. ஒருவிதமான கலாச்சார shock உம் இல்லாமல் அவராலும் தான் எப்படி இந்தியப் பெண்ணாய், இந்தியாவின் கீழ்த்தரமான அரசியலையும் புரிந்து அதற்கேற்றாற்போல் தலைமை ஏற்க முடிந்தது என்பது ரொம்ப வினோதனமான் விஷயம். அதற்கு பதிலளிப்பது போல் உள்ளது கீழ்வரும் அனிமேஷன். இதப்பாத்தப்புறம் தான் புரியுது அன்னைக்கு இந்தியா மீனுக்கு நீர் போலன்னு! :)

Italy Animation

7 Comments:

 1. அழகப்பன் said...

  பொருந்திப்போவதென்னமே உண்மை என்றாலும், நம்மைப்போலவே மற்ற நாடுகளை உயர்த்துபவர்களும், தாய்நாட்டைத் தாழ்த்தி எண்ணுபவர்களும் அங்கும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதையும் உணர்த்தியது.


 2. ENNAR said...

  அன்புத்தலைவர் ராடஜிவின் தேர்வல்லவா!
  சில பண்ணாடைகள் தவறு என சொல்லி விரட்டினாலும் போகாது.ராம ராஜ்யமா? ரோம் ராஜ்யமா? என்றவர்க்கு அழகான பாடம் கற்பித்து ராஜ மாதாவாக இருக்கிறார்.

  என்னார்


 3. rv said...

  அழகப்பன் மற்றும் என்னார் அவர்களே
  நன்றி

  நம் நாட்டை மட்டம் தட்ட வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் கிடையாது. மற்ற நாடுகளோடு ஒப்பிட்டு இங்கே இது சரியில்லை என்று பந்தா காட்டுவதில் விருப்பம் கிடையாது. அதே சமயத்தில் இந்தியாவை குறையே சொல்லக்கூடாதென்பதை வேதவாக்காய் கொண்டு, எங்கும் பரவியிருக்கும் ஊழலையும், லஞ்சத்தையும், கீழ்த்தரமான அரசியலையும் பொறுத்து கொண்டு இருப்பதிலும் நம்பிக்கை கிடையாது. இங்கே இப்படியிருக்கிறதே என்று வருத்தப்பட்டால் நீயெல்லாம் இதே குப்பைலேர்ந்துதானே போனாய், இதே தண்ணீரைத்தானே குடித்தாய் என்று சொல்லி, நீ இப்போ இருக்கும் ஊரில் மட்டும் என்ன வாழ்கிறது என்று எதிர்க்கேள்வி கேட்பது வெறும் ego trip தானே தவிர வேறெதற்கும் பயனில்லை. அதே சமயம், உண்மையான அக்கறையா வெறும் வெட்டி தம்பட்டமா என்று கேட்பவரின் tone-ஐ கொண்டே புரிந்து கொண்டு விடலாம். ஒரு விஷயத்தை நம்மை விட மற்றவர் நன்றாக செய்கின்றார் என்றால், குருட்டாம்போக்காக அதை பின்பற்றுவதற்கும், இல்லை நாம் பண்ணுவதே சரியென்றும் சொல்லுவதற்கும் வித்தியாசமே இல்லை. நமக்கு ஒத்துவரும் விஷயமானால் நல்லவற்றை எடுத்துக்கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து.

  சோனியாவைக் குறித்து சொன்னது வெறும் satire ஆகத்தான். இந்த அனிமேஷனைப் பார்த்தபோது இவரைப் பற்றியும் தோன்றியது. மத்தபடி சீரியஸ் அரசியல் statement எல்லாம் இல்லை.


 4. அழகப்பன் said...

  ராமநாதன் அவர்களே... ஏன் கோபித்துக் கொள்கிறீர்கள்? நானும் ஒரு ஒற்றுமையைத் தான் ஒருவித நக்கலோடு சுட்டிக்காட்டினேன்.

  //இந்தியாவை குறையே சொல்லக்கூடாதென்பதை வேதவாக்காய் கொண்டு, எங்கும் பரவியிருக்கும் ஊழலையும், லஞ்சத்தையும், கீழ்த்தரமான அரசியலையும் பொறுத்து கொண்டு இருப்பதிலும் நம்பிக்கை கிடையாது.//

  உங்களின் இக்கருத்துடன் நானும் ஒத்துப்போகிறேன்.


 5. rv said...

  அழகப்பன் அவர்களே
  கோபமெல்லாம் இல்லை. நான் சொன்னதை தவறாக புரிந்து கொண்டுவிட்டீர்களோ என்று நினைத்து பதிலளித்துவிட்டேன். அவ்வளவுதான்.

  நன்றி


 6. Unknown said...

  நல்லா இருக்குங்க! இதில வர சில விஷயங்கள் இந்தியாவுக்கு ஒத்துவருதுங்குறது உண்மைதான்.

  ஆனால், ஐரோப்பியர்கள் எல்லாம் ஒழுங்கு என்பது போல் (இந்தியர்களுக்கு அமெரிக்கர்கள்!) இருப்பது ஏற்றுக்கொள்ளமுடியாததுங்கிறத, நீங்க ஏத்துகுவீங்கனு நம்புறேன்!

  அது சரி, சோனியாவுக்கு இந்தியர்களைப் பற்றி என்ன கவலை இருக்கப் போகிறது? நேரு குடும்பத்தில் கல்யாணம் செய்து கொண்டதை விட வேறு என்ன தகுதி அவருக்கு இருக்கிறது? நூறு கோடி மக்கள் இருந்தும், நம்மை ஆள்வதற்கு வெளினாட்டில் பிறந்தவர்தான் தகுதியானவர் என்று வெட்கமில்லாமல் கூறுவதற்கு, பாரத புதல்வர்கள் தவிர வேறு யாரால் முடியும்?

  அடிமைத் தனத்திற்கு நாம் எந்த அளவுக்கு அடிமைப் பட்டு இருக்கிறோம் என்பதற்கு இது ஒன்றே போதும்.

  இத்தாலியிலோ அல்லது வேறு எந்த நாட்டிலோ, இந்தியாவில் பிறந்த ஒருவர் போய் அதிபராக ஆகச் சொல்லுங்கள்? செருப்பால் அடித்து துரத்தி விடுவார்கள். அதனாலென்ன, வெளிநாட்டுக்காரன் கையால் அல்லவா செருப்படி வாங்குகிறோம். பெருமைப் பட வேண்டிய விஷயந்தான்.


 7. வல்லிசிம்ஹன் said...

  the video speaks loud just like an Italian.:)))
  Fantastic.

  even in Swiss trains you can make out the diff between the Americans,the British, Swiss Germans and Italians.
  very good observation and a lively post.
  thank you.


 

வார்ப்புரு | தமிழாக்கம்