விநாயக சதுர்த்திக்கு

காலை ஐந்தரை மணிக்கெல்லாம் எழுந்து குளிக்காமல் கொள்ளாமல் சந்துபொந்துகளுக்குள் நுழைந்தால் அழகான பொம்மைகளை வரிசையாக அடுக்கி வைத்திருக்கிறார்கள். அவற்றுள் ஒரு பொம்மையை தேர்ந்தெடுத்து, கூடவே காட்டுப்பூக்கள், அருகம்புற்கட்டு, எறுக்கம்பூ மாலை, வாழைக்கன்று, தோரணங்கள் எல்லாம் வாங்கி வீட்டிற்குவந்து குளித்து பூஜை செய்து அவருக்கு வெறுமனே காட்டிவிட்டு அப்பம், தேங்காய் எள் மற்றும் உப்பு கொழுக்கட்டைகள், சுண்டல் எல்லாவற்றையும் உள்ளே தள்ளிவிட்டு இதோ இப்ப எடுத்த பிரெஷ் படங்கள் இரண்டு.



  

  

33 Comments:

  1. ILA (a) இளா said...

    விநாயகர் ஆத்துக்கு போறதுக்கு முன்னாடியே அவர் படம் போட்ட கண்ண குத்த மாட்டாரா?


  2. VSK said...

    "வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
    நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொன்டு
    துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்
    தப்பாமல் சார்வார் தமக்கு." [ஔவையார்]

    அனைவருக்கும் விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்!

    படங்களுக்கு நன்றி, திரு. ராமநாதன்!


  3. குமரன் (Kumaran) said...

    கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
    கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
    கணபதி என்றிடக் கருமம் ஆதலால்
    கணபதி என்றிடக் கவலைகள் தீருமே

    ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
    இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
    நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினை
    புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே.


  4. துளசி கோபால் said...

    இன்னும் ஈரம் கூடக் காயாமல் நல்லா ஃப்ரெஷ்ஷாத்தான் இருக்கார்.
    இந்த வருஷம் நல்ல வருஷமாக அமைந்தது.
    ரொம்ப சந்தோஷம்.
    நம்ம வீட்டுப் பிள்ளையாருக்கு கொழுக்கட்டை கட்:-))))
    ச்சும்மா கொஞ்சம் கேஸரி மட்டும்தான்.


  5. rv said...

    இளா,
    ஆத்துக்கு வந்துதானேப்பா போட்டோ போட்டுருக்கேன். இதுக்கெல்லாம் கண்ண குத்த மாட்டாரு.. அப்படியே வந்து பெங்களூர்ல கண்ண குத்தினாலும் நமக்கு பிரச்சனை இல்லை. :P


  6. rv said...

    எஸ்.கே,
    நன்றி.

    உங்களுக்கும் விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்!


  7. rv said...

    நன்றி குமரன்.


  8. G.Ragavan said...

    உம்பர் தருத் தேனுமணிக் கசிவாகி
    உயர் கருணை புரியும் இன்பக் கடல் மூழ்கி
    இன்பரசத்தே பருகிப் பலகாலும்
    என்றனுயிர்க்கு ஆதரவுற்று அருள்வாயே
    தம்பிதனக்காக வனத்தணைவோனே
    தந்தை வலத்தான் அருள்கைக் கனியோனே
    அன்பர் தமக்கான நிலைப் பொருளோனே
    ஐந்து கரத்து ஆனை முகப் பெருமானே! - அருணகிரி


  9. rv said...

    அக்கா,
    ஏன் உங்க வீட்டு பிள்ளையார் டயட்ல எதுனாச்சும் இருக்காரா? :))


  10. நாகை சிவா said...

    ஆனை முகத்தானே போற்றி!

    அப்படியே கொழுக்கட்டை படத்தையும் போட்டு இருந்தா பாத்து கொஞ்சம் சந்தோஷ்ப்பட்டு இருப்பேன்.

    நம்ம ஊர் கொழுக்கட்டையும், மாலையில் கலந்து கொள்ளும் விஸ்ருப விநாயகர் ஊர்வலமும் மிஸ் ஆயிடுச்சு.

    :(


  11. குமரன் (Kumaran) said...

    உம்பர் தருத் தேனுமணிக் கசிவாகி
    ஒண்கடலில் தேனமுதத் துணர்வூறி
    இன்பரசத்தே பருகிப் பலகாலும்
    என்றனுயிர்க்கு ஆதரவுற்று அருள்வாயே
    தம்பிதனக்காக வனத்தணைவோனே
    தந்தை வலத்தான் அருள்கைக் கனியோனே
    அன்பர் தமக்கான நிலைப் பொருளோனே
    ஐந்து கரத்து ஆனை முகப் பெருமாளே!


  12. இலவசக்கொத்தனார் said...

    நல்லா நடத்துங்கப்பா......

    (அவன் பெயரைச்சொல்லி உள்ள தள்ளரதைத்தான் சொல்லறேன். )


  13. பத்மா அர்விந்த் said...

    நீங்க மட்டும் கொழுக்கட்டை சாப்டதோட அதை எழுதி வேற எங்க பசியை கிளப்பனுமா? உங்க பதிவுக்கு வந்தா பாட்டெழுதிதான் பின்னூட்டம் போடனும் போல இருக்கு. என் பங்குக்கு
    பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
    நாலும் கலந்துனக்கு நான் தருவேன்
    துங்க கரிமுகத்து தூமணியே நீ எனக்கு சங்க தமிழ்மூன்றும் தா.


  14. rv said...

    ஜிரா,
    திருப்புகழுக்கு நன்றி.

    குமரன் ஆணைப்படி விளக்கமும் சொல்ல வேண்டாமா? குமரனே மறந்துவிட்டார் என்று நினைக்கிறேன்.


  15. rv said...

    புலியார்,
    கொழக்கட்டையெல்லாம் போட்டோ பிடிக்க முயற்சிக்கறதுக்கு முன்னாடியே காலியாயிடுச்சே..


  16. rv said...

    கும்ஸ்,
    ஜீரா போட்ட பாட்டையே நீங்களும் ஜோரா போட்டுட்டீங்க. விளக்கம் சொல்ற கொள்கை மறந்துடுச்சா?? :))


  17. rv said...

    கொத்ஸ்,
    நேவேத்தியத்தோட principle அதானே.. அவர் எடுத்து நிஜமா சாப்பிட ஆரமிச்சா என்னாகறது..

    திருப்புறம்பயம் - தேன் குடிக்கற விநாயகர் ஒருத்தர் இருக்காரு. எவ்வளவு தேன் ஊத்தினாலும் குடிச்சுடுவாராம். கூட்டம் அதிகமா இருக்கும்கறதால போய் டெஸ்ட் செய்ய முடியல..


  18. rv said...

    தேன் துளி,
    நல்ல நாள்ல நாலு பாட்டு கேட்டா நன்மைதானே..

    கொழுக்கட்டை மேட்டர்லேயே எல்லாரும் குறியா இருக்கீங்களே.. இதுக்கே அசந்துட்டா எப்படி.. இன்னும் நவராத்திரி, தீபாவளிக்கெல்லாமும் பதிவு போடலாம்னுல்ல இருக்கேன். :))


  19. பத்மா அர்விந்த் said...

    பதிவு போடறதோட பார்சலும் அனுப்பினா மாட்டேன்னா சொல்வேன்? துளசியோட சேர்ந்து ரொம்பவே கெட்டு போயிட்டீங்க. வெகேஷன் இன்னும் முடியலையா?


  20. rv said...

    தேன் துளி,
    இந்த சாப்பாடு ஐட்டமெல்லாம் அட்டாச்மெண்டா அனுப்பறத கண்டுபிடிக்கறாங்களா பாருங்க.. :))

    நேரம் கிடைக்கும்போது ramanathan.blog@gmail.com கு ஒரு மடல் அனுப்புங்க.

    நன்றி.


  21. rv said...
    This comment has been removed by a blog administrator.

  22. உங்கள் நண்பன்(சரா) said...

    பிள்ளையார் பிள்ளையார் பெருமைவாய்ந்த பிள்ளையார்!
    ஆற்றங்காரை ஓரத்திலே
    அரசமரத்தின் நிழலிலே!
    வீற்றிருக்கும் பிள்ளையார்
    வினைகள் தீர்க்கும் பிள்ளையார்!
    அவல் பொறி கடலை சுண்டல் அனைத்தும் உண்ணும் பிள்ளையார்!

    படங்களுக்கு நன்றி,
    அனைவருக்கும் விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்!


    அன்புடன்...
    சரவணன்.


  23. ஓகை said...

    என் சொந்த பாட்டு -

    சிந்தை தெளிந்திட செம்மையும் சேர்ந்திட
    தந்தத்தில் பேனா தன்கையில் கொண்டுள்ள
    தொந்திக் கணபதியை தொங்கும்கை நாயகனை
    வந்தனை செய்வோம் உவந்து.


  24. Unknown said...

    happy birthday to ganesh.Thanks for the photos ramanathan.


  25. rv said...

    உங்கள் நண்பன்,
    மிக்க நன்றி.


  26. rv said...

    ஓகை,
    பாட்டு நல்லாருக்கு. நீங்களும் வெண்பா வித்தகரா?


  27. rv said...

    //happy birthday to ganesh.//
    என்ன செல்வன், எங்க ஊர்லலாம் கேக் வெட்டி, பார்ட்டி முடிஞ்சு எல்லாரும் வீட்டுக்கு போயிட்டாங்க. நீங்க இப்போ வாழ்த்த வர்றீங்க. :))

    நன்றி


  28. குமரன் (Kumaran) said...

    On Leave for blogs now. When I restart posting in my blogs I will come back to this blog and give the viLakkam for all the songs in the comments. :-)


  29. rv said...

    குமரன்,
    பெயில் மார்க் தான் உங்களுக்கு. லீவ் லெட்டர்ல ஒரு அனுப்புநர், பெறுநர் இல்ல.. அப்புறம் மொத்தமா formatஏ சரியாயில்லை.

    சரியா வரவரைக்கும் லீவ் சாங்க்ஷன் பண்ணமாட்டோம். :)


  30. Unknown said...

    //குமரன்,
    பெயில் மார்க் தான் உங்களுக்கு. லீவ் லெட்டர்ல ஒரு அனுப்புநர், பெறுநர் இல்ல.. அப்புறம் மொத்தமா formatஏ சரியாயில்லை.

    சரியா வரவரைக்கும் லீவ் சாங்க்ஷன் பண்ணமாட்டோம். :)//

    engkaL a.ku.mu.ka katchi thalaivarai ethirkatchi maavatta seyalaaLar kiNtal seythaal raththa aaRu ootum, volka nathi sikappaakum enpathai sollikkoLLa aasaippatukiReen.

    vaazka a.ku.mu.ka
    vaLarka aNNan kumaran pukaz

    ippatikku
    ainthu kooti thoNtarlkaL saarpil

    selvan
    niranthara poruLaaLar
    a.ku.mu.ka


  31. தி. ரா. ச.(T.R.C.) said...

    இந்த கொழுகட்டை, பழங்கள் படைத்தல் எல்லாம் அவன் மீது ஒரு பற்று வரவழைக்கத்தான். அதுவே பக்தியாகிவிடாது.சிறுகுழந்தை நடை வண்டி விடுவதுபோல்தான். நன்றாக நடை வந்த பிறகு நடைவண்டியை விட்டு விட்டு தானாக நடை போடும்.


  32. rv said...

    செல்வன்,
    //volka nathi sikappaakum enpathai sollikkoLLa aasaippatukiReen.
    //
    சிவப்பானதெல்லாம் வெள்ளையாய் கறுப்பாகி என்னன்னமோ கலராகிப்போச்சு.

    ஐந்து கோடி தொண்டர்கள்ல ஒருபய ஏன்னு கேக்கலியே.. அது ஏன்னு நான் கேக்கலாமா? :))


  33. rv said...

    தி. இரா. ச,
    //இந்த கொழுகட்டை, பழங்கள் படைத்தல் எல்லாம் அவன் மீது ஒரு பற்று வரவழைக்கத்தான். அதுவே பக்தியாகிவிடாது.சிறுகுழந்தை நடை வண்டி விடுவதுபோல்தான்//

    ஹூம் சரிதான். இதுபோல ritualsஏ நமக்கு நடைபழக்கி விடத்தானே.

    அது பாட்டுக்கு அப்படியே இருந்துட்டு போகுது. மாசம் பொறந்தா ஒரு பண்டிகைன்னு விதவிதமா தின்னக்கிடைக்குதில்ல.. அதுதானே நமக்கு வேணும். :))


 

வார்ப்புரு | தமிழாக்கம்