161. படம் காட்டுகிறேன்

படம் காட்டி ரொம்ப நாள் ஆகிவிட்டதால், சில படங்கள்.









தஞ்சாவூர் பள்ளி அக்ரகாரம் - நம்மூரு வண்டி டிவிஎஸ் XL லேயும் சைக்கிள்களிலும் எடுத்துச் செல்லப்படும் பொருட்களே ஒரு தனி கேட்டகரி. தனியா ஒரு பதிவு போடணும். :)




திங்களூர் சந்திரன் கோயில் போகும் வழியில் கிராமத்து குளமும் ஆலமரமும்.


  

  


இந்த வயலும் அதே திங்களூர் ரோடுதான். திருவையாறு கும்பகோணம் சாலையில் உள்ளது.

திங்களூர் தாண்டி வயிரவன்கோயில் போகும் சாலை.


  
பள்ளி அக்ரகாரம்.



  
தென்பெரம்பூர் ஷட்டர்ஸ். வெண்ணாறு, வெட்டாறு, புதாறு பிரியும் இடம்.

  





  
பழைய குற்றாலம் செல்லும் சாலையில் எடுத்தது.

60 Comments:

  1. Unknown said...

    ஏனுங்க,

    இதெல்லாம் ரஷ்யா மாதிரி தெரியலீங்களே? ;o)

    நம்ம ஊரு தானுங்களே? எந்த ஊருன்னு போட்டிருந்தா நல்லாருக்கும்லே?


  2. rv said...

    துபாய்வாசி,
    இதெல்லாம் நம்ம ஏரியா தான். ஆனா தாராளமா உள்ள வரலாம். :))

    இடம் பேரா.. போடறேன்.


  3. வஜ்ரா said...

    முதலில், நன்றிகள், இந்திய கிராமத்தை அழகாகக் காட்டியதற்கு...
    இப்படியே ரஷ்யாவையும் ஒரு தபா காட்டிவிடுங்கள்...

    பிறகு, இந்த தலைப்பை நான் எங்கோ படித்திருக்கிறேன்...என்று நினைத்தேன்...பார்த்தால் அதை ஆரம்பித்து வைத்த புன்னியவான் சாக்ஷாத் நானே தான்..!! படங்காட்றேன்...!! என்று தலைப்பு வைத்து 7 பதிவு போட்டிருந்தேன்..!!

    இன்னொன்றும் உங்களிடம் கேட்கவேண்டும் என்றிருந்தேன்...படத்தில் ராஜீவ் காந்தி மாதிரி இருக்கீங்களே...அது நீங்க தானா!!?


  4. Unknown said...

    ராம்ஸ் சோக்கா கீதுப்பா.. எனக்கும் புரியற மாதிரி ஒரு பதிவுப் போட்டதுக்கு டாங்க்ஸ்ப்பா:)

    ரஷ்யா படமும் காட்டுப்பா.. பாத்து குஜாலாயிடுவோம் இல்ல


  5. G.Ragavan said...

    மாதம் மும்மாரி பெய்தால் நம்மூரும் சொர்க்கம்தான். தமிழகமும் பசுமைப் பூங்காவாக நிலவளமும் நீர்வளமும் செழித்து வளர இறைவனை வேண்டுகிறேன்.

    மத்தபடி படங்கள் ரொம்ப நல்லாயிருக்கு ராமநாதன்.


  6. தாணு said...

    ராமநாதன்,
    பழைய பதிவுகள் ஆரம்பித்து எல்லாம் வாசித்து முடிக்க ரொம்ப நேரமாயிடுச்சு. போட்டோஸ் ஜோர். ஊர்ப்பக்கம் சமீபத்தில் வந்திருந்தீங்களா?


  7. உங்கள் நண்பன்(சரா) said...

    இராமநாதன் படங்கள் அனைத்தும் அருமை, நல்லா படம் காட்டுறீங்க,

    அதிலும் தென்னை மரங்களுக்கிடேயே
    உள்ள ரோட்டில் போகும் லாரி அருமை,


    //ரஷ்யா படமும் காட்டுப்பா.. பாத்து குஜாலாயிடுவோம் இல்ல //

    நண்பர் தேவு சொன்னது புரிஞ்சிச்சா? குஜாலாகிர மாதிரி நியாபகம் இருக்கட்டும்.




    அன்புடன்...
    சரவணன்.


  8. rv said...

    வஜ்ரா சங்கர்,
    ரஷ்யாவை கொஞ்சம் கொஞ்சம் முன்னாடியே காட்டிருக்கேனே!

    1,
    2,
    3,
    4,
    5

    படத்துல இருக்கறது நான் தான்னு எத்தன தடவை சொன்னாலும் நம்ப மாட்டேங்கறாப்பா மக்கள்ஸ். எங்கப்பா கொத்ஸு, ஆனந்த்.. அது நான் தான்னு ஒருதபா சொல்லுங்க.


  9. rv said...

    தேவ்,
    உமக்கு பிரியாத மாதிரி நான் எப்போய்யா பதிவு போட்டேன்?

    சுட்டி குடுத்தாச்சு. குஜாலாக்கீதான்னு நீருதான் சொல்லனும்..


  10. rv said...

    ஜிரா,
    நன்னி.


  11. rv said...

    அத்தை,
    ரொம்ப நன்றி.

    நீங்க கேட்ட கேள்விக்கு விரைவில் பதில். :))


  12. rv said...

    சரவணன்,
    நன்றி.

    தேவ் குஜால் ஆனாரான்னு கேட்டு சொல்லுங்க சீக்கிரம். அது என்னது அது? அவர் பேர்ல பழிபோட்டு நீங்க படம் கேட்கறது?


  13. உங்கள் நண்பன்(சரா) said...

    //அது என்னது அது? அவர் பேர்ல பழிபோட்டு நீங்க படம் கேட்கறது?//

    ஏப்பா... யாருப்பா அது பந்தீல இம்மா நேரமா இவரு கத்துரது காதுல விழழையா...

    எவ்வளவு நேரம் கேட்குறது இவருக்கு வந்து பாயாசம் போடுங்கப்பா...

    (மெதுவாக)ஹி.. ஹி.. அப்படியே நம்ம எலைக்கும் போடுங்க "நெரையா"


    அன்புடன்...
    சரவணன்.


  14. நாகை சிவா said...

    ஆஹா, நம்ம ஊர் சுற்று வட்டாரத்தை மிக அழகாக போட்டு உள்ளீர்கள்.


  15. rv said...

    சரவணன்,
    அதானே பார்த்தேன். இந்த மாதிரி மேட்டரெல்லாம் பதிவா போட்டா நம்ம இமேஜ் என்னாகறது...

    எதுக்கும் இதல்லாம் கொஞ்சம் படிச்சு பாத்து ஜென்ம சாபல்யம் அடைஞ்சுக்கங்க.

    1, 2


  16. இலவசக்கொத்தனார் said...

    படம் பாத்துட்டேன்.


  17. rv said...

    நாகை சிவா,
    நன்றி


  18. rv said...

    வாய்யா கொத்ஸு,
    பாத்துட்டேன்னு அட்டெண்டன்ஸா? அதெல்லாம் முடியாது. வந்ததுக்கு நாலு வார்த்தை சொல்லிட்டு போனா தான் பிரஸண்ட் போடுவேன். :))


  19. இலவசக்கொத்தனார் said...

    படங்கள் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு.

    நாலு கேட்டீங்க. இப்போ 5 குடுத்தாச்சு. சும்மா பிரஸெண்டைப் போடுமப்பா...


  20. rv said...

    கொத்ஸு,
    அஞ்சு வார்த்தை எண்ணி வச்சு அவுத்து விட்டு ரெண்டு கமெண்ட் போட ரவுசு பண்றீரா?

    இருக்கட்டும் இருக்கட்டும். 'குருநன்றி கொன்ற மகற்கு'ன்னு சொல்லி திருக்குறள்ல தனி பாலே இருக்கு. தெரிஞ்சுக்கய்யா.. :)))


  21. Anand V said...

    காரில் உட்கார்ந்துக்கிட்டே படமா ?

    ஆமாபா ஆமா. இராஜீவ் காந்தி மாதிரி கீறது நம்ம இராம்ஸே தான். கொஞ்ச நாளிலே இரஷ்யாவில் இருந்து அமெரிக்கா வரப் போறாரு !


  22. பத்மா அர்விந்த் said...

    நல்ல அருமையான படங்கள். நலமா? நீண்ட நாட்களாக வலைப்பக்கம் காணோம்


  23. rv said...

    என்ன ஆனந்த்,
    பேர்லேயே உள்குத்து ஏதோ முயற்சி செய்யறா மாதிரி இருக்கு. :))

    ராஜீவ்னு ஒருத்தர் சொல்லிருக்காரே. அது ஏன்பா பொருக்கல? இன்னும் எவ்வளவு வெள்ளைமனசுக்காரங்க இருக்காங்கன்னு பாத்து பாத்து நான் பீரிச்சி. சீ.. பூரிச்சிபோயிட்டேன். :))

    பிரிட்டன்லேர்ந்து துரத்திவிட்டாக்க அமெரிக்காதானே வரணும்??? என்ன நான் சொல்றது?


  24. rv said...

    தேன் துளி,
    நன்றி.

    ஆமா ரொம்ப நாள் ஆச்சு. எல்லாரும் சொல்ற சாக்கை நானும் சொல்ல வேணாமா? வேலை ஜாஸ்தின்னு. ஆனா நம்பத்தான் யாருமில்லை. :((


  25. துளசி கோபால் said...

    படங்கள் அருமை. பேசாம அங்கெ வந்துறலாமான்னு இருக்கு.
    பச்சைப்பசேலுன்னு வயல்கள், ஆறு, தண்ணீர் எல்லாம் ஜோர்.


  26. rv said...

    அக்கா,
    வெயில் தான் கொஞ்சம் ஜாஸ்தி. மத்தபடி எப்போதும் போல சூப்பர்.
    மறுபடியும் சூறாவளிப்பயணம் ஒன்று ப்ளான் பண்ணவேண்டியதுதானே..


  27. இலவசக்கொத்தனார் said...

    முதலாம் பின்னுட்டக் கயமைத்தனம்.


  28. இலவசக்கொத்தனார் said...

    இரண்டாம் பின்னுட்டக் கயமைத்தனம்.


  29. இலவசக்கொத்தனார் said...

    மூன்றாம் பின்னுட்டக் கயமைத்தனம்.


  30. இலவசக்கொத்தனார் said...

    நான்காம் பின்னுட்டக் கயமைத்தனம்.


  31. இலவசக்கொத்தனார் said...

    ஐந்தாம் பின்னுட்டக் கயமைத்தனம்.


  32. இலவசக்கொத்தனார் said...

    ஆறாம் பின்னுட்டக் கயமைத்தனம்.

    ஆச்சுப்பா அரை டஜன். வர்ட்டா?


  33. rv said...

    கொத்ஸ்,
    பின்னூட்டக் கயமைத்தனம்னா என்னய்யா அது? புதுசா இருக்கு? அது ஒன்று இரண்டு மூன்று என வரிசைப்படுத்தி வேற படுத்துரீரு?


  34. உங்கள் நண்பன்(சரா) said...

    பின்னூட்ட கயமைத்தன்னா என்னனு தெரியாதா உங்களுக்கு?


    அன்புடன்...
    சரவணன்.


  35. உங்கள் நண்பன்(சரா) said...

    இவ்வளவு நாள் வலைப்பூல இருக்கீங்க பின்னூட்ட கயமைத்தனம்னா என்னனு கூட தெரியாதா?

    அன்புடன்...
    சரவணன்.


  36. உங்கள் நண்பன்(சரா) said...

    அதெப்படிங்க..? பின்னூட்ட கயமைத்தனம்னா என்னனு தெரியாம இருந்துருப்பீங்க?



    அன்புடன்...
    சரவணன்.


  37. உங்கள் நண்பன்(சரா) said...

    பின்னூட்ட கயமைத்தனம்னா என்னனு உங்களுக்கு தெரியலைனு சொல்லுறது எனக்கு ஆச்சரியமா இருக்கு...

    அன்புடன்...
    சரவணன்.


  38. rv said...

    சரவணன்,
    பின்னூட்டக்கயமைத்தனம் கறது புதுசா கண்டுபிடிச்சது போலிருக்கு.

    நீங்களும் கொத்ஸும் போட்டுத்தாக்கறதை பார்த்தால் அது என்னதென்று கொஞ்சம் புரிகிறார்போல் இருக்கிறது.

    எதற்கும் கொத்ஸோட 'போலி டோண்டுவும், மறுமொழி மட்டுறுத்தலையும்' படிச்சுடுங்க. :)))


  39. இலவசக்கொத்தனார் said...

    சரவணா,

    திருப்பதிக்கே லட்டா?


  40. இலவசக்கொத்தனார் said...

    சரவணா,

    திருநெல்வேலிக்கே அல்வாவா?


  41. இலவசக்கொத்தனார் said...

    சரவணா,
    கால்கரிக்கே ஜிகர்தண்டாவா?


  42. இலவசக்கொத்தனார் said...

    சரவணா,

    பின்னூட்ட கோனாருக்கே கயமைத்தன விளக்கமா?


  43. இலவசக்கொத்தனார் said...

    அந்த காலத்திலேயே 300 அடிச்ச ஆளய்யா நம்ம ஆளு. சுட்டி எல்லாம் கேட்டு வாங்கிப் படி.


  44. சிறில் அலெக்ஸ் said...

    அடடா..

    வயல் வெளியப் பாத்து
    பல மாதம் ஆச்சு
    வண்டீல லோடடிச்சு
    பல வருஷம் ஆச்சு

    ஆலமரம் விழுது பாத்து
    குடும்ப நியாபகம்
    ஆறு ஓடும் ஒயிலப் பாத்தா
    ஊரு நியாபகம்

    குற்றால மலையப் பாத்தா
    கொரங்கு நியாபகம்
    சிக்காகோவுல கெடக்கிறேனே
    என்னடா நியாயம்- நான்
    சிக்காகோவுல கெடக்குறேனே
    என்னடா நியாயம்?

    :)


  45. rv said...

    ஆஹா ஆஹா,
    பின்னூட்ட புயலே, பமக கண்ட கொள்கைச் சுடரே, புதிர்பல போட்ட புரவலனே, அறுநூறு கண்டு பதிவின் அடிமுடியறிய முடியா வண்ணம் திணறடித்த திருமகனே, கடந்தவற்றை நினைவில் கொண்டு அந்த நாள் ஞாபகமென்று பாடிய நண்பனே,எனதருமைக் கொத்தனாரே,

    மனம் குளிர்ந்ததய்யா எனக்கு. சரவணன் கேட்ட கேள்விக்கு பதிலிறுக்காமல் சிறிதுகாலம் தாமதப்படுத்தி ஓட்டலாம் என்றெண்ணிய நான், ஒர் வார்த்தை சொல்லாமலேயே பின்னூட்டக் கயமைத்தனத்தை துணிந்து செய்து நட்பு பாராட்டுகிறிரே.. நீவிர் வாழ்க! உமது கொற்றம் வாழ்க! உம் சுற்றம் வாழ்க! (சுற்றம்ல நாங்களும் வருவோம்ல??)


    இதையே ஆறுபின்னூட்டங்களாக இட்டிருந்தால்தான் உமக்கு ஏற்ற பதில் மரியாதையாக இருக்குமென்று தெரிந்தும் ஒன்றோடு நிறுத்திக்கொள்கிறேன்.


  46. உங்கள் நண்பன்(சரா) said...

    ஐயா திரு.இராமநாதன் அவர்களே..

    நான் இப்பொழுது தான் தங்களின் ஃபுரொபைல் பார்த்தேன்,
    கயமைத்தனத்திற்க்கு மன்னிக்கவும்,

    அன்புடன்...
    சரவணன்.


  47. rv said...

    சிறில் Alex,

    பாட்டெல்லாம் நல்லா இருக்கு. ரொம்ப பீலாகியிருக்கீங்க போலிருக்கு.

    ஆனா எனக்கு ஒரு டவுட். இது கவிதையா, கவிஜயா, கவுதயா, கவுஜயா? இணையத்துல கவிதல்லாம் ரிலீஸ் பண்ற அளவுக்கு தைரியமும் வந்திருச்சா? :))

    ஆனாலும் பேரயே சம உஷார் பார்டியா எழுதி வச்சுருக்கீங்களே.. ;)


  48. rv said...

    சரவணன்,
    என்னங்க இதுக்கெல்லாம் போயி மன்னிப்பெல்லாம் கேட்டுகிட்டு..

    இத வச்சிதானே இத்தன நாள் வண்டிய ஓட்டிகிட்டிருக்கோம். :))


  49. சிறில் அலெக்ஸ் said...

    //பாட்டெல்லாம் நல்லா இருக்கு. //

    நன்றி..

    //ரொம்ப பீலாகியிருக்கீங்க போலிருக்கு.//
    அம்மங்க ..ஆமா (தலைவலி மாத்திரை விளம்பரம் மாதிரி படிக்கவும்)

    //ஆனா எனக்கு ஒரு டவுட். இது கவிதையா, கவிஜயா, கவுதயா, கவுஜயா? //
    ஒப்பாரி..

    //இணையத்துல கவிதல்லாம் ரிலீஸ் பண்ற அளவுக்கு தைரியமும் வந்திருச்சா? :))//
    ஏதோ நீங்கெல்லாம் இருக்கீங்கன்னுதான்...

    //ஆனாலும் பேரயே சம உஷார் பார்டியா எழுதி வச்சுருக்கீங்களே.. ;) //

    இது செஞ்சு பல நாள் ஆச்சு..
    ஆங்கிலப் பதிவும் இருக்கிறதால அப்டி ஒரு arrangement.

    :))


  50. வஜ்ரா said...

    "பிரிவியத்" ராமநாதன்,

    உங்கள் பழய படங்களையும் பார்த்தேன்...
    சுட்டிகளுக்கு நன்றி.


  51. உங்கள் நண்பன்(சரா) said...

    //இத வச்சிதானே இத்தன நாள் வண்டிய ஓட்டிகிட்டிருக்கோம். :))
    //

    திரு.இராமநாதன் சார் !
    உண்மைய சொல்லனும்னா எனக்கு "இந்த" விசயம் தெரியாது , உங்க ஃபுரொபைல் பார்த்ததும் ஜொர்க் ஆய்ட்டேன், சிங்கத்தில் குகைகுள்ளயே வந்து எட்டிப் பார்த்துட்டமோனு ஒரு ஃபீலிங்,
    அப்படியே பி.பி.அ-ஓடி வந்துட்டேன்,



    ***50க்கு வாழ்த்துக்கள்***

    அன்புடன்...
    சரவணன்


  52. இலவசக்கொத்தனார் said...

    நான் 50 போடறேன்.


  53. erode soms said...

    அருமை அன்பரே அருமை,எங்கள் ஊர் பெயரும் திங்களூர்தான் ஆன இந்தப்பச்சை மிஸ்ஸிங்.காய்ந்துபோன வயல்களை நானும் ஒருநாள் காட்டுகிறேன்


  54. rv said...

    சிறில்,
    //ஒப்பாரி..
    //

    உங்களோடது பின்நவீனத்துவ படைப்பா? அதுல வரவேண்டிய ட்ரேட்மார்க் வார்த்தைகளைக் காணோமேன்னு சந்தேகம் வந்துருச்சு. :P

    //இது செஞ்சு பல நாள் ஆச்சு..
    ஆங்கிலப் பதிவும் இருக்கிறதால அப்டி ஒரு arrangement//
    ஹும். :)


  55. rv said...

    ஷலோம் ஷங்கர்,
    பழசையும் பார்த்தற்கு நன்றி.


  56. rv said...

    சரவணன்,
    இதுக்கே ஜெர்க் ஆனா எப்படி? இன்னும் எவ்வளவு விஷயம் இருக்கு தமிழ் இணையத்துல? என் ப்ரோபைல்ல அப்படி என்ன வில்லங்கமா இருக்கு?

    நீங்க தான் அம்பது. கையக் கொடுங்க.

    நன்றி


  57. rv said...

    கொத்ஸு,
    அம்பது ஜஸ்ட் மிஸ். உங்க ஸ்டைல்ல சொன்னா நூறு, இருநூறெல்லாம் இருக்கே. அதுக்கு ட்ரை பண்ணலாமே. :))


  58. rv said...

    என்ன டாக்டர் சார்,
    ரொம்ப நாளா வலைப்பக்கமே காணோம்? நல்லா இருக்கீங்களா?

    காய்ஞ்சிருந்தாலும் அது ஒரு தனிஅழகுதாங்க. படம் காட்டுங்க சீக்கிரம்.

    உங்க திங்களூர் எங்க இருக்கு?


  59. ரங்கா - Ranga said...

    இராமநாதன்,

    அருமையான படங்கள். இன்னும் இருக்கா?

    ரங்கா.


  60. rv said...

    ரங்கா,
    வாங்க வாங்க. ரொம்ப நாள் ஆச்சு பார்த்து?

    படங்கள் தானே.. நிறைய இருக்கு. கொஞ்சம் கொஞ்சமா போட்டாத்தானே ஓப்பேத்த முடியும்.. :))


 

வார்ப்புரு | தமிழாக்கம்