வெண்டைக்காய் - யாருக்காவது தெரியுமா?

அய்யாமார்களே! அண்ணிமார்களே! அக்காமார்களே!

தமிழ்நாட்டுல ஏதோ ஒரு கோயில்ல - அம்மனா, பெருமாளா, சிவனான்னு கூட தெரியாது. எந்த ஏரியான்னும் தெரியாது. - வெண்டைக்காய வச்சு அபிஷேகம் பண்ணுவாங்களாம். அதுதான் அந்த ஊர் கோவில்ல விசேஷமாம்.

இது எந்த ஊருன்னு யாருக்காவது பதில் தெரிஞ்சா இங்க பின்னூட்டமாகவோ, அல்லது தனிமடலிலோ சொன்னீங்கன்னா, போடற வெண்டக்காய்ல உங்க பேரையும் சொல்லி ரெண்டு சேர்த்து போடுவேன்.

வெண்டைக்காய் மட்டும் உசத்தியா? நம்மளோட புடலங்காய் விளையற பூமியில வெள்ளக்காரன் கொண்டு வந்த பீன்ஸ், வெண்டை, கேரட்டுக்கு என்ன அபிஷேகம் வேண்டிக்கிடக்குன்னு கேட்க வேண்டியவங்களும், வெண்டை மேல பட்டா வராத தீட்டு முட்டகோஸ் பட்டா மட்டும் வருமான்னு கேக்க நினைக்கறவங்களும் ஒருத்தருக்கொருத்தர் தாராளமா சாத்வீக முறையில பேசிக்கலாம்.

ஆனா, நடுவுல கேள்விக்கும் பதில் சொல்ல மறந்துடாதீங்கய்யா...

நன்றி

35 Comments:

 1. இலவசக்கொத்தனார் said...

  போய்யா வெண்டைக்காய்.

  வாருமய்யா NASCAR-ன் லேட்டஸ்ட் ரசிகரே. என்ன ரொம்ப நாளா ஆளைக்காணும். ஆனாலும் இந்த பழம் புளிக்கும் என்ற ஸ்டைலில் mclaren sucks என்றெல்லாம் போட்டா சரியாகுமா? ஒரு செங்கலைத்தூக்கி ஆக்ஸிலரேட்டரில் வைத்து ஸ்டியரிங் வீலை, இடப்பக்கமாய் திருப்பி லாக் செய்தா போதுமே. அதுக்கு ஒரு ட்ரைவர் தேவையா? சரி சரி. உங்க ஆளு அதுக்குத்தான் லாயக்கு.

  போடற வெண்டைக்காயில் இவருக்கும் ரெண்டு போடுங்க. அப்படியாவது இங்க ரேஸ் பினிஷ் பண்ணக் கத்துக்கறாரான்னு பார்க்கலாம். :D


 2. மாயவரத்தான் said...

  எங்கள் தானைத் தலைவரால் பிரபலப்படுத்தப்பட்ட 'வெங்காயம்'.. இதை மறந்த 'தெருப்பொறுக்கிகளை' வன்மையாக கண்டிக்கிறோம்.

  - ஈ.வெ.ரா.நாயக்கர் மன்றம் சார்பாக...


 3. நாகை சிவா said...

  வெண்டைக்காயோ, புடலங்காயோ
  கிடைச்சா வச்சி சமைச்சு சாப்பிடுவதை விட்டுட்டு என்ன இது சின்னபுள்ளத்தனமா?


 4. G.Ragavan said...

  ஒன்னும் புரியலையேய்யா.....என்னாச்சுன்னு தெரியலையே!


 5. குமரன் (Kumaran) said...

  மிளகாய் போட்டு யாகம் செய்ற கோவிலைத் தெரியும். ஆனால் வெண்டைக்காய் அபிஷேகக் கோவிலா? தெரியல!


 6. rv said...

  ஹெல்லோ கொத்ஸு,
  என்ன செய்ய... நான் வெண்டக்காய்க்கு மாறிட்டேன். அப்ப நீங்க?

  இந்த பழம் புளிக்கும் மாதிரி தெரிஞ்சாலும், அலோன்சோ சேர்ந்த கதைல ஆரமிச்சு கிமி-பெராரி டிராமா வரைக்கும் நடந்த சங்கதியெல்லாம் கொஞ்சம் மெல்ல அசை போட்டு பாருங்க. வேணும்னுட்டு அலட்சியம் செஞ்சு ஓரங்கட்டினா கோவம் வருமா வராதா? எங்காளு ரோசக்கார ஆளு. அதான் வெடச்சிகிட்டு வந்துட்டாரு.

  இப்ப அவங்க மெச்சிக்கற தங்கக்கம்பி கிமி-ய வச்சு என்ன கிலிக்கறாங்கோன்னு பாக்கத்தானே போறோம்... :)

  நாஸ்கார் நான் இதுவரைக்கும் விளையாடினதோட சரி (சரி சரி. கம்பூட்டர்ல பா). பார்த்ததில்ல. இனிமே தான் பாக்கணும். என்ன லைவ்-வா ஒரு ரேஸையும் பாக்கமுடியாதுன்னு நினைக்கறேன்.

  அப்படியுமே பாத்துட்டாலும், எல்லா ட்ராக்கும் ஒரே மாதிரியே இருக்குமாமில்ல.. என்ன கண்றாவியோ.. பாத்துத்தொலைக்கறேன்..


 7. rv said...

  டான் மாயவரம் அவர்களே...
  நான் நல்லா இருக்கக்கூடாதுன்னே ஒரு கூட்டம் அலையறீங்களா அய்யா???

  ஒண்ணும் சொல்லாத போதே, நான் யாரோன்னும், அந்த யாரோ தனிமடல் வேற அனுப்பிச்சு என்னமோ பம்முறாருன்னும் செருப்பு அதுஇதுன்னு வச்சு பல்லையெல்லாம் ஒடச்சு கைல கொடுத்து, கூடவே சத்தான அசைவச் சாப்பாடும் போட்டு அனுப்புறாங்கோ பொதுமக்கள். என்ன மண்ணுன்னே புரியல.

  இதுல இந்த மாதிரி வேற பத்த வச்சு தொலச்சிட்டீரா.. உருப்பட்டா மாதிரிதான்.

  சரி அது கிடக்குது. ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது கோஷ்டியாச்சே.. உங்க ஊர் பக்கம் எதுனாச்சும் இந்த மாதிரி கோயில் இருக்கா.. அதச் சொல்லுங்கய்யா.. புண்ணியமாப்போகும்.


 8. rv said...

  நாகை சிவா,
  உங்க கவலை உங்களுக்கு. வீட்டுல அம்மா கையால சாப்பிட்டு ரொம்ப நாளாச்சோ? இவ்ளோ வெக்ஸாகி பேசறீங்க? :))


 9. rv said...

  ஜிரா,
  உம்ம தொல்ல தாங்க முடியல சாமி. நான் எத எழுதினாலும் புரியலன்னு வந்து பாடிட்டு போறீரு.

  ஆனாலும் செனரல் நாலெட்ஜுல வீக்கு அய்யா... பதிவுகள் பக்கம் வந்து பொதுஅறிவ வளர்த்துக்கற பழக்கம் குறைஞ்சு போச்சோ? நிறைய ப்ளாக் படிங்க. தேறுதான்னு பாப்போம். :))


 10. rv said...

  கும்ஸ்,
  ரொம்ப காரமான மிளகாயா பிரத்தியங்கராவுக்கு போட்டு டென்சனாக்கிட்டாங்க போலிருக்கு அம்மா. அதான் சீட்ட கிழிச்சு எதிர்ல இருந்து புலம்ப வச்சுட்டாங்கன்னு நினைக்கறேன். :)

  ஆன்மிக செம்மல்களெல்லாம் இப்படி கைவிரிச்சுகிட்டே பாஸ் சொல்லிகிட்டு இருந்தா அப்புறம் பதில யார்தான் சொல்வாங்க?


 11. குமரன் (Kumaran) said...

  மதிப்பிற்குரிய இராமநாதன் அவர்களே. நீங்கள் எங்கள் பதிவுகள் பக்கமே வராவிட்டாலும் நீங்கள் இடும் எல்லாப் 'புரியாத' பதிவுகளுக்கும் வந்து வருகைப்பதிவு இடுகிறோமே. எம்மையே 'பாஸ்' செய்கிறோம் என்கிறீர்களா? கொழுப்புத் தாம்யா உமக்கு. உம்மையெல்லாம் மரத்துல கட்டிவச்சு அடிக்கணும். எதாலன்னு கேக்கிறீங்களா? அதான் தெளிவா சொல்லியிருக்காகளே. :-)


 12. மாயவரத்தான் said...

  ஹிஹி.. விசாரிச்சு சொல்றேன். அது சரி எதுக்காக கேக்குறீங்க? அங்கன போய் ரஷ்ய மொழியிலே எதுவும் பாடி பேரு வாங்க போறீங்களோ?!

  எதோ லிங்க் எல்லாம் கொடுத்தீங்க. இதுக்கு பேசாம நான் கூவம் பக்கம் போய் ஒரு மணி நேரம் நின்னுட்டு வந்திருக்கலாம். த்தூ.


 13. நாகை சிவா said...

  //உங்க கவலை உங்களுக்கு. வீட்டுல அம்மா கையால சாப்பிட்டு ரொம்ப நாளாச்சோ? இவ்ளோ வெக்ஸாகி பேசறீங்க? :)) //
  சரியா சொல்லிட்டீங்க. ஆறு மாசம் ஆச்சு. ஹும் சீக்கிரம் ஊருக்கு போகனும்ப்பா,,,,,


 14. பொன்ஸ்~~Poorna said...

  //வெள்ளக்காரன் கொண்டு வந்த பீன்ஸ், வெண்டை, கேரட்டுக்கு //

  ராம்ஸ்,
  உண்மையாவே வெண்டைக்காய் இந்திய காய்கறி இல்லையா? இந்த ஊருக்கு வந்து எப்படித் தேடினாலும் வெண்டைக்காய் மட்டும் கிடைக்க மாட்டேங்குது.. பீன்ஸ், கேரட் எல்லாம் நிறைய பார்த்துட்டேன்..
  முட்டகோஸும் வெளிநாட்டு காய் தான்னு நினைவு..

  ஆனா கோயிலைக் கண்டு பிடிச்சா சொல்லுங்க.. புடலங்காய் பிடிக்காம போக என்ன காரணம்னு கேட்கணும். வெண்டைக்காயைவிட, புடலங்காய் சமைத்தால் இன்னும் ருசியா இருக்கும்.. சமைக்கத் தெரியலைன்னா சொல்லுங்க. நம்ம நாகை சிவா நிறைய சுட்டியெல்லாம் வச்சிருக்காரு... சமையற்குறிப்பு பதிவு போட்டா வந்து சுட்டியாத் தான் பேசுவாரு.. ;)


 15. G.Ragavan said...

  // இராமநாதன் said...
  ஜிரா,
  உம்ம தொல்ல தாங்க முடியல சாமி. நான் எத எழுதினாலும் புரியலன்னு வந்து பாடிட்டு போறீரு.

  ஆனாலும் செனரல் நாலெட்ஜுல வீக்கு அய்யா... பதிவுகள் பக்கம் வந்து பொதுஅறிவ வளர்த்துக்கற பழக்கம் குறைஞ்சு போச்சோ? நிறைய ப்ளாக் படிங்க. தேறுதான்னு பாப்போம். :)) //

  :-(((((((((( ஜெனரலோட நாலெட்ஜுல நான் வீக்கா இருந்தா என்ன? மந்த்தா இருந்தா என்ன? டேயா இருந்த என்ன? அவரா இருந்தா என்ன? மினிட்டா இருந்தா என்ன? செகண்ட்டா இருந்தா என்ன? ஹோஓஓஓஓஓஓஓஓஓஓஒ.....

  தேரா ராகவா செப்புவதுடையோய்னு சொல்றீங்களா?


 16. துளசி கோபால் said...

  ரொம்பநாள் கழிச்சு வந்ததுமில்லாம, வர்றப்பயே இப்படி கொழகொழன்னு வெண்டைக்காயோடு
  வந்தா உருப்பட்ட மாதிரிதான் .

  எதுக்கும் நாலு சிரிப்பான் போட்டுக்கலாம்.

  :-))))))))))))))))))))))))))))


 17. பெருசு said...

  ஏதோ முருங்க்காய் மேட்டர்னா கூட பரவாயில்லை.

  வெண்டை ம்ஹும் இது பொம்பிளை சமாச்சாரம்.

  நான் வர்லப்பா விளையாட்டுக்கு.


 18. rv said...

  என்ன கும்ஸ்,
  பாஸ் னா.. கேள்வி கேட்டா பதில் சொல்லாம 'பாஸ்' (pass)னு சொல்றீங்களேன்னு கேட்டேன்..

  குத்திக்காட்டவே பொறந்த பரம்பரையோ??? :)))))))))


 19. நன்மனம் said...

  போன பதிவு வில்சன், இந்த பதிவு வெண்டைக்காய், அடுத்ததை ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன்.

  இந்த பதிவுக்கு :-))


 20. rv said...

  நாகை சிவா,
  வாங்க வாங்க. இன்னும் எத்தனை நாள் இருக்கு கிளம்ப?


 21. rv said...

  பொன்ஸ்,
  வெண்டைக்காய் இந்திய காய்கறியா, தென்னிந்தியக் காய்கறியா அதெல்லாம் எனக்கு நிச்சயமா தெரியாது. இல்லைன்னு சொல்லி புதிர் போடும் பெம்மான் கொத்தனாரு சொன்னாரு.

  ஆஹா, புடலங்கா புடலங்காதான். முந்தா நேத்திக்குத்தான் நல்லா சாப்பிட்டேன். ரொம்ப நாள் கழிச்சு. நம்மூர்ல மட்டும்தான் கிடைக்கும் போலிருக்கு. வெண்டக்காய்க்கும் குறைச்சலில்லை. அங்க எப்படி நளாயினி பாகமெல்லாம் நடக்குது? :))

  சுட்டி தரவரா நாகை சிவா? இங்க ஒண்ணும் கொடுக்க காணோமே.. நான் கொடுத்ததுக்காகவாது பதில் சுட்டி தந்திருக்கலாமே.. என்ன சிவா?? :))


 22. rv said...

  ஜிரா,
  என்னவா வேணா இருந்துட்டு போங்க. எல்லாம் உங்க நல்லதுக்குத்தான் சொன்னேன். அறிவ வளத்துக்க வேணாமா?? :))


 23. இலவசக்கொத்தனார் said...

  ஆமாம் நாந்தான் சொன்னேன். துணைக்கு விக்கிப்பீடியார் இருக்காரு பாருங்க. வெண்டைக்காய் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தது.

  எங்க ஊரில் வெண்டை, புடலை, முருங்கை என எல்லாக் காய்களும் கிடைக்கும். எனக்கு வெண்டை பிடிக்கும் அளவிற்கு புடலை பிடிக்காது.


 24. இலவசக்கொத்தனார் said...

  //ஒரு செங்கலைத்தூக்கி ஆக்ஸிலரேட்டரில் வைத்து ஸ்டியரிங் வீலை, இடப்பக்கமாய் திருப்பி லாக் செய்தா போதுமே. அதுக்கு ஒரு ட்ரைவர் தேவையா? சரி சரி. உங்க ஆளு அதுக்குத்தான் லாயக்கு. //

  இதுக்கு பதிலே சொல்லலையே....


 25. rv said...

  டான் மாயவரம்,
  கேட்டுச் சொல்லுங்க.

  கூவமா? நம்மூர் காவேரியே பாத்துகிட்டிருந்தா அதோட மகிம தெரியாம போயிடுமே.. அதான் இதுக்கும் லின்க் கொடுத்தேன். தப்பா எடுத்துக்காதீங்க. :)))


 26. rv said...

  அக்கா,
  வழவழன்னு இருக்கறதுனாலதான் நான் போட்ட சிரிப்பானெல்லாம் வழுக்கிகிட்டு போயிடுச்சு போலிருக்கு.

  ஆமா, உங்களுக்கு தெரியாம/ நீங்க இல்லாத ஊரா தமிழ்நாட்டுல ஊரு இருக்க முடியுமா என்ன? மாமா கிட்ட சொல்லி நல்ல டார்டாய்ஸா வாங்கி கொளுத்திட்டு யோசிச்சு சொல்லுங்க எந்த ஊருன்னு.. :))


 27. rv said...

  பெருசு,
  முருங்கக்கானு சொன்னாதான் வருவீங்களா?? பாப்போம் அதுக்கும் ஏதாவது மேட்டர் கிடைக்குதான்னு... இருந்தா பதிச்சுட வேண்டியதுதான்..

  அது எப்படி - வெண்டை, கெண்டையெல்லாம் சமைக்கணும்னா பொம்பளங்க சமாச்சாரம்.. கவிதன்னா நம்ம சமாச்சாரம். நல்லாருக்கு போங்க.

  ரொம்ப நாளைக்கு விளையாட மாட்டேன்னு விளையாட்டு காட்ட முடியாதுப்போவ்! :)))


 28. rv said...

  நன்மனம்,
  நான் என்ன ஜார்ஜ் லூகாஸா இல்ல மணிரத்னமா? ட்ரிலாஜியெல்லாம் சொல்லிவச்சு அடிக்கறதுக்கு..

  இந்த பதிவாவது புரியுதா?


 29. G.Ragavan said...

  ரஷ்யப் பனி பிரண்டு
  நாட்டு மருந்தடித்து
  மருத்துவர் பட்டம் கொண்டு
  உள்ளூர் வெண்டைக்காயை
  வெண்டைக்காயை வெளிநாட்டிற்குத்
  தாரை வார்த்த
  இராமநாதனா என்னறிவை ஆராய்ந்து சொல்லத் தக்கவன்!!!!!!!!!!
  இராமநாதா...........என்னை நன்றாக உற்றுப் பார்!


 30. பினாத்தல் சுரேஷ் said...

  வெண்டைக்காய் பதிவய்யா இது!


 31. ரங்கா - Ranga said...

  அடேங்கப்பா, வெண்டைக்காய்க்கு வந்த வாழ்வைப் பாரேன்! எந்த ஊர், கோயில், தெய்வம், நடக்குதா இல்லையா என்கிற விஷயம் இன்னும் தெரியாட்ட கூட, பதிவும் பின்னூட்டங்களும் சூப்பர்.

  ரங்கா.


 32. rv said...

  ஜிரா,
  மயிலார் தோகைய விரிப்பிரினும் குற்றம் குற்றமேன்னு நான் சொல்லணுமா?

  குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்குபவர்கள்னு யாரையோ சொல்றாரு கொத்ஸு. அவர கவனிங்க.


 33. rv said...

  கொத்ஸு,
  //இதுக்கு பதிலே சொல்லலையே....
  //
  நானே அடங்கிப்போறேன். சும்மா விட மாட்டீரா? இருக்கட்டும். எனக்கும் நோண்டி நக்கலடிக்க காலம் வராமயா போகப்போகுது??

  இராகவனே வெண்டைக்காய் நம்மூர்னு சொல்றாரே..


 34. rv said...

  பெனாத்தலார்,
  வெண்டைக்காய் பத்தின பதிவே தான். புரிஞ்சுடுச்சா? நான் உள்குத்தால்ல மறைச்சு சொல்லிருந்தேன்.

  இன்னும் கொஞ்சம் cryptic ஆ பதிவு போடணுமப்பா..


 35. rv said...

  ரங்கா,
  வெண்டைக்காய் மகாத்மியம் பாட யாருமே ஆள் கிடைக்கலியே.. யாராவது சீக்கிரம் பாடினா தேவலை.

  நன்றி.


 

வார்ப்புரு | தமிழாக்கம்