நவீன மருத்துவத்தின் சிற்பிகள்: 1 - Sir William Osler

பல நூற்றாண்டுகளாய் மருத்துவத்துறை பல்வேறு வடிவங்களில் பலநாடுகளில் இருந்து வந்தாலும், 18, 19 மற்றும் 20-ஆம் நூற்றாண்டுகளில் நவீன மருத்துவமாக அசுர வளர்ச்சியடைந்தது. இன்னூற்றாண்டில் உலகம் பல்வேறு நோய்களை எதிர்த்து வியத்தகு வகையில் போராட முடிகிறது. வளர்ந்த நாடுகளை எடுத்துக் கொண்டால் அமெரிக்காவில் 1901-ல் சராசரி மனித ஆயுட்காலம் - 49. இன்று - 77. நம் இந்தியாவைப் பொறுத்தவரை 1950-களில் 40, இன்று கிட்டத்தட்ட 63. நவீன மருத்துவத்தின் சாதனைக்கு இதுவே ஒரு சான்று. இந்த அபார வளர்ச்சிக்கு வித்திட்ட முன்னோடிகள் சிலரைப் பற்றி பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைத்து எழுதுகிறேன்.

நவீன மருத்துவத்தின் தந்தை என்று பலராலும் கருதப்படுபவர் சர் வில்லியம் ஆஸ்லர் (Sir William Osler). மருத்துவக் கல்வியில் மிகப்பெரிய மறுமலர்ச்சி ஏற்பட்டதில் சர் ஆஸ்லரின் பங்கு மகத்தானது. தியரிக்களைப் போலவே பிராக்டிகல் clinical அனுபவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கல்விமுறையை மாற்றியவர். இன்றைய American Association of Physicians-ஐ தோற்றுவித்ததில் பெரும்பங்கு வகித்தார் ஆஸ்லர்.

Sir William Osler - Photobucket.com

ஆங்கிலேய மிஷனரியான Rev. Featherstone மற்றும் Ellen Osler தம்பதிக்கு ஒன்பதாவது குழந்தையாக Bond Head, Canada ஜூலை 12, 1849-ல் பிறந்தார் ஆஸ்லர். முதலில் தந்தையைப் போலவே மதபோதகராக விருப்பபட்டு டொரொண்டோவில் உள்ள Trinity College-ல் சேர்ந்தார். பின்னர், மனம் மாறி 1868-ல் Toronto Medical School-இல் சேர்ந்தார். அங்கிருந்து பெயர்ந்து 1872-ல் மாண்ட்ரியாலில் உள்ள MacGill University-லிருந்து பட்டம் பெற்றார்.

தான் படித்த பல்கலைக்கழகத்திலேயே 1875-ல் பேராசிரியராகவும் பின்னர் 1884-ல் பிலடெல்பியா பல்கலையில் Chair of Clinical Medicine-ஆக நியமிக்கப்பட்டார். இவற்றிற்கு பின் 1888, பால்டிமோரில் அப்போதுதான் துவங்கப்பட்ட ஜான் ஹாப்கின்ஸ் பல்கலையில் முதற் மருத்துவப்பேராசிரியராக நியமிக்கப் பட்டார் ஆஸ்லர். ஆனால் முதல் நான்கு வருடங்களுக்கு ஒரு மாணவர் கூட கிடையாது. பெரும்பாலும் கட்டுரைகளும், புத்தகங்களும் எழுத நேரத்தை பயன்படுத்தினார். 1892-ஆம் ஆண்டில் Grace Gross-ஐ மணம்புரிந்தார். கிடைத்த நேரத்தில் எழுதிய Principles and Practice of Medicine என்றொரு புத்தகத்தை இதே ஆண்டில் வெளியிட்டார். உலகெங்கும் பலராலும் புகழப்பட்ட புத்தகமது.

இங்கேயிருந்த போதுதான் மருத்துவக்கல்வியில் மாணவர்கள் 'அனுபவத்தையும்' கற்பதற்கு வழி செய்தார். முதன்முதலில் மாணவர்கள் வார்ட்களில் நேரடியாக பார்வையிட்டு "chief"-க்கு ரிப்போர்ட் அளித்து, பின்னர் லேப்பில் வெளிக்கொணரப்பட்டவையையும், இந்த நேரடித் தொகுப்புகளையும் ஒருங்கிணைத்து இவையே பிற்கால மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் புதிய பகுதிகளாகவோ, திருத்தங்களாகவோ அளிக்கப்பட்டது. William Welch, Howard Kelly, William Helsted ஆகியோரின் ஒத்துழைப்போடு இவர் இவ்வாறு செயல்படுத்திய மாற்றங்களினால், வெகு விரைவிலேயே ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவக்கல்வியில் உலகிலேயே முதன்மையான் இடத்துக்கு வரமுடிந்தது.

“To study medicine without reading textbooks is like going to sea without charts, but to study medicine without dealing with patients is not going to sea at all.” - ஆஸ்லர்.

இன்னொரு கொசுறு தகவல்: ஆஸ்லரின் புத்தகத்தைப் பற்றி கேள்விப்பட்டவுடன் தான் அமெரிக்க கோடீஸ்வரர் Rockefeller, நியு யார்க்கில் Rockefeller Institute of Medical Research -ஐ நிறுவினார்.

1906-ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் பல்கலையில் மிகவும் மதிப்புமிக்க Regius Chair of Medicine ஆக நியமிக்கப்பட்டார். ஆக்ஸ்போர்டில் இருந்த நேரத்தை பெரும்பாலும் புத்தகங்கள் எழுதுவதிலும், சேகரிப்பதிலுமே செலவிட்டார். இவ்வளவு புகழ் பெற்றாலும் அவரின் மருத்துவத்தில் ஆராய்ச்சிகளைப் பொறுத்தவரையில் பங்கு சற்று குறைவுதான். 1873-ல் platelets எனப்படும் ரத்த அணுக்களைப் பற்றி விரிவாக ஆராய்ந்தார்.

அவரின் தொழில் வெற்றிக்கு காரணம் நோயாளிகளிடம் அவரின் அணுகுமுறையே என்று பலரும் கருதுவதுண்டு. வசூல் ராஜாவில் கமல் சொல்வாரே.. "என்ன கேஸுங்கீறீங்க, ஏன் இவருக்கு பேர் கிடையாதா?" இதற்கு உதாரணமாக நோயாளிகளை
அக்கறையுடன் பார்த்தவர் ஆஸ்லர்.

டிசம்பர் 19, 1919-ல் நுரையீரல் நோயால் மறைந்தார் ஆஸ்ல்ர். அவரின் விருப்பப்படி 8000-க்கும் மேற்பட்ட புத்தகங்களை அவர் படித்த கல்லூரி நூலகத்திற்கு வழங்கினார். இன்றளவும் MacGill University-இல் ஆஸ்லர் நூலகம் என்ற பிரிவு இருக்கிறது.

இவரின் எழுத்துக்கள் Bibiliotheca Oslerina என்ற தொகுப்பாக உள்ளது. அதில் இவரால் வெளியிடப்பட்டிருக்கும் கட்டுரைகள், புத்தகங்களின் எண்ணிக்கை 3576!

கீழேயுள்ள தளங்களுக்கு நன்றி. மேலதிக விவரங்களுக்கு..
1. whonamedit.com
2. wiki
3. infoplease.com
4. Osler Library

3 Comments:

 1. Anand V said...

  what happened to your Egypt post? Vanished again? Maybe you should try with a smaller title ( someone suggested that !)
  And what is that refelction ? you said you will give the answer next day !


 2. Adaengappa !! said...

  Quite a good information !!Thank you !!


 3. rv said...

  அடேங்கப்பா அவர்களே,
  நன்றி

  ஆனந்த் அவர்களே,
  பிரமிட் பற்றி போடக்கூடாதுன்னு ப்ளாக்கர் படுத்துகிறது. இன்னிக்கு கடைசி தடவை முயற்சி பண்றேன்.

  உங்களின் ஒரு பதிவிலேயே பின்னூட்டத்தில் பதில் கொடுத்துள்ளேன்.

  நன்றி


 

வார்ப்புரு | தமிழாக்கம்