தலைவா! இப்போவாவது?சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு!
சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு!
இளவட்ட நடையப்பா.. என்னோட உள்ளதெல்லாம் இளஞ்சிங்கப் படையப்பா!
பின்னால் நூறு படையப்பா!
யுத்தம் என்று வருகையில் பத்துவிரல் படையப்பா!
பாசமுள்ள மனிதனப்பா.. நான் மீசை வச்ச குழந்தையப்பா!
என்றும் நல்லதம்பி நானப்பா!
நன்றியுள்ள ஆளப்பா!
தாலாட்டி வளர்த்தது தமிழ்நாட்டு மண்ணப்பா!

பத்துமாடி வீடு கொண்ட சொத்து சொகம் வேண்டாம்!
பட்டங்களை வாங்கித்தரும் பதவியும் வேண்டாம்!
மாலைகள் இடவேண்டாம்! தங்க மகுடமும் தர வேண்டாம்!
தமிழ்த் தாய்நாடு தந்த அன்பு போதுமே!
என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு கொடுத்தது தமிழல்லவா?
என் உடல்பொருள் ஆவியை தமிழுக்கும் தமிழர்க்கும் கொடுப்பது முறையல்லவா?


உன் கையை நம்பி உயர்ந்திடப்பாரு!
உனக்கென எழுது ஒரு வரலாறு! உனக்குள்ளே சக்தியிருக்கு!
அதை உசுப்பிட வழி பாரு! சுப வேளை நாளை மாலை சூடிடு!
அட! எவனுக்கு என்ன பலம் எவனுக்கு என்ன குணம் கண்டதில்லை ஒருவருமே!ஒரு விதைக்குள்ளே அடைப்பட்ட ஆலமரம் கண்முழிக்கும் அதுவரை பொறு மனமே!
-------------------------------------

கொடுமை அழித்துவிட! கொள்கை ஜெயித்துவிட!
நம் நடைகண்டு அகங்காரம் தூளாக வேண்டும்!
நம் படைகண்டு திசையெல்லாம் பயந்தோட வேண்டும்! சக்தி கொடு! இறைவா!
வெள்ளத்தில் வீழ்ந்தவரை கரையேற்ற சக்தி கொடு!
பள்ளத்தில் கிடப்பவரை மேடேற்ற சக்தி கொடு!
தீமைக்கும் கொடுமைக்கும் தீ வைக்க சக்தி கொடு!
வறுமைக்கு பிறந்தவரை வாழ்விக்க சக்தி கொடு!
எரிமலைகள் என் காலில் தூளாக சக்தி கொடு!
ஒரு வார்த்தை சொன்னாலே ஊர்மாற சக்தி கொடு!முடிவெடுத்த பின்னால் நான் தடம் மாற மாட்டேன்!
முன்வைத்த காலை நான் பின் வைக்க மாட்டேன்!
எனை நம்பி வந்தவரை ஏமாற்ற மாட்டேன்!
வெறும் ஏணியாய் நானிருந்து ஏமாற மாட்டேன்!
உப்பிட்ட தமிழ்மண்ணை நான் மறக்க மாட்டேன்!


உப்பிட்ட தமிழ்மண்ணை நான் மறக்க மாட்டேன்!
நான் உயிர் வாழ்ந்தால் இங்கேதான் ஓடி விட மாட்டேன்!
கட்சிகளை பதவிகளை நான் விரும்ப மாட்டேன்!
காலத்தின் கட்டளையை நான் மறுக்க மாட்டேன்! இறைவா!

-------
இவ்வளவு பாடிய என் தலைவா! நீ எங்கே? எங்கே?? எங்கே??? உன்னை விட்டால் தமிழர்களான எம்மைக் காக்க வேறு யார்? விஜயகாந்த் போன்ற Jokers எல்லாம் அரசியலில் இருக்கையில் இன்னும் என்ன தயக்கம்?

தமிழக அரசியல் குப்பையிலிருந்து இந்தத் தேர்தலிலாவது எம்மக்களைக் காப்பீரா?


இப்படிக்கு,
உன்னையே நம்பியிருக்கும் ரசிகன்

59 Comments:

 1. முகமூடி said...

  எது நடக்குமோ அது நன்றாகவே நடக்கும்...

  *

  மரியாதையா ப.ம.க நிறுவன தலைவர் முகமூடிக்கு விடுத்த அறைகூவல் என்று சொல்லி தப்பித்துக்கொள்ளவும்.


 2. ஜோ/Joe said...

  ஏங்க! நேத்து வரைக்கும் நல்லா தானே இருந்தீங்க!


 3. இலவசக்கொத்தனார் said...

  இந்த தேர்தலுக்கு டூ லேட். ஒண்ணும் சொல்லாம இருந்தாருன்னா பாக்கலாம்.

  ஆமா இதுக்குத்தான் ரஜினிராம்கி இருக்காருல்லா? இப்போ நீங்க என்ன புதுசா?


 4. இலவசக்கொத்தனார் said...

  பாத்துங்க்கோய். பறந்து பறந்து உதைக்கிறவரின் பறக்கும் படை வந்து, பறந்து பறந்து உதைக்கப் போகுது.

  எங்களுக்கு அடிபட்டுதுனா மருத்துவர் கிட்ட போவோம். ஆனா மருத்துவருக்கே அடின்னா எங்கய்யா போவாரு? எங்க போவாரு?


 5. Karthik Jayanth said...

  ஊர்ல கேட்டது ...

  இந்த வசனம் பேசும்போது நல்லா பேசு, ஆனா மண்டபத்துல யாரவது கேள்வி கேட்டா கோட்ட விட்று.

  இது திருவிளையாடல் வசனம் மட்டுமே. மட்டுமே .. மட்டுமே ...


 6. rv said...

  தல,
  கோச்சுகிட்டா எப்படி?

  உமக்கும் பொருந்தி வருது. ஆனா நீர் இணையக் கட்சித்தலைவர்!

  அவரப் பத்தி சொல்றதுக்கு என்ன இருக்கு! எந்தரோ மஹானு பாவுலு!


 7. rv said...

  ஜோ,
  இப்பவும் நல்லாத்தாங்க இருக்கேன். வை.கோ தவிர உருப்படியா நம்ம அரசியல்ல சொல்லிக்கறா மாதிரி ஒரு ஆளு கூட இல்ல. அந்த வருத்தத்துல எழுதினது.

  தலைவர் வந்தா நிலைமையே வேற! ஆமா சொல்லிட்டேன்.


 8. rv said...

  கொத்தனார்,
  இந்த தடவை டூ லேட்டா? அவர் நினச்சார்னா, இமயமலைல இருந்துகிட்டே வர தேர்தல்ல ஜெயிச்சு காமிப்பாரு. அனுமார் மாதிரி அவர் பவர் அவருக்கே தெரியல (வை.கோவுக்கும் இதே கதிதான்). யாராவது ஜாம்பவான் வந்து எடுத்துச் சொன்னா தேவலை.


 9. rv said...

  //பறந்து பறந்து உதைக்கிறவரின் பறக்கும் படை வந்து, பறந்து பறந்து உதைக்கப் போகுது.
  //
  நீர் குறிப்பிடற வெத்துவேட்டுக்கெல்லாம் படை, சொறி, சிரங்கேல்லாம் இருக்கும்னு சொன்னீங்கன்னா, அப்புறம் ஒன் & ஒன்லி சூப்பர் ஸ்டாருக்கு இருக்கறதென்ன? புரியாமத்தான் கேக்கறேன்.


 10. குமரன் (Kumaran) said...

  நோ கமெண்ட்ஸுப்பா....


 11. rv said...

  கார்த்திக் ஜெயந்த்,
  //ஆனா மண்டபத்துல யாரவது கேள்வி கேட்டா கோட்ட விட்று.

  இது திருவிளையாடல் வசனம் மட்டுமே. மட்டுமே .. மட்டுமே ...
  //
  இந்த நக்கல் நையாண்டியெல்லாம் இபோ கேக்கறச்சே நல்லாருக்கு. அவர் ஒரு நாள் வருவாரு. அப்போ பேசிக்குவோம்.


 12. rv said...

  குமரன்,
  ஒரு வளரும் மன்றச் செயலாளர் நீங்க.. நீங்களே நோ கமெண்ட்ஸுன்னு சொன்னா எப்படி?


 13. இலவசக்கொத்தனார் said...

  எல்லாத்துக்கும் பதில் சொல்லிட்டீங்க. அப்ப இதுக்கு...

  //எங்களுக்கு அடிபட்டுதுனா மருத்துவர் கிட்ட போவோம். ஆனா மருத்துவருக்கே அடின்னா எங்கய்யா போவாரு? எங்க போவாரு?//


 14. rv said...

  //எல்லாத்துக்கும் பதில் சொல்லிட்டீங்க. அப்ப இதுக்கு...

  //எங்களுக்கு அடிபட்டுதுனா மருத்துவர் கிட்ட போவோம். ஆனா மருத்துவருக்கே அடின்னா எங்கய்யா போவாரு? எங்க போவாரு?// //

  இதுக்கு நான் ஏதாவது பதில் சொல்லி, எனக்கு அடிவாங்கி வைக்கணும்னு எவ்வளவு நாளாய்யா ஆசை? ஒண்ணும் சொல்லறதுக்கில்லை. நான் கிளம்புதேன்.


 15. இலவசக்கொத்தனார் said...

  நான் யோசிப்பேன்..நான் முடிவெடுப்பேன்..அடுத்த வருஷம் சொல்வேன்னு யார் மாதிரியும் பிலிம் காட்ட மாட்டேன் - நடிகர் முரளி

  இதுக்கு என்ன சொல்லப்போறீங்க?


 16. rajkumar said...

  அவர் வ்ழி தனி(மை) வழி. சிவாஜியை உருப்படியா எடுக்கட்டும். தொந்தரவு பண்ணாதிங்க.

  ராஜ்குமார்


 17. Boston Bala said...

  சீரியஸா சொல்றீரா... நக்கல் விடறீரா... ஒண்ணுமே புரியல உலகத்திலே ;-)


 18. manasu said...

  "கட்சியெல்லாம் இப்ப நமெக்கெதுக்கு
  காலத்தின் கையில் அது இருக்கு"

  "விடுகதையா இந்த வாழ்க்கை
  விடை தருவார் யாரோ"

  எங்கப்பா இன்னும் நம்ம ரஜினி ராம்கியா காணோம்?


 19. Unknown said...

  ராமனாதன்,

  எங்காளின் உள்ளங்கள் எல்லாமே வைரங்கள்.... நீ கொஞ்சம் பட்டைத் தீட்டுடா.... ரீப்பீட்டு....
  இதுவும் தலைவர் பாட்டு தான்...

  1996 ஆம் ஆண்டின் ரீப்பீட்டு நிச்சயம் இருக்குண்ணா....

  அஞ்சுக்குள்ளே நாலை வை ஆழம் பார்த்துக் காலை வை....

  http://chennaicutchery.blogspot.com/2006/01/blog-post_25.html

  http://chennaicutchery.blogspot.com/2006/02/blog-post_23.html


 20. கண்ணன் said...

  ரஜினி புகழ்வதற்காக விஜய்காந்த்-ஐ Joker என்று அடைமொழி கூறிய உங்கல் வாய்க்கு ஒரு பூட்டு போட்டுக் கொள்ளுங்கல். தேர்தல் முடியட்டும் இருக்கு ஆப்பு.


 21. கண்ணன் said...

  ரஜினி புகழ்வதற்காக விஜய்காந்த்-ஐ Joker என்று அடைமொழி கூறிய உங்கல் வாய்க்கு ஒரு பூட்டு போட்டுக் கொள்ளுங்கல். தேர்தல் முடியட்டும் இருக்கு ஆப்பு.


 22. இலவசக்கொத்தனார் said...

  //Kannan said...

  ரஜினி புகழ்வதற்காக விஜய்காந்த்-ஐ Joker என்று அடைமொழி கூறிய உங்கல் வாய்க்கு ஒரு பூட்டு போட்டுக் கொள்ளுங்கல். தேர்தல் முடியட்டும் இருக்கு ஆப்பு. //

  வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்க.


 23. rv said...

  //நான் யோசிப்பேன்..நான் முடிவெடுப்பேன்..அடுத்த வருஷம் சொல்வேன்னு யார் மாதிரியும் பிலிம் காட்ட மாட்டேன் - நடிகர் முரளி//

  Murali Who?


 24. rv said...

  இராஜ்குமார்,
  //சிவாஜியை உருப்படியா எடுக்கட்டும். தொந்தரவு பண்ணாதிங்க//
  சிவாஜி ஓடட்டும். ஒருவேளை 2010 லாவது தமிழ்நாட்டுக்கு விடிவுகாலம் பிறக்குதா பார்ப்போம்.


 25. rv said...

  பாலானாரே,
  நாங்க சீரியஸுக்கு சீரியஸ். காமெடிக்கு காமெடிக்கு. ஆக்ஷனுக்கு ஆக்ஷனுக்கு. அவ்ளோ தான் இப்பொதைக்கு சொல்வோம்.


 26. rv said...

  மனசு,
  //கட்சியெல்லாம் இப்ப நமெக்கெதுக்கு
  காலத்தின் கையில் அது இருக்கு"
  //
  அது பழசுப்பா 94,95. அதான் 2002 ல மாத்தி சொல்லிட்டாரே. மேலே இருக்கற பாட்ட படிங்க. :)

  ஏன் எல்லாரும் ராம்கிய வம்புக்கு இழுக்கறீங்க?


 27. rv said...

  தேவ்,
  //1996 ஆம் ஆண்டின் ரீப்பீட்டு நிச்சயம் இருக்குண்ணா....

  அஞ்சுக்குள்ளே நாலை வை ஆழம் பார்த்துக் காலை வை.... //

  அதானே வெயிட் பண்றோம்.


 28. rv said...

  கண்ணன்,
  //உங்கல் வாய்க்கு ஒரு பூட்டு போட்டுக் கொள்ளுங்கல். தேர்தல் முடியட்டும் இருக்கு ஆப்பு.
  //
  கொத்தனார் சொன்ன படை நீங்கதானா? NoM :))


 29. rv said...

  கொத்தனார்,
  நிஜமாவே வந்துட்டாங்களே.. அதான் எனக்கும் ஆச்சரியமா இருக்குபா.


 30. இலவசக்கொத்தனார் said...

  ஆனாலும் பார்ட்டிக்கு நகைச்சுவை ஜாஸ்தி. அப்படியே அவங்க தலைவர் தமிழ் பேசி இருக்கரே


 31. Unknown said...

  எங்க தன்மானத்தலைவர் விஜய்காந்தை யாரப்பா வையறது?தமிழ்நாட்டுல திமுக அதிமுகவே தனிச்சு நிக்கறதுக்கு பயப்படறப்ப தைரியமா என் வழி தனி வழின்னு நிக்கறவர் எங்க புரட்சி கலைஞர்.6 கோடி தமிழர்களின் சார்பாக எங்கள் கறுப்பு எம்ஜிஆரை ஜோக்கர் என அழைத்ததை கண்டிக்கிறேன்.:-)


 32. இலவசக்கொத்தனார் said...

  மீண்டும்

  வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்க. :)

  ஆனா செல்வன் தமிள் சரியா பேசலையே?


 33. Karthik Jayanth said...

  // இந்த நக்கல் நையாண்டியெல்லாம் இபோ கேக்கறச்சே நல்லாருக்கு. அவர் ஒரு நாள் வருவாரு. அப்போ பேசிக்குவோம்.//

  'மருத்துவரே' வரசொல்லுங்க அப்ப பேசிக்குவோம். ஆழம் பாக்குறது நல்லதுதான், அதுக்காக அண்ணமலைல இருந்து சும்மா ஆழம் பாத்துகிட்டே இருந்தா எப்படி, உங்க தெறமைக்கு(?) நல்லாவ இருக்கு

  மருத்துவர் = ராமநாதன்


 34. துளசி கோபால் said...

  தம்பி, யூ டூ......

  நிழலும் நிஜமும் வேற வேறயில்லையா?

  அதுலேயும் இந்தப் பாட்டுங்கெல்லாம் வேற யாரோ எழுதி இவுங்க வாயசைக்கிறதுன்னு இத்தனைநாள் நினைச்சுக்கிட்டு இருந்துருக்கேன் பாருங்க?:-)


 35. Unknown said...

  ஆனா செல்வன் தமிள் சரியா பேசலையே?//

  எங்க தானைத்தலைவர் ஆட்சிக்கு வந்ததும் தமிழ் தானே பழகிக்கிடுவேன்.இப்போதைக்கு எங்க கறுப்பு சிங்கம் ஆட்சிக்கு வரணும்.அதுதான் முக்கியம்


 36. தயா said...

  pattuma thirundhalai? atleast vijaykanth has some plans and acting on it.

  What does rajnikanth has got? It's all the hype and hoopla created by the media and circumstances were in favour for him.

  Unfortunately the oppurtunity was turned down by him. The time is gone.


 37. கண்ணன் said...

  // இலவசக்கொத்தனார் said..
  ஆனாலும் பார்ட்டிக்கு நகைச்சுவை ஜாஸ்தி. அப்படியே அவங்க தலைவர் தமிழ் பேசி இருக்கரே
  //

  நாங்க தமிழும் பேசுவோம். தலைக்கணத்தோடு பேசுற உங்கலுக்கு பதிலடியும் கொடுப்போம். wait and see..


 38. J. Ramki said...

  ஊரு முழுக்க ரசிகர் கூட்டம்
  எனக்கு இருக்குதுங்க...
  எனக்கொரு நினைப்பு இருக்குதுங்க
  அதுக்கொரு கணக்கிருக்குதுங்க!


  இந்த ராஜா, கூஜா இல்லே...
  எப்போதும் எங்கேயும் ரோஜா தான்!


 39. rv said...

  கொத்தனார்,
  போதுங்க. ஏன் சும்மா சும்மா வம்புக்கு இழுக்கறீங்க? பாவம், கன்னி எலெக்ஷன், அவங்களும் தான் பத்து சீட் ஜெய்க்கட்டுமே.


 40. rv said...

  செல்வன்,
  //தமிழ்நாட்டுல திமுக அதிமுகவே தனிச்சு நிக்கறதுக்கு பயப்படறப்ப தைரியமா என் வழி தனி வழின்னு நிக்கறவர் //
  இந்த விஷயத்துல இதுவரைக்கும் நான் உங்க கட்சி. பாப்போம், மே மாசத்துக்கு இன்னும் நாளிருக்கே. பொட்டி, மண்டபம் எதுனாச்சும் மாறுதான்னு.

  ஆனா, என் வழி தனி வழின்னு சொல்ல தமிழ்நாட்டுல ஒருத்தருக்குத்தான் காப்பிரைட் இருக்கு. யாருன்னு நான் சொல்லித் தெரியவேண்டியதில்லையே.

  ஆறு கோடி தமிழர்கள் தான் தே.மு.தி.க வில் மெம்பரா? என்னப்பா, எங்க ப.ம.க லேயே பத்து கோடிக்கு மேல போயிகிட்டிருக்கு!


 41. rv said...

  கொத்தனார்,
  மீண்டும் வம்பு. திருந்தவே மாட்டீரா?

  தமிள் நாட்ல இருக்கற 3 கோடியே இருவத்தஞ்சு லெச்சம் தாய்மார்கலும், மூணு கோடியே எலுவத்தியஞ்சு லச்சம் லெட்சியத் தொண்டர்கலும் தே.மு. தி.க பின்னாடி இருக்காய்ங்கப்பா. (ஸ்டாடிஸ்டிக்ஸு: செல்வன் உபயம்)சாக்கிரதை.

  ---
  'நா ஒருதடவே ஷொன்னா நூறு தடவே ஷொன்னா மாதிரி'ன்னு நாமளும் பேசணுமா? :))


 42. rv said...

  கார்த்திக்கு,
  வேற ஏதோ மருத்துவர்க்கு சவால் உடற மாதிரி இருக்கு. அவர் தொண்டர் காதுல விழுந்துச்சுன்னா, நொங்கெடுத்துவாங்க. பாத்துப்போய்!

  //அண்ணமலைல இருந்து சும்மா ஆழம் பாத்துகிட்டே இருந்தா எப்படி, உங்க தெறமைக்கு(?) நல்லாவ இருக்கு
  //
  இப்பதான்பா மார்க்கெட் ரிசர்ச் முடியற நிலைமைக்கு வந்துருக்கு. பொறுமை பொறுமை!


 43. rv said...

  அக்கா,
  //தம்பி, யூ டூ......

  நிழலும் நிஜமும் வேற வேறயில்லையா?

  //
  நான் டூ இல்லீங்க. நிறைய பேரு இருக்கோம். சொல்லிட்டேன். நிஜத்துல நிழல் விழும். நிஜம் நிழல்ல விழ முடியுமா? (என்ன தத்துவமா வந்து கொட்டுது பாத்தீங்களா?) அதுக்கு என்ன சொல்றீங்க.


 44. rv said...

  அக்கா,
  //அதுலேயும் இந்தப் பாட்டுங்கெல்லாம் வேற யாரோ எழுதி இவுங்க வாயசைக்கிறதுன்னு இத்தனைநாள் நினைச்சுக்கிட்டு இருந்துருக்கேன் பாருங்க?:-)
  //
  இன்னும் சின்னப்புள்ளையாவே வெள்ளந்தியா இருக்கீங்க. ஹூம். என்ன செய்யறது. இந்தியா போயிட்டு வந்துமா இப்படி??


 45. rv said...

  செல்வன்,
  //எங்க தானைத்தலைவர் ஆட்சிக்கு வந்ததும் தமிழ் தானே பழகிக்கிடுவேன்.இப்போதைக்கு எங்க கறுப்பு சிங்கம் ஆட்சிக்கு வரணும்.அதுதான் முக்கியம்
  //
  ஏகப்பட்ட இலக்கணப்பிலை. நெரிய ஸ்பெல்லிங் மிஸ்டேக். பஞ்ச் லைன் மிஸ்ஸிங். உம்ம தலைவர் மாதிரி டமிள் பேச இன்னும் நிறைய கஸ்டப்படனும்.


 46. rv said...

  தயா,
  //What does rajnikanth has got? It's all the hype and hoopla created by the media and circumstances were in favour for him.

  Unfortunately the oppurtunity was turned down by him. The time is gone.//
  ச.மு, ச.பி உங்களுக்குத் தெரியாதா?

  வாய்ப்பெல்லாம் இன்னும் போகலீங்க. அதுக்குள்ள நீங்களே முடிவு கட்டிட்டா எப்டி? வரும் வரும் வ்ரும் வ்ரும் வ்ரும் ரும் ரும் ம் ம் ம்....


 47. rv said...

  கண்ணன்,
  டென்ஷன் ஆகாதீங்க. சும்மா சோக்கு. அவ்ளோ தான். கொத்தனார் இப்படித்தான் எப்பவும் உப்புமா கிண்டிகிட்டே இருப்பாரு.


 48. rv said...

  வராது வந்த மாமணியே ராம்கி,
  வாங்க வாங்க. உங்களக் காணோம்னு எத்தன பேர் வருத்தப்பட்டிருக்காங்க பாத்தீங்களா?

  //ஊரு முழுக்க ரசிகர் கூட்டம்
  எனக்கு இருக்குதுங்க...
  எனக்கொரு நினைப்பு இருக்குதுங்க
  அதுக்கொரு கணக்கிருக்குதுங்க!

  இந்த ராஜா, கூஜா இல்லே...
  எப்போதும் எங்கேயும் ரோஜா தான்!
  //
  ஆஹா, ஒரு பாட்டு போட்டாலும் நச் னு போட்டிருக்கீங்க. (அடிக்க வராதீங்க, இது என்ன படம்?? இல்ல வாங்கிப் பாக்கலாமேன்னுதான்)


 49. Unknown said...

  ஏகப்பட்ட இலக்கணப்பிலை. நெரிய ஸ்பெல்லிங் மிஸ்டேக். பஞ்ச் லைன் மிஸ்ஸிங். உம்ம தலைவர் மாதிரி டமிள் பேச இன்னும் நிறைய கஸ்டப்படனும்.//

  ராமநாதன்

  தலைவருக்கு வசனம் எளுதி குடுக்க லியாகத் அலிகான் இருக்காரு.எனக்கு அப்படி யாரு இருக்காங்க?நான் என்ன மண்டபத்துல ஒருத்தர் எளுதி குடுத்ததையா வந்து ஒப்பிக்கிறேன்?


 50. VSK said...

  எங்க தலிவரின் ஆசியோடத்தான், கருப்பு சிங்கம் பொறப்ட்டுருக்காரு!

  ஆங்..... இது எப்ப்டி இருக்கு!

  ஏப்ரல் 8-க்கு இன்னும் நாளிருக்கு !

  அதுக்குள்ளே அவசரப்படாதே நைனா !


 51. rv said...

  செல்வன்,
  ஆன்மிக சூப்ப பக்கத்துல வச்சுகிட்டு எழுதித்தர யாருமில்லேனா நம்ப கஷ்டமாயிருக்கே!


 52. rv said...

  எஸ்.கே,
  //எங்க தலிவரின் ஆசியோடத்தான், கருப்பு சிங்கம் பொறப்ட்டுருக்காரு!
  //
  இப்படி வேற சொல்லி வோட்டு கேக்கறாங்களா என்ன?

  //ஏப்ரல் 8-க்கு இன்னும் நாளிருக்கு !

  அதுக்குள்ளே அவசரப்படாதே நைனா !//
  ஏப்ரல் எட்டாந்தேதி என்ன விசேஷம்? :P


 53. இலவசக்கொத்தனார் said...

  யாரோ சடையப்பா எல்லாம் படையப்பா போஸ் குடுத்து 70 - 80ன்னு பின்னூட்டம் வாங்கறான். தலைவர் படம் போட்ட இந்த பதிவுக்கு 50 கூட இல்லையான்னு நினைச்சேன். இப்போ 50 வந்தாச்சு. இனி அடுத்த இலக்கு 100தான்.

  பின்ன என்னங்க அடுத்த இலக்கு கோட்டைதான்னு சொல்ல எனக்கும் ஆசைதான். ஆனா அவரு வாயை தொறந்தாதானே.


 54. Muthu said...

  :-) :-)


 55. rv said...

  கொத்ஸு,
  பாவம் கைப்பு ஏற்கனவே நொந்து நூடுல்ஸ் ஆகிப்போயிருக்காரு.

  //என்னங்க அடுத்த இலக்கு கோட்டைதான்னு சொல்ல எனக்கும் ஆசைதான். ஆனா அவரு வாயை தொறந்தாதானே.
  //
  நம்ம ஆதங்கம் நமக்கு. தலைவருக்கு எப்ப புரியப்போகுதோ? :(


 56. rv said...

  முத்து,
  இந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம்?


 57. VSK said...

  April 8 is the last day for filing nominations!!


 58. rv said...

  நன்றி எஸ்.கே.

  இப்பதான் வாய்ஸ் கொடுக்க மாட்டேன்னு வாய்ஸ் கொடுத்துட்டாரு. ஆனா ரசிகக் கண்மணிகள் அம்மாகிட்ட போறாங்கன்னு நியுஸ் வருது. என்ன நடக்குதுன்னே புரியல.


 59. குழலி / Kuzhali said...

  //உன்னை விட்டால் தமிழர்களான எம்மைக் காக்க வேறு யார்? விஜயகாந்த் போன்ற Jokers எல்லாம் அரசியலில் இருக்கையில் இன்னும் என்ன தயக்கம்?

  தமிழக அரசியல் குப்பையிலிருந்து இந்தத் தேர்தலிலாவது எம்மக்களைக் காப்பீரா?

  //
  ஓ நீங்களும் உங்க பங்குக்கு செய்றிங்களா? செய்ங்க, செய்ங்க
  இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி தான் உடம்பு ரணகளமா இருக்கு!


  //ஊரு முழுக்க ரசிகர் கூட்டம்
  எனக்கு இருக்குதுங்க...
  எனக்கொரு நினைப்பு இருக்குதுங்க
  அதுக்கொரு கணக்கிருக்குதுங்க!
  //
  ரஜினி ராம்கி ரசிகர் கூட்டம் உதிர்ந்து கொண்டிருப்பதாக கேள்விப்படுகின்றேன்?! இங்கே ஒரு ரஜினி ரசிகனின் ஆசை யை படியுங்களேன்


 

வார்ப்புரு | தமிழாக்கம்