பிடிச்ச நாலு!

சும்மாவே மெகா சீரியல் ஆளு நான். என்னையப் போய் பிடிச்ச நாலு சொல்லுன்னு சொன்னா.. விட்டுடுவேனா? பார்ட் -1,2,3,4 போட்டாதான் நியாயம்னாலும், போனாப்போகுதுன்னு ஒரே பதிவா போட்டுடறேன்.

Four Jobs I have had
உண்மையச் சொல்லப் போனா அப்பப்போ பார்ட்-டைம்ல தான் பார்த்திருக்கேனே தவிர, வேலைன்னு சொல்ற அளவுக்கு ஒண்ணும் செஞ்சதில்லை. இருந்தாலும் சொல்லியாகணுமில்லியா?

1. சில மாதங்களுக்கு Intern: எவ்வளவு தான் படிச்சாலும், இண்டெர்ன்ஷிப் சேரும்போதுதான் நமக்கு உண்மையிலேயே ஓண்ணுமே தெரியாதுங்கறது தெரியவரும். அப்ப கத்துகிட்டா தான் வாழ்க்கைக்கும் ஏதாவது. அப்படி, எனக்கும் ஒண்ணுமே தெரியாதுன்னு புரியவச்சது அந்த சில மாதங்கள்.

2. மொழிபெயர்ப்பாளர்: அதுக்காக டோண்டு அளவுக்கு pro லெவல்லாம் இல்ல. சில வருஷங்களுக்கு முன்னாடி India Trade Promotion Organization சில் கண்காட்சிகள நடத்தினாங்க. இந்தியாலேர்ந்து பிஸினஸ்காரங்க வந்து ஸ்டால்லாம் வச்சிருந்தாங்க மாஸ்கோல. ஆனா, ITPO ஆட்கள் நிஜமான மொழிபெயர்ப்பாளர்களுக்கு சம்பளம் கொடுத்து கட்டுபடியாகாதுன்னு சொல்லி நாளைக்கு பிக்ஸட் ரேட் போட்டு எங்கள கூப்பிட்டாங்க. ஓசியில பணம்னா வேணாம்னா சொல்லுவோம். காலேஜும் தூதரகத்திலிருந்து விண்ணப்பம் வரவும், எங்களுக்கு ஸ்பெஷல் லீவெல்லாம் கொடுத்து அனுப்பினாங்க. யஷ்வந்த் சின்ஹா கற ஜாலியான, உயரமான, மரியாதையான ஆள (அப்போ மத்திய அமைச்சர்) தனியா சந்திச்சு பேச அருமையான வாய்ப்பு கிடச்சது. கூடவே ராஜீவ் ப்ரதாப் ரூடி. அதோட சூப்பர் பார்ட்டி ரேடிஸனல. வேலையொண்ணும் பாக்கல. சும்மா சுத்தினோம்.

3. எங்க காலேஜுக்கான ஆண்டுவிழாவை புரட்சி செஞ்சு சிடியில் மாற்றி ப்ளாஷ் டகால்டி பண்ணி ஏகப்பட்ட பணம் சுட்டது.

அவ்ளோதான்.

Four Movies I love னு சுருக்க முடியாது. அதனால ஆங்கிலம், தமிழ்னு பிரிச்சுக்கறேன்.

English
1. Lord of the Rings - எதுன்னு கேக்கக்கூடாது
2. Monty Python and the Holy Grail
3. Full Metal Jacket
4. Crash

தமிழ்
1. மகாநதி
2. மைக்கேல் மதன காமராஜன்
3. ராஜா கைய வச்சா
4. அண்ணாமலை

Four TV Shows I can watch over and over again
1. Seinfeld
2. Fawlty Towers
3. Late Night with Conan o'Brien
4. The Good Life

Four Places Id rather be
1. மூணார்
2. கொடைக்கானல்
3. பழநி
4. திருச்செந்தூர்

Four Actors I adore
English
1. de Niro
2. Tom Cruise
3. Colin Farrell
4. Ralph Fiennes

தமிழ்
1. ரஜினிகாந்த்
2. கமல்ஹாசன்
3. மாதவன்
4. விவேக்

Four Things Id rather do
1. பிடிச்ச பாட்டு போட்டுட்டு கார்ல சுத்தறது
2. அது முடியாத பட்சத்தில் GTA San Andreasஇல் ஓட்டுவது
3. surfing
4. gaming

Four Favorite Dishes + more
1. Lasagna Vegetariano
2. தயிர் சாதம், ஆவக்காய்
3. வெங்காய சாம்பார், சேப்பக்கிழங்கு/உருளைக்கிழங்கு கறி
4. வத்தக்குழம்பு, ஜவ்வரிசி வடகம்
5. சில்லி பரோட்டா / வெங்காயப் பச்சடி
6. டால் மக்கனி+garlic naan

Four Favorite Singers
கர்நாடக சங்கீதம்
1. டி. எம். க்ருஷ்ணா
2. செம்மங்குடி
3. விஜய் சிவா
4. எம். எஸ்

மெல்லிசை
1. எஸ்.பி.பி
2. கார்த்திக்
3. திப்பு
4. உதித் நாராயண்

Four Sites I Visit Daily
1. Google News
2. The Register
3. Thamizmanam.com
4. GMail

நான் வம்புக்கு இழுக்கும் நாலு பதிவர்கள் + more
1. ஆனந்த்
2. முகமூடி
3. இலவசக் கொத்தனார்
4. மோஹன் தாஸ்
4. குசும்பன்

16 Comments:

 1. முகமூடி said...

  நான் இந்த நாலு வகை சங்கிலி இல்லாம புது தினுசா ஒரு சங்கிலி தொடர் ஆரம்பிக்கலாம்னு இருந்தேன். இப்ப ஆரம்பிச்சா வேற விதமா சபையில பேச்சு வருமேன்னு சும்மா இருக்கேன். சரி நாலையும் ஒரு கை பாப்போம்.


 2. இலவசக்கொத்தனார் said...

  ஏதோ நானுண்டு, என் புதிருண்டு, எனக்கான 100 சொச்சம் பின்னூட்டமுண்டு (நேரம்டா சாமின்னு நீங்க சொல்லறது கேக்குது, நானும் போய் போடற பின்னூட்டங்களும் உண்டுன்னு இருந்த என்னப் போய் இப்படியெல்லாம்.....

  சரி சரி போட்டுருவோம். :)


 3. வெளிகண்ட நாதர் said...

  எல்லா புடிச்சதும் நாலுக்கு மேலே ஜாஸ்தியா இருக்கு!


 4. ஏஜண்ட் NJ said...

  //புது தினுசா ஒரு சங்கிலி தொடர் ஆரம்பிக்கலாம்னு இருந்தேன். இப்ப ஆரம்பிச்சா வேற விதமா சபையில பேச்சு வருமேன்னு சும்மா இருக்கேன்.//-முகமூடி

  கருத்து..சுதந்திரம்...என்னாச்சு!!

  சும்மா...எடுத்து... வுடும்!! பாத்துக்கலாம்!!

  "உன்னைப் பத்தி யாரும்
  அட என்னச் சொன்னால் என்ன...
  அதை இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் தள்ளு...."


 5. பழூர் கார்த்தி said...

  என்ன இராமநாதன், நீங்க ஏற்கனவே சங்கிலித் தொடரில் இணைந்து விட்டது தெரியாமல், நான் இன்றுதான் உங்களை அழைத்திருக்கிறேன்.. எனது சங்கிலித் தொடர் பதிவைப் பாருங்கள்..
  http://lazyguy2005.blogspot.com/

  *****

  உங்களுக்கு பிடித்ததில் எனக்கும் பிடித்தது

  கமல்ஹாசன்
  லெமன் சாதம்


 6. குசும்பன் said...

  நான் கமெண்டு போடலாமா வேண்டாமான்னு கொழம்பியிருந்தேன் பாஸு. ஆனாப் பாருங்க... கருத்து சொதந்திரம் பத்தி NJ சொன்னதுக்கு அப்புறம் தெளிஞ்சு போச்சி...

  ரேசுநாதரே இப்பிடி வம்புல மாட்டிவுட்டீரே :-)

  வாரக்கடைசியிலே வரேன் ;-)


 7. rv said...

  தல,
  வாங்க வாங்க. அதென்ன வேற சங்கிலி?

  கைபாருங்க. அப்படியே டைப்பும் பண்ணுங்க.


 8. rv said...

  கொத்தனார்,
  //ஏதோ நானுண்டு, என் புதிருண்டு, எனக்கான 100 சொச்சம் பின்னூட்டமுண்டு //
  அலம்பல் ஜாஸ்தியாப் போச்சு வரவர. நடக்கட்டும். ஆனா, உங்க நாலு பதிவு சீரியஸா போயிடுச்சே? ஏன்? (ஜில் ஜில் ஸ்டைல்)


 9. rv said...

  வெளிகண்டநாதர்,
  என்ன செய்யறது. இதுவே கஷ்டப்பட்டு நிறைய விஷயங்களை மனசொடிஞ்சு விட்டுட்டேன். இல்லேன்னா நிஜமாவே நாலு பார்டா பதிவு போட்டுருக்கணும். :)


 10. rv said...

  ஏஜெண்டு,
  //உன்னைப் பத்தி யாரும்
  அட என்னச் சொன்னால் என்ன...
  அதை இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் தள்ளு...."
  //
  வந்ததுக்கு நாரதர் வேலையா? யாரை நோக்கி குத்துறீருன்னு புரியலியே!


 11. rv said...

  சோம்பேறி பையன்,
  உங்கள் அழைப்புக்கு ரொம்ப நன்றி.

  நான் என்ன குமரனாட்டமா.. நாலு பேர் கூப்டப்பறம் தான் பதிவு போடுவேன்னு சொல்ல.. (குமரா, NoM :) )

  அதான் ராகவன் சொன்னவுடனே போட்டுட்டேன். :)

  --
  உங்க மயில் சேப்பா வந்திருச்சு. பதில் பறக்கவிடறேன் சீக்கிரமே.


 12. rv said...

  குசும்பரே,
  அதான் தெளிஞ்சிடுச்சுல்ல. சீக்கிரமே போடும் பதிவை. உம்ம நாலு என்னன்னு உலகத்துக்கு தெரியவேணாமா? :)


 13. பூனைக்குட்டி said...

  http://imohandoss.blogspot.com/2006/02/blog-post_26.html

  நான் போட்டுட்டேன் ராமநாதன்.


 14. குமரன் (Kumaran) said...

  என்ன இராமநாதன்? பிடிச்ச டிஷ் லிஸ்ட்ல நான் - வெஜ் அயிட்டமெல்லாம் எழுதலையா? வெறும் வெஜ் அயிட்டமாத் தான் இருக்கு? :-)


 15. rv said...

  மோகன்தாஸ்,
  அழைப்பை ஏற்று பதிவு செய்ததற்கு நன்றி. சுவையாக இருந்தது உங்கள் பதிவு.


 16. rv said...

  கும்ஸ்,
  நான் வெஜ்ன்னு தானே அயிட்டமெல்லாம் எழுதிருக்கேன்?

  (நீங்க அந்த நான் - வெஜ் பத்தி கேக்கறீங்களா? நிறைய தெரிஞ்சவங்க படிக்கறாங்க பா. எதுக்கு ரிஸ்குன்னு விட்டுட்டேன் :) )


 

வார்ப்புரு | தமிழாக்கம்