202. ஜனநாயகம் வாழ்க! ராதிகா செல்வி வாழ்க வாழ்க!

சமூகம் தனக்கு இழைத்த கொடுமைகளுக்காக வாளேந்திய மாவீரன் வெங்கடேச பண்ணையாரை அநியாயமாக காவல்துறை அடியாட்கள் மூலம் போட்டுத்தள்ளிய ஜெயலலிதா என்னும் கொடூர அரக்கியின் மூக்கை அறுக்க வழியென்ன? வெங்கடேச பண்ணையாரின் விதவையை, முற்றிலும் தொலைத்த அன்பு மனைவியை - மத்திய உள்துறை இணையமைச்சர் ஆக்கிப் பார்ப்பதே சரியான தீர்வு! கொடூர காவல்துறையினரை கட்டுப்படுத்தி மட்டுப்படுத்த அவர்களால் பாதிக்கப்பட்ட ஒருவரையே அவர்களின் தலைவியாக ஆக்குவதை ஸ்வீட் ஐரனி என்பதா சர்க்கிள் ஆப் லைப் என்பதா?

அப்படியே அவ்வப்போது பம்மும் நாடார் சமூகத்தையும், தனிக்கட்சி தொடங்க வித்திடும் சுப்ரீம் ஸ்டாரையும் வழிக்கு கொண்டு வந்தாற்போலாயிற்று!

என்னே மதிநுட்பம்! அர்த்தசாஸ்திரத்தை மிஞ்சும் சாணக்கியத்தனம்! கண்டு உள்ளம் மகிழ்கிறது ஐயா! எப்படி நன்றி சொல்வது என்று தெரியாமல் விக்கித்து திகைத்து ஸ்தம்பித்து நிற்கிறேன்!

50 Comments:

 1. மணிகண்டன் said...

  இந்த மாதம் தமிழக அரசியலில் காமெடி மாதம் போல :)

  அடுத்து அயோத்திகுப்பம் வீரமணியோட மனைவி பாதுகாப்புத்துறை இணை அமைச்சராவும், வீரப்பனோட மனைவி வனத்துறை அமைச்சராவும் ஆகப்போறாங்களாம்.


 2. இராம்/Raam said...

  தான் இருக்குமிடத்துக்கு ஆட்டோ வரவே வராது என கொக்கரிக்கும் இக்கூட்டங்களை பார்த்து கண்ணடிக்கிறேன்......


 3. மணிகண்டன் said...

  //தான் இருக்குமிடத்துக்கு ஆட்டோ வரவே வராது என கொக்கரிக்கும் இக்கூட்டங்களை பார்த்து கண்ணடிக்கிறேன்...... //

  தண்டவாளமெல்லாம் எங்களுக்கு தலையனை மாதிரி. அப்படியிருக்க ஆட்டோவுக்கெல்லாம் அசருவோமா :)


 4. இலவசக்கொத்தனார் said...

  எல்லாம் தலைஎழுத்து!!


 5. மணிகண்டன் said...

  //எல்லாம் தலைஎழுத்து!! //

  யாரோட தலையெழுத்து கொத்ஸ்? மக்களோட தலையெழுத்தா? ராதிகா செல்வியோட தலையெழுத்தா? தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதியோட தலையெழுத்தா?


 6. இலவசக்கொத்தனார் said...

  மணி,

  திருக்குறள் மாதிரி அளவா சுருங்க நான் சொல்லியாச்சு. பரிமேலழகர், கலைஞர், சுஜாதான்னு ஆளாளுக்கு உரை எழுதுங்க பார்ப்போம்.

  யாரு என்ன எழுதறாங்க, அதுக்கு யார் ஆதரவு, யார் எதிர்ப்பு எல்லாம் தெரிய வருமில்ல!!


 7. Santhosh said...

  //அடுத்து அயோத்திகுப்பம் வீரமணியோட மனைவி பாதுகாப்புத்துறை இணை அமைச்சராவும், வீரப்பனோட மனைவி வனத்துறை அமைச்சராவும் ஆகப்போறாங்களாம்.//
  :)) கலக்கல் மணி.
  //தான் இருக்குமிடத்துக்கு ஆட்டோ வரவே வராது என கொக்கரிக்கும் இக்கூட்டங்களை பார்த்து கண்ணடிக்கிறேன்......//
  காதல் மன்னனுக்கு ஏன் இம்முட்டு கோவம் ராசா? ரஞ்சனிகிட்ட சண்டையோ?

  //தண்டவாளமெல்லாம் எங்களுக்கு தலையனை மாதிரி. அப்படியிருக்க ஆட்டோவுக்கெல்லாம் அசருவோமா :)//

  எங்களுக்கு எல்லாம் பிளைட்டு ஒடுற Run Way தான் பஞ்சுமெத்தை இதுக்கு எல்லாம் அசருவோமா?


 8. Anonymous said...

  அப்துல் மதானியின் மனைவியை தமிழ்நாட்டு போலீஸ் மந்திரியாக ஆக்கலாம்.

  அது கிடக்கட்டும், வெங்கடேச பண்ணையாரையே போலீஸ் மந்திரியாக்கியிருக்கலாமோ?

  அதே போல அப்துல் மதானியையோ தமிழ்நாட்டு உள்துறை மந்திரியாக ஆக்கியிருக்க வேண்டுமோ?


 9. எழில் said...

  இந்து அறநிலையத்துறையை திமுகவும் கேரளாவில் கம்யூனிஸ்டுகளும் நிர்வகிப்பது போல.

  இது போன்ற பழைய ஐரனிகளையெல்லாம் பார்த்து ஏன் மனம் வெதும்பவேண்டும் என்று தெரியவில்லை.


 10. மணிகண்டன் said...

  //இந்து அறநிலையத்துறையை திமுகவும் கேரளாவில் கம்யூனிஸ்டுகளும் நிர்வகிப்பது போல//

  கடவுள் மறுப்பு, பெரியார் நாமம் வாழ்க எல்லாம் மக்களை ஏமாத்தி ஓட்டு வாங்கறதுக்குத் தாங்க. துட்டு சம்பாதிக்க இல்லை.


 11. மணிகண்டன் said...

  //திருக்குறள் மாதிரி அளவா சுருங்க நான் சொல்லியாச்சு. பரிமேலழகர், கலைஞர், சுஜாதான்னு ஆளாளுக்கு உரை எழுதுங்க பார்ப்போம்.

  யாரு என்ன எழுதறாங்க, அதுக்கு யார் ஆதரவு, யார் எதிர்ப்பு எல்லாம் தெரிய வருமில்ல!!
  //

  என்னை பொறுத்தவரைக்கும் இது ராதிகா செல்வியோட தலையெழுத்து தான். பாவம் அவங்க என்ன பண்ணுவாங்க :) தலைமை சொல்றதை கேக்கலைன்னா நாளைக்கே நிர்வாகக் குழு கூடிடும்ல :)


 12. rv said...

  மணிகண்டன்,
  தன்மானத் தமிழரின் அரசியல் தொலைநோக்கை முன்கூட்டியே ப்ரெடிக்ட் செய்வது உசிதமான செயலா?


 13. rv said...

  இராயலு,
  ஆட்டோவுக்கு அஞ்சாத சிங்கம் பக்கத்துலேயே இருக்கும்போது தொலைதூர ஐ.எஸ்.டி ஆட்டோவெல்லாம் வராதுப்பா... :))


 14. rv said...

  மணிகண்டன்,
  தண்டவாளம் தலையணையா...

  அப்போ டெல்லி அரியணை என்னவாம்? அதையும் சொல்லிட்டா நிம்மதியா தூங்கப்போவேன்..


 15. rv said...

  கொத்ஸு,
  மதியால் விதிய வெல்ல முடியாது.. அப்படி எதுனாச்சும் செஞ்சா மதிய அடிச்சு துரத்திருவம்.

  விதிதான் நம்ம மதியால வெல்லுதுன்னு ஏதோ பூடகமா சொல்ல வர்றாப்புல இருக்கு...


 16. rv said...

  /யாரோட தலையெழுத்து கொத்ஸ்? மக்களோட தலையெழுத்தா? ராதிகா செல்வியோட தலையெழுத்தா? தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதியோட தலையெழுத்தா?//

  இதென்ன கேள்வி-பதிலா? நீங்க கேக்குற கேள்விக்கு நாங்க பதிலளிக்க மாட்டோம்.. நாங்களெ கேள்வியும் கேட்டு பதிலும் போடுவோம்.. அதுதானே நம் பரம்பரைக் கொள்கை?


 17. rv said...

  கொத்ஸு,
  //யாரு என்ன எழுதறாங்க, அதுக்கு யார் ஆதரவு, யார் எதிர்ப்பு எல்லாம் தெரிய வருமில்ல!!//

  நான் இதுக்கு ஏதாவது சொல்லணுமா??? :))

  அப்புறம் யார் எழுதினாலும் எரிக்க வேண்டியதுதான்...


 18. rv said...

  சந்தோஷ்,
  //ரஞ்சனிகிட்ட சண்டையோ?//
  யாரது புது காரெக்டர் ரஞ்சனி?

  //எங்களுக்கு எல்லாம் பிளைட்டு ஒடுற Run Way தான் பஞ்சுமெத்தை இதுக்கு எல்லாம் அசருவோமா?//
  ஹி ஹி... ப்ளைட்டயே ஹைஜாக் செஞ்சிருவோமே!


 19. மணிகண்டன் said...

  //தன்மானத் தமிழரின் அரசியல் தொலைநோக்கை முன்கூட்டியே ப்ரெடிக்ட் செய்வது உசிதமான செயலா?
  //

  இதுல ப்ரெடிக்ட் செய்ய என்ன இருக்குங்க .எல்லாம் நிர்ணயிக்கப்பட்ட விதி.


 20. மணிகண்டன் said...

  //அப்போ டெல்லி அரியணை என்னவாம்? //

  காலுக்கு வச்சுக்கற தலையனை??


 21. மணிகண்டன் said...

  //எங்களுக்கு எல்லாம் பிளைட்டு ஒடுற Run Way தான் பஞ்சுமெத்தை இதுக்கு எல்லாம் அசருவோமா?
  //

  கொஞ்சம் அடக்கி வாசிக்கலாம்னு நினைக்கிறேன் சந்தோஷ். இல்லைன்னா லுஃப்தான்ஸா மூலமாக அமேரிக்காவில் நுழைந்த வந்தேறிகளின் அட்டகாசம்னு யாராவது பதிவு போட்டுடப் போறாங்க :)


 22. துளசி கோபால் said...

  //அது கிடக்கட்டும், வெங்கடேச பண்ணையாரையே போலீஸ்
  மந்திரியாக்கியிருக்கலாமோ?

  அதே போல அப்துல் மதானியையோ தமிழ்நாட்டு உள்துறை
  மந்திரியாக ஆக்கியிருக்க வேண்டுமோ?//

  யாருய்யா இந்த ராஜ்? 33% நுழைய விடமாட்டாரோ? :-)))))

  ஆமாம் இந்த டாக்டர் ராதிகா செல்வி யாரு?

  அதென்ன திடீர்னு டாக்டர்?

  எப்படியும் 'வாங்க' த்தான் போறாங்க. இப்பவே சொன்னா என்ன தப்பு?

  என்கவுண்டர்லே 'போனா' இப்படிச் சான்ஸ் அடிக்குமா? அடடா.........

  எல்லாம் 'பண'நாயகமப்பா!!!!!


 23. முகமூடி said...

  எங்கியோ இந்திய உள்துறைக்குதான அமைச்சர் ஆகியிருக்காங்க.. என்னவோ நம்ம தாய்நாடு தமிழகத்துக்கு உள்துறை அமைச்சர் ஆயிட்ட மாதிரி வெம்பறீங்களே...

  ஆமா "உள்"துறைன்னா என்னங்க?


 24. Sundar Padmanaban said...

  ராம்

  ஒரு பெண், அதுவும் கணவனை இழந்த பெண், இப்படி பொதுவாழ்வில் நல்ல பதவியில் வந்து அமர்ந்திருப்பது எந்தவிதத்தில் கேலிக்குரியதாக ஆகிறது என்று தெரியவில்லை. திருடனின் மனைவியும் திருடியாக இருக்கவேண்டுமா என்ன? குடிகாரக் கணவன்களின் செய்கைகளுக்கு மனைவியைக் குற்றம் சுமத்துவோமா என்ன?

  யாருக்குத் தெரியும்! தயாநிதி மாறன் மத்தியில் அமைச்சராக அமர்ந்தபோது அனுபவமில்லாதவரை மந்திரியாக்கி அழகுபார்க்கிறார்கள் என்று விமர்சனம் அப்போது எழுந்தது. ஆனால் அவர் திறமையாக செயலாற்றவில்லையா?

  இவரும் பொறுப்புணர்ந்து நல்லமுறையில் செயலாற்றலாம் என்று நினைப்போமே.

  அவருக்கு என்ன தகுதியிருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம்! தகுதியைப் பார்த்துத்தான் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கிறோமா என்ன? தகுதியானவர்கள் மட்டுமே பதவிக்கு வரமுடியும் என்றால் இந்திய அரசியலையும் ஆட்சிகளையும் Outsource பண்ண வேண்டி வரும்! :-)


 25. Anonymous said...

  //ஆமா "உள்"துறைன்னா என்னங்க?//

  "உள்" துறைன்னாக்க நம்ம மஞ்ச துண்டு அய்யா தானே கஸ்டமரா இருந்து தமிழ் நாட்டில் வேகமாக ஊக்குவித்த துறை.அய்யாவுககு இப்போ வெளித் துறை தான்.ஆனாலும் இப்பவும் மிகவும் பிடித்த துறை.

  பாலா


 26. உண்மைத்தமிழன் said...

  வற்றாயிருப்பு சுந்தர் ஸார் சொல்வதுடன் நான் ஒத்துப் போகிறேன்.

  திருமதி.ராதிகா செல்விக்கு தி.மு.க.வில் வாய்ப்பு அளிக்கப்பட்டதே அவர் மீது நாடார் சமூகத்தினருக்கு அப்போதிருந்த அனுதாபத்தை ஓட்டுக்களாக மாற்றி அதன் மூலம் தன்னுடைய கட்சிக்கு ஒரு எம்.பி. எண்ணிக்கையைக் கூட்டிவிட வேண்டும் என்பதுதான். அதைக் கச்சிதமாக முடித்துவிட்டார் கலைஞர்.

  இது அனைத்து அரசியல் கட்சிகளும் யோசிப்பதுதான். இதில் கலைஞர் உலகாளவிய வித்தகர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆச்சரியப்பட ஏதுமில்லை.

  என்னுடைய வருத்தமெல்லாம் என்னவெனில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஒருவரை எழுப்பி 'வாங்க ஸார்' என்று அழைத்தவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு இன்றுவரை போலீஸ் டிரெஸ்ஸையும் அணிந்து கொண்டு மக்கள் சேவையில் இருக்கிறார்களே, உண்மையான போலீஸ் ரவுடிகள்... அவர்களை முதல்வர் என்ன செய்தார்?

  இறந்தவரின் மனைவிக்கு எம்.பி. பதவி கொடுத்தாகி அவருடைய வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை உண்டு செய்தாகிவிட்டது. சந்தோஷம். மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.

  அதேபோல் சட்டத்தைத் தன் கையில் எடுத்துக் கொண்டு ரவுடித்தனம் செய்த போலீஸாரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாமா?

  ராதிகா செல்வியும் அவ்வப்போது சொல்லி வருகிறார்.. எனது கணவரின் படுகொலைக்கு நியாயம் கேட்பேன் என்று? யாரிடம் போய் இஅவர் நியாயம் கேட்கப் போகிறார் என்பது எனக்குப் புரியவில்லை.

  இப்போது அவர்களுடைய கட்சியும் ஆட்சியும் பதவிக்கு வந்து ஒரு வருடமாகிவிட்டது.

  அந்தத் திட்டமிட்ட படுகொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளான போலீஸ் அதிகாரிகள் புதிய இடங்களுக்கு மாறுதல் வாங்கிச் சென்றுவிட்டார்கள். கமிஷனராக இருந்தவரும் இப்போது சகல செளக்கியங்களுடன் இருக்கிறார்.

  இந்த வழக்கு இன்னமும் போலீஸாரின் வீரதீரச் செயலாகவே அரசின் கவனத்தில் இருந்து வருகிறது.

  இப்போது மத்திய உள்துறையின் ராஜாங்க அமைச்சராகவும் ஆகியிருக்கிறார் ராதிகாசெல்வி.

  பார்ப்போம் இப்போதாவது அந்த ரெளடித்தனம் செய்த போலீஸாரை என்ன செய்கிறார் என்று..

  ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு சொல்.. ஆட்சிக்கு வந்த பின்னர் ஒரு சொல் என்பதில் நமது அரசியல்வாதிகள் தெளிவாக இருக்கிறார்கள்.

  இதில் அப்பாவிகளுக்காக நாம் வாதாடப் போய்.. கடைசியில் நமக்கு 'வேலை வெட்டி இல்லாத ஒன்றுகள்.. பொழுது போகலைன்னு இணையத்துல அள்ளி விடுதுக'ன்னு 'நல்ல பேரு' கிடைக்கிறதுதான் மிச்சம்..


 27. முத்துகுமரன் said...

  ராதிகா செல்வி மீது எந்த வழக்குகளும் இல்லையே. அவருக்கு என்ன தகுதி குறைவு வந்துவிட்டது. அத்வானியே உள்துறை அமைச்சரா இருந்திருக்காரே! ராதிகாசெல்வி எல்லாம் சாதரணமப்பா.


 28. Geetha Sambasivam said...

  உங்களோட "ஆணாதிக்க மனப்பான்மை"யைச் சாடுவதா?:D இல்லை என்ன செய்யலாம்னு ஒரே குழப்பமா இல்லை இருக்கு? வழக்கம் போல் இந்த ஆட்டத்துக்கும் விடு ஜூட்! மொக்கை போட்டுட்டுத் தகவல் கொடுங்க. வந்து வாழ்த்தறேன். :)


 29. Anonymous said...

  அதானே... அத்வானியே உள்துறை மந்திரியாக இருந்து தன் துறை CBI மூலமா 'நிரபராதி'ன்னு தனக்குத்தானே தாலி கட்டிக்கொண்ட முன்வரலாறுகள் இந்தியாவில் இருக்கும்போது, 'ஒரு வெங்கடேசப்பண்ணையாரின் மனைவி' என்பது எந்த விதத்தில் ராதிகாசெல்விக்கு தகுதிக்குறைவாக ஆகிவிட்டது?


 30. Anonymous said...

  முத்துக்குமரன்,

  என்னங்க இது...
  தமிழகத்தின் 'சே குவேரா'... மன்னிக்கவும் 'பிடல் காஸ்ட்ரோ'வெங்கடேச பண்ணையாரின் மனைவியை போய் சாதாரண அரசியல்வாதி அத்வானிக்கு ஒப்பிடறீங்களே... இதை வன்மையாக கண்டிக்கின்றேன்.


 31. Anonymous said...

  //தமிழகத்தின் 'சே குவேரா'... மன்னிக்கவும் 'பிடல் காஸ்ட்ரோ'வெங்கடேச பண்ணையாரின் மனைவியை போய் சாதாரண அரசியல்வாதி அத்வானிக்கு ஒப்பிடறீங்களே... இதை வன்மையாக கண்டிக்கின்றேன்.///

  அநானி..,
  'அதே 'வெங்கடேசப்பண்ணையாரை' சே குவாரா, பிடல் காஸ்ட்ரோவாக யாரும் சித்தரிப்பதாகச்சொல்லி இழையைத் திரிப்பதும்....
  அநேக உயிர்ப்பலிகளுக்குக் கா'ரண'மான அத்வானியை 'சாதா''ரண' அரசியல்வாதியாக 'சோ மா(தி)ரி பேசுவதும் தப்புய்யா....தப்பு!


 32. Anonymous said...

  நேற்று தொலைக்காட்சியில் பார்த்த போது.."இவர்களுக்கு வெட்கமாகவே இருக்காதா" என்று தோனியது.
  தெரியாத துறை,எப்படி சமாளிப்போம்? இப்படி ஒரு கேள்வி கூட அவர்கள் மனதில் ஒன்று கூடவா எழுந்திருக்காதா?


 33. Anonymous said...

  Naan ezhutha ninaithathai Sundar has presented in much better form...

  Talented secretaries, selfless vision could do magic to any post by anybody.

  preconceived approach works well for satire though :)


 34. மணிப்பக்கம் said...

  ஆஹா ஆஹா. . . கலக்கிட்டீங்க போங்க..... என் கருத்தும் அதே....... இந்த மாதிரி அரசியல் வாதிகளை நிராகரிக்க கற்றுக்கொள்ள வேண்டும்!


 35. மணிப்பக்கம் said...

  ஆஹா ஆஹா. . . கலக்கிட்டீங்க போங்க..... என் கருத்தும் அதே....... இந்த மாதிரி அரசியல் வாதிகளை நிராகரிக்க கற்றுக்கொள்ள வேண்டும்!


 36. Anonymous said...

  "ஜாதிய ஒழிக்க அரசியல்வதிகள் யாரும் முன்னால் வர மாட்டாங்க.ஏன்னா அவங்க ஜாதிய வச்சுதான் பொள்ளப்பு நடத்துராங்க.ஓட்ட பொறுக்க அவங்களுக்கு ஜாதிவேணும்.....பதவிய பிடிக்க எதனாலும் செய்ய தயாரா அரசியல்வதிகள நம்பி பிரயோஜனம் இல்லை...." இது பெரியார் பட வசனம்.

  கருணாநிதியும் இந்த ஓட்டு பொறுக்க கும்பலில் ஒருவர்தானே!!

  ஆயிரம் பெரியார் வநதாலும் இவனுக திருந்தப் போவதில்லை...


 37. ரவி said...

  //என்னே மதிநுட்பம்! அர்த்தசாஸ்திரத்தை மிஞ்சும் சாணக்கியத்தனம்! கண்டு உள்ளம் மகிழ்கிறது ஐயா! எப்படி நன்றி சொல்வது என்று தெரியாமல் விக்கித்து திகைத்து ஸ்தம்பித்து நிற்கிறேன்!//

  :))))))))))))))))))))))))))))))))


 38. rv said...

  //.எல்லாம் நிர்ணயிக்கப்பட்ட விதி//

  Everyman, after all, has but one destiny! :))


 39. rv said...

  //காலுக்கு வச்சுக்கற தலையனை??//
  டெல்லியில் நம்ம ஆட்சி நடப்பதும் நல்லாத்தான்ல இருக்கு...


 40. rv said...

  //லுஃப்தான்ஸா மூலமாக அமேரிக்காவில் நுழைந்த வந்தேறிகளின் அட்டகாசம்னு யாராவது பதிவு போட்டுடப் போறாங்க :)//

  அதுவும் போயும் போயும் ஜெர்மன் நாஜிகளில் உதவியோடு அமெரிக்காவிற்கு தப்பிச்சென்ற ப்ளேனேறிகள்னு யாராச்சும் பதிவு போட்டுற போறாங்க..


 41. rv said...

  அக்கா,
  //எப்படியும் 'வாங்க' த்தான் போறாங்க. இப்பவே சொன்னா என்ன தப்பு?//

  நம்ம ஊர் அரசியல கரைச்சுக்குடிச்ச உங்களுக்கு இன்னும் நியுஸில டாக்டர் பட்டம் கொடுத்து, க்றைஸ்ட்சர்ச் சாவிய கைல கொடுத்து ஒரு பெரிய தெருவுக்கும் உங்க பேர வக்கச் சொல்லி தமிழ்நாட்டு அரசு மூலமா நியுஸி மத்திய அரச அழுத்தம் கொடுக்கச் சொல்லலாமா?


 42. rv said...

  தல,
  //எங்கியோ இந்திய உள்துறைக்குதான அமைச்சர் ஆகியிருக்காங்க.//

  இப்ப என்னாங்குறீங்க?

  இந்திய பெடரல் அரசோட உள்துறை நம்ம கைல இருக்குன்னா, தமிழ்நாடு இந்தியாவுல தான் இன்னும் இருக்குன்னுதானன அர்த்தம்? இல்ல நான் புரிஞ்சிக்கறதுல எதுனாச்சும் பிரச்சனையா?


 43. rv said...

  சுந்தர்,
  //ஒரு பெண், அதுவும் கணவனை இழந்த பெண், இப்படி பொதுவாழ்வில் நல்ல பதவியில் வந்து அமர்ந்திருப்பது எந்தவிதத்தில் கேலிக்குரியதாக ஆகிறது என்று தெரியவில்லை.//

  நீங்க சொல்ற விஷயங்கள ஒத்துக்கிறேன். ஒரு பெண் மினிஸ்டர் ஆகறதோ, அவங்களோட இறந்த கணவன் ரவுடியோ தியாகியோ இதெல்லாம் இங்க பிரச்சனை இல்ல. மந்திரிங்கள் சும்மா ஷோ-பீஸ் தான்னு நமக்கு எல்லாருக்குமே தெரியும்.

  ஆனா ஷோ-பீஸா வைக்கறவங்களோட தகுதி கொஞ்சமாவது பிரஸண்டபிளா இருக்கணும்ங்கறது முக்கியமில்லியா.. இதுதான் இந்தியாவுல பழக்கமேயில்லியேன்னு நீங்க சொல்றீங்க. உண்மைதான்.

  ஆனா கேலிக்குரியதா இருக்கிறது அவங்க அமைச்சர் ஆக்கப்பட்ட விதமும் அவசரமும் தான். யாருக்காக எதற்காகனு சொல்லி வேற தெரியணுமா?

  இந்த வயசுலயும் சாதி அரசியல்ல கீழ்த்தரமான முறையில செய்றாரேனு வருத்தம் தான் இந்தப் பதிவிற்கு காரணம்.


 44. rv said...

  பாலா,
  //"உள்" துறைன்னாக்க நம்ம மஞ்ச துண்டு அய்யா தானே கஸ்டமரா இருந்து தமிழ் நாட்டில் வேகமாக ஊக்குவித்த துறை.அய்யாவுககு இப்போ வெளித் துறை தான்.ஆனாலும் இப்பவும் மிகவும் பிடித்த துறை.//

  இது என்ன கதை?


 45. rv said...

  உண்மைத்தமிழன்,
  உள்துறை அமைச்சராவே ஆக்கியாச்சு.. என்கொயரி கண்டிப்பா நடத்தலாம். நடத்துவாங்களான்னு பார்ப்போம்.


 46. rv said...

  முத்துக்குமரன்,
  //ராதிகா செல்வி மீது எந்த வழக்குகளும் இல்லையே. அவருக்கு என்ன தகுதி குறைவு வந்துவிட்டது. அத்வானியே உள்துறை அமைச்சரா இருந்திருக்காரே! ராதிகாசெல்வி எல்லாம் சாதரணமப்பா.//

  உங்களால் இப்படி ஜஸ்டிபை செய்ய முடிகிறதென்றால் சந்தோஷம்..Whatever works for you. :)


 47. முத்துகுமரன் said...

  //உங்களால் இப்படி ஜஸ்டிபை செய்ய முடிகிறதென்றால் சந்தோஷம்..Whatever works for you. :)//

  முன்முடிவுகளோடு நீங்கள் அணுகும் போது இதிலொன்றூம் தவறு இல்லையே. ஒருவர் செயல்படும் முறையை வைத்து விமர்சிப்பதுதான் முறையாகும். கோமாளி என்று ஊடகங்களால் கேலி செய்யப்பட்ட லாலு ரயில்வே துறையில் சாதனைகள் புரியவில்லையா. ராதிகா செல்வி அமைச்சராகியிருப்பதில் அப்படி என்ன ஏளனத்துரிய விசயம் இருக்கின்றது எனத் தெரியவில்லை. குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டவர்கள் எல்லாம் முதல்வராக பதவியேற்ற வரலாறு நம்மிடையே உள்ளது. அந்தவகையில் ராதிகாசெல்வி இவர்கள் எல்லாரையும் விட எவ்வளவோ மேல். இதுவரை உள்துறை இணை அமைச்சராக இருந்த ரகுபதிக்கு கோப்புகள் எதுவும் போகவில்லை என்றும் செய்திகள் வருகின்றன. நமது அரசியலமைப்பு பல நேரங்களில் கோமாளித்தனமாகத்தான் இருக்கிறது. ராதிகாசெல்வியின் விசயத்தில் உங்கள் ஏளனத்தைதான் மறுக்கிறேன். பெண்களுக்கு கிடைக்கும் இது போன்ற மிக அரிதான அரசியல் உரிமைகள் சிறிதளவேனும் சமூகத்திற்கு மாற்றத்தை தந்தாலே மகிழ்ச்சிதான்.

  **
  உங்கள் முந்தைய 200வது பதிவிற்கு வாழ்த்துகள்.


 48. rv said...

  கீதா,
  //"ஆணாதிக்க மனப்பான்மை"யைச் சாடுவதா?//

  அது ஒண்ணுதான் பாக்கி வாங்கவேண்டிய பட்டங்களில்! அதுனால நீங்க கொடுத்தா சந்தோஷமா ஏத்துப்பேன்! :)))

  //மொக்கை போட்டுட்டுத் தகவல் கொடுங்க. வந்து வாழ்த்தறேன். :)//
  அரசியல்ல 33% இடட ஒதுக்ககீடு வேணணம்னுட்டு இதென்ன மொக்கைக்கு மட்டும் 100% ஒதுக்கீடு?? :))))


 49. rv said...

  ரீடர்,
  இந்த மாதிரி கேள்விகள் இதை நியாயப்படுத்துவதாய்த்தான் தெரிகிறது..

  பெண், கணவனை இழந்தவர் மந்திரி ஆவது பற்றி யாருக்குமே ஆட்சேபணையில்லை...

  பின்னுள்ள கேவலமான ஜாதி அரசியல் தான் நாறுகிறது.


 50. rv said...

  //தமிழகத்தின் 'சே குவேரா'... மன்னிக்கவும் 'பிடல் காஸ்ட்ரோ'வெங்கடேச பண்ணையாரின் மனைவியை போய் சாதாரண அரசியல்வாதி அத்வானிக்கு ஒப்பிடறீங்களே... இதை வன்மையாக கண்டிக்கின்றேன்.//

  பண்ணையார் நல்லவரா கெட்டவரான்னு ஆராய்ச்சி செய்யறது இப்ப தேவை இல்லைனு நினைக்கிறேன்.


 

வார்ப்புரு | தமிழாக்கம்