தஞ்சாவூர்: பெருவுடையார் கோயில் - புகைப்படங்கள்

தஞ்சன் என்ற அசுரனை தஞ்சபுரீஸ்வரர் வதம் செய்த இடமென்பதால் தஞ்சாவூர் என்ற பெயர் வந்தது. இந்தக் கோயிலும் இதன் அருகிலுள்ள 108 வைணவத் திருப்பதிகளில் ஒன்றான மணிக்குன்ற பெருமாள் கோயிலும் மிகவும் பழைமையானது. அதே போல் பங்காரு காமாக்ஷி கோயில், கொண்கணேஸ்வரர் கோயில் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் மற்றும் இராகு கால அம்மன் கோயில் என்று பல பழமையான கோயில்கள் இருந்தாலும் தஞ்சையென்றாலே
பலருக்கும் நினைவுக்கு வருவது இராசராச சோழன் கட்டிய பெருவுடையார் கோயில் தான்(தஞ்சாவூருக்கு வந்து போனவர்களுக்கு தெருப்புழுதியும், சந்துகளும் நினைவுக்கு வரும்).

மேலதிக விவரங்களுக்கு இங்கேயும் இங்கேயும் செல்லவும்.



























13 Comments:

  1. ENNAR said...

    நன்றாக உள்ளது ராமனாதன்

    என்னார்


  2. Anand V said...

    ராமநாதன்
    அருமை.
    காஞ்சிபுர கோயில்களயும் எடுத்தீர்களா ?


  3. சுந்தரவடிவேல் said...

    நல்ல படங்கள்.
    தஞ்சன் என்ற மன்னன் அரசாண்டதால் தஞ்சாவூர் என்று கேள்வி. தஞ்சன் என்ற "அசுரனைக்" கொன்றவர் பெயரும் தஞ்சபுரீஸ்வரரா? பார்க்க வேண்டிய தகவல். தஞ்சபுரீஸ்வரர் கோயில் பெருவுடையார் கோயிலாகி, அது பிரகதீஸ்வரர் கோயிலாகி...ஹூம்...


  4. Thangamani said...

    படங்கள் அருமை!
    மாலை நேரத்தில் எடுக்கப்பட்டவை அழகு. அந்தக் கோயில் மிக அழகானது, அமைதி நிறைந்தது.


  5. NONO said...

    அருமையே அருமை!!!
    தகவலுக்கு நன்றி!!


  6. rv said...

    என்னார், மஞ்சுளா, தங்கமணி மற்றும் NONO,
    மிக்க நன்றி.

    ஆனந்த்
    கோயில் மூடற வேளைக்கு போனதால காஞ்சிபுரத்தில எடுக்க முடியல :(

    கும்பகோணம் மாதிரி கோயில்கள் பார்க்கவே சில நாட்கள் காஞ்சிபுரத்தில தங்கணும்னு ஆசை. நேரம் தான் இல்லை. ஊருக்குள்ள மட்டும் 130 முக்கிய கோயில்கள் இருக்கறதா படிச்சேன். அதுல பாதிக்கு மேல மினி ஊர் சைஸுக்கு இருக்கறதால எல்லாத்தையும் பாத்து முடிக்கறதென்பது இயலாத காரியம்னு நினைக்கிறேன். இந்த வாட்டி வெயிலும் பரவாயில்ல மாதிரி இருந்தது.

    சுந்தரவடிவேல்,
    தஞ்சன் என்ற அசுரனை கொன்ற போது அவன் கேட்டுக்கொண்ட வரத்திற்கிணங்க தஞ்சாவூர் என்ற பெயருடைய நகரம் தோன்றியதாக சொல்வார்கள். அதிலும் இந்த தஞ்சனை கொன்றது யார் என்பதிலும் சந்தேகம் உண்டு. நீலமேகப்பெருமாளா (இங்கேயும் 3 கோயில்கள் அருகருகில் உள்ளன. மூன்றும் சேர்ந்துதான் ஒரு வைணவத்திருப்பதி. அவை மணிக்குன்ற பெருமாள், தஞ்சை மாமணி நீலமேகப்பெருமாள் மற்றும் தஞ்சையாளி நரசிம்மர்) இல்லை தஞ்சபுரீஸ்வரரா என்று எனக்கும் இப்போது குழப்பமாக இருக்கிறது. யார் பெரியவன்? சிவனா? விஷ்ணுவா? என்பதால் வந்த குழப்பமிது என்றுதான் படுகிறது.

    ஆனால் பெருவுடையார் கோயிலுக்கும் இவற்றிற்கும் தொடர்பு இல்லை. பெருவுடையார் கோயில் இராசராசனின் pet project தானே தவிர, உதாரணத்திற்கு காஞ்சி காமாட்சி போல் mythological basis ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை. ப்ரஹதீஸ்வரர் மற்றும் ப்ரஹன்நாயகி ஆகிய பெயர்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு முறையே பெருவுடையார் மற்றும் பெரியநாயகி என்று வழங்கப்படுகின்றன.

    இராசராசன் இந்தக்கோயிலைக் கட்டியதற்கு ரெண்டு வெவ்வேறு காரணங்கள் சொல்வார்கள்.

    1. ஒன்று, பல போர்களுக்கு பின் பிராயச்சித்தமாக எழுப்பினான்.
    2. இராசராசனின் பெரியம்மாவான செம்பியன் மாதேவி (கண்டராதித்த சோழரின் மனைவி) 108 சிவாலயங்களை காவேரிக்கரையெங்கும் எழுப்பியதைக் கண்டு இராசராசனும் கட்டியதாகவும் சொல்வார்கள்.

    ரெண்டு மூணு நாட்களுக்குள் நேரில் சென்று பார்த்துவிட்டு வந்து இரண்டிற்கும் விடையளிக்கிறேன்.


  7. பரணீ said...

    நல்ல படங்கள் ராமனாதன்.
    புகைப்படங்களை ஏற்ற blogger - ன் சேவையினை பயன்படுத்தலாமே,
    photobucket - ல் பாதி நேரம் படங்கள் தெரிவது இல்லை.


  8. rv said...

    பரணீ,

    நன்றி!

    நீங்கள் சொன்னமாதிரி ப்ளாக்கர் வழியே படங்கள் ஏற்ற முயற்சி செய்தேன். சரியாக வரவில்லை. இன்னுமொரு முறை பார்க்கிறேன்.


  9. வானம்பாடி said...

    மிக அருமையான படங்கள் ராமநாதன்!


  10. rv said...

    sudharsan
    thanks a lot.


  11. Sud Gopal said...

    ரொம்ப அழகா வந்திருக்கின்றன எல்லாப் படங்களும்.

    ராமநாதன்,பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.


  12. துளசி கோபால் said...

    அருமையோ அருமை.

    நல்லா இருங்க.

    என்றும் அன்புடன்,
    அக்கா


  13. rv said...

    Sudharsan Gopal and Thulasi akka,

    Thanks a lot.


 

வார்ப்புரு | தமிழாக்கம்