140. கொஞ்ச நேரம் கொஞ்சும் நேரம்!

அருகில் சென்றேன். மிரண்டு போனாள்!
ஆனால் எதிர்க்கவில்லை!

உள்ளே நடுங்கினாலும்,
வெளியே துணிந்தேன்!
அவளை மெதுவாய் நெருங்கினேன்!
பதமாய் கரம் பற்றினேன்!
பிடித்து அருகில் இழுத்தேன்!
அவள் கை நகம் பட்டென்னைக் கீறியது!
அட, ஊடலில் இதுவும் சகஜம் தானே!
இப்பொழுதும் எதிர்ப்பில்லை!
ஆனால் மென்குரலில் முனகினாள்!
பிடித்திருந்தது போலும்!

என்னுள்ளே பாட்டு!
கொஞ்ச நேரம் கொஞ்சும் நேரம்!
நான் கொஞ்சிப் போகக்கூடாதா?
வாய்விட்டு பாடினேன்! பதிலில்லை!

மேலும் துணிவு எங்கிருந்தோ வந்தது!
அவள் மென்மையான கூந்தலை கோதினேன்!
பற்றிய என்னை வள்ளென குதறி பின் வெடுக்கென
துள்ளி யோடிவிட்டாள் என் ஜூலி!

------
கவிஞர் பவுர்ணமி பாண்டியன் மற்றும் ஏஜெண்டுக்கு இக்காவியம் சமர்ப்பணம்!

------

தமிழ் இணைய சரித்திரத்துல ஒரு மாபெரும் நிகழ்ச்சி நடந்து முடிஞ்சி போச்சு. ஆனா யாரும் கண்டுகிட்டதா தெரியல. அதுக்குத்தான் இந்த கவிதைக்காவியம். என்னன்னு இன்னுமா புரியவில்லை? இந்த 'தெரியல' ஆரமிச்சு அதுக்குள்ள ஒரு வருஷம் (ஒரு வருஷம் ஒரு வாரம்) ஓடிப்போச்சு! இதுதான் சாக்குன்னு திவசம் செஞ்சு ஓரேடியா அனுப்பிச்சுடாதீங்கப்பு!

50 Comments:

 1. சின்னவன் said...

  ஆகா, கவிதை, கவிதை..
  தீர்ந்து என் சந்தேகம், பிடியுங்கள் ஆயிரம் ரூபிள்களை ..


  நாய்களுக்கு இயற்கையிலே கடிக்கும் குணம் உண்டா, இல்லை நாம் கல்லால் அடிப்பதால் தான் அது நம்மை கடிக்கிறதா என்ற என் ச்ந்தேகம் இன்றே தீர்ந்துவிட்டது.

  ஆயிரம் பெளணர்மிகள் பார்க்கும் வரை இந்த வலைபதிவு வளர வாழ்த்துக்கள்

  பெளர்னமி பாண்டியன் சார்பாக..

  சின்னவன்

  (எவ்வளவோ நல்ல தமிழ் பெயர்கள் இருக்க ஜூலி என்ற ஆங்கில மோகம் என்று யாராவது கடித்துவிடப் போகிறார்கள் .. சாக்கிரத்தை !!! )


 2. Muthu said...

  :-))


 3. துளசி கோபால் said...

  ச்சும்மா ஒரு வயசு ஆனதுக்கே இந்த 'சிலுப்பு' சிலுப்புனா எப்படி?

  சரி சரி, இப்பவாவது 'கண்டுக்கிட்டோமே'ன்னு சந்தோஷப்படக்கூடாதா?

  பிறந்த நாள் வாழ்த்து(க்)கள். 140 பதிவு ஆயிருச்சு போல. அதுக்கும் வாழ்த்து(க்)கள்


 4. ஜெயஸ்ரீ said...

  Congrats !!!


 5. Radha Sriram said...

  congrats Ramanathan century potadhukku... .modal rendu line padichodane purinchidich edhu poonai yo illa pomeranian naaykutti yo nnu......naan arivu kozhundu illa...!!!!!(heh he he he!)

  Radha


 6. Radha Sriram said...

  PS to previous post

  one more thing no thivasam only
  ayushahomam!!!!!!

  Radha


 7. குமரன் (Kumaran) said...

  ஆண்டு நிறைவு விழாவா? ஹும்... வாழ்த்துக்கள்.... கவிதை நல்லா இருந்தது.... நீங்களே எழுதியதா? இல்லைலைலை.....? :-)


 8. பொன்ஸ்~~Poorna said...

  ஜூலி பாவங்க.. விட்ருங்க... அப்புறம் யாரவது ஜுலிக்கு ஆதரவா அறிக்கை விடப் போறாங்க...


 9. G.Ragavan said...

  நாயைக் காத்த தனயன் என்ற பட்டம் குடுத்து இந்த ஓராண்டு நிறைவைச் சிறப்பிக்கிறோம். வாழ்த்துகள் இராமநாதன். "நாயே நீயே துணை" என்று எழுதிவிட்டே இனி எதையும் எழுதவும். நாய் கடித்த தோஷம் நீங்க, நூற்று எட்டு நாய்களுக்கு மண்கறி போடவும். ஆத்தோடு பிஸ்கட் சட்டி ஏந்திக் கொண்டு வைரவர் கோயிலுக்கு நேர்ந்து கொள்ளவும். ஒரு மண்டலம் தேநீரும் நாய் பிஸ்கட்டும் தானம் செய்து வந்தால் தோஷம் தீர்ந்து நாய்களால் நல்ல பலன் உண்டாகும்.

  ஒராண்டு நிறைவு விழாவிற்கு எனது வாழ்த்துகள் இராமநாதன்.


 10. மணியன் said...

  முதலாமாண்டு விழா காணும் இராமநாதனுக்கு பல்லாண்டுகள் பதிவுகள் எழுதிவர வாழ்த்துக்கள்!!


 11. Sud Gopal said...

  ஆண்டு நிறைவு வாழ்த்துகள்.


 12. Unknown said...

  முதலாமாண்டு வெற்றி விழாவில் ப.ம.க ரஷ்ய மாவட்ட செயலாளரை பாராட்ட இதுவரை கழக பொதுசெயலாளர் முகமூடி வராததன் மர்மம் என்ன?மகனுக்கு முடிசூட்ட கழக போர்வாளான ராமநாதன் தடையாக நிற்கிறார் என எண்ணமா?மகன் எல்கேஜியில் வாய்ப்பாடு ஒப்பித்தால் அதை பாராட்டி அறிக்கை விடும் தலைவர் கழக போர்வாள் ஓராண்டு கொண்டாடியும் இன்னும் வாழ்த்த வராததன் மர்மம் என்ன,,என்ன என்று நான் கேட்கவில்லை.மக்கள் கேட்கிறார்கள்.

  எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என அண்ணா சொன்னார்.
  இதையும் தாங்க ஏதண்ணா எமக்கிதயம்?

  பொறுத்தது போதும் ராமநாதா
  பொங்கி எழு
  பொதுக்குழுவை கூட்டு

  புயலெனப் புறப்பட்டு வா..அண்ணன் குமரன் கட்சிக்கு..35 சீட் தந்து கூட்டணி காண நாம் தயாராவோம்.


 13. சிறில் அலெக்ஸ் said...

  வாவ் இராமநாதன்.. வாழ்த்துக்கள்.


 14. Dubukku said...

  கவிதெ கவிதெ...
  கலக்குறீயளேய்யா....(வயித்த)

  ஒரு வருஷம் ஓடிப்போச்சா...கையக் குடுங்க தல...


 15. இலவசக்கொத்தனார் said...

  ஒரு வருஷமாய் உங்களின் தமிழ்ப் பணி தொடர்வது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. வாழ்க நின் தொண்டு.

  ஆமா, பொதுவா வாயில நுழையற மாதிரி பேர் வைக்க மாட்டீங்களே. இப்போ மட்டும் என்ன ஜூலி?


 16. முகமூடி said...

  வாழ்த்து, வாழ்த்துகள், வாழ்த்துக்கள் - எது சரியோ அதற்கேற்ப எடுத்துக்கொண்டு மற்றதை திருப்பி அனுப்பிவிடவும் (நம்ம பதிவுலதான்)

  **

  // பொறுத்தது போதும் ராமநாதா. பொங்கி எழு. பொதுக்குழுவை கூட்டு //

  கொஞ்சம் அசர கூடாதே உடனே ஆரம்பிச்சிடுவீங்களே.. முதலாண்டு வெற்றி விழாவுக்கு தலைவர் வரவில்லை என்று வெளியிலிருந்து ஆதரவு தரும் மற்றவர்கள் வேண்டுமானால் நினைக்கலாம்.. ஆனால் காலையில் முதல் வேலையாக இராம்ஸ் தலைவரை பார்த்து பொன்னாடை போர்த்தி ஆசிர்வாதம் வாங்கி பழைய நினைப்புகளை கிளறி கொஞ்சம் போல அழுதுவிட்டுத்தான் இந்த விழாவையே ஆரம்பித்தார் என்பது உங்களுக்கு தெரியுமா?

  இருந்தாலும் ராம்ஸ், இந்த மாதிரி சந்தேகங்களுக்கெல்லாம் காரணம் நீங்க வெளிப்படையா அறிக்கை கொடுக்காததுதான்.. இதுக்கெல்லாமா பினாமி பேர்ல ஆற்காட்டாரை தூது விட முடியும்.. நீங்களா பார்த்து ஒரு அறிக்கை விடறதில்லையா ??

  **

  தலைவரே, திராவிட பாரம்பரியப்படி ஓராண்டு நிறைவு விழாவுக்கெல்லாம் எங்கள மாதிரி "தானைத்தலைவருக்கு நன்றி! புரட்சி ப்ளொக்கார் புண்ணியச்செம்மல் முகமூடியின் வழி நடக்கும்" அப்படீன்னு எல்லாம் தன்னடக்கத்தோட எழுதி உங்க போட்டோவ ஆளுயற போஸ்டரா அடிச்சி அதுல சின்னதா ஒரு மூலையில தன்னோட போட்டோவ போடாம தெனாவட்டா பதிவு போட்ட ரஷ்ய மாவட்ட செயலாளர் மேல கட்சி மீறல் நடவடிக்கை எதுவும் கிடையாதான்னு கேக்கிற குட்டி செயலாளருங்கள சமாளிக்கும்படி வச்சிட்டீங்களே ராம்ஸு.


 17. rv said...

  சின்னவர் (அ) பவுர்ணமி,

  எதிர்க்கவித வுடுவீர்னு நினச்சா ப்ரோஸோட நிறுத்திட்டீரே.

  இந்த வருஷத்துல உருப்படியா உங்க சந்தேகத்தையாவது தீக்க முடிஞ்சதே. அது போறும்.

  //தமிழ் பெயர்கள் இருக்க ஜூலி என்ற ஆங்கில மோகம் என்று யாராவது கடித்துவிடப் போகிறார்கள் ..//

  என்ன அநியாயமா இருக்கு? நாய்க்குட்டிக்கு பேரென்ன அங்கயற்கண்ணி, கோப்பெருந்தேவின்னா வைக்க முடியும்?


 18. rv said...

  முத்து,
  பதிவ பாத்து சிரிக்கறீங்களா இல்ல நீயெல்லாம் என்னத்த ஒரு வருஷம்னு சிரிக்கறீங்களா.. குயப்பமா இருக்கே! :)


 19. rv said...

  அக்கா,
  காப் கிடைக்கும் போது சிலுப்பிக்கணும். இல்லேனா மறந்துடுவாங்களே.

  வாழ்த்து(க்)களுக்கு நன்றி. க் க்கு ஸ்பெஷல் நன்றி.


 20. rv said...

  ஜெயஸ்ரீ,
  நன்றி.

  பதிவு எப்ப ஆரமிக்க போறீங்கன்னு மூச்சே விட மாட்டேன்னா எப்படி?


 21. rv said...

  வாங்க இராதா ஸ்ரீராம்,
  //purinchidich edhu poonai yo illa pomeranian naaykutti yo nnu......naan arivu kozhundu illa...!!!!!(heh he he he!)
  //
  இதுக்கு ரொம்ப கொழுந்தால்லாம் இருக்க வேணாம். இந்த மூஞ்சி கிட்ட நாய்க்குட்டி கூட வராதுன்னு நிறையப் பேர் நினச்சிருக்கீங்க. ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்...

  --
  நீங்க மட்டுந்தான் வருஷாப்தியம் இல்ல, ஆயுஷ்ய ஹோமம்னு சொல்லிருக்கீங்க. அதுக்கு நன்றி. :)


 22. rv said...

  குமரன்,
  // ஹும்... வாழ்த்துக்கள்/
  நல்லாவே வாழ்த்துறீங்கய்யா! :$

  //கவிதை நல்லா இருந்தது.... நீங்களே எழுதியதா? இல்லைலைலை//
  பத்தியா எழுதவேணாமேன்னு பத்து லைனா உடச்சு போட்டேன். அதக் கூட நல்ல கவிதன்னு சொல்ற உங்க பெருந்தன்மைய என்ன சொல்றது. ஆனாலும், மண்டபத்துல எழுதிக்கொடுத்ததான்னு கேட்டு அசிங்கப்படுத்திட்டீங்களே. இன்னும் கொஞ்சம் முயற்சி செய்யுங்க. நீங்களும் இந்த மாதிரி எழுதலாம்.


 23. rv said...

  பூன்ஸ்,
  விட்டாக்க நீங்களே ஜூலி மறுவாழ்வுக் கழகம் ஆரமிச்சு தையல் மஷின் எல்லாம் கொடுப்பீங்க போலிருக்கே. கடி பட்டது நானப்பா.. என்ன கண்டுக்கலேன்னா எப்படி?


 24. rv said...

  ஜிரா,
  //நாயைக் காத்த தனயன் //
  புதுப்பட்டமா.. பட்டங்கள நியாபகம் வச்சுக்கவே புதுபதிவு ஆரமிக்கணும் போலிருக்கு. நல்ல வேளை, நாகரீக நேசன மக்கள் மறந்துட்டாங்க. மதுமிதா அக்கா... :))


 25. rv said...

  //ஆத்தோடு பிஸ்கட் சட்டி ஏந்திக் கொண்டு வைரவர் கோயிலுக்கு நேர்ந்து கொள்ளவும். ஒரு மண்டலம் தேநீரும் நாய் பிஸ்கட்டும் தானம் செய்து வந்தால் தோஷம் தீர்ந்து நாய்களால் நல்ல பலன் உண்டாகும்.
  //
  இதெல்லாம் எங்க இருக்கு? பைரவ புராணமா? நாய் பிஸ்கட் நான் பிரசாதமா அப்புறம் சாப்பிடணுமா?


 26. rv said...

  மணியன்,
  நன்றி


 27. rv said...

  சுதர்ஸன்.கோபால்,
  ஆண்டு நிறைவு நல்லா முடிஞ்சிடுச்சு. நாளைக்கு மொட்டை அடிச்சு காது குத்திட வேண்டியதுதான். :)

  நன்றி


 28. நன்மனம் said...

  Ramanathan, Julie kadichu oru varusham oru vaaram aguthunu soluringa, neenga nalla irukkinga aana julie enna aachunu sollave illiye :-)))))) Sridhar


 29. நன்மனம் said...

  ramanathan, i thought this kavithai is one year old, that was the reason for the previous comment:-)

  Ozhunga padika kuda theriyala, comment ezhuda vanthutangaiyanu sollarathu kadula vuzhuthu.

  Sridhar


 30. rv said...

  செல்வன்,
  நீங்க தான் அ.உ.ஆ.சூ.மி.கு மன்றத்தோட காளிமுத்துவா? நல்லாவே ட்ரை பண்றீங்க.

  ப.ம.க தொண்டர்களின் தலைவர் பாசமும், கொள்கை நேசமும் தெரியாமல்...தலைவருக்கு இதயத்தில் இடம் கொடுத்த சிங்கத்தை புறமுதுகிட்டு ஓடும் நரியென்று நீர் நினைத்ததை நினைத்து சிரிக்கிறேன். வேறெங்காவது முயற்சி செய்யவும்.

  35 சீட்டு தரீங்களா? கட்சியிலேயே மொத்தமா அவ்ளோ மெம்பர்ஸ் இருக்காங்களா? நிலாவின் பை-எலக்ஷனில் தோற்றும் மீசையில் மண் ஒட்டவில்லை என்றால் எப்படி? :P


 31. rv said...

  செல்வன்,
  இன்னொன்று.. சொல்ல விட்டுவிட்டேன். தலைவரிடம் அனுமதி பெற்றே இப்பதிவு இடப்பட்டது. அதையெல்லாம் வெளியே சொல்லிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை.

  கட்சியின் பலத்தை ஏற்கனவே மூன்றெழுத்தில் மூச்சிருக்கும் பதிவில் காண்பித்தாகிவிட்டது. உங்கள் மெமரியை ரிப்ரஷ் பண்ணவே சுட்டி தந்திருக்கிறேன். :)


 32. rv said...

  சிறில்,
  நன்றி.


 33. rv said...

  டுபுக்கு,
  வருஷத்துக்கு ஒரு தடவையாது கலக்க வேண்டாமா?

  நன்றி.


 34. rv said...

  கொத்ஸு,
  வாய்யா.. எங்க ஆளையே காணோமென்னு பாத்துகிட்டுருந்தேன்.

  //ஆமா, பொதுவா வாயில நுழையற மாதிரி பேர் வைக்க மாட்டீங்களே. இப்போ மட்டும் என்ன ஜூலி?
  //
  அப்படி என்ன பேர நான் வச்சுபுட்டேன்?

  நன்றி


 35. rv said...

  தல,
  நீங்க கொஞ்ச நேரம் லேட்டா வந்தா என்னென்ன பேச்சு பேசறாங்க பாருங்க. காலம் கெட்டுப் போச்சு. நம்மள மாதிரி நாகரிக அரசியல் நடத்த ஆளுங்களே இல்ல.

  வாழ்த்துகள் தான் சரின்னு நினைக்கறேன்... மிச்சதெல்லாம் ரிடர்ன் டு செண்டர் போட்டுட்டேன். வந்தோன சொல்லுங்க.

  தோட்டத்துல நாம பேசினதெல்லம் பொதுவுல சொல்ல வேணாம்னு பாத்தேன்.

  போஸ்டர் தட்டிக்கு சொல்லிருந்தேன். நடுவுல காண்ட்ராக்ட்ல யாரோ சுட்டுட்டாங்க.. சின்னவன், பீடம் பேர் வந்துச்சு, ஆனா உங்க பேரு மிஸ் ஆயிடுச்சு. எ(உ)திர்க்கட்சி இல்லேனா பாகிஸ்தான் சதின்னு அறிக்கை தயார் செஞ்சுகிட்டுருக்கேன்.


 36. rv said...

  நன்மனம்,

  முத தடவையா வந்திருக்கீங்க, நன்றி


  என்னய்யா அக்கிரமா இருக்கு. ஜூலி கடிச்சு இரத்தக்களறியானது எனக்கு. என்னைய வுட்டுட்டு எல்லாரும் ஜூலிக்கு என்னாச்சுன்னு கேட்டா என்ன அர்த்தம். சின்னபுள்ளத்தனமால்ல இருக்கு (நன்றி: கைப்பு) ஜூலின்னு குட்டி பேரு சொன்னதுக்கே இந்த எபெக்டுன்னா, அப்புறம் போட்டோ போட்டுருந்தா என்னாயிருக்கும்?

  ---
  இன்னொன்னு, நீதானா அந்தக் குயில் மேட்டர்.

  நான் நினைக்கற ஸ்ரீதரா நீங்க?


 37. rv said...

  நன்மனம்,
  //i thought this kavithai is one year old, that was the reason for the previous comment:-)

  Ozhunga padika kuda theriyala, comment ezhuda vanthutangaiyanu sollarathu kadula vuzhuthu.
  //
  ஒண்ணும் சொல்லறதுக்குல்ல. :))))

  அப்படியே நீங்க நன்மனமா, நன்மணமா, நண்மனமா, நண்மணமாங்கற என் சந்தேகத்தையும் தீர்த்து வையுங்க. ப்ளீஸ். எனக்கு மண்டை குடையுது.


 38. நன்மனம் said...

  ramanathan, neenga nenakara sridhar naanaga irukka maatennu nenaikiren. nanmanam:- nalla manasu endra ennathil vaithukonden, ippa neenga ketathuku appuram thaan ivalavu matter ullara irukkunu kandukinen:-) Sridhar


 39. நன்மனம் said...

  ராமனாதன், இப்ப என்ன சொல்லிட்டேன்னு இவ்வலவு கோவம். அப்பாடி, முதன் முதலா தமிழ்ல பின்னுட்டம் சரியா வந்திருக்கு: ஸ்ரீதர்.


 40. Chandravathanaa said...

  வாழ்த்துக்கள்


 41. rv said...

  நன்மனம்,
  குழப்பத்த தீர்த்துவச்சதுக்கு நன்றி. :)

  //neenga nenakara sridhar naanaga irukka maatennu nenaikiren//
  இவ்ளோ தீர்க்கமா சொல்றீங்கன்னா, நான் நினைக்கற ஸ்ரீதர் யாருன்னு உங்களுக்கும் தெரியுமா? :))

  //இப்ப என்ன சொல்லிட்டேன்னு இவ்வலவு கோவம்.//
  கோவமா? எதுக்குங்க?

  தமிழ் பின்னூட்ட அரங்கேற்றமா இன்னிக்கு? நல்லாத்தான் வந்துருக்கு.

  ஈ-கலப்பை வச்சு செஞ்சீங்கன்னா ரொம்ப ஈஸி. இல்லேனா www.suratha.com/reader.htm னு நினைக்கறேன்.


 42. சின்னவன் said...

  வாழ்த்துப் பா !!

  வலைப்பூ சூடிய இளம் பெண்ணின்
  கூந்தலில் ஒரு பேனாய்
  வலம் வந்திருந்த எனக்கு
  முதல் முன்னூட்டம் இட்டவனும் நீயே
  ஆம் முன்னூட்டம் தான்.
  உன் வாழ்வில்தான் எந்த
  "பின்" நடைவும் கிடையாதே !!!

  லெனின் ஸ்டாலின், கார்ப்பசேவ்,குருசேவ்
  எல்லோரையும் காராசேவாக்கி
  தயிர்வடையில் போட்டு
  தாளித்தவனும் நீயே !!!

  உன் வலைப்பூ
  என்றும் வாடாதப்பூ.
  சிக்கலில் சிக்காத குஷ்பூ ..
  உயரத்தில் குறைந்த அப்பு இல்லை ..
  நீ எழுதுவதில் எந்த தப்பும் இல்லை..


  நாளைய பமக உன் கையில்
  மூன்றெழுத்தில் முன்னூறு
  கமெண்ட் கண்டவன் நீ !


  டைனோசர் நடைப் பொட்டு
  டைடல் பார்க் மீது ஏறு !

  வாழ்க உனது தமிழ்ப்பணி..


  ( சந்திப் பிழைகளை. டீச்சர் திருத்திவிடுவார்கள் ! )


 43. rv said...

  சந்திரவதனா,
  நன்றி


 44. லதா said...

  குதறியதும் *தெரியல*
  குதறப்பட்டதும் *தெரியல*
  pun intended:-)))


 45. கைப்புள்ள said...

  எங்க பின்னூட்ட குரு கொத்ஸோட குரு நீங்க...அதனால் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன். தங்கள் அருள் எங்களுக்கு வரும் நாட்களில் கிடைக்க வேண்டும். புதுவித்தைகளை என் குருவுக்கு நீங்கள் பயிற்றுவித்தால் நானும் அவர் மூலமாகக் கற்றுக் கொள்வேன்.


 46. தாணு said...

  வாழ்த்துக்கள் மருமகரே!
  ``வருஷம் போனால் என்ன, வயசும் ஆனால் என்ன, உருவத்தைப் பாரடி பெண்ணே, முகம் இருபதைத் தாண்டியதில்லை'ங்கிற பாட்டு ஏனோ வாயில் வந்துவிட்டது!!!


 47. rv said...

  சின்னவர்,
  கவிதகேட்டது வாஸ்தவம் தான். ரொம்ப நல்லாவும் இருக்கு. ஆனா, தலைக்கு எதிரா கொம்பு சீவி விடறீரேய்யா.

  டைனோசர் நடைபோட்டு டைடல் பார்க் ஏறு - ரீஜண்டா கிங்-காங்க் பார்த்தீரா? :))


 48. rv said...

  லதா,
  வாங்க..

  குதறப்பட்டதும் *தெரியல*

  குதறப்பட்டது நல்லாவே எனக்கு தெரியுதுங்க. ஆனா மக்களெல்லாரும் குதறியதத்தான் சப்போர்ட் பண்றாங்க.


 49. rv said...

  கைப்பு,
  உங்க குருவோட ரேஞ்சு தனியாப் போச்சு. பிலிமும் தான். :)

  குருவை மிஞ்சின சிஷ்யன்னு சொல்லாம, அவர்கிட்ட நானும் நிறைய பாடம் கத்துக்க வேண்டியிருக்கு.


 50. rv said...

  அத்தை,
  //உருவத்தைப் பாரடி பெண்ணே, முகம் இருபதைத் தாண்டியதில்லை'ங்கிற பாட்டு //

  ஆஹா.. வழுக்கைன்னு கிண்டலடிக்கும் கூட்டத்தினூடே இப்படியொரு பாட்டு. அடாடாடா... எனக்கு மனசு அப்டியே குளிர்ந்துபோச்சு. நன்றி நன்றி நன்றி.


 

வார்ப்புரு | தமிழாக்கம்