204. Killing 'Us' Softly! - A/UA

இப்பல்லாம் பாருங்க.. தெருவுல போனா அப்டியே ஜிவ்வுன்னு இருக்கு... பொண்ணுங்கல்லாம் கர்சீப்ப கட்டிகினு தெருவுல நடக்கிறாங்க.. இக்கரைக்கு அக்கரை பச்சைனு சொல்ற அளவுக்கு ஸீத்ரு டாப்ஸ்... சாதாரணப் பொண்ணுங்களே இந்த மாதிரி அரைகுறையா வருதுங்க.. டீசண்டான நம்மளப் போல உள்ள ஆளுங்களுக்கே வெலவெலக்கும்போது ரவுடிப்பசங்க சும்மா இருப்பாங்களா? கிண்டல் அடிக்கிறாங்கோ.. மேல விழுந்து பிரச்சனை செய்றாங்கோ...

ஆனா அதுக்கு அந்தப் பொண்ணுங்க என்ன சொல்றாங்க... நான் எனக்கு பிடிச்ச மாதிரி ட்ரஸ் போட்டுக்கறேன். முற்காலத்துல "பழமையான தொழில் செஞ்சவங்க" மட்டுமே இந்த மாதிரி தொழில்முறை சீருடையா போட்டிருந்திருக்கலாம்; ஆனா இப்ப 'அவங்க' உடைய போட்டிருக்கறதால மட்டுமே நான் அந்த மாதிரி பெண் கிடையாதுன்னு ஆண்களெல்லாம் புரிஞ்சிக்கணும்னு சொல்றாங்கோ....

ஹூம்.. உண்மைதான்... ஆண்களே.. கேட்டுக்கங்க. என்னமாதிரி வேனா அவங்க ட்ரஸ் போடலாம்.. ஆனா அந்த மாதிரிய உடைய வச்சுமட்டுமே தப்பான பெண்ணுன்ணு நாம எடை போட்டிரக்கூடாது... ஏன்னா போடுற டிரஸ் அவங்களோட தனிமனித சுதந்திரம்.

ஆனா, பெண்மக்கள்ஸ்.. நீங்களும் ஓண்ணு புரிஞ்சிக்கணும்.. ஆம்பிளைகளோட சிம்பிளான crocodile மூளைக்கு இந்த மாதிரி subtle வித்தியாசமெல்லாம் புரியாதுங்க. ஏன்னா அவங்க மூளை ஒரே கோணத்துலதான் எப்போதும் பாக்கும்... அது என்னன்னு சொல்லித்தெரியணுமா...சரி அத விடுங்க...

எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருது... ஒரு நாள் சாயங்காலம் தெருவுல நடந்துபோயிகிட்டிருந்தேன்... திடீர்னு ஒரு ரவுடி வந்து கத்தியைக் காட்டி மிரட்டி என் பர்ஸ பிடுங்கிகிட்டு ஓடிட்டான். அதுல ஏகப்பட்ட பணம் இருந்துச்சு... என்ன செய்யறதுன்னு சுத்திமுத்தி பார்த்தேன்... அப்பனு பார்த்து அங்கன தெய்வாதீனமா ஒரு போலீஸ்காரர் வந்தார்.. நான் உடனே அவர்கிட்ட போய் 'சார்.. அதோ பாருங்க சார்.. என் பர்ச மிரட்டிப் பறிச்சு ஒருத்தன் ஓடிகிட்டிருக்கான்.. எப்படியாவது அவன பிடிச்சு..." சொல்லி முடிக்கறதுக்குள்ள அவரு 'ஏன்யா.. போலீஸ் யூனிபார்ம் போட்டதுனால மட்டும் என்னைய பாத்து எந்த தைரியத்துல போலீஸ்னு நினைப்பே"னு என் சட்டையப் பிடிச்சிட்டாரு.. என்ன சொல்றதுன்னு தெரியாம ஓட்டம் பிடிச்சிட்டேன்.

----------------------
இது சொந்த சரக்கில்லை... Dave Chappelle's 'Killing Them Softly' லேர்ந்து சுட்டு வறுத்தது....

சம்மர் வந்தாச்சே... அதான் ஹாட் மேட்டர்ல ஒரு பதிவு போடலாமின்னு.. ஹி ஹி....

அப்புறம் டிஸ்கி: ஹ்யூமரிஸம் தவிர்த்து எந்த இசத்துக்கும் ஆதரவோ (அல்லது எதிர்ப்போ) இந்த பதிவில் தெரிவிக்கப்படவில்லை.

பழைய சம்மர் பதிவு ஒண்ணு

18 Comments:

 1. இலவசக்கொத்தனார் said...

  அதாவது ஆங்கில கதைப் புத்தகங்களில் எல்லாம் கோர்ட் சீன் வந்த, அப்போ வக்கீல் வந்து எதையாவது சொல்லக் கூடாததைச் சொல்லுவாரு. உடனே எதிர் தரப்பு வக்கீல் வந்து அப்ஜெக்ஷன் அப்படின்னு சொல்லுவாரு. உடனே நீதிபதி அப்ஜெக்ஷன் சஸ்டெயிண்ட் அப்படின்னு சொல்லிட்டு ஜூரியில் இருப்பவர்களைப் பார்த்து முதல் வக்கீல் சொன்னதை கருத்தில் கொள்ள வேண்டாம் அப்படிம்பாரு.

  ஆனா முதல் வக்கீலோ தான் சொல்ல வந்ததைத்தான் சொல்லிட்டாரே!! அதானே வேணும்.

  அந்த மாதிரி சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லிட்டு அப்புறம் டிஸ்கி போட்டா சரியா? அதெல்லாம் ஒத்துக்க மாட்டோம். நீர் எந்த இசத்துக்கு ஆதரவு தெரிவிக்கறீருன்னு இந்த பதிவு வெளிச்சம் போட்டுக் காட்டுது. ஆனா அது ஊரறிஞ்ச விஷயம்தானே!!! :))


 2. ILA (a) இளா said...

  டிரஸ் போடுறது தனிமனித சுதந்திரம் தான். ஒத்துக்குறேன். அதுக்காக டிரஸ் போடாம போட்டுட்டு வரவங்களை என்ன சொல்றது? கண்ண மூடிக்க வேண்டியதுதானே..


 3. நாகை சிவா said...

  இதுக்கும் நான் அனுப்பின மெயிலுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாதுல ;-)


 4. நாகை சிவா said...

  //டீசண்டான நம்மளப் போல உள்ள ஆளுங்களுக்கே வெலவெலக்கும்போது //

  இந்த கொடுமைய எல்லாம் எங்க போய் சொல்வது....


 5. நாகை சிவா said...

  //நீர் எந்த இசத்துக்கு ஆதரவு தெரிவிக்கறீருன்னு இந்த பதிவு வெளிச்சம் போட்டுக் காட்டுது. ஆனா அது ஊரறிஞ்ச விஷயம்தானே!!! //

  ஏதோ பெரியவர் நீங்க பட்னு உண்மைய உடைச்சு சொல்லிட்டிங்க... நான் எதாச்சும் ஏதோ ஏதோ சொல்லி பயமுத்துறார் கொத்துஸ்....


 6. rv said...

  கொத்ஸு,
  //தான் சொல்ல வந்ததைத்தான் சொல்லிட்டாரே!! அதானே வேணும்.//

  ஹி ஹி.. நுணுக்கமான பாயிண்டு தான்..

  பண்ணவேண்டியத பண்ணிட்டு அப்புறம் wardrobe malfunctionனு சொல்லிக்கிறதில்லியா... :P

  // நீர் எந்த இசத்துக்கு ஆதரவு தெரிவிக்கறீருன்னு இந்த பதிவு வெளிச்சம் போட்டுக் காட்டுது. ஆனா அது ஊரறிஞ்ச விஷயம்தானே!!!//
  அது என்னையா எனக்குத்தெரியாத அந்நியன் மேட்டரெல்லாம் சொல்றீரு??? :))))


 7. rv said...

  இளா,
  //கண்ண மூடிக்க வேண்டியதுதானே.//
  அப்படி எங்கயும் விதி இருக்குறா மாதிரி தெரியலியே.. இல்லச் சும்மா தெரிஞ்சிக்கத்தான் கேக்குறேன்..

  ஏன்னா நான்லாம் சமத்துப்பையனா கண்ண உடனே மூடிக்கிட்டு முருகா முருகானு முணுமுணுக்க ஆரமிச்சுருவேன்.. (நோ ஸ்மைலீஸ்: ப்ளீஸ் நோட் யுவர் ஹானர்!)


 8. Geetha Sambasivam said...

  என்னத்தைச் சொல்றது? வழக்கம்போல் விடு ஜூட் தான்! :P


 9. G.Ragavan said...

  என்ன கொடுமை சரவணன் இது! ஓ இராமநாதன் இது!

  கடையில நல்ல பொருள் இருந்தா திருடீருவீங்களா? அறிவில்லை? ஓட்டல்ல பலகாரத்தக் கண்ணாடிக்குப் பின்னாடி அடுக்கி வெச்சிருக்கான். அப்ப அத உருட்டி மெரட்டி எடுத்துத் தின்னுருவீங்களா? அப்புறம் இத மட்டும் என்ன? தப்பு பண்றதுக்குக் காரணம் வேனும். அதுல இது ஒன்னு. போங்கய்யா போங்க! திருந்த வழியப் பாருங்க.

  டிஸ்கி : நான் ஒங்களச் சொல்லலைங்க :)


 10. வடுவூர் குமார் said...

  ஏன்னா அவங்க மூளை ஒரே கோணத்துலதான் எப்போதும் பாக்கும்..
  சும்மா கதை விடாதீங்க.. ஒரே கோணமாக இருந்தா அடுத்து வர பிகரை எப்படி பார்ப்பது?இல்லை அந்த கோணம் வரை காத்திருக்கனுமா?
  முடியாது,இதுவும் ஒரு ஆணின் மூளை தான் சொல்கிறது.:-))


 11. இலவசக்கொத்தனார் said...

  //ஓட்டல்ல பலகாரத்தக் கண்ணாடிக்குப் பின்னாடி அடுக்கி வெச்சிருக்கான்.//

  நம்மூரில் தளதளவென்று கிண்டி வைத்து இருக்கும் அல்வாவாகட்டும், உங்க ஊரில் மலை போல் அடுக்கி வைத்திருக்கும் பம்பர மிட்டாய் ஆகட்டும், கையில் பைசா இல்லாத படிக்கும் நாட்களில், கடை வாசலில் நின்னு எச்சி ஒழுக பார்த்தது எத்தனை நாட்கள் ஜிரா? ;-)


 12. பினாத்தல் சுரேஷ் said...

  பதிவைவிட, "எனக்குதான் ஆப்பு"னு குதித்து வருகிறாரே நாகைசிவா, அவர்தான் அதிகக் காமடி பண்ணுகிறார்.

  டிஸ்கிக்கெல்லாம் மயங்கற கூட்டமா நாங்க.. உங்க இசம் என்னான்னு தெரியாதா எங்களுக்கு?

  Medically Competant Physician தானே நீர்?


 13. Anonymous said...

  நாங்கூட 'Heather Graham' அப்படின்னு ஜொள்ளோட வந்தா ஆப்படிச்சிட்டீங்களே?


 14. துளசி கோபால் said...

  அப்ஜெக்ஷன் ஓவர் ரூல்டு


 15. rv said...

  புலி,
  சம்பந்தமில்லேன்னு சொல்லணுமா வேணாமா?

  //இந்த கொடுமைய எல்லாம் எங்க போய் சொல்வது.... //
  யோவ்.. இந்த தமிழ் வலைப்பதிவுலகத்திலே.. இப்டியொரு ஒரு சிக்கலான பிரச்சனைய இவ்ளோ ரீஜண்டா சொல்லிருக்கேன்.. இதுக்கு மேல என்ன செய்யணும்?

  //ஏதோ ஏதோ சொல்லி பயமுத்துறார் கொத்துஸ்....
  //
  என்னய்யா சைட் ட்ராக் இது? கொத்ஸ் பயமுறுத்துறாரா?? :)


 16. rv said...

  கீதா சாம்பசிவம்,
  //வழக்கம்போல் விடு ஜூட் தான்! :P //

  எல்லா பதிவுக்கும் இஷ்டாண்டர்ட் பின்னூட்டம் வச்சிருக்காப்புல இருக்கு?? :)))


 17. rv said...

  ஜிரா,
  //அத உருட்டி மெரட்டி எடுத்துத் தின்னுருவீங்களா? //
  கொத்ஸு நமக்கு மேல ஆராய்ச்சி செஞ்சு வச்சிருக்காரு.. அதுனால அவரோட பதிலே எனதும்... :))


  //டிஸ்கி : நான் ஒங்களச் சொல்லலைங்க :) //
  நீர் எங்க வந்தீரு..??? இந்தப் பதிவு மயிலாருக்குன்னுல்ல போட்டது.. :))


 18. rv said...

  வடுவூர் குமார்,
  //இதுவும் ஒரு ஆணின் மூளை தான் சொல்கிறது.:-)) //

  கரெக்டாத்தான் சொல்கிறது..

  சிக்மண்ட் ப்ராய்டும் கின்ஸியும் என்னிக்கோ சொல்லிவச்சுட்டு போயிட்டாங்களே..


 

வார்ப்புரு | தமிழாக்கம்