அரசாங்கள் மிகவும் வலிமை பெற்றிருக்கும். இல்லை மோனோபாலியாக இருக்கும் ஒரு தனியார் நிறுவனம் அரசை டம்மியாக வைத்திருக்கும். இதில் மட்டும் இப்போதைக்கும் வருங்காலத்திற்கும் மாற்றம் இல்லையென்று நினைக்கிறேன்.
பெண் பார்க்கும் படலங்கள் அற்றுப் போகும். அரசே மரபணுக்களுக்கு ஏற்ற வகையில் எட்டுப்பொருத்தம் பார்த்து திருமணம் நடத்தி வைக்கும். திருமணம் என்ற ஒன்று மாற வாய்ப்புகள் குறைவு. மலட்டுத்தன்மை அதிகரித்திருக்கும் என்பது என் ஊகம். electronic transfer மாதிரி அதற்கும் Bluetooth / WiFi (பேரு கூட பொருத்தமாகத்தான் வைத்திருக்கிறார்கள் ;) ) போல ஏதாவது வந்திருக்கும். இது ஏதோ ஒரு ஆங்கில B-Movie யில் பார்த்த நினைவு. இதனால், கணினிபோன்ற வெளி உபகரணங்களில் (external devices) ஒரு conscious being-ஐ virtual ஆக வளர்க்கக்கூடிய/இருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கும். ஒரு பெரிய விஞ்ஞானியோ, அறிவாளியோ 'இறக்க' வேண்டிய அவசியமே இல்லாமல் போகும். இறவாமல் இருக்க வரம் பெற்ற அசுரர்கள் போல வலம் வரலாம்.
உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் என்கிற மூன்றும் உயிர் என்பதில்லாமல் அடிப்படையாக மாறமுடியும் என்று நினைக்கிறேன். வைரஸ்கள் போல transfers (ட்ரான்ஸ்பர் என்றால் உடனே கூட வருவது infection-உம் தான். எ. கா: பேய் வகையறா?) of consciousness சாத்தியமாகுமோ? ஏதுடா ஆயிரம் வருஷத்துக்கு அப்புறம் யோசின்னா, நமக்கு ஆதிகாலத்து கூடுவிட்டு கூடுபாயுற டெக்னிக்தான் நினைவுக்கு வருது. :))
ஆனால் இந்த டிரான்ஸ்பர்கள் சாத்தியமானால், omnipresence அல்லது குறைந்தபட்சம் multi tasking; multipresence (intraconscious மற்றும் interconscious network களில் தற்போதைய சாட் ப்ரோக்ராம்கள் போல ) ஆவது கிடைக்குமா என்று யோசிக்கத்தோன்றுகிறது. அதாவது திருவான்மீயூர் பீச்சில் காதலியைக் கொஞ்சிக்கொண்டே, மொனாக்கோ காஸினோவில் தாயம் உருட்டிக்கொண்டே, கொல்கத்தாவில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டே, லண்டனில் ஆபீஸில் காபி சாப்பிட்டுக்கொண்டே ஊட்டி பொட்டானிக்கல் கார்டன் புல்வெளியில் படுத்து சுகமாக தூங்கிக்கொண்டிருப்பது. இப்படி பல இடங்களில் physical presence தற்காலத்திய விஞ்ஞானத்தின் படி சாத்தியமே இல்லை. live feedகள் மூலம் நமக்கு வந்து, அதை நம் மூளை ப்ராஸஸ் செய்வதால் வரும் ரியாக்ஷன்களை வைத்து; திரும்பவும் பீட் வரும் இடத்தில் presence simulation? இப்படி பல இடங்களில் பலவகை பீட்கள் வரும் பட்சத்தில் நம் மனித மூளை தாக்குப்பிடிக்குமா என்பது வேறு சங்கதி.
இப்படி ட்ரான்ஸ்பர் சாத்தியமாவது போலவே knowledge transfer உம் சாத்தியமாகும். அந்த ட்ரான்ஸ்பர் டிஜிட்டல் முறை போல இன்ஸ்டண்டாக நடக்கக்கூடியது.
எவ்வித வேலைகளுக்கு ஆட்கள் தேவையோ அதற்கு தக்கவாறு அரசே சீனியாரிட்டி முறையிலும் மரபணுக்கள் முறையிலும் படிப்பை அளிக்கும். இடத்தைவிட்டு நகராமல் வர்ச்சுவலாக ஆபீஸ் முதல் காய்கறி கடை வரை சென்று பார்த்து வேலை செய்து வர முடியும் (பாத்ரூம் விஷயங்களும் இதில் முடியுமா என்று தெரியவில்லை :) ) செய்வதன் மூலம், விமானங்கள் போன்றவை பெரும்பாலும் இராணுவ பயன்பாட்டிற்கே பயன்படும். இடத்தைவிட்டு நகரவேண்டிய தேவை குறைவதாலால் மோட்டார் வாகனங்கள் குறைந்து படிப்படியாக இயற்கை மீண்டும் வலுப்பெற ஆரம்பிக்கும்.
மடி மற்றும் டெஸ்க்டாப் கணினிகள் பயோ-பவரில், அதாவது பயன்படுத்துகிற மனிதனின் ஆற்றலிலேயே இயங்கக்கூடிய வகையில் இருக்கும். எரிபொருள் தட்டுப்பாடு என்பது இருக்காது என்பது வராது என் ஊகம். அப்படியே வந்தாலும் அது மனித சமூதாய முன்னேற்றத்தை எவ்விதத்திலும் நிரந்தரமாக பாதிக்கமுடியாது. மாற்றுமுறைகள் கண்டிப்பாக உருவாக்கப்படும். அதுவும் தவிர, இப்போதைய நிலையை விட விரயம் குறையும்.
கலிபோர்னியாவில் கொசு கடித்தால் வத்தலகுண்டில் ஏன் சுனாமி அடிக்கிறது என்று இன்று போலவே விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தின் இயக்கம், ஆக்கம் பற்றி புரியாமல் தவிப்பர். இயந்திர கதியான வாழ்க்கை வெறுத்து பூவுலகை நீத்து மேற்சொன்னபடி 'ஆவி'யுலகில் சாமியார்களின் எண்ணிக்கை அதிகமாகும். மதங்களும் அவற்றின் எழுத்துகளும் infallible அல்ல என்று ஆத்திகர்களுக்கும் விஞ்ஞானத்தின் குறைபாடுகள் நாத்திகர்களுக்கும் புரிய வரும். இதனால் சண்டைகள் குறையும். சண்டை ஏற்பட்டால் ஏற்படப் போகும் பேரழிவிலிருந்து தற்காத்துக்கொள்ளவாவது மனித இனம் ஒன்றுபடும்.
கொஞ்சம் pessimistic ஆக யோசித்தால் மேட்ரிக்ஸ் படங்களைப் போல ஆட்டுமந்தைகள் போலவே மனிதர்களை அரசுகள் வளர்க்கும். (இப்போது மட்டும் என்ன வாழுகிறதாம் என்று கேட்கக்கூடாது). இப்படி ஆட்டுமந்தைத்தனம் அதிகமாகி வாழ்க்கையே வெற்றாய் போவதால் மனித மனம் இறைவனை மேலும் தேட ஆரம்பிக்கும். ஆனால் கொஞ்சம் sophisticated ஆக 'அஹம் பிரஹ்மஸ்மி' போன்ற (போன்ற தான் - இது பழையது என்று எனக்கும் தெரியும் :)) தத்துவங்கள் நிலைபெறும்.
quantum physics கொஞ்சம் கொஞ்சம் கோடிட்டு காண்பிக்கிறது. பிரபஞ்சமும் அதனுள் இருக்கும் பலகோடி கோள்களும், நட்சத்திரங்களும், அதில் நம் துளியளவு பூமியும் அதனுள் எல்லாமுமே என உயிர்கள் உட்பட big bangஇற்கு முன்னர் வரை ஒரு கடுகளவு (கடுகளவு என்பது கற்பனைக் கூட செய்யமுடியாத அளவு மிக மிகச் சிறிய என்று கொள்க) இடத்திற்கும் குறைந்த இடத்தில் அடைந்து இருந்தவை தான்.
ஒரு ஆத்மா எப்போதும் potential ஆக இப்பிரபஞ்சத்தினுள் இருந்து ஒரு பிறவியென்று உயிர் பெறுகிறது. இப்படி உடலில்லாமல் consciousness (ஆத்மா) இருக்க முடியுமா என்கிற் கேள்விக்கு பதிலாய் பிரபஞ்சத்தின் நீட்சியான ஆத்மா கண்டிப்பாக ஒரு உடலில்லாமல் இருக்க முடியும் என்றூ தோன்றுகிறது. அப்படியானால் பிரபஞ்சத்திற்கென்று ஒரு அந்தராத்மா இருக்கிறதா என்ற இடியாப்பச் சிக்கல் கேள்வியும் வந்து தொலைக்கிறது.
இதெல்லாம் எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறதா? :))
அப்பாடி, இத எழுதறதுக்குள்ளேயே மண்டை கிர்கிருத்து போயிடுச்சி. இனிமே எதுனாச்சும் தோணினா அப்புறமா எழுதறேன்.
முந்தைய பதிவு
166. இன்னும் ஆயிரம் ஆண்டுகளில் - என் எண்ணங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
8 Comments:
நான் தான் முதல் பின்னூட்டம். போன பதிவுக்கும் கடோசி பின்னூட்டம் போட்டாச்சு.
//இப்படி பல இடங்களில் பலவகை பீட்கள் வரும் பட்சத்தில் நம் மனித மூளை தாக்குப்பிடிக்குமா என்பது வேறு சங்கதி.
மேட்ரிக்ஸ் படம் - The One = Neo நினைவுக்கு வருகிறது. மனித மூளை ஏற்றாற் போல மாறும்...
இன்னும் என் கற்பனை விரிகிறது. நேரம் கிடைத்தால் பதிவிடுகிறேன்.
பின்னூட்டம் அடித்து ஆட வாழ்த்துக்கள்:-)
அதென்ன மரபணுக்களைப் பார்த்து எட்டுப் பொருத்தம்? பத்துப் பொருத்தம் தனே பார்ப்பார்கள்? :-)
அரசு மரபணுக்கள் முறையிலும் படிப்பை அளிக்கும்? நவீன வர்ணாச்ரமம்? :-)
வத்தலகுண்டில் சுனாமியா? யோவ் விட்டா முழுத் தமிழகத்தையே மூழ்கடிச்சுடுவீங்க போல இருக்கு? :-(
கெக்கே பிக்குணி,
நன்றிங்க.
மனித மூளை வீங்கும்கற நம்பிக்கையாலதான், நம் கற்பனைப் படைப்புகளில் வெளிகிரக வாசிகளுக்கு பெரியமண்டையும், பென்சில் மாதிரி atrophied உடம்பும் கொடுக்கிறோம்னு எங்கேயோ படிச்சிருக்கேன்.
//பின்னூட்டம் அடித்து ஆட வாழ்த்துக்கள்:-) //
ஸ்மைலி போட்டு ஏங்க குத்திக் காட்டுறீங்க.
'எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்'னு நிஜமாவே சொல்லிக்க முழு தகுதியும் எனக்கு உண்டு. இங்க முன்னாடி ஜெ ஜென்னு கூட்டமா இருக்கும். இப்போ கரு கருன்னு இருட்டிருக்கா போல டல்லடிக்குது. :))
கும்ஸ்,
//அதென்ன மரபணுக்களைப் பார்த்து எட்டுப் பொருத்தம்? //
//வத்தலகுண்டில் சுனாமியா? //
அதெல்லாம் ஒரு ப்ளோவுல எழுதறது. இதுக்கெல்லாம் ரிசர்ச் பண்ணித்தான் எழுத முடியும்னா எப்படி?
வத்தலகுண்டு சொந்த ஊர் இல்ல தெரியும். தங்கமணி ஊரா? இப்படி பதைபதைக்கீறீங்க?? :)
//நவீன வர்ணாச்ரமம்? :-)
//
வாருமய்யா.. வந்து பத்த வச்சாச்சா? நான் வேண்டாத வம்பையும் எனக்காக பேரம் பேசி வாங்கித்தர்றீரு?
இராமநாதன்....நல்ல அறிவியல்பூர்வமான சிந்தனை. நீங்கள் சொன்னது நடந்தாலும் நடக்கலாம். ஆண்டவனே அறிவார்.
// இடத்தைவிட்டு நகரவேண்டிய தேவை குறைவதாலால் மோட்டார் வாகனங்கள் குறைந்து படிப்படியாக இயற்கை மீண்டும் வலுப்பெற ஆரம்பிக்கும். //
இப்படி நடந்தா ரொம்ப சந்தோசம். நடக்கனுமே. ஆனா அதுல ஒரு பிரச்சனை இருக்கு. நெனச்ச எடத்துக்குப் போக முடியும்னா அடுத்தவங்க படுக்கையறைக்குள்ளையும் போக முடியும்...அதுவும் இடத்தை விட்டு நகராமலே...முந்தியெல்லாம் போன் இருக்குற இடத்துல பேசனும். இப்ப நம்ம இருக்குற எடத்துக்கே போன் வருதே...அந்த மாதிரி ஒரு தொந்தரவு. ஆகையால firewall ஒன்னு நிருவிக்கிருவாங்க எல்லாரும். அதுக்குப் password இருக்குறவங்க மட்டுந்தான் போக முடியும்...இது எப்படி இருக்கு?
ஜிரா,
//நெனச்ச எடத்துக்குப் போக முடியும்னா அடுத்தவங்க படுக்கையறைக்குள்ளையும் போக முடியும்...அதுவும் இடத்தை விட்டு நகராமலே...//
என்ன செய்யறது? நல்லதுன்னு நினச்சு செஞ்சா, அத வச்சு என்ன டகால்டி செய்யலாம்னு யோசிக்கறதுக்கே ஒரு கூட்டம் இருக்கு. (உங்களன்னு சொல்லல. பொதுவாச் சொன்னேன்)
//அதுக்குப் password இருக்குறவங்க மட்டுந்தான் போக முடியும்...இது எப்படி இருக்கு?
//
மைக்ரோசாப்ட் ஆபீஸ் ஆட் பார்த்திருக்கீங்களா? இதே கான்செப்ட தான்.. சூப்பரா இருக்கும். ;)
//'எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்'னு நிஜமாவே சொல்லிக்க முழு தகுதியும் எனக்கு உண்டு//
நானே அப்படி நெனச்சேன்னா பாருங்களேன்:-(
மத்தபடி உங்க ஆயிரம் வருஷம் ஐடியா நல்லாதான் இருந்தாலும் பிக்-அப் ஆகாததுக்கு எனக்குத் தோணின காரணம்:
ராஜராஜ சோழன் பினாத்தல் சுரேஷைப்பத்தி நெனச்சிருப்பானா?
பெனாத்தலார்,
//நானே அப்படி நெனச்சேன்னா பாருங்களேன்:-(
//
இனிமே இத்தன நாளா கிடப்பில் போட்டிருந்த 'நமக்கு நாமே' திட்டத்தை கைல எடுக்க வேண்டியதுதான்னு நினைக்கிறேன். நம்ம திட்டத்த எதிரி உதிரிக்கட்சிகள்லாம் பயன்படுத்தி ஓஹோன்னு பேரு வாங்கிட்டாங்க. :))
//ராஜராஜ சோழன் பினாத்தல் சுரேஷைப்பத்தி நெனச்சிருப்பானா//
நினைக்காம என்ன. பெரிய கோயில்ல அனுமார்க்குன்னு சந்நிதி கட்டி வச்சிட்டு போயிருக்கானே. :P
Post a Comment