தேவதையைக் கண்டேன்!

என்னோட காப்பி அனுபவம் ரொம்ப கம்மி. அட, நெஸ்காபே, ப்ரூ காப்பி இல்ல. பரிட்சையில் காப்பியடிக்கறது. இந்த மாதிரி படிக்காம சகட்டுமேனிக்கு காப்பியடிச்சா நம்மள நாமே ஏமாத்திக்கறதுங்கறது சின்ன வயசிலேர்ந்து கொள்கைன்னு பீலா விடலாம். ஆனா, உண்மையச்சொன்னா அதுக்கு காரணம், பயமும் மாட்டிக்கொண்டால் பேர் நாறிடுமேங்கற வெட்கமும் தான். இங்க எப்படின்னா, ஒரு எக்ஸாம் தேதி கொடுக்கும் போதே peresdacha - அதாவது பெயிலானா இல்லாட்டி கொடுக்காட்டா திரும்பி எப்பக் கொடுக்கறதுன்னு தேதியும் சேர்த்துக் கொடுத்திடுவாங்க. அந்த குறிப்பிட்ட எக்ஸாமுக்கு அப்பியர் ஆக முடியாதவங்க அந்த இரண்டாம் தேதியில் கொடுத்துக்கலாம். வெறுமனே காப்பியடிச்சு பாஸ் பண்ணனும்கற எண்ணம் குறையும். படிக்கறவங்களுக்கு ஏத்த சிஸ்டம் இது. நம்மூர் போல ஒண்ணு இரண்டு எக்ஸாம்ல பெயிலா, ஒரு வருஷம் போச்சுன்னு கிடையாது. மெடிசின் ஒண்ணும் சாதாரணப்பட்டதில்ல இல்லியா? பெயில் ஆகறவங்க நிறைய பேர். இந்த மாதிரி pre-med இல் ஆர்கானிக் கெமிஸ்ட்ரியில் முதல் முறையா வாழ்க்கையில் ஒரு பரிட்சையில் பெயிலானேன். 'அதனாலென்ன, அடுத்த முறையாவது பாஸ் 'பண்ணிடு'ன்னு ஈஸியா சொல்லி அனுப்பிச்சுட்டாங்க எங்க டீச்சர். சரி, அத விடுவோம். என்னோட மேஜர் காப்பி அனுபவம் பத்தி சொல்லவே இந்தப் பதிவு. இங்க இன்னொரு விஷயம். 5 - னா புல்லரிக்குது. 4 - குட் . 3- இந்த தடவ பொழச்சு போ. 2,1 - பூட்ட கேஸ். இதுதான் மார்க்கிங் சிஸ்டம்.

----
Microbiology. பல நாள் கிளாஸ் கட் அடிச்சிருந்தேன். அந்த நேரத்திலேல்லாம் என்ன பண்ணேன்னு இப்ப நினச்சாலும் வியப்பா இருக்குது. எல்லாம் வயசு. ஒருத்தர் டெட்லைன், டைம்டேபிள் எல்லாம் கொடுத்து இத செய்னு ஸ்ட்ரிக்டா சொன்னா, அதுக்காகவே அந்த காரியத்தை செய்யக்கூடாதுன்னு ஒரு வித rebel: anti-authority மனப்பான்மை கூட காரணமா இருக்கலாம். இப்ப மட்டும் என்ன வாழுது..:(

எனக்கு இந்த மைக்ரொஸ்கோப்னாலே அலர்ஜி. அதுல பாத்த ஒரு விஷயம் கூட நினைவில் இல்லை. என்ன பாக்கிறோம், எப்படிப் பாக்கணும்னு எல்லாம் நிறைய விளக்கங்கள் கொடுத்தாலும் என் மண்டையில ஒண்ணுமே ஏறுனது கிடையாது. இப்பவும் ஸ்லைட் பாத்தா, வெறும் வெத்து காகிதம் பாக்குறத போலத்தான். ஒரு மண்ணும் புரியாது. ஆனா, என் டீச்சர் ரொம்ப நல்லவங்க. க்ளாஸுக்கு வரலேன்னா என்ன, விஷயம் தெரிஞ்சா போதும்னு என்ன இலகுவாக விட்டுட்டாங்க. பின்ன, போட்டோல இருக்கற பால் வழியும் மூஞ்சியப் பாத்துட்டும் உங்களுக்கு திட்டத் தோணுமா? ஒரு செமஸ்டர்க்குரிய டெஸ்ட் எல்லாம் ஒரே வாரத்தில கொடுத்திட்டேன். MCQ தான். இருக்கற variant பதில் எல்லாம் blind -ஆ மனப்பாடம் பண்ணி, ஆன்ஸர் கொடுத்ததுல, சரி பையனுக்கு விஷயம் தெரியும்னு தப்பா impress ஆயிட்டாங்க. பாவம்.

எக்ஸாமும் வந்தது. நமக்கோ ஸ்லைட் ஓண்ணும் தெரியாது. அதனால் முன்னாடியே பிரண்டுகிட்டே உதவி பண்ணுன்னு சொல்லிட்டேன். ஆனா விதி பாருங்க. அவனோட இடம், என் பக்கத்தில இல்லாம அடுத்த டேபிளில் இருந்தது. வினாத்தாள் எடுத்து வந்து எல்லாத்துக்கும் விடை கொடுத்தாச்சு. interferons, மலேரியான்னு ஈஸி கேள்விகள். இது தியரி. அப்புறம் ஸ்லைட் கொடுத்தாங்க. ஸ்லைடுக்கு பதில் கொடுக்கலேன்னா பெயில் தான். அது என்னன்னு வழக்கம் போல தெரியல. என்னவா இருக்கும்னு கூட ஊகம் செய்ய முடியாதது போல இருந்தது. நொந்தபடியே, பக்கத்து டேபிள் நண்பனின் டேபிள் ஓரத்தில் அந்த ஸ்லைடை வைத்து இது என்னன்னு பாத்து சொல்லுன்னு வச்சேன். அவனும் பாத்துட்டு என்னன்னு சொல்லிட்டு திரும்பவும் நான் எடுக்கறதுக்கு வாகா அவன் டேபிள் முனையில் வச்சான். எடுக்கலாம்னு பாக்குறதுகுள்ள ஸூபர்வைஸர் வந்துட்டார். 'என்னப்பா, ஸ்லைட இங்கே வச்சிருக்கே?' அதுக்குள்ள அவன் மைக்ரோஸ்கோப்பிலும் ஸ்லைட் இருப்பதையும் பாத்துட்டார். 'ஓ, எக்ஸ்ட்ராவா கொடுத்துட்டாங்களா? I will take this' னு சொல்லிட்டு எடுத்துட்டு போய்ட்டார்.

எனக்கு பயங்கர டென்ஷனாயிடுச்சு. ஹாலில் என் கிட்ட மட்டும் தான் இப்ப ஸ்லைட் இல்ல. ஒருவழியா தைரியம் வரவழச்சுகிட்டு போய் சூபர்வைசரிடம் 'எனக்கு ஸ்லைட் தரலேயே'ன்னு சொன்னேன். 'அதெல்லாம் இல்ல. நான் அறையில் உள்ள எல்லாருக்கும் எண்ணிப்பாத்து கரெக்டா கொடுத்திருக்கேன். எங்கேயாவது கீழப் போட்டுருப்பேயொழிய நான் கொடுக்காம இருந்திருக்க முடியாது. போய்த் தேடிப்பாரு'ன்னு சொல்லிட்டாங்க. :(. என்ன செய்யறது. 'சரி தேடுறேன்'னு சொல்லிட்டு வந்து உக்காந்தேன். என்ன செய்யறதுன்னு முழிச்சுகிட்டிருந்தப்போ ஒரு தேவதை வந்தாள்!

தேவதை வந்தார்கள்னு தான் சொல்லணும். என்னோட க்ளாஸ் டீச்சர். 'என்ன ஸ்லைட்?'னு கேட்டாங்க. ஸ்லைட் கொடுக்கலேன்னு சொன்னேன். அநேகமா அவங்களுக்கும் என்ன நடந்ததுன்னு புரிஞ்சிருக்கணும். 'அதெப்படி?. சரி, என்னவோ..இரு, நான் எடுத்துகிட்டு வரேன்' சொல்லிட்டு போய் ஸ்லைட் கொண்டு வந்தவங்க.. 'பாரு, புரியுதா இல்லியா?'. எனக்கு புரியலேன்னு சொல்லவும் என்னன்னு விளக்கமும், என்ன பதில் சொல்லணும்னும் சொல்லிட்டாங்க. புது தைரியத்தோடு, நான் முடிச்சிட்டேன்னு எக்ஸாமினர் முன்னே போய் நின்னேன். அவர் பல புதுக்கேள்விகள் கன்னாபின்னாவென்று கேட்க ஆரம்பித்தார். அப்போதும் கைகொடுத்தார் என்னோட டீச்சர் தேவதை. 'விடுங்க. இவன் என் கிளாசுலே பிரில்லியண்டான ஸ்டுடண்ட்ஸில் ஒருத்தன்! ஒரு செமஸ்டரை ஒரே வாரத்தில் முடிச்சுட்டான் (எப்படி முடிச்சேன்னு தெரிஞ்சா அவங்களுக்கு ஹார்ட் அட்டாக் தான் :) ). 5 தவிர வேற எதக்கொடுத்தாலும் ஒத்துக்கமாட்டேன்!' அப்படீன்னு ஒரு போடு போட்டாங்க. அதன் படியே '5' கிடைத்தது. ஒரு பக்கம் சந்தோஷமா இருந்தாலும், அய்யோ, இப்படியாக நம்ம மேல நம்பிக்கை வச்சுருக்கவரவங்கள ஏமாத்திட்டோமேன்னு வருத்தமும் வந்தது.

இன்னொரு விஷயம், தேர்வுகளில் நமக்கு தெரியாதவற்றை 'தெரியலே' ன்னு நேரடியா சொல்றது நல்லது. கண்டதையும் உளறினா குறுக்கு கேள்வி கேட்டு மானத்தை வாங்கிடுவாங்க. ஒரு தடவை, ஹிஸ்டாலஜி பரிட்சை. அந்தப் பாடத்திலே முழு நேரமும் ஸ்லைடுதான். அந்த பரிட்சையில் ஒரு ஸ்லைடில் என்னன்னு தெரியாம உளறப்போய் டீச்சர் அதுக்கு ஒரு பதிலடி கொடுத்தாங்க பாருங்க. "If this is brain tissue, then am a crocodile". அதுகூட பரவால்ல.. நம்ம கூட படிக்கற பசங்க தானே.. அவுங்களும் டர்ன் வந்தா வாங்கித்தானே ஆகனும்னு இதையெல்லாம் பெரிசா கண்டுக்க மாட்டாங்க. ஆனா, ரவுண்ட்ஸ் போகும்போது, சீப் கிட்ட மாட்டினோம்.. தொலஞ்சோம்.. நேரா ஜன்னல் வழியா குதிச்சிடலாமாங்கற மாதிரி சில சமயம் பேஷண்ட்கள் முன்னாடியே நார் நாரா கிழிச்சுத் தோரணம் கட்டிடுவாங்க. அதுக்கப்புறம் நாம அந்த வார்ட் பக்கம் தலகாட்டும் பொழுதெல்லாம், 'வாடா வசூல் ராஜா, பொஸ்தகத்த கொஞ்சமாவது புரட்டிட்டு வந்தியா? இல்ல இன்னிக்கும் வாங்கிக் கட்டிக்கப்போறியா?'ன்னு நக்கல் சிரிப்புதான் நம்மள பாத்து.. அதப்பத்தி தனிப்பதிவே போடலாம்.

எல்லாருக்கும் இந்த மாதிரி ஒரு க்ளோஸ் கால் அனுபவம் இருக்கும். இல்லியா? காப்பி, பிட் டெக்னிக்குகளில் கைதேர்ந்தவர்கள் அவர்கள் அனுபவங்கள பகிர்ந்துகிட்டா மிச்சவங்களுக்கு பிரயோசனமா இருக்குமே.

----
குறிப்பு: ஸ்பெஷல் பட்டர் மசால்களையே நட்சத்திரங்களின் மூலமா சாப்பிட்டு வந்த வாசகர்களுக்கு, சாதா பரோட்டா வித் வெங்காயப் பச்சடியும் ஒரு சேஞ்சுக்காக பரிமாறாலாம் என்றிருக்கிறேன். ஏன்னா நமக்கு அவ்வளவுதான் செய்ய வரும். அதனால, ரொம்ப அலட்டிக்காம இந்த ஸ்பெஷல் வாரத்தின் பதிவுகளுக்கு வஞ்சனையில்லாம பின்னூட்டம், குத்து போடறவங்க எல்லாம் பின்னர் தனியாக கவனிக்கப்படுவார்கள் என்று நினைவு படுத்துகிறேன். இரண்டுக்கும் மேற்பட்ட பின்னூட்டமிடுபவர்கள் பம்பர் முறையில் குலுக்கப்படுவார்கள்.

73 Comments:

 1. Rod said...

  Nice blog. Your posts were interesting reading. I have a early symptoms of ovarian cancer site. It covers everything about early symptoms of ovarian cancer as well as ovarian cancer concerns, warning signs, and ovarian cancer treatment. You'll find it very informative. Please try and visit it, see what
  you think. Rod


 2. rv said...

  உங்களுக்கு பிடிச்சதில ரொம்ப சந்தோஷம் ராட் அண்ணா..

  கண்டிப்பா உங்க சைட்ட வந்து பாக்கறேன்.

  நன்றி.. தொடர்ந்து வாங்க..


 3. துளசி கோபால் said...

  வந்துட்டாங்கையா இங்கேயும் மொதப் பின்னூட்டம் போட:-)

  அது போட்டும்.

  நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்.

  காப்பியும் நல்ல ஸ்பெஷல் காப்பியாத்தான் இருக்கு:-)

  கலக்குமைய்யா கலக்கும்:-))))


 4. பூனைக்குட்டி said...

  இந்த வார நட்சத்திரமா வாழ்த்துக்கள் இராமநாதன். முதல் பின்னூட்டமே அசத்துது.


 5. Ganesh Gopalasubramanian said...

  அப்டி போடுங்க ராமநாதன் பிட்டை... :-0)
  நல்ல அனுபவம்....

  //தேவதை வந்தார்கள்னு தான் சொல்லணும். என்னோட க்ளாஸ் டீச்சர். 'என்ன ஸ்லைட்?'னு கேட்டாங்க.//
  ரொம்ப அழகா இருப்பாங்களோ :-)))


 6. Thangamani said...

  //இந்த ஸ்பெஷல் வாரத்தின் பதிவுகளுக்கு வஞ்சனையில்லாம பின்னூட்டம், குத்து போடறவங்க எல்லாம் பின்னர் தனியாக கவனிக்கப்படுவார்கள் என்று நினைவு படுத்துகிறேன்.//

  :)


 7. பினாத்தல் சுரேஷ் said...

  Welcome. I liked your blog. Please visit penathal.blogspot.com even if there are no updates.

  (vara vara ippati ezuthara commentukkellam kooda pathil podarangappa!)


 8. பினாத்தல் சுரேஷ் said...

  Welcome. I liked your blog. Please visit penathal.blogspot.com even if there are no updates.

  (vara vara ippati ezuthara commentukkellam kooda pathil podarangappa!)

  Ithu bumper kulukkalukkaaga!


 9. மணியன் said...

  நட்சத்திர பதிவு ஆரம்பமே அசத்தலாக இருக்கு. இந்தவாரம் கூடவா பின்னூட்டத்தை பின்னூட்டு கொடுத்து வாங்க வேண்டும் :))


 10. தருமி said...

  நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்.


 11. தருமி said...

  இரண்டுக்கும் மேற்பட்ட பின்னூட்டமிடுபவர்கள் பம்பர் முறையில் குலுக்கப்படுவார்கள்.//
  ஆக, இது என் இரண்டாவது பின்னூட்டம். இப்பவே என் quota முடிஞ்டிருச்சி...என்ன எப்படி குலுக்குவீங்க...?


 12. அன்பு said...

  நல்ல காப்பி... எனக்கும் ஒருவித பயத்தால் இந்த அனுபவம் கிடையாது. ஒருமுறை துணிந்து ஸ்கேலுக்குப்பின்னால் சில சூத்திரத்தை எழுதி, தேர்வுக்குச் செல்லும்போது மறந்து விடுதியில் விட்டுச்சென்றேன்!

  இந்த ஸ்பெஷல் வாரத்தின் பதிவுகளுக்கு வஞ்சனையில்லாம பின்னூட்டம், குத்து போடறவங்க எல்லாம் பின்னர் தனியாக கவனிக்கப்படுவார்கள் என்று நினைவு படுத்துகிறேன்.

  எதையும் எதிர்பார்த்து இங்கு நான் இந்தப்பின்னூட்டத்தை இடவில்லை என்று சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன். அதெநேரம் நான் இட்ட இந்தப் பின்னூட்டத்தை நினைவில் கொள்ளவும - என்று சுட்டிக்காட்ட விரும்புகிறேன்:)


 13. ENNAR said...

  அந்த நாட்களில்
  முதல்பகுதி மொழி
  இரண்டாம்பகுதி ஆங்கிலம்
  மூன்றாம் பகுதி கணக்கு,பெளதிகம்,இரசாயணம்
  மூன்றாம் பகுதியில் ஒன்றில் பெயில் ஆனாலும் மூன்றும் எழுத வேண்டும்
  முதலி கணக்கில் மட்டும் 5 மார்க் வித்தியாசத்தில் பெயிலானால் மறுமுறை மூன்றையும் எழுத வேண்டும் இந்த முறை பெளதிகத்தில் 10கும் இரசாயணத்தில் 10 கிலும் பெயிலாவர்கள் என்ன செய்ய முடியும் இங்கு இது எனது சொந்த அனுபவம் பி.யு.சி.யில்


 14. முகமூடி said...

  1
  ஒன்று
  ஒக்கடு
  ein
  ένας
  un
  1 つ
  одно


 15. முகமூடி said...

  twee
  2
  இரண்டு
  dois
  deux


 16. முகமூடி said...

  உங்க அனுபவத்த சொன்னதுக்கு ரொம்ப நன்றி... உங்க ப்ராக்டீஸ்/க்ளினிக் எங்கன்னு சொன்னீங்கன்னா, அந்த பக்கமே வராம எஸ்கேப் ஆயிடுவோம்..

  (இது மூன்றாச்சி.. ஸ்பெஷல் பம்பருக்கு)


 17. ஏஜண்ட் NJ said...

  Ничего себе! Вы становитесь звездой теперь!!

  Я желаю каждому хорошую неделю!!!

  заинтересованный!


 18. துளசி கோபால் said...

  பம்பர் குலுக்கலைக் கோட்டைவிட இருந்தேனே.
  நல்லகாலம். இப்போ
  இது என் ரெண்டாவது பின்னூட்டம்.
  'குலுக்கலுக்காக':-)))))


 19. Desikan said...

  ராமநாதன்,

  நான் ஒன்பதாவது படிக்கும் போது, எனக்கும் ஒரு காப்பி அனுபவம் இருக்கிறது, காப்பி(பிட்) அடித்து மாட்டிக்கொண்டு, அப்பா ஸ்கூலுக்கு வந்து.., தலைமை ஆசிரியரிடம் பேசி, ஆஹா .. ஞாபகத்தை கிளறி விட்டதற்கு நன்றி. முடிந்தால் ஒரு சிறுகதையாக எழுத பார்க்கிறேன்.

  வாழ்த்துக்கள்.
  அன்புடன் தேசிகன்
  http://www.desikan.com/blogcms/


 20. J. Ramki said...

  //தேவதை வந்தார்கள்னு தான் சொல்லணும். என்னோட க்ளாஸ் டீச்சர்
  Selvaraghavan class mateaa? :-)


 21. தாணு said...

  ராமநாதன்,
  நீளமா ஒரு பின்னூட்டம், கையொடிய எழுதி அனுப்பீனேன், காணலையே? பம்ப்பர் பரிசு எனக்குத்தான் கிடைக்கும்னு தெரிஞு யாரோ அழிச்சுட்டாங்க போலிருக்கே!


 22. தாணு said...

  சொன்னதைச்த் திருப்பி சொல்றது திருநெல்வேலிக்காரங்களுக்குப் பழக்கமில்லை. அதனால் என் பின்னூட்டத்தை மறுபடி பதிய முடியாமைக்கு சாரி


 23. b said...

  இவ்வார சிறப்பு நட்சத்ரம் இராமநாதன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். காப்பி சுவையாக இருக்கிறது!


 24. வானம்பாடி said...

  நட்சத்திர ராம்ஸ், கலக்குங்க! F1 பத்தியும், புகைப்படம் பத்தியும் ஒரு பதிவு நிச்சயம் உண்டுதானே..


 25. G.Ragavan said...

  நட்சத்திர இராமநாதா, இதே போல எனக்கும் நடந்திருக்கு. எலக்ட்ரிகல் லேப் பிராக்டிகல். எனக்கு முன்னாடி வரிசைல போனவன் tuckin பண்ணாமப் போனான். வந்த எக்ஸ்டெர்னல் அவனைத் திட்டீட்டு என்னய பாத்தாரு. நான் நல்ல புள்ளையா ஒழுங்கா நின்னேன். அவருக்கு ஒரு சந்தோசம். நான் எடுத்த எக்ஸ்பெரிமெண்ட் ரொம்ப கஷ்டம். மறந்து போச்சு. (தெரியாதுன்னு சொல்லனும்). அது யாருக்குமே குடுக்கலை. ஏன்னா ரொம்ப நேரம் பிடிக்கும். வெச்சுப் பாக்கலாமுன்னு வெச்சிருக்காங்க. பண்ணீருவேனான்னு எங்கிட்ட எக்ஸ்டெர்னல் கேட்டாரு. ஓன்னு தலையாட்டுனேன். circuit diagrams நினைவில் இருந்தது. போட்டுக் காமிச்சு ஓகே வாங்கியாச்சு. நேரம் போகுது. எதுவும் ஒழுங்கா செய்யல. எதையோ எழுதி என்னவோ பண்ணிக் கொடுத்தேன். இப்ப viva. மொதல் கேள்வி. சரியாச் சொல்லீட்டேன். இரண்டாவும் மூனாவதும் தெரியாதுன்னு சொல்லீட்டேன். மார்க் போடும் போது இண்டெர்னலா இருந்தவர் formulaவ சரிபாக்கச் சொல்லி அவர் கிட்ட சொல்லீருக்காரு. அவரு கேக்காம மார்க்கப் போட்டுட்டாரு. எவ்வளவு தெரியுமா? 96/100. highest mark in that semester.


 26. ரவிகுமார் ராஜவேல் said...

  நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்.


 27. Alex Pandian said...

  இராமநாதன்,

  நட்சத்திரமா கலக்குங்க. அப்படியே கொஞ்சம் படமும் போட்டுக் காட்டுங்க ராஜா.
  இப்ப படம் போட்டு பின்னூட்டம் வாங்குவதுதான் ஃபேஷனாமே :-) ஒங்க ஆஸ்பத்திரி,
  கல்லூரி படமெல்லாம் போட்டா யாரும் வந்து '-' குத்தமாட்டாங்க. டீச்சர் படம் போட்டா
  '+' தான்.

  - அலெக்ஸ்


 28. Saranya Ganesh said...

  இத படிச்ச ஒட்னஎ என் memory ku வந்தது சதி லீலாவதி படம் தான்....அதுல ரமெஷ் அரவிந் wife ஒரு பக்கம் script குடுத்து
  இத மனப்படம் பண்ணிடுவீங்லானு கமல் கிட்ட கேக்க அதுக்கு கமல் அப்படி தானே doctor ஆனஎன் சொல்லுவான்


 29. குமரன் (Kumaran) said...

  வாழ்த்துகள் இராமநாதன்.


 30. குமரன் (Kumaran) said...

  வாழ்த்துகள் இராமநாதன். (இது குலுக்கலுக்காக) :-)


 31. குமரன் (Kumaran) said...

  நீங்க எப்ப நம்மப் பதிவுக்கு '+' குத்துறீங்களோ, அப்பத்தான் நான் உங்க பதிவுக்கு '+' குத்துவேன். அதுவரை NO குத்து... இது ஸ்பெஷல் குலுக்கலுக்காக :-)


 32. குமரன் (Kumaran) said...

  மவனே...பின்னூட்டு கொடுத்தா பின்னூட்டம் வாங்கறே...ஐ...நல்லா இருக்கே...நன்றி மணியன்.


 33. சினேகிதி said...

  \\தேவதை வந்தார்கள்னு தான் சொல்லணும்\\
  nallathan mariyathai kudukringa teacher ku.
  *** valluthukal.


 34. rv said...

  எல்லோருடைய வாழ்த்துகளுக்கும், அன்புக்கும் நன்றி..

  சில பேர் மட்டும்தான் பம்பர் போட்டியில் கலந்துக்க முதல் சுற்றில் தகுதி பெற்றிருக்காங்க. ஓ டெய்லி இரண்டு மூணு போடணும்னு சொல்ல விட்டுட்டேனா..

  //காப்பி, பிட் டெக்னிக்குகளில் கைதேர்ந்தவர்கள் அவர்கள் அனுபவங்கள பகிர்ந்துகிட்டா மிச்சவங்களுக்கு பிரயோசனமா இருக்குமே.
  //
  இத ரெண்டு மூணு பேரு தவிர படிச்சா மாதிரியே தெரியலியே!


 35. Manjula said...

  நட்சத்திர வாழ்த்துக்கள் இராமநாதன்


 36. rv said...

  கணேசரே
  //ரொம்ப அழகா இருப்பாங்களோ :-)))//
  அந்தச் சம்யத்தில உதவிக்கு வந்ததால் தேவதைன்னு சொன்னேன்.. (கொசுறு: சத்தியமா சுஷ்மிதாவிற்கு ஒண்ணுவிட்ட தங்கை மாதிரி இருப்பாங்க.. சரியா?)

  கொ.ப.சே
  //(vara vara ippati ezuthara commentukkellam kooda pathil podarangappa!)//
  பழச கிளற வேண்டாமுனும் நீங்க நம்ம தோழர்கறதாலேயும் விட்டுடறேன்.. :P


 37. rv said...

  மணியன்,
  //இந்தவாரம் கூடவா பின்னூட்டத்தை பின்னூட்டு கொடுத்து வாங்க வேண்டும்//
  கையூட்டு பின்னூட்டு இல்லாம இப்பல்லாம் ஒரு காரியமும் ஆகறதில்ல!

  தருமி,
  //என் quota முடிஞ்டிருச்சி//
  ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் சரியா படிக்கறதில்லியா? இரண்டுக்கு மேற்பட்டன்னு தான் சொல்லிருக்கு. அதிகபட்ச லிமிட் சொல்லவேயில்லியே..

  //என்ன எப்படி குலுக்குவீங்க...?
  //
  குலுக்கறது இருக்கட்டும். நீங்களே ஒரு ப்ரொபஸர். நீங்க எத்தன பசங்கள இந்த மாதிரி டென்ஷன் படுத்தீனீங்க, நீங்களே எத்தன தடவை இந்த மாதிரி செஞ்சு மாட்டி/தப்பிச்சீங்கன்னு கொஞ்சம் சொன்னா குறைஞ்சிடமாக்கும்..


 38. rv said...

  அன்பு,
  // எனக்கும் ஒருவித பயத்தால் இந்த அனுபவம் கிடையாது//
  அட, நம்மள மாதிரியே ஒருத்தர். ஆனா, சில சமயம் பயத்த பாத்து நாம பயந்துடக்கூடாது.. அப்பாடா, ஆழமா இன்னிக்கு ஒரு வரி சொல்லியாச்சு.

  //இந்தப் பின்னூட்டத்தை நினைவில் கொள்ளவும //
  நோட்டட். முதல் ஆள் டாபிக்கலாக இட்டதுக்கு!

  என்னார்,
  //முதலி கணக்கில் மட்டும் 5 மார்க் வித்தியாசத்தில் பெயிலானால் மறுமுறை மூன்றையும் எழுத வேண்டும் இந்த முறை பெளதிகத்தில் 10கும் இரசாயணத்தில் 10 கிலும் பெயிலாவர்கள் என்ன செய்ய முடியும் இங்கு இது எனது சொந்த அனுபவம் பி.யு.சி.யில்
  //
  இப்பவே மண்டைய பிச்சுக்கறா மாதிரி இருக்கு. அக்ரெககேட், அது இதுன்னு.. நீங்க சொல்றது இன்னும் கஷ்டமா இருக்கும்போலிருக்கே..


 39. rv said...

  முகமூடி,
  //அந்த பக்கமே வராம எஸ்கேப் ஆயிடுவோம்//
  :)

  ஒண்ணு, ரெண்டு ட்ரான்ஸ்லேட் பண்ண மாதிரி அப்படியே தொடருங்க. அப்புறம் நாங்க எப்படி பத்து, இருபதெல்லாம் தெரிஞ்சிக்கறதாம்?

  பம்பர் ரேஸில் லீடர். தற்போதைய நிலவரப்படி..

  ஏஜெண்டு,
  //Я желаю каждому хорошую неделю!!!//
  ஒரு வாரத்திற்கு தொடர்ச்சியா என்ன எழுதறதுன்னே இன்னும் முடிவு பண்ண பாடில்ல. இதுல ஒவ்வொரு நல்ல வாரமும் சொல்லிருக்கீங்க. இருந்தாலும், உங்கள் ஆர்வத்தின் காரணமாய் முகமூடியிடம் லீடர்ஷிப்பை புடுங்கி உங்களுக்குத் தரேன்.


 40. rv said...

  தேசிகன்,
  //முடிந்தால் ஒரு சிறுகதையாக எழுத பார்க்கிறேன்.
  //
  கண்டிப்பா எழுதுங்க. இங்க இதுவரை யாருமே சொந்த அனுபவத்தை எடுத்து வக்க மாட்டேங்கறாங்க. என்ன மேட்டர்னு தெரியல.

  தாணு,
  //என் பின்னூட்டத்தை மறுபடி பதிய முடியாமைக்கு சாரி
  //
  இதென்ன அநியாய பாலிஸியா இருக்கு. நீங்க சொன்னது எனக்கு கேக்கவே இல்ல.. திரும்பி சொல்லுங்கன்னு சொன்னா மாட்டேன்னா என்ன அர்த்தம்.

  பம்பர் குலுக்கலாளர்கள் போட்டி: திருத்தங்கள்: ஒரு வாரத்திற்கு ஒரு பதிவிற்கு இரண்டுக்கும் மேற்பட்ட பின்னூட்டங்களை வாரம் முழுவதும் இடுவோரே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவர். பதிவு இடப்பட்ட அதே நாள் அவை பதிவு செய்யப்பட வேண்டும். இன்றைய பதிவிற்கு இன்னும் பத்து பன்னிரண்டு மணி நேரம் இருக்கு. நம்பிக்கையை விட்டுடாதீங்க..


 41. rv said...

  ரஜினி ராம்கி,
  //Selvaraghavan class mateaa?//
  ஏற்கனவே பாதி மறை கழண்டு சுத்திகிட்டுருக்கேன்..அது போறாதா?

  சுதர்ஸன்,
  //F1 பத்தியும், புகைப்படம் பத்தியும் ஒரு பதிவு நிச்சயம் உண்டுதானே..
  //
  புகைப்படம் பத்தி கண்டிப்பா உண்டு. ஏன்னு உங்களுக்கே தெரியும் :) F1 பத்தி என்னத்த எழுதறது???


 42. குமரன் (Kumaran) said...

  ஆஹா அதற்கும் 40+ பின்னூட்டமா?

  ஹிஹி...உங்க புது போட்டி விதிகளைப் படித்தேன். அதான். :-)


 43. rv said...

  ஆஹா ராகவன்னா ராகவன் தான்,
  நீங்க மட்டும்தான் முழுசா பதிவப் படிச்சுட்டு பதில் போட்டிருக்கீங்க. மிச்சவங்கல்லாம் எப்ப குலுங்கலாம்னு அலைஞ்சுகிட்டிருக்காங்க.

  அதனால், ஒரு பின்னூட்டம் போட்டாலும் இதுதாண்டா பின்னூட்டம் அப்படீங்கறா மாதிரி போட்டதால உங்கள அடுத்த சுற்றிற்கு டிபால்டாக தகுதிபெற்றவராக அறிவிக்கிறேன்.

  அலெக்ஸ்,
  //டீச்சர் படம் போட்டா
  '+' தான்.
  //
  வாரக் கடசியில் ரெஸ்பான்ஸ் சரியில்லேன்னா ஒரு பரபரப்புக்கு போடறதாத் தான் ப்ளான் பண்ணி வச்சுருக்கேன். :)


 44. குமரன் (Kumaran) said...

  //ஆஹா அதற்கும் 40+ பின்னூட்டமா? //

  ஆஹா அதற்குள் 40+ பின்னூட்டமா? ன்னு படிங்க. ஆமா இந்த பின்னூட்டத்தைக் கணக்குல எடுத்துக்குவீங்களா?


 45. rv said...

  சரண்யா,
  கடைசியில் வர வழி தெரிஞ்சுதா?

  குமரன்,
  //உங்க புது போட்டி விதிகளைப் படித்தேன்//
  இப்படித்தான் ஆர்வமா இருக்கணும். இப்போதைக்கு நீங்க தான் லீடர். ஆர்வத்தை விட்டுடக்கூடாது.


 46. ramachandranusha(உஷா) said...

  பேமெண்டு எப்படி, ரூபிள்ல வேணாங்க, டாலர் இல்லாட்டி யூரோன்னா ஓ.கே! எண்ணிக்கை கணக்கா அல்லது வரிகள் கணக்கா? மொதல்லே சரியா பேசிடணுமில்லே :-)


 47. பழூர் கார்த்தி said...

  என்னமோய்யா.. எல்லாரும் சொல்றாங்க.. நானும் நம்பி பின்னூட்டம் போடறேன்.. பாத்து பரிசு கொடுத்தா சரி :-)


 48. Unknown said...

  ராம்ஸ்! நட்சத்திரமா? வாழ்த்துக்கள். அசத்துங்க. இந்த பசங்கல்ல காப்பி அடிக்காத பசங்களே இருக்க மாட்டிங்களா?., அது டாக்டரா இருந்தாலும் சரி., 10 வதா இருந்தாலும் சரி. எங்கள மாதிரி உழைச்சுப் படிச்சு பரீச்சை எழுதுனா என்ன? என்னா உங்க 'சீப்' கிட்ட மாட்டினா மாதிரி இருக்கா?. சும்ம டமாஸ்... தஞ்சாவூர் குறும்பப் போட்டுத் தாக்குங்க இந்த வாரத்தை.


 49. பழூர் கார்த்தி said...

  நட்சத்திரமாக ஜொலிக்க வாழ்த்துக்கள் ராமநாதன் :-)
  ****
  முதல் பதிவிலேயே பின்னூட்ட எண்ணிக்கை எகிறுது... போதும்யா உன் அழும்புக்கு ஒரு அளவே இல்லையா :-))


 50. rv said...

  உஷா அக்கா,
  //டாலர் இல்லாட்டி யூரோன்னா ஓ.கே! எண்ணிக்கை கணக்கா அல்லது வரிகள் கணக்கா? மொதல்லே சரியா பேசிடணுமில்லே //

  முதல்ல பம்பர் குலுக்கலுக்கு எலிஜிபிலிட்டி க்ரைட்டீரியா பாருங்க.. மிச்ச டெர்ம்ஸ் எல்லாம் என் லீகல் அட்வைசரக் கேட்டு சொல்றேன். ஒரு வரி, குறஞ்சது அஞ்சு வார்த்தைன்னு இப்போதைக்கு வச்சுக்குவோம்.


 51. rv said...

  சோம்பேறி பையன்,
  ரெண்டுதான் போட்டுருக்கீங்க.. இருந்தாலும் முத தடவையா வந்து போட்டதினால ஆட்டத்துல சேத்துக்கறேன்.

  //பின்னூட்ட எண்ணிக்கை எகிறுது//
  என்ன, இப்பத்தானே 50 வந்துருக்கு. அவங்கவங்க 100-300னு வாங்கித்தள்றாங்க. நீங்க இதுக்கே அலுத்துக்கிறீங்க? :)

  அப்டிபோடு,
  //எங்கள மாதிரி உழைச்சுப் படிச்சு பரீச்சை எழுதுனா என்ன//

  அது எப்டி எப்டி? உங்கள மாதிரியா? பாதிநேரம் தைரியமா கோதாவில இறங்கறதே எங்க க்ளாஸ் பொண்ணுங்கதான். பசங்கள்ல்லாம் பாவமா, அம்மா தாயே முடிச்சிட்டு பிட்ட நீயே வச்சுக்க, ஆனா பதில மட்டும் சொல்லிடுன்னு கெஞ்சுவாங்க.


 52. யாத்ரீகன் said...

  ம்ஹீம்.. என்ன இராமநாதன் நட்சத்திர பதிவு மாதிரி தெரியலையே :-(


  உங்க மருத்துவ அனுபவத்துல வந்த சுவாரசியமான இல்ல முக்கியமான அனுபவத்தை வேணா.. பகிர்ந்துகொங்களேன்....

  -
  செந்தில்/Senthil


 53. rv said...

  நன்றி செந்தில்,
  ஆனா இதுக்கு மேல நமக்கு வராதுங்க. நம்ம வாசிப்பு அனுபவம் அப்படி.. முயற்சி செய்யறேன்..

  மீண்டும் நன்றி

  (முதல்ல இந்த கணேஷ், ராம்கி, இளவஞ்சி மாதிரி ஆளுகளுக்கு தமிழ்மணத்தில் தடா போடணமுமப்பா! :) )


 54. இராதாகிருஷ்ணன் said...

  நட்சத்திரத்திற்கு வாழ்த்துகள்!

  பள்ளிக்கூடத்துல பரிட்சையப்போ ஒரு பெஞ்சில் ரெண்டு ஒரே பெரிய வகுப்பு பையன்களுக்கு நடுவால ஒரு சின்ன வகுப்புப் பையனை உட்காரவச்சிருப்பாங்க. அந்த ரெண்டு பெருசுகளுக்கு இடையில பட்டுவாடா நடக்கறது இந்த சிறுசு மூலம். சில சிறுசுகள் மெதுவா "அண்ணா இந்தக் கேள்விக்குப் பதில் என்ன" அப்படின்னு கேட்கும்போது பெரிசு அப்போத்தான் அறிவைக் (இருந்தா) காட்டுவாங்க. ஒரே தமாஷா இருக்கும்போங்க!


 55. சிங். செயகுமார். said...

  சின்ன வயசுல காப்பி அடிச்சி வீட்டுக்கு தெரிஞ்சி போயி அதுக்கப்பறம் அந்த பழக்கம் இல்ல.உங்க

  காப்பி ரொம்ப டேட்ஸ்ட் ராமநாதன். அப்பறம் பம்பர் பிரைஸ்ல மாற்றம் இல்லையே


 56. Holdat9000 said...

  Ramanathan,

  Copy 1: It was my Hindi madhyama exam. I could not answer many questions. My neighbour offered his paper for me to "Copy." I refused and failed the exam.


 57. Holdat9000 said...

  Ramanathan,

  Copy 2: It was my CA intermediate exam. It was Financial Accounting paper. My neighbour copied from me a couple of questions and he got more marks than me.


 58. Holdat9000 said...

  Ramanathan,

  Copy n: Now am in the Ctrl C and Ctrl V industry.

  PS: Excuse the comments in english.


 59. Radha Sriram said...

  ஹெல்லொ -ராமனாதன்,
  தமிழில் என்னுடைய முதல் பினுட்டம்...யிபேஎ...நல்ல பதிவு..ரொம்ப இன்டெரெச்டிங் ஆக எழுதரீங......

  ராதா sriram

  have to hone up my writing skills in tamil.till then bear with my spelling mistakes

  Radha


 60. rv said...

  இராதாகிருஷ்ணன்,
  //பட்டுவாடா நடக்கறது இந்த சிறுசு மூலம். //
  ஒரே முறைதான் இந்த மாதிரி எனக்கு நடந்திருக்கு. பாவம், பக்கத்திலிருந்த சிறுசு ஏதோ கேட்டது. எங்க ரெண்டு பேருக்கும் பதில் தெரியல. ஆனா, எப்படி சொல்றது. எதையோ சொல்லி வச்சோம். அதுக்கப்புறம் அந்தப் பையன பாக்க வழியில்லேங்கற தைரியத்துல.


 61. rv said...

  சிங் செயக்குமார்,
  //அப்பறம் பம்பர் பிரைஸ்ல மாற்றம் இல்லையே //
  அதுல இல்ல.. ஆனா, ரூல்ஸ் கண்டிப்பா பாலோ பண்ணனும்.

  hold at 9000,
  உங்க அனுபவங்கள பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. தொடர்ந்து வாங்க.

  //My neighbour copied from me a couple of questions and he got more marks than me.//
  எனக்கென்னவோ கிரேஸி மோகன் நாடகம் தான் நினைவுக்கு வருது.. :P


 62. rv said...

  ராதா ஸ்ரீராம்,
  ரொம்ப நன்றி.. தொடர்ந்து வாங்க.


 63. Ganesh Gopalasubramanian said...

  //(கொசுறு: சத்தியமா சுஷ்மிதாவிற்கு ஒண்ணுவிட்ட தங்கை மாதிரி இருப்பாங்க.. சரியா?)//
  இராமநாதன் இது அநேகமா எல்லோருக்கும் தோன்றும் ஒன்று. மனசுக்கு பிடிச்ச டீச்சர் அழகாத்தான் தெரிவாங்க... (அழகா இருக்கிறவங்களத்தான் மனசுக்கு பிடிக்கும்கிறது அடுத்த விஷயம்...)

  //(முதல்ல இந்த கணேஷ், ராம்கி, இளவஞ்சி மாதிரி ஆளுகளுக்கு தமிழ்மணத்தில் தடா போடணமுமப்பா! :) )//
  ஆஹா பெரியவங்க லிஸ்ட்ல நானும் சேர்ந்திட்டேன் போல...... இனி வரும் காலம் ரொம்ப கஷ்டமோ ???!!???

  பி.கு

  இது என்னோட இரண்டாவது பின்னூட்டம். ஏன் சொல்றேன்னா எல்லாரும் தொடர்ச்சியா இரண்டு பின்னூட்டம் போடறாங்க நான் கொஞ்சம் கேப்பு (gap) விட்டுட்டேன் அதான். நீங்க நல்ல கணக்குப் பண்ணுவீங்கன்னு தெரியும்.:-) இருந்தாலும் நான் சொல்றது நல்லது பாத்தீங்களா....


 64. Ramya Nageswaran said...

  நேற்று மாலையிலிருந்து நான் பின்னூட்டமிட முயன்று வருகிறேன். ஆனால் லிங்க் வேலை செய்யவே இல்லை!! குலுக்கலில் நான் கலந்து கொள்ள முடியாமலிருக்க இது யாரோ செய்த சதி என்று தோன்றுகிறது!! இராமநாதரே, உடனடியாக ஒரு விசாரணை கமிஷனை கூட்டும்படி கேட்டுக் கொள்கிறேன்!!!!


 65. யாத்ரீகன் said...

  ஹய்யோ இராமநாதன்.. நான் எப்பவுமே இரு வேறு நபர்களை ஒப்பிடுவதை முடிந்தவரை தவிர்ப்பேன்...

  நான் சொல்ல வந்தது, உங்களோட முந்தைய எழுத்துக்களோட ஒப்பிடுகையில, இந்த பதிவு, என்ன போடுறதுனு யோசிச்சு மண்டை காஞ்சு போட்ட மாதிரி இருந்ததுனு சொல்ல வந்தேன்..

  மன்னிக்கவும்...

  -
  செந்தில்/Senthil


 66. rv said...

  /இது என்னோட இரண்டாவது பின்னூட்டம்//
  ஜஸ்ட்ல தகுதி பெற்றுவிட்டீர்கள். ஏன்னா, ரூல்ஸ் படி நான் அடுத்த பதிவு போடறதுக்கு முன்னாடி போடணும். அதனால அடுத்த ரவுண்டில் உண்டு.


 67. rv said...

  ரம்யா அக்கா,
  //லிங்க் வேலை செய்யவே இல்லை//
  என்னோட லீகல் அட்வைசர்கறது சரியாத்தான் இருக்கு...65 பேருக்கு வேலை செய்யுது.. சிங்கப்பூர்ல மட்டும் செய்யலியா.. சரி சரி.. விசாரணை கமிஷன் வெக்கல்லாம் வேணாம். இந்தப் பதிவுக்கு எக்ஸெம்ஷன் கொடுக்கறேன். நாளைலேர்ந்து வந்துடுங்க.. சரியா?

  யாத்திரிகன்,
  // நான் எப்பவுமே இரு வேறு நபர்களை ஒப்பிடுவதை முடிந்தவரை தவிர்ப்பேன்//
  நீங்க சொல்ல வந்தது எனக்கு நேற்றே புரிந்தது. நான் ஏன் இளவஞ்சி, ராம்கி, கணேஷ் பத்தி எழுதினேனா அவங்கள்லாம் சூப்பர் நட்சத்திரப் பதிவாப்போட்டு ஸ்டாண்டர்டை அநியாயத்துக்கு ஏத்திட்டாங்கன்னு சொல்றதுக்கு..

  //மன்னிக்கவும்//
  மன்னிப்பு கேக்கும்படியால்லாம் ஒண்ணுமேயில்ல..


 68. தாணு said...

  பெண்களோட பின்னூட்டத்தை மட்டுமுங்க ப்ளாக் என்னவோ சதி பண்ணுது. ரம்யாகூட கஷ்டப் பட்டிருக்காங்களே


 69. rv said...

  அத்தை,
  //
  பெண்களோட பின்னூட்டத்தை மட்டுமுங்க ப்ளாக் என்னவோ சதி பண்ணுது. ரம்யாகூட கஷ்டப் பட்டிருக்காங்களே
  //
  என்னவோ சொல்றீங்க..போனாப்போகுது மூணு போட்டதால, போட்டிக்கு உண்டு. பை தி வே, ரம்யா அக்கா அவங்க லீகல் அட்வைசர், என்ன வேணா சொல்லுவாங்க.. ;)


 70. பரஞ்சோதி said...

  நட்சத்திர நண்பருக்கு வாழ்த்துகள்.


 71. rv said...

  பரஞ்சோதி,
  நன்றி


 72. Anand V said...

  நட்சத்திர வாழ்த்துகள்


 73. rv said...

  நன்றி ஆனந்த்.


 

வார்ப்புரு | தமிழாக்கம்