203. பேரக் கேட்டோனச் சும்மா.. அதிருதில்ல....

நிரந்தர சூப்பர் ஸ்டார் இவரு மட்டுந்தான். அதுவும் ரெண்டு வருஷம் தள்ளிப் போயிகிட்டேயிருந்த கனவு. நடுவுல புது வில்லனும் வந்து ஜெயிச்சுப்புட்டான்.... இந்த தடவையாவது நம்ம தலைவரு வருவாரா? ஜெயிப்பாரா? எல்லார் மனதிலும் இருக்கும் கேள்விகள் இதுதான் இப்போதைக்கு.

இந்த வருஷம் புதுக்களம்... என்றும் இளமையான நாயகன். இதுவரைக்கும் வந்த லுச்சா பசங்களையெல்லாம் தூக்கி பந்தாடி சூப்பர் ஸ்டார்னா அது ஒருத்தன் தானு நிருபிச்சாச்சு! பாதிக்கிணறு தாண்டியாச்சு.. ஆனா இனிமே ஆரமிக்கறது அடுத்த கட்ட ஆட்டம். வில்லனும் லேசுபட்டவன் இல்ல...

ஆனா ஆட்டதோட ட்ரெயிலர் பாத்தவரைக்கும் எந்த பச்சாவும் வாலாட்ட முடியாதுன்னு சொல்லி அடிக்கிறாப் போலவே இருக்கு...

வாடா வாடா வாங்கிப்போடா... வாய்ல பீடா போட்டுக்கடா...
போடா போடா பொழச்சுப்போடா.... நடாலு.... வாடா வாடா வாங்கிப்போடா....


ஆஆஅமா... பேரக் கேட்டோனச் சும்மா.. அதிருதில்ல...

ரோஜர் பெடரர்!

23 Comments:

 1. இலவசக்கொத்தனார் said...

  நீரும் உப்புமா கிண்டியாச்சா? சரிதான். இந்த மாதிரி பதிவுகளுக்குத்தான் இது சீசன் போல!!


 2. உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
  This comment has been removed by a blog administrator.

 3. rv said...

  கொத்ஸ்,
  உப்புமாவாவது கிண்டலேன்னா அப்புறம் மக்கள்ஸ்லா மறந்துருவாங்களே... ஏற்கனவே அந்த நிலைமைல தான் இருக்கோம்...


 4. rv said...
  This comment has been removed by the author.

 5. rv said...

  சாரி.. போலித்தமிழன் சதி புரியாம உண்மைத்தமிழன் கிட்ட கோச்சுகிட்டேன்...

  கொத்ஸுக்கு நன்றி.


 6. உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
  This comment has been removed by a blog administrator.

 7. மணியன் said...

  //நடாலு.... வாடா வாடா வாங்கிப்போடா....//

  சரியாச் சொன்னீங்க, களிமண் தரை மன்னன் நடால் டிரோபியை வாங்கிட்டு போய்க் கொண்டே இருப்பார்.

  மண்ணுதான், களிமண்ணுதான் :)


 8. நாகை சிவா said...

  இல்ல அதிரல.... முடிவு வரட்டும்... அவரசப்படக் கூடாது.....

  இவரு என்ன ரஜினியா வந்தவுடன் அம்புட்டு பேரும் சலாம் அடித்து விலக.... இது போர்க்களம்.. திறமைக்கு தான் பரிசு.... பாக்கலாம் பாக்கலாம்....


 9. உண்மைத்தமிழன் said...

  இந்த போலி உண்மைத்தமிழனைப் பத்தி ஏதாச்சும் உங்களுக்குத் தெரியுமா?

  படுத்துறான்யா.. பாடாப் படுத்துறான்யா.. தாங்க முடியல.. எதுனாச்சும் செஞ்சு அவன் யாருன்னு கண்டுபிடிச்சு சொல்லுங்க.

  கரீக்ட்டா சொன்னீங்கன்னா உங்க பதிவு எல்லாத்துக்கும் இந்த உண்மையான உண்மைத்தமிழன் அட்டெண்டெண்ட்ஸ் கொடுத்திருவான்..

  டீல் ஓகேவா.. ராத்திரி தூங்க முடியலய்யா.. இன்னிக்கு எவன் வூட்டுக்குப் போய் ன்ன எழவை இழுத்து வைச்சிருக்கானோன்னு பயமா இருக்கு..


 10. Radha Sriram said...

  ரொப்ரெடோ கிட்ட ஒரு செட்டு தோத்துட்டாரே..எங்க தங்க தலைவர்.....
  ம்கென்ரோ கமெண்ட்,"He doesnt seem to care after he broke the record"
  MCcenroe set the record of winning 35 consecutive sets.....Federer just now broke that .........
  Djokovic நல்லா விளயாடரார் ராமனாதன்!!
  Federer 5-0 leading 3rd set......


 11. rv said...

  மணியன்,
  //மண்ணுதான், களிமண்ணுதான் :)//

  அவசரப்படாதீங்க.. நடால் இகோர் அண்ட்ரியவ்வ கடக்கணும்.. தலைவருக்கும் ரஷ்ய ஆப்பு காத்திருக்கான்னு தெரியல டேவிடென்கோ வடிவுல..

  பார்ப்போம்..


 12. rv said...

  புலி,
  //திறமைக்கு தான் பரிசு.... பாக்கலாம் பாக்கலாம்....//

  திறமைதான்பா... எவ்வளவு பெரிய இஷ்டாரா இருந்தாலும் பெடரருக்கு எதிர்த்தாப்போல விளையாடணும்னா ஆடிதான் போயிடுறாங்க.. ராப்ரெடோ கூட பூனையாட்டம் பதுங்கிட்டாரு பாத்தீங்க இல்ல?

  இவருக்கு அஞ்சாத ஒரே சிங்கம்னா அது நடால் தான்.. ஆனா அந்த தைரியமும் களிமண்ல மட்டும் தான் செல்லுபடியாகும்...


 13. rv said...

  உண்மைத்தமிழன்,
  போலின்னு தெரியாம அந்த கமெண்ட் வெளியிட்டு பதிலும் போட்டேன்.. யாரு என்னன்னு எனக்கு சுத்தமா தெரியாது..

  அமுக வினரிடம் உதவி கேட்டுபாருங்களேன். இப்போதைக்கு இந்த மாதிரி மேட்டர்ல ஆப்புரேசன் செய்யுற புண்ணியவாளர்கள் அவங்கதான்...


 14. rv said...

  இராதா,
  ஒரு செட் போனாப் போகுதுன்னு கொடுத்தா மாதிரிதான் இருந்துச்சு.. ஸ்டாடிஸ்டிக்ஸ் பாத்தீங்கன்னா அந்த செட்ல மட்டும் முத செர்வ் சதவிகிதம் முப்பதுக்கும் கம்மி... ஆனா கொஞ்சம் கிலியானது உண்மைதான்..

  ஆனா அந்த கிலியவிட டேவிடென்கோவ நினச்சா பயம் ஜாஸ்தியாயிருச்சு.. சாவடிக்கிறாரு.. நல்பாண்டியன், கன்யாஸ்னு வரிசையா..

  அதேபோல அந்தப்பக்கம் ஜோக்கோவிச்ச விட என் பந்தயம் அண்ட்ரியவ் மேல தான்.. மனுஷன் அசாத்திய ஆட்டம்.. அப்பப்பா.. ஆண்டி ராடிக் மேட்ச் கண்முன்னாடி நிக்குது... ஸோ நடாலுக்கும் ஒண்ணும் அவ்வளவவ ஈஸியான மேட்டர் இல்ல..

  இருந்தாலும் டேவிடென்கோ vs நடால்; பெடரர் vs அண்ட்ரியவ் இருந்திருந்தா இன்னும் நிம்மதியா தூங்குவேன்.. எனக்கென்னமோ ஜோக்கோவிச் வந்தா நடால் கன்பர்ம்ட் பைனல்னு தான் தோணுது...


 15. இலவசக்கொத்தனார் said...

  //அமுக வினரிடம் உதவி கேட்டுபாருங்களேன். இப்போதைக்கு இந்த மாதிரி மேட்டர்ல ஆப்புரேசன் செய்யுற புண்ணியவாளர்கள் அவங்கதான்...//

  ஆனா இந்த முறை வெறும் மாப்பு கடுதாசியோட நிறுத்தாம உள்ளே தள்ள வழியைப் பாருங்க. ரெண்டு பேரு போனாத்தான் இந்த தொல்லை நிற்கும்.

  தினசரி காலையில் ஏண்டாப்பா பின்னூட்ட பெட்டியைத் திறக்கறோமுன்னு பண்ணிடறாங்க. எதனாச்சும் பண்ணுங்கப்பா.


 16. rv said...

  கொத்ஸு,
  //தினசரி காலையில் ஏண்டாப்பா பின்னூட்ட பெட்டியைத் திறக்கறோமுன்னு பண்ணிடறாங்க. எதனாச்சும் பண்ணுங்கப்பா.//

  ஹூம்...

  பெடரர் பேரக் கேட்டா அதிரும்னு பாத்தா.. இங்க உண்மைத்தமிழன், உமக்கெல்லாம் யார் பேரக் கேட்டா அதிருதுன்னு தெரியவருது... :)))))))))))

  அமுக சீக்கிரம் அருள் புரிய என் வாழ்த்துகள்! நமக்கு இந்தப் பிரச்சனை கொஞ்ச நாளா இல்லை.... சிலநாள் முன்னாடி வரைக்கும் இந்த ஹாப்லாக்.காம் ஆளுங்க படுத்தினாங்க...


 17. துளசி கோபால் said...

  கூடிக் கும்மியடிக்க கூட்டம் சேர்த்தாச்சா? :-)))


 18. rv said...

  அக்கா,
  கும்மியடிக்க நண்பர்கள் கூட்டம் சேர்க்கறதெல்லாம் பழைய ஸ்டைலு!

  இப்பல்லாம் நாமளே மாறி மாறி அந்த சைடிலும் இந்த சைடிலும் எழுதி கும்மியடிக்கிறதுதான் பாஷன்.. தெரியாதா?


 19. வல்லிசிம்ஹன் said...

  துளசி, இங்க யாரும் இதுவரை கும்மி அடிச்ச மாதிரி தெரியலையே.டென்னிஸ் தான் ஆடி இருக்காங்க.:-))


 20. rv said...

  Federer Express Blasts Past Davydenko!

  7/5 - 7/6 - 7/6

  One Match Left for the Grand Slam!


 21. rv said...

  வல்லிசிம்ஹன்,
  //இங்க யாரும் இதுவரை கும்மி அடிச்ச மாதிரி தெரியலையே.//
  ஆமாங்க கும்மி கம்மியாதான் ஆயிடுச்சு இப்பல்லாம்...


 22. Radha Sriram said...

  அஹா தலைவர் த்ரூவா?? straight sets.....இங்க நடால் லீடிங் போல இருக்கு...but watch out for djokovic Ramanathan..he is doing good.....maybe he will be a player to watch in the furure!!


 23. Venkat said...

  ராமநாதன் - உங்களை ஒரு தொடர் விளையாட்டுக்கு அழைத்திருக்கிறேன். பார்க்க : http://domesticatedonion.net/tamil/?p=697

  நேரமிருந்தால் எழுதவும்


 

வார்ப்புரு | தமிழாக்கம்