இது ஒரு கோடைக்காலம்!!! - ஹாட் பதிவு

ஹும்ம்.. 6 மாசத்துக்கு மேல் தொடர்ந்து இருந்த பனிக்காலம் முடிந்து கோடைக்காலம் வந்து 1 மாதத்திற்கு மேலாகி விட்டது. பனிக்காலத்தில் தெருவில் walk போவதே அபூர்வம். வேலைக்கு போனோமா, திரும்ப வீட்டுக்குள்ள ஓடிவந்து ஹீட்டர தட்டி விட்டோமானே நேரம் போய்டும். அதுவும் வெளியே கிளம்பரத்துக்கு முன்னே ஏதோ போருக்கு ஆயத்தமாறதப் போல, ஒரு long john, அதுக்கு மேல டீ ஷர்ட், அதுக்கும் மேல ஒரு முழுக்கை சட்டை அப்புறம் கடைசியா நிலாவுக்கு போறதுக்கே பயன்படுத்தக்கூடிய தடிமன்ல ஒரு பெரிய ஜாக்கெட் இப்படி இதயெல்லாம் போட்டு கழட்டுறதுக்கே அரைமணி நேரம் ஆகும்..

இப்போ கோடை வந்தாச்சு. வெயில் பிச்சு கொளுத்துது. டி-ஷர்ட், ஒரு அர-ட்ரவுசர், நம்மூர் செருப்பு (இந்த ஷூ வக் கண்டுபிடிச்சவன அன்னியன் தான் கவனிக்கனும்) என்று ஜாலியா சாயங்காலத்துல கிளம்பி ஒரு பெரிய ரவுண்டு அடிச்சிட்டு வர முடியுது. அதுவும் இராத்திரி 12 மணி வரைக்கும் நல்ல வெளிச்சம் இருக்கறதால் கவலையே யில்ல..

தெருவுல கொஞ்ச நேரம் காலாற நடந்தா.. அடாடாடா..காணும் காட்சிகளே தனிசுகந்தான்... முழுச்சட்டை, பாதிச்சட்டை மற்றும் சட்ட 'மாதிரி', இதிலே ஸி-த்ரு, not so ஸி-த்ரு என்று வரைட்டிகள்... இதுல எத்தன கலர் எத்தன டிசைன். நினச்சுப் பார்த்தாலே தல சுத்தும். இதுக்கு மேல.. சாரி.. கீழ.. பேண்ட்.. இதுகளயும் மேலே சொன்னா மாதிரி முழுசு, அரை அப்புறம் ரொம்பவே குறைன்னு வகைப்படுத்தலாம். இதிலேயேம் ஸீ-த்ருக்கள் உண்டு. பேண்ட், ட்ரவுசர் அப்புறம் ஸ்கர்ட் அப்புறம் இதிலேல்லாம் சேர்க்கவே முடியாத கவுன் வகைகளையும் பாக்கலாம். இப்படி மேலேயும் கலர் காம்பினேஷன் பாத்தா காணக்கண்கோடி வேண்டும்னு தான் தோணும். இதத்தவிர கண்ணப் பறிக்கும் வண்ணங்களில் கைப்பை.. ஷூ, செருப்பு, சாண்டல்ஸ்..இதெல்லாம் ஒண்ணா ரெண்டா, ஆயிரக்கணக்கிலில்ல இருக்கு. பாக்க பாக்க திகட்டாம இன்னும் பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கும்..

என்னதான் சொல்லுங்க.. விண்டோ ஷாப்பிங்க் பண்ற சுகமே தனிதான்! :)

Jay & Silent Bob Strike Back-ம் தமிழ்மணமும்

Jay and Silent Bob Strike Back படத்திலிருந்து கீழ்வரும் வசனங்கள் ஏனோ சிலநாட்களாகவே தமிழ்மணத்தில் உள்ள பல பதிவுகளையும் குறிப்பாக இடப்படும் பின்னூட்டங்களையும் பார்க்கும் போது நினைவுக்கு வந்து தொலைக்கிறது... புள்ளிகளுக்கு பதில், இங்கே எதைப்பற்றி அடித்துக்கொள்கிறார்கள் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்..

"Banky: That's what the internet is for. Slandering others anonymously. "
---
"Jay: What buzz?
Holden: The Internet buzz.
Jay: What the [expletive] is the Internet?
Holden: It's a place used the world over where people can come together to bitch about movies [/........] and share pornography together."
---
"Holden: Nothing. The Internet has given everybody in America[/.........] a voice. For some reason, everybody decides to use that voice to bitch about movies [/........]. "

படம் நல்ல காமெடி..இந்த மாதிரி கலக்கல்கள் படம் முழுதும்... நேரம் கிடைத்தால் பாருங்கள்...
:)

உங்கள் வாழ்க்கை விற்பனைக்கு!

இன்று கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட இணையதளங்களில் காரசாரமாய் அவுட்சோர்சிங் பற்றி சண்டைப் பிடித்துக் கொண்டிருக்கும் வேளையில் பிரிட்டிஷ் tabloid பத்திரிகையான சன்-னில் வெளிவந்த இந்த செய்தியும் இன்னமும் சூட்டைக் கிளப்பிருக்கிறது.

டெல்லியை சேர்ந்த ஒரு ஐ.டி ஊழியர் தலைக்கு வெறும் 4.75 பவுண்டுகள் வாங்கிக்கொண்டு 1000-த்துக்கும் மேற்பட்ட ஆங்கிலேயர்களின் வங்கி கணக்குவழக்கு, கடவுச்சொற்கள், தனிப்பட்ட விவரங்கள் என்று விற்றுள்ளார். மாதத்திற்கு 2000-மாவது மேலும் சப்ளை செய்ய முடியுமென்று வேறு பிதற்றியுள்ளார்.

//
CROOKED call centre workers in India are flogging details of Britons’ bank accounts, a Sun probe has found. //

டெல்லியில் ஒருவரால் செய்யப்பட்ட விஷயம் இந்தியா முழுவதுமுள்ள எல்லா கால்செண்டர்களிலும் இத்தகைய வசூல்ராஜாக்களால் நடக்கிறது என்று பொருள்படும்படி, வேண்டுமென்றே திரிக்கப்பட்டிருப்பதாக எண்ணத்தோன்றுகிறது.

தவறு நிகழ்ந்தது உண்மைதான். சம்பந்தப் பட்டவர் மேல் கண்டிப்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதுதான் இந்தியாவின் எதிர்காலத்திற்கு நல்லது. அதை இந்தியா செய்யவேண்டும்.

மற்றபடி இந்த சன்-னும் இன்னும் பல இணையங்களும் வேண்டுமென்றே குறிப்பிட மறுப்பது: இது ஒன்றும் முதல்முறையாக நடக்கும் விஷயமில்லை. அவர்கள் நாடுகளிலும் இது போன்று fraud நடந்து வந்தேதான் உள்ளது. இதில் என்னமோ, பல போரம்களிலும் தளங்களிலும், இந்தியாவில் மிகவும் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்வதனால் இந்திய கால் செண்டர் ஊழியர்கள் எதையும் செய்யத்தயங்க மாட்டார்கள் என்று கொஞ்சம் racist-ஆகவே விமர்சிக்கின்றனர். குறைந்த சம்பளம், நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அது மேற்கத்திய நாடுகளோடு ஒப்பிடும்போது தான். இந்திய நிலையில் பார்த்தால் மிகவும் நல்ல சம்பளமாகவே தெரிகிறது. என்ன டெல்லியில் 250Rs கொடுத்தால் ஒரு ஆளின் பெயர் கிடைக்கும். 500Rs ஆகக்கொடுத்தால் லண்டனிலும் நியு யார்க்கிலும் இதே தகவல்களை வாங்கலாம்.இல்லையா? சீப்பாக கிடைப்பது தான் பிரச்சனையா? இல்லை கிடைப்பதுவே பிரச்சனையா?

இந்தியாவையும் சீனாவையும் போட்டு மெல்லாமல் இருக்கு முடியாது என்று நினைக்கிறேன். இந்த வேலைகளை வெளிநாடுகளுக்கு கடத்துதல் என்ற வாதமே எனக்கு புரியவில்லை. இப்படி செய்வது யார்? அமுதா பேன்ஸி ஸ்டோரா? இல்லை உங்கள் தெரு டீக்கடையா? மைக்ரோசாப்ட், ஓராக்கிள், டெல் எல்லாம் சர்வதேச நிறுவனங்கள். அவர்களுக்கு எங்கு சவுகரியமோ அங்கே ஆட்களை வேலைக்கு அமர்த்திக்கொள்கிறார்கள். மனித உரிமை பாதிப்பு பிரச்சனை அல்லவே இது. லாபத்தைக் குறித்த பிரச்சனை மட்டுமே.

மெக்டானல்ட்ஸ் அமெரிக்காவில் உதித்ததென்பதற்காக உலகம் முழுவதும் வேறெங்கும் கிளைகள் வைக்கக்கூடாது என்றோ இல்லை எல்லா வெளிநாட்டுக் கிளைகளிலும் அமெரிக்கர்களையே வேலைக்கு வை என்றோ கூறுவது போல் அபத்தமாகவே எனக்கு தோன்றுகிறது.

பிகு: நான் கணினித்துறையை சாராதவன் ஆதலால் ஊடகங்கள் மூலம் வெளியாவதையும், என் நண்பர்களையும் வைத்தே இந்த என் கருத்து. இதில் பரிச்சயமுள்ளோர் கூறினால் நன்றாக இருக்கும்.

ஒரு மஞ்சள் பூ - புகைப்படம் - மீள்பதிவு

டிவியிலும் சினிமாவிலும் தங்கள் முகம் தெரியவேண்டும் என்று மனிதர்கள் பிரேமிற்குள் எட்டிப் பார்ப்பதுபோல் இந்த மஞ்சள் பூவிற்கும் தன் தலை படத்தில் தெரிய வேண்டும் என்ற ஆசையா?

இல்லை காதலிகள் தங்கள் காதலர்களைத் தேடி சுற்றும்முற்றும் பார்ப்பது போல இந்த மஞ்சள் பூவும் தன் காதலைத் தேடுகிறதா?

:)


இடம்: Kodaikanal, Bryant's Park



Image hosted by Photobucket.com


click on picture to view full size

பி.கு: ப்ளாக்கர் செய்த குளறுபடியால் மீள்பதிவு செய்யவேண்டியதாகி விட்டது.

மெட்டி ஒலி பார்க்காததால் தற்கொலை!

சினிமாவிலும், அரசியலிலும் மட்டுமே இருந்து வந்தது இந்த கொடுமை. இப்போ டி.வி க்குமா? உயிர் என்பது ஏதோ ஒரு சாதாரண disposable பொருள் மாதிரி கருதி தூக்கியெறிந்து விடுகிறார்களே.

மெட்டி ஒலி யின் இறுதிக் காட்சியை தாத்தா பார்க்க அனுமதிக்காததால் திருச்சியைச் சேர்ந்த பெண் தற்கொலை செய்து கொண்டார். கொடுமை. சுட்டி

உயிர் என்பதன் மதிப்பு என்ன என்ற புரிதல் இல்லை. விலை மதிக்கமுடியாத உயிரை நாட்டுக்காகவும் வீட்டுக்காகவும் கொடுத்தால்கூட ஒரு பயன் இருக்கும். அதை விடுத்து மெட்டி ஒலிக்காக கொடுத்ததில் நாலு நாட்கள் ஊடகங்களில் பெயர் அறியப் படுவது தவிர வேறு பயனுமுண்டா? 18 தான் வயதாகிறது அந்தப் பெண்ணுக்கு. தாத்தா பாட்டி என்று மட்டுமே குறிப்பிடப்படுகின்றது. அவளின் தாய் தந்தையைப் பற்றி எதுவும் இல்லை. இந்த முதிர்ந்த வயதிலும் இந்தப் பெண்ணை வளர்த்து வந்திருக்கின்றனர் என்பதையெல்லாம் கருதாமல் சுயநலத்தோடு நடந்து கொண்டுள்ளார் இந்தப் பெண். இதில் அவரை மட்டும் குற்றஞ்சொல்லி பயனில்லை. வயதும் ஒரு காரணம்.

இந்த பருவத்திற்கே உரிய பிரச்சனைகள் எல்லோரும் சந்திப்பதுதான். சுதந்திரம் இல்லை என்ற எண்ணம், காதலில் தோல்வி, peer pressure, படிப்பில் தோல்வி என்று பல விஷயங்கள் ஒரு வகை reactive depression-ஐ உருவாக்கி இந்த மாதிரி அப்பாவி உயிர்களை பலி வாங்குகின்றன. இது என்ன பெரிய விஷயம் என்று நாம் ஒதுக்கித்தள்ளும் பிரச்சனைகள் அவர்களுக்குள் சூறாவளியையே உண்டு பண்ணும் என்பதற்கு இது ஒரு சான்று. இதைத் தடுப்பதில் பெற்றோரின், பள்ளிகளின் மற்றும் அக்குழந்தை வாழும் சமூகத்தின் பொறுப்புகள் நிறைய. இந்த வயதினரிடம் சரியான முறையில் ஆலோசனைகள் மட்டும் சொன்னால் போதாது, அவர்களின் எண்ண்ங்கள் தற்கொலைப் பக்கம் செல்லாமல் இருக்க activitiesஇல் ஈடுபடுத்துவது போன்றவையும் அடங்கும். இந்த மாதிரி டிப்ரெஷன் உள்ள குழந்தைகளிடம், தற்கொலை எண்ணம் தோன்றியிருக்கிறது என்பதற்கான அறிகுறிகள்: வீட்டுக்கு தெரிந்தோ தெரியாமலோ மதுப்பழக்கம், சிறுவயதிலிருந்தே பொக்கிஷமாகத் பாதுகாத்து வந்த பொருட்களை திடுமென விட்டு விடுவது அல்லது பிடித்தவருக்கு கொடுப்பது, சகஜமாக இருந்த குழந்தை திடுமென introspect-ஆக மாறி பேச்சு வார்த்தைகளை மற்றவரிடம் குறைத்தல் போன்றவை. இவை இந்த டிப்ரஷன் இல்லாத நிலையிலும் இருக்கலாம். ஆனால் எதற்கும் பெற்றோர்கள், மிக நெருங்கிய உறவினர்கள் பதவிசாக பேசிப்பார்க்க வேண்டும். இந்தப் புரிதலில்லாப் பெற்றோர்களே இத்தகைய தற்கொலைகளுக்கு அடிகோல்வதிலும் பங்குள்ளது.

நான் சொன்னதத்தான் கேட்க வேண்டும் என்று சொல்லாமல், ஏன் என்று எடுத்துச் சொல்வதற்கு நேரமாகாது. அதைச் சொன்னால் அப்போது ஒத்துக்கொள்ளாவிட்டாலும், அதிலுள்ள நியாயம் புரிய வாய்ப்பு உண்டு. அப்படி இல்லாமல் நான் சொன்னா கேட்டுத்தான் ஆகனும்னு சொன்னா, அந்த வயதிற்கே உரிய rebel spirit தலைவிரித்தாடும். அவர்களின் தன்மையைப் பொறுத்து நீங்கள் சொன்னதை செய்தாலும் செய்யாவிட்டாலும், அடிமனதில் தனது தனி மனித சுதந்திரம் மறுக்கப்படுகின்றது என்ற எண்ணமே உருவாகும். பெற்றோர்கள் பதின்ம வயதினரை குழந்தைகளாகவே பாவிக்கின்றனர். அது அவர்களின் அன்பின் காரணமாக. இதனால் சில பிள்ளைகள் குறித்த முடிவுகளை தன்னிச்சையாகவே எடுக்கின்றனர். ஆனால் பதின்ம வயதினரோ, தங்களை young adults ஆக கருதுகின்றனர். அதனால் ஒரு பெரியவருக்கு கிடைக்க வேண்டிய மரியாதையும் சுதந்திரமும் தனக்கும் வேண்டும் என்று எதிர்ப்பார்க்கின்றனர். இந்த இரு பிரிவினரின் புரிதலில் கெடுதல் இல்லை. ஆனால் நேராக மோதிக்கொள்ளும் போது ஒரு சாரார் காயமடையத்தான் செய்கின்றனர்.

"This too shall pass" என்பதை புரியாத வயதில் உள்ளோரை இந்த முடிவுக்கு தள்ளுவதில், இது போன்ற விஷயங்களுக்காக உயிரை மாய்த்துக்கொள்வது என்னவோ சுதந்திரத்துக்காக உயிரைக் கொடுத்தது போல் பெரிது படுத்தும் சினிமா, பத்திரிகைகள் போன்றவற்றிற்கும் பங்குள்ளது.

பெற்றோர்கள் தங்களின் இறந்த பிள்ளைகளுக்கு ஈமக்கிரியைகள் செய்வது போல் வாழ்க்கையில் ஒரு கொடுமை இருக்க முடியுமா? வயதான தாத்தா பாட்டிகளினால் இதை எப்படி தாங்கி கொள்ள முடியும்? எனக்கு அந்தப் பெண்ணை குறித்து பரிதாபம் கொஞ்சம். ஆனால் நான் மிகவும் பரிதாபப்படுவது அந்த வயதான தம்பதியினரைப் பற்றித்தான்.

உலகின் பல நாடுகள், விவரிக்க முடியாத வலி, terminal stage நோய்கள் என்று மருத்துவத்தாலேயே கைவிடப்பட்ட பல ஆண்டுகளாக 24 மணி நேரமும் அவதிப்படும் நோயாளிகளுக்குக்கூட அவர்களின் சொந்த விருப்பின் பேரில்கூட கருணைக்கொலை செய்வதை தடுக்கின்றன. இந்த medical euthanasia ரொம்பவும் சர்ச்சைக்குள்ளானது. இதில் நிபுணர்களாகிய மருத்துவர்களுக்குகூட, சரி இந்த உயிர் இனி வாழாது, இதன் பிணியையாவது அதன் விருப்பத்தின் படி போக்கலாம் என்பதற்கு உரிமை கிடையாது.

மற்றவர்க்கு எப்படியோ? பிள்ளைகள் பிறக்காதா என்றும் இன்னும் கொஞ்ச நாளாவது உயிரோடு இருக்க முடியாதா என்றும் தினந்தோறும் அரச மரத்தையும் பிள்ளையாரையும் சுற்றுபவர்களுக்கே உயிரின் அருமை புரியும்.

இன்றைய தமிழ் சினிமா குறித்து என் பார்வை

கோழியால் முட்டை வந்ததா என்பது போலத்தான் ரசிகர்களால் சினிமா கெட்டதா இல்லை சினிமாவினால் ரசிகர்களா என்ற கேள்வியும். சமீபத்தில் பத்ரி சேஷாத்ரி அவர்களின் பதிவில் என்று நினைக்கிறேன் இதைப்பற்றி கருத்துக்கள் வந்தன. சந்திரமுகி என்னும் சுமாரான படத்தில் இருக்கும் ஓட்டைகளை அவர் சுட்டிக்காட்டுவதே தப்பு என்பது போலவும் பின்னுட்டங்கள் பார்த்தது நினைவுக்கு வருகிறது.

சினிமா என்பது கலைநயத்துடன் ரசிக்கப்படுவதா? சமுதாயத்திற்கு பயனுள்ள வகையில் இருக்கவேண்டுமா? இல்லை வெறும் தீம் பார்க்குகள் போல் வெறும் ஜனரஞ்சக பொழுது போக்கு சாதனமாக மட்டுமே பார்க்கப்படுகிறதா? இதுதான் அடிப்படைக் கேள்வி என்று நினைக்கிறேன். இந்தப் பிரிவு எலீட் மற்றும் பாமர மக்களுக்கு இடையேயான வித்தியாசமாகவே வெளிப்படுகிறது. இதற்கு நடுவே ஒரு பிரிவு, சினிமாவின் technical விஷயங்கள் குறித்து கவலைப்படாமல் கலைப்படமாய் நம்மை பாதித்தாலும், மசாலாவாய் நம்மை குஷிப்படுத்தினாலும் அதை ஏற்றுக்கொள்வது என்ற நிலையில் ஒரு பகுதியினர் இருக்கின்றனர். இந்த வகையில் நானும் சேர்த்தி.

இந்தியாவில் இருந்த வரை ஜாக்கி சான், ஸ்டாலோன், புரூஸ் லீ, அர்னால்ட் ஆகியவர்களை மட்டுமே கொண்ட ஹாலிவுட்டை அறிந்தவன் நான். அப்போது அந்தப் படங்களில் காட்டப்படும் விஷயங்களுக்கும் நம்மூர் மசாலாப்படங்களில் உள்ளவற்றிற்கும் technical level-இல் தவிர வேறெந்த வித்தியாசமும் இருந்ததாய் பட்டதில்லை. பின்னர், வெளியிலிருக்கும் போது, தமிழ் சினிமா பார்ப்பது குறைந்தது. குறைந்தது ஆர்வமில்லை. availability-தான்.

subtlety, underplay - இவற்றிற்கெல்லாம் விடைகள் கிடைத்தது இந்தியாவை விட்டு வந்த பின்னர் தான். இவை இந்தியப் படங்களில் இல்லாதது கலாச்சார ரீதியில் விளக்க முடியுமென்பது என் கருத்து.

தனி மனித வழிபாடு என்ற ஒன்று மேற்கத்திய நாடுகளை விட நம்நாட்டில் அதிகம் இருக்கிறது. சினிமாவில் மட்டுமில்லை, அரசியலிலும் இருக்கிறது. ஹிந்தியில் கூட ஷாருக் பட ரீலீஸிற்கு கற்பூரமும், பாலாபிஷேகமும் நடப்பதாக தெரியவில்லை. ஆந்திராவிலும் நம்மூரிலுமே பரவியிருக்கிறது. தனி மனித வழிபாடு அவரவரின் சொந்த விருப்பு வெறுப்பென்று சொல்ல முடியுமாவென்று தெரியவில்லை. இந்த வழிபாட்டினால் உருவாக்கப்படும் இமேஜ் என்ற போலித்தன்மையே நல்ல சினிமாக்களை கெடுக்கிறது. நல்ல சினிமா என்றால் மசாலாவாக இருந்தாலும் நல்ல மசாலாப்படம் என்று இருக்கவேண்டும். நம் சினிமா நடிக நடிகையரை இந்த இமேஜைவைத்தே எடைபோடுகிறது. casting என்பது அடிப்படையான விஷயம். கதையில் ஒரு கதாப்பாத்திரத்துக்கு ஒருவர் பொருந்துவாரா என்று பார்ப்பதே அது. ஹாலிவுட்டில் எப்பேர்ப்பட்ட ஹீரோவாயிருந்தாலும் காஸ்டிங் முறையில் மறுக்கும் இயக்குநர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். ஹீரோ கதாப்பாத்திரம் ஆனாலும் கதையின் ஒரு அங்கமே. நம் சினிமாவில் என்ன நடக்கிறது? ஒரு ஸ்டார் நடிகருக்காக, அவரின் போலி இமேஜிற்காக கதாபாத்திரத்துக்காக கதை உருவாக்கப்படுகிறது. கருவாக்கமே தவறாயிருக்கும் போது குழந்தை எப்படி சரியாக இருக்க முடியும்? இந்த இமேஜ் வட்டத்திற்குள், ஓரளவிற்கு சிக்காமல் இருப்போர் விக்ரம், சூர்யா, கமல், சிவாஜி போன்றோர். ஓரளவிற்குத்தான். ஹீரோயின்கள் தேர்வு இன்னும் மோசம். விஜய் திரிஷா நடிச்ச கில்லி பிச்சுகிட்டு ஓடிச்சு. அதனாலே அடுத்த விஜய் படத்திற்கு திரிஷாதான் ஜோடி என்ற அபத்த கான்செப்ட் தான் நிலவிவருகிறது. புதுமுகங்கள் தேர்விலும் சில பிரச்சனைகள். ஆயிரத்தில் ஒருவருக்கே காமிரா முன் நடிப்பது இயற்கையாய் வரும். பலருக்கு திறமை இருந்தாலும் அதை தீட்டிக் கொள்ளவேண்டும். ஆனால் இந்த விஷயத்தில் பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் நடிப்புக்கலை படிப்பவர்க்கு சினிமாவை விட்டால் வேறு வழியில்லை என்ற நிலை தமிழகத்தில் நாடகங்கள் நசிந்த்தால் ஏற்பட்டது என்பது என் கருத்து.

நல்ல மசாலா என்று நான் சமீபத்தில் பார்த்த ஆங்கிலப்படங்களில் முதலிடம் Kill Bill 1&2 தான். வழக்கமான பழிவாங்கும் கதைதான் என்றாலும் அதை செயல்படுத்திய நேர்த்தியும் தரமும் வியக்க வைக்கின்றன. இந்தப் படத்திலிருந்து பல விஷயங்களை கேவலமாக உருவி "கரம்" என்று ஜான் ஆபிரஹாம் நடித்த கண்றாவியையும் பார்த்தேன். இரண்டையும் பாருங்கள், வித்தியாசங்கள் தெரியும்.

மேட்ரிக்ஸில் கியானு காற்றில் zero gravity-இல் குதிக்கிறார், தோட்டாக்களை dodge செய்கிறார் என்றால் என்னதான் இயற்பியலுக்கு மாறுபட்டு இருந்தாலும், ஏன் அதைச் செய்கிறார் கதைக்கும் அதற்கும் என்ன தொடர்பு போன்றவற்றை விளக்கவாவது முயற்சி செய்தனர். இங்கே கேப்டனும், சூப்பரும், இளையதளபதியும் அதையே சிறிதும் கதைக்கு ஒவ்வாமல் செய்வது காமெடியாக அவர்களுக்கே படவில்லையா? குருட்டாம்போக்கில் காப்பியடிக்காமல் சுயமாக யோசிக்கலாமே. ஆட்டோகிராப், காதல் போன்ற படங்கள் வரும் நேரத்திலே நாம் இதெல்லாம் செய்து கொண்டிருக்கிறோமே என்று நினைத்துப் பார்க்கவேண்டும். அவர்களின் genre-வைக் குறை சொல்லவில்லை, ஆனால் பலசமயங்களில் அப்பட்ட காமெடியாய் இருக்கும் இந்த வகைக் CGI காட்சிகளுக்கு பணத்தை வாரியிழைக்காமல் கதையிலும் இயக்கத்திலும் கவனத்தைச் செலுத்தலாம். மசாலா கொடுத்தாலும் நல்ல மசாலாவைக் கொடுக்கலாமே. ரஜினியின் ரசிகன் என்ற வகையில் நான் எதிர்ப்பார்ப்பது கொஞ்சம் வித்தியாசமான genre-க்களை முயற்சி செய்து பார்க்கவேண்டும். அவரின் நடிப்பின் மேல் இன்னும் நம்பிக்கை இருப்பதே இந்த எதிர்ப்பார்ப்புக்கு காரணம். மசாலாக்களின் ராஜா நீங்கள் தான் என்று நிருபித்தாகிவிட்டது. மிச்சவற்றிலும் முத்திரை பதிக்கலாமே. விஜய் மசாலாப்படங்களிலேயே நடிப்பேன் என்று கூறுவது அவரின் சொந்தக்கருத்து. எனக்குத் தெரிந்தவரையில், எந்த வேலையானாலும் பியூன் குமாஸ்தாவாக உழைப்ப்தும், குமாஸ்தா அவர் பங்குக்கு மானேஜராக நினைப்பதும் தான் இயற்கை. இதில் நான் பியூனாகவே இருந்து கொள்கிறேன் என்று சந்தோஷப்பட்டுக்கொள்வது அவரின் விருப்பம்.

அதே போல் என் சந்திரமுகி குறித்த பதிவில் குறிப்பிட்டது போல போலீஸோ, ராணுவமோ, மருத்துவமோ எதைப்பற்றியும் ஒரு படத்தில் கூற முற்படும் போது அந்த துறை சார்ந்த வல்லுனர்களை கலந்தாலோசித்து சித்தரித்தால் அது படத்தை இன்னமும் மெருகூட்டும். பணம் ஒரு பிரச்சனையே இல்லை என்ற வகையில் கண்டதிற்கும் செலவிடும் தயாரிப்பாளர்கள் இதைக் கவனித்தால் நன்று.

ரசிகர் மன்றங்கள் - எனக்கு தெரிந்தவரையில் appreciation society-களின் அடிப்படையிலேயே தோன்றியிருக்க வேண்டும். இதில் ஒரு குறிப்பிட்ட நடிகர் நடித்த படத்தை ஆராய்ந்து பார்த்து நல்லது கெட்டது குறித்து விவாதம் நடத்த வேண்டியதே ஆக்கபூர்வமான செயலாகும். போஸ்டர், பந்தல், தோரணம், கட் அவுட் வைப்பது அல்ல. சேவைகள் செய்வது
வரவேற்புக்குரியதென்றாலும் மேற்கூறியவை நெருடுகின்றன.

பாடல் காட்சிகள் திரையில் இடம்பெறுவது குறித்து எனக்கு பிரச்சனையில்லை. அது நம் நாட்டு கலாச்சார வெளிப்பாடு. ஆனால் எங்கு தேவையோ அங்கு மட்டுமே பாடல்களை வைக்கவேண்டும். ஒரு படமென்றால் 5 பாடல்கள் இருக்கவேண்டும் என்பது ஒன்றும் விதியல்ல. சில வகைப் படங்களில் பாடல்களுக்கு தேவையே இருக்காது. அவற்றில் ஏதோ வேண்டுதல் மாதிரி புகுத்தலைத் தவிர்க்க வேண்டும்.

வசனகர்த்தாக்களும், கதாசிரியரும் மற்றும் திரைக்கதாசிரியர்களுக்கும் உண்மையான அங்கிகாரமும் சன்மானமும் கொடுக்க படுவதில்லை. இவை ஒரு profession-ஆக கொண்டோர் சிலரே இருப்பதாலேயே கதைப்பஞ்சம் நிலவுவதாக எனக்கு ஒரு conspiracy theory-யே உண்டு. ஹாலிவுட்டில் Charlie Kaufman என்று ஒரு கதாசிரியர் இருக்கிறார். பல முன்னணி ஹீரோக்களுக்கு இணையாக சம்பளம் வாங்குகிறவர். இவர் கதையெழுத்தித் தர மாட்டாரா என்று ஹீரோக்களும் இயக்குநர்களும் காத்திருக்கின்றனர். நம்மூரில் என்ன நிலை? யாராவது எழுதின கதையை சுருட்டி நகாசு வேலை பண்ணி தன் கதை என்று சொல்லிக்கொண்டு அலைவதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கிறது. இப்படி இருந்தால் புதுப்புது ஐடியாக்கள் எங்கிருந்து வரும்? வெறும் காதல் காதல் என்று எத்தனை நாட்களுக்குத் தான் பழைய மாவையே அரைக்க முடியும்? வாழ்க்கையில் காதல் ஒரு அங்கம் தானே தவிர, அதுவே வாழ்க்கை என்பது போலல்லவா சிந்திக்கிறது தமிழ் சினிமா? (CK-வைப் பற்றி சொல்லும்போது அவரின் படங்களில் எனக்கு மிகவும் பிடித்தவை Adaptation, Being John Malkovich, Eternal Sunshine of the Spotless Mind. வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள்.)

அடுத்து தமிழ்ப் பெயர்களைப் பொறுத்தவரையில், ஒரு கதைக்கு பொருத்தமாக என்ன பெயர் வைக்க வேண்டும் என்பது கதாசிரியர், இயக்குநர் மற்றும் படத்தயாரிப்பு நிறுவனம் தொடர்புடைய விஷயம். நாம் தலையிடுவது வேண்டாத விஷயம். இல்லையென்றால் B.F படத்தின் பெயரை அ...ஆ.. என்று கீழ்த்தரமாக மாற்றப்பட்டது போலவே விளைவுகள் இருக்கும். தமிழில் இருக்கவேண்டும் என்று வலியுறுத்தலாம், இல்லை நாம் சொல்வதை கேட்போரிடத்தில் மட்டும் அந்த படத்தை புறக்கணி என்று கட்டளையிடலாம். மற்றபடி மிச்சதெல்லாம் வெறும் பிலிம் காட்டுவதுதான்.

எது ஆபாசம்? எது வன்முறை? என்பதில் தான் பிரச்சனையே இருக்கிறது. ஒரு படத்தின் கதையின் தேவைக்கேற்ப படுக்கையறை காட்சிகள் இடம்பெற்றாலும், கலாச்சார சீர்கேடு என்று வானுக்கும் மண்ணுக்கும் குதிக்காமல் சிந்தித்து அணுக வேண்டும். 18 வயதிற்கு மேலுள்ளோருக்கும், திருமணமானவருக்கும் தெரியாத விஷயம் ஒன்றுமில்லை இது. ஆகவே அவர்கள் மட்டுமே பார்க்க அனுமதிக்கவேண்டும் என்ற சான்றிதழுடன் வெளியிடலாம். தியேட்டர்களிலும் செயல்படுத்தவேண்டும். அங்குதான் பிரச்சனை இருக்கிறது. ஆனால் கூடிய சீக்கிரம் நடக்க வேண்டிய ஒன்று. விரச குலுக்கல் நடனங்களும் இந்த விதத்திலேயே கையாளப்படவேண்டும். திறமைமிக்க இயக்குநர்கள் பெண்களை காட்சிப்பொருளாய் ஆட
விடப்படும் பாட்டுகளை அனுமதிக்க தேவையே இருக்காது. இப்படி பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டியதில் சென்ஸார் மற்றும் தியேட்டர்களின் பங்கு இருக்கிறது. சினிமாத்துறைக்கு கொஞ்சம் அதிகப்படியான பொறுப்பு தான் இதில்.

ஆனால் நடப்பு நிலவரம் என்ன? இந்த மாதிரி வயது வந்தோர் சான்றிதழ் கொடுத்தால் பெண்களும், குழந்தைகளும் அடங்கிய பெரிய மார்க்கெட் அவுட்-டாகி விடும். அதனாலேயே இந்த அரைகுறை ட்ரெஸ் ஆட்டங்கள் ஏறக்குறைய எல்லாப் படங்களிலும் இருக்கிறது. இது சற்றும் பொறுப்பற்ற ஒரு செயல். கூழுக்கும் ஆசை என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.

பெண்களை ஏற்கனவே கட்டுக்குள் வைத்திருக்கும் சமுதாயத்தில் அதற்கு மேலும் தீனி போடும் வகையில் காட்சிகள் சித்தரிக்கப்படுவதும் வருத்தத்திற்குரியது. ஹீரோ கதாநாயகியை சர்வ சாதாரணமாக அவமானப்படுத்துவதும், கேலி செய்வதுமாக ஏதோ பெரிய ஆண்மைமிக்க செயலாய் காண்பிக்கப்படுகிறது. இந்த விஷயத்தில் சீனியரிலிருந்து ஜூனியர் வரை எல்லா ஸ்டார்களும் தவறு செய்கிறார்கள். இதெல்லாம் பெண்ணடிமையின்றி வேறில்லை. கதைக்கு தேவையென்றால் அணுகுமுறையில் மாற்றம் வேண்டும். இத்தகைய எண்ணங்கள் தவறு என்று போதிக்கும் அளவிற்கு சமூகப்படங்கள் எடுக்கவேண்டாம். மசாலாப் படமெடுத்தால் இந்த அபத்தங்களைத் தவிர்க்கவாவது செய்யலாம்.

வழக்கம் போல் ரொம்ப பெரிய பதிப்பாகி விட்டது. சுசி. கணேசன், அழகம் பெருமாள், பாலாஜி சக்திவேல், செல்வராகவன் போன்றோர் நம்பிக்கையளிக்கிறார்கள் இதுவரைக்கும். என்ன செய்கிறார்கள் இனிமேல் என்று பார்க்கவேண்டும்.

அனுராக் காஷ்யப்பின் மாஸ்டர்பீஸ் - Black Friday

"An eye for an eye makes the whole world blind - Mahatma Gandhi" என்று தொடங்குகிறது இந்த அற்புதமான திரைப்படம். ஜனவரியிலேயே வெளிவர இருந்து சென்ஸாரால் அனுமதிக்கப்பட்டும், உச்சநீதி மன்றத்தால் தடைவிதிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய படமென்று இணையத்தில் வாசித்த நினைவு இருக்கிறது. நேற்றுதான் பார்க்கமுடிந்தது.

மார்ச் 12,1993 - ஒரு குறுகிய கால நேரத்திற்குள் தொடர்குண்டு வெடிப்புகளால் மும்பையை மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையும் பீதியில ஆழ்த்திய நாள். 250-மேற்பட்ட அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டனர், இன்னும் பல ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். இந்த தீவிரவாதச் செயலைப்பற்றியும், அந்த தீவிரவாதிகளின் சமூகப்பார்வையைப் பற்றியும், விசாரித்த அதிகாரிகளின் பார்வையும், வழக்கை நடத்திய விதத்தையும் விளக்கமாக விவரிக்கும் ஹூசேன் சாயித்தி-யின் "Black Friday" என்ற புத்தகத்தின் தழுவலாய் அனுராக் காஷ்யப் இயக்கியுள்ளார். எந்த ஒரு கதாப்பாத்திரத்தையும் ஜட்ஜ் செய்யாமல், அவர்களின் காரியங்களை கொண்டு படம்பார்ப்போரே ஒரு முடிவுக்கு வரும் வகையில் நேர்மையான நடுநிலைமை படமெங்கும் இருக்கிறது.

மேலும் படிக்க...

அயோத்தியாவில் சமூக மற்றும் சட்ட விரோதமாய் நடத்தப்பட்ட பாப்ரி மசூதி இடிப்பின் எதிரொலியாகவும், பின்னர் மும்பையில் நடந்த கலவரத்தில் இரு மதத்தவரும் செய்த அநியாயங்களின் காரணமாகவும், டைகர் மேமோன் மற்றும் தாவூத் இப்ராஹிம் எப்படி இந்த குண்டுவெடிப்புகளில் ஈடுபட்டனர், இந்த குண்டுவெடிப்புகளை நடத்திய டைகர் மேமோணின் கைப்பாவைகள் எப்படி, எங்கு பயிற்சி பெற்றனர், பின்னர் அவனால் எப்படி வஞ்சிக்கப்பட்டனர், இதில் பாகிஸ்தானின் பங்கு என்றெல்லாம் மிக பொறுமையாக கிட்டத்தட்ட ஒரு விவரணப்படம் போலவே இயக்குநர் தன் திறமையை வெளிச்சம் காட்ட ஒரு சாதனமாக இல்லாமல், underplay பண்ணியுள்ளார். இது மிகவும் பாராட்டுக்குரியது. அதே போல் காமிராவும், எடிட்டிங்கும் narrative-ஐ பாதிக்காமல் பிரமாதமாக உள்ளன.

இது உண்மைக்கதையாதலால் இந்தக்கதைப் பற்றி விமர்சனம் செய்ய இயலாது. சில காட்சிகள் திகில் கிளப்புகின்றன. கர்சேவக்குகளின் முட்டாள்தனத்தாலும், பின்னர் முஸ்லீம்கள் மற்றும் இந்துக்களின் மதவெறிக்கலவரத்தாலும் எத்தகையதொரு mutual துவேஷம் உருவாக்கப்பட்டுள்ளது என்பது பார்த்தால் அதிர்ச்சியைத் தருகிறது. எனக்கு இந்த படத்திலேயே மிகவும் பிடித்த, பாதித்த காட்சியை மட்டும் சொல்லிவிட்டு முடிக்கலாம் என்று நினைக்கிறேன்.

ராஜேஷ் மரியா (கே.கே.மேனன்) பிடிபட்ட பாட்ஷா கான் (ஆதித்ய ஸ்ரீவாஸ்தவ்) என்பவனை விசாரணை செய்யும் காட்சி. பாட்ஷா கான் தங்கள் பக்கமே அல்லாஹ் இருப்பதனால்தான் இப்படிப்பட்ட துணிமிகு காரியத்தில் காபிர்களை கொல்லமுடிந்தது என்றும் பணப்பிரச்சனையும் அல்லாஹ்வின் கருணையாலேயே தீர்க்கப்பட்டது என்று இறுமாப்போடு சொல்வான். அதற்கு ராஜேஷின் பதில் உலகில் உள்ள எல்லா மதப் பிரச்சனைகளையும் தூண்டி தீவிரவாதம் செய்வோர்க்கு சாட்டையடி போன்றது. "இல்லை, அல்லாஹ் இந்த விஷயத்தில் எங்கள் பக்கமே இருக்கிறார்". பாட்ஷா,"என்ன கிண்டல் செய்கிறீர்களா?". ராஜேஷ் - "அல்லாஹ் என்பவ்ர் எல்லாருக்குள்ளும் இருக்கிறார். இப்படி அடுத்தவரை துன்புறுத்தும் விஷயங்களை அல்லாஹ் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார். அல்லாஹ் எங்கள் பக்கமிருப்பதாக நான் கூறுவதற்கு காரணம் இதோ. அவர் உங்கள் பக்கமிருந்தால் நீ என் முன்னால் விசாரணையில் சிக்காமல் வேறெங்கோ தப்பித்திருப்பாய். எங்களுக்கு ஒரு துப்பும் கிடைத்திருக்காது. இரண்டே மாதங்களில் சம்பந்தப்பட்ட 200 தீவிரவாதிகளை எங்களால் கைது செய்திருக்க முடியாது. உன்னோடு அல்லாஹ் இருந்திருக்கவில்லை. வெறும் டைகர் மேமோனே இருந்தான்."

இதற்கு மேல் மதத்துவேஷத்தை வளர்க்கும் கொடியவர்களுக்கு என்ன பதில் வேண்டும். மதத்தின் பெயரால் கொல்லுபவர்கள் தங்கள் சுயநலத்திற்காக மதங்களை திரித்து அப்பாவிகளை கொன்று குவிக்கிறார்கள் என்பதே உண்மை. ஒரு சமூகத்தைப் பற்றியே குறைகூறுகிறமாதிரி தோன்றாமல், நடுநிலையோடு ஒரு சாது (அவர் பேசுகிற பேச்சைக்கேட்டால் சாதுவென்று கூறவே அருகதையற்றவர்) மற்றும் பூரி சங்கராச்சாரியார் (?) ஆகியோரின் நிஜமான இந்து ஆவேச பேட்டிகளும் உள்ளது. இதைத்தவிர பாகிஸ்தானின் ஒரு முக்கிய அதிகாரியிடம் உள்ள பேட்டியும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் வெளிவந்து என்னை மிகவும் பாதித்த, மிகவும் கவர்ந்த திரைப்படங்களின் வரிசையில் இந்த Black Friday-உக்கு இடமுண்டு. "பாம்பே, தில் சே" போன்று சினிமாத்தனமாக இல்லாமல் மிகவும் யதார்த்தமான நடிப்பும் ஒரு பெரிய ப்ளஸ். இதைப்படிப்போருக்கு நான் கூறவிரும்புவது. கண்டிப்பாய் இந்தியர்கள் அனைவரும் பார்க்கவேண்டிய படம். ஒன்றுமே நடக்கவில்லை என்பது போல் பேசும் peace hawks (வேண்டுமேன்றே தான் hawks பயன்படுத்தியுள்ளேன்) இல்லை ஒரு பக்கமே குறை இருக்கிறது என்று தங்களையே ஏமாற்றிக்கொள்ளும் pseudosecularists போன்றோரைப் போலில்லாமல் இருபக்கமும் தவறிருக்கிறது என்று தைரியமாக சொல்லுகிறது இந்தப்படம்.

பிகு: எதற்காக உச்சநீதிமன்றம் அனுமதி மறுத்தது என்று எண்ணிப்பார்க்கும் போது, இப்படத்தில் வருணிக்கப்படும் இஸ்லாமிய தீவிரவாதிகள், இந்துத்வா கரசேவக்குகள்: இதைப்பார்க்கும் radical எண்ணங்கொண்ட இந்துக்களுக்கு இஸ்லாமியர்கள் எல்லோரும் சதிகாரர்களே என்ற வக்ர எண்ணம் உதிக்கலாம். அதே போல் தீவிரமான இஸ்லாமியர்களுக்கு இந்துக்கள் நம்மை அடக்கியாள்வதால், தீவிரவாதமே சரியென்று தோன்றலாம். இன்னும் matured audience-ஆக இல்லாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் நிலையில் நம்மில் பலரும் இருக்கிறோம். திரையில் உள்ளதை ஆராயாமல் இம்மாதிரி வெறும் எமோஷனலாக செயல்படும் mob mentality இருப்பதுதான் முக்கியமான காரணமாய் இருக்கும் என்று நினைக்கிறேன்.

அமெரிக்கா தாக்கப்பட்டால்...

இன்றுதான் "அமெரிக்கா தாக்கப்பட்டால்" என்ற பெயரி; பலவகை கற்பனை scenario-களை அடக்கிய மெகாகட்டுரை கண்ணில் பட்டது. இது இன்னும் classified-ஆகவே இருப்பதாக இந்த வலைத்தளம் கூறுகிறது. இருந்தாலும் வலையில் public domain-இல் இருப்பதால் இதைப் பற்றி சுட்டி கொடுப்பதில் எந்தவித சட்டச்சிக்கலும் இருப்பதாய் தோன்றவில்லை. அப்படி இருக்குமாயின் வலைப்பதிவர் தயவு செய்து சொன்னால் மைக்கேல் செர்ட்டாப் என்னைப் பிடிப்பதற்கு முன் இப்பதிவை அழித்துவிடுவேன். (ஜெஜெவின் ஆட்டோக்கே பயமாய் இருக்கு. F16, bunkerbuster லாம் நினச்சே பாக்க முடியல :( )

அணு, ரசாயன மற்றும் பயாலாஜிக்கல் தாக்குதல்கள் மட்டுமின்றி இயற்கை சீற்றங்கள் போன்றவற்றிலும் அமெரிக்காவின் பல்வேறு ஏஜன்சிகளில் தயார்நிலை, response மட்டுமல்லாமல் estimated உயிர், உள்கட்டுமான மற்றும் பொருளாதார இழப்புகள் மற்றும் recovery status குறித்தும் விரிவாக உள்ளது. பயனுள்ளதாய் இருக்கும் என்று நம்புகிறேன்.

இந்த மாதிரி விஷயங்களின் இந்திய அரசின் கொள்கைகள் என்னவென்று தெரிந்தோர் விளக்கினால் நன்றாக இருக்கும். இந்த மாதிரி ஏதாவதொரு அமைப்பு இருந்துதான் ஆக வேண்டும், இல்லையா? சுனாமி தாக்குதலிற்கு பின் எனக்கு தெரிந்த வரையில் என்.ஜி.ஓ-க்களையும், இந்திய மக்களின் கருணையான நிதியுதவியையுமே பாதிக்கு பாதி நம்பியிருந்ததாக எனக்கு பட்டது. இந்த என் நம்பிக்கை தவறாக இருக்குமென்றும் எனக்கு ஒரு அசட்டு நம்பிக்கை இருக்கிறது.

திரும்பவும் சொல்கிறேன். இது மெட்டி ஒலியின் திரைக்கதையை விட பெரிதான கட்டுரை!

பிகு: blogger.com செய்த குழப்பத்தினால் மறுபதிவு இடவேண்டியதாகிறது. மன்னிக்கவும். மேலும் ???????? என்று பல வலைப்பதிவுகளில் blogger.com குழப்பி வருவதால் Ramanathan என்று ஆங்கிலத்தில் மாற்றியுள்ளேன்.

Ralf Schumacher's accident & நாராயண் இன்னும் தொடரலாமா? தொடருவாரா?

ரால்ப் ஷுமாக்கருக்கு சனிபெயர்ச்சி சரியில்ல போலிருக்கு. போன வருஷம் இண்டியானபோலிஸில் எந்த இடத்தில் 300kmph+ விபத்தில் சிக்கினாரோ, அதே இடத்தில் அதே விதத்தில் திரும்பி இன்னிக்கு விபத்து. ஆள் நல்லவேளையா புழச்சுக்கிட்டார்னாலும் திரும்பவும் அதே மாதிரி செய்யறது கொஞ்சம் புதுசு. டயர்கள் பாதிக்கப்பட்டிருக்குமோன்னு ஒரு கருத்து இருக்கு.

நாராயண். நம்மூர்லேர்ந்து ஒரு ஆள் முதமுதலா F1 போயிருக்கார்னு சந்தோஷமா இருந்தாலும், எனக்கென்னவோ நாராயண் இந்த வருஷம் ஓட்டறதுக்கு காரணம் டாடா கொடுத்த 10 மில்லியன் டாலர் தான் னு தோணுது. எங்கேயோ படிச்ச ஞாபகம் இருக்கு. F1 grid என்ன ஐ.நா சபையா? எல்லா நாடுகள்லேர்ந்தும் ஆட்கள் இருக்கனும்கறத்துக்கு?-னு கேள்வி கேட்டுருந்தாங்க. அது சரியாகத்தான் படுது. இதுக்கு முன்னாடி அவர் இருந்த பார்முலா நிஸ்ஸான்-ல கூட அதிக பட்சம் வந்தது நான்காவது இடந்தான். மிச்ச சாம்பியன்ஷிப்களிலும் பெரிசா ஒண்ணும் சொல்லிக்கிறா மாதிரி இல்ல. அலெக்ஸ் யூங்-க பத்தி என் மலேசியநண்பர்களை கிண்டல் பண்ண நியாபகம் உண்டு. அலெக்ஸ் யூங்-கவிட நாராயண் ரொம்பவே திறமையுடையவர்-னாலும் கடைசியில பணத்த கொடுத்துதான் ஒட்டுனர் என்ற பெருமைய தக்க வச்சிருக்கார் என்பதும் வருத்தமாயிருக்கு.

அடுத்த 2006 வருஷம் மிட்லாண்ட் F1-ஆக ஜோர்டன் உருமாறுனத்தக்குப் பின்னர் நாராயண்-ன்னுக்கு கல்தாதான் சொல்றாங்க. F1-ல ஒரு தடவ அவுட்னா திரும்பி வரது ரொம்ப கஷ்டம் இன்றைய சூழல்ல. அது நடக்காமலிருக்கணும்னா ஏதாவது அதிசயம் தான் நடக்கணும். அதிசயம் செய்யறதுக்கான அறிகுறிகள் இதுவர இல்ல. இன்னிக்கு என்ன பண்றாருன்னு பாக்கலாம்.

பிகு: blogger.com செய்த குழப்பத்தினால் மறுபதிவு இடவேண்டியதாகிறது. மன்னிக்கவும். மேலும் ???????? என்று பல வலைப்பதிவுகளில் வருவதால் Ramanathan என்று ஆங்கிலத்தில் மாற்றியுள்ளேன்.

அப்டிப் போடு

இது மாயவரத்தான் பேடண்ட் வெச்சுருக்கிற விஷயமா-னாலும் போஸ்ட் பண்ணாம இருக்க முடியவில்லை.

ஒரே தட்டில் த.கு.தா-வுடன் உணவருந்தும் உடன்பிறவா தம்பி தமிழகத்தின் தானைத் தலைவர் மீதே பெருங்குற்றம் சாட்டியுள்ளார்.

இது தவிர வேலுக்கு மத்திய அரசில் அமைச்சராய்த் தொடர ஆசையும் இல்ல போலிருக்கு.

ஆக மொத்தம் உளவுத்துறையை வச்சு அம்மா சித்து விளையாட்டு விளையாட ஆரம்பிச்சுட்டாங்கன்னு மட்டும் தெரியுது.

(வந்தது தட்ஸ்தமிழ்.காம் என்பதால் ஒரு கிள்ளு உப்போடவும் பாக்க வேண்டியிருக்கு)

பின்னாடி சட்ட வல்லுனர்களோடு எல்லாம் கலந்தாலொசித்து வீட்டுக்கு ஆட்டோ, விமானம் எல்லாம் அனுப்ப மாட்டார் என்ற நம்பிக்கையில்... - டைட்டில் நன்றி மாயவரத்தான் ஹீ ஹீ

சந்திரமுகி என் பார்வையில்

உலகிலேயே தலைசிறந்த மருத்துவர், அமெரிக்காவில் படித்த டாக்டர் என்று ஒவர் பில்ட் அப் கொடுத்ததால் கடைசியில் மருத்துவ ரீதியாக விளக்கங்கள் கொடுப்பார் என்று பெரிதும் நம்பிக்கொண்டிருந்தேன். வழக்கமாய், தமிழ் சினிமாவின் கையில் பெரும்பாடு படும் மருத்துவம். சாதாரண வாந்தி பேதிக்குக்கூட "பேஷண்டுக்கு அளவுக்கு அதிகமான அதிர்ச்சியோ சந்தோஷத்தையோ தரக்கூடிய எதையும் சொல்லாதீர்கள்" என்று கண்ணாடியை கழற்றி கொண்டே, பின்னர் தன் goatee-ஐ தடவிக்கொண்டே "இனிமே எல்லாம் அவன் செயல்" சொல்லும் டாக்டர்களே ரசிகர்களுக்கு பழக்கம். கதாநாயகி வாந்தியெடுத்தவுடன், ஒரு முறை பல்ஸ் பார்த்து "congratulations, நீங்க அப்பாவாக போறீங்க" ன்னு ஹீரோவைப் பார்த்து டயலாக் விடும் மகப்பேறு மருத்துவர்களும் வலம் வரும் தமிழ்சினிமாவில், சூப்பர்ஸ்டாராவது கொஞ்சம் புத்திசாலித்தனத்தோடு இதை செய்வாரா என்று நம்பினேன். ஆனால் இந்த படத்திலும் இதே நிலையே என்ற ஏமாற்றமே மிஞ்சியது. சரி, நோயின் தன்மையை விடுங்கள்.. பெயரையாவது சரியாகச் சொல்லியிருக்கலாம். கங்காவின் நோயிற்கு தற்போதைய பெயர் "Dissociative Identity Disorder". SPD-ம் MPD-ம் misleading-ஆக இருப்பதால் 90-களிலேயே பெயர் மாற்றம் செய்யப்பட்டு விட்டது. இதுகூட தெரியாதவரா நம் சூப்பர் சரவணன்? இந்த நோய் (DID) கங்காவிற்கு வந்ததற்கு காரணம் Post Traumatic Stress Disorder தான் என்று காட்சிகளில் காண்பிப்பது ஒரு ஆறுதல். ஆனால் சாதாரண ரசிகனுக்கு PTSD என்று புரியும் வகையில் இல்லை. DID-யும் PTSD-யும் வெவ்வேறு விஷயங்கள். இந்த DID நோயே சர்ச்சைக்குரியது. இது நிஜமாக நோயே இல்லை, மாறாக நோயாளிகள் பொய் சொல்கின்றனர் என்று கூறுவோரும் இருக்கின்றனர். இதையெல்லாம் சொல்லியிருந்தால் சந்தோஷத்தில் எனக்கு சந்தோஷத்தில் மாரடைப்பே வந்திருக்கும். ஹூம்.. அதை விடுங்கள்.

இத்தனை கோடிகள் செலவழித்து தயாரித்த படத்தின் மூலக்கருவான இந்த நோயின் தன்மையை technical advisor-ஆக ஒரு நிஜ மனோதத்துவ நிபுணரை அணுகி விசாரித்திருக்கலாம். அதற்கு மாறாக, artistic license-ஐயெல்லாம் தாண்டி, வாசுவின் அபத்தக் கற்பனையாகவே சித்தரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மருத்துவ நோயை குணப்படுத்த விட்டலாச்சார்யாவின் மந்திரவாதியை நாடுவதெல்லாம், ரஜினியின் பாபா hang-over என்று நினைக்கிறேன். பேயும் இல்லை பிசாசும் இல்லை எல்லாம் mind-இல் இருக்கிறது என்று தைரியமாய் சூப்பர்ஸ்டார் சொல்லியிருந்தால், தமிழ்நாட்டில் இந்த மூட நம்பிக்கை கொஞ்சமாவது குறைந்திருக்கும். அவரின் பெரும் விசிறிகளான குழந்தைகளுக்கு முக்கியமாக. அதைச் சொல்லாமல், நீங்கள் மந்திரம் போடுங்கள், நான் மருத்துவம் பார்க்கிறேன் என்று ஏன் சமரசம் செய்து பின்வாங்கவேண்டும்? அந்த மந்திரவாதி பொய்வேஷக்காரன் என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும்? பிரபு சொல்லும் டயலாக்கை கூட திசைதிருப்பி மந்திரவாதிகள் உண்மை என்று ஏன் நம்ப வைக்க வேண்டும்?

வடிவேலும் ரஜினியும் செய்யும் காமெடி அபத்தமாகவெ பட்டது. செந்தில், கவுண்டமணியை வைத்துக்கொண்டு வீரா, மன்னன் போன்றவற்றில் ஜொலித்தார் ரஜினி. இதில் சொதப்பல்.

எனக்கென்னவோ ஜோதிகா நடிக்க(?)வந்ததே தமிழ்சினிமாவிற்கு சாபக்கேடு என்றுதான் தோன்றுகிறது. எந்த படத்தில் நடித்திருக்கிறார்.. சும்மா சும்மா கண்ணை உருட்டறதும், ஆள்காட்டி விரல நீட்டிக்கிட்டே தலய ஆட்றதும் நடிப்புன்னு தப்பா நினைச்சுக்கிட்டு நம்மள படாத பாடு படுத்தி வருகிறார். இந்த படம் அவரின் sadism-த்தின் கோரத்தாண்டவம். கடைசி அரை மணி நேரத்தில், முக்கியமாய் ரஜினி தான் ஏன் கங்கா தான் பாதிக்கப்பட்டிருக்கிறாள் என்பதற்காக காட்டப்படும் காட்சிகளில் எனக்கு சிரிப்பு தான் வந்தது. இதை பார்த்து ஓகே, கட் சொன்ன வாசு என்ன நினைத்தார் என்பது புரியவில்லை. அதேமாதிரி வீனீத் போன்றதொரு அற்புதமான நடனக்கலைஞனை cast செய்ததன் மூலம் வாசு ஜோதிகாவிற்கு ஆடவராது என்றும் காண்பித்துள்ளார். ஒரு வேளை கங்காவிற்கு ஆடவராது என்பதற்காக இப்படி தத்தக்கா பித்தக்கா என்று ஆடுவாரோ? சேச்சே, ஒரு professional நடிகை தான் இதைச் செய்வாங்க. ஜோ-கிட்டயெல்லாம் இதை எதிர்ப்பார்க்க முடியாது.

படம் முழுக தெலுங்கு டப்பிங் வாசம். அகிலாண்டேஸ்வரி காரக்டர்? அதைப் பற்றி கூறத் தேவையில்லை. நாசர் வீணடிக்கப்பட்டிருக்கிறார்.

தேவுடா தேவுடா - இது சிம்பு, த்னுஷ் போன்றோருக்கான ஒப்பனிங் பாடல். சூப்பர்ஸ்டாருக்கல்ல. ரஹ்மானை விட்டது பெரிய தவறு. வித்யாசாகர் வெறும் இரண்டு பாடல்களில் மட்டுமே கவனம் செலுத்தியிருக்கிறார். அத்திந்தோம் மற்றும் கொஞ்ச நேரம். கொஞ்ச நேரம் பாட்டிலும் அழகான ஒரு பாடலை ஆஷா வாயால், இல்லை மூக்கால் பாட கேட்கவேண்டியிருக்கு.

திரைக்கதை மஹா சொதப்பல்.

இந்த படத்தில் ரஜினியில்லாமல் சத்யராஜோ சரத்குமாரோ நடித்திருந்தால் ரெண்டு நாள் கூட ஒடியிருக்குமா என்பது சந்தேகம். ரஜினிகாந்த் என்னும் காந்தம் இருப்பதால் மட்டுமே இத்தனை பெரிய வெற்றி பெற்றிருக்கிறது இந்த சந்திரமுகி என்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லை. சூப்பர்ஸ்டாராக ஆசைப்பட்ட அந்நியனும், கில்லியும், வில்லனும், மன்மதனும், சண்டக்கோழியும் தலைவருக்கு முன்னால் எம்மாத்திரம் என்ற எனது நம்பிக்கையை வலிமையுறச் செய்திருக்கிறது இப்படத்தின் வெற்றி.

பிகு: முதலில் இந்த பதிவிற்கு பின்னூட்டமாகவே எழுதினேன். ரொம்ப நீளமாகிவிட்டதால் தனிப்பதிவு செய்கிறேன்.

தமிழ்ப்பாதுகாப்பும் டாக்டர் ஐயாவும்...

இளங்கோவன் ஜெஜெவுடன் அறிக்கைப்போர் செய்து போரடித்துவிட்டது போலிருக்கிறது. ராமதாஸையும், திருமாவையும் வம்புக்கிழுத்துள்ளார். ஆனால் கொஞ்சம் எடுத்தேன் கவிழ்த்தேன் ரக வகையில் வேண்டுமென்றெ கடுமையாக பேசியுள்ளார்.self proclaimed தமிழ்க்குடிதாங்கியாய் இராமதாஸ் மாறியிருப்பது ஒரு வகையில் நல்லது. environmentalists - எல்லோரும் ஆஹா தமிழகத்தில் பெய்யும் கொஞ்ச நஞ்ச மழையாவது, டாக்டர் ஐயா மரம் வெட்டுவதிலிருந்து தார் பூசுவதற்கு மாறியதால், தப்பியது என்று மகிழ்ச்சியுடன் இருப்பர்.

இராமதாஸின் கொள்கை தமிழ்ப்பாதுகாப்பு என்று உயரிய ஒன்றாக இருந்தாலும் போகும் பாதை அவர் இதை அரசியல் mileage-க்காகவே பயன்படுத்துகின்றார் என்று காட்டுகிறது. சினிமாவிலும், ஊடகங்களிலும் (i cant resist.. சன் டீவி தவிர்த்து) தமிழிலே இருக்கவேண்டும் என்பது நல்ல எண்ணந்தான். ஏனெனில், புதிய தலைமுறைகளை பாதிப்பதில் இவை பெரும்பங்காற்றுகின்றன. இந்த தலைமுறையில் எது hip and savvy-யோ அதை தாங்களும் பின்பற்றுகின்றனர். hip and savvy என்பது தான் கவனிக்கப்பட வேண்டியது. சந்திரமுகியை தலையில் பொறித்துக் கொள்பவர்கள் வேறு ரகம். ஆனால் சாதாரண மக்கள் நேரிடையாய் இல்லாவிட்டாலும் sub-conscious level-இல் இந்த மீடியாவினால் பாதிக்கப்படுகின்றனர். நகர்ப்புறங்களில் தமிழே இல்லை. எந்த ஹிந்திப்படம், எந்த FM, எந்த ஸ்டார் சானல் என்பதுதான் அவ்ர்களின் பெரும் பிரச்சனை. ஆனால் அவர்கள் சிறுபான்மை. சிறுநகரங்களிலும், கிராமங்களிலும் இந்த மீடியா மிகவும் influence பண்ணக்கூடியது. அவர்கள் இந்த வகை மீடியா நகர்ப்புற கலாச்சாரத்தின் சாரமாகவே எடுத்துக்கொள்வர். அந்த வகையில் தமிழ்ச்சொற்களும், பாடல்களும் இருத்தல் வேண்டும் என்பது இந்த 21-நூற்றாண்டில் அவசியமாகிறது.

அதை செயல்படுத்தும் முறையில் தான் இன்னமும் வெறும் அரசியல்வாதிதான் என்று நிருபிக்கிறார். பல இளைஞர்கள் இவர் பேச்சைக் கேட்டு ஆர்ப்பாட்டம், போஸ்டர் கிழிப்பு, தார் பூசுதல், படச்சுருள் கைப்பற்றுதல் போன்ற செயற்கரிய சமூக சேவைகளில் ஈடுபட்டு தமிழைப் பாதுகாத்துக்கொண்டிருக்கின்றனர். இதனால் விழிப்புணர்வு ஏற்படவேண்டிய சாதாரணத்தமிழனுக்கு வெறுப்பே ஏற்படுகிறது.

தயாரிப்பாளர்கள் கடன் வாங்கியோ அடகு வைத்தோ சொந்தப்பணத்தில் தயாரிக்கும் ஒரு படத்தை (சட்டத்திற்கு மீறியிருந்தால் அரசாங்கமே நடவடிக்கை எடுக்கலாம்) அரசின் பின்னணி இல்லாமல் "இங்கிலீஸ் பேரா வக்கற, மவனே, வச்சு பாரு... சீவிடுவேன் சீவி"-ன்னு ரவுடி மிரட்டல் விடுகிறார்கள். இது அராஜகமின்றி வேறேன்ன? என்ன செய்ய வேண்டும்? அறிவுறுத்தலாம். கேட்கவில்லை என்றால் பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்லலாம். அதை விடுத்து மிரட்டல், படச்சுருள் கைப்பற்றுதல் என்று ஏதோ ஏரியா தாதா கணக்காய் அல்லவா நடந்து கொள்கிறார்கள். உங்கள் ஏரியா தாதாவை உங்களுக்கு பிடிக்குமா? அவன் என்ன சொன்னாலும் பயத்தாலன்றி மரியாதையால் எதையாவது செயல்படுத்துவீர்களா? அவனை சாபமிடாமல் ஒரு நாளாவது இருப்பீர்களா? இந்த நாச வேலையால் தமிழ்ப்பாதுகாப்பிற்கு உண்மையாக சொல்லப்போனால் உலை தான் வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இவற்றிற்கு பதில் தன் கழகக்கண்மணிகளின் பொதுக்கூட்டங்களைப் போல் இலக்கியக் கூட்டம் வட்டந்தோறும் நடத்தலாம். சிந்தனையாளர்களைக் கொண்டு எந்தெந்த வகையில் ஊடகங்களின் மூலம் தமிழ்ப் பரப்பலாம் என்று ஆராய்வதற்கு think tank-கள் ஏற்படுத்தலாம். தமிழில் technical writing வளர்வதற்கு வழிகள் என்னவென்று ஆராயலாம். வருங்காலத்தில் இந்தியாவில் சக்தியுடன் இருக்கப்போகும் (இப்போது அவ்வளவு பரவியில்லாவிட்டாலும்) வலையில், கணினியில் தமிழை முதலிலிருந்தே வளர்க்க முயற்சி செய்யலாம். ஹிந்தியில் விண்டோஸ் வந்தாச்சு. நம்மொழியில் இல்லை. விண்டோஸ் வேண்டாம், லினக்ஸ் போன்ற open source OS-களை தமிழ்ப்படுத்துவதற்கு முயற்சி செய்யலாம். செய்வாரா?

எனக்கு ரொம்ப நாளாய் ஒரு சந்தேகம்: Coffee Day கம்பெனியின் பெயரைத் தமிழில் எழுதும் போது என்ன எழுத வேண்டும்? "காபி டே"? இல்லை "குளம்பி தினம்"? தெரிந்தால் சொல்லுங்கள்.

Lord of the Rings-உம் நானும்

சில நாட்களுக்கு முன்னர் தான் பார்த்தேனென்றாலும், நேற்று F1 முடிந்து montoya disqualify ஆன shock மாறாமல் கொஞ்ச நேரம் இருந்தேன். சரி, ROTK பார்த்தால் மூட் மாறும் என்ற நம்பிக்கையில் மறுபடியும் ஒரு ஷோ! LOTR - படங்கள் பார்ப்பதற்கு முன் அந்த புத்தகங்களை வாசித்தது கிடையாது. ஒரு நாள் 2001, என்று நினைக்கிறேன் நல்ல குளிர் (இது ரஷ்யா. நல்ல குளிர் என்றால் -15க்கு கீழ்) நண்பர்கள் அழைக்க Fellowship of the Ring பிரிமீயர் ஷோவிற்கு போனோம். போன எங்கள் குருப்பில் ஒருவருக்கும் புத்தகங்களைப் பற்றி தெரியாது. கிராபிக்ஸ் கலக்கலாக இருக்குமென்ற என்ற ஒரே நம்பிக்கையில் போனோம்.

சரி, படம் ஆரம்பித்த கொஞ்ச நேரம் ஓகே. ஆனால் நாங்களும் பொறுத்துபொறுத்துப் பார்த்தோம். ஒரு இடத்திற்கு போகிறார்கள். கொஞ்சம் சண்டை. அப்புறம் இன்னொரு இடம். அதுக்கப்புறம் சண்டை. என்னடா இது! 90 நிமிஷம் ஆயிடுச்சு. சரி ரிவண்டெல் வந்தவுடன் சுபம் கார்டு என்ற நப்பாசையில் காத்திருந்தால், அப்போதுதான் படத்தின் முக்கிய கதையே தொடங்கியது. திரும்பி புறப்பட்டு வேறோரு இடம். திரும்பவும் சண்டை. இப்படி இன்னொரு ஒன்னரை மணி நேரம் பின்னர் படம் முடியுமென்று காத்திருந்தால், இன்னும் தொடரும் என்று கூட போடாமல் முடித்துவிட்டனர். எங்களுக்கு BP எகிறிவிட்டது.

அடப்பாவிகளா! 3 மணி நேரம் ஒக்காந்து பொறுமையாப் பாத்திருக்கோம்னு பாவப்படாமல் "We may yet, Mr. Frodo" சொல்லி அத்துவானத்தில் விட்டுட்டாங்களேன்னு இயக்குனர், தியேட்டர், ஐடியா தந்த நண்பன் உள்பட எல்லோரையும் சபித்து விட்டு வீட்டுக்கு வந்தும் கடுப்பு அடங்கவில்லை. சரி இன்னதான் சொல்றாங்க மக்கள் இந்த டப்பா படத்தப் பத்தின் கூகிள் விட்டாத்தான் விஷய்மே புரிஞ்சுது. இந்த படம் ஒரு மாஸ்டர்பிஸ்-னு அவனவன் எழுதி வச்சுருக்கான். அப்புறம் புத்தகங்கள் பத்தியும் தேடிப்பாத்தா இதுக்கு இருக்கிற cult following பத்தியும் தெரிஞ்சுது. சரி, இதுல அப்படி என்னதான் இருக்கு? நமக்கு மட்டும் மத்தவங்களுக்கு தெரியற ஒளி ஏன் தெரிலன்னு யோசிச்சு யோசிச்சு சரி டிவிடி வாங்கி இன்னொரு வாட்டி பாத்தே தீரணும் னு முடிவு பண்ணோம்.

ஒளி இல்ல. சும்மா flood light கணக்கா தெரிஞ்சது ஹோம் தியேட்டரில் பாத்தபோது. சினிமாவில் reality இல்லாத fantasy வகையில் காண மிகவும் அரிதான் ஒரு விஷயம் இந்த படங்களில் உண்டு. அது மனிதர்களல்லாத, வேறு ஒரு surreal உலகத்தில் வாழும் உயிர்களுக்காக் நாம் கவலைப்படுவது. ஒரு முறைப் பார்த்தபின், சொன்னால் நம்ப மாட்டீர்கள். பனிக்கால விடுமுறையில் ஒரு வாரம் முழுது தினமும் இந்த படத்தைப் பார்த்திருக்கிறோம். அப்படி ஒரு சொல்ல முடியாத தாக்கம். அது Tolkien-இன் மாஜிக்கா இல்லை PJ-வின் இயக்கமா இல்லை நடிப்பா இல்லை VFX-a? என்னவென்று சொல்லத்தெரியவில்லை. ஆனால் அடிப்படையில் சில கருத்துக்கள் எனது கருத்துக்களுடன் ஒத்துப்போனது இருக்கலாம்.

Sep 11, Afghan War எனப்பல விஷயங்கள் நடந்திருந்தன. மனிதர்களை Black and White என்ற broad stroke கொண்டு நல்லவன் கெட்டவனென்று பிரிக்க முடியாது. எல்லோருக்குள்ளும் Shades of Grey தான். இதில் ஒரு மனிதன் சூழ்நிலைக்கு தக்கவாறு தன் ஆசைகளைக் கட்டுபடுத்தி, நல்லதை செய்வானோ அவனை "பெரும்பாலும் நல்லவன்" என்று கூறலாம். ஒரு தீய காரியத்திற்காக தண்டனை அளிக்கலாம், ஆனால் அவ்வொன்றினாலேயே தீயவன் என்ற பட்டம் கொடுக்க முடியாது என்பது என் கருத்து. இது எனக்கு சுயமாக புரிய பெரிதும் உதவியது முதலில் ஜார்ஜ் புஷ். இரண்டாவது இந்த படங்களின் சில கதாபாத்திரங்கள். முக்கியமாய் Gondor-இன் Boromir.

சரி எழுத வரமாட்டேங்குது. சும்மாவே வராது. இன்னிக்கு கொஞ்சம் extra heavy duty-ஆக வரமாட்டேங்குது. வுடு ஜூட்!ROTK-இல் இருந்து ஒரு பாடல்.

Home is behind, the world ahead,
And there are many paths to tread
Through shadows to the edge of night,
Until the stars are all alight.

Then world behind and home ahead,
We'll wander back to home and bed.
Mist and twilight, cloud and shade,
Away shall fade! Away shall fade!
Fire and lamp and meat and bread,
And then to bed! And then to bed!

- JRR Tolkien

புத்தக விளையாட்டு!?

இந்த வாரம் புத்தக வாரம் போலிருக்கிறது தமிழிமணத்தில். ஏழைக்கேத்த எள்ளுருண்டையாய் என் பங்குக்கு இந்தப் பதிவு. கல்லூரியிலேயே பரிட்சைக்கு மட்டுமே புத்தகங்களை தேடும் ஆள் நான். என்னைப்போல் ஒரு சிலராவது தமிழ்மணத்தில் இருப்பர் என்ற அபார நம்பிக்கையில், அவர்களில் ஆறுதலுக்காகவும் என் திருப்திக்காகவும் இந்த வாரம் நான் கடசியா அல்லது பாக்கப் போகிற படமென்ன? இது வரைக்கும் திரும்பி திரும்பி அதிக தடவைப் பார்த்தது. இல்ல வீட்ல, பல பேருக்கு ஆபிஸில் லேட்டஸ்டா விளையாடுற விடியோ கேம் என்ன-னு பயனுள்ள விஷயங்கள எழுதலாம்-னு யோசிச்சு இதோ எழுதறேன்.

கடசியா பாத்த படங்கள்
1. Return of the King - Extended Directors Cut (இதோட 10 தடவை ஆகியிருக்கும். fellowship of the ring - நான் மிக அதிக முறை பார்த்த படம் - குறைந்தது 60 தடவை)
2. ஒசாமா
3. Life as a miracle4. hotel Rwanda

இந்த வாரயிறுதியில் பாக்க வைத்திருப்பவை
1. Cold Mountain
2. Closer
3. Ladder 49

இப்போது விளையாடிக்கொண்டிருப்பது...Desperados - Wanted Dead or Alive (பழசுன்னாலும் அலுப்பே இல்லாத அருமையான கேம்)

install பண்ண காத்துக்கொண்டிருப்பது. - GTA : San Andreasநீங்களும் சொல்லுங்களேன்.

குடிப்பழக்கம் நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு!

மிகவும் பிரபலமான "slogan" இது இந்தியாவில். ஆனால் உண்மையா இது? என்ற கேள்வி எனக்கு ரொம்ப நாளாக உண்டு.குடிகாரன் எனப்படுபவர்களை மூன்று வகையாக பிரிக்கலாம். Lite, medium, மொடாக்குடிகாரன் or addict.
வெளிநாடுகளில் லைட் வகையறாக்களைப் பற்றி கவலைப்படுவது கூட இல்லை. இங்கே ரஷ்யாவில் வாரத்தில் குறைந்தது மூன்று நான்கு வேலை நாட்களில், வேலைக்குப்பின் இரண்டு மூன்று பியர்கள் என்பது கிட்டத்தட்ட கலாச்சாரமாகவே ஆகிவிட்டது. வாரயிறுதியிலோ ஒருமுறையாவது hard alcohol என்பது வழக்கம். குறிப்பாய் 'வோட்கா'. இங்கே ஜோக் கூட உண்டு. தாகமெடுத்தால் பியர் குடிப்பது மினரல் வாட்டர் குடிப்பதை விட மலிவு என்று.

மீடியம் ஆல்கஹாலிக்ஸ் எனப்படுபவர்கள் சுயக்கட்டுப்பாட்டை இழந்தால் மட்டுமே addicts ஆகின்றனர். அதுவும் கூட addiction என்பதன் விளக்கம்: "A chronic brain disorder characterized by the loss of control of drug-taking behavior, despite adverse health, social, or legal consequences to continued drug use."

இவ்விளக்கத்தில் கவனிக்க வேண்டிய ஒன்று. சமூதாயம் மற்றும் சட்டம். இந்த duties-ஐ ஒருவன் மறந்து குடி உள்பட எவ்வகை போதைப்பொருட்களை பயன்படுத்தினால் மட்டுமே அது addiction-ஆக கருதப்படும். அதற்கு மருத்துவசிகிச்சை அளிப்பது அவசியமாகிறது. ஆனால் இந்தியாவில் குடிப்போரை (குடிகாரர்கள் என்பது கொஞ்சம் derogatory-ஆக ஒலிப்பதால்) பெரும்பாலும் இகழ்வது வழக்கமாய் உள்ளது. சோமபானத்தை அருந்தி மகிழ்ந்த தேவர்களை வணங்கும் நாம் ஏன் குடிப்பழக்கத்தை (இதிலும் பழக்கம் என்பது habit என்றில்லாமல் addiction என்றே தொனிப்பதாய் தெரிகிறது) இப்படி நம் சமூகம் வெறுக்கிறது என்பது புரியவில்லை.

மது, அதிலுள்ள alcohol மற்றும் சிகரெட்டில் உள்ள சில வஸ்துக்கள், போதைப்பொருட்கள் மட்டுமல்லாமல் பல மருந்தாய்ப் பயன்படும் பொருட்களும் இந்த dependence-ஐ (மருத்துவத்துறையில் இதுவே preferred term. addiction என்பது மருத்துவத்துறைக்கு வெளியில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது) விளைவிக்கின்றன. சிகரெட்டினால் lung-cancer உண்டாகின்றது என்பது நிருபிக்கப்பட்ட உண்மை. சொல்லப்போனால், குறைந்த அளவில் ஆல்கஹால் (ஆலகால விஷம் இது தான் என்று வைத்துக்கொண்டால், நீலகண்டன் நிரந்தரமாக உபயோகப்படுத்தி வந்துள்ளார் :) ) உடலுக்கு நன்மையே விளைவிக்கின்றது.அளவிற்கு அதிகமானால்... என்பதாகவே ஆல்கஹாலினால் விளையும் தீமைகளும். alcoholic liver disease மற்றும் மிகவும் கடைசி நிலையில் liver cirrhosis-உம் உண்டாகும். இதில் ALD வெளிப்படுவதற்கு குறைந்த பட்சமாக 5 வருடங்களோ அதிகபட்சமாக 10 வருடங்களாகவோ தினமும் 30கிராம் வெறும் ஆல்கஹால் units அருந்தியிருக்கவேண்டும்.தினமும் பலவருடங்களாக குடிப்பது அதுவும் 5 வருடங்களாக என்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம்.

இந்த மருத்துவ சான்று ஒன்றினால், சரி இனிமே குடிப்போம் என்று நினைப்பவர்களுக்கு. ஆல்கஹால் அட்டிக்ஷன் என்பது மிகவும் கொடியது. இதனால் கல்லீரலைத் தவிர மிச்ச இடங்களிலும் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றது. அதனால், நீங்கள் மிதமாவோ லைட்டாவோ குடிப்பவர்களானால், அப்படியே இருப்பது உத்தமம். குறிப்பாக, இரத்தக்கொதிப்பு நோயுடையோர் அடியோடு நிறுத்துவதுதான் நல்லது.

சரி, மருத்துவப்படி addiction state-ஐ தவிர மிதமாய்க் குடிப்போர்க்கு பயப்படுவதற்கு பெரும்பாலும் ஒன்றுமில்லை. இப்படியிருக்கையில், சமூகத்தில் ஏன் இத்தனை இகழ்வு என்பது விந்தை. அடுத்த மனிதரையோ சமூகத்தையோ தொல்லைப்படுத்தாதவரை ஏன் இதைப் பற்றி கவலைப்பட வேண்டும்? இது தனிமனித அல்லது நண்பர்களுடான harmless பொழுதுபோக்கு என்று கருதாமல் சமுகம் ஏன் சர்ச்சைப்பட வேண்டும்.

மேற்கத்திய சமூகம் குடியைப் பற்றி கவலைப்படாவிட்டாலும் போதைப்பொருட்களை பொறுப்பதில்லை. ஆனால் நான் அறிந்த வரையில் அமெரிக்க பழங்குடியினரிடத்தும் தெற்கமெரிக்க பழங்குடியினரிடத்தும் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகவே போ.பொ விளங்குகின்றனர். இன்னும் ஒரு சில சமூகங்களிடையே, shamans எனப்படும் நம்மூர் கடவுளிடம் பேசும் பூஜாரிகள் போன்றோர் தம்முடைய சடங்குகளில் peyote எனப்படும் போதை வஸ்துவை பயன்படுத்தியே கடவுளைக் காண்கின்றனர். எழுதுவதற்கு நிறைய இருக்கு. மேலும் பின்னர்.

ஜப்பானிய பத்திரிக்கையில் தமிழ் படம் பற்றி...

In India, `Masala' movies the spice of life 06/04/2005

By RYOSUKE ONO - The Asahi Shimbun

full article

இந்திய சினிமாவின் அடையாளமாக பாலிவுட்டை மட்டுமே கொண்டாடி வரும் வெளிநாட்டு பத்திரிக்கைகளுக்கு மத்தியில் ஒரு ஆறுதலாக தமிழ் சினிமாவைப் பற்றி எழுதியுள்ளனர்.

ஆமா, தலைவர் ஜப்பானில் மிகவும் பிரபலம் என்று சொல்லிக்கினு இருந்தவங்கள் கிண்டல் பண்ணிட்ருந்தாங்க நம்ம மக்கள். இதை எழுதிய (ஆணா? பொண்ணானு பேர வச்சு சொல்லமுடியல)ஆளுக்குக் கூட தெரிஞ்சிருக்கு முத்து பத்தி. சூப்பர் ஸ்டார்-னா சும்மாவா?

அப்டியே ஜப்பானில் நடந்த கட்-அவுட் சந்தன காப்பையும், பாலாபிஷேகத்தையும் பத்தி சொல்லிருந்தா எல்லா கேடு கெட்ட பய வாயையும் மூடிடலாம்.

தலீவா.. நீ வால்க!
:)

Hotel Rwanda

மறுபடியும் ஒரு பழைய படம். உங்களில் பலர் ஏற்கனவே பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். கிட்டத்தட்ட 3 மாதங்கள் நான் (திருட்டு :( ) டிவிடி வாங்கி ஆயினும், இருந்தாலும் பார்க்க இப்போதுதான் சந்தர்ப்பம் கிடைத்தது.

என்னை சமீபத்தில் பாதித்த படங்களில் நிச்சயமாக ஒன்று இது. இரு நாட்களுக்குள் "Osama", Emir Kusturica-வின் "Life is a miracle" மற்றும் மூன்றாவதாக இந்த ஹோட்டல் ருவாண்டாவும் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது. இதில் ஒசாமா கொஞ்சம் சினிமாத்தனமாக எனக்குப்பட்டது. மற்ற இரு படங்களும் என்னை பாதித்ததன. "Life is a miracle" (யுகஸ்லாவியா) அருமையான படமென்றாலும் இதுவும் ஒசாமாவின் (afghanistan) அடிப்படையில்: இவ்விரு இடங்களில் நடந்தது பலருக்கும் தெரிந்த விஷயம். மேலும் தனிமனிதர்கள் அனுபவித்தவற்றையே அவை சொல்கின்றன.

இதில் மாறுபட்டு ருவாண்டாவில் நடந்த கொடூரங்களைப் பற்றி விவரிக்கிறது "hotel rwanda". 1994-இல் நடந்த genocide பற்றியும், அதன் காரணகர்த்தர்களான Belgium-தை பற்றியும், தெரிந்திருந்தும் கையை கட்டிக்கொண்டு நின்று நடக்கும் கொடுமையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த உலகத்தையும் கன்னத்தில் அறையும் படம். இதன் ஹீரோ பால், ஒரு நட்சத்திர ஹோட்டலின் மானேஜர். அவரின் மனைவி தாதியானா. இந்த தனி மனிதரின் கதையானாலும் ருவாண்டாவில் நடந்தவைப்பற்றியும் world community-இன் reaction-ஐயும் கூறுவதில் இப்படம் நம்மில் விழிப்புணர்வு ஏற்படுத்துமென்பதில் சந்தேகமேயில்லை. இப்படத்தை இதுவரை என்னை மாதிரி பார்க்காதோர், பாருங்கள். கதையில் genocide மட்டுமே. மெஜாரிட்டியான ஹுட்டுஸ் மைனாரிட்டிகளான டுட்ஸிஸ் எனப்படும் இனத்திற்கு எதிராக இனப்படுகொலை நடத்துகின்றனர். இந்த நிலையில் ஹுட்டுவான பால் டுட்ஸிகளுக்கு எப்படி மறுவாழ்வளிக்கிறார் என்பதே கரு. corruption, intimidation, blackmail, chivalry - இப்படி எல்லா வழிகளிலும் படாத பாடு படுகின்றார்.

இதில் paul உலகின் மீது வைத்திருக்கும் நம்பிக்கை நம்மில் பலருக்கும் இருக்குமென்பதில் எனக்கு ஐயமில்லை. நம் நாட்டில் இது போன்று, God Forbid, நடந்தால் உலகம் என்ன செய்யும் என்று நான் எதிர்ப்பார்ப்பேனோ, அதையே தான் பாலும் எதிர்ப்பார்க்கிறார். ஆனால், UN என்ன செய்கிறது? சிறப்பு படைகளை அனுப்பி வெளிநாட்டுப் பயணிகளை மட்டும் மீட்டுக் கொண்டுவிட்டு ஆப்ரிக்கர்களுக்கு middle finger காட்டி விட்டு செல்கின்றனர். நீங்கள் எக்கேடு கெட்டாலும் கவலையில்லை என்று சொல்லிவிட்டு செல்கின்றது. பெயரளவிற்கு ஒரு presence-ஐ மட்டும் வைத்து விட்டு, எல்லா UN பணியாளர்களூம் ஒடுகின்றனர்.

சில குறிப்பிட வேண்டிய காட்சிகள். ஐ. நா தளபதி paul-இடம் சொல்கிறார். நீங்கள் வெறும் ஆப்ரிக்கர்கள் (Blacks). ஆப்ரிக்க-அமெரிக்கர்களென்றாலுங்கூட இவ்வுலகம் கண்டுகொள்ளும். ஆனால் நீங்கள் வெறும் ஆப்ரிக்கர்கள்.

இன்னொன்று. ஒரு வெள்ளைக்கார TV cameraman இந்த இனப்படுகொலையை வீடியோ பதிவு செய்வதை அறிந்து, பால் இந்த பதிவைப் பார்த்தாவது உலகம் உதவிக்கு வரும் என்பார். அதற்கு அந்த காமிராமேன் கூறும் பதில் நம்மையெல்லாம் கூனிக்குறுகச் செய்துவிடும். "u Know what will they do when they see this? They will say, "Oh My God, Thats Horrible!" and then go back to their dinner". வாழ்நாளில் மறக்கமுடியாத வசனம் இது.

இவற்றிற்கெல்லாம் மேல் இந்த பால் எப்படி அந்த ஹோட்டலில் வாழும் 1200-க்கும் மேற்ப்பட்ட டுட்ஸி-களை காப்பாற்றுகிறார் என்பதே கதை. கிட்டத்தட்ட 14 லட்சம் மக்கள் படுகொலை செய்யப்பட்ட ஒரு WWII வை விட பெரிய இனப்படுகொலை, இது ஆப்ரிக்க கணடத்தில் தானே நிகழ்ந்தது என்ற ஒரே காரணத்திற்காக உலகம் முழுவதும் அலட்சியம் செய்யப்பட்ட அவலத்தை வெளிக்கொணர்கிறது. அனைவரும் பார்க்க வேண்டிய படம் என்பதென் எண்ணம்.

don cheadle-க்கு ஆஸ்கர் ஏன் கிடைக்கவில்லை என்று இப்போது வருத்தமாயிருக்கிறது. Million Dollar Baby-ஐ விட, Ray-ஐ விட மிகவும் ஆழமான படமென்றும், மிகத்தேர்ந்த நடிப்பென்றும் இப்போது எனக்குத்தோன்றுகிறது.

எதிர்கால வல்லரசா இந்தியா?

இன்பத்தேன் வந்து பாயுதே காதினிலே - என்று பாடத் தோன்றுகிறது இதைக் கேட்கையில், இல்லையா?


சமீபத்தில் பிரான்ஸில் நடந்த "referendum" தான் கடந்த வாரங்களாக பிபிசியின் முக்கிய செய்தி. இதில் எத்தனை ஆய்வாளர்கள், வல்லுனர்கள் தினமும் வந்து கருத்து மேல் கருத்து கொடுத்து கொண்டிருந்தனர். நமக்கே தலைசுற்றும்போது, பிரான்ஸ் நாட்டவர் நிலை பாவம். இருந்தாலும் "non" என்று 10% வித்தியாசத்தில் தைரியமாக உரக்கமாக சொல்லிவிட்டனர். "oui" போடச்சொன்ன சிராக் தன் பிரதமரை தோற்றதற்கு பிரயாசித்தமாக பலி வாங்கி de Villepin-க்கு பதவியை கொடுத்து விட்டார். (தனிப்பட்ட முறையில், ஐரோப்பாவின் தலைசிறந்த அரசியலவாதிகளில் ஒருவர் இந்த de Villepin என்பது என் கருத்து. ஜெர்மனியின் ஷ்ரோடரும், பிஷரும் கூட இந்த என்னுடைய லிஸ்டில் இருக்கின்றனர்.)

எப்படியோ இன்று நெதர்லாண்டினரும் அனேகமாக இந்த புதிய EU constitution-க்கு சங்கு ஊதிவிட்டனர் என்றே கொள்ளலாம். மிச்ச 16 நாடுகள் ஒத்துப்போனாலும் இது நடைமுறைக்கு வருமா என்பது சந்தேகமாகி விட்டது. இதற்கும் நமக்கும் என்ன சம்பந்தம் என்று நினைப்போர்க்கு. "Oui" ஆதரவாளர்கள் முன்வைத்த முக்கிய வாதங்களில் ஒன்று. அமெரிக்க ஏகாதிபத்தியதிற்கு மட்டும் பதிலாகாமல் நாளைய வல்லரசுகளான சீனாவையும் இந்தியாவையும் எதிர்கொள்ள இந்த புதிய அரசியலமைப்பு கட்டாயம் அங்கீகரிக்கப்படவேண்டும் என்பதே. ஒரு நிமிடம் நிற்க. முந்தைய வரியை மீண்டும் வாசியுங்கள். புல்லரிக்க வில்லை? இந்த ஆதரவாளர்கள் ஒன்றும் சாமானியப்பட்டவர்களல்ல. ஜாக் சிராக்கில் தொடங்கி ஷ்ரோடர் போன்ற முக்கிய அரசியல்வாதிகள் மட்டுமில்லாமல் பல ஐரோப்பிய think tank-களின் (இவற்றிற்கு தமிழில் என்ன கூறுவது?) உறுப்பினர்கள், பொருளாதார நிபுணர்கள் ஆகியோர். இவர்கள் நிஜமாகவே இந்தியா நாளை வல்லரசாகும் என்று பயப்படுகிறார்களா? என்று ஆச்சரியப்பட்டுப்போனேன்.

இந்தியா வல்லரசாகும் என்று பி.ஜே.பி வாயாலேயே கேட்டுக் கொண்டிருந்த எனக்கு அவ்வளவு நம்பிக்கையில்லை அதில். ஆனால் இப்போது நம்பாமல் இருக்க முடியவில்லை. EU-வின் வலிமைமிக்க நாடுகளில் உள்ளோரே நம்மைப் பற்றி இப்படி யோசிக்கிறார்களா என்ற பிரமிப்பு. இது வெள்ளைக்காரன் நினைப்பதால் approval syndrome இல்லை.

இதற்கு ஒரு சாம்பிள் இங்கே. full article

"Imagine how these dolts will feel as the real competition comes clamping down. Retain the French lifestyle? Come on! India and China will have you working 70 hour weeks just to produce enough decent bread for their armies of programmers, engineers and scientists. You'll watch as the world goes screaming by, laughing and flipping you the finger. I mean even worse than they do today. Wake up and smell your minimum wage existence! The end is near."

என்ன சொல்லத்தோன்றுகிறது - "WOW"


சரி, ஏதோ ஒரு சில வாட்டி சொல்லிவிட்டனர் விடுவொம் என்று நினைத்தேன். இங்கு ரஷ்யாவிலும் நம்மை ரொம்பவே serious-ஆக எடுத்துக்கொள்கின்றனர் என்பதற்கு ஒரு அடையாளமாக நேற்றைய Moscow Times பேப்பரில் இன்னொரு விஷயம் பார்த்தேன். இதில் ரஷ்யாவில் IT industry-ஐ முன்னேற்றுவதற்கு வழிகள் என்னவென்று ஒரு கட்டுரை.
அதில் இந்தியாவை பின்பற்றுவதே சரியான வழியென்று ரஷ்ய IT அமைச்சர் கூறியுள்ளார். அந்த கட்டுரையிலிருந்து ஒரு பத்தி.

"Just look at what India has accomplished. It has become the world's software, IT and outsourcing leader. Virtually Overnight, it has taken the majority of what analyst DataMonitor recently predicted will be a $163 billion market place globally - and thats just outsourcing. In software exports, India sold $12.8 billion in 2003-04, and this sector employed more than 770,000 people."

என்ன சொல்லத்தோன்றுகிறது - இன்னுமொரு "WOW"

இது வெளிநாட்டவரின் பார்வை. நம் நாட்டினரிடத்தே என்ன கருத்துகள் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாயிருப்பதால் பதிவு செய்கிறேன்.

என்னைப் பொறுத்தவரையில் இந்தியா உலகின் ஒரு மாபெரும் சக்தியாவது
நடக்கத்தான் போகிறது. அது ஐரோப்பியரும் மற்றோரும் பயப்படும் விதத்தில்
அவ்வளவு விரைவாக 10-20 ஆண்டுகளுக்குள் நடக்குமென்று தோன்றவில்லை. ஆசையிருந்தாலும் நடைமுறையில் சாத்தியமில்லையென்றே தோன்றுகிறது. சீனா ஓரளவிற்கு அந்நிலையை அடைந்து விட்டது. ஆனால் தனி மனித சுதந்திரத்தை தியாகம் செய்து உலகளவில் வலிமையான நிலையை எய்துவதில் எனக்கு உடன்பாடில்லை. தேவர் மகனில் சிவாஜி சொல்லுவது போல் "அம்ம பயன் மெதுவாத்தான் வர்வான், மெதுவாத்தான் வர்வான்" என்றே எனக்கு படுகின்றது.
இன்னொரு விஷயம், என் கண்ணில் படும் வரை லல்லு, ராமதாஸ், திருமா, ஜெஜெ, மு.க போன்றோரே காட்சி தெரிகின்றனர். இவர்கள் இருக்கும்வரை நம்மை உருப்படவிடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு சிறிதளவுமில்லை.

உங்கள் கருத்துகளை அறிய ஆவல்.

 

வார்ப்புரு | தமிழாக்கம்