ஐ.நா சபை மீது வழக்கு தொடர முடியுமா?

சதாம் உசேன் ஆட்சியில் இருந்தபோது இருந்த oil-for-food திட்டத்தின் கீழ் தற்போதைய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர் சிங் மற்றும் காங்கிரஸ் மறைமுகமாக பலனடைந்தார்கள் என்று Volcker கமிட்டி சமர்ப்பித்துள்ள ரிப்போர்டிற்கு எதிராய் ஐ.நா சபை மேல் வழக்கு தொடுப்போம் என்கிற தொனியில் பதிலறிக்கை கொடுத்துள்ளனர் காங்கிரஸ் கட்சியினர்.

ஐ.நா சபை மே வழக்கு தொடுப்பது சாத்தியமேயில்லை என்று தான் நான் இதுவரையில் நினைத்துக்கொண்டிருந்தேன். தனி நபர், ஐ.நா.வைச் சேர்ந்தவரென்ற பட்சத்தில், அவர் மேல் வழக்கு தொடரலாமேயன்றி ஓட்டுமொத்த அமைப்பின் மீதும் வழக்கு தொடர வாய்ப்பில்லையென்றே நினைக்கிறேன். தெரிந்தவர்கள் விளக்கினால் உபயோகமாக இருக்கும்.

ஏனெனில் இப்போது இரான் விஷயத்தை எடுத்துக்கொண்டால் அதன் அதிபர் விடுத்த இஸ்ரேலை ஒழிப்போம் என்கிற அறிக்கைக்கு ஐ.நா உட்பட அதன் உறுப்பு நாடுகளும் பெரும் கண்டனம் தெரிவித்தன. இதை முகாந்திரமாக கொண்டு வழக்கு தொடர இயலுமா? அதேபோல் அமெரிக்க பாதுகாப்பு செக்ரட்டரி இராக்கிடம் WMD இருக்கிறது என்று பொய்யாக ஐ.நா சபையில் வாதிட்டது. இதை வைத்து defamation கேஸ் மாதிரி அவரை எதிர்த்தோ அதை அனுமதித்த ஐ.நாவை எதிர்த்தோ தொடர இயலுமா? முடியுமெனில், எங்கே தொடர முடியும்? ஹேக்-கிலா இல்லை அமெரிக்க செனட் ஹியரிங்கில் பதிலளித்த பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர் போல் தன் நாட்டிற்கு அழைத்து விளக்கமளிக்க நிர்பந்தப்படுத்த முடியுமா?


மொத்தத்தில், இந்தியா நிரந்தர SC பதவி வேண்டும் சமயத்தில் இந்த பிரச்சனை தேவையற்ற ஒன்று.

12 Comments:

 1. Silver Fox said...
  This comment has been removed by a blog administrator.

 2. dvetrivel said...

  அய்யா! நம்ம ஊரு கோர்ட் கேஸே வாய்தா வாய்தான்னு வாயில நுரை தப்புது. இதுல இது வேரையா? முதல்ல குஷ்பு மேல போட்ட வழக்கெல்லாம் என்னா ஆச்சு?


 3. rv said...

  ஆள்தோட்டம்,

  பின்னூறீங்க.. :))


 4. தாணு said...

  Depressive mood இல் இருந்து மீண்டு வழக்குப்போட கிளம்பியாச்சா?


 5. rv said...

  அட அத்தை,
  நான் கிளம்பல.. நம்ம நட்வரும், காங்கிரஸும் தான் சொல்லிருக்காங்க. பாப்போம், என்ன நடக்குதுன்னு..


 6. டி ராஜ்/ DRaj said...

  //மொத்தத்தில், இந்தியா நிரந்தர SC பதவி வேண்டும் சமயத்தில் இந்த பிரச்சனை தேவையற்ற ஒன்று.//

  இராமநாதன், இந்தியாவுக்கு நிரந்தர SC பதவி என்பது கானல் நீர் தான். ஆட்சியாளர்களுக்கே அந்த நம்பிக்கை போய் பல மாதம் ஆகிப்போச்சு.


 7. G.Ragavan said...

  ஐநா சபை மேல் வழக்குத் தொடர முடியாது. பரதன் அதைத் தெள்ளத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். ஐநாவில் இந்தியாவும் ஒரு உறுப்பு நாடு. அப்படியானால் இந்தியாவே இந்தியாவின் மேல் வழக்குப் போடுவது போலல்லவா ஆகும்.

  இந்தியா வழக்கைக் கைகழுவி விட்டு informalஆக விவரங்கள் கேட்கும் என்ற நிலைக்கு இறங்கி வந்திருக்கிறார்களே. இதெல்லாம் அரசியல்ல சகஜங்க.......அரசின் பெயர் வரவரக் கெட்டுக் கொண்டிருக்கிறதோ என்று தோன்றுகின்றது.


 8. rv said...

  ராஜ்,
  //இந்தியாவுக்கு நிரந்தர SC பதவி என்பது கானல் நீர் தான்//
  எனக்கென்னமோ பிரஸிலையும், இந்தியாவையும் இன்னும் ரொம்ப நாளைக்கு இக்னோர் செய்யமுடியாதுன்னுதான் தோணுது. விரைவில் கிடைக்கும்! :)

  ராகவன்,
  //அரசின் பெயர் வரவரக் கெட்டுக் கொண்டிருக்கிறதோ //
  இந்த விஷயத்தில் உண்மைதான். ஆனால் இரான் விவகாரம் மற்றும் அமெரிக்கருடனான போர்ப்பயிற்சிகள் போன்றவற்றில் நல்ல நிலையே என்று நினைக்கிறேன்.


 9. rv said...

  நட்வர் மினிஸ்டர் வித்தவுட் போர்ட்போலியோ ஆகிட்டார். 'முகமது பின் துக்ளக்' ஏனோ நினைவுக்கு வந்து தொலைக்கிறது. இப்போது மன்மோகன் இடைக்கால வெளியுறவுத்தறை மந்திரி.

  இன்னும் என்ன என்ன கூத்தெல்லாம் பாக்கியிருக்குன்னு பார்ப்போம். :)


 10. G.Ragavan said...

  எல்லாம் மாயை. மாயையோ மாயை.


 11. டி ராஜ்/ DRaj said...

  //எனக்கென்னமோ பிரஸிலையும், இந்தியாவையும் இன்னும் ரொம்ப நாளைக்கு இக்னோர் செய்யமுடியாதுன்னுதான் தோணுது. விரைவில் கிடைக்கும்! :)//

  நீங்க ரொம்ப ஆப்டிமிஸ்டிக்கா இருக்கீங்க. பார்ப்பம். :)


 12. rv said...

  ராகவன், ராஜ்

  மாயா மாயா எல்லாம் சாயா சாயா அப்படின்னு பெரியவங்க சொல்லிருக்காங்க.. நடக்கும்! :)


 

வார்ப்புரு | தமிழாக்கம்