இந்தப் படத்தை இப்போதுதான் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது. 2003-ல் வெளிவந்து ஆஸ்காருக்கு பரிந்துரை செய்யப்பட்ட படம் என்று தெரிந்திருந்தும் ஏனோ இதுவரை பார்க்கவில்லை.
பொதுவாக படங்களைப் பொருத்தவரை ஒரு ஹீரோ/ஹீரோயின் மற்றும் வில்லன் distinct-ஆக இருப்பது வழக்கம். ஆனால் இந்தப் படத்தில் எல்லோரும் நல்லவர்களே. முக்கியமான மூவர், வாழ்க்கையில் நன்றாக இருந்து இப்போது இரானிலிருந்து அமெரிக்காவுக்கு வந்து கஷ்டப்படும் பெஹ்ரானி(Ben Kingsley) கதாப்பாத்திரம் ஒரு புறமென்றால் அநியாயமாக County office செய்த தவறுக்காக தன் தந்தை அளித்த வீட்டை இழக்கும் காத்தி(Jeniffer Connelly). இவர்களுக்கு நடுவில் காத்தியின் நிலையை கண்டு முதலில் பரிதாபப்பட்டு, பின்னர் காதலனாக மாறி, காதலுக்காக அதிகார துஷ்பிரயோகம் செய்யப்போய் வேலையையே இழக்கும் போலீஸ் அதிகாரி லெஸ்டர் (Ron Eldard).
இம்மூவரில் யாருமே வில்லன்கள் அல்ல. சில சமயம் கெட்ட காரியங்கள் செய்தாலும், அது வாழ்வில் நடக்கக்கூடிய விஷயங்களாகவே, சிறிதும் சினிமாத்தனமில்லாமல் யதார்த்தமாக காட்டியிருக்கிறார் இயக்குனர் Vadim Perelman. இதில் மிகவும் பரிதாபதுக்குரிய கதாபத்திரம்பெஹ்ரானியுடையது என்பது என் கருத்து. ஒரு காலத்தில் இரானில் Colonel-ஆக இருந்து, மிக வசதியுடன் வாழ்ந்து, அங்கு புரட்சி நடந்தபோது அமெரிக்காவிற்கு தப்பித்து வரும் பாத்திரம். நான் எங்கேயோ கேட்டிருக்கிறேன், வாழ்க்கையில் ஏழைகள் பணக்காரர்களாகலாம், ஆனால் பணம்படைத்தோர் ஏழையாவது சாவினும் கொடிதென்று. இதன் ஆழத்தை இப்படத்தைப் பார்த்தபின்னரே உணர்கிறேன்.
வசதியுடன் வாழ்ந்த பெஹ்ரானியால் அமெரிக்காவிற்கு வந்தும் தன் பழைய வாழ்வை மறக்கமுடியவில்லை. சாலைகள் இடும் பணியாளராகவும், பின்னர் ஒரு convenience store- clerk-ஆகவும் வாழ்ந்தாலும் தன் பழைய mercedes-ல் பவனி வருகிறார். வீட்டிற்கு செல்லும்முன் அழுக்கடைந்த துணிகளை மாற்றி பளபள சூட்டிற்கு மாறும் காட்சிகள் மிகவும் அற்புதம். அதேபோல், லெஸ்டர் வந்து மிரட்டும் போது, அதே பழைய மிடுக்குடன் பதிலளிக்கிறார். அதே மாதிரி கடைசி 15 நிமிடம் நிஜமாகவே கண்ணீர்த்துளிகளை வரவழைக்கும்.
பென் கிங்க்ஸ்லீயின் நடிப்புப்பற்றி எழுதிக்கொண்டே போகலாம். இவருக்கு ஆஸ்கர் கிடைக்கவில்லை என்றிப்போது வருத்தமாயிருக்கிறது. Sean Pennக்கு கிடைத்ததும் நியாயந்தான். அவரின் mystic river-ம் அருமையான படம். அப்பாவி உயிர்கள் அநியாயமாக பலியாவதுதான் அடிப்படை இருபடங்களிலும். பார்க்கவில்லையெனின் வாங்கிப் பாருங்கள்.
House of Sand and Fog
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
இராமநாதன் இந்தப் படத்தை நானும் பார்த்தேன். மூன்று பாத்திரங்களையும் மிக அருமையான பார்வையாளர்களுக்கு யாருக்காக வாதிட வேண்டும் என்ற வகையில் அவரவர்களுக்கான நியாயங்களுடன் கொண்டு சென்ற விதம் மிகவும் நன்றாக உள்ளது. பென்கிங்லி குடும்பம்தான் என் மனதில் நிற்கின்றது. அந்தஸ்தைக் காப்பதற்காக ஒரு கனவு உலகில் அவர்கள் வாழ்வைத் தொடர்வது மிகவும் மனதை பாதிப்பதாக இருந்தது. இந்த நிலையில் பல ஈழத்து மக்கள் கனடாவில் வாழக்கின்றார்கள். ஈழத்தல் நல்ல பதிவில் இருந்து விட்டு இங்கே வந்து சில்லறை வேலைகளைச் செய்து குடும்பத்தைக் கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம். ஆனால் சில குடும்ப அங்கத்தவர்கள் அந்தச் சிரமத்தை உணர்ந்து கொள்ளாமல் உடனேயே தமக்கான அந்தஸ்து வேண்டும் என்பதுபோல் நடந்து கொள்வார்கள். சிலர் ஊர் புகழ் பாடியே தமது மனதை தேற்றியும் கொள்கின்றார்கள்.
படத்தின் சில புகைப்படங்களை இணைத்தீர்கள் என்றால் இன்னும் நன்றாக இருக்கும்.
wonderful movie.
thanks for posting Ramanathan. i had forgotten that i had written a post abt this movie. just went and posted in my blog. thanks for reminding me. :)
http://mathy.kandasamy.net/movietalk/archives/2005/03/31/36
Post a Comment