தமிழ்ப்பாதுகாப்பும் டாக்டர் ஐயாவும்...

இளங்கோவன் ஜெஜெவுடன் அறிக்கைப்போர் செய்து போரடித்துவிட்டது போலிருக்கிறது. ராமதாஸையும், திருமாவையும் வம்புக்கிழுத்துள்ளார். ஆனால் கொஞ்சம் எடுத்தேன் கவிழ்த்தேன் ரக வகையில் வேண்டுமென்றெ கடுமையாக பேசியுள்ளார்.self proclaimed தமிழ்க்குடிதாங்கியாய் இராமதாஸ் மாறியிருப்பது ஒரு வகையில் நல்லது. environmentalists - எல்லோரும் ஆஹா தமிழகத்தில் பெய்யும் கொஞ்ச நஞ்ச மழையாவது, டாக்டர் ஐயா மரம் வெட்டுவதிலிருந்து தார் பூசுவதற்கு மாறியதால், தப்பியது என்று மகிழ்ச்சியுடன் இருப்பர்.

இராமதாஸின் கொள்கை தமிழ்ப்பாதுகாப்பு என்று உயரிய ஒன்றாக இருந்தாலும் போகும் பாதை அவர் இதை அரசியல் mileage-க்காகவே பயன்படுத்துகின்றார் என்று காட்டுகிறது. சினிமாவிலும், ஊடகங்களிலும் (i cant resist.. சன் டீவி தவிர்த்து) தமிழிலே இருக்கவேண்டும் என்பது நல்ல எண்ணந்தான். ஏனெனில், புதிய தலைமுறைகளை பாதிப்பதில் இவை பெரும்பங்காற்றுகின்றன. இந்த தலைமுறையில் எது hip and savvy-யோ அதை தாங்களும் பின்பற்றுகின்றனர். hip and savvy என்பது தான் கவனிக்கப்பட வேண்டியது. சந்திரமுகியை தலையில் பொறித்துக் கொள்பவர்கள் வேறு ரகம். ஆனால் சாதாரண மக்கள் நேரிடையாய் இல்லாவிட்டாலும் sub-conscious level-இல் இந்த மீடியாவினால் பாதிக்கப்படுகின்றனர். நகர்ப்புறங்களில் தமிழே இல்லை. எந்த ஹிந்திப்படம், எந்த FM, எந்த ஸ்டார் சானல் என்பதுதான் அவ்ர்களின் பெரும் பிரச்சனை. ஆனால் அவர்கள் சிறுபான்மை. சிறுநகரங்களிலும், கிராமங்களிலும் இந்த மீடியா மிகவும் influence பண்ணக்கூடியது. அவர்கள் இந்த வகை மீடியா நகர்ப்புற கலாச்சாரத்தின் சாரமாகவே எடுத்துக்கொள்வர். அந்த வகையில் தமிழ்ச்சொற்களும், பாடல்களும் இருத்தல் வேண்டும் என்பது இந்த 21-நூற்றாண்டில் அவசியமாகிறது.

அதை செயல்படுத்தும் முறையில் தான் இன்னமும் வெறும் அரசியல்வாதிதான் என்று நிருபிக்கிறார். பல இளைஞர்கள் இவர் பேச்சைக் கேட்டு ஆர்ப்பாட்டம், போஸ்டர் கிழிப்பு, தார் பூசுதல், படச்சுருள் கைப்பற்றுதல் போன்ற செயற்கரிய சமூக சேவைகளில் ஈடுபட்டு தமிழைப் பாதுகாத்துக்கொண்டிருக்கின்றனர். இதனால் விழிப்புணர்வு ஏற்படவேண்டிய சாதாரணத்தமிழனுக்கு வெறுப்பே ஏற்படுகிறது.

தயாரிப்பாளர்கள் கடன் வாங்கியோ அடகு வைத்தோ சொந்தப்பணத்தில் தயாரிக்கும் ஒரு படத்தை (சட்டத்திற்கு மீறியிருந்தால் அரசாங்கமே நடவடிக்கை எடுக்கலாம்) அரசின் பின்னணி இல்லாமல் "இங்கிலீஸ் பேரா வக்கற, மவனே, வச்சு பாரு... சீவிடுவேன் சீவி"-ன்னு ரவுடி மிரட்டல் விடுகிறார்கள். இது அராஜகமின்றி வேறேன்ன? என்ன செய்ய வேண்டும்? அறிவுறுத்தலாம். கேட்கவில்லை என்றால் பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்லலாம். அதை விடுத்து மிரட்டல், படச்சுருள் கைப்பற்றுதல் என்று ஏதோ ஏரியா தாதா கணக்காய் அல்லவா நடந்து கொள்கிறார்கள். உங்கள் ஏரியா தாதாவை உங்களுக்கு பிடிக்குமா? அவன் என்ன சொன்னாலும் பயத்தாலன்றி மரியாதையால் எதையாவது செயல்படுத்துவீர்களா? அவனை சாபமிடாமல் ஒரு நாளாவது இருப்பீர்களா? இந்த நாச வேலையால் தமிழ்ப்பாதுகாப்பிற்கு உண்மையாக சொல்லப்போனால் உலை தான் வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இவற்றிற்கு பதில் தன் கழகக்கண்மணிகளின் பொதுக்கூட்டங்களைப் போல் இலக்கியக் கூட்டம் வட்டந்தோறும் நடத்தலாம். சிந்தனையாளர்களைக் கொண்டு எந்தெந்த வகையில் ஊடகங்களின் மூலம் தமிழ்ப் பரப்பலாம் என்று ஆராய்வதற்கு think tank-கள் ஏற்படுத்தலாம். தமிழில் technical writing வளர்வதற்கு வழிகள் என்னவென்று ஆராயலாம். வருங்காலத்தில் இந்தியாவில் சக்தியுடன் இருக்கப்போகும் (இப்போது அவ்வளவு பரவியில்லாவிட்டாலும்) வலையில், கணினியில் தமிழை முதலிலிருந்தே வளர்க்க முயற்சி செய்யலாம். ஹிந்தியில் விண்டோஸ் வந்தாச்சு. நம்மொழியில் இல்லை. விண்டோஸ் வேண்டாம், லினக்ஸ் போன்ற open source OS-களை தமிழ்ப்படுத்துவதற்கு முயற்சி செய்யலாம். செய்வாரா?

எனக்கு ரொம்ப நாளாய் ஒரு சந்தேகம்: Coffee Day கம்பெனியின் பெயரைத் தமிழில் எழுதும் போது என்ன எழுத வேண்டும்? "காபி டே"? இல்லை "குளம்பி தினம்"? தெரிந்தால் சொல்லுங்கள்.

10 Comments:

 1. மாயவரத்தான் said...

  பொதுவாக தமிழர்களிடம் தமிழ் வார்த்தைகள் புழக்கத்தில் இல்லை என்ற ஆதங்கத்தில் நீங்கள் எழுதியிருப்பதை படித்தேன். பரவாயில்லை. ஆங்கில வாக்கியங்களுக்கு நடுவில் ஆங்காங்கே தமிழிலும் எழுதியிருக்கிறீர்கள்!!!


 2. rv said...

  உங்கள் கருத்துக்கு நன்றி திரு. மாயவரத்தான்,
  நான் சொல்ல வருவதும் அதேதான். நம்நாட்டில் தமிழில் ஆங்கிலம் கலப்பது fashion என்பதையெல்லாம் தாண்டி விட்டது வாழ்க்கைமுறையாகவே ஆகி விட்டது. பல சொற்றொடர்கள் நான் ஆங்கிலத்தில் எழுதியுள்ளது குறித்து சொல்லியுள்ளீர்கள். தெரிந்தே தான் இதைச் செய்துள்ளேன். அதற்கு காரணம் தமிழில் express ( :) ) செய்யத் தெரியாத காரணத்தால்தான். இந்த நிலை மாறினால் நல்லது என்பது தான் என் கருத்து.


 3. மாயவரத்தான் said...

  //Coffee Day கம்பெனியின் பெயரைத் தமிழில் எழுதும் போது என்ன எழுத வேண்டும்? "காபி டே"? இல்லை "குளம்பி தினம்"? தெரிந்தால் சொல்லுங்கள்//

  இப்படியெல்லாம் வேறு பாடாய்ப்படுத்திவீர்களா என்று கேட்டு விட்டு தலை தெறிக்க தமிழ் நாட்டை விட்டு அந்த கம்பெனிக்காரர்கள் ஓடிவிடுவார்கள்!!


 4. rv said...

  Hutch - தும்மல்
  SAP - மரப்பிசின்

  இந்த மாதிரி...


  இது போராட்டத்தின் அடுத்த கட்டம்

  தமிழ்ச்சேவையில் உங்கள் பங்காக நீங்களும் யோசியுங்களேன்...

  :)


 5. முத்துகுமரன் said...
  This comment has been removed by a blog administrator.

 6. முத்துகுமரன் said...

  எழுத்து பிழைகள் இருந்ததால் எனது முந்தைய பதிவை நீக்கியிருந்தேன். திருத்திய பதிப்பு இது

  திரைப்படத்துறையினர் செய்யும் கலாச்சார வன்முறைக்கு தங்கள் பதிலென்னவோ. அவர்கள் எல்லாம் என்ன ஆங்கிலத்திலே பிறந்து, சிந்தித்து, உணர்ந்த படைப்பாளிகளின் படைப்புக்கு எப்படி தமிழில் நாம் பெயரிட சொல்லமுடியும்?. கண்ணே மணியே பேச்சுக்கள் அசர்களிடம் எடுபடாது. வியாபர ரீதியாக பிரச்சனை என்கிறபோது மட்டும்தான் அவர்களுடைய ஆறாம் அறிவு வேலை செய்யும்.அதனால் அவர்களுக்கு புரியும் வடிவில்தா சொல்ல வேண்டும்....
  அரசியல்வாதிகளை மட்டும் நோக்கி கையை நீட்டாதீர்கள். திரைத்துறையும் பாருங்கள்....

  அன்புடன்
  முத்துகுமரன்


 7. -L-L-D-a-s-u said...

  தமிழ் வளர 'positive approach' எடுக்கவில்லை என்ற ஆதங்கத்தில் நீங்கள் எழுதியுள்ளீர்கள். ..தமிழை காப்பது அல்ல பிரச்சினை .. தன் எகொவை காப்பாற்றவேண்டும் .. நல்ல பதிவு ..


 8. -L-L-D-a-s-u said...

  தமிழ் வளர 'positive approach' எடுக்கவில்லை என்ற ஆதங்கத்தில் நீங்கள் எழுதியுள்ளீர்கள். ..தமிழை காப்பது அல்ல பிரச்சினை .. தன் எகொவை காப்பாற்றவேண்டும் .. நல்ல பதிவு ..


 9. குழலி / Kuzhali said...

  மீண்டும் மருத்துவரின் மீது சேறு வாரி பூசும் பதிவு, கேட்டு கேட்டு அலுத்து போன அதே கேள்விகள், இதற்கு ஏற்கனவே பலர் பதில் சொல்லிவிட்டார்கள், நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை


 10. Anonymous said...

  //நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை//

  கரெக்ட் குழலி;ஒரு தடைவை கூட,நீங்க இந்த கேள்விக்கு வேற பதில் சொன்னதில்லை.உங்ககிட்ட சொல்வதற்கு ஒன்றுமில்லை.


 

வார்ப்புரு | தமிழாக்கம்