150. ப.ம.க தொண்டனுக்கு ஒரு அவசர கடிதம்

எனதருமை சிங்கமே,
நம் தன்னிகரில்லா தலைவர் மாஸ்க்கார் அவர்கள் சூறாவளிச் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டிருப்பதால், கொள்கை பரப்புச் செயலாளர்களின் ஒருவன் என்ற வகையிலும் இவ்வறிக்கை விடவேண்டியது அவசியமாகிறது. ஏன், அதுவும் ஏன் இப்போது என்று நீ கேட்பது எனக்கும் கேட்கிறது தம்பி. ஆனால், காரணமில்லாமல் இல்லை. தலைவர் நம் பொதுக்கூட்டங்களுக்கு சிலகாலமாய் வருவது குறைந்துள்ளதை நம் பலவீனமாய்க் கருதி பல அறிவிலிகள் நம் எழுச்சிமிகு இயக்கத்தை ஏளனம் செய்யத் துணிந்திருக்கின்றன. இந்த நரிகள் இன்று வந்த குள்ளநரிகள். நம் புரட்சி வரலாறு அறியாத வெட்டிநரிகள். ஆயினும், சிங்கத்தின் குகைக்கே வந்து கொக்கரிக்க இவர்களுக்கு எங்கே வந்தது அசட்டு துணிவு என்கிற கேள்வி நம் பலரின் மனதில் இருப்பதால் இது ஒரு விளக்க அறிக்கையே.

சிங்கங்களுக்கும், நாய்களுக்கும் அஞ்சாத நாம் இந்த நரிகளைக் கண்டா அஞ்சுவோம்? முன்னால் குரைத்தவைகளெல்லாம் இன்று ஓடியொளிந்து இருப்பது, பாவம் இந்தப் புதுநரிகளுக்கு தெரியுமா? மரியாதை நிமித்தம் சிறுகட்சிகளையும் அரவணைத்துச் செல்வோம் என்கிற நம் பெருந்தன்மையை அப்பட்டமாக திரித்து, நாம் அவர்களின் நட்பு கோரினதாய் திரிக்கும் நயவஞ்சகர்கள் நிறைந்திருக்கும் வலையுலக அரசியலில் நம் இயக்கத்தின் தூண்களான கண்ணியமும், நேர்மையும் அடிபடுவதாய்த் தோற்றம் உண்டாகலாம். ஆனால், வாய்மையே வெல்லும் என்ற தமிழ்வாக்கின்படி நம் பக்கமுள்ள நீதி வெளிவரும் நாள் வெகுதொலைவிலில்லை.

நேற்றைக்கு கட்சியென்ற பெயரில் ஒரு பத்துப்பேரைக் கூட்டி, மாநாடு என்று சொல்லி பிரியாணியும் கஸ்மாலப்பொடியும் கொடுத்து லாரியில் ஆள் சேர்ப்பவர்களுக்கு, கொள்கையினால் பத்துகோடி பேருள்ள நம்மியக்கத்தை பற்றி என்ன தெரியும்? ப.ம.க விற்கு மக்களிடம் இருக்கும் செல்வாக்கு என்ன என்பதற்கு வரலாற்றுச் சான்றிதழ்கள் போதவில்லையா? இரத்தத்தை சிந்தி நாம் உழைத்து கட்டி இன்று ஓங்கி உலகையே அளக்கும் கோபுரமாய் வளர்ந்திருக்கும் இயக்கத்திற்கு இன்னும் யாரிடம் என்ன நிருபிக்க வேண்டியிருக்கிறது? சில உதாரணங்கள் வேண்டுமானால் கொடுக்கலாம், தமிழ்மணத்தில் தனியொரு படையைத் திரட்டி தனி ராஜபாட்டையில் போய்க்கொண்டிருக்கும் தலைவரின் பதிவில் சிறுதுளியாய் ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் இன்று கிழக்கைரோப்பிய டானூப் நதியைப் போல் கரைகளையெல்லாம் கட்டுடைத்து சீறிப் புதுவெள்ளமாய் இளரத்தத்தை இணையவுலகில் பாய்த்துக்கொண்டிருக்கிறது என்பதை விளக்கவும் வேண்டுமோ? முன்னரிருந்த போட்டிமிகு வாத்து அரசியலில் தேர்ந்து பின் .யிர் போராட்டங்களில் பங்கெடுத்து நாம் படாத அடியா? நாம் பார்க்காத தண்டவாளங்களா?

மூன்றெழுத்தில் மூச்சிருக்கும் தொடங்கி கொத்தனாரின் போலிடோண்டு பதிவு வரை நம் படைபலத்தை நிருபித்திருக்கிறோம். சமீபத்தில் நடந்த நிலாத்தேர்தலில் அமோக வெற்றி பெற்று வீணாய் வாலாட்டியவர்களை டெபாஸிட் இழந்து புறமுதுகிட்டு ஓடச்செய்திருக்கிறோம். இன்று? அந்நரிகள் மறைந்து புதிய நரிகள் எகத்தாளம் செய்கின்றன. கட்சியின் பெயர் நினைவிலில்லை, ஆனால் பொதுச் செயலாளர் ப.ம.க அவர்கள் கூட்டணியில் இணைந்ததாக கட்டுக்கதை விடுகிறார். அரசியல் நாகரிகம் தெரியாவிடினும், நகைச்சுவையில் வல்லவர் என்று நிருபித்திருக்கிறார் எனதன்புத்தம்பி தேவ். ஆனால், நகைச்சுவை உணர்வு மட்டும் இம்முறை அவரைக்காக்காது. நேற்றைய மழையில் தேங்கிய சேற்றுக்குட்டையாம் அவரின் பெயரில்லாக்கட்சியுடன் பசிபிக் மகாசமுத்திரமான நாம் இணைவதா? இத்தகைய அவதூற்றைப் போகிற போக்கில், நான் அவரிடம் இட்ட பின்னூட்டத்தை முற்றிலுமாக திரித்து நான் சொல்லாததை சொன்னதாக திரித்திருக்கிறார். அவர் கட்சித் தலைமை அலுவலகத்தில் மக்கள்வராது ஈ ஓட்டுவது போலவே அவர் அபாண்டம் சாட்டிய அலுவலகமும் என்று நினைத்துவிட்டாரா? அது யாருடைய அலுவலகம்? ப.ம.க வின் கொள்கை பரப்புச் செயலாளரான பினாத்தலாரின் இடம். ஆனால், எனதருமைத் தம்பி, எதையும் தாங்கும் இதயம் கொண்ட நாம் இதைக்கண்டு கலங்கவில்லை. மாறாய் நம் கட்சிக்குள்ளேயே இருக்கும் செய்நன்றி மறந்த ஓநாய்களைக் கண்டு தான் எச்சரிக்கையாய் இருக்க வேண்டியிருப்பதன் அவசியம் மேலும் உறுதியாகிறது.

இப்படி ஒரு அப்பட்டமான பொய்யை நாணமில்லாமல் கட்டவிழ்த்த தேவ் தம்பியை தட்டிக்கேட்காமல் நமதருமை கொ.ப.சே அனுமதித்து கொள்கைக்கூட்டணி அமைப்போம் என்று வேறு ஒத்தூதுகிறார். இதுகுறித்து தலைவரிடம் பேசியபோது ஆடுகளை வளர்த்தது நெஞ்சில் முட்டுவதற்கா என்று அவர் ஒருநொடி கலங்கியபோது பொதுக்குழுவின் இரத்தம் கொதித்தது. இவ்விதயத்தை சும்மா விடப்போவதில்லை. ப.ம.க வை எதிர்த்து உள்குத்து, வெளிக்குத்து செய்யும் வெத்துவேட்டுகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்க ஒட்டுமொத்த பொதுக்குழுவும் முடிவெடுத்துள்ளது.

பெனாத்தலாரை கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்துள்ளோம். இது குறித்து தனியாக ஷோ-காஸ் நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது. பதிலளிக்க ஒருவாரம் கெடு தந்திருக்கிறோம். இது பொதுக்குழுவின் ஏகோபித்த முடிவாகும். இதற்கு பொறுப்பான பதில் வரவில்லையென்றால், அவருக்கு பிங் கடுதாசி அனுப்பப்படும் என்றும் பொதுக்குழு முடிவு செய்துள்ளது. தலைவரின் அன்பை தவறாய் பயன்படுத்த நினைக்கும் எந்த நரியையையும் கண்டு இனி ப.ம.க அமைதியாக இருக்காது. ஜனநாயக முறைப்படி மரம்வெட்டி, ரோடுமறித்து, தீக்குளிக்கவைத்து இல்லை குளிக்கவாவது வைப்போம் என்று உறுதிமொழியை இங்கே பொதுக்குழுவின் சார்பில் வழங்குகிறேன்.

மேலும், வெட்டிக்கட்சியின் செயலாளரான தேவ், முறைப்படி ஒரு கடிதம் எழுதி அதில் மக்களிடம் தன் பொய்ப்பிரச்சாரத்திற்காக பகிரங்கமாய் பொதுமன்னிப்பு கேட்கவேண்டும் என்று நம் கட்சியின் சார்பாய் எச்சரிக்கை விடுக்கிறேன். இத்தகைய அவதூறுக்கு நஷ்ட ஈடாக நமதியக்கத்தின் தொண்டர்களுக்குத் தலா ஒருரூபாயென பத்துகோடி இந்திய ரூபாய்களும், இலவச கலர் டிவியும், கூடவே ஒவ்வொருவருக்கும் பத்துகிலோ அரிசியும் வழங்கவேண்டும். இதற்கு ஒரு வாரம் கெடு. இல்லையென்றால் நம் முழுபலத்துடன் களத்தில் நேருக்கு நேர் மோதத்தயாராகிவிட்டோம், தம்பி. ஊசிப்பட்டாசை எதிர்க்க அணுஆயுதம் தேவையா என்று நீ மலைப்பது புரிகிறது. ஆனால், காலத்தின் கோலம் நமுத்துப்போன வெங்காயவெடிகளும் அணுகுண்டுகளுடன் மோத முயல்கின்றன. அவற்றை அவற்றின் வழியிலேயே சென்று எதிர்கொள்வதுதான் தமிழர் மரபல்லவா?

இந்த சோதனையான நேரத்தில் ஒரு மகிழ்ச்சியான செய்தி தம்பி. பாகற்காய் பொரியலை இலையில் வைத்தாலும் கூடவே சக்கரைப் பொங்கலும் வைக்கிற தன்மானத் தமிழரல்லவா நாம்? கசக்கும் மருந்தையும் தேனில் குழைத்துத் தந்துதானே நமக்கு வழக்கம்? ஆகவே உவப்பளிக்கும் செய்தியொன்றை பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ஆன்மிக ஆழ்கடல், சொற்பொழிவு செம்மல், நவரச நாவலன், தமிழினத்தின் போர்வாள் ஒப்பிலா அன்பு அண்ணன் கோ. இராகவன் அவர்கள் நம் கட்சியில் இன்றுமுதல் இணைகிறார். அவரை பெங்களூர் வட்டத்தின் செயலாளராய் தலைவர் அன்புமிகுதியால் நியமித்துள்ளார். மேலும் வரும் ஏப்ரல் இருபதாம் தேதிமுதல் அவர் நமது சார்பாய் புரட்சி பிரச்சாரத்தை தொடங்குவார் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

பி.கு: இவ்வறிக்கையின் முழுவடிவமும் தலைவரின் ஒப்புதல் பெற்ற பிறகே வெளியிடப்படுகிறது.

புரட்சித்தலை முகமூடி வழியில் செல்வோம்! புல்லுருவிகளை ஒழிப்போம்! புரட்சித்தமிழகம் படைப்போம்!

இப்படிக்கு,
இராமநாதன்
கொள்கை பரப்புச் செயலாளர் (ஐரோப்பிய வட்டம்)

137 Comments:

 1. Santhosh said...

  பொருத்தது போதும் தேவ் பொங்கி எழு.. பழைய பஞ்சாங்கங்களுக்கு புதிய எழுச்சியை காட்டு(அதுக்கு முன்னாடி தயவு செய்து உங்க தலை கைப்புள்ளையை காட்டு :)))..


 2. பினாத்தல் சுரேஷ் said...

  ப ம கவை விட வ வா ச பெரிய கட்சி என்பது போன்று தோற்றத்தை உருவாக்கிய தேவ் பொதுச்செயலாளரிடமோ, கொ ப செ விடமோ மன்னிப்புக் கேட்டு, 10 தொகுதிகளைத் திருப்பிக் கொடுத்துவிடவேண்டும் என்றும் முடிவெடுக்கப்படுகிறது!

  ----
  சில தனிப்பட்ட காரணங்களுக்காக கொ.ப.சே வின் பின்னூட்டம் மட்டுறுத்தப்படுகிறது. சரியா பினாத்தலாரே? :)


 3. பினாத்தல் சுரேஷ் said...

  கலக்கிட்டீங்க!

  இதுதாண்டா கொள்கை சமரசம்!


 4. rv said...

  தம்பி சந்தோசு,
  உங்கள் பொய்ப்பிரச்சாரமெல்லாம் இனி எடுபடாது, தம்பி. எங்கள் இயக்கத்தை கிண்டல் செய்தவரையெல்லாம் பொருத்துப் பார்த்தோம். ஆனால், அவப்பெயரே எங்கள் பொறுமைக்கு பயனாய் கிடைத்தது. இனி எழுந்துவிட்டோம் தம்பி. அடிக்கு அடி, உதைக்கு உதை தான் இனி ப.ம.க.வின் வழி. எதற்கும் விழிப்புடன் இருங்கள்.


 5. rv said...

  பெனாத்தலாரே,
  இன்னும் ஷோ காஸ் இருக்கிறது. தேவுத்தம்பியின் பொய்யிற்கு நீர் தக்க பதில் உமது பதிவிலும் இடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  ஒரே கொள்கையினால் இணைந்தோர் நாம். ஆனால், புல்லுருவிகளைக் களைவதில் வித்தியாசம் ஏன்? வ.வா.சவை அதன் லெவலில் வைக்க பமக மேற்கொள்ளும் முயற்சிகளில் உமது பங்களிப்பு கணிசமாக இருக்குமென்றும் நம்புகிறேன்.

  நன்றி


 6. நிலா said...

  அப்டிப்போடுங்கப்பு... நெச தேர்தல விட வலைத்தேர்தல்ல சூடு சாஸ்தியாருக்கப்போ!


 7. இலவசக்கொத்தனார் said...

  கொ.ப.செவிற்கு ஒரு திறந்த மடல்.

  கொ.ப.செ. அவர்களே,
  தலைவர் உங்களுக்கு கூட்டணிக் கட்சிகளுடன் பேரம் பேச மட்டும்தான் அனுமதி அளித்திருந்தாரே தவிர கட்சியின் தன்மானத்தை அடகு வைக்கும் உரிமையைத் தரவில்லையே. நமது மாபெரும் இயக்கத்தின் நகக்கண் அளவு கூட இல்லாத ஒரு கட்சி. அவர்களோடு நாம் கூட்டணி வைக்க அவர்களிடம் சென்றோமாம். அதை நீர் இருக்கும் மேடையிலேயே ஒருவர் சொல்கிறார். அதற்கு மறு பேச்சில்லை.
  இப்படி சும்மா இருக்க நீர் என்ன 'என் இனிய தமிழ் மக்களே'ன்னு திரைப்படம் எடுப்பவரா அல்லது அவரது சொந்தமா?
  (உம்ம படத்தில் அப்படி ஒண்ணும் இல்லையே!)

  இதனை எதிர்த்து குரல் கொடுத்திருக்கும் நம் ரஷ்ய பனிக்கரடி (சும்மா எவ்வளவு நாளுக்குத்தான் சிங்கம், சிறுத்தைன்னே சொல்லறது) பொதுப்பாட்டின் தலைவர், வலைப்பதிவு வல்லவர், மருத்துவர் இராம்ஸுக்கு வட அமெரிக்க கண்ட பிரதிநிதி என்ற முறையில் எமது ஆதரவையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


 8. நிலா said...

  கொத்ஸ்

  என்ன ரெண்டு கட்சிலயும் இருக்கீங்களா? வர்.வா.ச உங்களுக்கு சேலம் தொகுதி ஒதுக்கி இருக்காங்க போல்ருக்கே!

  (ஹி... ஹி.... என் பங்குக்கு கொஞ்சம் போட்டுக் குடுத்தாச்சு:-)))))


 9. rv said...

  கொத்தனார்,
  உமது ஆர்வம் புரிகிறது. உங்கள் நியாயமான கேள்விகளுக்கு பினாத்தலார் தான் பதில் சொல்ல இயலும். அவர் வரும் வரை நான் கண்ணியமாக கருத்துக்கூறுவதிலிருந்து விலகிக்கொள்கிறேன்.


 10. rv said...

  நிலா,
  முன்னாள் தேர்தல் கமிஷனர் என்கிற வகையில் உங்களின் கருத்தை இவ்விஷயத்தில் எதிர்ப்பார்க்கிறேன்.


 11. நிலா said...

  கைப்ஸ் ஸ்டைல்ல 'ஐ'ம் தி எஸ்கேப்' :-))))


 12. rv said...

  நிலா,
  உங்களுக்கு வந்த செய்தி முற்றிலும் தவறானதாகும். கொத்தனார் பாரம்பரியமிகு ப.ம.க வின் நியு ஜெர்ஸி வட்டத்தலைவராவார். போயும் போயும் பச்சா கட்சியில் இருப்பவருக்கு குடைபிடிக்கவேண்டிய தேவையில்லை. தேர்தல் நேரத்தில் மற்ற கட்சிகள் எங்கள் உறுப்பினர்களை தம் பக்கம் இழுக்க செய்யும் கீழ்த்தர முயற்சியே இது. ஆனால், பொருளுக்கும் புகழுக்கும் விலைபோகிறவர்களா எங்கள் தம்பிகள்? தவறாக எண்ணிவிட்டீர்கள் நிலா.


 13. rv said...

  நிலா,
  முன்னாள் தேர்தல் கமிஷனர் செய்யக்கூடியதா இது? இப்படி வருகிற போகிற குட்டிக்கட்சிகளெல்லாம் எங்களைப் போன்ற உலகக்கட்சிகளின் மீது சேறள்ளியடிப்பதைப் பற்றி தேர்தல் சட்டத்தில் என்ன சொல்லியிருக்கிறது என்று விளக்குவது உங்கள் கடமையல்லவா? தேர்தல் கமிஷனிடம் முறையிட்டு இவர்கள் கட்சி உரிமையே ரத்து செய்ய முடியும் என்று எனது வழக்குரைஞர்கள் அறிவுறுத்துகின்றனர்.


 14. நிலா said...

  //பொருளுக்கும் புகழுக்கும் விலைபோகிறவர்களா எங்கள் தம்பிகள்? //

  அய்யய்ய... உங்க கட்சில யாருக்கும் அரசியல் தெரியாதா அப்போ?!!!
  ஹூம்... பாவம்... நீங்கள்லாம் என்னத்த பொழச்சி... என்னத்த....


 15. rv said...

  நிலா அவர்களே,
  வ.வ.ச திடம் பேரம் பேசிவிட்டு இங்கு வந்து நியாயம் பேசும் இன்னுமொரு செக்கூலரிஸ்டா நீங்கள்? உங்களை நேர்மையான தேர்தல் அதிகாரி என்று எண்ணியிருந்த எங்களுக்கு போட்டீரே ஒரு நாமம். அதற்கு. இப்போது நீங்கள் நடத்திய தேர்தலிலும் பல லட்சம் பமக வோட்டுகள் சட்டவிரோதமாக நீக்கப்பட்டு நாங்கள் எதிர்பார்த்ததைவிட சற்றுக் குறைந்த வாக்குவித்தியாசத்தில் எங்களுக்கு அமோக வெற்றி மறுக்கப்பட்டது என்று நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து செய்திகள் வந்துள்ளன.

  இதை விசாரிக்க எங்கள் கட்சியின் சார்பில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு உங்கள் வண்டவாளங்கள் தண்டவாளம் ஏறும் என்று முன்னெச்சரிக்கை செய்கிறேன்.


 16. நிலா said...

  மருத்துவரய்யா இன்னைக்கு ரொம்ப சீரியஸா இருக்காரு. யாராவது கொஞ்சம் ப்ரஷர் செக் பண்ணுங்கப்பா :-)))


 17. குமரன் (Kumaran) said...

  150 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் இராம்ஸ்.


 18. rv said...

  நிலா அவர்களே,
  பி.பி ஏறுவது உங்கள் ஸ்மைலிகளிலிருந்து உங்களுக்குத்தான் என்பது விளங்குகிறது. இன்னும் காலம் தாழ்ந்துவிடவில்லை. எமது தொண்டரைப் பற்றிய அவதூறுக்கு மன்னிப்புகேட்டுவிட்டால் கமிஷம் குறைந்தபட்சம் ஐம்பது ஆண்டுகளுக்கு தன் முடிவைத் தெரிவிக்காது என்று தெரிவித்துக்கொள்கிறேன்.


 19. rv said...

  ஆன்மிக சூப்பு அவர்களே,
  ஒரு முன்னாள் அரசியல் கட்சியின் முன்னாள் தலைவரென்று நமக்கு முற்காலத்தில் சர்ச்சைகள் இருந்தபோதினும இப்போது வாழ்த்தியதற்கு நன்றி.

  ஜிரா வந்துவிட்டார். இதிலிருந்தே புரியவில்லை. தன்மானத்திற்கும், சுயமரியாதைக்கும் மதிப்பளிப்பது நாங்கள் தானென்று? பொதுவில் தயக்கமாயிருந்தால், தனிமடல் அனுப்பவும். பேசி முடித்துக்கொள்வோம். :)


 20. இலவசக்கொத்தனார் said...

  மருத்துவரே,

  எம்மீது இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கும் உமக்கு எமது முதற்கண் வணக்கம். இப்படி ஒரு நம்பிக்கையா என இறுமாந்திருக்கும் இந்நேரத்திலே, நமது ஒற்றுமையைக் குலைப்பதற்காக சிலர் திட்டமிட்டு செய்யும் சதிக்கு நாம் பலியாகிவிடக் கூடதென்ற எண்ணம் நம் மனதில் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். இந்த சதியானது பல வடிவங்களில் பலரால் ஒர் ஒருங்கிணைத்த முயற்சியாய் நடத்தப்படுகிறது. இதன் பின் இருந்து இதன் மூலம் நன்மை பெற முயல்வது யாரென்பதும் நமக்கு நன்றாகவே தெரியும்.

  ஒரு பதிவிலே இப்படிதான் ஆள் சேர்க்க வழியில்லாமல் இந்த சங்க நண்பர்கள் எல்லாருடைய பெயர்களையும் எடுத்துப் போட்டிருக்கிறார்கள். அதற்கு பதிலுரைத்தவன் நான்.

  மற்றுமொரு பதிவில் என்னை பிரிதொரு கட்சியில் சேர்த்து மதுரை மத்தி தொகுதியையும் வாங்கிக் கொடுத்து இருக்கிறார்கள். அதையும் வேண்டாமென மறுத்தவன் நான்.

  அதே பதிவில் உங்கள் தலைமையிலான ப.ம.க.விற்கு 31 தொகுதிகள் ஒதுக்கியதாக ஒரு செய்தி. இதனையும் தட்டிக்கேட்டவன் இந்த இ.கொத்தனார்.

  இந்த உண்மைகளை அறியாத முன்னாள் தேர்தல் ஆணையர் இங்கு வந்து எதேதோ சொல்லி நம்மிடையே குழப்பங்கள் உண்டு பண்ணுகிறார். யார் சொல்லி இவர் இப்படி ஆடுகிறார் என்பதும் எனக்குத்தெரியும். சரியான சமயம் வரும் பொழுது இதனை பொதுவில் தெரிவிப்பேன்.

  அதுவரை ஒன்றே ஒன்று மட்டும்தான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நான் இறந்தாலும் என் மீது ப.ம.க.வின் கொடிதான் போர்த்தப்படவேண்டும் என்பதே அது.


 21. Santhosh said...

  //அதுவரை ஒன்றே ஒன்று மட்டும்தான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நான் இறந்தாலும் என் மீது ப.ம.க.வின் கொடிதான் போர்த்தப்படவேண்டும் என்பதே அது.

  மருத்துவர் அய்யா உஷரா இருந்துகோங்க கொத்ஸ் கட்சி மாற தயார் ஆயிட்டாரு.


 22. இலவசக்கொத்தனார் said...

  நிலா அவர்களுக்கு,

  ஒரு ஆதாரமும் இல்லாமல் என் மீது இப்படி சேற்றை வாரி இறைத்து என்னைக் களங்கப்படுத்தியதற்கு நீங்கள் வருந்தி பொதுவில் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும். இல்லையேல் உங்கள் மீது ஒரு கோடி இந்திய ரூபாய்கள் கேட்டு மான நஷ்ட வழக்கு போடுவேன். அது மட்டுமில்லாமல் கட்சியில் என்னை கட்டம் கட்ட வேலை செய்யும் நீங்கள் தன்மானம் உள்ளவர்தானா? அப்படி இருந்தால் என்னோடு ஒத்தைக்கு ஒத்தை, ஒண்டிக்கொண்டி சண்டை போட தயாரா என அறைக்கூவலிட்டு அழைக்கிறேன். நீங்கள் தயாரா?


 23. இலவசக்கொத்தனார் said...

  சந்தோஷ் அவர்களே,

  வருமானத்திற்கு நடிகனாய் இருந்தவர்கள் வாழ்க்கையிலும் நடிக்கத் தயங்காமல் இருக்கலாம். நடித்தும் இருக்கலாம். வரலாற்றில் இதை நாம் பார்த்தும் இருக்கிறோம். ஆனால் வாழ்க்கையில் எதற்காகவும் நடிக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை. முன்பே தலைவரின் பதிவில் சொல்லியபடி எனது கொள்கை 'தலைவர் வாழ்க. கட்சி வாழ்க.' என்பதுதான். இதுதான் உண்மை. புரிந்து கொள்ளும்.


 24. துளசி கோபால் said...

  ராம்ஸ்,

  முதல்லே இந்த 150வது பதிவுக்கு வாழ்த்து(க்)கள்.( அக்காவுக்குத் தம்பின்னு நிரூபிச்சாச்சு!)

  பதிவை இன்னும் படிக்கலை. படிச்சுட்டுச் சொல்றேன்.


 25. இலவசக்கொத்தனார் said...

  இந்த உணர்ச்சிமயமான சூழலில் உங்களது 150-வது பதிவிற்கான வாழ்த்துகளை சொல்லாமல் விட்டுவிட்டேனே. வாழ்த்துகள் சகா.


 26. துளசி கோபால் said...

  எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்!

  முந்தி ஏதோ (!) ஒரு கட்சிக்கு என்னைக் கொ.ப.செ.வா 'நியமனம்' செஞ்சுருந்தது ஞாபகம் வருது. அது எந்தக் கட்சி என்று தெரியும்வரை
  வெளிநாடு போவதில்லை என்று சூளுரை( கரெக்டா இது?)க்கிறேன்.

  உள்ளூரிலே இருந்துக்கிட்டே நாலு காசு பார்த்துரணும். எலீக்ஷன் டைம் ஆச்சேபா:-)


 27. Unknown said...

  உயிரை கொடுத்து கழகத்துக்கு விசுவாச படைவிரனாக இருந்தாயே ராமநாதா.உன் நிலை என்ன?கழகத்துக்கு அவதூறு என்றதும் போர்க்கோலம் பூண்டு வீர முரசம் கொட்டி வெற்றி அறிக்கை விட்டாயே..என்ன பலன் கண்டாய் அந்த உழைப்புக்கும் உணர்வுக்கும்?

  தம்பி வா தலை தாங்க வா என அழைக்கும் மனம் அண்ணாவுக்கு இருந்தது.நீ இன்று அண்ணணாய் கருதும் உன் தலைவர் முகமூடிக்கு இல்லாமல் போனது ஏன்?

  100வது பதிவுக்கும் அவர் முதலில் வந்து வாழ்த்து சொல்லவில்லை.150 பதிவுக்கும் வரவில்லை.நீ தான் அவரை அண்ணன்,தலைவர் என அழைத்து நெஞ்சுருகுகிறாய்.எழுதி வைத்துக்கொள் ராமநாதா 1000 பதிவென்ன நீ லட்சம் பதிவு போட்டாலும் அவர் முதலில் வந்து வாழ்த்து சொல்லபோவதில்லை.

  உன்னை ரஷ்ய மாவட்ட செயலாளராக வைத்து அழகு பார்த்த என் கட்சியை விட்டு சுயநலவாதிகளின் கட்சிக்கு சென்று இன்று வெறும் ஐரொப்பிய வட்ட செயலாளராக நீ நிற்பதை கண்டு என் நெஞ்சு கலங்குகிறது.தலைகுனிந்து நிற்பது நீயானால் தாங்கிக்கொள்வேன்.உன் தமிழல்லவா தலைகுனிந்து நிற்கிறது?

  நன்றாக யோசித்து பார் ராமநாதா

  வஞ்சிகோட்டை வாலிபனை பற்றி முழ நீளத்துக்கு நீட்டி முழக்கிய உன் தலைவன் இந்த செய்யின்ட் பீட்டர்ஸ்பர்க் வாலிபனை கண்டுகொள்ளாமல் விட்டது ஏன்?வைஜயந்திமாலவை எழுத்தில் தீட்டும் தலைவர் வட்டச்செயலாளரை நினைவில் வைத்த்ருக்கவா போகிரார்?

  தம்பி ராமநாதா..

  பொறுத்தது போதும்
  பொங்கி எழு...

  விரைந்து வா அண்ணன் குமரன்+வ.வா சங்க கூட்டணிக்கு.35 தொகுதிகள் காத்திருக்கின்றன.

  கரையை உடைக்கும் வெள்ளமென நீ சீறி புரட்சிக்கவி பாடிவா..புயலே என அண்ணன் குமரன் கற்றுத்தந்த அன்போடும்,பண்போடும் உனை அழைக்கிறேன்.


 28. பொன்ஸ்~~Poorna said...

  அதெல்லாம் இருக்கட்டுங்க.. இந்த ப.ம.கன்னா என்னாங்க?? எங்க வ.வா.சங்கத்த விட எந்த விதத்துல பெரிய கட்சி அது??!!


 29. G.Ragavan said...

  பாசமும் நேசமும் கற்றுத் தந்த பண்புத் தெய்வங்களே!

  உலகமே ஆடினாலும் தள்ளாடமல் ஸ்டெடியாக நிற்கும் தோழர்களே!

  தண்ணீருக்குள் கப்பல் மூழ்கினாலும் தாம் மிதக்கும் செயல் வீரர்களே!

  என்னை வாழ வைக்கப் படாத பாடு பட்டுக் கொண்டிருக்கும் அன்பு நெஞ்சங்களே!

  வணக்கம்.

  ப என்றால் பக்குவம்
  ம என்றால் மஞ்சள்
  க என்றால் கடலை

  மஞ்சளும் தூவி கடலையும் சேர்த்து வேகை வைக்க சுவையான பக்குவம் போலத்தான் பமக.

  அந்தப் பமகவில் சைக்கிளோடு சேரும் டயரைப் போல,
  FM ரேடியோவோடு சேரும் கீச்சுக்குரலிகளைப் போல,
  சன் டீவியோடு சேரும் தமிழ்க் கொலை அறிவிப்பாளர்கள் போல,
  ஜெயா டீவியோடு சேரும் துதிபாடிகள் போல,
  பாயாசத்தோடு அப்பளம் போல...என்னை இணைத்துக் கொண்டு மகிழ்ச்சி அடைவதில் உங்களுக்கு இருக்கும் பெருமிதத்தில் ஒரு பங்காவது மற்றவர்களுக்கு இருக்குமானால் இந்நேரம் என்னை வரவேற்றுக் கவிதை பாடி கதைகள் கூறி புகழ்ந்து சொல்லி பாராட்டாமல் இருக்க என்ன காரணம் இருக்க முடியும் என்று நான் கேட்டால் அதற்கு விடையாக எதையாவது சொல்ல யாருக்கும் உள்ளத் துணிவு இல்லை என்பதைத் தெளிவாகச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை இதனை விட எவ்வளவு தெளிவாகச் சொல்ல முடியும் என்பதற்கு யாரை எடுத்துக்காட்டாக காட்ட முடியும் என்பதற்கு மட்டும் விடையே இல்லையென்பதை மிகுந்த அழுத்தம் தரும் வேதனையான மனவருத்தத்தோடு சொல்லிக் கொள்வது எனக்குத் துயரம் அளிப்பதைப் பொறுத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம்.

  நான் ஏன் பமகவோடு என்னை இணைத்துக் கொண்டேன் என்பதை அடுத்த பின்னூட்டத்தில் சொல்கிறேன்.


 30. Unknown said...

  மருத்துவரே 150வது பதிவுக்கு பிடியுங்கள் என் வாழ்த்துக்களை... ஆங் எங்க சங்கத்து வாழ்த்துக்களையும் தான்...


 31. சொஜ்ஜி said...
  This comment has been removed by a blog administrator.

 32. rv said...

  கொத்தனார் அவர்களே,
  கட்சியில் சமீபத்தில்தான் சேர்ந்திருந்தாலும் உங்கள் கட்சிப்பாசமும், தலைமைப்பாசமும் எங்களுக்கு எல்லையில்லா மகிழ்ச்சியைத் தருகிறது. எதிர்க்கட்சிகளின் சதிகள் நமக்கொன்றும் புதிதல்லவே. இதையும் பார்த்திருக்கிறோம். இதற்கு மேலும் பார்த்திருக்கிறோம்.

  ஆனால், உதிரிக்கட்சிகள் தம் அலுவலகத்துக்குள்ளேயே ப.ம.க வுடன் கூட்டணி, தொகுதி பேரம் என்றெல்லாம் போஸ்டர் அடிக்கின்றனர். இது கண்டிக்கப்படவேண்டியதாகும். தங்கள் கட்சேரியில் தனி ஆவர்த்தனம் நடத்தாமல், நம் தமிழக மக்கள் முன்னர் நடத்த நெஞ்சில் உறுதியிருக்கிறதா இந்த அரசியல்வியாதிகளிடம்?

  ஆதலால், உம்மைப் போன்ற உண்மையான் தொண்டர்களை அவமதிப்பது நம் தன்னிகரில்லாத தலைவரையே அவமதிப்பது போன்றதாகும். அதனால், இதற்கு தக்க பதிலடி கொடுக்காமல் நம் கழகம் ஓயாது. நீங்கள் தன்னிலை விளக்கம் கொடுத்தும் தம்பி சந்தோஷ் மீண்டும் அவதூறு செய்கிறார். இதுதான் அரசியல் நாகரிகமா? தமிழ்ப்பண்பாடா? இதுவும் நல்லதுதான். இந்த கேடுகெட்ட வியாதிகளைப் பார்த்து நம் தமிழர்கள் கைகொட்டி சிரிப்பதாவது இனி இவர்களின் காதுகளில் விழட்டும்.

  ப.ம.க இவர்களை எதிர்கொள்ள வேண்டிய விதத்தில் எதிர்கொள்ளும். கவலை வேண்டாம்.


 33. rv said...

  நியுஸிலாந்தின் குலவிளக்கே, ப.ம.க கொள்கைச்சிறப்பே, தென்குமரி தொடங்கி பெங்களூர் வரை எழுச்சியாய் சுற்றிவந்த சூறாவளியே,
  வாழ்த்துக்கு நன்றி.

  எந்தக்கட்சியென்று நீங்கள் பொருள்பட கேட்டுள்ளீர்கள். நாம் ஆட்சியைப் பிடித்த காலத்தில் இன்றைய குள்ளநரிகள் பிறந்திருக்கவும் மாட்டா. நம் கட்சியொன்றே உண்மையான அரசியல் கட்சி. சினிமா நடிகரின் போலியொருவருக்கு ஆரம்பிக்கப்பட்ட சங்கத்தையெல்லாம் அரசியல் கட்சியாக சேர்க்கும் அளவிற்கு நம் ஜனநாயகம் பாதாளத்தில் இறங்கிவிட்டது.


 34. rv said...

  அ.உ.ஆ.சூ.மி.ச தலைவர், தொண்டர், சுவரொட்டியாளர் அவர்களே வணக்கம் வருக,
  இதே பல்லவியை எத்தனை முறை பாடினாலும் இங்கே காரியம் ஆகப்போவதில்லை. கொள்கையில் இணைந்த கூட்டமிது. கொள்ளையடிக்க வந்த கூட்டமல்ல. உங்கள் கட்சித்தலைவரே அரசியலிலிருந்து ஒதுங்கி ஓரம்போயாச்சு. இன்னும் கட்சியைக் கட்டிக் கொண்டழும் ஒரே புண்ணியாத்மா நீங்கள்தான். கொள்கைப் பற்று வியக்க வைக்கிறது. உங்களைப் போன்ற கொள்கை வீரர்களே நாங்களும். இங்கே வந்தால், உரிய மரியாதை கிடைக்கும். இங்கே வரப்போகிறீர்களா, அந்த நச்சுக்கூட்டத்திற்கு போகப்போகிறீர்களா இல்லை உலக அரசியலில் இன்னொரு தாமரைக்கனியாகவே இருக்கப்போகிறீர்களா. சிந்தித்து செயல்படவும்.

  நன்றி.

  தலைவர் பொதுவில் தான் இப்போது பேசுவதில்லையே தவிர செயற்குழு, மாரியம்மன் கூழு மற்றும் தனிமடலில் பேசிக்கொண்டுதானிருக்கிறார். சைவச்சூப்பு கோ.இராகவன் வந்தது தெரியுந்தானே? உங்கள் ஆ.சூப்பும் விரைவில் இங்கு வருவார். பொறுத்திருந்து பாருங்கள் இனி யார் யார் எங்கள் லட்சியக் கொள்கை கூட்டணியில் கைக் கோர்க்கப்போகின்றனர் என்று!


 35. rv said...

  பொன்ஸ் அவர்களே,
  இணைய, உலக அரசியல் அரிச்சுவடி தெரியாமல் இப்படித் தப்புத்தாளங்கள் போடும் கூட்டத்தில் நீங்களும் ஒருவரா? ப.ம.க வென்றால் என்ன என்பதற்கு சில சுட்டிகள் தருகிறேன். பொறுமையாக படித்துவிட்டு எங்கள் பூலோக உருண்டை போன்ற இயக்கத்துடன் உங்கள் சங்கம் என்னும் எள்ளுருண்டையை ஒப்புநோக்குவது எவ்வளவு அக்கிரமம் என்று நேர்மையான முடிவுக்கு வாருங்கள். உண்மையான இடத்தில் வந்து சேருங்கள்.

  பமக வரலாறு: உதயம், புதிய சட்டங்கள், ஒரு ரிஸ்க் அனாலிஸிஸ்


 36. rv said...

  பொன்ஸ் அவர்களே,
  பமக வின் படைபலத்துக்கு இங்கே பார்க்க


  1.
  2


 37. rv said...

  கோ. இராகவன் அவர்களே,
  ஆஹா.. இந்தத்தமிழில் தானே அய்யா எங்கள் கட்சித்தலைவர் மயங்கினார். தமிழ்மணச் செம்மல் என்று புதிதாய் பட்டம் கொடுக்கலாம் என்பது பற்றி பொதுக்குழு விரைவில் முடிவெடுக்கும்.

  ஆனால், வந்தவரை வரவேற்கவில்லையே என்று பொதுவில் ஆதங்கப்படலாமா? நம் கட்சிக்கு வந்த அவப்பெயரை எதிர்கொள்ள மும்முரமாய் இருப்பதால் நம் செயற்குழு உறுப்பினர்கள் சற்று வேலைப் பளுவில் அமிழ்ந்துள்ளனர். தனிமடலில் உங்களுக்கு வந்த வரவேற்பை பொதுவிலும் எதிர்ப்பார்ப்பது தவறில்லை. ஆனால், இது நேரமில்லை. காலம் கனிந்தவுடன் வருவது வரும். உங்களுக்குத் தெரியாததா?

  ஆனால், இராகவன் ஒரு விஷயம் உறுதியாகச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். கட்சியின் பொதுக்குழுவினிடமும், தலைவரிடமும் அனுமதி பெறாமல் தொகுதி பேரங்கள் செய்கிறீர்கள் என்று செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இது அவ்வளவு உசிதமாக காரியமாக படவில்லை. கட்சியின் வளர்ச்சிற்கு எதிராய் செயல்படுகிறார் என்று ஆனானப்பட்ட கொ.ப.சே மற்றும் மூத்த உறுப்பினரான பெனாத்தலாரின் மேல் குற்றச்சாட்டுகள் வந்தபோதுகூட பதவியையும் பாராமல் அக்னிபரீட்சை செய்யப்பட்டு இன்று தான் நிரபராதியென நிருபித்திருக்கிறார். கட்சிக்கு விரோதமான செயல் என்றால் எவ்வித பாரபட்சமும் காட்டப்படாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், ப.ம.க என்னும் பாரம்பரியமிக்க இயக்கத்திற்கு கொடுத்துதான் பழக்கம். வாங்கியல்ல. அதையும் நினைவில் கொள்வது நல்லது.

  அன்புடன்,


 38. rv said...

  தேவ் அவர்களே,
  வாழ்த்துகளுக்கு நன்றி.

  ஆனால் எங்களுக்கு இழைத்த அநீதிக்கு பதிலளித்தே தான் ஆக வேண்டும். ஸ்மைலிகள் போடவில்லை, கவனிக்கவும்.


 39. rv said...

  கைப்பொண்ணு,
  ஏன் பின்னூட்டத்தை அழித்துவிட்டீர்கள? நீங்களும் வ.வா.ச என்னும் செக்கூலரிஸ்ட் உறுப்பினரா இல்லை நேர்மையாளரா?


 40. பினாத்தல் சுரேஷ் said...

  பொன்ஸுக்குக் கொடுத்த மளிகை லிஸ்ட்டில்
  இதையும்,

  இதையும் மறந்தது வெறும் மறதி என்று nநம்ப விரும்புகிறேன்!


 41. இலவசக்கொத்தனார் said...

  பேரன்பிற்கும் பெருமரியாதைக்கும் உரிய திரு ஜிரா அவர்களே,

  பெங்களூர் வட்டச் செயலாளராக சேர்ந்து நம் கட்சியின் பாரம்பரியத்தை நிலைநாட்ட நீங்கள் வந்திருக்கும் இந்த தருணத்திலே, தேனோடு பால் சேருவது போன்ற, பழம் நழுவி பாலில் விழுவது போன்ற, இந்நிகழ்ச்சியை, அதனால் வரும் இம்மகிழ்ச்சியை, நம் நெஞ்சினில் நிறுத்தி அதன் சுவையை ரசித்து, மகிழ முடியாத ஒரு சூழ்நிலை உருவாகிவிட்டதே என வருத்தப்பட்டுக்கொண்டிருக்கும் இந்நேரத்திலே, தாங்கள் தங்களை நாங்கள் சரிவர வரவேற்கவில்லையோ என்ற நினைப்பில் வருத்தம் கொண்டு அந்த ஆற்றாமையால் எழுதியிருக்கும் மடலைப் படிக்க நேர்ந்த கொடுமையை நினைத்து கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் நான் என்ன சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன் என்றால், தாங்கள் நினைப்பது போல் வந்தாரை வரவேற்கத்தெரியாத, ஒரு கலாச்சாரமில்லாத, ஒரு பண்பாடற்ற கூட்டத்தினரை போல் இல்லை நாங்களென்றும், நண்பர்களுக்காகவும், கட்சிக்காகவும், தலைவருக்காகவும், கொள்கைகளுக்காவும், தன்னுயிரைக்கூடத் தயாராக இருக்கும் கூட்டத்தினர் நாங்களென்றும், எங்களைப்பார்த்து உங்களுக்கு இப்படி ஒரு சந்தேகம் வந்ததே என வருத்தப்படும் இவ்வேளையிலே, இதற்கு காரணமாக இருந்த சிறுநரி சங்கத்தினரைப் பார்த்து நான் என்ன கேட்க விரும்புகிறேன் என்றால், எங்கள் தலைவன் ஊரில் இல்லாத இந்நேரத்திலே, வானத்தில் வட்டமிடும் வல்லூறுகளாய், சுற்றி வரும் சிறு நரிகளாய், வந்து எட்டி பார்க்கும் உங்களுக்கு இங்கே எதுவும் கிடைக்கப்போவதில்லை என்றும், கட்டுக்கோப்பான எங்கள் கழகத்தை பணத்தைக் காட்டியோ, பசப்பு வார்த்தைகள் பேசியோ, உடைத்து விட முடியாதென்றும் அறுதியிட்டு கூறவும் கடமைப்பட்டுள்ளேன்.

  ஜிரா அவர்களே, பகலவன் கண்ட பனித்துளி போல் உங்கள் மனம் வந்த வருத்தம் மறைந்திட, உங்களை இரு கரம் கூப்பி வருக வருக என வரவேற்கிறேன். உங்கள் வருகை நம் கழகத்தை மேலும் பலப்படுத்தும் என்பதில் ஐயப்பாடில்லை. கவிதை பாடினால்தான் தங்கள் வருத்தம் தீருமென அறிந்த்தால் என்னாலன ஒரு சிறு முயற்சி.

  சந்த தமிழோடு சங்கத் தமிழ்தரும்
  சிந்தனைச் செல்வரே, தீரரே - நிந்தனை
  எங்கள் இயல்பில்லை நோகாதீர் நட்புடனே
  சங்கத்துள் சங்கமிக்க வா


 42. தாணு said...

  ஐயா மருமகரே
  முதலில் ப.ம.க.ன்னா என்ன கட்சின்னு சொல்லுங்க? ரொம்ப நாளா வலையில் விழாததால் தலையும் புரியலை வாலும் புரியலை. தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் பேச்சுதான் நமக்கு விளங்க மாட்டேங்குதுன்னு பார்த்தா ப்ளாக் பக்கமும் இதே சோதனையா?


 43. G.Ragavan said...

  உருசிய நாட்டு உருக்குச் சிங்கமே...

  கட்சியின் தங்கத் தூணே

  வெண்பனி நாட்டில் தன் பணி போற்றிப் புகழ் நாட்டும் பெருங்குன்றே

  வா என்று அழைத்தா வந்தேன்....ஆல மரம் போல கட்சி தழைக்கத்தான் வந்தேன்...

  இரவு வந்தும் உறக்கம் வந்தும் கட்சிப் பணிக்காக என்னை அர்ப்பணித்துக் கொண்டு வந்தவன் நான்....நள்ளிரவு பத்தரைக்கு மேல் பொதுக்கூட்டம் போட்டு நான் பேசுவதை நீர் அறிவீர்.

  நான் பேரம் பேசியது கட்சியோடு என்னை இணைத்துக் கொள்ளும் முன்னால். தொகுதிகளைக் கேட்டதற்கு அவர்கள் கண்டு கொள்ளாமல் கூட விட்டது எங்கே..கேட்காமலே அள்ளிக் கொடுத்தது இங்கே.....ஆகையால் கட்சிக்கு என்னுடைய முழுமையான பணியையும் பணியையும் உறுதி மொழிகிறேன்.

  அத்தோடு நமது கட்சியின் சார்பில் நமது பத்து பின்னூட்டம் வாங்கினால் கூடுதல் பத்துப் பின்னூட்டங்கள் கொடுக்கப் படும் என்ற அதியற்புதத் திட்டத்தை மட்டும் இப்பொழுது உங்கள் அனுமதியோடு அறிவித்துக் கொண்டு விடை பெறுகிறேன்.

  நமது மற்ற கொள்கை முழக்கங்கள் நாளை தொடரும் என்று உறுதி கூடி இப்பொழுதைக்கு மட்டும் விடை பெறுகிறேன்.

  ப நாமம் வாழ்க
  ம நாமம் வாழ்க


 44. தருமி said...

  partner செல்வம்,
  பாத்தீங்களா..பாத்தீங்களா...? நம்மள பத்தி இல்லாததையும் பொல்லாததையும் சொன்னவங்களை சந்தி சிரிக்க வைக்கவேண்டாமா? ஒரே வழி..உத்தமமான வழி...இந்த ஒரு ஸ்டேட்மெண்டுக்காகவே நாம் ஒரு கோடி ரூபாய்க்கு
  மானநஷ்ட வழக்குப் போட்டு, உண்டு இல்லைன்னு பாத்திரணும். அவங்க சொன்னதப் பாருங்க: "சமீபத்தில் நடந்த நிலாத்தேர்தலில் அமோக வெற்றி பெற்று வீணாய் வாலாட்டியவர்களை டெபாஸிட் இழந்து புறமுதுகிட்டு ஓடச்செய்திருக்கிறோம்."
  சீக்கிரம் ஆகவேண்டியதைப் பார்ப்போம்; சந்திப்போம்; அவர்களை நீதியின் முன் கூண்டேற்றுவோம்...


 45. Unknown said...

  பார்ட்னர் தருமி,

  தேர்தலில் தோற்றது நாம் இல்லை.தமிழ்.வாழை மட்டையாய்,சோற்றாலடித்த பிண்டமாய்,எடுப்பார் கைபிள்ளையாய் தமிழன் ஆகிவிட்டதை கண்டு நாம் மனம் நொந்து நிற்பது உண்மைதான் எனினும் இதற்கெல்லாம் பயந்து நாம் பின்வாங்கிவிட முடியுமா அல்லது தமிழன்னைக்கு புகழ் மாலை சூடுவதை நிறுத்தத்தான் முடியுமா?

  நமக்கு ஓட்டுப்போட வந்த மறவர் மடையினரை வழியிலே மறித்து பிஸ்கட்டும், இலவச டீவியும் கொடுத்து வெற்றிக்கனியை திருடிச்சென்றனர் எதிரணியினர்.என்ன செய்ய?தமிழனின் தலைவிதி இதுவன்றோ?

  என்ன செய்வேன்?என் நாடே.இந்த கதி உனக்கா எனக்கா?

  பொங்கி எழுந்து எதிரியை வீழ்த்தி நான் புதுக்காவியம் படைக்க திட்டமிட்டேன்.எதிரணியில் நின்றது யார்?என் அண்ணன் இயக்க தளபதி கழக தலைவர் அண்ணன் குமரன்.நானென்ன வீடனனா?இல்லை.நான் கும்பகர்ணன்.கையெடுத்து கும்பிட வேண்டிய அண்னன் மீது எப்படி என் கரம் அம்பை எய்யும்?தயங்கினேன்.திணறீனேன்.

  அந்த தயக்கத்தை பயன்படுத்தி அத்தேர்தலில் எதிரணியினர் வென்றுவிட்டனர்.இருந்தாலும் எட்டப்பர்களை எச்சரிக்கிறேன்.பார்ட்னர் தருமி கற்றுத்தந்த தமிழ்பண்பு மீதும் கழகத்தலைவர் அண்னன் குமரனின் அன்பு மீதும் ஆணையிட்டு சொல்கிறேன்.

  தனி இருவராக களத்தில் வாழ் சுழற்றி நானும் பார்ட்னர் தருமியும் போரிட்டோம்.அன்று கவுரவர் படையினில் நுழைந்த அபிமன்யூக்கள் நாங்கள்.இன்று நாங்கள் ஆடுகளின் குகைக்குள் புகுந்த சிறுத்தைக்குட்டிகள்.அன்று நாங்கள் இளையவர்கள்.இன்றூ நாங்கள் இனை இல்லாதவர்கள்.

  அபிமன்யூவுக்கு உதவ அன்று யாரும் இல்லை.இன்று கண்ணனாய்,எங்கள் அண்னனாய் குமரன் எங்களுடன் வந்து சேர்ந்துவிட்டார்.தோள்கொடுக்க வ.வா.சங்க கூட்டணியும் துணைவந்துவிட்டது.

  தூங்கும் சிங்கத்தை தட்டி எழுப்பும் தவறை மீண்டும் செய்ய வேண்டாம் என ஆட்டுக்குட்டிகள் கூட்டத்தை ஆ.சூ.கு.மூ.ச+மல்லிகை அணி+வ.வா.ச அணி ஆகிய மும்மூர்த்திகள் கூட்டணி சார்பில் எச்சரிக்கிறேன்.


 46. rv said...

  பெனாத்தலார்,
  நம் கட்சியின் மேன்மைக்கு எடுத்துக்காட்டாய் இரண்டே இரண்டு சுட்டிகள் தான் கொடுத்தேன். நமதியக்கத்தின் சாதனைகளை பட்டியலிட இந்தப் பிறவி போதாதே அய்யா!


 47. rv said...

  கொத்தனார்,
  ஜிராவின் விளக்கம் திருப்திகரமாய் இருந்ததால் அவரின் நோக்கத்தை மீண்டும் சந்தேகமெழ வாய்ப்பில்லை.

  வெண்பா நன்று.

  எங்கே நமது இன்னொரு வெண்பா வித்தகர், இன்ஷ்டண்ட் கவிஞரைக் காணவில்லை?


 48. இலவசக்கொத்தனார் said...

  //இணை இல்லாதவர்கள்//

  ஏம்பா மருந்து, எதாவது நல்ல டேட்டிங் சர்வீஸ் நம்பர் கொடுக்கக் கூடாது? :)


 49. பத்மா அர்விந்த் said...

  அன்புக்கு மூன்றெழுத்து, அது தரும் பண்புக்கு மூன்றெழுத்து, அறிவுக்கு மூன்றெழுத்து என்று நிரூபித்த உங்களுக்கு இந்த சோதனை! தடை பல வந்தாலும் உடைத்து முன்னேறு மருத்துவரே. இந்த பின்னூட்டம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?


 50. Unknown said...

  ஜிரா விற்கு விளக்கம்...

  தல கைப்பு அவர்களின் இதயத் துடிப்பே... பெங்களூரின் ஆன்மீக ஒளிபரப்பே..
  நல் நட்புக்கு இலக்கணமே...வாலிப வருத்தங்களைப் போக்கும் மருந்தே... இனிய மகரந்தமே...

  நீ தொகுதிகள் கேட்டாய் என அறிந்து ஆனந்தப் பட்டு மால்கேட் ரயில் கேட்களில் ஆனந்த நாட்டியமாடியதை நீ அறிவாயா?
  உன் விருப்ப தொகுதிக்ளில் உன்னோடு மேடையேறி சங்க்த்தின் கொள்கைகளை முழங்க என் மனம் கொண்ட் பேராவலி நீ அறியாமல் போனது எப்படி?
  உன் சமையலறையில் உன் கையால் நீ தயாரிக்கும் அறுசுவை உணவை நான் சுவைத்துக் களிக்கலாம் என நினைத்தது என் குற்றமா?

  என் போர் வாளே... நீ என்னோடு இருப்பாய் என்ற ஒரே தைரியத்தில் இதர வாள்களை மலிவு விலையில் பழைய இரும்புக்கு பேரீச்சம் பழம் எனக் கூவி அழைத்தவனின் குரலில் மயங்கி சின்னப் பில்லைங்க பேரீச்சம் பழம் திங்கட்டும்ன்னு போட்டு விட்டேனே...

  இப்போது நீயும் போகிறாயா?

  அண்ணன் போட்ட கோடு தாண்டப்பிடாதுன்னு நான் போட்டப் பாசக் கட்டளையை மீற உனக்கு எப்படி ராசா மனம் வந்தது....

  சொல்லு... சொல்லு... சொல்லு....


 51. Unknown said...

  அன்பு நண்பர் ஜிரா அவர்களே தலயின் வேதனைக் கலந்த இந்தப் பாச மடலை உங்களிடம் சேர்க்க நான் பட்டபாடு கொஞ்சம் நஞ்சமல்ல...

  சங்கத்து முன்னணியினர் களப் பணிகளில் தீவிரமாக இருக்க.. தலயின் ஆணை ஏற்று நான் எல்லாச் சொல் அம்புகளையும்.. வார்த்தை வெடிகுண்டுகளையும் எதிர் அணியினரின் இதர பிற ஆப்புகளையும் தாங்கியபடி சங்கப் பணி ஆற்றி வருகிறேன்...

  உங்களுக்கு வரலாறு காணாத வரவேற்பு அளிக்க நாங்கள் செய்திருந்த ஏற்பாடுகளும் வெளிநாட்டு சதியினால் சிக்கி சீட்டியடித்து விட்டது. தல கைப்பு மால்கேட்டில் இருந்து வந்ததும் இதற்கு அவர்கள் நிச்சயம் பதில சொல்லியே ஆக வேண்டும்...

  என் நிலையை உங்களுக்கு விளக்கிய பெரும திருப்தி என் மனத்தில் இப்போது ஏற்பட்டு இருக்கிறது

  -கோடிகளுக்கு மதிப்பு கொடுக்க மாட்டேன்... அண்ணன் கைப்புவிற்கு விழும் அடிகளுக்கு மட்டுமே மதிப்பு கொடுத்து வாழும் நான் என்றுமே தல கைப்புவின் உண்மைத் தொண்டன் என்பதை உலகுக்கு உரக்கச் சொல்லிக் கொள்கிறேன்...


 52. பொன்ஸ்~~Poorna said...

  ஜீவா ஏற்கனவே வ.வா.ச. ல சேந்துட்டாரு.. ஒரு கொள்கைக் கூட்டணியாத்தான் உங்க கொத்தனாரோட வெண்பா வடிக்கிறாரு.. இங்ஙன பாருங்க, புரியும்..

  ஐ ஐ, ஆசையப் பாரு.. கைப்பொண்ண உங்க சங்கத்துல சேக்க முயற்சி பண்றீயளோ?? எங்க தலக்கு தெரிஞ்சா என்ன நடக்கும் தெரியுமா??!!


 53. பொன்ஸ்~~Poorna said...

  பச்சோந்திகள் மட்டும் தான் புள்ளிவிவரம் சொல்லுமோ..
  இதோ பிடியுங்கள் என் புள்ளி விவரத்தை:

  1. வ. வா சங்கத்தின் வரலாறு அறிய புரட்டுங்கள் இந்தப் பக்கத்தை.
  2. அண்ணன் குமரனும் அவர்தம் அப்பன் சிவபெருமானும் கைப்புள்ளயின் பாசத்துக்கு மயங்கி, ரொம்ப நல்லவன் என்று பெயர்சூட்டிப் புகழளித்த கதை இங்கே
  3. எங்கள் கட்சியின் பலத்தைப் பறைசாற்றும் விதமாய் பேராசிரியர் கார்த்திக் எழுதிய மடலுக்கு உங்கள் கொத்தனாரே (இலவசம், இப்போவும் இடமிருக்குங்க, 'எங்கள்' ஆகுறதுக்கு ;)) ஆசைப்பட்டு எங்கள் கட்சியில் சேர விண்ணப்பித்ததைக் காண சொடுக்குங்கள் இங்கே!!
  4. நுழையவே இடமில்லாத மண்டபத்தில், எங்கள் அண்ணனின் பரிசம் போட்ட நிகழ்ச்சி இங்கே
  5. வந்தாரை வாழவைத்து அண்ணனுக்கு ஆப்பு வைக்கும் வ.வா.கட்சியில், வீரபாகுவுக்கு நடந்த வீர மரியாதை இங்கே

  6. மகளிர் நலம் பேணும் வ.வா.சங்கத்தின் கொ.ப.செ., தற்புகழ்ச்சி சிறிதுமில்லாத தன்னடக்கச் செம்மல், அடியேன் பொன்ஸின் அறிக்கை காண இதோ, வருக வருக..

  இப்போதும் நீங்கள் மன்னிப்பு கேட்டு கட்சியுடன் கூட்டணி வைக்க விரும்பினால், 'மன்' என்னும் இரு சொல்லிலேயே மனம் நெகிழ்ந்து கூட்டு, குழம்பு வைக்க எங்கள் பாண்டி நாட்டு சிங்கம், மால்கேட் மாணிக்கம் கைப்பு அண்ணன் தயாராக இருக்கிறார் என்று சொல்லி என் சிற்றுரையி முடிக்கிறேன்..

  மருத்துவரே, இப்படியே நீங்க எல்லாரையும் மன்னிப்பு கேக்க சொல்லிகிட்டிருந்தீங்க, அப்புறம் மன்னிப்பு இராமனாதனா ஆய்டுவீங்க சொல்லிட்டேன்..


 54. இலவசக்கொத்தனார் said...

  //3. எங்கள் கட்சியின் பலத்தைப் பறைசாற்றும் விதமாய் பேராசிரியர் கார்த்திக் எழுதிய மடலுக்கு உங்கள் கொத்தனாரே (இலவசம், இப்போவும் இடமிருக்குங்க, 'எங்கள்' ஆகுறதுக்கு ;)) ஆசைப்பட்டு எங்கள் கட்சியில் சேர விண்ணப்பித்ததைக் காண சொடுக்குங்கள் இங்கே!!//

  இதைப் பத்தி கொஞ்சம் பேசலாமா? ரொம்ப இண்டிரெஸ்டிங்கான விஷயம்.

  முதலில் நான் என்ன எழுதினேன்னு பார்ப்போம்.

  //அண்ணா,

  சமீப காலத்தில இவ்வளவு உணர்ச்சியை தூண்டும் விதமா யாருமே எழுதின ஞாபகம் இல்லீங்கண்ணா. ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்கண்ணா.

  உங்க கட்சியில் சேரலாம்ன்னு தோணுது, ஆனா அதுக்கான வயசு இல்லீங்களே. ஏதாவது இளைஞர் அணி இருக்குதாங்கண்ணா?//

  இதுதான் நான் எழுதினது. இப்போ ஏன் எழுதினேன்னு பார்க்கணும். இவங்க சங்க நம்பர் 2 (பேராசிரியர்ன்னா தமிழ்ல நம்பர் 2ன்னுதானே அர்த்தம், (சாரி, குமரன் கோச்சுப்பாரு), பொருள்.) ஒரு கடிதம் எழுதறாரு. ஆனா அதைப் படிச்சா நம்ம கழக வாசனை வீசுது. என்னடான்னு பார்த்தா, நம்ம கழக கண்மணிகளுக்கு நிலா தேர்தலில் நான் எழுதிய மடலின் அப்பட்ட காப்பி. வேணும்னா இங்க போய் பாத்துக்குங்க.

  சரி இந்த மாதிரி டாக்டர் பட்டம் வாங்கினவங்க எல்லாம் காப்பியடிச்சுப் பாசானவங்கதானே. என்னடா, நம்மளைப் பாத்து எழுதி இருக்காங்களே. நமக்கு ஒரு சலாம் வைக்கக் காணுமே. சரி, சின்னப் பசங்க முன்னுக்கு வரணும் அதனால அவதூறு வழக்கெல்லாம் போட வேண்டாம். போனா போகட்டும். ஆனா அதே சமயம் அவங்களுக்கு புரிய வைக்கணும் என்ற எண்ணத்தில் இப்படி எழுதிப் போட்டேன். சரி, வஞ்சப் புகழ்ச்சியை புரிஞ்சுகிட்டு இவ்வறிக்கையின் மூலம் அப்படின்னு ஒரு சுட்டி குடுப்பாருன்னு பார்த்தா அவரு என்னமோ அவரை பாராட்டறதா நினைச்சுகிட்டு பதில் போடறாரு. அடி, உதை வாங்கி மரத்துப்போன இவங்க கிட்ட நாசூக்கா பேச நினைச்சது என் தப்புதான். என்ன பண்ணறது.

  சரி. இவருக்குத்தான் புரியலை. ஆனா இதை வச்சு எங்க கழகத்தில் கலகம் பண்ண நினைக்கிற இவங்க சங்க கொ.ப.செ.வை என்ன சொல்லறது? எங்க போயிங்க முட்டிக்கிறது? என்னமோ எங்க வெ.வா. இவங்க சங்கத்தில சேர்ந்திருக்காராமே. அவரை வச்சு வஞ்சப் புகழ்ச்சி பத்தி பாடம் நடத்த சொல்லணும். நினைக்க நினைக்க சிரிப்புதாங்க வருது.


 55. ramachandranusha(உஷா) said...

  ப.ம.க தலைவருக்கு ஒரு ஏழை அடிமட்ட தொண்டனின் மனம் கசந்த மடல்.

  ஐயா,
  நலமா? தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் நலமா? என்னை உங்களுக்கு நினைவிருக்கிறதா என்று
  எனக்கு தெரியவில்லை. ஆனால் சென்ற தேர்தலில் தங்களுக்கு ஆற்றிய களப்பணியை பற்றி தங்கள் மனசாட்சியிடம் விசாரித்துக்கொள்ளுங்கள். நேற்று கட்சியில் நுழைந்தவர்கள் எல்லாம் குளிரூட்டப்பட்ட காரில் பறக்கும்பொழுது, நான் இன்னும் 1990 வருட அம்மாசிடரில் பயணித்துக்
  கொண்டு இருக்கிறேன். பதவிகளை துச்சமாய் எண்ணி, கட்சி பணியே போதும் என்று முடிவெடுத்து
  பணியாற்றிக் கொண்டிருந்த எனக்கு, கட்சியில் துளியும் மரியாதையில்லை. ஆகையால் அன்புடன்,
  பணிவுடனும் தங்கள் கட்சியில் சேருமாறு அழைத்த அந்நண்பர்களின் அன்புக்கு கட்டுப்பட்டு கட்சியை
  விட்டு விலகுகிறேன். இதையே என் ராஜினாமாவாகக் கொள்ளவும்.
  இப்படிக்கு,
  ஏமாந்த தொண்டன்


 56. rv said...

  வெண்பா அடுக்கும் கொத்தனாரே,
  நீர் வாழ்க ! நின் தமிழ் வாழ்க!

  ஜிரா வந்து விளக்கம் சொல்லியாச்சு! அது திருப்திகரமாய் இருப்பதால் மேலும் குறுக்கு விசாரணை தேவையில்லை என்று பொதுக்குழுவில் முடுவெடுக்கப்பட்டுள்ளது. கட்சிக்காக முழு மூச்சாய் பணியாற்றுவார் இனி.


 57. rv said...

  கொத்தனார் அவர்களே,
  உங்களுக்கும் கட்சிக்கும் மகிழ்ச்சி தரும் ஒரு செய்தியை பொதுவில் அறிவிக்க பெருமைப்படுகிறேன். உங்களை வட அமெரிக்காவிற்கு (கிழக்கு) கொள்கை பரப்புச் செயலாளராக ஒருமனதாக நியமிக்கிறோம். இனி இப்பதவியின் உதவியோடு மேலும் சிறப்பாய் நீங்கள் களப்பணியாற்ற கட்சியின் பத்துகோடி நிரந்தர உறுப்பினர்கள் சார்பாய் வாழ்த்துகள்!


 58. rv said...

  அத்தை,
  பமக வை பற்றி உங்களுக்கு தெரியாதது மிகுந்த மனவருத்தத்தை அளிக்கிறது. பின்னூட்டங்களில் சுட்டிகள் தந்திருக்கிறேன். அதைப் பார்த்துவிட்டு கண்டிப்பாக, இந்த மருமகனுக்காகவது எங்கள் கட்சியில் தான் சேருவீர்கள் என்று நம்புகிறேன். தமிழ் நாடு (மேற்கு) கொள்கை பரப்புச் செயலாளர் பதவியை உங்களுக்காகவே ரிஸர்வ் செய்து வைத்திருக்கிறேன்.

  அன்புடன்,
  உங்கள் அன்பு மருமகன்


 59. rv said...

  கோ. இராகவன்,
  தமிழ்ச்செல்வமே! கட்சிக்கு நீர் கூட இருப்பதால் கிடைக்கும் பலம் பிரமிக்க வைக்கிறது. அதனாலேயே, ஆற்றாமையால் வ.வா.சங்கத்தினர் இன்னும் அடாது உங்களை படாதபாடு படுத்திவருகின்றனர். இதற்கெல்லாம் அசருகிறரவா நீர்? வாழ்க உமது கட்சிப்பணி!


 60. rv said...

  பெரீய்ய்யப்பா,
  //நம்மள பத்தி இல்லாததையும் பொல்லாததையும் சொன்னவங்களை சந்தி சிரிக்க வைக்கவேண்டாமா?//
  இப்படி சொன்னா எப்படி? என்னத்த இல்லாதத சொல்லிட்டோம் இப்படி?

  நீங்கள் போயும் போயும் அந்த சினிமா நடிகரின் போலியின் கட்சிக்காரர்களுடன் கூட்டணி வைக்கலாமா? இது உங்கள் மனசாட்சிக்கு நியாயமாகப் படுகிறதா?

  எங்களுடன் இணையுங்கள். தென் தமிழ்நாட்டின் கொ.ப.சே வாக உங்களை ஆக்கி அழகு பார்க்க காத்திருக்கிறோம்.

  அன்புடன்,


 61. rv said...

  செல்வன் அவர்களே,
  பல்லாயிரம் ஆண்டுகள் தொடங்கி சமீபத்தில் நடந்த இத்தாலிய ஜனநாயகத் தேர்தலில் தோற்றவர்கள் வரை சொல்லும் நொண்டிச் சாக்கு இது. இன்னும் எத்தனை நாளைக்கு பாடப்போகிறீர்கள்?

  //வந்த மறவர் மடையினரை வழியிலே மறித்து பிஸ்கட்டும், இலவச டீவியும் கொடுத்து வெற்றிக்கனியை திருடிச்சென்றனர் எதிரணியினர்.//
  தெரிந்தோ தெரியாமலோ உங்களுக்கு ஓட்டுப்போட வந்தவர்களை மடையர்கள் என்று ஒத்துக்கொண்டுள்ளீர்கள். அதற்கு ஸ்பெஷல் நன்றி. :))

  வெறும் டிவியும், பிஸ்கட்டும் கொடுத்தா போதுமா? அவ்வளவு தானா உங்கள் கொள்கைப்பிடிப்பு?

  ----
  உங்களுக்கு நண்பன் என்கிற வகையில் நல்லது சொல்கிறேன். உருப்படாத அணியில் இருந்து தலைவருக்கே ஆப்பு வைக்கும் அனியினரிடம் கூட்டணி தேவையா? எங்கள் பக்கம் வாருங்கள். உங்கள் திறமைக்கேற்ற உரிய மரியாதை கொடுத்து வெற்றி நடை இணைந்து போடுவோம்.


 62. rv said...

  கொத்ஸு,
  ///இணை இல்லாதவர்கள்//

  ஏம்பா மருந்து, எதாவது நல்ல டேட்டிங் சர்வீஸ் நம்பர் கொடுக்கக் கூடாது? :)//

  பாவம். பயஜன்னியில் மாற்றி மாற்றிப் பேசுகிறார்கள் எதிரணியினர்.


 63. rv said...

  நம் அறிவியல் அணியின் தன்னிகரில்லாத் தலைவியே, பொதுச்சேவை பல புரிந்திடும் பொன்னொளியே, ஆன்மிகசெம்மலே, மதிப்பிற்குரிய தேன் துளி அவர்களே,

  வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

  நம் பலம் தெரியாமல் மோதுகிறார்கள், வீணர்கள். பார்ப்போம், இன்னும் எத்தனை நாள் தாக்குப்பிடிக்கிறார்கள் என்று.

  பின்னூட்டம் என்றால் never say no பாலிஸியாச்சே.. இப்படியெல்லாம் கேக்கலாமா?


 64. rv said...

  தேவ் அவர்களே,
  உங்கள் ரசிகர் மன்றத்தின் ஆள் சேர்க்கும் பணிக்கு எங்கள் கண்ணியமான கட்சியின் ப்ராபர்டியை பயன்படுத்துவதை கடுமையாக ஆட்சேபிக்கறேன். அதோடு கூட, கொள்கையினால் எங்களுடன் இணைந்த எங்கள் ஆன்மிக தமிழ் அணியின் தலைவர் திரு. கோ. இராகவன் அவர்களிடம் உங்கள் பசப்பு வார்த்தைகள் பலிக்கப்போவதில்லை. காலத்தையும் எங்கள் இடத்தையும் வீணாக்காதீர்கள்.

  நன்றி


 65. rv said...

  பொன்ஸ் அவர்களே,
  ஜீவா என்னும் அருமைத்தோழரின் எதிர்காலம் பாழாவதை எங்களால் அனுமதிக்க முடியாது. வெட்டிப்பேச்சு பேசிக்கொண்டிருக்கும் வெறும் சினிமா நடிகர் கூட இல்லை, அவரின் போலிக்கு ஆதரவாய் தொடங்கப்பட்ட சங்கத்தில் இருந்து ஜீவா போன்ற திறமையான
  இளைஞர்கள் வெளியில் வர வேண்டும். அவர்கள் திறமைக்கும் தகுதிக்கும் அவர்கள் இருக்கவேண்டிய ஒரே இயக்கம் எங்களுடையதுதான்.

  இது ஜீவாவிற்கு மட்டுமில்லை. திறமையும் ஆர்வமும் மிக்க இளைஞர்களுக்கு பொதுவாக அறிவிக்கிறேன். அந்தச் சங்கத்தில் இருந்து வெட்டிக்கதைப் பேசித் திரிய போகிறீர்களா? இல்லை எங்கள் கட்சியில் சேர்ந்து ஆக்கப்பூர்வமாய் செயலாற்றப் போகிறீர்களா? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.


 66. rv said...

  பொன்ஸ்,
  திருந்துவீர்கள் என்று நினைத்து போன பின்னூட்டத்தை எழுதினேன். அதைப் பதிப்பித்துவிட்டு பார்த்தால், உங்களின் அடுத்த ஆணவப் பின்னூட்டம். இனிப் பேசிப் பயனில்லை என்று தெளிவாகிறது. தமிழக மக்கள் தெளிவாகவே இருக்கிறார்கள். எங்கள் பக்கம்.

  //இப்போதும் நீங்கள் மன்னிப்பு கேட்டு கட்சியுடன் கூட்டணி வைக்க விரும்பினால், 'மன்' என்னும் இரு சொல்லிலேயே மனம் நெகிழ்ந்து கூட்டு, குழம்பு வைக்க எங்கள் பாண்டி நாட்டு சிங்கம், மால்கேட் மாணிக்கம் கைப்பு அண்ணன் தயாராக இருக்கிறார் என்று சொல்லி என் சிற்றுரையி முடிக்கிறேன்..//

  இந்த ஒரு வாக்கியத்திற்காகவே லாஸ் ஏஞ்சலீஸ் தொடங்கி சிலுக்குவார்ப்பட்டி வரை ஒவ்வொரு கோர்ட் கோர்ட்டாய் படியேறியிறங்கச் செய்வோம். நினைவில் கொள்ளுங்கள் என்பதோடு நிறுத்திக்கொள்கிறேன்.


 67. இலவசக்கொத்தனார் said...

  //பதவிகளை துச்சமாய் எண்ணி, கட்சி பணியே போதும் என்று முடிவெடுத்து
  பணியாற்றிக் கொண்டிருந்த எனக்கு, கட்சியில் துளியும் மரியாதையில்லை. //

  உஷாக்கா,
  கடமையை செய். பயனை எதிர்பாராதே என சொல்வது எளிது. ஆனால் அதன் படி நடப்பது மிகவும் கடினம். அதுதான் மனித இயல்பு. அதனை நானும் அறிந்தவந்தான். ஆனால் நமது கட்சியில் மூத்த உறுப்பினர்களுக்கு மரியாதை இல்லை என்பது என்னால் சரியென ஏற்றுக்கொள்ள முடியாததாகவே இருக்கிறது. வெகு நாட்கள் கட்சி பணி ஆற்ற வராதவர்களுக்கும் பதவி கொடுத்து அழகு பார்க்கும் கட்சியல்லவா நம் கட்சி.

  அதுமட்டுமில்லாது கடைத்தொண்டன் ஆற்றும் கட்சிப் பணி கூட தலைமைக்குத் தெரிய வரும் கட்சி அல்லவா நம் கட்சி. சேர்ந்து சொற்ப நாட்களே ஆன எனக்கு, நான் ஆற்றும் கட்சிப் பணிக்காக இன்று கொ.ப.செ. பதவி கொடுத்து அழகு பார்க்கும் இயக்கம் அல்லவா நம் இயக்கம். (எனது கூட்டம் சேர்க்கும் திறனைப் பார்த்து மற்ற கட்சிகள், மதுரை என்ன, சேலம் என்ன என தொகுதிகளை வாரி வழங்கும்போது, நான் அங்கெல்லாம் போகாமலிருக்கத்தான் இந்தப் பதவி என பேசும் புல்லுருவிகளுக்குப் பதில் சொல்லி என் தரத்தைத் தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை.)இப்படி கட்சியில் மூத்தவர்களையும், இளைஞர்களையும் ஒரு சேர அரவணைத்து செல்லும் இயக்கமல்லவா நம் இயக்கம்?

  தங்களுக்கு எதேனும் மனக்கசப்பு இருந்தால் அதை நாம் பொதுக்குழுவில் அல்லவா பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும்? அதைவிட்டு இப்படி தாய் மடி விட்டோடும் குழந்தையை போலவா இருப்பது?ஆகையால் தாங்கள் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.


 68. rv said...

  கொத்தனார்,
  இவர்களின் சூழ்ச்சி தெரியாததா? ஆனால் விழிப்புடன் நாம் இருக்கையிலேயே இத்தனை பசப்புகளும் பொய்களும் புயலென பறக்கிறதென்றால், அறியா அப்பாவித்தமிழர்கள் இவர்கள் கையில் சிக்கினால் என்ன கதி ஆவார்களோ?

  திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் என்கிற தமிழ் பழமொழி தான் நினைவிற்கு வருகிறது.


 69. ஜெயஸ்ரீ said...

  மருத்துவரே,

  ஆல்போல் தழைத்து, அருகு போல் வேரூன்றி, மூங்கில் போல் கிளைத்து நிற்கும் நம் கழகத்தின் முன் நேற்றுப் பெய்த மழையில் முளைத்த காளான்கள் எம்மாத்திரம் ??

  இப்படை தோற்கின் எப்படை வெல்லும் ??


 70. rv said...

  அன்புள்ள உஷா அக்கா,
  உங்களைப் போன்ற மூத்த உறுப்பினருக்கு கட்சியினால் ஏற்பட்ட மனவருத்தத்திற்காக வருந்துகிறோம். இது அறியாமல் செய்த பிழை. ஆகவே தங்கள் முடிவை கொத்தனார் கூறியபடி மறுபரிசீலனை செய்யுமாறு கழகத்தின் சார்பாய் கேட்டுக்கொள்கிறேன்.


 71. rv said...

  கொத்தனார் அவர்களே,
  தங்களின் கட்சிப்பற்றை எப்படி புகழ்வது என்பதற்கு வார்த்தைகளே கிடைக்கவில்லை ஐயா. அருமையான பதிவு என்று ஒற்றைவரியில் பாராட்டிவிட்டு வெட்டியாய் போக வாய்ப்பிருந்தும், கட்சிக்காக இவ்வளவு பாடுபடுகிறீர்களே. அதோடு நில்லாமல், மனவருத்தத்தில் உள்ள மூத்த உறுப்பினரான உஷா அக்காக்கு உண்மையான நிலைமையையும் எடுத்தியம்பியுள்ளீர்களே. நீவிர் வாழ்க! பல காலம் நீரும் நம் இயக்கமும் இணைந்து வளம் பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.


 72. rv said...

  ப.ம.க வின் தங்கத் தாரகையே, ப.ம.க ஆன்மிக அணியின் இணைத்தலைவியே, பெருமதிப்பிற்குரிய ஜெயஸ்ரீ அவர்களே,

  வருக வருக.

  //நேற்றுப் பெய்த மழையில் முளைத்த காளான்கள் எம்மாத்திரம் ??//
  இது புரியாமல் தானே, காளான்கள் ஆடுகின்றன.

  சம்பந்தமில்லாத சேதி: விரைவில் நமது கட்சியின் தொண்டர்களுக்கு காளான் சூப், காளான் ப்ரை மற்றும் காளான் செட்டிநாடு கறி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.


 73. இலவசக்கொத்தனார் said...

  எதுக்குங்க நன்றியெல்லாம். கட்சியில் எல்லோரும் கவலையின்றி இருக்கச்செய்ய வேண்டுமென்பது நம் கடமையல்லவா? அதைத்தானே நான் செய்தேன். அவர்கள் மீண்டும் இயக்கத்தில் தம்மை இணைத்துக் கொள்ளும் தருணம்தான் நான் உண்மையில் ஆனந்தப் படக்கூடிய ஒரு தருணமாகும். அதுவரை காத்திருப்பேன். அதுவரை கட்சி தந்திருக்கும் வாகனத்தில் குளிரூட்டப் படாமலேயே பயணிப்பேன் என சூளுரைக்கிறேன்.


 74. G.Ragavan said...

  // ஜிரா அவர்களே, பகலவன் கண்ட பனித்துளி போல் உங்கள் மனம் வந்த வருத்தம் மறைந்திட, உங்களை இரு கரம் கூப்பி வருக வருக என வரவேற்கிறேன். உங்கள் வருகை நம் கழகத்தை மேலும் பலப்படுத்தும் என்பதில் ஐயப்பாடில்லை. கவிதை பாடினால்தான் தங்கள் வருத்தம் தீருமென அறிந்த்தால் என்னாலன ஒரு சிறு முயற்சி.

  சந்த தமிழோடு சங்கத் தமிழ்தரும்
  சிந்தனைச் செல்வரே, தீரரே - நிந்தனை
  எங்கள் இயல்பில்லை நோகாதீர் நட்புடனே
  சங்கத்துள் சங்கமிக்க வா //

  வெண்பா பாடி வாழ்த்திய இலவசமே
  அன்பால் அழைத்த கொத்தனாரே
  நீர் கட்டியது மனக்கோட்டையா? இல்லை இல்லை....கல்லையும் மண்ணையும் வைத்துக் கோட்டை கட்டுவதா உனது வழக்கம்!
  அன்பையும் நட்பையும் கலந்தல்லவா கட்சிக் கோட்டைக்கு அரணைக் கட்டிக் கொண்டிருக்கிறாய்!

  என்னை வாழ்த்தி அழைத்தமைக்கு நேற்றே பின்னூட்டம் போட இருந்தேன்...யார் சதி செய்திருப்பார்கள் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இரவில் தானாகவே பதினோரு மணி ஆனது. உறக்கம் என்னைத் தழுவிக் கொண்டது.

  கணிணியில் தட்டச்சு ஒழுங்காகச் செய்ய முடியவில்லை. கண்கள் செருகின. ஏதோ ஒன்று உந்த நான் கணிணையை அணைத்து விட்டு உறங்கச் சென்று விட்டேன்.

  இதற்கு யார் காரணம்? அதை வெளியே சொல்ல அவர்களுக்குத் துணிவுண்டா...உனக்கு நன்றி சொல்வதை ஒரு நாள் தள்ளிப் போடுவதில் யாருக்கு லாபம்? அது உலகிற்கே தெரியும். நாம் எடுத்துச் சொல்லித் தெரிய வேண்டிய அளவிற்கு நமது மக்கள் மானங் கெட்டு மரியாதை கெட்டு கூறு கெட்டுப் போய் விளக்குமாற்றால் அடித்த பிண்டங்களாகச் சுற்றிக் கொண்டிருக்கவில்லை.

  ஆயிரம் எருமைகள் கூடிக் குதித்தாலும் கடல் வற்றுமா? அது போல வற்றாத அன்போடு எனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டு இந்தப் பின்னூட்டத்தை நிறைவு செய்கிறேன்.

  ப நாமம் வாழ்க
  ம நாமம் வாழ்க


 75. G.Ragavan said...

  // கோ. இராகவன்,
  தமிழ்ச்செல்வமே! கட்சிக்கு நீர் கூட இருப்பதால் கிடைக்கும் பலம் பிரமிக்க வைக்கிறது. அதனாலேயே, ஆற்றாமையால் வ.வா.சங்கத்தினர் இன்னும் அடாது உங்களை படாதபாடு படுத்திவருகின்றனர். இதற்கெல்லாம் அசருகிறரவா நீர்? வாழ்க உமது கட்சிப்பணி! //

  உருசிய உருக்கே....கேட்டேன். கேட்டது கிடைக்கவில்லை என்று தெரிந்த பின்னும் கையை நக்கிக் கொண்டிருக்க நாம் தேன் கூடு தொட்ட கருங்கரடியா!

  காப்பியும் டீயும் ஆற்றி ஆற்றிப் பழகிப் போன இந்தக் கைகள் கட்சிப் பணியையும் ஆற்றுவதை நீர் அறிவீர். அதை நான் அறிவேன். அதையும் நாம் அறிவோம்.

  அவர்கள் ஆயிரம் சொல்லட்டும். அன்றைக்கு நான் பழநிக்குப் பாதயாத்திரை போன பொழுது அவர்களது பன் தொலைக்காட்சியில் இருட்டடிப்பு செய்தது தெரியாதா? அது இன்னமும் ரணமாகத்தானே இருக்கிறது.

  இரண்டு ரூபாய்க்குப் பின்னூட்டம் குடுப்பேன் என்று சொல்லும் அவர்கள் எங்கே! பத்து பின்னூட்டத்திற்குப் பதில் பத்துப் பின்னூட்டம் என்ற நமது கொள்கை முழக்கம் எங்கே!

  வீட்டுக்கு வீடு கலர் மானிட்டர் கொடுப்பார்களாம்....மக்களே கவனம் வேண்டும். அதற்கு DSL இணைப்பு கொடுப்பார்களா?


 76. பினாத்தல் சுரேஷ் said...

  பொன்ஸ் அவர்களே,

  சுட்டிகளை அடுக்கியிருக்கிறீர்கள் -- நல்லது, ஆனால், கொள்கைகளை விளக்கியும், போராட்டங்களை அறிவித்தும் உள்ள எங்கள் சுட்டிகளுக்கு மாற்றாக, எங்கள் முதல் பதிவு, இரண்டாம் பதிவு என்று அடுக்கியிருப்பதைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.. Wait a Minute! இதெல்லாம் அனுதாப ஓட்டாக மாறிடாது.

  மேலும் பாருங்க - முடிவை மாற்றிட சில பல பின்னூட்டங்களை மட்டுமே எதிர்பார்க்கும் உஷா அக்கா, ஆல்போலத்தழைத்திட வாழ்த்தும் பம்பாய் ஜெயஸ்ரீ, இந்தியா இலங்கை சிங்கப்பூர் மலேசியா நியூசிலாந்து வலைப்பதிவாளர்களிடம் பேராதர்வு பெற்ற பின்னூட்டக்கடவுள் என்று அனைத்து மகளிர் வாக்கும் எங்கள் பக்கம் - அந்தப்பக்கம் இருக்காதீர்கள் - நொந்தப்பக்கம் ஆகிடுவீர்கள்!

  கவனியுங்கள் - நானே பின்னூட்டத்தை இங்குதான் போடுகிறேன்.. இதுவும் இலவசனார் பதிவும் எங்கள் பின்னூட்ட வங்கிகள்! இதை வைத்தெல்லாம் எங்கள் சங்கத்துக்கு பங்கம் விளைவிக்க எண்ணினால், கழகத்தின் சிங்கங்கள் தங்கங்களுக்கு (பொன்ஸ்) பாடம் கற்பிப்பார்கள்!


 77. இலவசக்கொத்தனார் said...

  //அவர்கள் ஆயிரம் சொல்லட்டும். அன்றைக்கு நான் பழநிக்குப் பாதயாத்திரை போன பொழுது அவர்களது பன் தொலைக்காட்சியில் இருட்டடிப்பு செய்தது தெரியாதா? அது இன்னமும் ரணமாகத்தானே இருக்கிறது.//

  வைgo எனச் சொல்பவர்கள் மத்தியில், கம்டேக் எனச் சொல்லும் கழகத்தில் இணைந்த பின் இன்னும் என்ன வருத்தம்? இனி நடப்பவை நல்லவையாகவே இருக்கும். உமக்கும் வேண்டிய அளவு வெளிச்சம் கிடைக்கும்.

  வாழ்க கட்சி. வளர்க தலைவர்.


 78. ramachandranusha(உஷா) said...

  தலைவா! உறவுக்கு கைக்கொடுப்பேன், உரிமைக்கு உயிர் கொடுப்பேன். தற்சமயம் என் சுண்டு விரல் சுளுக்கிக் கொண்டதால் மருத்துவ மனையில் சேர போகிறேன். ஐயா, இந்த சுளுக்கின் காரணமாய் நான் இறந்தாலும் என் உடலின் மேல் நம் கட்சி கொடி போர்த்த வேண்டும். என் இறுதி சடங்கில் நம் கட்சி பாடலே பாடவேண்டும். கொள்கையே எங்கள் மூச்சு, கட்சியே எங்கள் கடவுள். என் இறுதி மூச்சு இருக்கும்வரை, தலைவா உன் காலடியே எனக்கு சொர்க்கம்.

  பத்திரிக்கையாளர்களே, கட்சியே உயிராய் நினைத்து பாடுபட்டு வளர்த்த கட்சியின் தலைமை, சில புல்லுருவிகளின் கைப்பாவையாய் மாறி, உண்மை தொண்டர்களை எப்படி எல்லாம் அவமானப்படுத்தினார்கள், ஓரம் கட்டினார்கள் என்பதை
  விவரமாய் சொல்லுகிறேன்.

  பி.கு பொன்ஸ், சீக்கிரம் சூட்கேஸ்களுடன், மருத்துவமனைக்கு வாருங்கள்.


 79. rv said...

  ஒரு முக்கிய மகிழ்ச்சிகரமான அறிவிப்பு

  ஆன்மிகச் செம்மல், பல்மொழி வித்தகர், சகலகலா சத்வகுண பாரதி திரு. குமரன் அவர்கள் இன்றும் முதல் நம் லட்சிய இயக்கமான ப.ம.க வில் இணைகிறார். அவரை வட அமெரிக்க (மத்திய) கொள்கைப் பரப்புச் செயலாளராகவும், நம் ஆன்மிக அணியின் இணைத்தலைவராகவும், செந்தமிழ் வளர்ப்புக் குழுவின் தலைவராகவும் நம் தலைவர் அன்புமிகுதியுடன் நியமித்துள்ளார்.

  நாளை முதல் குமரன் அவர்களும் கட்சிப்பணியில் ஈடுபடுவார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

  இத்தகைய பெருமைமிக்க மூத்த அரசியல் தலைவர் நம் கட்சியின் பலத்திற்கு மேலும் வலுசேர்ப்பார் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. திரு.குமரன் அவர்களை நம் கட்சியின் தொண்டர்கள் சார்பாக வருக வருக என்று வரவேற்கிறேன்.


 80. இலவசக்கொத்தனார் said...

  நம்கழகத்தின் வலுசேர்க்க வந்திணையும் கூடலாரை வருக வருகவென வரவேற்கிறோம். வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்.

  வந்தார் குமரன் வழிகாட்டியாய் நம்மிடையே
  தந்தார் நமக்கெல்லாம் தம்திறனே - இந்நாளில்
  எங்களை ஏளனமாய்ப் பார்த்தவர் மூக்கறுத்தே
  சங்கத்துள் சங்கமிக்க வா


 81. குமரன் (Kumaran) said...

  கொத்தனாரே.

  சங்கமிக்க வா என்று அழைக்கிறீரா இல்லை சங்கமிக்கவா? என்று கேட்கிறீரா? புரியவில்லையே???


 82. இலவசக்கொத்தனார் said...

  இவ்வளவு பட்டங்கள் கொடுத்த மருத்துவர், உமக்கு சிலேடைச் செல்வர் என்ற பட்டத்தை கொடுக்காமல் விட்டுவிட்டாரே.

  முதலில் உம்மை சங்கமிக்க வா வென்று அழைக்கிறேன். நீங்கள் வந்து இங்கு செம்மொழி சங்கம் நிறுவித் தமிழ் வளர்க்கும் பொழுது அச்சங்கத்தில் சங்கமிக்கவா எனக் கேட்கிறேன்.

  சரிதானா?


 83. rv said...

  பெருமதிப்பிற்குரிய உஷா அக்கா,
  சுண்டுவிரல் சுளுக்கு உபாதையிலிருந்து விடுபெற்று விரைவில் நீங்கள் நலமடைந்துவர எல்லாம் வல்ல தமிழ்க்கடவுள் கந்தனை வேண்டுகிறேன். இத்துயரச் செய்தியைக் கேட்டவுடன் தலைவர் துடிதுடித்து போய்விட்டார். உடனே அமெரிக்காவிலிருந்து டிக்கட் போடு உஷா அக்காவை பார்த்துவிட்டு வந்தால்தான் தனது மனது நிம்மதி பெறும் என்று கலங்கினார். நாங்கள் தான் அவரை பாதுகாப்புக்காரணங்களுக்காக (குறிப்பாய் சில தீவிரவாதி எதிர்க்கட்சியினர் சூழ்ச்சியில் ஈடுபட்டிருக்கும் இந்நேரத்தில் இப்பயணம் அவர்களுக்கு இது சாதகமாக அமையும் என்று கூறி) மிகவும் சிரமப்பட்டு தடுத்தோம். மேலும், உங்கள் சுளுக்கை பற்றி கேள்விப்பட்டவுடன், ஆயிரக்கணக்கான கழகக் கண்மணிகள் நம் கட்சி அலுவலகத்தின் முன் கூடி கூட்டுப் பிரார்த்தனை செய்து, கற்பூரமாக தங்களையே கொளுத்திக் கொள்ள துடித்தனர். நான் தான் அவர்களையும் உங்களுக்கு இந்தமாதிரி பிற்போக்கு பழக்கங்களைக் கண்டால் பிடிக்காது என்று கூறி சமாதானப்படுத்தினேன். ஆனால், உங்களைக் காணாமல் தலைவரின் மனம் ஆறாது. எங்களுக்கெல்லாம் சொல்லாமல் விரைவில் உங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற வந்தாலும் வருவார். தயாராக இருங்கள். பத்துகோடி பேரின் பிரார்த்தனை வீண்போகாது. விரைவில் நலமடைந்து பழைய உற்சாகத்துடன் நலம் பெற்று திரும்ப வாருங்கள்.

  தங்களின் மன உளைச்சலை பற்றி தலைவரிடம் தெரிவித்தேன். அதற்கு இத்தகைய மூத்த உறுப்பினர்களை வருத்தப்படவைக்கலாமா என்று என்னை கடிந்துகொண்டதோடு, இத்தகைய தவறு இன்னுமொரு தொண்டனுக்கு கூட நிகழக்கூடாது என்று உறுதிமொழி வாங்கிக்கொண்டார். அவ்வாறு நிகழாமல் இருக்க எழுச்சித்தொண்டர் நலவாழ்வு கமிட்டி மற்றும் வழுக்கிவிழுந்தோரை வாழவைக்கும் கமிட்டி என்று இரு புத்தம்புதிய கமிட்டிகளை உருவாக்க உத்தரவிட்டுள்ளார். யாரைத் தலைவராய் போடலாம் என்று நான் வினவவே, ஒரு நொடியும் தாமதியாமல், உங்கள் பெயரை முன்மொழிந்து, ஏனைய தொண்டர்களின் உரிமைகளை பாதுகாக்க நம் அறியாத்தவறால் பாதிக்கப்பட்ட உங்களைவிட சிறந்த நிர்வாகி கிடைக்கமாட்டார் என்றும் கூறினார். மேலும், நம் கட்சியின் வளர்ச்சியில் பெரும்பங்கு வகிக்கும் இலக்கிய அணியின் தலைவியாகவும் தங்களை நியமிக்க உத்தரவிட்டு, அதுபின்னர் பொதுக்குழுவாலும் ஒருமனதாக ஒத்துக்கொள்ளப்பட்டுள்ளது. நீங்கள் பணம், பதவி, காரில் மயங்குபவர் அல்ல என்று தெரிந்திருந்தாலும், இதைச் சொல்ல கடமைப்பட்டுள்ளேன். பதவிக்கு ஒன்றாக மூன்று புத்தம்புதிய ஹோண்டா அக்கார்ட் (A/C: No Hand Signal) கார்கள் மற்றும் உங்களுடைய மூன்று பி.ஏ க்களுக்கு டாடா சுமோக்களும் வழஙக் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

  களப்பணியை இப்போதைக்கு மறந்துவிடுங்கள். சுண்டுவிரல் சுளுக்கு முற்றிலுமாக குணமடையும் வரையில் முழுஓய்வு எடுங்கள். தலைவர் தன் ப்ளோரிடா பழத்தோட்டங்களிலிருந்து ஆரஞ்சுகளும் ஆப்பிள்களும், தன்னுடைய கலிபோர்னியா தோட்டங்களிலிருந்து திராட்சை பழங்களும் தலா நூறு டன் உடனடியாக உங்களுக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளார். பெனாத்தலாரின் தோட்டத்திலிருந்து பேரிச்சம்பழங்களும் அன்புச்சின்னங்களாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. கட்சியின் ஸ்விஸ்ஸாபுரம் பண்ணையிலிருந்த்து பத்து உயர்ரக பசுமாடுகளும் இன்றிரவு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கட்சிவிசுவாசத்தின் அடையாளமாக ஸ்மித்க்லைன்-பீச்சம் கம்பெனிகாரர்கள் வாழ்நாள் முழுதும் தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் ஹார்லிக்ஸ் பாட்டில்கள் அளிப்பதாகவும் உறுதிமொழி அளித்திருக்கிறார்கள். மேலும் மருத்துவச் செலவுகள் அனைத்தையும் கட்சியே ஏற்றுக்கொள்வதென பொதுக்குழு முடிவெடுத்துள்ளது. ஏனென்றால், தொண்டர்களின் ஆரோக்கியம் கட்சியின் ஆரோக்கியமாகும் என்பதை உணர்ந்தது நம் இயக்கம். இந்த அரசியல் சர்ச்சையில் இப்போது மேலும் மனதை புண்ணாக்கிக்கொள்ளாதீர்கள். விரைவில் நலம் பெறுங்கள். பெற்று வந்து உங்களுக்கு நிகழ்ந்த அறியாத்தவறு வேறு யாதொரு தொண்டர்க்கும் நிகழாமல் அவர்களின் உரிமையைக் காத்திடுங்கள் என்று வாழ்த்துகிறேன்.

  //பி.கு பொன்ஸ், சீக்கிரம் சூட்கேஸ்களுடன், மருத்துவமனைக்கு வாருங்கள்.//
  வருத்தத்திலும் தங்களின் ட்ரேட் மார்க் நகைச்சுவையையும், நக்கலையும் மறக்காமல் இருக்கிறீர்கள் என்பது உற்சாகத்தை அளிக்கிறது. அவங்க நிலைமையே பிச்சையெடுத்தானாம் பெருமாளுன்னு இருக்கு. அங்க போய்..


 84. இலவசக்கொத்தனார் said...

  உஷாக்கா,

  விரைவில் நலம் பெறுவீர்.

  நுனிப்புல் எனப்பதிவு நூற்றிடும் நீங்கள்
  தனித்து இருப்பதும் சரியோ - இனிமேலும்
  தங்கள் தடைகள் தவிர்த்திங்கு மீண்டும்நம்
  சங்கத்துள் சங்கமிக்க வா


 85. ஜெயஸ்ரீ said...

  //ஆல்போலத்தழைத்திட வாழ்த்தும் பம்பாய் ஜெயஸ்ரீ //

  பெனாத்தலாரே, நான் என் வாழ்க்கையில் பம்பாய் பக்கம் போனதே இல்லையே. நீங்க யாரை சொல்றீங்க?? நான் தமிழ்மணத்துக்கு கொஞ்சம் புதுசு. வேற எங்கயும் எதுவும் எழுதியது இல்லை.


 86. பொன்ஸ்~~Poorna said...

  உஷாக்கா, எந்த ஆஸ்பத்திரில இருக்கீங்க??


 87. பொன்ஸ்~~Poorna said...

  ஆஹாஹா.. கட்சியின் கட்டுரிமையைப் பார்..

  உறுப்பினர் இருக்கும் இடம் கூடத் தெரியவில்லை..

  ஜெயஸ்ரீ, பத்தோட பதினொணணா, இன்னோரு ஜெயஸ்ரீயா நீங்க ப.ம.க ல இருக்கணுமா? எங்க கட்சில ஒரு ஜெயஸ்ரீ கூட இல்லை.. நீங்க வந்த ஒரே ஜெயஸ்ரீயா இருப்பீங்க..


 88. ஏஜண்ட் NJ said...

  ராம்ஸ்,
  சூறாவளி அடித்துச் சென்ற (உங்கள்) தலைவர் மாஸ்க்கார் அவர்களைக் யாம் கேட்டதாகக் கூறவும்.

  இவண்
  ஞான்ஸ்
  Agent 8860336


 89. இலவசக்கொத்தனார் said...

  த.தா, என் ர.ம.த அவர்களே,

  சும்மா இப்படி எல்லாம் பேர் வெச்சுக்கணும். மைசூர் போண்டா என்ன அங்கயிருந்தா வருது? இந்த மாதிரி ஊர் பேரு வெச்சுக்கிட்டாத்தான் ஒரு முழு அரசியல்வாதி ஆக முடியும்.

  அதுவும் இல்லாம உங்க பேருக்கு முன்னாடி பாம்பேன்னு சேர்த்துப் போட்டா கூட்டம் பிச்சுகிட்டு வராது? அதான்.

  பிடிக்கலைன்னா சொல்லுங்க. என்ன வேணுமோ போடறோம்.


 90. ramachandranusha(உஷா) said...

  பொன்ஸ், கார்த்திக்கு ஆன கதி எனக்கும் ஆகிவிட்டதோ என்று பயந்தே போனேன். சில வல்லூறுகளின் பார்வையில் படாமல் இருக்க, இந்த ஆஸ்பத்திரியில் அடைகலம் ஆகியிருக்கிறேன். விரைந்து வருக,


 91. ramachandranusha(உஷா) said...

  பார்த்தாயா உ.பியே, ர.ரவே! திராட்சை தோட்டமாம், ஆரஞ்சு, ஆப்பிள் பேரிச்சை தோட்டங்களாம், வரிசையாய் பவனி வருகின்றன. எப்படி கிடைத்தது அவை? எங்குருந்து வந்தது? "கிடைத்தவர்கள் பிரித்துக் கொண்டார், கொடுத்தவர் தெருவில் நின்றார்" என்ற ஐயன் திருவள்ளுவர் வாக்கு பொய்த்துவிடுமா என்ன? குளிரூட்டப்பட்ட
  ண்டி தருகிறார்களாம், உடல் நலம் சரியாகும் வரை இப்பக்கம் வராதே என்கிறது கழக தலைமை. என்ன பொருள் தெரியுமா? உடல்நலம் சரியாகி திரும்பி வரக்கூடாது என்ற தீய எண்ணம் தம்பி தீய எண்ணம்.
  பொறுத்தது போதும் பொங்கி எழு! ஆண்டாண்டு அழுதாலும் மாண்டார் திரும்ப வருவாரோ! (?), பதவியையும், பொருளையும் தருவதாய் ஆசைக் காட்டி, நம்மை களப்பணிக்கு பயன்படுத்திக் கொள்ள திட்டமிடுகிறது குள்ள நரி கூட்டம்.
  மயங்காதே! பாசமிகு, தாயுள்ளம் கொண்ட பொன்ஸ் அழைக்கிறார். பதவியும், பொருளுமா நமக்கு பெரியது? கடுகி வா,
  விரைந்து வா! நாட்டுக்கு நலமென உழைக்கும் அன்பு உள்ளங்களுக்கு அடிப்பணிவோம், வீணர்களும் சாகச பேச்சை துச்சமென உதறி தள்ளுவோம்.


 92. இலவசக்கொத்தனார் said...

  //உறுப்பினர் இருக்கும் இடம் கூடத் தெரியவில்லை.. //

  இதை சொல்லற ஆளுங்களைப் பாருங்கப்பா. சுண்டு விரலில் சுளுக்கு என்றவுடன் அதிர்ச்சியுடன் சென்ற பார்த்த கழகக் கண்மணிகள் எங்கே. எங்கே இருக்கிறீர்கள் என அறிவதற்கும் கழகத்தை நம்பி இருக்கும் சிறு நரிகள் சங்கம் எங்கே.

  உஷாக்கா, இன்னுமா சந்தேகம் உங்கள் நலனில் யாருக்கு அக்கறை என்று?


 93. பொன்ஸ்~~Poorna said...

  ஆகா!!! உஷாக்கா.. எங்கக்கா இருக்கீங்க??!! எங்கே நான் உங்களைச் சந்தித்து விடுவேனோ, நம் அன்பின் அணி உருவாகி விடுமோ என்று ப. கட்சியினர் என்னைத் திசை திருப்புவதை எங்ஙனம் முறியடிப்பேன்..

  அக்கா.. இப்போதே சொல்லுங்கள்.. உங்கள் சுட்டுவிரல் வலி தீர்க்க சயன்டிஸ்ட் ஜொள்ளுப் பாண்டியுடன் நான் உங்களைத் தேடி காற்றினும் கடுகி வந்து கொண்டிருக்கிறேன்..

  தலைவர் கைப்புவும் கழகப் போர்வாள் தேவும் தமிழ்னாட்டின் எல்லையில் உங்களை வரவேற்க மாலை, மரியாதை, க்ரெடிட் கார்டோடு தயாராக இருக்கிறார்கள்... தமிழ்நாட்டின் எந்தத் தொகுதி வேண்டும்? மகளிர் முன்னேற்றப் பணிகளின் மந்திரியாக வேண்டுமா, இல்லை என்றும் செல்வம் கொழிக்கும் நிதித்துறை வேண்டுமா எனக் கேட்டனுப்பினார் எங்கள் தன்மானத் தளபதி சிபி.. வருக வருக அக்கா

  உங்கள் நுனிப்புல்லில் இருக்கும் பனியைப் பெரிதாக்கி, ஏற்கனவே மீனம்பாக்கத்தில் ஆளுயர கட் அவுட் வைத்தாகிவிட்டது


 94. ஜெயஸ்ரீ said...

  அம்மா பொன்ஸ் அவர்களே,

  மெய்வருத்தம் பாராது, பசி நோக்காது, கண் துஞ்சாது கருமமே கண்ணாக இரவு பகலாக கட்சிப்பணியாற்றிய களைப்பில் எம் தலைவர் பெனத்தலார் சிறிது அசந்திருக்கலாம். இருக்கும் கோடானுகோடி தொண்டர்களில் என்னை அடையாளம் காண்பதில் சிறு தவறு நேர்ந்திருக்கலாம். அதைப் பயன்படுத்தி உங்கள் தலைவர் மொழியில் சொன்னால் 'குதூகலமா இருக்கும் எங்கள் குடும்பமாம் கழகத்தில் கும்மியடித்து' பிரிக்க நினைப்பது அடுக்குமா? அய்யகோ !! நெஞ்சம் பதைபதைக்கிறதே.

  எம் தலைவர் இந்த சிறு தவறு கூட இழைப்பதைப் பொறுக்காமல்தான் அதை சுட்டிக்காட்டினோம். உடல் மண்ணுக்கு, உயிர் எம் கட்சிக்கு . இருக்குமிடம் பம்பாயாக இருந்தாலென்ன, புஞ்சைபுளியம்பட்டியாக இருந்தாலென்ன.


 95. Iyappan Krishnan said...

  உடன்பிறப்பே

  இங்கே நமது கட்சியான பமக வைப் பற்றி பலர் பலவாறாகத் திரித்துக்
  கூறுகிறார்கள் . ஏன் கூறுகிறார்கள் ?? யோசித்துப் பார்த்தால் பழுத்த மரம்
  கல்லடி படத்தான் செய்யும் என்று தெரிகிறதல்லவா ?

  எதிர்கட்சி தலைவர் பேசினால் பொறிப் பறக்கும் என்று சொன்னார்கள்
  ஆஹா அப்படி என்ன பேசப் போகிறார் என்று நான் சென்று பார்த்தேன்
  என்னவாயிற்று என்று சொல்லவே சிரிப்பு வருகிறது. எதிர்க் கட்சி தலைவர்
  பேசும் போது அவர் கட்சி தண்டர்கள் மூட்டை மூட்டையா பொரி வைத்துக்
  கொண்டு காற்றில் பறக்கவல்லவா வைத்துக் கொண்டு இருக்கிறார்கள்..


  அவர்களுக்கெல்லாம் ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.

  கடல் ஓரத்தில் நின்று கடலை போடலாம்
  ஆற்றின் ஓரத்தில் ஆறு(6) கூட போடலாம்
  குளத்தின் ஓரத்தில் உங்களால் குளத்தைப் போட முடியுமா ?

  விளக்கெண்ணையை விளக்கில் ஊத்த முடியும்
  கடலெண்ணையை கடலில் ஊத்த முடியும்
  சீமெண்ணையை எந்த சீமையில் ஊத்த முடியும் ?


  அடிக்கடி உள்ளே தூங்கிக் கொண்டு இருக்கும் மிருகத்தை எழுப்பாதீர்கள்
  என்று உளறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் கேட்கிறேன்.. பிள்ளையார்
  எறும்பெல்லாம் எப்போது மிருகத்தின் வரிசையில் சேர்ந்தது என்று

  இன்னொன்றும் சொல்லிக் கொல்கிறேன்

  என்னுள் தூங்கிக் கொண்டிருந்த சிங்கத்தை இரவில் தட்டி எழுப்பி விட்டீர்கள் அது இப்போது கொட்டாவி
  விட்டுக் கொண்டு மறுபடி தூங்கச் செல்கிறது.


  எங்கள் கழகத்தினர் மரத்தை வெட்டியதாக குறை கூறுகிறீர்கள். உங்கள் வீட்டில் காஸ் அடுப்பு
  இருக்கும் திமிர் தனம் இதில் இருந்தே தெரியவில்லையா ?? நாங்கள் என்ன வெட்டிய மரத்தை
  எங்களுடனே கொண்டு செல்கிறோமா ?? அங்கிருக்கும் ஏழை மக்களுக்கு அடுப்பெரிக்க விறகாக தானே விட்டுச் செல்கிறோம் அதில் எத்தனை மக்கள் பயணடைகிறார்கள் என்பது தெரியுமா ?

  அடுத்து ரோடுகளை சேதப் படுத்துகிறோம் என்பது,

  நாங்கள் ரோடுகளை சேதப்படுத்தாமல் இருந்தால் எத்தனை சாலைப் பணியாளர்கள் வேலை யின்றி இருப்பார்கள் என்பதை நினைத்து பார்க்காமல் எங்கள் மேல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசுவதை விட்டு விடுங்கள் கவிழ்க்கும் போது உள்ளே ஒன்றுமில்லை என்று உங்கள் கட்சிக் காரர்களுக்கும் தெரிந்து விடும்


  தலைவரை காணவில்லை என்று அடிக்கடி புகார் கூறிக் கொண்டிருக்கிறீர்கள். அந்தி மழை நேரத்து மந்திப் போல அவர் என்ன மரத்தடி இல்லை குப்பைத்தொட்டி என்று ஒதுங்கிக் கொண்டிருக்கிறார் என்றா நினைத்திருக்கிறீர்கள்


  அந்திமழை மந்தியா எந்தலைவர் கேளாயோ
  செந்தமிழா தந்திரமாய் சீயென்றாய் - பந்தியில்
  முந்திடும் உம்பெருமை மொத்தம் உரைத்திடிலோ
  சந்தி சிரித்திடும் பார்


  தலைவர் பதவி வேண்டாம் எனக்குத் தம்பி நீ பெற்றுக் கொள் என்று எத்தனை தடவை என்னை வேண்டியும் தலைவனுக்குறிய மரியாதை தரவேண்டுமே என்று அதை அவருக்கே தந்து விட்டு கொ.ப.செ பதவியும் மற்றும் பொருளாளர் பதவி மட்டும் தாருங்கள் என்று கேட்டதற்கே தந்தேன் தந்தேன் என்று தந்த எம் தலைவனை பற்றி குறைக் கூறும் கூட்டத்தினரே உம் கரை வேட்டி மீது கறை படும் நாள் வெகுதூரமில்லை


  அந்தக் கூட்டத்தில் ( சங்கம் என்று சொல்லவே நா கூசுகிறது ) நான் சேர அனுப்பிய கடிதம் வைத்து என்மீது தாக்குதல் நடத்த வருவீர்கள் என்று தெரியும். அது என் வாழ்வின் கருப்பு நாள் .. விண்ணில் வட்ட மிட்ட கழுகை .. வாய்பிளந்த ஓணானை.. சுற்றித் திரியும் நண்டை நான் காணாமல் விட்டு விட்டேன்.. என் உண்மையானக் கண்ணை திறந்து வைத்து என்னை அன்புடன் ஏற்ற என் உடன்பிறப்பு.. அருமை சிங்கம் தலவருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொல்கிறேன். கழகத்தில் எத்தனை பிரச்சினை வந்தாலும் பொருளாளரிடம் கேள்வியே கேட்க மாட்டேன் என்று சொன்ன என் தானைத்தலைவனை நம்பாமல் உங்களிடம் வந்து மாட்டுவேன் என்று கனவிலும் நினைக்க மாட்டீர்கள்  தலைமைக்கு வைக்கும் வேண்டுகோள் ஒன்று மட்டுமே பினாத்தலாரின் தவறுகளை மன்னித்து அவரை கட்சியில் இணைத்துக் கொள்ளுங்கள்


  எதிர் கட்சிக்கு கடைசியாக ஒன்று மட்டும் சொல்லிக் கொல்கிறேன்


  "ஒண்டிக்கு ஒண்டி என் தலைவர் கூட வரியா ?? "


  அன்புடன்
  கடைமடைத் தொண்டன்

  பி.கு 1: நூற்றைம்பதாவது பதிவைத் தொட்ட மருத்துவருக்கு வாழ்த்துகள்

  பி.கு 2 : வ.வா.ச மக்கள் வருத்தப் படவேண்டாம்.. என்னை பொருட்டாக மதிக்காமல் ரொம்பவும் இழுக்கடித்து பின்பு பலரிடம் சிபாரிசு கடிதம் வாங்கிக் கொண்டு வந்த பிறகும் என்னை துச்சமாக மதித்த உம் சங்கத்தலைமையின் நடத்தை என்னை மிகவும் வேதனையுறச் செய்கிறது.. நீங்களும் நானும் உடன் பிறப்புகள் போல.. வாருங்கள் எங்கள் ஜோதியில் ஐக்கியமாகிக் கொள்ளுங்கள்

  பி.கு 3 : கடைசியாக வந்த பேக்ஸ் தகவலின் படி .. ஆயிரம் வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் தலைவர் கல்யாணம் செய்து வைப்பதாக உறுதி அளித்துள்ளார்.


 96. ஜெயக்குமார் said...

  தனிச்சி நின்னு வெற்றிபெறத்
  துணிவு இல்ல, துப்பும் இல்ல,
  இதுல வெட்டி வீராப்புக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல.

  மொள்ளமாரி, கேப்மாறி மாதிரி
  இவர்கள் தேர்தலுக்கு தேர்தல் கூட்ட்ணி மாறிகள்.


 97. senthil said...

  96


 98. senthil said...

  97


 99. senthil said...

  99


 100. senthil said...

  100 ‌ அப்பாடா 150தாவது பதிவுல 100வது பின்னூலட்டம் என்னது.


 101. குமரன் (Kumaran) said...

  அன்பர்களே. நண்பர்களே. இமயமலையில் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதால் தற்போதைக்கு இங்கே வந்து என் ஆதரவைச் சொல்லி அறிக்கை இட இயலவில்லை. அதற்காகத் தான் இந்த குறு அறிக்கை. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன் என்று சொல்லி எல்லாம் வல்ல எம்பெருமானை வணங்கி விடைபெறுகிறேன். வணக்கம்.

  எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்.
  இல்லாமை இல்லாத நிலை வேண்டும்.


 102. பொன்ஸ்~~Poorna said...

  முடியலைய்யா முடியலை..
  உங்க பதிவத் திறந்து, பின்னூட்டம் போட முடியலை.. கம்ப்யூட்டர் நாக்கு வறண்டு தொங்குது..

  ஜீவா, பாத்திங்களா.. உங்க அறிக்கைக்கு இவங்க இன்னும் பதில் சொல்லவே இல்லை.. அத்தோட, இங்க பாத்தீங்கன்னா, உங்க பின்னூட்டம் 94ஆவது ஆய்டிச்சு.. நம்ம பதிவுல, 39 தான்.. எப்படி, உங்களை இன்னும் முதல் நிலைல வச்சிருக்குற எங்க கட்சிக்கு வர்றது தான் நல்லதுன்னு உங்களுக்குப் புரிஞ்சிடுச்சுன்னு எங்களுக்குத் தெரியும்.

  நாலு சூட்கேஸ் நிறைய வெண்பாவோட, இதோ உங்க வீட்டுக்கு வந்துகிட்டே இருக்கேன்..

  ஆமாம், பினாத்தலாருக்கும் ப.ம.கவுக்கும் என்ன பிரச்சனை? தெரியாம போயிடுச்சே..

  இராமனாதன், புளியம்பட்டி ஜெயஸ்ரீயைக் கேட்டதாகச் சொல்லவும்.. (கட்சிக்கு இல்லைய்யா.. சும்மா நல்லா இருக்காங்களான்னுதான்.. )


 103. rv said...

  கொத்ஸு,
  ஆன்மிக சூப்பை வாழ்த்திப் பாவா? கலக்கல். குமரன் கைவண்ணத்தில் கழகம் கண்டிப்பாய் மேலும் வலுபெறும் என்பதில் சந்தேகம் இல்லை.


 104. rv said...

  சிலேடைச் செம்மல் குமரரே,
  சங்கமிக்க வேற ஆள் கிடைக்கலியா உமக்கு? :P


 105. rv said...

  தங்கத்தாரகையே,
  பினாத்தலார் அப்பப்போ இப்படி பினாத்துவார். அதுதான் அவர் ட்ரேட்மார்க். கண்டுக்க கூடாது.


 106. rv said...

  பொன்ஸு தங்கச்சி,
  எங்க கட்சி விவகாரத்த நாங்க பாத்துக்கறோம். நீங்க கவலைப்படாதீங்க. முதல்ல ஒருத்தர்ரொருத்தர உங்க சங்கத்துலேர்ந்து கழண்டு இங்க வந்துகிட்டிருக்காங்க. அதப் பத்தி கவலைப்படுங்க. ஜிரா, குமரன், ஜீவா ன்னு வரிசையா வந்தாங்க. இன்னும் வருவாங்க. முடிஞ்சா அதுக்கு ஏதாவது செய்யுங்க.


 107. rv said...

  வாய்யா ஏஜெண்டு,
  கட்சிவேலை இவ்ளோ கிடக்குது. பொறுப்பில்லாம ரெஸ்ட் எடுத்துட்டு வரீரு. நாரதர் வேலை பாக்கவேணாமா அவங்களுக்கு எதிரா?


 108. rv said...

  உஷாக்கா,
  நாங்களும் பொறுத்து பொறுத்துப் பார்த்தோம். இனி நடக்கிற காரியமாக தெரியவில்லை. உண்மைகளைப் பொதுவில் சொல்லவேண்டிய தருணம் வந்துவிட்டது.

  தீடீரென்று சுளுக்கு வலி வந்து மருத்துவமனையில் சேர்ந்தது எதற்கு என்று எங்களுக்குத் தெரியாதா? வருமானவரித்துறை தன் கடமையைச் செவ்வனே செய்யும். கட்சித்தொண்டர்கள் இரத்தத்தை சிந்திசேர்த்ததை நீங்கள் லவட்டியதெற்கெல்லாம் எங்களிடம் ஆதாரங்கள் உள்ளன.

  மத்தியகிழக்கெங்கும் பேரிச்சைத்தோட்டங்கள், வெள்ளைமாளிகை, சொகுசு கார்கள் மற்றும் உலகெங்கும் முக்கியமாக தென் தமிழ்நாட்டில் வாங்கிப்போட்ட ஏக்கர்கள் என்ன கணக்கு? உங்கள் பெயரிலில்லாமல், சமயோசிதமாக நகைக்கடைகளாய் வீட்டில் அடுக்கிவைத்திருப்பது என்ன கணக்கு? கட்சியின் பெயரைத் தவறாக பயன்படுத்தி வீட்டு உரிமையாளர்களை மிரட்டி அடிமாட்டுவிலையில் வாங்கியதெல்லாம் என்ன கணக்கு? சிற்றிலக்கியவாதிகள் உங்கள் பெயரைக் கேட்டாலே தலைதெறிக்க ஓட என்ன காரணம்? மேலே, கீழே பக்கவாட்டிலே என்று நீங்கள் வாங்கித்தள்ளியதுதானே? இன்று கட்சியின் கஜானாவையே பாதியாய் கரைத்துவிட்டு இங்குவந்து வறுமைப்பாட்டா? இவற்றை வெளியிடக்கூடாது என்று தலைவர் அன்புடன் கூறினார். ஆனால் பொதுக்குழு தான் தாய்மாட்டின் இரத்தத்தைப் பாலாய் கவர்ந்துவிட்டு இன்று தாயை விற்கவே கசாப்புக்கடையிடம் விலை பேசும் நரிகளின் வண்டவாளங்கள் வெளியில் வந்தே ஆகவேண்டும் என்று முடிவெடுத்தது.

  இது சிறு பகுதிதான். இடத்தைக் காலி செய்துவிட்டு, கொடுக்கப்பட்ட ஹோண்டா அக்கார்ட்கள், வீடு, பி.ஏ க்கள், 90-காலத்து அம்பாசிடர் (அதுவும் கட்சிப்பணம் தானே?) எல்லாவற்றையும் கணக்குடன் பொருளாளரிடம் ஒப்படைத்துவிட்டு அந்தச் சங்கத்தில் போய் விடுங்கள். இவ்வகை நன்றிகெட்டவர்கள் எங்களுக்குத் தேவையில்லை. அங்கே போய் எங்களை பார்த்து வாலாட்டினால் மேலும் திடுக்கிடும் உண்மைகளை வெளியிடுவோம்.


 109. rv said...

  பொன்ஸு,
  உங்கள் அக்காவை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். மேலே சொன்னதுதான் நன்றிகொன்றவர்களுக்கு எங்கள் இயக்கத்தில் இடமில்லை.


 110. rv said...

  சொல்லின் செல்வரே, வெண்பா வித்தகரே எழுச்சி ஜீவாவே
  வருக வருகவென்று வரவேற்கிறேன். இன்று முதல் நீங்கள் பெங்களூர் வட்டச் செயலாளர் என்று நம் தலைவர் பணித்துள்ளார். அப்பதவிக்கு மெருகூட்டி, கட்சிப் பணியில் குள்ளநரிகளுக்கெதிராய் களத்தில் குதியுங்கள்.

  அன்பு அண்ணன் கோ. இராகவனுக்கு அவரின் கட்சிப்பாசத்தை மெச்சி இன்றுமுதல் கர்நாடக மாநில கொ.ப.செவாக பதவியுயர்வு அளிக்கப்படுகிறது.


 111. rv said...

  ஜெயக்குமார் சார்,
  ஏன் சார் திட்டறீங்க? அமைதியாச் சொல்றோம். எங்க கட்சிய பகைச்சுகிட்டா லண்டனுக்கு ஆட்டோ வரும். உங்க கவிதை எதிர்த்து நாளைக்கு ஐரோப்பாவின் முக்கிய நகரங்களில் கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டாம் நடக்கும்.


 112. rv said...

  செந்தில்,
  100 அடிச்சதுக்கு வாழ்த்துகள். நூறாவதா வந்தா கருத்து சொல்லவேணாமா? நம்பர் மட்டும் போட்டுட்டு போனா எப்படி?


 113. rv said...

  ஆன்மிக செம்மல் குமரன் அவர்களே,
  இன்றுமுதல் எவரெஸ்ட் கொண்ட குமரன் என்ற பட்டத்தைப் பிடியுங்கள் ஐயா. அறிக்கைவிடாமலும், நீங்கள் எங்கள் பக்கம் வந்ததும் எதிரணியினர் அதிர்ச்சியில் என்ன செய்வதென்று தெரியாமல் விழிக்கிறார்கள். செல்வனையும் காணவில்லை. எந்த மருத்துவமனையில் இருக்கிறாரோ?


 114. rv said...

  பொன்ஸு தங்கச்சி,
  //முடியலைய்யா முடியலை..
  உங்க பதிவத் திறந்து, பின்னூட்டம் போட முடியலை.. கம்ப்யூட்டர் நாக்கு வறண்டு தொங்குது.. //

  இதுக்கே அசந்தா எப்படி? இப்பதானே நூறுக்கு வந்திருக்கோம்? சங்கத்துல சொல்லி நல்ல கம்பூட்டர் வாங்கறதுதானே? :P

  39 பின்னூட்டம் முக்கி முனகி, அதுவும் ப.ம.கவின் பெயரைப் பயன்படுத்தி வாங்கிருக்கீங்க. வாழ்த்துகள். ஆனா போக வேண்டிய தூரம் நிறைய இருக்கேமா. சுமார் 350 பாக்கின்னு வச்சுக்கோங்க. இன்னும் அம்பதையே தாண்டலை. பமக பின்னூட்ட எலீட் க்ளப்பில் சேரரதுக்கு மினிமம் தகுதியே 75 ஆச்சே.

  புளியம்பட்டியோ, சிலுக்குவார்ப்பட்டியோ. ஜெயஸ்ரீ, ஜிரா, குமரன் -ன்னு தமிழ்வலையின் மொத்த ஆன்மிக பலமும் எங்ககிட்ட தான் இருக்கு. யாரோ ஒருத்தர் சொன்னா மாதிரி "டேய், அந்த ஆண்டவனே எங்க பக்கம் இருக்கான். போடா!"

  பெனாத்தலார் கட்சியின் மூத்த உறுப்பினர். கொ.ப.செ. அவரைப் பற்றி மறுபடியும் அவதூறு கூறினால், அதற்கு தனியாக கேஸ் போடுவோம் என்று எச்சரிக்கிறேன்.

  ஜீவா,
  வாழ்த்துகளுக்கு நன்றி. இவங்க இப்படிதான் வெண்பா பொட்டி அதுஇதுன்னு சொல்லிகிட்டிருப்பாங்க. அதெல்லாம் கண்டுக்காம கட்சிப்பணியை கவனிங்க.


 115. பினாத்தல் சுரேஷ் said...

  ஜெயஸ்ரீ--

  எங்கள் இயக்கத்துக்கு தெம்பாய்
  காற்றடிக்கும் பம்பாய் (Pump)
  கூறவந்தேன் அன்பாய்..
  முடிந்துபோனது வம்பாய்!

  நீங்கள் மும்பை என்று நினைத்தீர்களா என்ன?

  இதத்தாண்டா மண்ணு ஒட்டாத பினாத்தல்னு சொல்லுவாங்க! எல்லாரும் கத்துக்கங்கப்பா!

  மருந்து,

  அவ்வளோ அவசரப்பட்டு உஷாக்கவை ஒதுக்கிடவேணாம்.. இன்னும் அவங்களுக்கு ரெண்டு பக்கமும் கதவைத் திறந்தே வச்சிருப்போம். வார்த்தையக்கொட்டிட்டா அள்ள முடியாதப்பா!


 116. ramachandranusha(உஷா) said...

  ஐயகோ என்ன நடக்கிறது இங்கே, கட்சிக்காகவோ அல்லும்பகலும் உழைக்கும் என் பெயரில் யார் அனுப்பியது போலி கடிதம்? ஏதோ வேலையாய் இருந்துவிட்டதால் இத்தகைய அவதூறுகள் என் பார்வைக்கு வராமல் போய்விட்டன .அத்தை என்று பாசமுடன் அழைக்கும்
  என் அருமை மருமானே, யாரோ அழைத்தார்கள் என்று பதவிக்கும், பொருளுக்கும் மயங்கி, கொள்கையை அடகு வைப்பேனா? வீட்டில் எலிக்குட்டி இருந்தால் பிடித்து
  எலி அட்டையில் ஊர விட்டால், உண்மை தெரிந்திருக்குமே? ஐயகோ, என் பெயரில் போலி கடிதம் அனுப்பிய வேடதாரி யார்?
  ஐயா, இங்கு மட்டுமே என் பெயரில் வந்த மடல்களைக் கண்டும் உங்களுக்கு சந்தேகம் எழவில்லையா? எதிரிகள் முகம் பக்கம்
  எட்டியும் பார்க்காதவள் நான். அப்படியிருக்க, பதவியையும் பொருளையும் தா என்று பகிரங்கமாய் கேட்கும் அவவிற்கு ஈன பிறவியாய்
  போய் விட்டேனே? உடனே சி.பி.ஐக்கு உத்தரவிடுங்கள். யார் அந்த புல்லுருவி என்று கண்டுப்பிடித்து என்னிடம் காட்டுங்கள். மற்றவைகளை
  என் தொண்டர்கள் கவனித்துக் கொள்வார்கள்.
  இப்படிக்கு,
  உண்மை தொண்டள்
  பி.கு இக்கடிதம் உண்மையான ப.ம.க கட்சியின் மூத்த உறுப்பினர் அனுப்பிய கடிதம் என்பதை உறுதிப்படுத்த எலிக்குட்டி சோதனை
  செய்துப் பார்க்கவும்.
  தங்கள் பார்வைக்கு மட்டுமான பி.கு: இன்னும் குளிரூட்டப்பட்ட வாகனங்களும், பேரிச்சை, ஆரஞ்சு, திராட்சை கூடைகளும் வரவில்லையே! கோயம்பேடு வியாபாரிகளிடம் அட்வான்ஸ் வாங்கிவிட்டேன். கொஞ்சம் சீக்கிரம் இதை கவனிக்கவும்.


 117. rv said...

  பெனாத்தலார்,
  நம்ம தங்கத்தாரகை தப்பா நினச்சுக்க மாட்டாங்க. கவலைவேண்டாம். சின்னச் சின்ன கண்ணாமூச்சிகள் கூட இல்லாம சுவாரசியம் இருக்காதே.

  நீங்க சொல்றதும் கரெக்ட் தான். எனக்கென்னவோ வேற ஏதோ போலி வந்து உஷாக்கா பேர்ல வந்து கமெண்ட் போடறார்னு. அதேதான் நடந்திருக்கு. நானும் அவசரப்பட்டுட்டேன். இப்போ, அந்தப் பின்னூட்டத்தை அழிச்சுடறேன்.


 118. ramachandranusha(உஷா) said...

  நன்றி நன்றி என் கள்ளமில்லா உள்ளம் இப்நன்றி நன்றி என் கள்ளமில்லா உள்ளம் இப்பொழுதாவது விளங்கியதே! எதிர் முகாம் இருளடித்துக்
  கிடக்கிறது, அவ்வளவு சுலபமாய் கழக கண்மணிகளை விலைப் பேச முடியுமா? ( ரெண்டு நாளாய்
  வாயில் காத்திருந்து கண்ணு பூத்துப் போனதுதான் மிச்சம்.)பொழுதாவது விளங்கியதே! எதிர் முகாம் இருளடித்துக்
  கிடக்கிறது, அவ்வளவு சுலபமாய் கழக கண்மணிகளை விலைப் பேச முடியுமா? ( ரெண்டு நாளாய்
  வாயில் காத்திருந்து கண்ணு பூத்துப் போனதுதான் மிச்சம்.)


 119. rv said...

  அக்கா,
  மாபெரும் தவறு நிகழ்ந்துவிட்டது. எவ்வளவு பெரிய அநீதி? உங்களைப் பற்றி பொதுக்குழுவிற்கு சந்தேகம் வந்ததே. எலிக்குட்டியை பிடிப்பது கடினமான காரியம் என்பதால் செயல்படுத்தாமல் விட்டுவிட்டோமே. எங்களை மன்னித்துவிடுங்கள். என்றும் உங்கள் தம்பி நான். வெட்டிக்கட்சிகளின் கைக்கூலிகளுக்கு அவதூறு பேசுவதே வேலை. அதைத் தெரிந்திருந்தும், புரிந்திருந்தும், அப்பழுக்கில்லா உங்களைப் பற்றி அவதூறு கூறினேனே. பாவம் பல செய்தேனே. மன்னித்துவிடுங்கள் தாயே! உங்கள் தாயுள்ளம் என்னைப்போன்ற தாழ்ந்தவர்களையும் மன்னிக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது. அந்நம்பிக்கையில் தான் என் வாழ்க்கை இருக்கிறது.

  நன்றி நன்றி நன்றி!

  ------------
  பொன்ஸு, எங்கம்மா ஆளக்காணோம்?


 120. ramachandranusha(உஷா) said...

  நன்றி பொன்ஸ், ராமநாதன் மற்றும் இந்த விளையாட்டை சுவாரசியமாய் கொண்டு சென்ற அனைவருக்கும்.
  ஆனால் எழுத எழுத ஒரு வகையான சோகமும் வருத்தமும் எழுந்தது. இங்கு நாம் அனைவரும் எழுதிய வரிகள் எல்லாமே எங்கோ ஒரு மேடையில் பேசப்பட்டவை மற்றும் பத்திரிக்கையில் எழுத பட்டவை. பதவிக்காக எதையு செய்யலாம் என்று அரசியல்வாதிகள் நாளும் நிரூபித்துவருகிறார்கள். கொள்கை என்பது கேலிக்குரிய வார்த்தையாய் பாவிக்கப்படுகிறது. பதவிக்காகவும், பொருளுக்காகவும்
  யாருடனும் யாரும் கூட்டு சேரலாம். பொது மக்கள் இளிச்சவாயர்களாய் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். படிப்பறிவும் அதனால் ஏற்படும் விழிப்புணர்வும் பெருக, பெருக இத்தகைய கொள்ளையர்கள் கும்பல்கள் குறையும், வரும் காலத்தில் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன், நல்லவர்கள், வல்லவர்கள் நாட்டை வழி நடத்தி சொல்வார்க்கள் என்ற நம்பிக்கையுடன் முற்றும் போடுகிறேன்.


 121. வாய்சொல்வீரன் said...

  innaappaa...aanmigas super staar, venbaa vEndhar, GRaa, ellaarum aalukku 10 kOdi vaangikkittu inga samgamichchaachhaa... innaa ithu... kalikaalam...kalikaalam...


 122. நாமக்கல் சிபி said...

  thavirkka mudiyatha kaaranangalal Valaipathivugal Pakkam vara iyalamal odhungi iruntha naan Kaipponnuvin varugaiyaiyum, avartham arikkaiyaiyum arinthu varunthugiren. Va.Va.Sangam Oru Kudumba amaippaga mari vittathai arinthu en manam vethanai padugirathu.

  Ik kudumba arasiyal seyyum sangathin ethechathigara pokkai kandithu Sangathai vittu veliyeruvathena theermaanithullen.
  Ithaiye En Adippadai Uruppinar ilirunthum vilakkik kollum Rajinama kadithamaga sangath thalaimai Eduthuk kollatum.

  Kumaran Avargalai thodarnthu Naanum Pa.Ma.Ka vil Inaiya Irukkiren Enbathai Magizhchiudan Therivithuk kolgiren.
  Idhu Patriya Virivana Arikkai Oriru vaarathil veliyidap padum.


 123. வாய்சொல்வீரன் said...

  sollunga ippa...

  naamakkal Sibi = munnaal Rajya sabhaa MP?


 124. வாய்சொல்வீரன் said...

  Selviyin kanavar vanthaachchu. atuththu selvanaa? enga avaraik kaaNOm?


 125. Unknown said...

  உஷாக்கா இன்னும் மே 8க்கு இரண்டு வாரமிருக்கு அதுக்குள்ளே நிறுத்திட்டா எப்படி?

  அப்புறம் ராம்ஸ், உங்க ப.ம.க கூட்டத்தைப் பார்த்தா பாவமாயிருக்குன்னு தலச் சொல்லச் சொன்னார். சொல்லிட்டேன்..

  ஆமா உங்களுக்கும் எங்களை மாதிரி கேள்வி கேட்டாப் பதில் சொல்லத் தெரியாதா? பம்முறீங்க...


 126. இலவசக்கொத்தனார் said...

  இல்லாத சங்கத்தை இன்னும் இருப்பதாய்
  பொல்லாத சங்கதி போதிக்கும் கல்லாரே,
  நல்லாராம் சீராவும் நம்மிடையே; எங்கேயும்
  செல்லாத சங்கமே சிரிப்பு


  நம்ம ஜிரா அவங்க பக்கம்ன்னு ஒரு வதந்தியைக் கிளப்பும் சிறு நரியினரை வன்மையாகக் கண்டிக்கிறேன்.


 127. rv said...

  உஷா அக்கா,
  அதுக்குள்ள அலுத்துப்போச்சா? சீரியஸாகிட்டீங்க போலிருக்கு. நீங்க சொல்றத நினச்சு வருத்தமாத்தான் இருக்கு. என்ன செய்யறது. ஓட்டுபோட கூட விட மாட்டேங்கறாங்க. நானும் ஆறு வருஷமா வாக்காளர் அட்டை வாங்க முயற்சி பண்றேன். :((

  கொள்கையா? வேணாங்க. நான் ஏதாவது சொல்லப் போய் அப்புறம் என்னையும் பிராண்ட் குத்தி ஓரத்துல உக்காரவச்சுருவாங்க.

  இந்த வருஷம் சென்னைல கொஞ்சம் வித்தியாசமான வேட்பாளர்கள் நிக்கறாங்கன்னு கேள்விப்பட்டு சந்தோஷமா இருக்கு. ஆனா, பணபலமும், படைபலமும் இல்லாம வெறும் கொள்கைபலம் மட்டும் வச்சிருந்தா தேற முடியுமான்னு சந்தேகமாவும் இருக்கு. சென்னை மாதிரி ஒரு metroல கூட இந்த ஆளுங்களால ஜெயிக்க முடியலேன்னா, அப்புறம் தமிழ்நாட்டை திருத்தறதப் பத்தி பல வருஷங்களுக்கு யாரும் பேசக்கூட முடியாது.


 128. rv said...

  வாய்ச்சொல்வீரன்,
  என்ன அபாண்ட குற்றச்சாட்டு இது? பதவிக்கும் பணத்துக்கும் மயங்குபவர்களுக்கு எங்கள் கழகத்தில் இடமில்லை. இது கொள்கையினால் இணைந்த கூட்டம்னு பலதடவை சொல்லியாச்சே! எழுதுன லெட்டர முழுசா படிங்க. :))


 129. rv said...

  நாமக்கல் சிபி அவர்களே,
  தங்களைப் போன்ற நல்லவர்கள் இருக்கவேண்டிய இடம் அந்த உருப்படாத சங்கமில்லையென்பதை உணர்ந்து எங்களோடு கைகோர்த்து ஓரிலையில் நாட்டை வழித்து திங்க வந்திருக்கிறீர்கள். வருக வருக என்று கழகத்தின் சார்பாக உங்களை வரவேற்கிறேன்.

  அதிகாரப்பூர்வமாக, விரிவான அறிக்கை இன்னும் ஓரிருநாளில் கட்சி வெளியிடும்.


 130. rv said...
  This comment has been removed by a blog administrator.

 131. rv said...

  வாய்ச்சொல்வீரா,
  சிபி முன்னாள் ராஜ்ய சபா எம்.பி யா? அவங்க கட்சிக்காரங்க இன்னும் சிலுக்குவார்ப்பட்டி பஞ்சாயத்து தேர்தல்ல கூட நிக்கலியே? அப்புறம் எப்படி இராஜ்ய சபா? பஞ்சாயத்து ராஜ் சபாவா?


 132. rv said...

  அது யாருங்க செல்வி? அவங்க கணவர் சிபியா? என்ன நடக்குது இங்கேன்னு எங்களுக்கே குழப்பமா இருக்கே? சிபி, இவங்க சொல்றத கேட்டெல்லாம் பதறாதீங்க. போனது போகட்டும்னு கட்சிப்பணில இறங்குங்க.


 133. rv said...

  செல்வனா? அவர் சூப்புக் கட்சி சூடாறிப்போனாலும் அதுலதான் இருப்பேனு எகத்தாளம் பண்றாரு. அவரோட கட்சியின் eponymous தலைவர் குமரனே நம்ம பக்கம் சேர்ந்தாச்சு. ஆனா, செல்வன் வரமாட்டாராம். வலையுலகத்துல ஒரு டி. இராஜேந்தர் மாதிரி. :))


 134. பொன்ஸ்~~Poorna said...

  என்னாச்சு ராமனாதன், யார் வந்தாலும் அது யார்னு தெரிஞ்சாலும் தெரியாட்டாலும் எங்க சங்கத்துக்கு வாங்கன்னு மொபசல் பஸ் கண்டக்டர் கணக்கா கூப்பிடுறவராச்சே நீர்...!!!

  செல்வி யாரா இருந்தா என்ன? கூடவே கோலங்கள் அபி, ஆர்த்தி, தாமரை எல்லாம் கூட உங்க சங்கத்துல தான் இருக்காங்கன்னு சொல்வீங்களா?.. என்னவோ செல்வி யாருன்னு ஆராய்ச்சி நடத்திகிட்டிருக்கீங்க!!!


 135. rv said...

  தேவ் அவர்களே,
  உங்கள் கட்சிக்காரர்களின் நச்சரிப்பு தாங்காமல், சிறிது காலம் எங்கள பெருமதிப்பிற்குரிய அன்பு அக்கா உஷா அவர்கள் செயிண்ட் மாரிட்ஸிலுள்ள (உங்கள் கட்சி டீக்கடை வாங்கிப்போட்ட இடமேதான்!) கட்சியின் விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்து வருகிறார். அப்படியே 'இந்து என்றால் என்ன?' என்கிற ஒரு திகில் படத்திற்கும் 'வ.வ.ச - கதைக்கும் அரசியல் புழுகாணிகள்' என்று ஒரு சமூகத்திரைக்காவியத்திற்கும் திரைக்கதை, வசனம் எழுதி மற்றும் இசை அமைத்துவருகிறார்.

  திரைப்படத்தைப் பற்றி சில செய்திகள்:
  வரும் மே.8 இருதிரைப்படங்களும் பல முன்னணி, பின்னணி நடிகர்கள் நடித்து உலகமெங்கும் திரையரங்குகளிலும், திருட்டு டிவிடிக்களிலும் வெளிவரும். இவற்றை வெற்றிப்படங்களாய் ஆக்க பத்துகோடி ப.ம.க தொண்டர்களும் ஆளுக்கு பத்து டிக்கட் வாங்க வேண்டுமென்று கட்சித்தலைமை உத்தரவிட்டுள்ளது. மேலும் உலகெங்குமுள்ள முன்னூறு கோடி தாய்மார்களும் செல்வி, செல்வன் எல்லாம் பார்த்துவிட்டுபின் சாவகாசமாக திருட்டு டிவிடி பார்த்து பொது அறிவை வளர்த்துக்கொள்ள 210 இன்ச் ப்ளாஸ்மா டிவி், டிவிடி ப்ளேயர், கூடவே 10.1 ஹோம் தியேட்டர் சிஸ்டமும் வழங்கப்படும். சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்று அவதூறு நீங்கள் கிளப்புவீர்கள் என்று தெரியும். அதற்கும் எங்கள் தலைவர் திட்டம் வைத்துள்ளார். வீட்டிற்கு ஒரு பீட்ஸா ஹட் அமைக்கப்படும்.


 136. rv said...

  கொத்ஸு,
  இராகவன் இன்றும் என்றும் நம்ம பக்கம் தான். கூச்சல் போடுபவர்கள் போடத்தான் செய்வார்கள்.

  சிச்சுவேஷன் வெண்பா நல்லா வந்திருக்கு.


 137. rv said...

  பொன்ஸு தங்கச்சி,
  உங்க சங்கத்துல இருக்கற ஆறுபேரையும் போஸ்டர்ல போட்டாச்சு. புதுசா யாராவது வந்து சேரராங்களான்னு பாரு தாயி.

  எங்க கட்சியில தினமும் சேரணும்னு துடிக்கற பலகோடி தொண்டர்களை, சாரி இடமில்லேன்னு சொல்ற நிலைமை வந்தாலும் சேத்துகுனு தான் இருக்கோம். இப்படி அடாது உழைச்சதுனால தான் இன்னிக்கு உலகத்துலேயே பெரிய கட்சின்னு அல்லாரும் ஆடிப்போயிருக்காங்க. சொல்லிட்டேன்.


 

வார்ப்புரு | தமிழாக்கம்