221. சத்தமில்லாமல் ஒரு சாதனை!

தமிழ்நாட்டுல எல்லாரும் என்னமோ திமுக, அதிமுகலாம் ,அவங்கவங்க நிலைப்பாட்டுக்கு தகுந்தாற்போல, சாதனையோ சோதனையோ செஞ்சதா மாத்தி மாத்தி பேசிக்கிறோம். ஆனா பாருங்க.. நம்மாளுங்க பேசத்தான் லாயக்கு!

அங்க என்னடான்னா வட இந்தியால சத்தமில்லாம ஒரு சாதனைய செஞ்சு காட்டிருக்காங்க உத்தர பிரதேச முதல்வர் மாயாவதி. உத்திர பிரதேசத்திற்கு முதல்வர் ஆகுறது ஒரு சாதனைனாலும் இந்த வருஷத்துல அவங்க செஞ்சிருக்கிறது மெய் சிலிர்க்க வைக்கிறது. பில்டர் நிறைய் கொடுக்க வேண்டிருக்கு. காரணம் சாதனை அந்தா மாதிரி.

இந்த வருடத்தில் இந்தியாவிலேயே அதிகம் வருமான வரி கட்டப்போகும் அரசியல் தலைவர் மாயாவதியாக இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாசத்துலேர்ந்து டிசம்பர் வரைக்கும் அவங்க கட்டிருக்கிற வருமான முன்வரி ரு. பதினைந்து கோடி. வரும் மார்ச் மாதம் வருடமுடிவில் மேலும் ரூ. ஐந்து கோடி கட்டுவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஆகக்கூடி அவரின் வருடத்திய வருமானவரி ரூ. இருபது கோடியைத் தொட்டால், அவரின் சொந்த வருமானம் க்டந்த ஆண்டில் ரூ. அறுபது கோடிக்கும் அதிகமாய் இருந்திருக்கலாம் என்று பிஸினஸ் ஸ்டாண்டர்ட் ஊகிக்கிறது.

இதன் மூலம் இந்தியாவிலேயே அதிக வருமானவரி கட்டும் தரப்பட்டியலில் முதல் 25க்குள் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் என் வருத்தமெல்லாம் கோலிவுட் பாதுசா 'கிங் காங்க்' கான் இந்த வருஷம் ரூ. இருபத்தியேழு கோடி முன்வரி கட்டும்போது ஒரு முதல்வர் அவரை விட ஏழு கோடி கம்மியாக கட்டுவதா? அதுவும் உத்திரப்பிரதேசத்தை இன்னும் பிரித்தால் இந்த சாதனை செய்ய முடியுமா? இதனை உணர்ந்தே, பிரிக்குமுன்னே சாதனையை முறியடிக்கவேண்டும் என்று செல்வி மாயாவதியின் முயற்சிக்கு எடுத்துக்காட்டு: போன வருடம் அவர் முழுவதுமாக கட்டிய மொத்த வருமான வரி ரூ. 12.5 கோடி. இந்த ஆண்டு அதை இரட்டிப்பாக்கி காட்டியிருப்பது நிச்சயம் பாராட்டுக்குரியதன்றோ? எர்லி பர்ட் பல்கலைக்கழகங்கள் அவருக்கு ஹானரரி டாக்டரேட், எம்.பி.ஏ கொடுக்க உடனே அவரை தொடர்புகொள்ளலாம்.

அவரின் முக்கிய வருமானம் தொண்டர்கள் கொடுக்கும் பரிசுகளே! வருமான வரித்துறை 'கமிஷன்'ர்கள் சாதாரணர்களை மிரட்டுவது போல கேட்டு இவரை மிரட்டி கேஸ் போடமுடியாதாம். காரணம் அவர் பொதுச்சேவையில் இருக்கிறாராம். அதனால் சி.பி.ஐ, அது நினைத்தால்(அதாவது மத்திய அரசுக்கு மாயாவதியை பிடிக்கவில்லையென்றால்) மட்டுமே, கேஸ் போட்டு அவரைக் கேள்வி கேட்க முடியுமாம். யார் சொன்னது? தனிமனித சுதந்திரம் இந்தியாவில் இல்லையென்று?

அதேசமயம்... மாயாவதி பாவம் ஒரு பெண். அரசியல் அனுபவம் பத்தாது. அதான் சொத்தெல்லாம் கணக்கில் காட்டுகிறார் என்றும் சொல்லலாம். இதுவே இந்தியாவில் எந்த ஒரு வருமான வரித்துறை ஆளுக்காவது எங்கள் தமிழினத்தலைவரையோ, கோல்(ட்)மாலுக்கே பெஞ்ச்மார்க்காய் திகழும் தங்கத்தாரகையையோ, மக்கள் பிரதிநிதி மருத்துவரையோ கேள்வி கேட்க தெகிரியம் இருக்கா? கேட்டாலும் மழுப்பியே கட்டம் கட்டிற மாட்டோம்? அப்படி வச்சிருக்கோமில்ல.. அங்கதான் நிக்கிறோம் நாம!

----------------------------------------------

நான் 2007 வருஷம் போட்டதுல ஒண்ணு கூட தேறாதுன்னு தெரிஞ்சே அண்ணா பினாத்தலார் இன்னுமொரு தொடருக்கு கூப்பிட்டிருந்தாரு.

கழுதை தேய்ஞ்சு கட்டெறும்பு ஆன கதையாக (கண்டெண்டில் இல்லை. கணக்கில் மட்டுமே) வெறும் நாற்பது பதிவுகளையே இட்டு, அதுவும் பெரும்பாலும் knee-jerk ரியாக்‌ஷன் அல்லது ஒருவருக்கும் புரியாத 'ஞானபீட'(TM) அவார்ட் பெற முழுத்தகுதியினைப் பெற்ற பதிவுகளாய்ப் போனதில் இன்னொருமுறை உங்க நேரத்த செலவழிச்சு உப்புமாவ படிக்கச் சொல்றதுக்கு ஒரு மாதிரி இருந்தாலும் வலையுலகில் சுயசொறிதல் அடிப்படை உரிமை/திறமை என்பதை கணக்கில் கொண்டு இதோ:
கொத்தனாருக்கென்று டெடிகேட் செஞ்சாலும் சென்சிடிவான மேட்டரில் மக்கள் குழப்பதுலதான் இன்னும் இருக்காங்கங்க்றதுக்கு இது.

பயணத்தொடர் எழுதி நாளாச்சுன்னு ஆரமிச்சு ரெண்டுலயே குறைப்பிரசவம் ஆனது செட்டிக்கோட்டை சீரீஸ். அதுக்கப்புறம் தமிழர்களுக்கு விடுதி பிடிக்குமா வீடு பிடிக்குமானு ரொம்ப பீடிகையோட கொத்தனாரின் சாபத்தால் ப்ளாப் ஆனது இந்தப்பதிவு.

நமக்கெல்லாம் பதிவுக்கு ரிசர்ச் என்பதெல்லாம் ஆக்ஸிமோரான் ஆச்சே. அதுனால போட்டு வாங்கிக்கட்டிக்கிறது பழக்கமான ஒண்ணு. இது ஏதோ கொஞ்சம் விதிவிலக்கா போச்சு.

இருநூத்தியிருபதுல இப்பதானே பத்துப்பதிவு பத்திச் சொல்லிருக்கேன்? இன்னும் நிறைய இருக்கு. கோவைப்பக்கம் நான் பொண்ணு பார்க்கப்போனதாய் கிளப்பப்பட்ட பொய் வதந்திகளையும் மீறி இது. அப்துல் கலாம் பத்தி பதிவு போடாதவங்க இருப்பாங்களா? ஆனா அப்துல்கலாமே ஆனாலும் வயிற்றிக்கு சிறிது ஈயப்படவில்லையென்றால் கஷ்டம் என்பதை நிருபிக்க இதுவும் இதுவும்.

போறும். எனக்கே தற்பெருமை தாங்கலை. 2005னு பெனாத்தலார் சொன்னது நான் எழுதின பயணக்கட்டுரைகளாதான் இருக்கும்னு நினைக்கிறேன். மருதைக்கு போலாமாவும் குத்தாலம் போன கதையும் தான் நான் இதுவரைக்கும் குப்பை கொட்டினதுலேயே எனக்கே ரொம்ப பிடிச்சது.

முடிவாக நான் ஆரமிச்ச டேக் வெளையாட்டு ஒண்ணு. பாவப்பட்டு ரெண்டு பேரு போட்டாங்க. மிச்சவங்க போடறேன்னு ஆசைக்காட்டினதோட சரி.

ஆட்டத்துக்கு கூப்பிடறது?
1. ஜிரா
2. குமரன்
3. புலி (இன்னும் போட்டோவே போடலை.. அதுக்குள்ள அடுத்தது.. இதுவாவது போடறாரான்னு பார்க்கலாம்.)

14 Comments:

 1. பினாத்தல் சுரேஷ் said...

  மருதைக்கு போலாமாவும் குத்தாலம் போன கதையும் தான் - நானும் சொல்ல வந்தது! அதை உன் வாயால சொல்ல வைக்கத்தான் 2007 மட்டும் இல்லைன்னு சொன்னேன், மத்தபடி 2007லே நீ போட்டதெல்லாம் மொக்கைன்னு சொல்லவரலே -- ன்னெல்லாம் சொன்னா நீங்க (யூ & கொத்ஸு) நம்பவா போறீங்க?

  ஆங்.. அழைப்பை ஏற்றதற்கு நன்னி.


 2. பினாத்தல் சுரேஷ் said...

  அதென்ன கிங் காங்க் கான்? சீண்டாதே சின்னாபின்னமாயிடுவே!


 3. rv said...

  பெனாத்தலார்,
  //மொக்கைன்னு சொல்லவரலே -- ன்னெல்லாம் சொன்னா நீங்க (யூ & கொத்ஸு) நம்பவா போறீங்க?//

  கண்டிப்பா நம்பப்போறதில்ல... எனக்கு மட்டும் தனியான கண்டிஷன் வேய்வர்லாம் கொடுத்ததுலேயே பூனைக்குட்டியோட சேர்ந்து பூனையும் வந்துருச்சு.

  //சீண்டாதே சின்னாபின்னமாயிடுவே!//
  யோவ்.. அந்தாளுக்கெல்லாம் இந்த பந்தாவா? நார்த் இண்டியன் ஆளுங்க கூட இப்படியெல்லாம் சொல்ல மட்டாங்க.. லூஸ சும்மா விடுமய்யா.. (இஷுபெல்லிங் மிஷ்டேக் இல்லை)


 4. Anonymous said...

  மரணவியாபாரி பத்தி எல்லாம் அமைதி காத்துவிட்டு மாயாவதி பத்தி பேசும்போதே நெளியறது எல்லாம் தெரியறது.. அசத்திட்டேள் போங்கோ!


 5. இலவசக்கொத்தனார் said...

  //கோலிவுட் பாதுசா 'கிங் காங்க்' கான் //

  king kong அப்படின்னு சொல்வதின் மூலம் உங்களுடைய racism தெளிவாகத் தெரிகிறது. உங்களை மூணு பதிவுக்கு தடை செய்யப் போறாங்களாம். பார்த்து.


 6. Geetha Sambasivam said...

  //அதனால் சி.பி.ஐ, அது நினைத்தால்(அதாவது மத்திய அரசுக்கு மாயாவதியை பிடிக்கவில்லையென்றால்) மட்டுமே, கேஸ் போட்டு அவரைக் கேள்வி கேட்க முடியுமாம். யார் சொன்னது? தனிமனித சுதந்திரம் இந்தியாவில் இல்லையென்று?//

  ஹிஹிஹிஹிஹி! நல்லா இருக்கே இதுவும்? :P


 7. rv said...

  அனானி,
  மரணவியாபாரி பத்தி பெரியவர்கள் எல்லாமே, லட்சக்கணக்கான எதிர்ப்பு ஜல்லிக் கருத்துள்ளவர்களை மீறியும், வெற்றிகரமா ஜட்ஜ்மெண்ட்ட எழுதிட்டாங்க....

  எதோ ஏழைக்கேத்த எள்ளுருண்டையா ஒரு மேட்டர் கிடச்சுதேன்னு எழுதுனா அதுக்கெல்லாமுமா Captain Subtextஐ துணைக்கழைப்பது?


 8. rv said...

  கொத்ஸு,
  //king kong அப்படின்னு சொல்வதின் மூலம் உங்களுடைய racism தெளிவாகத் தெரிகிறது.//

  பழச திரும்பக் கிண்டனும் எதிர்பார்த்து வந்திருக்காப்போல இருக்கு....

  குரங்குனு மனுஷன பார்த்து சொன்னாதான் தப்பு. குரங்குனு குரங்கப் பார்த்து சொல்றது ரேசிசம் இல்லை.

  நான் எப்பவும் ரேஸிஸ்ட் கிடையாது... ஏன், இப்பல்லாம் ரேஸ் பாக்கறத கூட நிறுத்திட்டேன்.


 9. Unknown said...

  //மாயாவதி பாவம் ஒரு பெண்//
  பித்தளை?

  //அரசியல் அனுபவம் பத்தாது. அதான் சொத்தெல்லாம் கணக்கில் காட்டுகிறார் என்றும் சொல்லலாம். இதுவே இந்தியாவில் எந்த ஒரு வருமான வரித்துறை ஆளுக்காவது எங்கள் தமிழினத்தலைவரையோ, கோல்(ட்)மாலுக்கே பெஞ்ச்மார்க்காய் திகழும் தங்கத்தாரகையையோ, மக்கள் பிரதிநிதி மருத்துவரையோ கேள்வி கேட்க தெகிரியம் இருக்கா? கேட்டாலும் மழுப்பியே கட்டம் கட்டிற மாட்டோம்//அய்யா, இது பத்தரை மாற்று பாயின்டு!!! மழுப்பல் மட்டுமா? கோர்டுல வருடக் கணக்குல வழக்கு ஓடினா, இன்னும் எத்தனை திரை மறைவு காட்சிகள்! மக்கள் மறக்கத் தொடங்கும் போது, கேஸை அழகாக மூடிடலாம். நம் அரசியல்வியாதிகளின் சாதனைகள் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பாஆஆஆ!


 10. G.Ragavan said...

  மாயாவதியைப் பாராட்டலாம் இந்த விஷயத்துக்கு. அட வர்ரதுக்குக் கணக்குக் காட்டி வரியும் கட்டுறாரே. இதெல்லாம் நம்மூர்ல நடக்காதேய். உத்தமர்களையும் உத்தமிகளையும் இப்படியெல்லாம் நடக்கச் சொல்லக் கூடாது. எதிர்க்கட்சிக்காரங்க மட்டுந்தான் பெட்டி வாங்குவாங்க. மத்தபடி எல்லாரும் உத்தமங்க.

  என்னையும் அழைச்சிருக்கீங்க. வல்லீம்மாவும் கூப்டிருக்காங்க. ரொம்பக் கஷ்டமான வேலைதான். முயற்சி செய்யப் பாக்குறேன்.

  (இனிமே அஞ்சாறு மாசத்துக்கு யாராச்சும் தொடர் விளையாட்டுன்னு தொடங்குனீங்க.....அம்புட்டுத்தான்...தேடி வந்து அடி விழுகும்)


 11. rv said...

  சங்கத்தலைவி,
  //நல்லா இருக்கே இதுவும்? :P//

  நன்னி.. ஆமா சுதந்திரத்துல நாம யாருக்கும் குறைச்சலேயில்லை.. :P


 12. rv said...

  கெக்கேபிக்குணி,
  //பித்தளை? //
  நினச்சேன்.. என்னடா யாரும் மெட்டலர்ஜி வகுப்பெல்லாம் இன்னும் எடுக்கலியேனு..இப்பல்லாம் அது இல்லாம பதிவு இருந்தா உப்புஇல்லாத சப்புமாவா இருக்கு. :))))

  //மக்கள் மறக்கத் தொடங்கும் போது, கேஸை அழகாக மூடிடலாம். நம் அரசியல்வியாதிகளின் சாதனைகள் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பாஆஆஆ!//

  தமிழன் என்றொர் இனமுண்டு.. தனியே அவர்க்கு... அப்படின்னு நம்மளப் பத்தி பெரியவங்கள்லாம் பாட்டு பாடிவச்சிருக்கும்போது அதக் காப்பாத்தவேண்டியது நம்ம கடமையில்லியா?


 13. rv said...
  This comment has been removed by the author.

 14. rv said...

  ஜிரா,
  //உத்தமர்களையும் உத்தமிகளையும் இப்படியெல்லாம் நடக்கச் சொல்லக் கூடாது. //
  உத்தமர்னு நாமளே சொன்னப்புறம் அவங்கள சந்தேகப்படக்கூடாது.. நம்பிக்கை ரொம்ப முக்கியம்.

  //அம்புட்டுத்தான்...தேடி வந்து அடி விழுகும்)//
  :))


 

வார்ப்புரு | தமிழாக்கம்