விடுதலை

இன்னும் ஒரு மணி நேரந்தான் பாக்கியிருக்கு. அதுக்கப்புறம் இந்த சிறையிலிருந்து விடுதலை. இருக்கறது வேலூர் சிறைன்னு நினச்சுட்டீங்களா? இல்லீங்க, என் அம்மாவோட வயித்துக்குள்ளேர்ந்து தான் பேசறேன். அட, பிறக்காத குழந்தையும் பேசுமான்னு கேக்காதீங்க. மகாபாரதம் படிச்சதில்லியா? அதுல கிருஷ்ணன் சொல்றத அபிமன்யு அம்மா வயித்துலேர்ந்து கேட்டதா வருது இல்ல. அது மாதிரி தான்.

போன ஜன்மத்துல பட்டாம்பூச்சியா பறந்துகிட்டிருந்தேன். அடடா, என்ன ஒரு வாழ்க்கை. பூவுக்கு பூவுக்கு தாவி பறந்துகிட்டே இருக்கறது மட்டும்தான் வேலை. தேன் குடிக்க கசக்குமா என்ன? கஷ்டமே இல்ல. என்ன, குருவி மாதிரி என்னைய விட பெரிய மிருகங்கள பாத்தா கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கணும். ஏன்னா, எங்கள் மாதிரி பூச்சிங்க தானே முக்கிய உணவு அவங்களுக்கு? அவங்களாவது பரவாயில்ல, ஒரு தடவ சும்மா நான் என் தங்கச்சிங்க கூட பறந்து பிடிச்சு விளையாடிகிட்டு இருந்தப்போ, சில மனுச பசங்க வந்து என்னோட இரண்டு தங்கைகள பிடிச்சுகிட்டு போயிட்டாங்க. ஆனா, நான் அவ்வளவு பெரிய உருவங்கள எதிர்த்து எதுனாவது செய்ய முடியுமா? முடியாதில்ல. அதனால, மறைஞ்சு இருந்து பாத்தேன். ஒவ்வொரு இறக்கையா பிச்சு பிச்சு விளையாடிக்கிட்டிருந்தாங்க. பாவம், வலியும் பயமும் தாங்காம என் சின்னத் தங்கைகள் எல்லாம் துடிச்சாங்க. அவங்க துடிக்க துடிக்க இன்னும் துன்புறுத்தல் ஜாஸ்தியாத்தான் ஆச்சு. எனக்கு கோவம் கோவமா வந்திச்சு. ஆனா, என்ன செய்யறது. என்னால அதுக்கு மேல அந்த இடத்தில இருக்க முடியல. உடனே பறந்து எங்க கூட்டுக்குப் போய் அம்மாகிட்ட சொல்லி அழுதேன். அம்மா வருத்தத்துல துவண்டு போயிட்டாங்க. இருந்தாலும் என்னைய கட்டிபிடிச்சு, 'இந்த சின்ன வயசுல பாக்கக்கூடாத கொடுமையை பாத்துட்டப்பா..நீ அண்ணனா உன் தங்கைகளுக்கு உதவி செய்ய முடியாமப் போச்சே. ஆனா, நீ வருத்தப்படாதேடா கண்ணா..கடவுள் அவங்கள சும்மா வுடமாட்டார். வாழ்க்கைனா இப்படித்தான்.. எல்லாமே விதிப்படிதாம்பா நடக்கும். அம்மா, நான் இருக்கேன் உனக்கு. கவலப்படாதே' அப்படீன்னு தேத்தினாங்க. என்னைய தேத்தினாலும், இராத்திரியெல்லாம் தூங்காம அவங்க அழுதுகிட்டிருந்தாங்க. ஆனா அது எனக்கு தெரியும்னு அவங்களுக்கு தெரியாது பாவம். மறுநாள்லேர்ந்து கொஞ்ச நாளைக்கு, நான் எங்கேயும் மாட்டிடக்கூடாதேன்னு அவங்களே போய் தேன் தேடி எடுத்துகிட்டு வந்து கொடுத்தாங்க. அவங்க வரவரைக்கும் எனக்கு திக் திக்னு இருக்கும்.

சின்ன வயசு பாருங்க. கொஞ்ச நாள்ல அதப் பத்தி சுத்தமா மறந்துட்டேன். மறுபடியும் ஜாலியா பறக்க ஆரமிச்சேன். வளர்ந்து பெரியவனும் ஆனேன். வாலிப வயசா, நீங்க பண்ணாததா..நமக்கும் பக்கத்து கூட்டு பொண்ணு மேல ஒரு டாவு. நான் நல்ல சிவப்பு கலர்ல வேற இருப்பேனா, அதுக்கும் நம்ம மேல ஒரு கண்ணு. நீங்கள்லாம் பார்க், பீச் போற மாதிரி இப்படியா நாங்க ஒரு நாள் ரோஜாப்பு, ஒரு நாள் அல்லிப்பூன்னு போய்கிட்டிருந்தோம். அம்மாவும் ஒத்துகிட்டாங்க. கல்யாணம், காட்சி யெல்லாம் ஆச்சு. அதுவரைக்கும் யாருக்குமே நான் மனசார கூட தீங்கு நினச்சதில்ல. நான் மாட்டுக்கு என் வேலை உண்டு, குடும்பம் உண்டுன்னு இருந்தேன். இருந்தது பிடிக்கல போல இருக்கு அந்தக் கடவுளுக்கு. ஒரு நாள், நல்ல பெரிய அல்லிப்பூ மேல உக்காந்துக்கிட்டிருந்தேன். ரொம்ப சுவையான தேன். சுத்தி முத்தி என்ன நடக்குதுன்னு பாக்காதது என் தப்புதான். அதுக்காக இப்படியா? எங்கிருந்தோ பாஞ்சு வந்து என்ன பிடுச்சுடுச்சு ஒரு நாக்கு. அப்படியே சடார்னு என்ன இழுத்து ஒரு தவளையோட வாயில போட்டுடுச்சு.

அப்புறம் பாத்தீங்கன்னா, உங்க சினிமால்லேல்லாம் வருமே அது மாதிரி ஒரே புக மண்டலம். பாத்தா நான் மேலே மேலே பறந்துக்கிட்டிருக்கேன். மேலே ஒரு பெரிய மண்டபம். அங்க வரிசையில எல்லா வகை ஜீவராசிகளும் தங்களோட டர்னுக்காக வெயிட் பண்றாங்க. என் டர்ன் வந்தோன்ன, எமராஜா பாத்தாரு. 'பட்டாம் பூச்சி, நீ இதுவரைக்கும் என்ன நல்லது செஞ்சிருக்க'ன்னு கேட்டாரு. 'இவ்ளோ குட்டி பூச்சி நானு, என்ன செய்ய முடியும்?'. 'சரி, எதுனாவது கெட்டது பண்ணிருக்கியா'.'இல்லீங்க'.'டேய்.. பொய் சொன்னா என்னோட கணக்கு புஸ்தகத்த பாத்தா தெரிஞ்சி போயிடும்'னு மிரட்டுனாரு.'சாமி, என்னோட அம்மா சத்தியமா, கெட்டது நினச்சுது கூட கிடையாதுங்க'னு நான் கெஞ்சினேன். பக்கத்துல குள்ளமா ஒரு ஆளு ஆனக்குட்டி சைஸுல ஒரு பொஸ்தகத்த பாத்துட்டு 'இந்தப்பய சொல்றது சரிதான், இதுவரைக்கும் இவன் தப்பே பண்ணலே தர்மராஜா' னு சொல்லி என்னயப் பாத்து சிரிச்சாரு. எமராஜா பாத்துட்டு 'அப்படியா, சரிடா.. நீ இனிமே உயிரினமா பொறக்க வேணாம். மனுசனா பொறக்க நான் உனக்கு வரம் தரேன்'னு சொன்னாரு. எனக்கு சந்தோஷம் தாங்கல. ஆனா, அதே சமயத்தில எனக்கு என் தங்கச்சிங்க ஞாபகம் வந்துச்சு. அந்த சண்டாளப் பாவிங்க இருக்கற ஊராவே பொறக்கணும். அவங்கள, அவங்க என் தங்கைகள கொடுமப்படுத்தினமாதிரியே நானும் படுத்தணும்னு மனசுக்குள்ள நினச்சுகிட்டேன். அவங்க கையக் காலப் பிச்சுப்போடணும்னு நினச்சுகிட்டேன்.

பாருங்க.. பேசிகிட்டு இருந்ததில நேரம் போனதே தெரியல. வெளிய வர டைம் ஆச்சு போலிருக்கு. தண்ணியெல்லாம் குறையுது. ஒரு அஞ்சு நிமிஷம் காத்திருக்கீங்களா? வெளில வந்துட்டு உங்க கூட பேசறேன். சரியா?

இருக்கீங்களா, நான் பேசுறது கேக்குதா? எனக்கும் விடுதலை வந்தாச்சு. ஆஹா, எவ்வளவு சுதந்திரமா இருக்கு. இந்த ஒன்பது மாசமும் உள்ள கூனிக்குறுகி இருந்தது பத்தாதுன்னு வெளிய வரும்போதும் ரொம்ப கஷ்டமாப் போச்சுங்க. யாரோ ஒரு வயசான அம்மா தான் வெளில எடுத்தாங்க. நல்ல வேள உதவி செஞ்சாங்களே. நம்ம பாட்டியா இருக்குமோ? தனியா இருந்திருந்தா ரொம்ப கஷ்டமாயிருக்கும். இருங்க ஒரு நிமிஷம் என்னோட புது அம்மாவ பாத்துட்டு வரேன். பாவம் இத்தன மாசம் எத்தன கஷ்டப்பட்டுருப்பாங்க. அட, இவ்வளவு அழகா இருக்காங்களே. ஆனா, பாவம் அழறாங்க. ரொம்ப வலிக்குது போலிருக்கு. எங்க? அப்பாவக் காணோமே? அநேகமா ஓடி வந்துகிட்டிருப்பாரு. அட பாருங்க, என் மேல எவ்வளவு ஆசை அம்மாக்குன்னு. எனக்காவே ஸ்பெஷலா கைல கொட்டாங்கச்சியில என்னவோ வெள்ளையா செஞ்சு வச்சிருக்காங்களே. குடிச்சு பாத்தேன். நல்லாத்தான் இருந்துது. பாலான்னு தெரியல. என்னவா இருந்தா என்ன, நம்மள பெத்தவங்க நமக்கு நல்லதத்தானே செய்வாங்க. சரிங்க, எனக்கு தூக்கம் வர மாதிரி இருக்கு. இன்னொரு நாள் உங்களோட பேசறேன்.

30 Comments:

 1. Lindsy said...
  This comment has been removed by a blog administrator.

 2. பூனைக்குட்டி said...

  நல்லாத்தான் இருக்கு இராமநாதன் உங்க சிறுகதை. வாழ்த்துக்கள்.
  உங்களுக்குன்னு எப்படிங்க பொடுறாங்க முதல் பின்னுட்டத்தை.

  :-)


 3. rv said...

  மோகன்தாஸ்,
  நன்றி.

  //உங்களுக்குன்னு எப்படிங்க பொடுறாங்க முதல் பின்னுட்டத்தை.

  //
  அதான் எனக்கும் புரிய மாட்டேங்குது. தினமும் யாராவது ஒருத்தங்க வந்து ரவுசு விட்டுகுனே இருக்காங்க. :)


 4. G.Ragavan said...

  இராமநாதன், உங்க மேல ஒரு கேஸ் போடப்போறேன். இண்டலெக்சுவல் ப்ராபர்ட்டி ரைட்ஸ் விவகாரம். கிட்டத்தட்ட இதே மாதிரி ஒரு கதையை நான் யோசனை செஞ்சி வெச்சிருந்தேன். அந்த யோசனையை பெங்களூருக்கு மேல பறந்த ரஷ்ய சாட்டிலைட் வழியா திருடி, நட்சத்திர வாரத்தில் சிறப்பாக பயன்படுத்தியதிற்குத்தான் அந்த கேஸ். (அது சரி. நான் பாராட்டுறேன்னு புரியுதா?)

  நல்ல முயற்சி இராமநாதன். வாழ்த்துகள்.


 5. துளசி கோபால் said...

  மொத சிறுகதையா?

  தேசிகனோட தாக்கம் வந்தமாதிரி இருக்கே...ம்ம்ம்ம்

  சரி. இருக்கட்டும்.

  வாழ்த்துக்கள்.

  நான் கதை எழுதலாமான்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்,
  ஆனா இப்ப இல்லே:-))))


 6. ilavanji said...

  முதல் கதையே முத்தான கதைங்க!

  //பாலான்னு தெரியல. என்னவா இருந்தா என்ன, நம்மள பெத்தவங்க நமக்கு நல்லதத்தானே செய்வாங்க//

  இதை இன்னும் கொஞ்சம் அழுத்திச்சொல்லி இருக்கலாமோ!


 7. Saranya Ganesh said...

  seri yetho இந்த கால்நூற்றாண்டு வாழ்க்கையில எழுதுன முத கதை! nu sonniyae....adhu yengha ?????


 8. vin said...

  கதை நன்றாகத் தான் இருக்கிறது.
  ஒரு வேண்டுகோள்-கதையின் இறுதியில் "இந்த கால்நூற்றாண்டு வாழ்க்கையில எழுதுன முத கதை. சிறுசா..." என்ற disclaimer-ஐ நீக்கிவிடுங்கள்(அல்லது பின்னூட்டத்தில் போட்டுவிடுங்கள்). இரண்டு காரணங்களுக்கு:
  1) பார்க்க என் முதல் வாக்கியம்.
  2) கதையின் climax-இன் உணர்ச்சிகளை உள்வாங்கும் தருணத்தில் இந்த disclaimer சற்று திசை திருப்புவது போல் எனக்குத் தோன்றியது.

  -Vinodh
  http://visai.blogspot.com


 9. சிங். செயகுமார். said...

  விடுதலை வித்யாசமான சிறுகதை . கதையுலகம் காணும் தலைச்சன் பிள்ளைக்கு வாழ்த்துக்கள்


 10. குமரன் (Kumaran) said...

  இது...இது...இதைதான் எதிர்பார்த்தேன். சவாலை ஏற்று ஜெயித்துவிட்டீர்கள் இராமநாதர் (ஆமா மரியாதைதான். நல்ல கதை எழுதியிருக்கீங்களே). கடைசி வரிகளை இன்னும் நன்றாய் எழுதியிருக்கலாம். ஓவர் சீரியஸா போயிடுமோன்னு யோசிச்சிருக்கீங்க போலிருக்கு. பட்டாம்பூச்சி ஆண் மனிதப் பெண்ணாய் பிறக்கிறது நல்ல கற்பனை.


 11. குமரன் (Kumaran) said...

  இது...இது...இதைதான் எதிர்பார்த்தேன். சவாலை ஏற்று ஜெயித்துவிட்டீர்கள் இராமநாதர் (ஆமா மரியாதைதான். நல்ல கதை எழுதியிருக்கீங்களே). கடைசி வரிகளை இன்னும் நன்றாய் எழுதியிருக்கலாம். ஓவர் சீரியஸா போயிடுமோன்னு யோசிச்சிருக்கீங்க போலிருக்கு. பட்டாம்பூச்சி ஆண் மனிதப் பெண்ணாய் பிறக்கிறது நல்ல கற்பனை.


 12. குமரன் (Kumaran) said...

  கன்னிக் கதைஞர் சொதப்பவில்லை. வாழ்த்துகள்.


 13. Unknown said...

  கதை நல்லா இருக்கு.


 14. தருமி said...

  முதல் குழந்தை / கதை பிறந்திடுச்சி. கதை நல்லாவே பொழச்சிக்கிருச்சி. வாழ்த்துக்கள்


 15. வாய்சொல்வீரன் said...

  இந்த வார நட்சத்திரம் எழுதுனதைப் படிச்சு முடிச்ச நண்பர்களே. இதோ இந்தப் பதிவையும் படிங்க. இந்தப் பதிவிலிருந்து ஒரு வார்த்தை 'பணம் தேவை இல்லை. மனம் தான் தேவை'. நம்ம நாட்டுக்கு இப்போ ரொம்ப தேவையான விஷயத்தை எழுதியிருக்கார்.

  http://sivapuraanam.blogspot.com/2005/11/blog-post_17.html

  இராமனாதன். இந்த பின்னூட்டத்தை delete பண்ண மாட்டீங்கன்னு நம்பறேன்.


 16. rv said...

  ராகவன்,
  //இதே மாதிரி ஒரு கதையை நான் யோசனை செஞ்சி வெச்சிருந்தேன்//
  நீங்க எழுதுனா அது தனி சுவைதான். கண்டிப்பா எழுதுங்க.

  //(அது சரி. நான் பாராட்டுறேன்னு புரியுதா?)
  //
  அப்படித்தான் நினைக்கிறேன்.


 17. rv said...

  அக்கா,
  //தேசிகனோட தாக்கம் வந்தமாதிரி இருக்கே//
  உண்மைதான். பி.வாசு ஸ்டைல்ல கொஞ்சம் டகால்டி வேலை பண்ணிட்டேன். எவ்ளோ குற்றம் இருக்கிறதோ அதுக்கு தகுந்தாற்போல, பரிசுத்தொகையை குறைத்துக்கொள்ளலாமே. :)

  இளவஞ்சி,
  நன்றி

  //இதை இன்னும் கொஞ்சம் அழுத்திச்சொல்லி இருக்கலாமோ!
  //
  ?? :)


 18. rv said...

  சரண்யா,
  இன்னொரு பாலகுமாரன், சுஜாதா உருவாகறது பிடிக்காதே உங்களுக்கெல்லாம்..

  வினோத் குமார்,
  நன்றி.
  //disclaimer-ஐ நீக்கிவிடுங்கள்//
  நீக்கி விட்டேன்.


 19. rv said...

  சிங். செயக்குமார்,
  நன்றி

  குமரன்,
  பிடிச்சுதா? நன்றி...
  //ஓவர் சீரியஸா போயிடுமோன்னு யோசிச்சிருக்கீங்க போலிருக்கு//
  ரொம்ப manipulate பண்ணவேணாமேன்னு நினச்சேன்... அவ்ளோதான்.. (ஹை, பெரிய எழுத்தாளர் மாதிரி பின்னூட்டம் கூட கொடுக்க வந்துடுச்சு!)


 20. rv said...

  அடிதடி அப்டிபோடு, பெரீய்ய்யப்பா, வாய்ச்சொல்வீரன்,

  நன்றி

  ஹூம் இன்னும் தாணு, ரம்யா அக்காவெல்லாம் காணலியே? :(


 21. சன்னாசி said...

  ராமநாதன், Christopher Unborn என்று ஒரு நாவல் இருக்கிறது - பெரிய புத்தகம் தான் - சந்தர்ப்பம்/நேரமிருந்தால் வாசித்துப் பார்க்கவும்; வெகுநாள் முன்பு படித்த அதை இந்தக் கதை ஓரளவு நினைவுபடுத்தியதால் குறிப்பிடுகிறேன்.


 22. rv said...

  நன்றி மாண்ட்ரீஸர்,
  கிடைத்தால் கண்டிப்பாக வாசித்துப் பார்க்கிறேன்.


 23. யாத்ரீகன் said...

  இறுதிவரை பட்டாம்பூச்சியையோ, குழந்தையோ ஆண் பெண் என்று வார்த்தைகளில் வெளிப்படையாக எழுதாமல் இருந்ததே இந்த கதையின் பலம் என்று நினைக்கின்றேன்..

  நன்றாக இருந்தது இராமநாதன்..

  -
  செந்தில்/Senthil


 24. குமரன் (Kumaran) said...

  என்ன இராமநாதன். Christopher Unborn Copy பண்ணிதான் இந்த கதையை எழுதுனீங்களா???? Just Kidding. நானும் அந்த கதை/நாவல் படிச்சதில்லை. :-)


 25. rv said...

  யாத்திரீகன்,
  நன்றி

  குமரன்,
  சன்னாசி சொல்ற வரைக்கும் சத்தியமா அந்தக் கதை பத்தி இதுவரை கேள்விப்பட்டதுகூட கிடையாது.. மானநஷ்ட வழக்கு உங்க மேல போட முடியுமான்னு பாத்துக்கிட்டிருக்கேன். :P


 26. வெளிகண்ட நாதர் said...

  என்னது, இன்னொரு கருத்தம்மா கதையா? பாரதிராஜா பதிவை பத்துட்டு கேஸ் போட்டுட போறாரு?


 27. குமரன் (Kumaran) said...

  வெளிகண்ட நாதர்...இது இன்னொரு கருத்தம்மா கதையாய் இருக்கலாம். ஆனால் கடைசி வரி வரை அதைப் பற்றி யூகிக்க முடியாதபடி எவ்வளவு அருமையாய் எழுதியிருக்கார் நண்பர்? அவரைப் போய் காபி கேஸ் அப்படின்னுகிட்டு...


 28. குமரன் (Kumaran) said...

  என்ன இராமநாதர். நண்பர்ன்னு சொல்லிட்டேன். மானநஷ்ட வழக்கு போடும் எண்ணத்தை மாத்திக்கிட்டீங்களா? :-)


 29. குமரன் (Kumaran) said...

  ஆஹா...அடுத்து வெளிகண்ட நாதர் (அதாங்க பாபா, உதயகுமார்...எத்தனை பெயர் அவருக்கு) வந்து என்னை நோண்டப் போறாரே...ஏதாவது ரெடி பண்ணி வச்சுக்கணும்.


 30. rv said...

  வெளிகண்ட நாதர்,
  //இன்னொரு கருத்தம்மா கதையா//
  இவ்ளோ butterflyane-ஆ(அதாங்க.. humane மாதிரி) எழுதிருக்கேன்.. இதப்போயி.. :)

  குமரன்,
  நல்லது. பம்பரில் குறியா இருக்கீங்க போலிருக்கு. கடைசி நாள்.. அறிவிப்பு விரைவில்..


 

வார்ப்புரு | தமிழாக்கம்