195. முகமூடிக்கு ஒரு பெயர்பெற்ற பாடல்

அட, முகமூடி என்ற பதிவர் *னவீணத்துவ பதிவு ஒண்ணுபோட்டு அதுல யாருமே மீஸிக் சரியா சுட்டுறதில்லன்னு வருத்தப்பட்டுருக்காரு. நான் உக்காந்து யோசிச்சு ஒண்ணு ரெண்டு மூணுன்னு வரிசைப்படுத்தி பாடலீங்க. ரொம்ப பிரபலமான பாடல் இது..

உன்னப்பார்த்த நேரம்..
படம்: அதிசயப்பிறவி
பாடியது: மலேசியா வாசுதேவன், சித்ரா
இசை: இளையராசா


நேத்திக்கு கேட்டுகிட்டிருந்தப்போ இதோட லிரிக்ஸ் கிடச்சா நல்லாருக்குமேனு நினச்சேன். கேட்கக்கூட கிடைக்கவேயில்ல எங்க தேடியும், மீஸிகிந்தியான்லைன் உட்பட. அதான் வேல மெனக்கெட்டு பாஸ், ரீவைண்ட், பாஸ் செஞ்சு பாட்டோட வரியெல்லாம் எழுதிகிட்டேன். இவ்ளோ நல்ல பாட்டு, இதோட வரிகளத் தேடி எத்தன பேரு அலை அலைனு அலைஞ்சுருப்பாங்கன்னு சொல்லி நம்ம பதிவுலயே போட்டுறலாம்னு.. எதுனாச்சும் மிஷ்டேக் இருந்தா தாராளமா சொல்லுங்க திருத்திருவோம்.

பாட்ட கேட்டுக்கலாம்:இங்க
இல்ல இறக்கிக்கலாம்: இங்க

-------------------------------------உன்னப் பார்த்த நேரம் ஒரு பாட்டெடுத்து போடத்தோணும்
உன்ன பாத்தா போதும் பாட்டு தானா வந்துசேரும்

சேத்து மேல நாத்துபோல
நாத்து மேல ஒரு வாத்துபோல

(உன்னப் பார்த்த நேரம்)

பித்த வாந்தியாப் பேசுற
ஒண்ணுரெண்டு பானம் ஏத்துனா
சொப்பனத்தில் மூச்சு வாங்குற
சொல்லவராம ஏங்குற

ஏனய்யா இந்தா மாதிரி? ஏங்கணும் நடுராத்திரி?
தேவையா இந்த மூத்திரம் ஆத்திரம்? போமய்யா தூங்கு சீக்கிரம்!
மொத்தமா என்னமோ எழுதற.. குத்தமா விளங்காம வந்துட்டா
அட விட்டுத்தள்ளு! நல்ல பாட்டக்கேளு!

(உன்னப்பார்த்த நேரம்)

"தென்னமரக்கீத்து ஆடுது! நரியொண்ணு என்மேல ஓடுது!
நாய்வேற வீணாப்பாயுது!" அட இதானே வாணான்றது?

ஆசையா பாடிக்காட்டுறன்! வேறென்னா எதிர்பார்க்குற?
என்னவோ அள்ளிவீசுற! பேய்னு திட்டித்தீக்குற?
ஒரு மாசமாச்சா? பல சிக்கல்போச்சா?

உன்னப்பார்த்த நேரம் ஒரு பாட்டெடுத்து பாடத்தோணும்!
வாதது ஒண்ணு பாடவந்தா, உரிச்சுவெளாடத்தான் வேணும்!

அட.. சேத்துமேல வாத்துபோல!
வாத்துக்குத்தான் கோவம்போல!

(உன்னப்பாத்த நேரம்)

----------------------
நீங்களே நல்லா பாத்துக்கங்க மக்களே! கலர்கோடிங் இல்ல. அடைப்புக்குறி இல்ல. சாய்வெழுத்து இல்ல. போல்டிங் இல்ல. அவ்ளோதான்.

42 Comments:

 1. இலவசக்கொத்தனார் said...

  ஐயா, இந்த கேண வீணாப் போன பதிவு ஒண்ணியும் புரியலை. ஆழமுனா ஆழம் இது ரொம்ப டீப்புமா...


 2. இராமநாதன் said...
  This comment has been removed by the author.

 3. இராமநாதன் said...

  கொத்ஸு,
  இன்னமும் ஆழமா, டீப்பா போடணுமுன்னா "உன் (நம்) குழல்" வசதிகள பொழுதுபோகாம சுயமா பயன்படுத்தணுமிய்யா.. நமக்குத்தான் அதிலேர்ந்து வெளிப்படுறத பொதுவுல காட்டுற பழக்கம் கிடையாதே...

  ஆனா குழலவச்சு பிலிம் காமிக்க நிறையபேரு இருக்காங்கப்பா.. நான் குறிப்பிட்டு பேரச் சொல்லப்போயி பிரச்சனையாயிடப் போகுது.. வேணாம்...


 4. G.Ragavan said...

  பாட்டு ரொம்பச் சரியா வந்திருக்கு. இதத்தான் ஒரு பாட்டுல

  தண்ணியப் போட்டா சந்தோஷம் பிறக்கும்
  தள்ளாடி நடந்தா ஜின்னின்னு இருக்கும்
  என்னென்ன கவலை என்னென்ன வருத்தம்
  எப்போதும் வாழ்க்கை நல்லாருக்கும்
  ஓ பார்வதி
  பார்வதி அல்ல தேவதாஸ்
  சந்திரமுகி நான் சந்திரமுகி
  லக்கலக்க லக்கலக்க லக்கலக்க லக்கலக்க


 5. ramachandranusha said...

  ஏண்டாப்பா ராமனாதா, இப்படி ஆளு ஆளுக்கு "பின்" நவீனத்துவ எழுத ஆரம்பிச்சா எப்படி? ஜீராஆஆஆ நீயும் செட்டுல சேர்ந்தாச்சா நற நற நற :-)


 6. பினாத்தல் சுரேஷ் said...

  அன்புத் தம்பி இராமநாதா..

  உன் கவிதையின் கருத்துக்கள் மிக ஆழமானவை என்பதால் அதைப் படிப்பதைத் தவிர்க்கிறேன்!

  புகழ்பெற்ற திரைப்பாடலின் வரிகளில் விளையாடியிருப்பதால் காப்பி இரைட்டு கா பிரைட்டு காப்பு உரைட்டு பிரச்சினை வராம பாத்துக்க.. அவ்வளவுதான் சொல்வேன்.


 7. துளசி கோபால் said...

  'தெரியல'யில் வந்திருக்கறது 'புரியல'

  எல்லாருக்கும் ஒரே பதில்தான் கேட்டோ:-)


 8. G.Ragavan said...

  // துளசி கோபால் said...
  'தெரியல'யில் வந்திருக்கறது 'புரியல'

  எல்லாருக்கும் ஒரே பதில்தான் கேட்டோ:-) //

  என்ன டீச்சர் இது! நாங்க மட்டும் எல்லாம் புரிஞ்சிக்கிட்டா பின்னூட்டம் போடுறோம். ஏதோ குத்துமதிப்பா எதையோ தட்டி விட்டுக்கிட்டிருக்கோம். அம்புட்டுதேய்ங்.

  // ramachandranusha said...
  ஏண்டாப்பா ராமனாதா, இப்படி ஆளு ஆளுக்கு "பின்" நவீனத்துவ எழுத ஆரம்பிச்சா எப்படி? ஜீராஆஆஆ நீயும் செட்டுல சேர்ந்தாச்சா நற நற நற :-) //

  நீங்க வேற உஷா. பின்நவீனத்துவத்துல ஒன்னும் புரியாத நிலையில புரியாத மாதிரி ஒரு பின்னூட்டம் போட்டா அது பின்(னூட்ட)நவீனத்துவம் ஆயிருது பாருங்க. அதுதான் நான் செஞ்சிருக்குறது.


 9. மணியன் said...

  ?:(


 10. ramachandranusha said...

  துளசி,பதிவுலகின் சூப்பர் ஸ்டார் நீங்க, எல்லா எடத்துலையும் புரியலை புரியலைன்னா சொல்லாம புரிஞ்சா மாதிரி பேச ஆரம்பித்தால் உங்களுக்கு புரிஞ்சி போச்சுன்னு எல்லாருக்கும் நினைச்சி ஏதோ அவங்க எழுத நாமும் எழுத பின்னுட்டமோ பதிவோ இதுதாண்டா பின் நவீனத்துவம் என்று பலரும் கொண்டாடி நாமும் இலக்கியவாதி அந்தஸ்தை எட்டிப் பிடிக்கலாம் என்று முகமூடி பதிவில் இலவசம் போட்ட பின்னுட்டம் பார்த்து நானும் தெரிந்துக் கொண்டதாய் பாவித்து அதை எப்படி செயல் படுத்தலாம் என்று நேற்றில் இருந்து மனதில் எண்ணம் நினைவில் ஆட, இன்று ராமநாதனின் உப்பு பெறாத இந்த பதிவில் உங்க பின்னுட்டம் பார்த்து உள்ளே தூங்கிக்கிட்டு இருந்த சிங்கம் வெளியே வந்து, விட்டேனோ பார் என்று வெளியே வந்துவிட்டது.
  பி.கு தாயே, தெய்வமே, மிஸ். தமிழ் மன்னிக்கவும்.
  பி.பி.கு இலவசம் நான் பாஸா :-)


 11. இலவசக்கொத்தனார் said...

  உஷா நீங்க பெயில்தான்.

  முதலில் சிம்பிளான காரணம். எல்லா வார்த்தைகளுக்கு இடையே கேப் இருக்கு. அது மட்டும் இல்லாம கமா என்கின்ற வஸ்து அடிக்கடி பல்லில் அகப்படுது.

  இரண்டாவது எழுதியிருக்கிற வார்த்தைகள் ஒன்றுக்கொன்று தொடர்புடைய மாதிரித் தெரியுது. மூன்று வரி எழுதினாலும் நாலு விஷயத்தைச் சொல்லற மாதிரி ஃபீலிங்ஸ் ஆப் தி இந்தியாவா இருக்கணும்.

  மூன்றாவது பொருட்குற்றம். இந்த மாதிரி எல்லாம் எழுதினா இலக்கியவியாதி பட்டம் கிடைக்காது பின்நவீனத்துவவியாதி (போஸ்ட் மாடர்னிஸ்ட்)என்ற பட்டம்தான் கிடைக்கும்.

  நான்காவது இந்த மாதிரி எழுதும் போது நேரா பேர் போட்டு எழுதினா பிரம்மஹத்தி தோஷம் வரும். ஆஸி அருகாமையில் பேசிப் பேசிப் பாடம் நடத்திடும் பெருமாள் கோயில் பச்சை இலை மாதாமகி.. இப்படி எழுதணும்.

  ஐந்தாவது திரும்பி நீங்க படிச்சுப் பார்க்கணும். எங்க எல்லாம் கொஞ்சம் புரியற மாதிரி இருக்கோ அங்க எல்லாம் வார்த்தைகளை மாத்திப் போடணும். நீங்க எழுதி இருக்கிறது எனக்கே புரியற மாதிரி இருக்கு. இது ரொம்பப் பெரிய தப்பு.

  ஆறாவது, இந்த மாதிரி பி.கு. போடறது எல்லாம் அந்தக்காலம். இப்போ எல்லாம் டிஸ்கி போடணும். பி.கு. எல்லாம் போட்டா உங்க பழமைவாத முகம் பல்லிளிக்கும்.

  டிஸ்கி 1: நீங்கள் தலைவர் பதிவில் என்னை பெயில் ஆக்கியதற்கும், இங்கு நான் உங்களுக்கு பெயில் மார்க் போட்டதுக்கும் எந்த தொடர்பும் இருப்பதாக கற்பனை வேண்டாம்.

  (இன்னும் ஒரு விஷயம் இருக்கு. உங்களை மாதிரி என்னை மாதிரி ஆளுங்களோட அளவு கோல் படி நாகரிகம் குறைவாக நினைக்கப் படும் வார்த்தைகள் சில தூவி இருக்க வேண்டும். ஆனால் அது சொன்னாலும் நீங்கள் செய்யப் போவது இல்லை என்பதால் சொல்லவில்லை!)


 12. ramachandranusha said...

  இலவசம், எழுதி கிளிக்கிய பிறகு பார்த்தா எனக்கே புரிஞ்சிடுச்சு நான் பெயினு. டிரெயினிங் போதாது, கொஞ்சம் மெனக்கெட்டா இ.வாதி பட்டம் வாங்கிடலாம்னு பார்த்தா "நல்ல வார்த்தை" பிரயோகங்கள் எனக்கு வாராதே :-(


 13. துளசி கோபால் said...

  அடப் பாவிகளா?

  காந்து புட்டின தேசத்துக்காரியை இப்படி 'உண்மை' பேசவிடமாட்டீன்றீங்களே.

  நாலு நாள் ஈஸ்டர் விழாவை முடிச்சுக்கிட்டு அப்புறம் உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்போறேன்.
  அப்பத் தெரியும் நான் பாஸாபெயிலான்னு.

  திஸ்கி போடணுமுன்னா போட்டுக்கறேன்.

  சிரிப்பான்கள் ஏதும் இல்லாததை கவனிக்கணும்.


 14. இராமநாதன் said...

  ஜிரா,
  இந்த மேட்டர்ல நீர் ஒரு அறியாப்புள்ளன்னு எனக்குத்தெரியும்...

  ஆனா உம்ம பின்னூட்டக்கவுஜையப் பாத்தா வேற யாரும் அத நம்புவாங்களான்னு எனக்குத் தெரியல்லியேப்பா! தெரியலியே!!!!


 15. இராமநாதன் said...

  உஷாக்கா,
  "பின்" னுங்கறத மட்டும் கோட்ஸுக்குள்ள போட்டதுக்கு பின்னாடி எதுனாச்சும் *னவீணத்துவ மீனீங் இருக்கா?

  ஜிரா எப்பவுமே நம்ம செட்டுதான்! ஆனா சொந்தச் செலவுல சூனியம் வச்சுக்கறதுல ஜீரவுக்கு ஜீராதான்னு இதுமூலமா இன்னொருதடவை நிருபணமாகுது.


 16. இராமநாதன் said...

  பெனாத்தலாரு,
  //கருத்துக்கள் மிக ஆழமானவை என்பதால் //
  கருத்துகள்லாம் ஆழமாகனும்னா அலெஜான்ரோரின்னாரிட்டு படம்பார்த்த மப்பிலஒருகைல ஈடல்வைஸ்ஸும் ஒரு கைல நீகுழலும் மருந்துக்கும்யோசிக்காமதானா உள்ள ஏறுனமப்புஇன்னும்இறங்காதநேரத்து நிலைமைல இருக்கலாம் இல்லாமலும் போகலாம்: ஆனாலும்கிட்டத்தட்டஅந்தமாதிரிபலதையும் பிச்சுப்போட்டபில்போர்ட் டாப்10னைகலெக்ட்செய்யும் ஆளின் இயந்திரத்தனமானமூளைவேலை செய்யும் இயந்திரத்தனத்தின்பலகூறுகள் ஒருங்கேஇணையப்பெற்றால்அந்தநவீன த்துவ யோன நிலைய அடையலாம்னுபலபெயர்கூற முடியாதபெரியவர்கள்சொல்லிட்டு போயிருக்காங்கசொல்றாங்ககேட்டுக்கறேன்.


 17. இராமநாதன் said...

  // காப்பி இரைட்டு கா பிரைட்டு காப்பு உரைட்டு பிரச்சினை வராம பாத்துக்க.. அவ்வளவுதான் சொல்வேன்.//
  காப்பி லாட்டேமாச்சோகாப்பூச்சினோ பூச்சிகாட்டினியோபிச்சிபுடுவன் இப்படீன்னுமெண்டில்லாமஎண்ட்மூலமாவெளிப்படுற எல்லத்தையுமே சேத்துகிட்டா திரிசங்குபெற்றசொர்கம் இந்திரனாளும் தந்திரார்ய சொர்க்கமா மாறுமே ஞானத்தங்கமே!


 18. இராமநாதன் said...

  அக்கா,
  //எல்லாருக்கும் ஒரே பதில்தான் கேட்டோ:-)//

  எல்லாக்கேள்விக்கும் பதில் நாந்தான் தெரியலன்னுசொல்லிகினே அலன்ஞ்சாலும் அதேகேள்விய கேட்டுகினேஆறு பில்லியன்பேரு திருஞ்சாலும் ஒருத்தருக்குமட்டும் எல்லாத்துக்க்குமே விடதெரிஞ்சிருஞாலும் அந்தாளுலூசப் போலநாந்தான்யா கடவுளுன்னு ரியோடிஜனேய்ரோ மேலநின்னு கத்தினாலும் யாருமேஅவர்சொல்றத கேட்காத கலிகாலமின்றதால எல்லாதுலயும் நமக்கு பதிலதெரியலன்னே ஷொல்லிக்கலாமில்லியோ?


 19. இலவசக்கொத்தனார் said...

  //காப்பி லாட்டேமாச்சோகாப்பூச்சினோ//

  கருப்பாய் இருப்பதால்தானே எஸ்பிரஸ்ஸோவை காணும்? தெரியும் தெரியும் உங்கள் வெள்ளைக்கான மோகம்! என்ன இருந்தாலும் அது உம்ம ரத்தத்தோட கலந்ததாச்சே.

  மாச்சோ - ஆமாம் ஆணாதிக்க வாதி என்பதையும் காண்பிக்க வேண்டுமல்லவா? உமக்கெதிரா எங்க மகளிரணியைத்தான் போராட விடணுமய்யா.

  //பூச்சினோ பூச்சிகாட்டினியோபிச்சிபுடுவன்//

  பூச்சி எங்கிருக்கும் செடிகொடிகள் இருக்கும் இடத்தில். எப்படியாவது பூங்காவைத் தாக்காமல் இருக்க முடியாதா? அந்த நக்கி இந்த நக்கி எல்லாம் வந்து பதிலடி கொடுத்து நீங்கள் ரிஜெக்ட் பண்ண வேண்டுமென்பதுதான் ஆசையா? எப்பய்யா திருந்துவீங்க?

  //இப்படீன்னுமெண்டில்லாமஎண்ட்மூலமாவெளிப்படுற//

  யாரைப் பார்த்து மெண்டல் அப்படின்னு சொல்லற? உனக்கு பிடிக்காததை எழுதினா அவன் மெண்டலா? 3000 வருஷம் படிப்பில்லாம இருக்கிறவன் இன்னிக்கு அந்த அளவு எழுதறானேன்னு அறிவு வேணாம்?

  இந்த பாருங்க! தலைவர் என்னமோ மூத்திரம் பத்தி எழுதச் சொன்னாரு. ஆனா அதுக்காக நீரு மூலத்தின் வழியாக என்று எல்லாம் சொல்வது எங்கள் நாகரிக அளவுகோலின் படி சரியில்லை சொல்லிட்டேன்.

  //திரிசங்குபெற்றசொர்கம் இந்திரனாளும் தந்திரார்ய சொர்க்கமா //

  திரிசங்கு கோட்டா கேட்டாருன்னு அவரை இந்திரன் இருக்கிற சொர்க்கத்துக்குள்ளவே விடாத பயலுங்க. இப்போ அவரு மூலமா வரதை சேர்த்துக்கிட்டாருன்னா அவர் இருக்கற இடம் அந்த சொர்க்கம் மாதிரி ஆவுமா? அப்பக் கூட திரிசங்கு உங்க சொர்க்கத்துக்கு உள்ள விட மாட்டீங்களா? உங்களை எல்லாம் என்ன வேணாலும் சொல்லலாமய்யா!

  டிஸ்கி 1: இந்த மாதிரி யாரு என்ன உளறினாலும் அதில் குறிப்பிட்ட சில விஷயங்களாகவே தோணணும். அப்புறம் அதுக்கு காரமா பதில் போடணும். இதுவும் பின்நவீனத்துவவியாதிக்கு ஒரு அறிகுறி.

  டிஸ்கி 2: அறிகுறி - இந்த மாதிரி சாதாரண தமிழ் சொல்லிற்கும் நடுவில் ஸ்பேஸ் விட்டுப் படிச்சு தப்பா பொருள் எடுத்துக்கொண்டால் அதுக்கு நான் பொறுப்பாளி அல்ல. நீங்க கேண வீணாப் போனத் துவ வியாதி ஆகறீங்கன்னு அர்த்தம்.


 20. இராமநாதன் said...

  ஜிரா,
  //ஏதோ குத்துமதிப்பா எதையோ தட்டி விட்டுக்கிட்டிருக்கோம். அம்புட்டுதேய்ங்.
  //
  ஹி ஹி.. அதேதான் நானும் சொல்றேன். யாராச்சும் நம்புனாத்தானே???

  // பின்நவீனத்துவத்துல ஒன்னும் புரியாத நிலையில புரியாத மாதிரி ஒரு பின்னூட்டம் போட்டா அது பின்(னூட்ட)நவீனத்துவம் ஆயிருது பாருங்க. //

  நோ கமெண்ட்ஸ்!!!


 21. இராமநாதன் said...

  மணியன்,
  கேள்வியில் கொக்கி இருக்கா? இல்ல கேள்வியே கொக்கியா? இது தான் பி.ந. பின்னூட்டமில்லியா?


 22. இராமநாதன் said...

  கொத்தனாரின் புண்ணூட்டம் பி.ந லெவல் 10ல் இருப்பதால் இப்போதைக்கு ஸ்கிப் செய்ய்ப்படுகிறது


 23. somasundaram said...

  சூஊ ப்பரா பாட்டு கட்டறீங்க!
  சென்னை போனீங்கன்னா வாலி க்கு சங்கடம்...


 24. கீதா சாம்பசிவம் said...

  mmmm, saw so many people were debating. come after sometime and read it again and will comment on it. this is only an attendance visit.


 25. Hariharan # 03985177737685368452 said...

  //"தென்னமரக்கீத்து ஆடுது! நரியொண்ணு என்மேல ஓடுது!
  நாய்வேற வீணாப்பாயுது!" அட இதானே வாணான்றது?//

  "இருந்தும் இல்லாமல் இரு"என்ற சித்தர் தத்துவத்தை நினைக்க வைத்த வைர வரிகள்.!!

  எல்லாமே தமிழில் வார்த்தைகளாக இருந்தும்,உருப்படியான பொருள் வெளிவரவில்லை!

  பின்நவீனத்துவம்னா Erruption of excentric thoughts exchanged in exotic erring language eclipsing eventual facts just for the sake of explicit excitement என்பது எனது புரிதல்

  எவராலும் ஏன் பின்நவீனத்துவப் படைப்பைப் படைத்தவனாலேயே கூட திரும்பத் தன்படைப்பை ஒத்துக்கொள்ளமுடியாத அளவுக்கு Short time memory loss ரேஞ்சுக்கு மறக்கடிக்கும் பத்மவியூகமாகத் தொடர்பற்ற சுழலாகத் தோன்றும் எண்ணங்களின் வார்த்தைச் சிதறல்கள்
  பின்நவீனத்துவம்!

  மலச்சிக்கல் இருப்பவன் லேகியம் தின்று அதன்விளைவாக தன் எக்ஸ்டிரா எபிஷியண்ட் அவுட்புட்டைக் கண்டு நம்பாத மாதிரி சித்தாந்தச்சிக்கலால் விளையும் எண்ணங்களின் அடைப்பு திடீரெனெ டிரெயினெக்ஸ் எபெக்ட்டில் அடைப்புக்கான மாசுக்களுடன் வந்து விழும் வார்த்தைகளும் பின்நவீனத்துவம் எனலாம்!

  இதால நான் பின்நவீனத்துவத்தைப் புரிஞ்சுக்கிட்டவன்னு அர்த்தம் இல்லை:-))


 26. அபி அப்பா said...

  நான் இங்க தான் ஒரு ஓரமா உக்காந்து எல்லா கூத்தையும் பாத்துகிட்டு இருக்கேன்!


 27. பினாத்தல் சுரேஷ் said...

  லெவல் 10 ஆக இருந்தால் என்ன? ராம்ஸு, நீ பயந்தாலும் நான் பிரிச்சு மேய்கிறேன்!

  //கருப்பாய் இருப்பதால்தானே எஸ்பிரஸ்ஸோவை காணும்? தெரியும் தெரியும் உங்கள் வெள்ளைக்கான மோகம்! என்ன இருந்தாலும் அது உம்ம ரத்தத்தோட கலந்ததாச்சே.//

  எத்தனையோ பேரை விட்டுவிட்டு ஓடும் எக்ஸ்பிரஸ்கள் பிடிக்காததால் மட்டுமே எஸ்பிரஸ்ஸோவை விட்டார் மருத்துவர் அய்யா. உங்கள் திரித்தலுக்கு வேறிடம் பாருங்கள் இலவசம்!

  //மாச்சோ - ஆமாம் ஆணாதிக்க வாதி என்பதையும் காண்பிக்க வேண்டுமல்லவா? உமக்கெதிரா எங்க மகளிரணியைத்தான் போராட விடணுமய்யா.//

  மாச்சோ என்றாலே ஆண்மட்டுமே நினைவுக்குவரும் நீங்கள் ஆணாதிக்கவாதியா? மாச்சோகாப்பூ என்பதை மாச்சோக ஆப்பு என்று பிரித்து அர்த்தம் எடுக்க பெண்ணியத்தைக் கொட்டிப் பிழிந்து எழுதிய மருத்துவர் ஆணாதிக்கவாதியா? அதென்னவோ சொல்வாங்களே -- ஒருவிரல்.. மூணுவிரல்.. யோசிங்க!

  ////பூச்சினோ பூச்சிகாட்டினியோபிச்சிபுடுவன்//

  பூச்சி எங்கிருக்கும் செடிகொடிகள் இருக்கும் இடத்தில். எப்படியாவது பூங்காவைத் தாக்காமல் இருக்க முடியாதா? //

  மருத்துவர் என்ன சொல்கிறார் என்ற குறைந்தபட்சப் புரிதல்கூட இல்லாமல் எழுதும் உங்களை நினைத்தாலே கோபம் வருகிறது! பூச்சிகள் இருக்கும் இடத்தை பூச்சிகாட்டினாலே பிச்சுபோடுவேன் என்ற தார்மீகக்கோபம் உங்களுக்கு புரியவில்லையா?

  மிச்சத்தை அப்பாலே பிரிச்சு மேய்கிறேன்.


 28. தருமி said...

  //அபி அப்பா said...
  நான் இங்க தான் ஒரு ஓரமா உக்காந்து எல்லா கூத்தையும் பாத்துகிட்டு இருக்கேன்!//

  வேறென்ன செய்ய முடியும் அ.அ.?

  ஆனா இத நீங்க கூத்து அப்டின்கிறீங்க, இல்லியா? நீங்க சொன்னா சரி...


 29. Chinna Ammini said...

  அபி அப்பா, திரும்பிப்பாருங்க. உங்களுக்குப்பின்னாடி உக்காந்து கூத்தை வேடிக்கை பாக்குரது நாந்தானுங்க.


 30. அபி அப்பா said...

  //வேறென்ன செய்ய முடியும் அ.அ.?

  ஆனா இத நீங்க கூத்து அப்டின்கிறீங்க, இல்லியா? நீங்க சொன்னா சரி... //

  ஒரு பி.ந.வநக்கம் வச்சுகிறேன் தருமி ஐயா, இது ஒரு கூர்மை னவீநத்துவ கூத்து, என்நால சும்மா வேடிக்கைதான் ப்ஆக்க முடியும்:-)


 31. அபி அப்பா said...

  //Chinna Ammini said...
  அபி அப்பா, திரும்பிப்பாருங்க. உங்களுக்குப்பின்னாடி உக்காந்து கூத்தை வேடிக்கை பாக்குரது நாந்தானுங்க.//

  பார்த்தேன் சின்ன அம்மனி! அழுதுகிட்டே உக்காந்து இருந்தீங்க, அதனால டிஸ்டர்ப் செய்யலை!


 32. இலவசக்கொத்தனார் said...

  ஒருவரின் பெனாத்தலுக்கு வந்த பெனாத்தலான பின்னூட்டத்தைத் வைத்துப் பெனாத்தலான கேள்விகள் எழுப்பும் பெனாத்தலாரே!

  //திரித்தலுக்கு//

  திரித்தல் என்று சொல்லி என்னைக் கட்டம் கட்டி முத்திரை குத்தும் உங்கள் வியூகம் எனக்கு நன்றாகவே புரிகிறது. எதற்கெடுத்தாலும் இப்படி விதண்டாவாதம் செய்வதே உமக்கு வேலையாய் போய்விட்டதே.

  அல்லது

  //வேறிடம் பாருங்கள்//

  என்ன இருந்தாலும் எங்கும் செல்லாமல் அருமை நண்பர் மருத்துவர் ஐயாவின் வலைப்பூவில் வந்து கும்மி அடிப்பது பொறுக்காமல், என் பதிவில் பின்னூட்டங்கள் விழவில்லையே என பொதுவில் அரற்றியது போதாமல், அப்படியும் பின்னூட்டங்கள் வருவதற்கு வாய்பில்லாமல் போய், அதன் பின் பின்னூட்டங்கள் வாங்கும் அனைவரையும் எதிரியாகப் பார்த்து, அதிலும் 20 பின்னூட்டங்கள் என்ற உயரெல்லை வைத்துக் கொண்டு, அதனைத் தாண்டும் வலைப்பூக்களில் சென்று அந்த வலைப்பூக்கள் அன்றி வேறிடம் பார்க்கச் சொல்லும் உங்கள் பாசிஸ மனப்பான்மை பளிச்சென்று தெரிகிறதே. பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டதே!!

  டிஸ்கி : இந்த மாதிரி சம்பந்தமில்லாம ஒரே ஒரு வார்த்தையை மட்டும் out of contextஆ எடுத்துக்கிட்டு ஒரு பதிவையே ஹைஜாக் பண்ணுவதும் இந்த கலையின் ஒரு பகுதி!


 33. இலவசக்கொத்தனார் said...

  //மாச்சோகாப்பூ என்பதை மாச்சோக ஆப்பு என்று பிரித்து அர்த்தம் எடுக்க பெண்ணியத்தைக் கொட்டிப் பிழிந்து எழுதிய மருத்துவர் ஆணாதிக்கவாதியா? அதென்னவோ சொல்வாங்களே -- ஒருவிரல்.. மூணுவிரல்.. யோசிங்க!//

  அண்ணா பெனாத்தலாரே. போன பின்னூட்டத்தில் நான் எதாவது தப்பா சொன்னா மன்னிச்சுக்குங்க. எனக்கு புரிதல் இல்லாததுனால அப்படிச் சொல்லி இருப்பேன்.

  ஆனா மாச்சோக ஆப்பு எனச் சொல்லி பெண் ஈய வியாதிகளின் பக்கம் ஒரு விரலைக் காண்பித்து தன் பக்கம் மூன்று விரல்களைத் திருப்பி,உனக்கு ஒரு மடங்கு சோகம் என்றால் எனக்கு மூன்று மடங்கு சோகம் என தன் ஆணாதிக்க முகத்தைக் காண்பித்த மருத்துவரின் 'முகமூடி'யைக் கிழித்து எறிந்துவீட்டீர்களே! சபாஷ் அண்ணா சபாஷ்!


 34. இலவசக்கொத்தனார் said...

  பெனாத்தலார், உங்களை என்னால புரிஞ்சுக்கவே முடியலையே. முதலில் நான் சொல்வதுக்கு மறுப்பு சொல்வது போல் இருந்தது. அடுத்து பார்த்தால் நான் மருத்துவரை ஆணாதிக்க வியாதி எனச் சொன்னதை ஆழமாக சொன்னது புரிந்தது. இப்பொழுது என்னவென்றால் வலைப்பூவுக்கே புதுசு மாதிரி பேசறீரு. என்னது என்னவா?

  //குறைந்தபட்சப் புரிதல்கூட இல்லாமல் எழுதும் உங்களை நினைத்தாலே கோபம் வருகிறது//

  குறைந்த பட்ச புரிதல் வேணுமா எழுத? எந்த காலத்தில் ஐயா இருக்கீர்? இன்றைக்குப் பதிவெழுதும் பாதி பேர் பிழைப்பில் மண் அள்ளிப் போடுவது என்று ஒரு முடிவாகவே இருக்கீரா? இதெல்லாம் நீரா பேசறீரா இல்லை யாராவது சொல்லிக் குடுத்தா? புரிதல் வேணுமாம் புரிதல். வந்துட்டாரு பெருசா நீட்டி முழக்கிக்கிட்டு. வேலையைப் பார்த்துக்கிட்டு போவீரா....


 35. இராமநாதன் said...

  கொத்ஸு,
  பொடிமட்டையினதிருப்பை கருப்பையிலேயே குப்பையிலே எறியத்துடித்துடும் ஆணாதிக்க அல்லக்கைகளின்முகமூடியை கிழித்தெறிந்து அவைபறந்துஅன்ரோமெராவில் விழுந்தசத்தம்கேப்கானாவெரலிலும்பைக்கானூரிலும் இளஞ்சிவப்புநிற சுண்டுவிரல்களிலும் தெறிக்கின்றநொடிப்பொழுதில் இப்பதிவிற்குமாணாதிக்கசிந்தனைக்குமான ஒப்பீடு காம்பிளிக்கும்ரம்பாவினது முட்டிக்குமான சம்பந்தத்தை போன்றதென்பதால் பி.ந. லெவல் 10 என்றுவகைப்படுத்தினேன்; அருமை நண்பர்பினாத்தலாரும் வந்துபிரித்துமேய்ந்துஉறுதிசெய்துவிட்டுவிட்டார்.இனி எல்லாமேயாமறியேன் பராபரமே!


 36. இராமநாதன் said...

  சித்தன்,
  வாலிக்கு சங்கடமென்றால் சாக்ரமெண்ரோவில் போய் வார்த்தைப்பிழைப்புநடத்தி சல்லாபம்செய்யட்டுமே! நமக்குஎன்ன கேடு?


 37. இராமநாதன் said...

  கீதா சாம்பசிவம்,
  பம்பரமாய் பட்டையடித்து பாம்பணிந்த பரதேசியாம் தங்கள் பெயரிலுள்ள பரமசிவனே தானியற்றிய முதல் பின்நவீனத்துவகவிதையை (கொங்குநேர் வாழ்க்கை...) தமிழிலே இயற்றியதாக கட்டுக்கதைகள் பலவலையும் வேளையில் தாங்கள் அன்னிய ஆதிக்கவெறியின் வெளிப்பாடாய் ஆங்கிலத்தில் உள்ளேன் ஐயா சொல்லவந்ததன் பின்னுள்ள சங்கத்தரசியாம் தங்களின் நுண்ணரசியல் புரியாத வழவழா கொழாகொழா கீரைமசியல் அல்ல நாங்கள் என்பதை தெரிவிக்கவேண்டியதான கார்யம்!

  பைதிவே, இறையனாரின் 'சங்ககால தமிழ் பி.ந. கவிதை' இதோ:

  கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி
  காமம் செப்பாதுகண்டது மொழிமோ
  பயிலியதுகெழீஇய நட்பின் மயிலியல்
  செறியெயிற் றரிவைகூந்தலின்
  நறியவும் உளவோநீயறியும் பூவே.


 38. இராமநாதன் said...

  அபியப்பா (இப்படித்தான் எழுதணும் :))))
  //நான் இங்க தான் ஒரு ஓரமா உக்காந்து எல்லா கூத்தையும் பாத்துகிட்டு இருக்கேன்!//

  இதைக்கூத்து என்று சொல்வதன்மூலம் என்னையும் பின்னூட்டமிடுபவர்களையும் கூட்டாளியாகக் கருதாமல் கூத்தாடியாக கருதவேண்டிய கலாச்சாரகருத்தியல்களில்சிக்கி சின்னாபின்னாமாகிநிற்பதுநாம்தான் என்று அறியாமல் வெடிச்சிரிப்பினல்லது மெல்லியபுன்னகையின் வழியேநமக்காக எரிகின்ற எமலோகஎண்ணெய்ச்சட்டியில் நாமே காரட்டும் வெங்காயமும் நறுக்கிப்போட்டு கூடவே காரத்திற்கு மிளகாய்ப்பொடியை மேலே தூவிக்கொள்ளும் பரிதாபநிலையில் சிரிக்கும்உயிர்களின் நினைவுவருவதால் இதோடு நிறுத்திக்கொள்கிறேன்.


 39. இராமநாதன் said...

  மிகுந்த யோசனைக்குப்பிறகு இவ்விஷயத்தைக் குறித்த தனிமடல் உரையாடலை பகிர்ந்துகொள்ளலாம் என்று முடிவெடுத்துள்ளேன். சம்பந்தப்பட்டவரிடமிருந்து ஒப்புதல் வாங்கவேண்டியது அவசியமற்றது என்று நான் கருதுவதால் (ஏன்னா. மெயில் இருக்கிறது என் இன்பாக்ஸில். அது என்னோடதுன்னு தானே அர்த்தம்??)

  இதோ அந்த உரையாடல்
  ---------

  Reply
  Reply to all Reply to allForward Forward Print Add Email to Contacts list Delete this message Report phishing Show original Message text garbled?
  from: Jobs swapn143@gmail.com hide details Apr 2 (7 days ago)
  to **********@***.***
  date Apr 2, 2007 4:26 PM
  subject Blog reading jobs for Indians
  mailed-by hovercraft.yourmailinglistprovider.net
  Blog Reading Jobs for Indians in Internet
  Read Blogs and Earn Rs.20000 Every month

  Blog Readers are in Huge Demand. Read this website carefully to understand the Concept of Making money by Reading Blogs.

  Act Today and Start Earning Money.

  Click here to know How to Earn by reading Blogs

  http://www.freewebs.com/netjobs


  Change email address / Leave mailing list
  Hosting by YourMailingListProvider


 40. இராமநாதன் said...

  பெனாத்தலார்,
  இனி உம்மை மைக்ரோஸ்கோபிக் பொடிமட்டை பிரிக்கும் டிபார்ட்மெண்டுக்கு ஹெட்டாக நியமிக்க தலைவருக்கு சிபாரிசுசெய்யலாம் என்று இருக்கிறேன். இதுக்கு மேல பிரிச்சுமேய ஒண்ணுமேயில்ல என்றுதான் சிற்றறிவுக்கு படுகிறது.


 41. இலவசக்கொத்தனார் said...

  //இதுக்கு மேல பிரிச்சுமேய ஒண்ணுமேயில்ல என்றுதான் சிற்றறிவுக்கு படுகிறது.//

  சிற்றறிவு அப்படின்னு நீர் சொன்னது சரிதான். ஏன்னா அவர் சொன்னதையும் பிரிச்சு மேய்ஞ்சுட்டேமே. :)))

  டிஸ்கி: ஆனா அந்த பதவிக்கு அவர்தான் பொருத்தம். அதில் மாற்றுக் கருத்து இல்லை.


 42. Anonymous said...

  http://www.freewebs.com/netjobs


  Not available now :(


 

வார்ப்புரு | தமிழாக்கம்