1. செந்திலாண்டவர் திருக்கோயில், திருச்செந்தூர்
2. பெருவுடையார் திருக்கோயில், தஞ்சாவூர் - அவ்வளவு சரியாக வரவில்லை
3. கூடலழகர் திருக்கோயில், மதுரை
4. மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், மதுரை
5. வாலீசுவரர் திருக்கோயில், வாலிகண்டபுரம்
6. ஜெயம்கொண்ட சோளீசுவரர் திருக்கோயில், நேமம் (காரைக்குடி)
7. வடபத்ரசாயி திருக்கோயில், திருவில்லிபுத்தூர்
34 Comments:
படங்களுக்கு நன்றி இராமநாதன்.
பெருவுடையாரை க்லோசப்பில் இங்கு காணலாம்.
கைப்பு,
நன்றி நன்றி. எங்கன தூக்கி விசிறியடிச்சிருக்காங்க இப்ப? :))
இல்ல இன்னும் மும்பை தானா?
எண்ணம் எனது,
நன்றிங்க. முத தடவை பாக்கறேன் உங்களை..
//நன்றி நன்றி. எங்கன தூக்கி விசிறியடிச்சிருக்காங்க இப்ப? :))//
இப்போ மும்பை. ஞாயித்துக் கெழமை விநாயக சதுர்த்தின்னு இங்கே ஏக கெடுபுடியா இருக்கு.
கோபுர தரிசனம் கோடி புண்ணியம். அதுக்காக அதைத் தந்ததுக்காக கோடி பின்னூட்டம் எல்லாம் கேட்கக்கூடாது என்ன... :)
//அவ்வளவு சரியாக வரவில்லை//
ஆமா...கேக்கனும்னு நெனச்சேன். இந்தப் படங்கள் எல்லாம் நீங்க எடுத்ததா?
கைப்ஸ்,
நான் எடுத்ததே தான்..
மும்பை சதுர்த்தியா.. சென்னைலேயே களை கட்ட ஆரமிச்சாச்சு..
கோபுர தரிசனம் கிடைப்பது நல்லது கோடி புண்ணியம் என்றும் சொல்வார்கள்.
கொத்ஸு,
கோடிப்பின்னூட்டமா...
ஆயிரத்தையே தாண்ட முடிய மாட்டேங்குதே... (இதுக்குமேல வெட்கத்த விட்டு கேட்க முடியாது சாமிகளா)
அப்புறம் வர/ நான் இடற பின்னூட்டங்களையும் இங்கேயே வரிசைப்படுத்தி, நடுவுல நடுவுல பதிவுகளும் இதே திரியில போட்டுடுவேன்.. :))
கோபுர தரிசனுத்துக்கு நன்றி.
கன்னத்துல போட்டுகிட்டாசு.
//நான் எடுத்ததே தான்..
மும்பை சதுர்த்தியா.. சென்னைலேயே களை கட்ட ஆரமிச்சாச்சு.. //
நம்ம ஊரிலும் சதுர்த்தி அன்னைக்கு செமையா இருக்கும். 32 அடி விநாயகர்ல
அருமை. இன்னும் படங்கள் தொடருமா...
//ஆமா...கேக்கனும்னு நெனச்சேன். இந்தப் படங்கள் எல்லாம் நீங்க எடுத்ததா? //
//நான் எடுத்ததே தான்..//
நீ படம் புடிக்குற பொட்டி வாங்கினாலும் வாங்கினா, உன் அக்க போரு தாங்க முடிய மாட்டேங்குது. எல்லாம் அவரு புடிச்ச படம் தான்.
சிவா,
32 அடியிலயா? கைப்பு கிட்ட சொன்னா போய் படம் பிடிச்சுவந்து போடமாட்டாரு?
கோபுர தரிசனம் கோடி புண்ணியம்.சில கோபுரங்களை 2004ல் நேரிலும் பார்த்தேன். வாலீஸ்வரர் கோவிற்க் கோபுரம்; எங்கள் ஈழத்தில் தம்பலகாமம் எனும் பழமையான கிராமத்திலமைந்துள்ள ,தம்பலேஸ்வரர் எனும் ஆதி கோணேசர் கோவிலை அச்சொட்ட நினைவு படுத்துகிறது. இத் தம்பலேஸ்வரம் பற்றி தமிழ்மணத்தில் மலைநாடர் எழுதுகிறார். ஒரு படமும் இட்டுள்ளார்.
யோகன் பாரிஸ்
பாஸ்டன் பாலானாரே,
வாங்க வாங்க.. ரொம்ப நாளாச்சு பார்த்து..
இன்னும் நிறைய இருக்குங்க. கொஞ்சம் கொஞ்சமா போட்டா சில நாட்களுக்கு பதிவா போட்டு ஒப்பேத்திடுவேன்.. :)
சிவா,
கைப்பு பொட்டி வாங்கினா, அவங்க அக்கா ஏங்க போரு அடிக்கணும்?
மிக்க நன்றி யோகன் பாரீஸ்
வாலிகண்டபுரம் என்பது திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூருக்கு பிரியும் சந்திப்பைத் தாண்டி இருக்கிறது.
மதுரை பொற்றாமரைக் குளமா? ஆஹா ஜொலிக்கிறதே! இவ்வளவு பசுமையா எப்போது மாறியது?
மதுரை மண்ணின் மைந்தர்களே - குமரன், சிவமுருகன் இன்னும் பலர்...யாரேனும் வந்து சொல்லுங்க!
மற்ற கோவில்களிலும் பசுமைக்குளம் ideaவைப் பின்பற்றலாமே!
நல்ல படங்கள். திருச்செந்தூர் கோபுரத்திலும் திருப்பரங்குன்றத்துக் கோபுரத்திலும் வேல் பிரதானம். திருச்செந்தூரில் நுழையும் பொழுதே கோபுரம் தெரிகிறதா...அதில் வேல் தெரிகிறதா என்று பார்த்துக் கொண்டேயிருப்பது சின்ன வயதிலிருந்து பழக்கம்.
அதே போல மதுரை வழியாக ரயிலில் போகையில் திருப்பரங்குன்றம் கோயில் கோபுரத்தைப் பார்ப்பதில் அலாதியான இன்பம். அந்தப் பக்க ஜன்னலோர சீட் கிடைக்கவில்லை என்றால் கதவோரம் நின்று பார்ப்பது வழக்கம்.
தஞ்சைக் கோபுரத்தைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ! ஓங்கி உலகளந்தவனுக்கு எழும்பிய ஓங்கு திருவரங்கத்தைப் புகழாதிருக்க முடியுமோ!
ராம்ஸ்,
கோபுரதரிசனம் கிடைச்சது.
கோடி நன்றி.
எண்ணம் எனது,
பயண அநுபவம் தானே.. போன வருஷமே எழுதியாச்சுங்க..
>மதுரைக்குப் போனதும், குத்தாலம் போனதும்
ரவிசங்கர் கண்ணபிரான்,
ஆமாம்.. பசுமைக் குளம் நல்ல ஐடியா தான். ஏற்கனவே நிறைய கோயில்ல இருக்கு. என்ன மதுரையில் இவங்களா வளர்க்கிறாங்க. பாதி இடத்துல அதுவா வளருது. :)
மத்தபடி ஜொலிப்பதற்கு காரணம் ஆறு வினாடி எக்ஸ்போஷர் தான்.. ;)
ஜிரா,
நன்றி.
திருவரங்கம் இன்னும் அகப்படவில்லை. வில்லிபுத்தூர் தான் இது.
அக்கா,
நன்றி.
நல்லா இருக்குங்க படங்கள்
அந்த 5,6,7 படங்கள் கொஞ்சம் பெரிய அளவில் தனி மெயிலில் கிடக்குமா?
முடிந்தால் vaduvurkumaratgmail.com அனுப்பவும்
நன்றி
வடுவூர் குமார்,
நன்றி.
விரைவில் அனுப்புகிறேன். எல்லாம் 5MP சைஸில்தான் இருக்கின்றன என்று நினைக்கிறேன்.
இராமநாதன். நீங்க போட்டிருக்கிற 'புனர் தரிசன ப்ராப்திரஸ்து' இந்தப் பதிவுக்கு மிகப் பொருத்தம் (இந்தப் பதிவுக்கு மட்டும் தான் பொருத்தம்ன்னு சொல்ல வந்தேன். அப்புறம் தான் பாவம் நம்ம தஞ்சாவூர்க்காரர் பொழச்சுப் போகட்டும்ன்னு மாத்திட்டேன்).
படங்கள் எல்லாம் நல்லா இருக்கு. கோபுர தரிசனம் கிடைத்தால் அந்தக் கோவில்களுக்குப் போன புண்ணியம் என்று சொல்வார்கள். மிக்க நன்றி.
எல்லா படமும் நல்லா வந்திருக்கு. தஞ்சை இராஜராஜேச்வரமும் நல்லாத்தான் வந்திருக்கு. நேரில பாக்க முடியாத என்னைப் போன்றவர்களுக்கு இதுவே அருமை. நேரில பாக்குற உங்களுக்கு வேணுமானா சரியா வராதது போல இருக்கலாம்.
கூடலழகர் திருக்கோவில் விமானத்தை ஆர்த்தி ஹோட்டலில் இருந்து எடுத்தீர்களா? அங்கு தான் மதுரைக்குச் சென்ற போது தங்குனீங்களா? அண்மையில தான் இந்த விமானத்திற்குத் திருப்பணி முடிஞ்சது.
மதுரை அம்மன் கோவில் பொற்றாமரைக் குளத்தை நன்றாக எடுத்திருக்கிறீர்கள். ரவிசங்கர் கண்ணபிரான், ஓரிரு வருடங்களாக பொற்றாமரைக் குளம் இப்படி இருக்கிறது. குளத்தின் நடுவில் இருக்கும் ஊற்று வற்றிவிட்டதால் மழை நீர் மட்டும் தேங்கி நின்றது முன்பு. அண்மையில் ஆழ்கிணறு தோண்டி நான்கு பக்கமிருந்து குளத்தில் முழங்கால் அளவு நீர் நிற்கும்படி செய்து தனியார்களிடம் பராமரிப்புப் பொறுப்பை விட்டிருக்கிறார்கள். அவர்கள் விளம்பரமும் செய்து கொண்டு இந்த மாதிரி பசுமையாகவும் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
வில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோவில் கோபுரத்திற்கும் வண்ணம் தீட்டிவிட்டார்களா? வண்ணம் இல்லாமல் அருமையாக இருந்தது.
இந்த கோபுரம் தான் தமிழக அரசுச் சின்னத்தில் இருக்கும் கோபுரம். திருவரங்கக் கோபுரம் கட்டுவதற்கு முன் இது தான் தமிழகத்தில் உயரமான கோபுரமாக இருந்தது.
இராமநாதன். இது வடபத்ரசாயி கோவில் கோபுரம். இரங்கமன்னார் கோவில் கோபுரம் இல்லை. இரங்கமன்னார் கோவிலுக்கு (ஆண்டாள் கோவிலுக்கு) உயரமான கோபுரம் இல்லை.
இராகவன். நானும் அப்படித் தான். ஒவ்வொருமுறை திருப்பரங்குன்றம் வழியாக பேருந்திலோ புகைவண்டியிலோ செல்லும் போதெல்லாம் திருப்பரங்குன்றம் கோபுரத்தைப் பார்ப்பது மிகவும் பிடிக்கும்.
மதுரையிலிருந்து சென்னை செல்லும் போது காவிரியைத் தாண்டும் வரை முழித்திருந்து திருவரங்கக் கோபுரத்தையும் பார்ப்பது வழக்கம். சென்னையிலிருந்து மதுரை வரும் போது சில நேரம் முழிப்பு வராமல் கோபுரத்தைப் பார்க்காமல் விட்டிருக்கிறேன்.
குமரன்,
நன்றி.
//இது வடபத்ரசாயி கோவில் கோபுரம். இரங்கமன்னார் கோவில் கோபுரம் இல்லை. //
ஆம், கொஞ்சம் கன்பூஸன்ஸ் ஆப் இந்தியா.. சுட்டிக்காட்டியதற்க்கு நன்றி. பதிவிலும் திருத்தி விடுகிறேன். மற்றபடி கோயிலுக்குள்ளேயே வெள்ளையடிக்கிறார்கள் பல இடங்களில். கோபுரத்தை விடுவார்களா? வண்ணமடித்துத்தான் விட்டார்கள்.
//(இந்தப் பதிவுக்கு மட்டும் தான் பொருத்தம்ன்னு சொல்ல வந்தேன். அப்புறம் தான் பாவம் நம்ம தஞ்சாவூர்க்காரர் பொழச்சுப் போகட்டும்ன்னு மாத்திட்டேன்).//
எல்லாம் எழுதிவிட்டு, இதையும் முடையாக சொல்லிவிட்டீர்கள். அதுக்கு நன்னி வாபஸ்!
ஆம்... கூடலழகர் எடுத்தது ஆர்த்தியிலிருந்துதான்.. அங்கு தங்கியது சென்ற தடவை.
புகைப்படங்கள் எல்லாம் அருமை. வாலிகண்டபுரம் எங்கே இருக்கு?
நன்றி WA,
திருச்சியிலிருந்து சுமார் 65 கி.மீட்டர் தொலைவில் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. கோயிலுக்கு செல்லும் வழியென்று மெயின் ரோட்டில் போர்ட் வைத்துள்ளார்கள்.
ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட கோயில் இது. அருணகிரியார் கூட அங்கிருக்கும் பிரம்மாண்ட முருகனின் பேரில் திருப்புகழ் பாடியிருக்கிறார்.
இங்கிருக்கும் தெப்பக்குளம் தனிஅழகு.
Post a Comment