மூன்று லட்சத்தில் மூச்சு இருக்குது!

என்னடா இது, போனதுல முன்னூறுன்னு சொல்லி வாங்கிட்டு பேராசைப்பட்டு லட்சத்துக்கெல்லாம் ஆசைப்படறேன்னு பயந்துடாதீங்க. பழைய நியூஸ் போலிருக்கு. இருந்தாலும் இன்னிக்குதான் ஒரு ரஷ்ய கைத்தொலைபேசிகள் குறித்த இதழ்ல கண்ல பட்டது.

நம்மூர் ஆளு ஒருத்தர் பத்திதான்.

பேரு: தீபக் ஷர்மா
இருக்கறது: லூதியானா, பஞ்சாப்.

கின்னஸ் புக்குல பேரு வந்திருக்கு. என்ன செஞ்சு? அதுலதான் விஷயமே!

ஒரு மாசத்துக்கு 1,82,689 (ஒரு லட்சத்து எண்பத்தியிரண்டாயிரத்து அறுநூத்தி எண்பத்தி ஒன்பதுதான்! தப்பால்லாம் படிக்கல நீங்க) SMS கள தன்னோட நோக்கியா 6600 (போனுக்கு வாயிருந்தா அழும்) அனுப்பியிருக்காரு. ஒரு நாளைக்கு ஆறாயிரத்து சொச்சம்! இதுல விசேஷமென்னன்னா ஒவ்வொரு எஸ்.எம்.எஸ்ஸும் தனித்துவமானவை. அதாவது உள்ளடக்கம் ஒரே மாதிரியான பார்வர்ட் அல்ல!!

ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்ப சராசரியா மூணு செகண்டு ஆகுதாம் இவருக்கு.

இதுவரைக்கும் அனுப்பிச்சது 5.25 லட்சத்து சொச்சம்.

ஏர்டெல் நிறுவனம் இந்த மாசம் இவருக்கு ஸ்பெஷலா பில்லனுப்பிருக்காங்க. பில் அறிக்கை எவ்ளோ நிளம் தெரியுமா? 4102 பக்கள். 12.5 கிலோ எடை!

ஆனா, மனுஷனுக்கு இன்னும் மோகம் போகலை. ஒரு மாசத்துக்கு மூணு லட்சம் அனுப்ப முயற்சி செய்யப்போறாராம். அதாவது தினமும் பத்தாயிரம். ஒரு மணி நேரத்துக்கு 416!!!

வாழ்க வளர்கன்னு வாழ்த்திக்கறேன்!!!! ஏர்டெல்லுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்! :))

1
2

பிகு: இந்த விஷயத்துல நிறைய குழப்பம் இருக்கு. இண்டியன் எக்ஸ்பிரஸ் வேற விதமா (நம்பர்கள் விஷயத்தில்) சொல்லுது. ஆனா, நான் படிச்ச ரஷ்ய இதழ் மேற்சொன்ன சுட்டியைத்தான் தந்திருந்தது.

23 Comments:

 1. துளசி கோபால் said...

  ஆமாம், இதுக்கெல்லம் யாரு 'காசு' கட்டறதாம்?

  ஜனங்களுக்கு, குறிப்பா இந்த ஆளுக்கு என்னமோ ஆயிருக்கு போல.

  சரி சரி கிளம்பறேன்.
  ஒரு பத்து நிமிஷம் பதிவு பார்த்துட்டுப் போகலாமுன்னு வந்தேன்.

  நான் வர்றவரை எல்லோரும் நல்லா இருங்க.


 2. Unknown said...

  பில் தொகை எவ்வளவு?
  அதை யாரும் சொல்லலையே?


 3. மணியன் said...

  அதானே, ஒரு எஸ் எம் எஸ் 50 காசுகள் என்றாலும் 2.5 லட்சம் ரூபாய் ஆகியிருக்குமே !! ஏர்டெல்லுக்கு ஏன் அனுதாபங்கள் ?

  //இதுல விசேஷமென்னன்னா ஒவ்வொரு எஸ்.எம்.எஸ்ஸும் தனித்துவமானவை. அதாவது உள்ளடக்கம் ஒரே மாதிரியான பார்வர்ட் அல்ல!!//
  எப்படி, வார்த்தையின் ஒவ்வொரு எழுத்தும் ஒரு செய்தியாகவா ? :)))


 4. குமரன் (Kumaran) said...

  அடடா நாம தான் இப்படி ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு பதிவுன்னு பைத்தியம் புடுச்சுப் போட்டுக்கிட்டிருக்கோம்ன்னு நெனைச்சா என்னைவிட பெரிய பைத்தியம் இங்க இருக்கே. சரியான SMS பைத்தியம். ஏதாவது வைத்தியம் நிச்சயம் தேவை. ரெண்டு பைத்தியத்துக்கும் தான் சொன்னேன். :-)


 5. குமரன் (Kumaran) said...

  //எப்படி, வார்த்தையின் ஒவ்வொரு எழுத்தும் ஒரு செய்தியாகவா ? :)))
  //

  அப்படித்தான் பண்ணியிருப்பாரோ. இல்லாட்டி எப்படி முடியும்? இராமநாதன்...உங்க டெக்னிக் நிறைய பேருக்குத் தெருஞ்சிருக்கு. :-)


 6. ஏஜண்ட் NJ said...

  Rams,
  please try to do something to display the correct updated time for my blog in your blogrolling!

  It's disgusting, as it looks updated a long ago here.

  :-(

  Thanks
  --------

  try, may be deleting & again adding the link to my blog!


 7. rv said...

  அக்கா,
  //ஆமாம், இதுக்கெல்லம் யாரு 'காசு' கட்டறதாம்?
  //
  அவரேதான் கட்டிருக்கார். பேக்கிங்கெல்லாம் முடிச்சாச்சா?


 8. rv said...

  அ.உ.ஆ.சூ.ஸ்.மி.ம.பொ,

  //பில் தொகை எவ்வளவு?
  அதை யாரும் சொல்லலையே//
  அது பத்தித் தெரியல. ஆனா ஏர்டெல்ல மாசம் 99 ரூபாய்க்கோ என்னவோ எஸ்.எம்.எஸ் இலவசம்னு திட்டம் இருக்கு போல இருக்கு.


 9. rv said...

  குமரன்,
  //அடடா நாம தான் இப்படி ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு பதிவுன்னு பைத்தியம் புடுச்சுப் போட்டுக்கிட்டிருக்கோம்ன்னு நெனைச்சா என்னைவிட பெரிய பைத்தியம் இங்க இருக்கே. //
  நோ கமெண்ட்ஸ்! :))


 10. rv said...

  மணியன்,
  //ஏர்டெல்லுக்கு ஏன் அனுதாபங்கள் ?
  //
  வெறும் 99 ரூபாய்க்கு unlimted SMS கொடுத்து மாட்டியிருக்காங்களே. ஏதோ தினமும் பத்து அனுப்பினா பரவாயில்ல. இவரு பத்தாயிரமில்ல அனுப்பறார்.

  //வார்த்தையின் ஒவ்வொரு எழுத்தும் ஒரு செய்தியாகவா ? :)))
  //
  சேம் சைட் கோலா? அப்படி அனுப்பினா படிக்கறவங்களுக்குத்தானே கஷ்டம். அனுப்பற நமக்கில்லையே. :)))


 11. rv said...
  This comment has been removed by a blog administrator.

 12. rv said...

  குமரன்,
  //உங்க டெக்னிக் நிறைய பேருக்குத் தெருஞ்சிருக்கு. :-)
  //
  ஹூம். காப்பிரைட் வச்சிருக்கேன். இருந்தும் மக்கள் காப்பியடிக்கறாங்களே. நம்ம லீகல் அட்வைசர் லீவுக்கு இந்தியா போயிருக்காங்க. வந்தோன்னதான் இவங்களல்லாம் கவனிக்கணும்.


 13. rv said...

  nj,
  நீங்க சொன்னத முயற்சி செய்து பாக்கறேன். ப்லொக்ரோலிங் கண் தொறக்கறாரான்னு பார்ப்போம்.


 14. Boston Bala said...

  எல்லா 'சிற்றறிக்கை'யையும் கின்னஸ் புக் ஆஃப் ரெகார்ட்ஸுக்கே எஸ்.எம்.எஸ்ஸா விட்டால் எப்படி இருந்திருக்கும்!

  கின்னஸும் (ஏர்டெல்லின்) கணக்கு வைத்துக் கொள்வதில் சில்மிஷம் எதுவும் நடக்காலியே என்று சரி பார்த்துக் கொள்ளலாம் அல்லவா :-/


 15. கைப்புள்ள said...

  இதே வேகத்தில் பின்னூட்டம் போடறதுக்கும் ஒரு போட்டியோ இல்லை கின்னஸ் ரெகார்டோ இருந்தா எப்படி இருக்கும்???


 16. rv said...

  பாலானாரே,
  அதுவும் நல்ல ஐடியாதான். கின்னஸ் புக்கும் தன் புஸ்தகத்திலேயே பெயர் போட்டுக்கலாம். அதிக எஸ்.எம்.எஸ் வந்த நிறுவனம்னு. :)


 17. rv said...

  கைப்புள்ள,
  அதுக்குள்ள அடுத்த போட்டியா? சீக்கிரம் ஆரமிச்சிடலாம். இப்பதானே மூணெழுத்து முடிஞ்சிருக்கு. நல்லவேளை பின்னூட்ட மட்டுறுத்தலுக்கும் முன்னாடியே வச்சுட்டோம். இப்பன்னா, நான் இங்கேயே 24 மணி நேரமுமில்ல உக்காந்திருக்கணும். :))


 18. கைப்புள்ள said...

  ட்ரிபிள் செஞ்சுரி இல்லய்யா அடிச்சிருக்கீரு? நாள் முழுக்க உக்கார என்ன கசக்குதா? வர்ற பந்தையெல்லாம் பவுண்டரிக்கு அடிச்சிட்டே இருக்க வேண்டியது தான். ஒரு பதிவுக்கு மூணு லட்சம் பின்னூட்டம் வாங்கிய முதல் பதிவர் என்ற பட்டம் பெருமையா இருக்குமில்ல?


 19. குமரன் (Kumaran) said...

  அநியாயம் அக்கிரமம். திரு இராமநாதன் அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால் யார் யாருக்கு என்ன என்ன மரியாதை கொடுக்க வேண்டும் என்று உங்களுக்குச் சரியாகத் தெரியவில்லை என்பது தான். அன்பு நண்பர் திரு. செல்வன் அவர்களை ஏதோ எழுத்துக்களைப் போட்டு திட்டியிருக்கிறீர்கள். அது சரியில்லை. முறையில்லை. அரசியல் நாகரீகமில்லை. அவரையும் அன்புடன் செல்வன் என்று அழையுங்கள். இல்லையேல் என்னையும் மற்றவர்களையும் எங்களுக்கு உரிய பட்டங்களுடன் அழையுங்கள். மொட்டையாகப் பெயர் சொல்லி கூவாதீர்கள்.

  முடிந்தால் கருணாநிதி என்று சொல்லிப் பாருங்கள். அவர் கலைஞர் அல்லவா?

  ஜெயலலிதா என்று சொல்லிப்பாருங்கள். அவர் புரட்சித் தலைவி, அம்மா அவர்கள் அல்லவா?

  :-)


 20. rv said...

  சரி கைப்புள்ள,
  உங்க ஆர்வத்தையும் ஆசையையும் கெடுப்பானேன்.

  முன்னூறு போட்ட மக்கள்லாம் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துகிட்டு வரட்டும். சீக்கிரமே ஆரமிச்சிடுவோம்


 21. டிபிஆர்.ஜோசப் said...

  அதெப்படிங்க உங்க கண்ணுல மட்டும் இந்த மாதிரி விஷயங்கள்லாம் படுது..

  தஞ்சாவூர்காரங்க டிடெக்டிவஸ்சா இருக்கறதுக்கு இந்த மாதிரி ஷார்ப் அப்சர்வேஷனும் காரணமுனு நினைக்கிறேன். சரியாங்க இராமநாதன்?


 22. rv said...

  குமரனாரே,
  அரசியல் அரிச்சுவடிய நீர் படிக்க ஆரமிச்சி இப்பதான் நாலுநாள் ஆவுது. அதுக்குள்ள உதாரா? அதுவும் என்னைய மாதிரி பண்பட்ட ஒரு அரசியல்வாதியிகிட்டவே? உம்ம அன்புச் செல்வரும் எதிர்க்கவில்லையே. இதிலேர்ந்தே சரியாத் தான் சொல்லிருக்கேன்னு புரியலியா?

  //அவர்களை ஏதோ எழுத்துக்களைப் போட்டு திட்டியிருக்கிறீர்கள். //
  திட்டவில்லை ஐயா. சரி.. விளக்கம் கொடுக்கறேன்.

  அ.உ.ஆ.சூ.ஸ்.மி.ம.பொ

  கில லக ன்மிக சூப்பர் ஸ்டார் மினசோட்டா ன்றப் பொருளாளரே..

  இவ்ளோ மரியாதையா அவர விளிச்சிருக்கேன். நீங்க என்னடான்னா.. விஷயம் புரியாம.. அரசியல் அமெச்சூர்தனத்த நீங்களே காட்டிக்கிறீங்க. அதுக்கு நன்றி!

  :))


 23. rv said...

  ஜோசப் சார்,
  விஷயத்தோட எழுதற உங்கள மாதிரி ஆளுக ஒரு வகை.

  எழுதணுமேன்னு எழுதறவங்க ரெண்டாவது. என்னைய மாதிரி. அதான் ஒன்னுத்தலயும் போகஸ் இல்லாம தோணினது, பாத்தது, கேட்டதுன்னு இஷ்டத்துக்கு எழுதறேன். :)

  அப்புறம், நம்மூர்ல இருந்திருக்கீங்க. வெட்டிப்பேச்சுக்கு பேர் போன ஊராச்சே.. தெரியுமில்ல. :))


 

வார்ப்புரு | தமிழாக்கம்