குளிருது குளிருது

ரெண்டு மூணு வருஷமா குளிர் அவ்வளவா இல்லாம அதாவது மைனஸ் பதினஞ்சுக்குக் கீழே போகாம சவுகரியமா இருந்தோம். இப்ப என்னடான்னா ரெண்டு நாளா பகல்ல - 25 இரவுகளில் -20 னு போட்டு வாங்குது. யார் விட்ட சாபமோ? ஆர்க்டிக்லேர்ந்தும் மேற்கு சைபீரியாவுலேர்ந்தும் (அங்க இன்னும் மோசம்: -50 வரைக்கும் போய் emergency னு அறிவிச்சுருக்காங்க) குளிர்காத்து திடீர்னு வந்துடுச்சுன்னு ஆராய்ச்சியெல்லாம் பண்ணிருக்காங்க. இந்த வாரமும் அடுத்த வாரமும் பூராவும் இப்படித்தான் -20க்கு கீழே தான் ஆவரேஜே (பொதுவா -5) இருக்கும்னு பயமுறுத்த வேற செஞ்சிருக்காங்க.

மாஸ்கோல நிலம இன்னும் மோசம். அம்பது வருஷத்துல இல்லாத அளவுக்கு குளிர் இருக்குப்போகுது. -35 வரைக்கும்கூட போகலாம். அக்டோபர்லேயே இங்க விண்டர் வந்தாச்சுன்னாலும், புதுவருஷம் வரைக்கும் போக்குதான் காட்டிக்கிட்டிருந்தது. சொல்லப்போனா ஜனவரி 1, +1 கூட வந்தது. எங்க மரியாதையில்லாம போயிடுமோன்னு வருணபகவானும், வாயுபகவானும் சேர்ந்து நமக்கு பனி காமிக்கறாங்க. :(


Bloomberg.com: Europe

Yahoo! Weather

20 Comments:

 1. துளசி கோபால் said...

  பத்திரம். கவனமா இருக்கவும்.


 2. G.Ragavan said...

  குளிருதா.....பேசாமக் கம்பளியப் பொத்திக்கிட்டு..வோட்காவ ஊத்திக்கிட்டு குப்புறப் படுத்துக்கோங்க. அதுதான் நல்லது. இல்லைன்னா.....பச்சை மிளகாய்ல ரெண்ட எடுத்து நச்சு நச்சுன்னு கடிச்சுக்குங்க...காந்துற காந்துல குளிர் தெரியாது.


 3. rv said...

  அக்கா,
  நன்றி. வருண பகவான் கூட சண்டை போட போர் ஆயத்தங்கள் தான் நிறைய்ய்ய்ய்ய செஞ்சுக்க வேண்டியிருக்கு.


 4. rv said...

  இராகவன்,
  //பேசாமக் கம்பளியப் பொத்திக்கிட்டு..வோட்காவ ஊத்திக்கிட்டு குப்புறப் படுத்துக்கோங்க//
  அதே அதே...

  :))))

  பச்சை மிளகாய்க்கு நான் எங்குன போறது? டி.ஹெச்.எல்-ல நீங்க அனுப்பினாத்தான் உண்டு.


 5. dvetrivel said...

  மூன்று யோசனைகள்

  1) யாரோ சொன்னதா ஞாபகம்; "இமைய மலையில் யோகிகள் எல்லாரும் தியான வலிமையால உடலை சூடுபடுத்துகிறார்கள். தியானம் செய்தால் முடியும்". அடிக்க வராதீங்க ராமனாதன்.

  2) தியானம் கஷ்டமா இருந்தா, ராகவன் சொன்னது போல் செய்யவும்.

  3) அதுவும் செய்யமுடியாத சுத்தமான பழமாக இருப்பின் சீக்கிரம் ஒரு திருமணம் செய்துகொள்ளுங்கள்.

  பி.கு.: மூன்றாவது குறிப்புக்கு வேறு அர்த்தம் எண்ண வேண்டாம். திருமணம் செய்தால் குறைந்தது ஒருமாதம் இந்தியாவில் தங்கி ரஷ்ய குளிரிளிருந்து விடுபட்லாம் என்ற ஒரு நல்லெண்ணத்தில் கூறினேன்.


 6. Anand V said...

  அதனாலதான் நம்ம பதிவு பக்கமே வருவதில்லையா ?? :-(


 7. ilavanji said...

  ரொம்பக்குளுருதா?! அதுவும் -25ஆ? என்னையா சொல்லுறீரு? ஓப்பன் ஸ்பேஸ்ல ஒன்னுக்குபோனாகூட ஐஸ்கட்டியாத்தான் போகனும் போல?

  ம்ம்ம்.. ஓட்காய நமஹ...


 8. rv said...

  ஆல்தோட்டம்,
  தியானமா? நக்கலா?

  3. வது தான் நல்லதாப்படுது.

  //வேறு அர்த்தம் எண்ண வேண்டாம்//
  இதுக்கு வேற என்னங்க அர்த்தம் பண்ணிக்க முடியும்??? உங்க நல்லெண்ணத்தத்தான் சந்தேகப்படுமா?


 9. rv said...

  ஆனந்த்,
  //அதனாலதான் நம்ம பதிவு பக்கமே வருவதில்லையா //
  இதுமட்டுமில்ல போனவாரத்துலேர்ந்து பின்னூட்டம் வெறும் சைலன்ஸாத்தான் போட்டுகிட்டிருக்கேன். நிறைய backlog இருக்கு.

  சீக்கிரம் முடிக்கணும். ஏற்கனவே குமரன் கோச்சுகிட்டு இந்தப்பக்கம் தலைகாட்டமாட்டேங்கறாரு.


 10. rv said...

  இளவஞ்சி,
  //ஐஸ்கட்டியாத்தான் போகனும் போல//

  இதே காரணத்துனாலதான் நீங்க சொன்னத முயற்சி பண்ண தைரியம் வரல. :)


 11. Radha Sriram said...

  eppo photo maathineenga ramanathan....neraiya proposals sekarama varum nnu enakku patchi solludhu!!!!! enakkum raghavan sollara idea nalladha padudhu.....anyway take care....(naanga LA la sowkayama irukkom!!!!!)

  Radha sriram


 12. குமரன் (Kumaran) said...

  இராமநாதன். புது போட்டோ நல்லா இருக்கு. அப்ப முந்தியிருந்த போட்டோவுல இருந்ததும் நீங்க தானா? அது என்னமோ ரஷ்யாகாரர் மாதிரியே இருந்துச்சு. இந்த போட்டோவைப் பாத்தா நம்மூர் மாதிரி தெரியுது.

  வீட்டுல கல்யாணப் பேச்சு எடுத்து போட்டோ கேட்டாங்கன்னா பழைய போட்டோவே அனுப்புங்க. இதுல கொஞ்சம் குண்டாயிட்டீங்க :-)

  அப்புறம் இந்த - 25 எல்லாம் செல்ஸியசா? ஃபாரன் ஹீட்? எங்க ஊர்ல (மின்னசோட்டாவுல) சர்வ சாதாரணமா - 25 செல்ஸியஸ் எல்லாம் போகும். சில வருஷம் - 50 ஃபாரன் ஹீட் கூட போயிருக்கு. இந்த வருசம் அவ்வளவா குளிர் இல்லை. இன்னைக்கு + 24 ஃபாரன் ஹீட் ( - 3 செல்ஸியஸ்).


 13. rv said...

  இராதா ஸ்ரீராம்,
  //neraiya proposals sekarama varum nnu enakku patchi solludhu!!!!! //
  உங்கள மாதிரி பெரியவங்க ஆசீர்வாதம் இருந்தா வரவேண்டியது தானா கரெக்டான நேரத்துக்கு வந்துடுமில்ல? :)


  //naanga LA la sowkayama irukkom//
  ஓ.. அங்க எவ்ளோ டெம்ப் இப்போ?


 14. rv said...

  குமரன்,
  இதெல்லாம் செல்சியஸ்! -25 உங்களுக்கு சர்வசாதாரணமா வருமா? ரஷ்யாவவிட மோசமா இருக்கும் போலிருக்கே? இங்க இவ்வளவு சீரியஸா வந்து அஞ்சாறு வருஷம் இருக்கும்.

  //வீட்டுல கல்யாணப் பேச்சு எடுத்து போட்டோ கேட்டாங்கன்னா பழைய போட்டோவே அனுப்புங்க. இதுல கொஞ்சம் குண்டாயிட்டீங்க //
  அனுப்பிட்டா போச்சு.. போட்டோ மேட்டர எல்லாரும் கெட்டியா பிடிச்சுக்குறீங்களே? அதெல்லாம் குடும்பசொத்து.. ஆண்டவன் அவங்கவங்களுக்கு தந்தது. இதுல பெருமைப்பட என்ன இருக்கு?

  என்ன இராகவன்? சரிதானே? :))


 15. rv said...

  மறந்துட்டேனே..

  குடும்பசொத்து (trademark 2005-??) துளசியக்கா


 16. Anand V said...

  //வீட்டுல கல்யாணப் பேச்சு எடுத்து போட்டோ கேட்டாங்கன்னா பழைய போட்டோவே அனுப்புங்க. இதுல கொஞ்சம் குண்டாயிட்டீங்க //

  எவ்வள்வு நாளைக்கு இந்த போட்டோ எல்லாம் போட்டு ஏமாத்திக்கிட்டு இருக்கப் போறிங்க ?
  இந்த போட்டவை பார்த்து பொண்ணு வேற கொடுக்கப் போறாங்களா..
  கடவுளே கடவுளே. நம்ம ஜனங்க இருந்தாலும் ரொம்ப இன்னஸ்ண்டுத் தான் போங்க :-)


 17. rv said...

  அடாடா ஆனந்த்,
  மாடரேஷனோட அருமை இப்பத்தானய்யா எனக்கும் புரியுது!

  நீக்கவோ வைக்கவோன்னு குழப்பத்துல என்னையவே ஆழ்த்திட்டீங்களே!

  இன்னும் இன்னஸண்டு மக்கள் இருக்கறதுனாலதான் மழையே பெய்யுது. நீங்க என்னடான்னா.. அவங்கள போயி விவரமில்லாம கிண்டல் செஞ்சுகிட்டு! சே சே.. என்ன பொழப்பு இது?? :)


 18. குமரன் (Kumaran) said...

  After a small break...had to go for a meeting...back to my desk...

  இராமநாதன், இராகவன் சொல்றத எல்லாம் கேக்காதீங்க. இன்னும் ரொம்ப கெட்டுப்போயிடுவீங்க ;-)

  இந்த குளிருக்கு ஊருக்குப் போறது தான் நல்ல வழி. ஆனா எல்லாராலும் முடியுதா சொல்லுங்க.

  நான் கோவிச்சுகிட்டு இந்தப் பக்கம் வரலையா? பதிவே ஆடிக்கு ஒன்னு அமாவாசைக்கு ஒன்னுன்னு போட்டுட்டு வர்றதில்லன்னா எப்படி? வந்து பாத்துகிட்டு தான் இருக்கோம்.


 19. rv said...

  குமரன்,
  //had to go for a meeting//
  இராத்திரி பத்தேமுக்காலுக்கு (எங்க டைம்பா) என்ன மீட்டீங்? இதை நாங்கள் ஒத்துக்கொள்ளமாட்டோம்!

  // பதிவே ஆடிக்கு ஒன்னு அமாவாசைக்கு ஒன்னுன்னு போட்டுட்டு //
  அதுவும் கரெக்ட்தான். தப்பா நினைச்சிக்காதீங்க. நான் சில நாட்களா கமெண்ட் போடறது குறைஞ்சிருச்சுங்கறதுக்கு சொன்னது.

  நம்ம பதிவெல்லாத்துக்கும் (நற்) குத்து உடற புண்ணியாத்மாக்களில் நீங்கள், இராகவன், அக்கா போன்றவர்கள் ஒருத்தர்னு எனக்கு நல்லாவே தெரியும். நானும் வந்து முன்ன மாதிரியே திருப்பிக்குத்தறேன். கொஞ்ச டைம் மட்டும் கொடுங்க. ஓகே? NoM :)


 20. குமரன் (Kumaran) said...

  என்ன இன்னும் குத்துறதுலயே இருக்கீங்க. இப்ப எல்லாம் குலுக்கல் அப்பா....கை குலுக்கல சொன்னேன். தப்பா நெனைச்சுக்காதீங்க.


 

வார்ப்புரு | தமிழாக்கம்