இன்றுதான் "அமெரிக்கா தாக்கப்பட்டால்" என்ற பெயரி; பலவகை கற்பனை scenario-களை அடக்கிய மெகாகட்டுரை கண்ணில் பட்டது. இது இன்னும் classified-ஆகவே இருப்பதாக இந்த வலைத்தளம் கூறுகிறது. இருந்தாலும் வலையில் public domain-இல் இருப்பதால் இதைப் பற்றி சுட்டி கொடுப்பதில் எந்தவித சட்டச்சிக்கலும் இருப்பதாய் தோன்றவில்லை. அப்படி இருக்குமாயின் வலைப்பதிவர் தயவு செய்து சொன்னால் மைக்கேல் செர்ட்டாப் என்னைப் பிடிப்பதற்கு முன் இப்பதிவை அழித்துவிடுவேன். (ஜெஜெவின் ஆட்டோக்கே பயமாய் இருக்கு. F16, bunkerbuster லாம் நினச்சே பாக்க முடியல :( )
அணு, ரசாயன மற்றும் பயாலாஜிக்கல் தாக்குதல்கள் மட்டுமின்றி இயற்கை சீற்றங்கள் போன்றவற்றிலும் அமெரிக்காவின் பல்வேறு ஏஜன்சிகளில் தயார்நிலை, response மட்டுமல்லாமல் estimated உயிர், உள்கட்டுமான மற்றும் பொருளாதார இழப்புகள் மற்றும் recovery status குறித்தும் விரிவாக உள்ளது. பயனுள்ளதாய் இருக்கும் என்று நம்புகிறேன்.
இந்த மாதிரி விஷயங்களின் இந்திய அரசின் கொள்கைகள் என்னவென்று தெரிந்தோர் விளக்கினால் நன்றாக இருக்கும். இந்த மாதிரி ஏதாவதொரு அமைப்பு இருந்துதான் ஆக வேண்டும், இல்லையா? சுனாமி தாக்குதலிற்கு பின் எனக்கு தெரிந்த வரையில் என்.ஜி.ஓ-க்களையும், இந்திய மக்களின் கருணையான நிதியுதவியையுமே பாதிக்கு பாதி நம்பியிருந்ததாக எனக்கு பட்டது. இந்த என் நம்பிக்கை தவறாக இருக்குமென்றும் எனக்கு ஒரு அசட்டு நம்பிக்கை இருக்கிறது.
திரும்பவும் சொல்கிறேன். இது மெட்டி ஒலியின் திரைக்கதையை விட பெரிதான கட்டுரை!
பிகு: blogger.com செய்த குழப்பத்தினால் மறுபதிவு இடவேண்டியதாகிறது. மன்னிக்கவும். மேலும் ???????? என்று பல வலைப்பதிவுகளில் blogger.com குழப்பி வருவதால் Ramanathan என்று ஆங்கிலத்தில் மாற்றியுள்ளேன்.
அமெரிக்கா தாக்கப்பட்டால்...
Subscribe to:
Post Comments (Atom)
3 Comments:
ராமநாதன்,
பொதுவாகவே பெரும்பாலான மேற்கத்திய நாடுகளில் திட்டமிடல் மிகவும் பாராட்டத்தக்க வகையில் இருக்கிறது.
பொதுவாகவே strategic planning என்பதாக நிறைய கல்லூரிகளில் வகுப்புகள் உண்டு... மேலும் கல்லூரிகளிலும் மற்ற அறிவு சார்ந்த இடங்களிலும் think tanks என்ற வகையில் மூலம் நிபுணர்கள் அரசுக்கு அறிவுரை கூறுவார்கள்... இந்தியா சில ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தான் யுத்தம் வரும் என்று பயமுறுத்தல் இருந்த போது அணு ஆயுத தாக்குதலுக்கு எப்படி ஈடு கொடுப்பது என்பதான வழிமுறைகளை வகுத்து அதை விளம்பரமும் படுத்தியதாக ஞாபகம்.
கருத்து சொல்ற அளவுக்கு இன்னும் நான் வளரல. இருந்தாலும் உங்க மானத்த காப்பாத்த போனா போவுதுன்னு ஒரு ஓட்டு போட்டு வைக்கிறேன். அப்படியே எங்க தொகுதிக்கும் ஒரு சுற்றுப் பயணம் செய்தால் நல்லது. (தமிழ்மனத்துல அடிக்கடி தலை காட்டனும்னா இது ஒன்னுதான் வழி?)
Post a Comment