149. என்ன பாத்தேன்?

எதப் பத்தி பதிவு போடணும்னு யோசிச்சே மண்டை காஞ்சிடுச்சு. தலைப்பு ஓண்ணுமே மாட்டலை. அரசியல், எலெக்ஷன்லாம் நமக்கு ரொம்ப தூரம். அதுக்காக பேசாம இருக்க முடியுமா? டேட்லைன் லண்டன் ஸ்டைல்ல இனி போன வாரம் டிவில என்ன பாத்தேன்னு... ஆங்கிலக் கலப்பு ரொம்பவே ஜாஸ்தியா இருக்கும் கண்டுக்கக்கூடாது.

மொதல்ல "டோஹா டிபேட்" - பிபிசி. ஞாயித்துக்கிழமை வந்துச்சு.

கதார்ல நடக்குது இது. ஹார்ட் டாக் புகழ் டிம் செபாஸ்டியன் நடத்தறாரு. ஸ்டுடியோ ஆடியன்ஸ் முன்னாடி முகமது எல்-பாரடை, IAEA வோட தலைவர். எல்-பாரடை சரியில்லேன்னு சொல்லாத ஆளுகிடையாது. அமெரிக்கா, ஐரோப்பா தொடங்கி மத்தியகிழக்கு வரை அவரை திட்டாத ஆளே இல்லை. இதில் ஒரு முஸ்லீம், அரபு நாட்டவரான எல்-பாரடை இப்படி அரயியர்களுக்கு எதிரா வேலை செய்யறாரேன்னு கூட கண்டனங்கள் உண்டு. Friend of Nobody. எல்லாத்துக்கு நடுவுலேயும் வேலை செய்யறாரே. பெரிய விஷயம். ரொம்பவே ஐடியலிஸ்டாக இருந்தாலும், சொன்ன கருத்துகள் ரொம்ப பொறுமையா நிதானமா இருந்தன.

முக்கியமா பார்வையாளர்கள் நிறையப் பேர் இஸ்ரேல், இந்தியா பத்தி கேள்விகள் கேட்கிறார்கள். போன தடவையும் இதுதான் நடந்தது. இஸ்ரேல் பத்தி கவலைப் படுவது அவர்கள் பார்வையில் நியாயமானதாக இருக்கலாம். ஆனால், இஸ்ரேலின் கோணத்தை, deterrent இல்லாமல் இருந்தால் அதன் நிலைமை என்னாகும் என்று சிந்திக்க மறுக்கிறார்கள். இதற்கு பாரடை சொன்னது யோசிக்க வைத்தது. இன்றைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் ப்ரான்ஸுக்கும் பிரிட்டனுக்கும் இடையில் தகராறு வந்தாலும் அணுஆயுத அளவுக்குக் கூட வேண்டாம், conventional war கூட நடக்காது என்பதுதான். ஏனென்றால் ஐரோப்பிய நாடுகள் ஒன்றையொன்றை depend செய்து உள்ளன. பரஸ்பர மரியாதையும், அங்கீகாரமும் தராத நாடுகள் சூழ்ந்திருக்கையில் இஸ்ரேலின் அடாவடித்தனம் புரிந்துக்கொள்ளக்கூடியதாகவே இருக்கிறது என்றும் IAEA வின் வேலை NPT ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டவர்களை கண்காணிப்பது மட்டுமே என்றார்.

இராக் விஷயத்தில் இவரின் குழு அப்போது கண்டறிந்ததை மூன்று வருடங்களுக்கு பிறகு, பல்லாயிரம் பேரைக் கொன்றுகுவித்து, பில்லியன்களை செலவழித்து இப்போது உலகம் உணர்ந்திருக்கிறது. ஒருத்தரை ஒருத்தர் மதிச்சாலே பாதிப்பிரச்சனை குறையும்னு சொன்னார்.

அடுத்தது Bordeaux வில் நடக்கும் அகில உலக மிதிவண்டி பந்தயங்கள். World Track Championships. யூரோஸ்போர்ட்.

இதையெல்லாம் மனுஷன் பாப்பானா என்ற மனநிலையிலிருந்த என்னை ஒரே வாரத்தில் சைக்கிளிங் பிரியனாய் மாற்றிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். போன புதன்மாலை பார்ப்பதற்கு ஒன்றுமில்லாமல், யூரோஸ்போர்ட் எதேச்சையாக கண்ணில் பட்டது. சரி, என்னதான் நடக்குதுன்னு பாப்போம்னு பாத்துகிட்டுருந்தேன். Sprint னு ஒண்ணு. இரெண்டு ரெண்டு பேரா பங்கெடுத்துக்கறாங்க. முதல் ஒரு சுத்து வார்ம் அப் மாதிரி. அப்புறம் ஒரு சுற்று ஸ்ப்ரிண்ட். சர்வசாதாரணமா மணிக்கு அறுபது கி.மீ அளவுக்கெல்லாம் ஸ்பீடு. அதுல எத்தனை ஸ்ட்ராடெஜி அதுஇதுன்னு மலைப்பா இருந்தது. இந்த மாதிரி விதவிதமான போட்டிகள். வர்ணனையாளர்களுக்குத் தான் நன்றி சொல்லணும். எல்லா போட்டிக்கு முன்னாலேயும், விதிகள் என்ன எப்படியெல்லாம் வெற்றி பெறலாம்னு விளக்கமா ஒரு கிராஷ் கோர்ஸ் கொடுக்கறதால பாக்கறச்சே ரொம்பவும் ஆர்வமாக இருக்கிறது.

அடுத்தது Animal Planet - நிகழ்ச்சி பேர் மறந்துடுச்சு. மன்னிச்சுக்கோங்கப்பா.

தாய்லாந்துல ஒரு புத்த மடம். அங்க ஒரு சாமியார் இருக்கார். விவகாரமான ஆளு. மடத்துலலாம் பசுமாடு கன்னுக்குட்டியெல்லாம் வளர்ப்பாங்க. இந்தாளு புலிக்குட்டிங்கள வளக்கறாரு. பதினாறு புலிகள் இருக்கு இதுவரைக்கும். அதுல பலது முழு வளர்ச்சியடைந்த புலிகள். நம்ம சைஸுக்கு ரெண்டு மடங்கு இருக்கு ஒண்ணொண்ணும். மடத்துல இருக்கற குட்டி பசங்கள்லாம் அதுகளோட ஒடிப்பிடிச்சு விளையாடறாங்க. பீடிங்க் பாட்டில்ல புலிக்குட்டிக்கு பால் கொடுக்கறாங்க. புதுசா குட்டி போட்ட நாய்கிட்டேயே போகறதுக்கு எனக்கெல்லாம் நடுங்கும். இந்த சாமியார் என்னடான்னா, குட்டிபோட்ட புலிகிட்டேர்ந்து குட்டிகளை தூக்கிட்டு வந்து புட்டிப்பால் கொடுக்கறாரு. இவரப் பத்தி போன வருஷமும் காமிச்சாங்களாம். அதுலேர்ந்து உலகெங்குமிருந்து நிதியும் உதவியும் வருதாம். அதுனால இப்போ தன்னோட செல்லப்புலி ப்ராஜக்டை இன்னும் பெரிசா செய்யப்போறாராம். புலிகள்லாம் பரமசாதுவா இருக்கறத பாத்தா இப்படி அருமையான மிருகங்களையெல்லாம் கொன்னு குவிச்சுருக்கோமே. இதுவெல்லாம் அடுத்த தலைமுறை வரைக்குமாவது தாங்குமான்னும் வருத்தம் வந்தது. ஆனா போலிச்சாமியார் மாதிரி இந்த புலிச்சாமியார் டைப் ஆளுங்களை பார்க்கையில் நம்பிக்கையும் இருக்கிறது.

அப்புறம் Floyd Uncorked - Travel Channel
முன்னாடி ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கான்னு சுத்திகிட்டுருந்த ஆளு இப்போ ப்ரான்ஸுல சுத்தறாரு. அதுவும் எப்படி. ஒயின் தேடி. ஒவ்வொரு வாரமும் ஒரு ஏரியாக்கு போயி அங்க என்ன பிரபலமான ஒயின், அத எப்படிக் குடிக்கணும்னு தான் ப்ரோகிராமே. சரி, கவுத்தினோமா, உள்ளத்தள்ளினோமானு இல்லாம இவரும் கூட சுத்தற ஒயின் எக்ஸ்பர்ட்டும் (எங்க படிச்சு பட்டம் வாங்கினார்னு தெரியல :)) அடிக்கற அலம்பல் தாங்கல. ஒரு கிளாஸ்ல ஊத்தி அரைமணி நேரம் டிஸ்க்ரிப்ஷன் தான். என்ன கலர், என்ன மணம், என்ன சுவைன்னு பிரிச்சு பிரிச்சு கோனார் நோட்ஸ் போடறாங்க. அது இரத்தச் சிவப்பா, இளஞ்சிவப்பான்னு தொடங்கி, கொஞ்சமா fruity, full, mature, young அப்டீப்டின்னு சம்பந்தமில்லாம நறுமண விவரிப்பு. அப்புறம் டேஸ்டிங். இதுல என்ன பழச்சுவை இருக்கு, எவ்வளவு அசிடிடி இருக்கு, ஆல்கஹால் அளவு ன்னு அப்புறம். எல்லாமே திராட்சை பழம் தானே, அதுல எங்கேர்ந்து பாதாம் பிஸ்தா சுவை நறுமணமெல்லாம் வருதுன்னு யாராச்சும் விளக்குங்கப்பா.

கடசியா GlobeTrekker : Fiji Islands - Travel Channel
அப்பா.. ஹனிமூனுக்கு போனா இங்கதான்பா போகணும். என்ன அழகு. டிவியில மட்டுந்தான் இப்டியா இல்ல நிஜமாலுமான்னு சந்தேகமிருக்கு. பளிங்கு மாதிரி தண்ணீர், நடுவுல ஏதோ அரிசியைத் தரையில கொட்டினா மாதிரி மணிமணியா தீவுகள்னு கலக்கலா இருந்துச்சு. அங்க பாருங்க ஒரு விசேஷம், தக்கணூண்டு பொண்ணு ஒன்னு. We are all neigbours. We share the same earth, the same air, the same stars, the same sky அப்புறம் ஏன் இவ்ளோ சண்டைனு ஒரு தத்துவம் போட்டுச்சு பாருங்க. அசந்துட்டேன். இப்டி எல்லாரும் யோசிச்சா ஏன் சண்டை வரப்போகுது?

3 Comments:

 1. இலவசக்கொத்தனார் said...

  ஆக மொத்தம் ஒரு லாங் வீக்கெண்ட் பூரா டீ.வீ. முன்னாடி உக்காந்து கழிச்சாச்சு. நல்ல ஆளைய்யா நீர்.


 2. துளசி கோபால் said...

  ராம்ஸ்,

  அனிமல் ப்ளானட் //நிகழ்ச்சி பேர் மறந்துடுச்சு. மன்னிச்சுக்கோங்கப்பா//
  ஹா... ஹவ் குட் யூ? மறக்கவேண்டிய அவசியம் எங்கேருந்து வந்துச்சு?
  நல்லால்லே ஆமாம்.............கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  எப்படியோ புலிக்குட்டிங்க வம்சம் வளர்ந்தா சரி. புலி கூட
  பூனைங்கஃபேமிலிதான். தெரியுமுல்லே?

  ஃபிஜித்தீவு ... சொன்னாலும் சொன்னீங்க, சரியாத்தான் சொல்லி இருக்கீங்க.
  உண்மைக்குமே ரொம்ப அழகான இடம்தான். இப்ப இந்த 'கூ'வெல்லாம் வந்துதான் அரசியல்ரீதியாக்
  கொஞ்சம் கஷ்டமாயிருச்சு. ஆனால் டூரிஸ்ட்டாப் போனாக் கவலைப்படவேணாம்.
  நான் அங்கே 6 வருசம் 'குப்பை' கொட்டி இருக்கேன்.


 3. rv said...

  கொத்ஸு,
  //ஆக மொத்தம் ஒரு லாங் வீக்கெண்ட் பூரா டீ.வீ. முன்னாடி உக்காந்து கழிச்சாச்சு. நல்ல ஆளைய்யா நீர்.//
  லாங் வீக்கெண்ட் கிடைக்கலேங்கற ஆத்தாமைல எழுதிருக்கீர்னு நினைக்கறேன். இருந்தாலும், செல்வியும் சித்தியும் பாக்கலையே. அதுவரைக்கும் பரவால்ல இல்லியா? இங்க கனெக்ஷன் எடுக்கலேங்கறது வேற விஷயம்.

  அதுசரி, நீர் என்ன செஞ்சீரு? போய் தஞ்சாவூர்ல கொட்டிக்கலையா? அதெல்லாம் பத்தி நான் கேட்டேனா? :))


 

வார்ப்புரு | தமிழாக்கம்