224. ஆதிக்க சக்தியும் அடங்கிடா தோழரும்!

ஆதிக்க சக்திகள் எப்பொழுதும் தங்களின் ஆதிக்கத்தை தக்கவைத்துக்கொள்ள முயற்சிகள் செய்துகொண்டேதான் இருக்கும். அப்படி தக்கவைத்துக்கொள்வதற்காக அதன் முக்கிய ஆயுதம்: மற்றவரை அடக்கியாள்வதற்கு அவர்களிடம் பயத்தைத் தூண்டிக்கொண்டேயிருக்கவேண்டும். எந்த ஒரு நொடியில் அந்த சக்தியிடம் பயமற்று ஒரு இளைஞன் விழிப்படைகிறானோ, பீடத்தில் இருக்கும் பீடைகளின் வீழ்ச்சிக்கான புரட்சி துவங்கிவிட்டதாகவே நாம் கருத வேண்டும் என்று புரட்சியியல் தத்துவ நிபுணர் ஒருவர் சொல்லியிருக்கிறார்.

தன் தொழிலில், தான் இயங்கும் சமூகத்தில் தான் மட்டுமே முன்னிறுத்தப்பட்டு அத்தனை புகழும் தனக்கு மட்டுமே என்று சுரண்டும் பாசிஸ்ட்கள் இனி கனவில்தான் அவ்வாதிக்கத்தை காணவேண்டும் என்று நம்மைப் போன்ற சாதாரணர்களையும் பெருமைப்படவைக்கும் -empowering the people வகையறா - மாபெரும் புரட்சிகரமான சரித்திர நிகழ்வுகள் நம் வாழ்நாளில் நடப்பது மிகவும் அரிது. மற்றவர்களுக்கு கிடைக்கும் நியாயமான அந்தஸ்தையும் தன் பேராசையால் தட்டிப்பறித்தால் வேகமும் கோபமும் உள்ள இளைஞர்கள் பொறுமையாக இருக்கமுடியுமா?

ஆதிக்க சக்திக்கு குரல்வளையை நெறிக்கும் அத்தகைய ஆதிக்கத்தை செலுத்துமளவுக்கு தகுதி இருக்கிறதா என்ற கேள்வி தேவையற்றது. ஆதிக்கம் செலுத்தும் குழுவிற்கு அத்தகைய தகுதியே இருந்தாலும் - அந்த திறமையை மட்டுமே கொண்டு ஒரு சமூகத்தையே தன் பாதத்தினடியில் போட்டு மிதித்தல் எனும் கொடுமை நடந்துகொண்டிருக்கும் வேளையிலே, ஒரு சக்தியின் வெற்றியில் மற்றவர்களின் தோல்வி இருக்கிறது என்பதும் அதனூடாக மற்றவர் அடிமைப்படுத்தப்படுகின்றனர் என்ற கோணத்தை முற்றிலும் மறந்துவிட்டு, மனசாட்சியில்லா ஊடகங்கள் அடிக்கும் ஜல்லியில் - வென்றவனின் ‘திறமையை' மட்டுமே பறைசாற்றி; சாதாரண மக்களுக்கு அவை இழைக்கும் கொடுமையின் அளவை நாம் கணக்கிட எண்ணுமுன் இத்தகைய 'திறமை' என்ற தம்பட்டத்தின் காதைகிழிக்கும் ஒலியில் மக்களை இருட்டிலேயே வைத்திருப்பதன் அவசியத்தை ஊடகங்களும் உணர்ந்துள்ளன என்பதையும் அதனோடு கூட முக்கியமாக தங்களின் மொத்த வீரியமும் அத்தகைய இருட்டிலேயே அடங்கியிருக்கிறது என்பதை புரிந்துவைத்துள்ள ஆதிக்க சக்திகளைப்பற்றியும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

புரட்சியின் விதை விதைக்கப்படுவதற்கு முக்கிய காரணி மற்றவர்களுக்கு வாய்ப்பும் வாழ்வும் மறுக்கப்படுவதினால் மட்டுமே என்பதை ஆதிக்கசக்திகள் உணர்வதில்லை. வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளும் பண்பும் பொறுமையும் இருந்தால் ஆதிக்கசக்திகள் உருவாகாமலேயே போயிருக்கும் என்பதுடன் அப்படி ஒரு சக்தி உருவாயின் தனக்கே எல்லாம் என்று பேராசையாவது பட்டிருக்காது என்பது வெள்ளிடைமலை.

தன் சமுதாயத்துக்கு நேர்ந்த கொடுமைகளால் ஒரு புரட்சியாளன் தன் இரத்தத்தால், உழைப்பால், வீரத்தால், வீரியத்தால், கோபத்தால் எடுக்கும் ஆயுதம் அது வெறும் புல்லானாலும் அவன் கொடுக்கும் ஒவ்வொரு அடியும் அவன் மக்களின் வாழ்வை மறுக்கும் சக்திக்கு அது சம்மட்டி அடியாகவே விழும். ஏன் அடி, இடியாகவே விழும்.

இப்படி நடக்கும் ஒரு உரிமைப்போரில் நாம் எவர் பக்கம் என்று யோசிக்க வேண்டிய தேவை இருக்காது. ஏன், அப்படி யோசிக்க முயலும் 'அறிவாளி முகமூடிகளை வெட்கமில்லாமல் அணிந்துகொண்டு அம்மணமாக அலையும்' பரதேசிகள் நமக்கு தேவையுமில்லை. அவர்கள் நம் பக்கம் இல்லையென்று எதிரிப்பக்கம் போனாலும்கூட, அத்தகைய பாசிஸ்ட் சிந்தனையாளர்கள் இல்லாமல் போனது நம் பேறு என்று பெருமைபட்டுக்கொண்டு தொடர்ந்து புரட்சியாளனுக்கு ஊக்கமும் உந்துதலும் அளிக்க வேண்டியது நம் கடமை என்று உணருதல் வேண்டும்.
--------------------------------------------------------------------------------------
நிற்க.

டெபனிஷன் போடாமல் பரந்துபட்ட பிரபஞ்சத்தில் அட்டாக்கத்தி சுற்றுவது எதற்கு என்று குழப்பமுறும் துர்பாக்கிய நிலைக்கு நீங்கள் தள்ளப்படுமுன்... ஒரு ரசிகன் என்ற இழிநிலையிலிருந்து சற்றே சுயமுன்னேற்றம் அடைய வேண்டும் என்ற தேடுதலை என்னுள் தந்தவருக்கு காணிக்கையாக்குவதற்கு கடமைப்பட்டிருக்கிறேன்.

ஒண்ணுமில்லை ஐயாக்களா.. நம்ம தலை பெடரர ட்ஜோக்கோவிச் தோக்கடிச்சுட்டாரு. நேர் செட்கணக்கில் வேற. அதோடு விடாம 'The King (Roger Federer) is dead. Long live the (new) King! (Djokovic)” னு ட்ஜோக்கரோட அம்மா பேட்டி வேற கொடுத்தாங்க. பேசுறதுக்கு முன்னாடி யோசிச்சு பேசணும். இப்படி எடுத்தேன் கவுத்தேனெல்லாம் அறிக்கை விடக்கூடாது, அதுவும் பெடரரைப் பத்தி பேசறதுக்கு முன்னாடி கண்டிப்பா யோசிக்கணும்னு சொல்லப்போனேன். ஆனா அதெப்படி நீ சொல்லலாச்சுனு சில பேரு கிளம்பிட்டாங்க. அப்புறம் யோசிச்சு பார்த்ததுல நான் வெறும் ரசிகன் என்ற நுனிப்புல் கண்ணோட்டத்தில் பாத்துகிட்டிருக்கேங்றது எனக்கே புரிஞ்சுது.

நமக்குதான் ஜெயிக்கறவன கண்டா ஆகாதே...அப்படி ஜெயிச்சவனைப் பார்த்து பிடிக்குதுனா நம் வளர்ப்புல ஏதோ குறையிருக்குங்கறதுதான் உண்மை. underdog என்னவேணா சொல்வாரு.. இதையும் சொல்வாரு இதுக்கு மேலயும் சொல்வாருன்னு சொல்லி, அதான் ஆதிக்கசக்தி ஒழிஞ்சிச்சே... அத தகர்த்த புரட்சியாளன எத்தனை தடைகளையும் அவதூறுகளையும் தாண்டி இத்தகைய சமூக புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறான். அவனை அனாலைஸ் செய்ய நீ யாரு. பொத்திகிட்டு போடானு அடுத்தவனை கேட்காம அவர் சொல்வதை தவறு, அவையடக்கம், நாவடக்கம் வேண்டுமென்றெல்லாம் சொல்ல நான் யார்? அதான் செய்தவமா இந்தப்பதிவு.

ஆதிக்க சக்தியான பெடரர் ஒழிக!

புரட்சித்தளபதி உரிமைப்போராளி நோவாக் வாழ்க வாழ்க!

ஏன் ஆதிக்க சக்தியா?

இதப் பாருங்க.. இல்லாட்டி இதையாவது பாருங்க.

இத்தனை ஆண்டுகளாக டென்னிஸை தன் கைப்பிடியில் இறுக்கிப்பிடித்து மற்ற வீரர்களை ஜெயிக்க விடாமல் அடாவடி செய்த அரக்கனுக்கு கொடுமைக்காரனுக்கு குடைபிடிக்கவேண்டிய அவசியம் என்ன வந்தது? இவனை ஓட ஓட விரட்டிய ட்ஜோக்கருக்கு பிடிக்கவேண்டியதுதானே ஒவ்வொரு மானமுள்ள மனிதனும் செய்யவேண்டிய கடமை?

என்னைப்போல வெறும் ரசிகர் மன்ற விசிலடிச்சான்குஞ்சாக - தட்டையான சிந்தனையுடன் ஒற்றை பரிமாணத்தில் உழலாமல் - அரசியல், சமூகம், மொழி, மனிதவுணர்வு என சிறிதேனும் படித்துத் தெளிந்து அனைவரும் ஆதிக்க சக்தியழிந்ததை குறிப்பதாய், இனி ஜனவரித்திங்கள் 27ஆம் தேதியை அனைவரும் நோவாக் தினமாக அனுசரித்து அவர் புகழ் பரப்பவேண்டுமென்று வேண்டிக்கொள்கிறேன்.

என்னை இப்பதிவிட வைத்தவருக்கு மீண்டும் நன்றி சொல்லிக்கொள்கிறேன்.

36 Comments:

 1. இலவசக்கொத்தனார் said...

  இப்பதிவு தரும் அதிர்ச்சியிலிரந்து மீளவில்லை நான். மீண்டும் மீண்டும் வாசித்து எனக்குள் இதனை அப்படியே உணர்வுகளாக மொழிபெயர்த்துக் கொள்ள முடியுமா? என்று பார்த்துக் கொண்டுள்ளேன்.

  இது ஒரு பிரச்சனைக்குரிய விஷயம். இருப்பினும் பலமுறை வாசித்து அதனை அசைபோட்டு மற்றொரு பின்னனோட்டத்துடன் வருகிறேன். தொடருங்கள்.

  இவ்வளவு அருமையான பதிவுகளை எழுதும் நீங்கள்... தோடர்ந்து செயல்படுவது அவசியம்..

  (நன்றி: எங்கேயோ படித்த ரெம்பிளேற் பின்னூட்டம்)


 2. ILA (a) இளா said...

  வெளங்கிரும்... என்னமோ சொல்ல வந்துட்டு பல்டி அடிச்சுட்டீங்க தானே? ஒரே டமாசுதான் போங்க..


 3. இலவசக்கொத்தனார் said...

  //என்னமோ சொல்ல வந்துட்டு பல்டி அடிச்சுட்டீங்க தானே? ஒரே டமாசுதான் போங்க..//
  இளா என்ன சொல்ல வறீங்க?
  இராமநாதனின் ஆதிக்க சக்தி பிணைப்பு தெரிந்ததால் அவர் இந்த புரட்சியைப் பாராட்டுவது உங்களுக்குப் பல்டியாகத் தெரிகிறதா? இருக்கலாம். இந்தத் தலைகீழ் நடவடிக்கைக்குப் பின் இருக்கும் சூத்திரதாரி யார் என்பதைத்தான் சொல்லிவிட்டாரே! போகட்டும்.

  ஆதிக்கசக்தியின் வீழ்ச்சியைப் பற்றி எழுதி இருக்கும் இப்பதிவு டமாசா? நீரும் தமிழ்த் துரோகியா? ஆனால் விளங்கிவிடும் என்ற சொல்லி இதற்குப் பின் ஆதிக்க சக்தி இல்லை, எல்லாம் நல்லபடியாக திகழும் என ஆதரவுக் குரல் கொடுத்திருக்கும் உம் உணர்வு புரிவதால் சும்மா விடுகிறேன்.

  (டிஸ்கி: யுவர் ஆனர், நான் சிரிப்பான் எதுவும் போடவில்லை என்பதை குறித்துக் கொள்ள வேண்டுகிறேன்.)


 4. G.Ragavan said...

  புரட்சியா...அப்படீன்னா தலைவருங்க சினிமாக்காரங்க பேருக்கு முன்னாடி போட்டுக்கிறதுதான. அப்படீன்னா பிடிங்க. நீங்கதான் பொரட்சிப் பதிவரு.


 5. இலவசக்கொத்தனார் said...

  //புரட்சியா...அப்படீன்னா தலைவருங்க சினிமாக்காரங்க பேருக்கு முன்னாடி போட்டுக்கிறதுதான. அப்படீன்னா பிடிங்க. நீங்கதான் பொரட்சிப் பதிவரு.//

  ஜிரா, சரியாச் சொன்னீங்க புரட்சித் தலைவர் இருந்தாரு. புரட்சித் தலைவி இருக்காங்க. இன்னும் தளபதி, தமிழன் அது இதுன்னு ஆயிரம் பேர் இருக்காங்க.

  ஆனா அவங்க எல்லாரும் மீட்டிங் போடும் போது நம்ம பெரியார் படத்தைத்தான் மேடையில் மாட்டி வெச்சுக்கறாங்க. அந்த மாதிரி நம்மாளு பெரிய புரட்சிப் பதிவரா இருந்தாலும் கூட அவரை இந்த கொள்கைப் பாதையில் கையைப் பிடித்துக் கூட்டிக் கொண்டு வந்து விட்டது ஒரு பதிவுலகப் பெரியார்தான்.

  இந்த உண்மையை மறைப்பதோ மறுப்பதோ ரொம்ப தப்பு. ஆகையால் அதனை அனைவரும் அறியும் வகையில் சொல்ல எனக்கு வாய்ப்பளித்தமைக்கு நன்றி கூறி வாழ்க புரட்சிப் பதிவர்! வாழ்க பதிவுலகப் பெரியார்! என வாழ்த்தி என் உரையை முடித்துக் கொள்கிறேன். நன்றி வணக்கம்.


 6. Kannabiran, Ravi Shankar (KRS) said...

  //என்னை இப்பதிவிட வைத்தவருக்கு மீண்டும் நன்றி சொல்லிக்கொள்கிறேன்//

  ஆதிக்க சக்தி பெடரரைத் தானே சொல்லுறீங்க? பதிவுலகப் பெருந்தகைகள் யாரையும் இல்லையே? :-)))


 7. பினாத்தல் சுரேஷ் said...

  எனக்குத் தெரியும் டாக்டர். ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் நீ இந்தப்பாதைக்கு வந்துதான் ஆகவேண்டும்! கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் சத்தமாக ஒலித்து, அதன் மூலமாகவெ உன்னை இந்த வழிக்குக் கொண்டு வந்துவிட மாட்டோமா?

  ஆனால், ஆதிக்கத்தின் பிடியில் இருக்கும்வரை நீ காட்டிய ஆணவத்தையும் மறந்திடவில்லை. எனவே, நீ இந்தியாவில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்பதைத் தெரிந்துகொள்!


 8. பினாத்தல் சுரேஷ் said...

  எனக்குத் தெரியும் டாக்டர். ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் நீ இந்தப்பாதைக்கு வந்துதான் ஆகவேண்டும்! கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் சத்தமாக ஒலித்து, அதன் மூலமாகவெ உன்னை இந்த வழிக்குக் கொண்டு வந்துவிட மாட்டோமா?

  ஆனால், ஆதிக்கத்தின் பிடியில் இருக்கும்வரை நீ காட்டிய ஆணவத்தையும் மறந்திடவில்லை. எனவே, நீ இந்தியாவில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்பதைத் தெரிந்துகொள்!


 9. துளசி கோபால் said...

  நல்ல பதிவு.


 10. Sridhar V said...

  //பரந்துபட்ட பிரபஞ்சத்தில் அட்டாக்கத்தி சுற்றுவது எதற்கு என்று குழப்பமுறும் துர்பாக்கிய நிலைக்கு நீங்கள் தள்ளப்படுமுன்...//

  ஹ.... எப்படி இந்த மாதிரியெல்லாம்? :-)


 11. Radha Sriram said...

  என்ன சொல்ரதுன்னே தெறியல......
  புல்லரிச்சு போயி உக்காந்துட்டேன்....அவ்ளோதான்..:):)


 12. Anonymous said...

  இது!!!!!!!!!!!!!

  ஒன்னுமே புரியல!! இருந்தாலும் வாழ்த்தி வணங்குகிறேன்.

  புரட்சிப் பதிவர் டாக்டர் இராம்
  வாழ்க! வாழ்க!
  புரட்சிப் பதிவர் டாக்டர் இராம்
  வாழ்க! வாழ்க!
  புரட்சிப் பதிவர் டாக்டர் இராம்
  வாழ்க! வாழ்க!

  -அரசு


 13. Geetha Sambasivam said...

  //நுனிப்புல் கண்ணோட்டத்தில் பாத்துகிட்டிருக்கேங்றது எனக்கே புரிஞ்சுது.//

  "நுனிப்புல்"
  என்று இங்கே உஷாவைக் குறிப்பிட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதன் மூலம் உங்கள் "ஆணியம்" வெளிப்பட்டு விட்டது என்று "பெண்ணிய" வாதிகள் அனைவரும் எச்சரிக்கிறோம். :P


 14. Geetha Sambasivam said...

  என்னத்தைப் புரட்சி பண்ணினீங்களோ தெரியலை, நேத்துப் பின்னூட்டமே ஏத்துக்காம ஒரே புரட்சி! இப்போத் தான் முடிஞ்சது, இல்லைனா மீ த ஃப்ர்ஷ்டுனு சொல்லி இருக்கலாம்! :((


 15. rv said...

  கொத்ஸு,
  புது டெம்ப்ளேட் கலக்கலா இல்ல.. கதிகலங்கறா மாதிரி இருக்கே?

  எங்கய்யா பிடிக்கிறீரு இந்த மாதிரியெல்லாம்?


 16. rv said...

  இளா,
  நான் சொல்ல வந்தத சரியாவே சொல்லிட்டேனுதான் நினைக்கிறேன். என்ன சொல்ல வந்தது எங்க பல்டியாயிடுச்சு சொன்னா தேவலை. :)

  தமாசுங்கற பேர்ல பிராண்டறதுதானே நம்ம brand? :))


 17. rv said...

  கொத்ஸ்@இளா,
  ஹூம்.. என்ன இன்னிக்கு ஆணிபுடுங்கறது இல்லியா? சும்மா ப்ரீ ப்ளோல இருக்கீரு?

  //(டிஸ்கி: யுவர் ஆனர், நான் சிரிப்பான் எதுவும் போடவில்லை என்பதை குறித்துக் கொள்ள வேண்டுகிறேன்.)//

  அதுதான் பயமா இருக்கு.


 18. குமரன் (Kumaran) said...

  ஹிஹி. எனக்கு முன்னாடியே தெரியும் இந்த இடுகையும் எனக்குப் புரியாதுன்னு. அதனால ஒரு வரி கூடப் படிக்கலை. சும்மா வந்து போனேன்னு சொல்லத் தான் இந்தப் பின்னூட்டம். :-)


 19. Dubukku said...

  ஒன்னும் பிரியலையே?? கோனார் நோட்ஸ் எதாவது கிடைக்குமா?


 20. Anonymous said...

  //C'mon.. You can do it.. you can do it.. you can do it.. do it... do it.. do it.. do it.. do.. do.. do.. Just Do it already! will ya?//

  இல்லீங்ண்ணா, முடியல. கொஞ்சம் பிரியுறா மாதிரி எழுதுங்ண்ணா. தலையெல்லாம் சுத்துதுங்ண்ணா. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வரேங்ண்ணா.


 21. Sridhar V said...

  இந்த ஆபாச பதிவை வன்மையாக கண்டிக்கின்றேன்.

  இ.கொ.வின் புண்ணூட்டமே சாட்சி.

  //நீரும் தமிழ்த் துரோகியா? //


 22. Anonymous said...

  //அறிவாளி முகமூடிகளை வெட்கமில்லாமல் அணிந்துகொண்டு அம்மணமாக அலையும்' பரதேசிகள்//

  அசத்திட்டீங்க டாக்குடரு. ஆமா, சாதாரணமா வெக்கம் வந்தா தானே மொகத்த மூடுவாங்க? இவுக ஏன் வெட்கமில்லாமல் முகத்த மூடுறாக? அவ்ளோ கண்றாவியா?
  இந்த 'பின்'விசயமே நமக்கு புரியறதில்லபா...


 23. Radha Sriram said...

  http://specials.rediff.com/sports/2008/jan/30sld1.htm

  //Federer is extra special: Laver//


 24. Unknown said...

  புரட்சிப் பதிவர் என்ற பட்டத்தை வழிமொழிகிறேன்! "புரட்சியாளனுக்கு ஊக்கமும் உந்துதலும் அளிக்க வேண்டியது நம் கடமை என்று உணருத"லால், "புரட்சித்தளபதி, உரிமைப்போராளி" வாழ்க, வாழ்க! உங்களை தம் //கொள்கைப் பாதையில் கையைப் பிடித்து// செல்லும் பதிவுலகப் பெரியாருக்கும் வாழ்த்துக்கள்! (வச்சுட்டேனே வத்தி).

  தல, 'தெரியல' தத்துவத்தின் தலைவர் நீங்கள்! 'புரியல' என்று சொல்வோரைக் கண்டு கலங்காதீர்கள்! ஐன்ஸ்டைன் தமது 'சார்பியல் தத்துவ'த்தைச் சொன்னபோது புரிந்தவர் எத்துணை பேர்? (ஆஹா, எங்கியோ போயிட்டேனே!)


 25. rv said...

  ஜிரா,
  புரட்சிப்பதிவனா? நானா? நான் பழமையில் ஊறிக்கெடக்கும் நாட்டுப்பெருச்சாளி..

  இந்த பொரட்சி, வறட்சியெல்லாம் பண்ற பதிவர்கள் அவங்கவங்க பண்ணுறத்தத்தான் எழுதறாங்களே. :)


 26. rv said...

  கொத்ஸ்@ஜிரா,
  //எனக்கு வாய்ப்பளித்தமைக்கு நன்றி கூறி வாழ்க புரட்சிப் பதிவர்! வாழ்க பதிவுலகப் பெரியார்! என வாழ்த்தி என் உரையை முடித்துக் கொள்கிறேன். நன்றி வணக்கம்.//

  உஹும்.. ஒண்ணும் அடங்கறாப்போல தெரியலியே.. முதல்லா ஒரு ஜோடா குடியும்...


 27. rv said...

  KRS,
  //
  ஆதிக்க சக்தி பெடரரைத் தானே சொல்லுறீங்க? பதிவுலகப் பெருந்தகைகள் யாரையும் இல்லையே? :-)))//

  வாருமய்யா.. ரொம்ப குளிரா ஊர்ல? இப்படி பத்தவைக்க முயற்சி செய்றீரு?


 28. rv said...

  பினாத்தலார்,
  //ஒருநாள் நீ இந்தப்பாதைக்கு வந்துதான் ஆகவேண்டும்! //
  எங்கெங்கேயோ அரிக்கறதுக்கு நம்மகிட்ட சொறிஞ்சுக்கணுமா...

  நீங்க கேக்கறதும் நியாயந்தான்... உப்புமாவின் பொதுமுன்னேற்றத்தை முன்னிட்டு...


 29. rv said...

  அக்கா,
  நன்னி!


 30. rv said...

  ஸ்ரீதர்,
  //
  ஹ.... எப்படி இந்த மாதிரியெல்லாம்? :-)//
  புரட்சிவெறி தலைக்கேறினா இது என்னா..இதுக்குமேலயும் வரும்...


 31. rv said...

  இராதா,
  //புல்லரிச்சு போயி உக்காந்துட்டேன்....அவ்ளோதான்..:):)//
  :))

  செல்லரிச்சுப்போன ஆதிக்கசக்தியை வென்ற ஒரு வீரனை பார்த்தால் புல்லரிக்காமல் என்ன செய்யும். மகிழ்ச்சி!


 32. rv said...

  அரசு,
  //இது!!!!!!!!!!!!!

  ஒன்னுமே புரியல!! இருந்தாலும் வாழ்த்தி வணங்குகிறேன்.//

  இது-வுக்கப்புறம் போட்டிருக்கற ஆச்சரியக்குறிகளே உமக்கு புரிஞ்சுதா இல்லியானு சொல்லுதே! :))

  பொரட்சி பதிவர்னு முடிவே பண்ணியாச்சா? சபை நாகரிகம் கருதி அதை ஏற்றுக்கொள்கிறேன்.


 33. rv said...

  சங்கத்தலைவியே,
  //"நுனிப்புல்"
  என்று இங்கே உஷாவைக் குறிப்பிட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். //

  நுனிப்புல்லெல்லாம் காபிரைர் பண்ணா நியாயமா?

  ஏதாவது ஈயத்தையே தேய்ச்சுகிட்டிருந்தா நல்லாருக்கா.. பாருங்க.. :)


 34. rv said...

  கும்ஸு,
  //சும்மா வந்து போனேன்னு சொல்லத் தான் இந்தப் பின்னூட்டம். :-)//
  :))

  இந்த மாதிரி சும்மா வந்து போனா சண்டை, சச்சரவு, வம்பு, தும்பு, அப்புறம் உக்காந்து அடிக்கிறது, நின்னு அடிக்கிறது, வந்து அடிக்கிறது, அடிக்கிறது தெரியாமலேயே அடிக்கிறது எல்லாம் வருமா? ;)


 35. rv said...

  டுபுக்கு,
  உமக்கே பிரியலியா?

  கோனார் நோட்ஸா?? எதுக்கும் கொத்தனாரிடம் ரெபர் செய்யவும். நோட்ஸ் கிடைக்கலாம்.


 36. rv said...

  அனானி,
  //கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வரேங்ண்ணா.//

  வாங்க வாங்க. ரெஸ்ட் எடுத்துட்டு வந்து இன்னும் ரெண்டு மூணு வாட்டி படிங்க. வெளங்கிரும். இல்ல.. பொரட்சிப்பாதைக்கு வந்திருவீங்கனு சொன்னேன். :)


 

வார்ப்புரு | தமிழாக்கம்