165. இன்னும் ஆயிரம் ஆண்டுகளில்...

நாளை என்ன நடக்கப் போகிறது என்பதே நம் தலையாய பிரச்சனையாய் இருக்கையில், இது கொஞ்சம் bigger picture கேள்வி. உண்மையில் பத்து ஆண்டுகளோ, நூறு ஆண்டுகளோ பூமியின் வயதுடன் ஒப்பிடுகையில் அவை ஒரு நொடிக்கூட கிடையாது. ஆயிரமாண்டுகள் என்பது கொஞ்சம் பெரிய அளவாக இருக்கிறது. நம் நவீன வரலாற்றை புரட்டினாலே ஆயிரமாண்டுகளில் எத்தனையோ சமூக, பூகோள, தொழில்நுட்ப மாற்றங்களை கண்டுள்ளோம். அப்படி,

இன்னும் ஆயிரம் ஆண்டுகளில் - அதாவது செப்டம்பர் 7, 3006-ல் நாம் பூமியில் திடுமென வந்து குதித்தால் தென்படும்

1. பூகோள ரீதியான மாற்றங்கள்

2. மனித இனத்தில் நிகழப்போகும் biological, behavioural மாற்றங்கள்

3. நாடுகளுக்கு இடையிலோ, சமூக அளவிலோ நடந்திருக்கக்கூடியவை

4. தொழில்நுட்பத்தால் சாத்தியப்படும்

என்று நீங்கள் நினைப்பவற்றை பதிவிடலாமே. இந்தியா, தமிழ்நாடு என்று குறிப்பிட்டு எழுதினாலும் பரவாயில்லை.

எல்லோரும் என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளவே இது. பெரிய அளவில் டெக்னிக்கல் திறனாய்வெல்லாம் செய்யவேண்டும் என்கிற அவசியமில்லை. அப்படி அறிவியல் சார்ந்து எழுதுபவர்களும் வரவேற்கப்படுகிறார்கள்.

இதை இங்கே பின்னூட்டமாய் இடாமல், தங்கள் பதிவில் கதையாகவோ, கட்டுரையாகவோ அல்லது bullets போட்டு பாயிண்ட்களாகவோ எழுதலாம். ஏதாவது ஒரு குறிப்பிட்ட மாற்றம் நிகழும் என்று நீங்கள் எண்ணினால், அது ஏன் நடக்குமென்று நினைக்கிறீர்கள் என்றும் சொன்னால் நன்றாக இருக்கும். இதற்கும் லாஜிக், அறிவியல் எல்லாம் அப்ளை செய்ய வேண்டும் என்று அவசியமில்லை. வெறுமனே கற்பனை செய்தாலும் பரவாயில்லை. அதற்குரிய சாத்தியங்களை விவரம் தெரிந்தோர் விளக்கலாம்.

உங்கள் பதிவில் பதித்துவிட்டு, இங்கே பின்னூட்டத்தில் சுட்டி கொடுக்கலாம் (நிறைய வலைப்பதிவுகள் இருப்பதால் ஒரே இடத்தில் சுட்டிகளை சேகரிக்கவே இது. பின்னூட்டக் கயமைத்தனம் இல்லை. இல்லவே இல்லை. :)) )
நிறைய பதிவர்கள் எழுதினால் புதிய தகவல்கள் கண்டிப்பாக தெரியவரும்.

இப்பதிவு போட்ட என்னுடைய கருத்தைக் கேட்கிறீர்களா? தோன்றாமல் தானே உங்களுக்கு கொக்கி போடுகிறேன். விளையாட்டை ஆரம்பிப்பவர்கள் ஆரம்பிக்கலாம். நானும் சீக்கிரம் பதிக்கிறேன் இதுபற்றி.

இவ்விளையாட்டில் ஏதேனும் திருத்தங்கள், மாற்றங்கள் செய்யலாமெனில் தாராளமாக செய்யலாம்.

தானாகவே பதிவர்கள் முனவராத பட்சத்தில், நாலுவிளையாட்டு போல 'டேக்' செய்துவிட்டு மற்றவரை மிரட்டிப்போடச் சொல்லலாம். :))

tag செய்வதுதான் இப்படிப்பட்ட பதிவுகளுக்கு சிறந்த வழியென்பதால் இதோ நான் அழைக்கும் ஐந்து பதிவர்கள். ஏன் ஐந்து? நாலு ஆச்சு ஆறாச்சு. அதான் ஐந்து. கூப்பிட்டவர்கள் மட்டுந்தான் போடவேண்டுமென்றில்லை. இதை எல்லோருக்குமான அழைப்பாக எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன். உங்கள் பூவிலேயே பதிவைப் போட்டுவிட்டு சுட்டிமட்டும் கொடுங்கள்.

1) செல்வன்
2) பாஸ்டன் பாலா
3) மோகன் தாஸ்
4) பொன்ஸ்
5) வெளிகண்டநாதர்

30 Comments:

  1. G.Ragavan said...

    யய்யா என்ன இப்பிடி ஒரு கேள்வி கேட்டுட்டீங்க! நெறையப் பேரு வந்து கலக்கப் போறாங்க பாருங்க.

    என் பங்குக்குக் கொஞ்சம் போல........

    அப்ப உழவுதான் பெரிய தொழிலா இருக்கும். மாடு கெட்டிக் கமலை இழுத்துத் தண்ணி விட்டு விவசாயம் நடக்கும். மழை தவறாம பெய்யும். ஒரு இடத்துல இருந்து இன்னொரு எடத்துக்கு மாட்டு வண்டியோ குதிர வண்டியோ கட்டிக்கிட்டுப் போகனும். இல்லைன்னா நடந்து போகனும். அவ்வளவுதாங்க. ஏன்னா சண்டயக் கிண்டயப் போட்டு இருக்குற வசதிகள் வாய்ப்புகள் எல்லாம் அழிஞ்சு போகும். இயற்கைச் சீற்றங்கள் வேற. மனிதன் இயற்கையோடு இணைந்து வாழ இயற்கையால் கட்டாயப் படுத்தப் பட்டிருப்பான்.


  2. வெற்றி said...

    இராமநாதன்,
    நல்ல தலைப்பு. உங்களைப் போலவே நானும் இவ் விடயத்தில் பலரது எண்ணங்களை/கற்பனையை அறிய ஆவலாக இருக்கிறேன். கொஞ்சம் கால அவகாசம் தாருங்கள். என் எண்ணங்களையும் பதிவிலிடுகிறேன்.


  3. rv said...

    ஜிரா,
    வர்றவங்க வரட்டும்.. வந்ததுக்கு நாலுவரில எழுதிட்டா எப்படி?

    கதையெழுதற ஆளு நீங்க. ஒரு கதையாவே எழுதுங்களேன்? உடனே எழுதணும்னு இல்ல. பொறுமையா எழுதுங்க.

    இப்பப்போட்ட நாலு வரி கணக்குல வராது. :))


  4. rv said...

    வெற்றி,


    நிதானமாக பதிவை இடுங்கள். ஆனால் நிச்சயம் இடுங்கள்.

    மிக்க நன்றி.


  5. அருண்மொழி said...

    * யாரோ ஒரு "காந்தி" பிரதமராக இருப்பார் (அ) எதிர்க்கட்சி தலைவராக இருப்பார்
    * தமிழ்நாட்டில் கருணாநிதியின் குடும்பத்தினரோ (அ) விஜயகாந்த் குடும்பத்தினரோ ஆட்சியில் இருப்பார்கள்


  6. ரவி said...

    அப்போ எவனாவது ஒரு தமிழன் பீன்ஸை கொசுறு வாங்கிக்கொண்டிருப்பான் ஒரு காய்கறி கடையில்...


  7. rv said...

    அருண்மொழி,
    ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இதேதான் என்கிறீர்களா.. :))


  8. rv said...

    செந்தழல் ரவி,
    ஆயிரம் வருஷம் கழிச்சு கொசுறு வாங்கப்போறாங்களா.. பதிவாவே போட்டு இந்த விஷயத்துல உங்க எண்ணத்தை பதிக்கலாமே?


  9. ENNAR said...

    சென்ற ஐம்தாண்டுகளில் எப்படி இருந்ததோ அதை அப்படியே சொல்லியுள்ளார் ராகவன். அவர் கருத்தோடு நான் ஒத்துப்போகத்தான் வேண்டும். இன்னும் 100 அல்லது 500 ஆண்டுகளுக்குள் உலகத்தை இந்த தீவிர வாதிகளும் சுனாமியும் பெரு வெள்ளமும் அழிக்கத்தான் போகிறது அப்போது எங்கோ ஒரு கோடியில் சிலர் தப்பித்து இருப்பார்கள். அவர்களால் உலகம் உய்யும்.
    முடிந்தால் நான் இதை தொடர்கிறேன்


  10. rv said...



    என்னார்,
    ஜிரா நாம் regress ஆகப்போகிறோமென்று நினைக்கிறார். எனக்கு என்னவோ அப்படி ஆகுமென்று நம்பிக்கை இல்லை. எரிபொருட்களின் தட்டுப்பாடு வரும் என்று எண்ணி அப்படி சொல்கிறாரென்று நினைக்கிறேன். இதைப்பற்றி இன்னும் சிந்திக்க வேண்டும்..


  11. rv said...

    நிர்மல்,
    இதுபற்றி கவலையெல்லாம்பட்டு என்னாகப்போகிறது?

    கவலையென்னவோ நம்மளை விட்டுப் போகப் போவதில்லை. பொழுதுபோவதற்காக கற்பனை செய்து பார்க்கலாமே


  12. Unknown said...

    தலைவா

    டேக் செய்ததற்கு நன்றி.பரிட்சை முடிந்ததும் முதல் வேலையாக பதிவு போடுகிறேன்.அருமையான தலைப்பு


  13. rv said...

    நிர்மல்,
    ஆயிரம் வருஷம் கழிச்சும் நம்ம புகழ் லண்டன் யுனிவர்சிடி வரைக்கும் பாயுங்கறீங்க. ஆனா, நீங்க எழுதனத படிச்சா எதோ இம்சை அரசன் வரலாறு மாதிரி ஒருத்தர் எழுதி (அதையும் கல்வெட்டுல நீங்களே எழுதிட்டீங்க) படம் எடுத்து "என்னைய வச்சு காமெடி கீமெடி பண்ணிடுவாங்களோ?".

    //பக்கத்து க்ளாஸூக்கு மைன்டை மாத்திக்கோ. அங்க வரலாறு க்ளாஸ்ல ஜசுவர்யா ராய் ஒடிட்டு இருக்கு"//
    ஹி ஹி.. ஐஸு பக்கத்துல இருந்துச்சுன்னா நான் மட்டும் இதையா ஆராய்ச்சி செஞ்சுகிட்டிருப்பேன். எங்கன்னு சொல்லுங்க. வந்து ஜோதில ஐக்கியமாயிடுவோம்.


  14. rv said...

    நன்றி செல்வன்,
    பதிவுக்காக ஐ ஆம் தி வெயிட்டிங்.


  15. Boston Bala said...

    நிர்மல், சும்மா ஷார்ட்டா ஷார்ப்பா, நச்னு இருக்கிறது!


  16. இலவசக்கொத்தனார் said...

    நல்லா வாங்கறய்யா பின்னூட்டம். பல நூறு வர வாழ்த்துக்கள். நானும் ஒரு பதிவு போடறேன் கொஞ்சம் டயம் குடு.


  17. துளசி கோபால் said...

    ஒரு குடிசைவீட்டுலே நடுநாயகமா ஒருத்தர் உக்காந்து பதிவு எழுதிக்கிட்டு இருப்பார்.
    அவரைச் சுத்தி எல்லா 'காட்டு மிருகங்களும்' உக்கார்ந்து இருக்கும். எழுதறதை
    நிறுத்தவே மாட்டார். அதை நிறுத்துனா மிருகம் வந்து கடிச்சுடுமே:-)))


  18. rv said...

    பாஸ்டன் பாலானாரே,
    நீங்களும் சீக்கிரம் எழுதுங்க.

    அப்படியே நீங்க முன்மொழிந்திருக்கிற ஐந்து பேருக்கும் அலெர்ட் அனுப்புங்க. இல்லேன்னா, 'அப்படியா? பார்க்கவேயில்லே'ன்னு சாதிச்சுடுவாங்க :))


  19. rv said...

    கொத்ஸு,
    உமக்கு சொல்லவும் வேணுமா? வீடு கட்டச் சொன்னா ஊரையே கட்டற ஆளாச்சே நீரு..

    சீக்கிரம் எழுதும்.

    அது எப்படி எல்லா பதிவுலேயும் பி. கயமைத்தனமே நடக்குதுன்னு நினச்சுக்கிறீரு. குத்தமுள்ள நெஞ்சு என்னமோ செய்யுதுன்னு சொல்வாங்களே.. அதுவா இருக்குமோ


  20. rv said...

    நிர்மல்,
    நிஜமா நல்லா இருக்குதுங்க. இதயே டெவலப் பண்ணி எழுதுங்களேன்..

    என்னய வச்சு எழுதுனதுக்கு பொற்கிழியெல்லாம் மட்டும் எதிர்பார்க்கக்கூடாது.


  21. rv said...

    அக்கா,
    என்ன இது புதுசா உள்குத்தோடல்லாம் பின்னூட்டம் போடுறீங்க?

    காட்டு மிருகங்கள் என்ன வீட்டு மிருகங்கள் ஒண்ணுத்தோட பேரு கூட சொல்லமுடியாத நிலைமையில இல்ல தமிழ்மணம் (பாபா கவனிக்க) இருக்கு.. நீங்க வேணா புதுசா ஏதாவது நியுஸி மிருகம் சொன்னாத்தான் உண்டு.


  22. rv said...

    நிர்மல்,
    உங்கள ஸ்டோரிய டெவலப் பண்ணச்சொன்னா feverஅ டெவலப் பண்ணியிருக்கீங்க.

    கிங்ஸ், இது இப்போ இருக்கா? இல்ல ஆயிரம் வருஷம் கழிச்சு இருக்குமா?


  23. நாகு (Nagu) said...

    என்னுடைய பட்டியல் இங்கே.
    ஏதோ வேகத்துல எழுதிட்டேன். அவனவன் அடுத்த வருஷம் என்ன தொழில்நுட்பம் வரும்னு சொல்றதுக்கே தடவரான். நீரு ஆய்ரம் வருஷத்து போய்ட்டீரு! ஆனா நல்ல டாபிக்தான். அல்லாரும் உட்டு கலக்குங்க!


  24. Unknown said...

    ஹ்ம், சூப்பர் கேள்வி.... என்னால் இப்போதைக்கு முடிந்தது:

    1. bio-tech advance: ஒவ்வொரு மனிதப் பிறவியும் தொழில் நுட்பம் கலந்த கரிப் (கார்பன்) பிறவிகளாய் - மரபு வியாதி (genetic disease?) க்கான மருந்துகள் பிறவிக்கு முன்னமேயே செலுத்தப்பட்டு பரிசோதனைச் சாலைகளில் பிறப்பிக்கப்பட்டு - பல நூறாண்டு காலம் வாழ்பவர்களாய் இருப்பார்கள். அவர்தம் வீட்டுப் பிராணிகளும் அவ்வாறே. வீட்டுப் பிராணிகள் - சிறு bonsai திமிங்கிலங்கள் - போல எதுவும். ஏன், 2.-இல் உள்ள வேற்று கிரக வாசிகள் நம்மை விட மண்டுக்களாய் இருந்தால், அவர்களை வளர்ப்பதும், மணப்பதும் status symbol ஆக இருக்கும்.

    2. astrological distances: அன்னிய galaxyக்கு விடுமுறை போய் வர ஆராய்ச்சி நடக்கும்.

    3. Final Frontier - கடவுள் நம்பிக்கையை கடவுளே இல்லாமல் நம்புவது எப்படி என்பதாயிருக்கும் (medical journalகளில் faith-இன் நல்விளைவுகளைப் பற்றி இன்றே சம்பாஷிக்கிறார்கள்).

    4. Essentials: சாப்பாட்டுக்கான தேவை இருக்காது - எல்லாம் mindஉம் matterஉம் தான்.

    5. Castes: HG Wells-இன் இரு குடி ("மேலோர்" / "கீழோர்" = "இருப்போர்" / "இல்லாதோர்") மிகத் தெளிவாக வகைப்படுத்தப் பட்டிருக்கும். வன்முறை உங்க வீட்டு, எங்க நாட்டு வன்முறை இல்ல, அப்படி ஒரு கேவலம் ஆக இருக்கும். மக்கள்/மிருக-mix தொகை "மேலோர்" சாதியில் வரைமுறைக்குள்ளும், "கீழோர்" சாதியில் வரைமுறை மீறியும் இருக்கும்.. சாதி என்பதும் அடக்குமுறை என்பதும் எப்படியோ தொடரும்:-((( இன்றைய மேலோர், நாளைக்குக் கீழோர் இல்லையா?

    6. Country Barrier: சாதி முறை கார்பரேட் வழிமுறைகளைத் தொடர்ந்து - நாடு என்ற வகைமுறை இல்லாமல் - இருக்கும். சீன மக்கள் அமெரிக்காவின் பொருளாதாரத்தைக் கவிழ்த்து 600 ஆண்டுகள் ஆகியிருக்கும்:-(( நடந்த மத / இனச் சண்டைகளில் ஈன வகைகளில் ஜெயித்தவர்கள் கார்பரேட்டுகளை வழிநடத்துவர்...:-((((((

    நான் செத்து 950 வருடங்கள் ஆவது ஆகியிருக்கும்;-))))

    நான் இன்னும் எல்லா பின்னூட்டங்கள் / பதிவு படிக்கவில்லை. படித்து விட்டு இன்னும் flash அடித்தால் மீண்டும் வருகிறேன் (50 ஆண்டுகளுக்குள் வந்து விடுவேன், மகிழ்ச்சி வேண்டாம்).


  25. rv said...

    மிக்க நன்றி பண்ருட்டியாரே...

    சுவையான கற்பனை. சில மேட்டர்லாம் ஏன் சொல்றீங்கன்னு மட்டும் புரியலை. உதாரணம். புளி கார்ட்டெல்?


  26. நாகு (Nagu) said...

    சமீபத்துல இந்தியா பருப்பு ஏற்றுமதியை நிறுத்தியதால அமெரிக்காவுல இந்தியக் கடைகளில் பருப்பு விலையெல்லாம் ஏறிப்போயி, ஒரு கஷ்டமருக்கு ஒரு பாக்கெட்ன்னுல்லாம் ஒரே கலாட்டா. அதான் புளி கார்ட்டெல். தென்னமெரிக்கா எப்படி வந்ததுனு எனக்கே தெரியல - பிரிக்க முடியாதது: தென்னமரிக்காவும் (டிரக்)கார்ட்டலும்!


  27. rv said...

    இது பற்றி என் எண்ணங்கள் தனிப்பதிவாகவே


  28. rv said...

    கெக்கே பிக்குணி,
    //பல நூறாண்டு காலம் வாழ்பவர்களாய் இருப்பார்கள். அவர்தம் வீட்டுப் பிராணிகளும் அவ்வாறே. //
    இது நடக்கும் என்று தான் எனக்கும் தோன்றுகிறது. குறைந்த பட்சம் இருநூறு ஆண்டுகள். ageing process ஐ எப்படி தள்ளிவைப்பது என்று தெரிந்துவிட்டாலே பாதி தொல்லைவிட்டது. :))

    //வீட்டுப் பிராணிகள் - சிறு bonsai திமிங்கிலங்கள் - போல எதுவும். ஏன், 2.-இல் உள்ள வேற்று கிரக வாசிகள் நம்மை விட மண்டுக்களாய் இருந்தால், அவர்களை வளர்ப்பதும், மணப்பதும் status symbol ஆக இருக்கும்.
    //
    சூப்பர்.. சக மனிதர்களை வளர்க்காத வரைக்கும் மகிழ்ச்சிதான்.

    //கடவுள் நம்பிக்கையை கடவுளே இல்லாமல் நம்புவது எப்படி என்பதாயிருக்கும்//
    எனக்கென்னவோ ஆன்மாவை lab களில் தேடுவதில் பயனில்லை என்று உணர்ந்துவிடுவோம் என்றூ தோன்றுகிறது.

    //சாப்பாட்டுக்கான தேவை இருக்காது - எல்லாம் mindஉம் matterஉம் தான்.
    //
    mindஐயும் matterஐயும் பிரிப்பதே தவறு என்கிற ரீதியில் இப்போதே சிலர் பேச ஆரம்பித்துவிட்டார்கள். (அத்வைதிகள் அல்ல! :)) ) நடக்கலாம்.

    புதியவகை பிரிவுகள் தோன்றுமென்பதில் ஐயமில்லை. எப்படி என்று என்னால் இதுவரைக்கும் தோன்றவில்லை. நீங்கள் சொல்கிற படியும் இருக்கலாம்.

    சீனா மட்டும் அறுநூறு ஆண்டுகளாய் வளர்ந்து செழிப்பாய் இருந்துடுமா? நாம்தான் இருக்கவிட்டுவிடுவோமா? :))


  29. Unknown said...

    சரி, இந்த பதிவு கேள்விகளுக்கு இங்கேயே பதில்.

    //எனக்கென்னவோ ஆன்மாவை lab களில் தேடுவதில் பயனில்லை என்று உணர்ந்துவிடுவோம் என்றூ தோன்றுகிறது.
    //சீனா மட்டும் அறுநூறு ஆண்டுகளாய் வளர்ந்து செழிப்பாய் இருந்துடுமா? நாம்தான் இருக்கவிட்டுவிடுவோமா? :))
    இது, இது, இது தான் பாயிண்டு. என்னைப் பொறுத்த வரை, இந்தியா ஆன்மிகப் பெருநாடு ஆகவும் மலரும். ஆனால், நாடுன்னு ஒன்றும் இருக்காதே! இந்தியாவிலே physical ஆக இருந்தால் தான் கூவம் வாசனையும் மல்லிகை மணமுமா! அதைத் தான் mind-ம் matter-ம் னு சொன்னேன் (applies to all essential needs - உணவும் உணர்வும் சேர்த்து). அவ்வையிலிருந்து அத்வைதமும் (ஏன், விசிஷ்டாத்வைதத்துக்கு என்ன குறை:-) எல்லாம் உலகை வெல்லும். ஆனால், ஆன்மா/இறையுணர்வு என்ன என்பது ஆராய்ச்சிக்குரியது - labக்கு அப்பாற்பட்டு - ஆகவே இருக்கும் னு தோணுது....

    நல்ல பதிவு. நன்றி...


  30. rv said...
    This comment has been removed by a blog administrator.

 

வார்ப்புரு | தமிழாக்கம்