241. திருட்டு டிவிடி எடுக்க ஆள் தேவை!

போன வாரம் வந்த செய்தி ஒன்றினை படித்தவுடன் எங்கே போய் முட்டிக்கொள்ளலாம் என்பது போல இருந்தது. இயன்முறை பயிற்சி (அதான்பா பிஸியோ தெரபி) அளிப்பவர்கள் சங்கம் இந்தியாவின் முன்னணி ஆர்த்தோ மருத்துவர்களில் ஒருவரான மயில்வாகன நடராஜன் மேல் பாய்ந்திருக்கிறது. அதுவும் கோமாளித்தனமாக. மரு. நடராஜன் உறுப்பினராக இருக்கும் ஆய்வுக் குழு ஒன்று தமிழக அரசுக்கு அளித்த பரிந்துரையே சர்ச்சைக்கு காரணம். அதாவது இயன்முறை பயிற்சியளிப்பவர்கள் Dr. என்று போட்டுக்கொள்ளக்கூடாது; அவர்கள் எக்ஸ்-ரே, இரத்த பரிசோதனை போன்றவற்றை நோயாளிகளுக்கு பரிந்துரைக்கக்கூடாது என சில அம்சங்கள் அப்பரிந்துரையில்.

இயன்முறை பயிற்சி அளிப்பவர்கள் மட்டுமல்ல இன்னும் என்னவெல்லாமோ படித்தவர்களெல்லாமும் இப்போதெல்லாம் Dr. என்று போட்டுக்கொண்டு வளைய வருகிறார்கள். போகிற போக்கில் நியாயமாக நவீன மருத்துவத்தை கல்லூரிகளில் கற்றுத்தேறுபவர்கள் Dr. என்பதை விட்டுவிட வேண்டும் என்று கூட இவர்கள் கோரிக்கை வைப்பார்கள். 'நாங்கள் நோயாளிகளை லேப்-புக்கு அனுப்பலாமா, டாக்டர் என்று போட்டுக்கொள்ளலாமா என்றெல்லாம் முடிவு செய்ய மயில்வாகன் நடராஜனுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது' என்று பேசும் இந்தச் சங்கத்தின் மூடர்களுக்கு அவர் யார் என்று தெரியாமல் போனதில் ஆச்சரியம் இல்லை.

இப்போதெல்லாம் பையோகெமிஸ்ட்ரி/லேப் டெக்னாலஜி படித்தவர்கள் டெஸ்ட் ரிஸல்ட்களை interpret செய்கிறார்கள், நர்ஸிங் படித்தவர்கள் சில OP ப்ரோஸிஜர்களைச் செய்கிறார்கள், பார்மகாலஜி படித்தவர்கள்/மருந்து கடையில் வேலை பார்த்தவர்கள் மருந்துகளை பரிந்துரைக்கிறார்கள். இப்படி மருத்துவர்கள் செய்ய வேண்டிய காரியங்களை, முறையான பயிற்சியற்ற சகலரும் தப்பும் தவறுமாக தொடர்ந்து செய்து வருவதுடன், நோயாளிகளை ஏமாற்றும் வகையில் Dr. என்று வேறு போட்டுக்கொண்டு தனி க்ளினிக்கே வைத்துச் செய்கிறார்கள். இதை அவர்களின் தகுதியின்மையை காட்டி எதிர்க்கப்போனால், மருத்துவர்களின் வருமானம் பறிபோகிறது என்கிற காரணத்தினால் எதிர்க்கிறார்கள் என்று திசை திருப்பி அரசியலாக்குகிறார்கள்.

துணிந்து முடிவெடுக்க ஒரு பரிசீலனைக்குழு முனைந்து பரிந்துரைகளும் அளிக்கின்ற நேரத்தில், முதல்வரின் பிரத்யேக மருத்துவர் இந்த நடராஜன் என்ற லின்கை பிடித்து தொங்கி, கலைஞரை வார வேண்டிய அரிப்பில், ஜூனியர் விகடன் "முதல்வரின் மருத்துவர் செய்யும் கெடுபிடி" என்ற பொருள் படும்படி விஷயத்தையே திரித்து செய்தி வெளியிடுகிறது. இவர்களையும் நம்பி ஏமாற மக்களே தயாராக இருக்கும்போது நமக்கென்ன என்று போவதுதான் மருத்துவர்களின் தற்போதைய மனநிலை. ஏதாவதொரு விபரீதம்/சோகம் நிகழும் வரை மீடியாக்களுக்கோ மக்களுக்கோ க்ளினிக் வைத்து முழுக்கை சட்டை போட்ட எல்லாரும் "Dr." தான்.
------------------------------------------------
வாரணம் ஆயிரம் தியேட்டரில் போய் பார்த்தேன். துரை தயாநிதி தியேட்டருக்கு வந்து பார்ப்பவர்களுக்கெல்லாம் பிரியாணி போடப்போவதாக கேள்விப்பட்டவுடனே எடுத்த முடிவு அது. (அபச்சாரம் என அலறும் மாமா/மாமிகள் கவனிக்க: லெக் பீஸை எடுத்துவிட்டு குஸ்கா மட்டும் சாப்பிடத்தான் போனேன்). என் துரதிருஷ்டம் நிஷா வந்து அடித்து ஊத்தியதில் பிரியாணி வாங்க என்னைத்தவிர யாரும் இல்லை. அந்தக் கடுப்புடன் தியேட்டரில் நுழைந்த எனக்கு வாயில் அவலாக அல்லாமல் கௌதம் அன்று தப்பிக்க பெரிதும் உதவியவர்கள் சூர்யா மற்றும் சூர்யா. மேக்கப் அங்கங்கே அசடு வழிந்தாலும், சூர்யா வளைந்து நிமிர்ந்து கலக்கிவிட்டார். வேட்டையாடு அளவுக்கு ஆர்வக்கோளாறு இல்லாமல் கௌதம் அடக்கி வாசிப்பதும் பரவாயில்லை. லெப்ட் லிபரல் இண்டெலிஜென்சியா என கரித்துக்கொட்டப்படும் கேட்டகரியில் வர வாய்ப்புள்ள நம்மில் பலர் கூட அப்படியெல்லாம் பணம் கொடுத்து மூணு மாசம் அமெரிக்காவில் போய் தேடிட்டு வா என்று அனுப்புவோமா என்பது சந்தேகம். அதைவிட எளிதான கார்யம் - சமீராவின் தந்தையை சந்தித்து நிலைமையை விளக்கி எளிதாக தீர்த்திருக்கலாம். கௌதமுக்கு அமெரிக்கா ரொம்ப பிடித்துவிட்டதோ என்னமோ. சமீராவை இன்னும் கொஞ்சம் நேரம் பார்க்க வாய்ப்பு வழங்கிய ஒரே புண்ணியத்திற்காக மன்னிக்கலாம்.
------------------------------------------------
"அனல் மேலே பனித்துளி" என்று கிணத்திலிருந்து பாடவைத்த ஹாரிஸ் ஜெயராஜின் கைங்கர்யத்தாலோ "பரம்பராவில் இது மாறுமோ" என்று அருவியில் பாடியதாலோ சென்னையில் இந்த வருஷம் சுதா இரகுநாதனுக்கு மாலை 4:30 மணி ஸ்லாட் என்று கேள்வி. ஏற்கனவே மெக்ஸிகோவிற்கோ எங்கேயோ போய் அரை ட்ராயருடன் போட்டோ எடுத்துக்கொண்டதோடு சும்மா இல்லாமல் அதை ஆனந்த விகடனில் வேறு பிரசுரித்த சுதாவுக்கும், அதே விகடனில் கைவைக்காமல் தோள் தெரிய வளைய வந்த சௌம்யாவுக்கும் இந்த வருஷம் மாமிகள் மத்தியில் ஆதரவும் ரொம்ப குறைவு என்றும் கேள்வி. எனக்கென்னவோ, தங்கள் வீட்டு வயசுப்பெண்கள் செய்யும் அதகளத்தை கண்டிக்க முடியாத ஆற்றாமை தேங்கி வழிந்து கரைபுரண்டு இவ்விரு புனிதப்பிம்பங்கள் மேல் திரும்பிவிட்டதோவென சந்தேகம். எங்கிருந்தோ வந்த சுடிதாரும் சல்வாரும் (வடக்கிலிருந்துனு குதர்க்கம் பேசப்படாது) தமிழ்நாட்டின் நேஷனல் ட்ரெஸ்ஸாகிப்போயிருக்காவிட்டால் நைட்டி ஆகியிருக்கும். இதற்கு சுடிதார் எவ்வளவோ தேவலை. இதற்கு மேல் இதை திருவினால், கலாச்சாரம் என்ற சுமையை பெண்களின் மேல் மட்டும் திணிக்கும் கொடுமை காலங்காலமாக நிகழ்ந்து வருகிறது என்று ஈயச் சாயம் பூசப்படும் அபாயம் அதிகம்.
---------------------------------------------------
பெடோரா 10 வெளிவந்த செய்தி பார்த்ததும் விண்டோஸுக்கு மாற்றாக லின்க்ஸ் பாவித்து பார்க்கலாம் என்ற விபரீத எண்ணத்துடன் பழைய மடிக்கணினியில் ஜன்னலை சாத்தி பெடோராவை நிறுவ முயன்றால் சான்ஸே இல்லை என்று சுருண்டுவிட்டது. சரியென்று உபுண்டு நிறுவினேன். alternate install/low mem install செய்தும் பயனின்றி ஆமை போல வேலை செய்த கணினிக்கு xubuntu வே தீர்வு என்று இறங்கினால் அங்கேயும் சூப்பர் ஸ்லோ. 192 mb ramஇல், 1.6 Ghz 64-பிட் AMD Turion, 60 Gig என மிகவும் சக்திவாய்ந்த கணினியாக்கும் (நான் வாங்கின வருஷத்தில்). ஒரு மாதிரி இணையத்தில் குருடனாய்த் துழாவித்துழாவி LXDE டெஸ்க்டாப் நிறுவி வைத்துள்ளேன். இப்போது பரவாயில்லை எனினும் விண்டோஸ் XP இன்னும் வேகமாக வேலை செய்கிறது. லினக்ஸ் ஆதரவு/வெறியாளர்கள் யாராச்சும், எல்லாவற்றிற்கும் point & click செய்தே பழக்கப்பட்ட லினக்ஸ் அரிச்சுவடி அறியாத அடிப்பொடியான என்னை டெர்மினலினுள்ளேயே சுற்றிவரும் டாம் ஹேன்க்ஸ் மாதிரி ஆக்காத ஒரு ஃபாஸ்டான டிஸ்ட்ரோவை பரிந்துரைக்க வேண்டுகிறேன்.
--------------------------------------------------
மெட்ராஸில் இருக்கும் ரசிக சிரோன்மணிகளே - அதிலும் நல்ல டிஜிடல் HD ஹேண்டிகாம் வைத்திருக்கும் கண்மணிகளே, உடனடியாக நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றுதான். டிசம்பர் 18 அன்று வெளிவரவிருக்கும் 'மார்கழி ராகம்' படம் வெளியாகும் தியேட்டருக்கு சென்று திருட்டு டிவிடி எடுத்து காப்பி அனுப்பிவைக்கவும். சரியான காப்பி அனுப்புபவர்களுக்கு பேரும் புகழும் பிள்ளையும் செல்வமும் கல்வியும் கேள்வியும் வேள்வியும் சித்திக்க எல்லாம் வல்ல கிருஷ்ணா பகவான் அருளாமல் கண்ணாலேயே எரித்துவிடுவார் என்றாலும் அவர் அடியார்களுக்காக இச்சிறுத்தொண்டை செய்தால் பன்னிருவரோடு சேர்த்து உங்களையும் பதிமூன்றாக்க ஆவன செய்யப்படும்.

படத்தை பற்றிய முன்னோட்ட மின்னஞ்சலைப் பார்த்தபோது ஒன்றும் புரியவில்லை. விஜயில் வரும் ட்ரெயிலரைப் பார்த்தால் டபுளாக வயிறெரிகிறது. சென்னையில் இருப்பவர்களைக்கண்டு.

இப்படிக்கு
இப்படம் வெளியாக வாய்ப்பே அற்ற, கலைவளர்த்த சோழரின் மண்டலத்தின் தற்போதைய கலையார்வத்தை நினைத்து நொந்திருப்பவன்

12 Comments:

 1. பினாத்தல் சுரேஷ் said...

  தஞ்சாவூர்லே இருந்து சென்னை வர இப்ப எல்லாம் விசா கொடுக்கறதில்லையா?

  (இவ்ளோதான் எழுதுவேன்.. சாட்லே கூட பதில் சொல்லாத ஆளுக்கு இந்தப் பின்னூட்டமே ரெண்டாம் மாடி)


 2. இலவசக்கொத்தனார் said...

  வழக்கம் போல

  யாருய்யா நீயி?

  அப்புறம் இளையதளபதி டாக்டர் விஜய் அவர்களை மனதில் வைத்து குசும்பாக எழுதப்பட்டிருக்கும் பத்திக்கு என் கண்டனங்கள்.

  வாரணம் ஆயிரம் என்பது ஒரு திரைப்படம் என்ற அளவில் புரிகிறது. ஆனால் நான் உங்களைப் போல ”லெப்ட் லிபரல் இண்டெலிஜென்சியா” இல்லை என்பதால் இதை சாய்ஸில் விடுகிறேன்.

  அடுத்த பத்தி பற்றி நான் என்ன பேசினாலும் ஈயம் பித்தளை பூசம் வாய்ப்புகள் அதிகம் என்பதால் கலாச்சாரம் என்ற சுமையை பெண்களின் மேல் மட்டும் திணிக்கும் கொடுமையைச் செய்யும் உங்களுக்கு என் கண்டனங்களைத் தெரிவிப்பதோடு நிறுத்திக் கொள்கிறேன்.

  க.கை.நா.ஆன நான் இதற்கு அடுத்த விஷயத்தைப் பற்றி பேசினால் ஆட்டோ வரும் அபாயம் இருப்பதால் இதுவும் சாய்ஸில் விடப்படுகிறது.

  மார்கழி ராகம் (இராகம் எனச் சொல்லாததால் வரிவிலக்கு இல்லையாமே) உலக அளவு ரிலீஸ் அப்படின்னு சொன்னாங்களே. எங்க பக்கம் எங்க எப்போ ரிலீஸ்ன்னு தெரியலை. ஆனா உங்க பக்கம் கூடவா ரிலீஸ் ஆகலை? கண்டதுக்கும் (நீங்கள் முன்பு சென்று கலந்து கொண்ட திருமணங்கள் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல) சென்னை செல்லும் உம்மால் என்னையும் பெனாத்தலையும் சந்திக்க வரும் மனம்தான் இல்லை என்றால் இதற்குக் கூடவா செல்ல முடியாது?

  நன்றி வணக்கம்.


 3. Anonymous said...

  I'm desperate to see கைவைக்காமல் தோள் தெரிய photo of sowmya.. Rasiganin Kanavai Aavana seiveergala ?


 4. Anand V said...

  அண்ணா
  வணக்கம். நலமாக இருக்கிறீர்களா ?

  //m desperate to see கைவைக்காமல் தோள் தெரிய photo of sowmya

  இது என்ன வம்பாப் போச்சு. ஒரு Dr பாத்து கேக்கிற கேள்வியா இது ?
  ( அது சரி யாரு இந்த செளம்மியா ? )


 5. rv said...

  பெனாத்தலார்,
  விசாவ விடுங்க. இருக்கப்பட்ட எகனாமிக் டைம்ஸ்ல, பயணங்களை குறைத்துக்கொள்ள வேண்டியிருக்கே.

  நம்ம ஹிஸ்டரி என்ன.. ஜியாகரபி என்ன.. ஒரு வாட்டி சாட்ல பதில் சொல்லலேங்கறதுக்காக டூ விட்டுட்டு போனா எப்படி?

  'ரப் நே' விமர்சனம் ஒண்ணும் எழுதலியா?


 6. rv said...

  கொத்ஸு,
  இளையதளபதி டாக்டர் விஜய் இடுப்பெலும்ப ஒடிச்சு வச்சு அடுப்பில்லாம குழம்பு வைக்கக் கூடிய அளவுக்கு திறமையான டாக்டர். அவரப் பத்தி பேச நான் யார்.

  வலது(ஆச்)சாரி தீவிரவாதத்துக்கு துணைபோனா சாய்ஸில் விடணுமா?

  ஏற்கனவே ஈயம் தேய்ச்ச கதை நியாபகம் வந்திருச்சா?

  லினக்ஸ் என்ன ராயல் கேபிளா மிடாஸ் ப்ரூவரீஸா? இதுக்கு எதுக்குய்யா ஆட்டோ வரப்போகுது?

  என்னைய மாதிரி வயசுப்பசங்க விசேஷங்களுக்கு போறதப் பத்தி உம்மள மாதிரி கிழட்டு கிரகஸ்தர்களுக்கு கமெண்ட் அடிக்கும் உரிமை கிடையாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்கிறேன்.


 7. rv said...

  அனானி,
  இது ஏன்யா விபரீத ஆசை? இதை நான் வேற பூர்த்தி செய்யணுமா?

  'வெட்கப்படாதீங்க பாஸு'னு போடாம பயப்படாதீங்க ஒரு தனி செக்ஷன் ஆரம்பிக்க வேண்டியிருக்கும் போலிருக்கே.


 8. Anonymous said...

  //I'm desperate//
  me too!


 9. நாகை சிவா said...

  //சென்னை செல்லும் உம்மால் என்னையும் பெனாத்தலையும் சந்திக்க வரும் மனம்தான் இல்லை என்றால் இதற்குக் கூடவா செல்ல முடியாது? //

  அப்ப நீர் தஞ்சையில் தான் இருந்தீரா! :(

  1, வ.எ. ல சொல்லுற மாதிரி தெரியுது சாமி ;)

  2, ஏண்யா சமீரா பத்தி சொன்ன நீர் நம்ம திவ்யாவ பத்தி ஒரு வார்த்தை சொல்லி இருக்க கூடாத.... மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு :(

  3, பூச்சு வேலை எல்லாம் வரும் போல. நமக்கு வேணாம்...

  4, வரலாறு எழுதுற வேலைய மட்டும் பாக்க வேண்டியது தானே. பொட்டிய நூண்டுறதுக்கு தான் அங்க ஆளுங்க இருக்காங்கள.. சதர்ன் கம்யூ இன்னும் இருக்கா??

  5, அதே சோழ மண்டலம் தான் நானும். அது என்ன மேட்டரு... மெயில் இங்குட்டு திருப்பி விடலாமே!


 10. நாகை சிவா said...

  //அனானி,
  இது ஏன்யா விபரீத ஆசை? இதை நான் வேற பூர்த்தி செய்யணுமா?//

  அதான் கேட்குறார்ல... போட்டு விடுமய்யா :)

  //கண்டதுக்கும் (நீங்கள் முன்பு சென்று கலந்து கொண்ட திருமணங்கள் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல) //

  விரிவான விளக்கம் தேவை :)


 11. rv said...

  சின்னவரே,
  வணக்கம். நலம் நலம். நீங்க எப்படி இருக்கீங்க?

  ஏற்கனவே ஒரு டாக்டரப் பாத்து கேக்கப்போயி, அவரும் ஆர்வப்பட்டு, ஜெயிலுக்கு போயின்னு என்னென்னவோ ஆகிப்போச்சு. திருந்துறாங்களா பாருங்க நம்ம மக்கள்ஸ்?

  சௌம்யா யாரா? சரியாப்போச்சு போங்க. இங்கேயும் பின்னூட்டச் சண்டை நடக்குது. அத கவனிக்காம படத்த மட்டும் பார்க்கவும்.


 12. Simulation said...

  மார்கழி ராகம் குறித்த எனது விமர்சனம்.

  http://simulationpadaippugal.blogspot.com/2009/01/spoiler.html

  - சிமுலேஷன்


 

வார்ப்புரு | தமிழாக்கம்