Lord of the Rings-உம் நானும்

சில நாட்களுக்கு முன்னர் தான் பார்த்தேனென்றாலும், நேற்று F1 முடிந்து montoya disqualify ஆன shock மாறாமல் கொஞ்ச நேரம் இருந்தேன். சரி, ROTK பார்த்தால் மூட் மாறும் என்ற நம்பிக்கையில் மறுபடியும் ஒரு ஷோ! LOTR - படங்கள் பார்ப்பதற்கு முன் அந்த புத்தகங்களை வாசித்தது கிடையாது. ஒரு நாள் 2001, என்று நினைக்கிறேன் நல்ல குளிர் (இது ரஷ்யா. நல்ல குளிர் என்றால் -15க்கு கீழ்) நண்பர்கள் அழைக்க Fellowship of the Ring பிரிமீயர் ஷோவிற்கு போனோம். போன எங்கள் குருப்பில் ஒருவருக்கும் புத்தகங்களைப் பற்றி தெரியாது. கிராபிக்ஸ் கலக்கலாக இருக்குமென்ற என்ற ஒரே நம்பிக்கையில் போனோம்.

சரி, படம் ஆரம்பித்த கொஞ்ச நேரம் ஓகே. ஆனால் நாங்களும் பொறுத்துபொறுத்துப் பார்த்தோம். ஒரு இடத்திற்கு போகிறார்கள். கொஞ்சம் சண்டை. அப்புறம் இன்னொரு இடம். அதுக்கப்புறம் சண்டை. என்னடா இது! 90 நிமிஷம் ஆயிடுச்சு. சரி ரிவண்டெல் வந்தவுடன் சுபம் கார்டு என்ற நப்பாசையில் காத்திருந்தால், அப்போதுதான் படத்தின் முக்கிய கதையே தொடங்கியது. திரும்பி புறப்பட்டு வேறோரு இடம். திரும்பவும் சண்டை. இப்படி இன்னொரு ஒன்னரை மணி நேரம் பின்னர் படம் முடியுமென்று காத்திருந்தால், இன்னும் தொடரும் என்று கூட போடாமல் முடித்துவிட்டனர். எங்களுக்கு BP எகிறிவிட்டது.

அடப்பாவிகளா! 3 மணி நேரம் ஒக்காந்து பொறுமையாப் பாத்திருக்கோம்னு பாவப்படாமல் "We may yet, Mr. Frodo" சொல்லி அத்துவானத்தில் விட்டுட்டாங்களேன்னு இயக்குனர், தியேட்டர், ஐடியா தந்த நண்பன் உள்பட எல்லோரையும் சபித்து விட்டு வீட்டுக்கு வந்தும் கடுப்பு அடங்கவில்லை. சரி இன்னதான் சொல்றாங்க மக்கள் இந்த டப்பா படத்தப் பத்தின் கூகிள் விட்டாத்தான் விஷய்மே புரிஞ்சுது. இந்த படம் ஒரு மாஸ்டர்பிஸ்-னு அவனவன் எழுதி வச்சுருக்கான். அப்புறம் புத்தகங்கள் பத்தியும் தேடிப்பாத்தா இதுக்கு இருக்கிற cult following பத்தியும் தெரிஞ்சுது. சரி, இதுல அப்படி என்னதான் இருக்கு? நமக்கு மட்டும் மத்தவங்களுக்கு தெரியற ஒளி ஏன் தெரிலன்னு யோசிச்சு யோசிச்சு சரி டிவிடி வாங்கி இன்னொரு வாட்டி பாத்தே தீரணும் னு முடிவு பண்ணோம்.

ஒளி இல்ல. சும்மா flood light கணக்கா தெரிஞ்சது ஹோம் தியேட்டரில் பாத்தபோது. சினிமாவில் reality இல்லாத fantasy வகையில் காண மிகவும் அரிதான் ஒரு விஷயம் இந்த படங்களில் உண்டு. அது மனிதர்களல்லாத, வேறு ஒரு surreal உலகத்தில் வாழும் உயிர்களுக்காக் நாம் கவலைப்படுவது. ஒரு முறைப் பார்த்தபின், சொன்னால் நம்ப மாட்டீர்கள். பனிக்கால விடுமுறையில் ஒரு வாரம் முழுது தினமும் இந்த படத்தைப் பார்த்திருக்கிறோம். அப்படி ஒரு சொல்ல முடியாத தாக்கம். அது Tolkien-இன் மாஜிக்கா இல்லை PJ-வின் இயக்கமா இல்லை நடிப்பா இல்லை VFX-a? என்னவென்று சொல்லத்தெரியவில்லை. ஆனால் அடிப்படையில் சில கருத்துக்கள் எனது கருத்துக்களுடன் ஒத்துப்போனது இருக்கலாம்.

Sep 11, Afghan War எனப்பல விஷயங்கள் நடந்திருந்தன. மனிதர்களை Black and White என்ற broad stroke கொண்டு நல்லவன் கெட்டவனென்று பிரிக்க முடியாது. எல்லோருக்குள்ளும் Shades of Grey தான். இதில் ஒரு மனிதன் சூழ்நிலைக்கு தக்கவாறு தன் ஆசைகளைக் கட்டுபடுத்தி, நல்லதை செய்வானோ அவனை "பெரும்பாலும் நல்லவன்" என்று கூறலாம். ஒரு தீய காரியத்திற்காக தண்டனை அளிக்கலாம், ஆனால் அவ்வொன்றினாலேயே தீயவன் என்ற பட்டம் கொடுக்க முடியாது என்பது என் கருத்து. இது எனக்கு சுயமாக புரிய பெரிதும் உதவியது முதலில் ஜார்ஜ் புஷ். இரண்டாவது இந்த படங்களின் சில கதாபாத்திரங்கள். முக்கியமாய் Gondor-இன் Boromir.

சரி எழுத வரமாட்டேங்குது. சும்மாவே வராது. இன்னிக்கு கொஞ்சம் extra heavy duty-ஆக வரமாட்டேங்குது. வுடு ஜூட்!ROTK-இல் இருந்து ஒரு பாடல்.

Home is behind, the world ahead,
And there are many paths to tread
Through shadows to the edge of night,
Until the stars are all alight.

Then world behind and home ahead,
We'll wander back to home and bed.
Mist and twilight, cloud and shade,
Away shall fade! Away shall fade!
Fire and lamp and meat and bread,
And then to bed! And then to bed!

- JRR Tolkien

6 Comments:

  1. G.Ragavan said...

    அடடா! இதோ இன்னொரு பிரியர். எனக்கு மிகவும் பிடித்த புத்தகம் அது. முதல் பாகம் பார்க்கையில் பிடிக்கவில்லை. என்னதான் இருக்கிறதென்று புத்தகம் வாங்கிப் படித்தேன். படித்தேன். படித்தேன். படித்து முடித்துதான் புத்தகத்தைக் கீழே வைத்தேன். பிறகு திரும்பவும் முதல் படத்தை டிவிடியில் பார்த்தேன். வாவ்! அற்புதக் காவியமது. அடுத்தடுத்த பாகங்களும் அருமையோ அருமை. டொல்கியனின் கற்பனையை அப்படியே கண்முன்னே கொண்டு வந்த பீட்டர் ஜேக்சனையும் பாராட்டித்தான் ஆக வேண்டும்.


  2. rv said...

    பின்னூட்டத்திற்கு நன்றி, திரு. g. ragavan

    இத்தனை நாட்களாக இந்த அரிய பொக்கிஷத்தை எப்படி மிஸ் பண்ணோம் என்பது பெரிய கேள்வி.

    மூன்று படங்களின் (ஒரே படத்தின் மூன்று பாகங்கள்?) extended dvd களையும் சேர்த்தால் கிட்டத்தட்ட 11 மணி நேரங்களுக்கு மேல் வரும். டிவிடியில் எந்தப் படத்தைப் பார்க்கும்போதும் எனக்கு ஒரு கெட்ட பழக்கம். குறிப்பாக படம் சுமாரென்றால் Time Remain எவ்வளவு என்று 10 நிமிடத்திற்கு ஒருதடவையாவது பார்ப்பது வழக்கம்.

    இந்தப் படங்களிலும் பார்ப்பேன். ஆனால், ஐயோ இன்னும் 1 மணி நேரம் தான் இருக்கிறதா? இன்னும் 10 நிமிஷம் தான் மிடில் எர்த்தையும் "நம்" frodo, gandalf போன்றோரைப் பார்க்க முடியுமா என்ற வருத்தந்தான் வரும். இந்த EE version-களில் படம் பார்த்தபின் இன்னும் முழு திருப்தி. PJ ஏன் இதையெல்லாம் கட் செய்தார் என்று. ஒரு படமென்றால் 3 மணி நேரந்தான் இருக்க வேண்டும் என்று ரூல் ஏதும் இருக்கிறதா தெரியவில்லை.

    New Zealand is also breathtaking.

    Bombadil எனக்குப் பிடித்த இன்னொரு கதாப்பாத்திரம். அவர் விடுபட்டு போனது கொஞ்சம் வருத்தம். ஆனால் முதல் படத்திற்குப் பின், புத்தகங்களைப் படித்தபின் என்னால் ரிவெண்டெல், மொரியா போன்றவற்றை PJ வின் கற்பனை வழியாகவே பார்க்கமுடிகிறது. அது அவரின் வெற்றி, என்னளவிலாவது.

    இந்த EE version-களில் உள்ள documentries & appendices-உம் தரத்தைப் போல் இது வரை எந்த டிவிடியிலும் நான் பார்த்ததில்லை. அவையே 6 Disc தனியாக. எத்தனை ஆயிரக்கணக்கானோர் 5-7 வருடங்களாக இதற்காக உழைத்திருக்கின்றனர். ஒவ்வொரு காட்சியிலும் உள்ள attention-to-detail பிரமிக்க வைக்கிறது. அதுவும் தவிர, வழக்கமாய் இந்த மாதிரி எக்ஸ்ட்ரா features-இல் mutual back-patting தான் இருக்கும். ஆனால் இதில் தொழில்நுட்பத்தில் ஈடுபாடு உள்ளோர்க்கு புதையலே இருக்கிறது. ஷாட் அமைப்பிலிருந்து, லைட்டிங், மினியேச்சர் வர்க் என்று பலவற்றைப் பற்றியும். இவற்றிலிருந்து நான் கற்றுக் கொண்ட இரண்டு விஷயங்கள். Forced Perspective மற்றும் Grading. ரொம்ப நல்ல வித்தைகள்.


  3. G.Ragavan said...

    அடடா! நீங்கள் EE பார்த்தீர்களா? என்னுடைய வயிறு எரிகின்றது போங்கள். இந்தியாவில் அது கிடைப்பதில்லை இராமநாதன். என்னிடம் இருக்கின்ற மூன்றும் ஒரிஜினல் டிவிடிதான் ஆனால் EE இல்லை. அதில் ஃபெராமியர் பற்றி நிறைய வருகிறதாம். புத்தகத்தில் எனக்குப் பிடித்த பாத்திரங்களில் ஃபெராமியர் முதலிடம் பெறும்.

    டாம் பாம்படில் பாத்திரம் திரைப்படத்தில் இல்லை. அதே போலத்தான் சாருமான், வார்ம் டங் ஆகியோரின் முடிவும். இயோமருக்கும் ஃபெராமியருக்கும் காதல் அரும்பும் பக்கங்களும் சுகமானவை. ஆனால் திரைப்படத்த்தில் காட்டினால் சுகப்படாது.

    ஐயோ! நீங்க EE பாத்துட்டீங்களே! எனக்கில்ல. எனக்கில்ல.

    அப்புறம் எண்டுகளிடமிருந்து வாங்கிக் குடிக்கும் இரண்டு ஹாபிட்டுகளும் வளருவதும் இருக்குல்ல அதுல.........ஹோ!!!!!!!!!!

    அது சரி? ஹாபிட் படித்திருக்கின்றீர்களா?


  4. G.Ragavan said...

    சொல்ல மறந்து விட்டேன். அந்த ஸ்பெஷல் ஃபியூச்சரில்......படப்பிடிப்பின் நடுவில் எடுத்த குறும்படும் ஒன்று வருமே.....அது அருமை. மூவர் சேர்ந்து ஒரு சுவரொட்டியை ஒட்டுவது.


  5. rv said...

    Hi Raghavan
    yeah, In all almost 55 minutes of extra footage is there in the EE. a bit of the Houses of Healing scene is there with Faramir and Eowyn. Also in the theatrical version its not explained much as to why Denethor sends Faramir almost to his death to recapture Osgiliath. That crucial scene where Denethor comes to know that Faramir let Frodo and the ring leave voluntarily - which is one of the reasons for his hating Faramir is there in EE. Dont know why PJ left it out. plus a beautiful scene with Faramir and Pippin about the armor Pippin gets to where as the guard of the Citadel.

    The Paths of the Dead scene is longer and scarier and how Aragorn captures the Pirate Corsairs ships (with a sweet cameo by PJ as the captain of the ships :) ) also fall nicely in place in the EE. Try to get hold of it, surely some Rental shops must be having it.

    Faramir's scene before he leaves when Denethor is eating and the subsequent song by Pippin are indeed magical moments in the movie. But i think it was there in the original version. Also another scary scene is the Voice of Sauron at the Black Gate.

    As for Saruman's end, i think PJ did it very wisely rather than go into the almost 60-70 pages of the Saruman's fate after the hobbits return home in the original book.

    I havent read Hobbit and The Silmarillion yet. Have you? I have heard Silmarillion is more colossal than LOTR itself.


  6. G.Ragavan said...

    my god......i need to watch those extended versions.......i neeeed to.

    i hv read hobbit, but not silmarillion.

    Silmarillion has many more scenarios which were not explained in LOTR. This also deals with how Sauron managed to slip the rings to elfs, dwarves and kings....etc.

    Let me check...I guess I hv the e-copy. I'll send it across if found.


 

வார்ப்புரு | தமிழாக்கம்