203. பேரக் கேட்டோனச் சும்மா.. அதிருதில்ல....

நிரந்தர சூப்பர் ஸ்டார் இவரு மட்டுந்தான். அதுவும் ரெண்டு வருஷம் தள்ளிப் போயிகிட்டேயிருந்த கனவு. நடுவுல புது வில்லனும் வந்து ஜெயிச்சுப்புட்டான்.... இந்த தடவையாவது நம்ம தலைவரு வருவாரா? ஜெயிப்பாரா? எல்லார் மனதிலும் இருக்கும் கேள்விகள் இதுதான் இப்போதைக்கு.

இந்த வருஷம் புதுக்களம்... என்றும் இளமையான நாயகன். இதுவரைக்கும் வந்த லுச்சா பசங்களையெல்லாம் தூக்கி பந்தாடி சூப்பர் ஸ்டார்னா அது ஒருத்தன் தானு நிருபிச்சாச்சு! பாதிக்கிணறு தாண்டியாச்சு.. ஆனா இனிமே ஆரமிக்கறது அடுத்த கட்ட ஆட்டம். வில்லனும் லேசுபட்டவன் இல்ல...

ஆனா ஆட்டதோட ட்ரெயிலர் பாத்தவரைக்கும் எந்த பச்சாவும் வாலாட்ட முடியாதுன்னு சொல்லி அடிக்கிறாப் போலவே இருக்கு...

வாடா வாடா வாங்கிப்போடா... வாய்ல பீடா போட்டுக்கடா...
போடா போடா பொழச்சுப்போடா.... நடாலு.... வாடா வாடா வாங்கிப்போடா....


ஆஆஅமா... பேரக் கேட்டோனச் சும்மா.. அதிருதில்ல...

ரோஜர் பெடரர்!

202. ஜனநாயகம் வாழ்க! ராதிகா செல்வி வாழ்க வாழ்க!

சமூகம் தனக்கு இழைத்த கொடுமைகளுக்காக வாளேந்திய மாவீரன் வெங்கடேச பண்ணையாரை அநியாயமாக காவல்துறை அடியாட்கள் மூலம் போட்டுத்தள்ளிய ஜெயலலிதா என்னும் கொடூர அரக்கியின் மூக்கை அறுக்க வழியென்ன? வெங்கடேச பண்ணையாரின் விதவையை, முற்றிலும் தொலைத்த அன்பு மனைவியை - மத்திய உள்துறை இணையமைச்சர் ஆக்கிப் பார்ப்பதே சரியான தீர்வு! கொடூர காவல்துறையினரை கட்டுப்படுத்தி மட்டுப்படுத்த அவர்களால் பாதிக்கப்பட்ட ஒருவரையே அவர்களின் தலைவியாக ஆக்குவதை ஸ்வீட் ஐரனி என்பதா சர்க்கிள் ஆப் லைப் என்பதா?

அப்படியே அவ்வப்போது பம்மும் நாடார் சமூகத்தையும், தனிக்கட்சி தொடங்க வித்திடும் சுப்ரீம் ஸ்டாரையும் வழிக்கு கொண்டு வந்தாற்போலாயிற்று!

என்னே மதிநுட்பம்! அர்த்தசாஸ்திரத்தை மிஞ்சும் சாணக்கியத்தனம்! கண்டு உள்ளம் மகிழ்கிறது ஐயா! எப்படி நன்றி சொல்வது என்று தெரியாமல் விக்கித்து திகைத்து ஸ்தம்பித்து நிற்கிறேன்!

201. என்-கவுண்டரில் மாட்டிய பெருந்தலை

சர சரவென புனித பிம்பங்கள் ஐபி என்னு வலையில் சாய்ந்து கொண்டிருக்கும் இந்த புண்ணிய காலத்திலே என் கவுண்டர் சும்மா எத்தன பேரு ஆன்லைன்ல இருக்காங்கன்னு காட்டிகிட்டு தூங்கிட்ருந்தாரு... இப்படி தூங்கவா கஷ்டப்பட்டு வேலைமெனக்கெட்டு ப்ளாக்ல வேலை செய்யச் சேர்த்தேன்னு திட்டி என்னமோ ஐ.பியாமே அதையும் சேர்த்து பிடிச்சுவைங்க கவுண்டரேனு சொல்லிவச்சுருந்தேன்..

நான் ஏதோ கோக்குமாக்க கெண்டமீனுக்கு வளைச்ச வலையில சுறாமீனே மாட்டிருக்குன்னா ஆச்சரியப்படாம எப்படி? இவ்வளவு பெருந்தலை தெரியல-வின் கவுண்டரில் வந்து விழும் என்று நானே எதிர்பார்க்கவில்லை. அதுவும் சந்தேகத்திற்கே இடமில்லாதவாறு கனகச்சிதமா ஸ்க்ரீன் ஷாட் பிடிச்சு வச்சி எனக்கு அலெர்ட் மெயிலனுப்பினாரு கவுண்டரு..

அந்தப் பிரபலம் யாருன்னு நான் பேரச் சொல்லலாமா இல்ல பூடகமா சொல்லி அனாமதேயமா மொத்தலாமான்னு இன்னும் எங்கள் கட்சிப் பொதுக்குழு முடிவெடுக்காத பட்சத்திலும்; பேரு சொல்லாம விடற அளவுக்கு இரக்க குணமெல்லாம் எனக்கு கிடையாதுங்கறதுனாலயும்; விஷயத்தினோட க்ராவிட்டிய கருதி, தார்மீக காரணங்களுக்காக மற்ற பதிவர்களையும் உஷார் படுத்த வேண்டியதான என் சமூகப் பொறுப்பினது அவசியத்தையும் உணர்ந்து எந்த இடர்பாடு வரினும் அந்த திமிங்கலத்தின் பேரை வெளியிடுவது என்று முடிவெடுத்துவிட்டேன்.

அதற்கு முன்னர் Operation "make the fat lady sing" விவரங்கள்....

எப்படி இந்த குறிப்பிட்ட நபர் தான் என் பதிவிற்கு வந்தார் என்று முடிவு செய்தேன் சிறுபிள்ளைத்தனமாக பலர் கேள்விகேட்க கூடும். அதற்கு என் பதில் - தமிழ் வலையுலகில் எனக்கும் சரி, அனைவருக்கும் சரி இந்த நாட்டிலேயே இவர் ஒருவரைத் தவிர வேறு ஒருவரையும் பரிச்சயம் கிடையாது. ஏனென்றால் அவ்ளோ பிரபலமான பழம்பெரும் ஆள் இவர். குட்டியூண்டு நாட்டில் அமர்ந்துகொண்டு சொந்தமாக வெப்சைட்டே வைத்து நடத்திவரும் இவர், தன்னை யாரும் கண்டே பிடிக்க முடியாது என்று பகல் கனவு கண்டு என் கவுண்டரிடம் வகையாகச் நேற்றைக்கு சிக்கியிருக்கிறார்.

வந்த ஐபி அட்ரஸ்: 2*2.*7.*0*.223 (சம்பந்தப்பட்டவரின் ப்ரைவஸியை பாதுகாக்கவேண்டி ஐபியை மாஸ்க் செய்துள்ளேன். மேலதிக விவரங்களுக்கென எந்த கோர்டிலும் வந்து நிருபிக்க மேலும் பல விவரங்களைத் தர முடியும்)

Browser: MSIE 6.0; OS: Windows XP; Resolution: 1024x768; 15th May 2007 12:11:28 PM

சிக்கிய அன்று என் பதிவில் பார்த்த முதல் பதிவு

சிக்கிய அன்று என் பதிவில் பார்த்த கடைசி பதிவு

இதற்கு மேல் விவரங்கள் வேண்டுவோர் என்னை தனி மடலில் தொடர்பு கொள்ளலாம்.

இந்த விவரங்கள் போதுமா புனிதபிம்பமே? ஒழுங்காக மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுத்திருந்தால் இந்த அவல நிலை ஏற்பட்டிருக்குமா? எண்ணிப்பாருங்கள்...

இந்தத் திமிங்கிலத்திடம் நானே மெயிலனுப்பி கேட்டும் "அர்த்தமற்ற முறையில் ப்ளாக்மெயில் செய்கிறேன்" என்று பதிலனுப்பாத படியால் இதோ அவரின் முகத்திரையை கிழிப்பதென முடிவு செய்து, எப்படி அணுகலாம் என்று சிந்தித்த போது இவ்விஷயங்களில் நமக்கு முன்னோடியான பெனாத்தலாரின் துணையை நாடினேன். அவரும் ப்ளாஷில் போட்டு ப்ளாஷ் செய்யலாம் என்று ஐடியா கொடுக்கவே.. கீழுள்ள ப்ளாஷில் அந்த திமிங்கலத்தின் முகத்திரை கிழிவதை பாருங்கள்...



என் கவுண்டரில் இவரின் தடயங்கள் இன்னும் இருக்கின்றன. வேண்டுவோர்க்கு ஸ்க்ரீன் ஷாட் அனுப்பி வைக்கப்படும்.

 

வார்ப்புரு | தமிழாக்கம்