192. இருதிருவருளர் உதித்தனர்... உலகம் உய்ய!

இந்த நாள் உன் காலண்டர்ல குறிச்சு வச்சுக்கொள்! ஏன்னா இன்னிக்கு வாழ்க்கைல மறக்கமுடியாத நாள்! உன் விதியவே மாத்திப்போட்ட நாள்!

என்னென்னவோ செஞ்சுகிட்டிருக்கற நாம இன்னிக்கு.. இப்போ... டுடே கூடி கும்மியடிக்க இருப்பது எதுக்காக???

1. வலையுலக ஆன்மிக செம்மல் குமரன் இன்று திருவருளால் பூமியில் அவதரித்த நாள்!

2. பினாத்தலார் என்னும் இளங்(கிழச்)சிங்கம் பொறந்து உனக்கும் உங்க அப்பத்தாவுக்கும் தேதி குறித்த நாள்!

'நான் மனிதன்! நீ மிருகம்'னு கடவுளே பிறப்பில் பிரிச்ச நாள்!


இவ்விருவரும் பமகவின் இருபெரும் சொத்துக்கள்...ஆழ்கடல் காணா முத்துக்கள்...சேந்தனைச் சேரும் பக்தாக்கள்... சர்ரெனப் பாயும் தோட்டாக்கள்...மலையும் முழுங்கும் போக்தாக்கள்...தொடுவோரை பதம்பார்க்கும் கூர்முட்கள்.. வாள்வாளெனும் கொடுவாட்கள்.. மொத்தத்தில் எங்கள் படுவாக்கள்..எதிர்த்தவர் மேலெல்லாம் பத்துகள்....!

இவர்களை வாழ்த்த காய்ந்த காக்காக்கள் வேண்டாம்.. சோர்ந்த சோதாக்கள் வேண்டாம். வெறும் பனைமரக் கள் போதும். வாருங்கள்! வாழ்த்துவோம்!!

65 Comments:

  1. இலவசக்கொத்தனார் said...

    பிறந்த நாள் கொண்டாடும் இருவருக்கும் பமக சார்பிலும், விக்கி பசங்க சார்பிலும் , வெண்பா குழல் சார்பிலும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    வாழ்த்துக்கள் கும்ஸ் அண்ட் பெனாத்தல்ஸ்.


  2. rv said...

    பிற்சேர்க்கை:
    இவர்கள் ஆகிவிட்டனரா தாத்தாக்கள்???


  3. தருமி said...

    குமரன், சுரேஷ் - இருவருக்கும் அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள். இன்று போல் என்றும் எல்லா நலத்துடன் வாழ வாழ்த்துக்கள்.


    அதுசரி, கொத்ஸு என்னய்யா, வாழ்த்து ஒண்ணும் புரியலை. அதென்ன - வாள்வாளெனும் கொடுவாட்கள்..


  4. இலவசக்கொத்தனார் said...

    தருமி, கேள்வி கேட்கணமுன்னா நாந்தானா மாட்டுனேன். நல்லா பாருங்க. பதிவைப் போட்டது நம்ம டாக்டர். அவரையே கேளுங்க.

    கும்மி விதிகள் படி நீங்க மீண்டும் ஒரு முறை அவர் பெயரைப் போட்டு கேட்கணும். தெரியுமில்ல.


  5. Santhosh said...

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் குமரன் மற்றும் பினாத்தலாரே.


  6. நாகை சிவா said...

    வாழ்த்துக்கள் கும்ஸ்

    வாழ்த்துக்கள் ராம்ஸ்


  7. கதிர் said...

    கவிமட தலைமைச்சீடனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    ஆன்மீக செம்மல் குமரன் நண்பருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    பெனாத்தலாருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லலாம்ணா இங்க டைம் 12 ஆச்சி. இப்ப போன் பண்ணா நல்லா இருக்காது.

    காலைல சொல்லிக்கிறேன்.


  8. நாகை சிவா said...

    ராம்ஸ் இருவருக்கும் நீர் வாழ்த்து சொன்னது சரி தான்.

    ஆனால் கும்ஸ் க்கு மட்டும் கலர் போட்டோ போட்டு விட்டு, எங்க ஆளு பெனாத்துஸ கருப்பு வெள்ளையில் விட்டது நியாயமா?


  9. rv said...

    பெரீய்யப்பா,
    கான் யூ ப்ளீஸ் ரிப்பீட் தி கொஸ்டின்? தேங்க் யூ!


  10. rv said...

    புலி இன்னிக்கு மப்பும் மந்தாரமுமா வந்திருக்கு போல???

    தெளிவா வாருமய்யா!!


  11. நாகை சிவா said...

    வாழ்த்துக்கள் பெனாத்துஸ்

    வாழ்த்துக்கள் ராம்ஸ்


  12. நாகை சிவா said...

    //புலி இன்னிக்கு மப்பும் மந்தாரமுமா வந்திருக்கு போல???

    தெளிவா வாருமய்யா!! //

    யாம் தெளிவாக தான் உள்ளோம். உமக்கு என்ன பிரச்சனை அதை கூறும் முதலில்....


  13. rv said...

    பெனாத்தலார் பொறந்த காலத்துல கலர்போட்டோ இருந்துச்சானு என்னைய கேட்க வக்காத புலி!


  14. நாகை சிவா said...

    //பெனாத்தலார் பொறந்த காலத்துல கலர்போட்டோ இருந்துச்சானு என்னைய கேட்க வக்காத புலி! //

    அப்ப இருந்து இருக்காது என்பது எனக்கு மட்டும் தெரியாதா என்ன? இப்ப புடிச்சு போடலாம்ல, அதை ஏன் செய்யல என்பது தான் என் கேள்வி!


  15. rv said...

    பதிவுல இருக்கிற பெனாத்தலார வாழ்த்தாம எனக்கு வாழ்த்து பின்னூட்டம் போட்டுட்டு பெனாத்தல் ரைட்ஸ் பத்தி பேசுறியே! ஞாயமா???


  16. நாகை சிவா said...

    //அதுசரி, கொத்ஸு என்னய்யா, வாழ்த்து ஒண்ணும் புரியலை. அதென்ன - வாள்வாளெனும் கொடுவாட்கள்.. //

    தருமி அய்யா, என்னது இது பழக்கம், பதிவ படிச்சா அனுபவிக்கனும், ஆராயக் கூடாது, அதிலும் ராம்ஸ் பதிவை கூடவே கூடாது....


  17. நாகை சிவா said...

    //பதிவுல இருக்கிற பெனாத்தலார வாழ்த்தாம எனக்கு வாழ்த்து பின்னூட்டம் போட்டுட்டு பெனாத்தல் ரைட்ஸ் பத்தி பேசுறியே! ஞாயமா???//

    ராம்ஸ் கள்ளாட்டம் ஆடக் கூடாது.

    கும்ஸ்க்கு ஒரு வாழ்த்து

    உமக்கு ஒரு வாழ்த்து

    அது ஒரு பின்னூட்டம்

    அடுத்து

    பெனாத்துஸ் க்கு ஒரு வாழ்த்து

    உமக்கு ஒரு வாழ்த்து

    அது மற்றொரு பின்னூட்டம்

    அதை வெளியிட வேண்டும்

    அப்பால வந்து நான் விளக்கம் சொல்லுறேன்


  18. துளசி கோபால் said...

    நல்ல தூக்கத்துலே இருக்கர என்னை எழுப்பி 'வாழ்த்து வாழ்த்து'ன்னா என்னாப்பா செய்யறது?

    "எங்கிருந்தாலும் வாழ்க.......... உன் இதயம் அமைதியில் வாழ்க..........."

    அய்யய்யோ......... பொறந்தநாளா?

    ட்யூனை மாத்திறலாம் இப்போ.

    பிறந்த நாள் இன்று பிறந்த நாள்

    பதிவர்கள் ( பினாத்தல் & குமரன்) எல்லாம் ...........களாக மலர்ந்தநாள்...........

    ஹேப்பி பர்த்டே டூ யூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ


  19. rv said...

    அந்த ரெண்டாவது பின்னூட்டம் பவுன்ஸ் ஆயிடுச்சா??


    அடடா இப்ப பின்னூட்டமமல்லாம் கூட பவுன்ஸ் ஆகுது போல???


  20. rv said...

    //இப்ப புடிச்சு போடலாம்ல, அதை ஏன் செய்யல என்பது தான் என் கேள்வி!//

    குயிலப்புடிச்சு கூட்டிலடைச்சு கூவச்சொல்கிறது உலகம்!!!


  21. நாகை சிவா said...

    //அடடா இப்ப பின்னூட்டமமல்லாம் கூட பவுன்ஸ் ஆகுது போல??? //

    ஆயிடுச்சா, இல்லை நீர் ஆக்கிட்டீரா?


  22. rv said...

    அக்கா,
    //...........களாக மலர்ந்தநாள்...........//

    இந்த பில்-அப்-தி-ப்ளான்க்ஸ் ரொம்ப ரிஸ்கியான ஆட்டமாச்சே?

    திருவையாத்துக்கு ஒரு தர்மஸம்வர்த்தினி! அவள் அறம்வளர்த்தநாயகி!

    நியுஸிக்கு 'கமெண்ட் கலாசம்வர்த்தினி'.. ஒரு 'பின்னூட்ட கலைவளர்த்த நாயகி'!

    எல்லாப்பதிவுகளையும் ரட்சித்துக்காக்கும் மாதாமகி! வாழ்க நின்பெருமை!

    இவண்,
    க-கலா-ச-னி தாஸன்! :))))


  23. நாகை சிவா said...

    பெனாத்தல் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சியால் நீர் பின்னூட்டத்தை மறைத்து இருக்க கூடும் என்று எண்ணுவதால் இது அடுத்த பின்னூட்டம்.

    வாழ்த்துக்கள் பெனாத்துஸ்

    வாழ்த்துக்கள் ராம்ஸ்


  24. rv said...

    சரி.. ரிலிஸிட்டேன்.. போனாப்போவுது!


  25. நாகை சிவா said...

    எப்ப போட்ட பின்னூட்டத்தை எப்ப ரிலீஸ் பண்ணுறீர்.... இது எல்லாம் நல்லாவா இருக்கு... அப்படி என்ன உமக்கு பெனாத்துஸ் மேல் காண்டு!!!


  26. rv said...

    அவுட்லுக்கோட அவுட்லுக்கே சரியில்ல.. திடீர்னு ஜன்க்னு தூக்கி கடாசிடுது. குப்பையெல்லாம் தேடி பொறுக்கிவந்த எனக்கு அவப்பேரா???? ஐயகோ! இதைப் பெனாத்தலார் படித்தால் அவர் மனம் துணுக்குறுமே!


  27. நாகை சிவா said...

    நீர் ரொம்பவே கள்ளாட்டம் ஆடுறீர். இந்த ஆட்டத்துக்கு நான் வரல....

    நான் ஜுட்


  28. rv said...

    அட புலி,
    நான் குப்பைன்னு சொன்னது அவுட்லுக் குப்பையில தூக்கிப்போட்ட மாணிக்கத்த..

    உன் பின்னூட்டத்த பேட் பின்னூட்டம்னு நான் சொல்வேனா???

    கா விட்டா நல்லாவா இருக்கு?


  29. குமரன் (Kumaran) said...

    இராம்ஸ்,

    வாழ்த்துகளுக்கு நன்றி. அது சரி. நான் எப்ப பமகவுல சேர்ந்தேன்? எனக்கே தெரியாம எப்ப சேத்துக்கிட்டீங்க?

    பெனாத்தல் சுரேஷ் அண்ணனும் இன்னைக்குத் தான் பொறந்தார்ன்னு இதுவரை தெரியாதே. அவர் பொறந்தது மார்ச்சு 28ஆ 29ஆ?

    If this duplicate please ignore.


  30. குமரன் (Kumaran) said...

    இதுவரை பிறந்த நாள் வாழ்த்துகள் சொன்ன எங்க ஊர் பெரியவர் தருமி ஐயா, சந்தோஷ் தம்பி, நாகை புலி, தம்பி ஐயா, பின்னூட்டக்கலையரசி துளசியக்கா எல்லோருக்கும் - இனி மேல் வந்து பிறந்த நாள் வாழ்த்துகள் சொல்லப்போகும் அனைவருக்கும் மிக்க நன்றி.

    பெரியவங்க ஆசிர்வாதமும் தம்பி தங்கைங்க வாழ்த்தும் தான் வாழ்க்கையை மலரவைக்கின்றன.


  31. குமரன் (Kumaran) said...

    இராம்ஸு, ஒரு பக்கம் மகிழ்ச்சின்னாலும் இன்னொரு பக்கம் இந்த இடுகையைப் பாத்து கடுப்பா இருக்கு. என் பதிவுல வர வேண்டிய பின்னூட்டங்கள் எல்லாத்தையும் 'ஹைஜாக்' பண்ணிட்டீங்களே?! :-(

    ச்ச்சும்மா... கும்மியடிக்கிறதுக்கு நேரம் இல்லை. நீங்களாவது என் ஜாய்.


  32. rv said...

    பர்த்டே பாய்,
    //நான் எப்ப பமகவுல சேர்ந்தேன்? எனக்கே தெரியாம எப்ப சேத்துக்கிட்டீங்க?//
    என்ன அநியாயமா இருக்கு? ரெண்டு ஆன்மிக செம்மல்களும் பமகவை அவமானப்படுத்தணும்னே சுத்துறீங்களா?

    அந்தாளு என்னடான்னா யாரு தலன்னு கேக்ககறாரு.. நீர் என்னடான்னா எப்ப சேர்ந்தேன்னு கேக்குறீங்க..

    மே 2006 எலெக்ஷன் கூத்துல கட்சி மாறி மன்றத்தை கலைச்சதெல்லாம் மறந்திடுச்சா???


  33. rv said...

    //If this duplicate please ignore.//
    நீங்களே உங்களுக்கு டூப்ளிகேட் வேற போட்டுப்பீங்களா?

    இவர்கள் உள்ளேயிருப்பது பல ஆத்மாக்கள் னு ஆட் பண்ணிக்கலாமா? தயவு செய்து ஒகேனா ஓகே சொல்லவும்!


  34. குமரன் (Kumaran) said...

    கட்சிப்பணியே செய்யாததால மறந்து போச்சு. சரி. போனால் போகட்டும். வழக்கம் போல தள்ளி நின்னே பாத்துக்கறேன் உங்கள் கட்சியின் கூத்துகளை. :-)

    வந்தார் குமரன் வழிகாட்டியாய் நம்மிடையே
    தந்தார் நமக்கெல்லாம் தம்திறனே - இந்நாளில்
    எங்களை ஏளனமாய்ப் பார்த்தவர் மூக்கறுத்தே
    சங்கத்துள் சங்கமிக்க வா

    இன்னொரு தடவை கொத்ஸ் எழுதுன இந்த வெண்பாவை படிக்க வாய்ப்பு கொடுத்ததுக்கு மிக்க நன்றி.


  35. இலவசக்கொத்தனார் said...

    //இராம்ஸ்,

    வாழ்த்துகளுக்கு நன்றி.//

    //பெரியவர் தருமி ஐயா, சந்தோஷ் தம்பி, நாகை புலி, தம்பி ஐயா, பின்னூட்டக்கலையரசி துளசியக்கா எல்லோருக்கும் - இனி மேல் வந்து பிறந்த நாள் வாழ்த்துகள் சொல்லப்போகும் அனைவருக்கும் மிக்க நன்றி.//

    குமரா, என் மீது என்ன கோபம். எனக்கு மட்டும் நன்றி இல்லையா? நான் என்ன பாவம் செய்தேன். போன பிறந்த நாளுக்கு பாட்டு எழுதினேன், இந்த பிறந்த நாளுக்குப் பதிவைப் பார்த்து எழுதினேன். என் கடமையை நான் செய்யவில்லையா? ஐயகோ என்ன கொடுமையிது? குமரனே கைவிட்டால் யாரிடம் செல்வேன்?


  36. குமரன் (Kumaran) said...

    கொத்ஸ். ரொம்ப புலம்பாதீங்க. உங்களுக்கு நன்றி என் பதிவுலேயே சொல்லியாச்சு. சரி. இன்னொரு தடவை சொல்லியே தீரணும்ன்னு அடம்புடிச்சா சொல்றேன். :)

    நன்றி நன்றி நன்றி


  37. இலவசக்கொத்தனார் said...

    ஐ! நல்ல கதையா இருக்கே. அது அங்க சொன்ன வாழ்த்துக்கு. இது இங்க சொன்ன வாழ்த்துக்கு. சொல்லலைன்னா கேட்டு வாங்கிடுவோமில்ல.


  38. வல்லிசிம்ஹன் said...

    வாழ்த்துக்கள் குமரன்.
    வாழ்த்துக்கள் சுரேஷ்.
    இன்றும் என்றும் வளமோடும்,வாழ்வோடும் சிறக்க வாழ,வளர வாழ்த்துகள்.
    சொன்ன மருத்துவருக்கும் நன்றி.


  39. வடுவூர் குமார் said...

    திரு.குமரன் & திரு.சுரேஷ் இருவருக்கும்
    என்னுடைய வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.


  40. Kannabiran, Ravi Shankar (KRS) said...

    பினாத்தலாரே பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
    - இராமநாதன் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நீங்க இளஞ்சிங்கம் தானுங்க!
    அதுவும் சாதா இளஞ்சிங்கம் இல்லை!
    கூர்வேல் கொடுந்தொழிலன் இளஞ்சிங்கம் :-)

    குமரன், பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!
    பங்குனி உத்திர விழாவோடு,
    இராம நவமி விழாவோடு,
    பதிவுலகில் அகில உலக ஆன்மீக சூப்பர் ஸ்டார் பிறந்த நாள் விழா!

    கொத்ஸ், Birthday Bump எல்லாம் இல்லையா? :-)


  41. இலவசக்கொத்தனார் said...

    //கொத்ஸ், Birthday Bump எல்லாம் இல்லையா? :-)//

    என்னங்கடா அக்குறும்பு இது? கேள்வி கேட்க ஆளே இல்லையா? அவங்க பொறந்த நாளுக்கு எனக்கு Birthday Bumpஆ? இதெல்லாம் உங்களுக்கே ஓவராத் தெரியலை?


  42. Unknown said...

    வாழ்த்துக்கள் குமரன்... கொஞ்சம் லேட்டாத் தெரிஞ்சுப் போச்சு இல்லன்னா நேத்து நம்ம கச்சேரி செய்தியாளர்கள் புதரகம் பக்கமும் அனுப்பி குமரன் பிறந்த நாளையும் கவ்ர் பண்ணியிருப்போமே...


  43. இராம்/Raam said...

    எங்கள் மருத தங்கம் அண்ணன் குமரனுக்கும் பாலைவன புயல் நட்பு சுனாமி சுரேஷ் அவர்களுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.....


  44. rv said...

    கொத்ஸு,
    //சொல்லலைன்னா கேட்டு வாங்கிடுவோமில்ல.//

    ஆனாலும் ஆறாம் கிளாசுலேயே நிக்கிறயா!!! அடுத்தது என்ன? குமரன் உங்க லப்பரையும் பென்சிலையும் எடுத்துட்டு தரமாட்டடேனுட்டாரா???


  45. rv said...

    //சொன்ன மருத்துவருக்கும் நன்றி.//
    என்னையும் வாழ்த்திய வல்லியம்மாவிற்கு நன்னி!

    கே.ஆர்.எஸ்,
    பர்த்டே பம்ப் போடணும்னா மானசீகமாத்தான் போடணும். ஆங்கில பண்பாட்டுவழக்கமான இதுக்கு தமிழ்நாட்டுல என்னபா ஈக்குவலண்டு?


  46. குமரன் (Kumaran) said...

    வாழ்த்திய அன்பு நெஞ்சங்கள் இராமநாத கொத்ஸ், வல்லி அம்மா, குமார் சார், சங்கரநாராயணனான இரவி'சங்கர்' 'கண்ணபிரான்', விண்மீன் தேவ், ததாவை பலமுறை தாத்தாவாக்கிய தம்பி இராம் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி.


  47. பினாத்தல் சுரேஷ் said...

    நண்பா.. நாகை சிவா! இந்த வஞ்சப்புகழ்ச்சியையும் உள்குத்துகளையும் சரியாக அடையாளம் கண்ட தோழா.. உனக்கும், மருத்துவரின் சூழ்ச்சி புரியாமல் வெள்ளந்தியாக வாழ்த்திய உள்ளங்களுக்கும் நன்றி. சக மார்ச் உடன்பிறந்தான் குமரனுக்கும் வாழ்த்துகள் (நான் 28)!

    உள்குத்துகள் என்ன என்று இன்னும் கேட்கும் தூய்மனத்தோருக்கு:

    1. இளங்(கிழச்)சிங்கம் பொறந்து
    2.'நான் மனிதன்! நீ மிருகம்'னு
    3.வாள்வாளெனும் கொடுவாட்கள்..
    4.எங்கள் படுவாக்கள்
    5.வெறும் பனைமரக் கள் போதும்.

    பதில் சொல்லுங்கள் மருத்துவரே! சற்று அசந்த நேரத்தில் நம்பர் 2 வாக கொத்தனாரால் பின்வாசல் வழியாக ஆக்கப்பட்டவரே!


  48. rv said...

    பெனாத்தலார்,
    உங்களுக்குத் தெரியாததா? உள்குத்து இல்லாத அரசியல் ஒரு அரசியலா?

    // சற்று அசந்த நேரத்தில் நம்பர் 2 வாக கொத்தனாரால் பின்வாசல் வழியாக ஆக்கப்பட்டவரே!//
    என்னை நம்பர் 2 வாக ஆக்கியது நம் தலிவர். கொத்தனார் இல்லை. இல்லேன்ன கொத்தனார் தான் முகமூடின்னு எதுனாச்சும் குத்து வக்கறீங்களா?


  49. பினாத்தல் சுரேஷ் said...

    தலைவர் அண்ணா மாதிரி ஆயிட்டார்:-)

    ஆளையே காணோம், அவர் அதைச் சொன்னாரு இதைச் சொன்னாருன்னு ஆளாளுக்கு எதெதையோ சொல்லிகிட்டு அலையறீங்க!!


  50. பினாத்தல் சுரேஷ் said...

    //கொத்தனார் தான் முகமூடின்னு எதுனாச்சும் குத்து வக்கறீங்களா? //

    இங்க பாரு ராம்ஸ், நான் மனிதன்!!! பருந்தோ நட்டுவாக்காலியோ இல்லை -- கிசுகிசு சொல்ல!


  51. பினாத்தல் சுரேஷ் said...

    முதல் முறையாக 50 போட்ட பினாத்தலுக்கு ஒரு பொதுக்கூட்டம் போடத் தயாரா ஆயாச்சா?


  52. நாகை சிவா said...

    //பதில் சொல்லுங்கள் மருத்துவரே! சற்று அசந்த நேரத்தில் நம்பர் 2 வாக கொத்தனாரால் பின்வாசல் வழியாக ஆக்கப்பட்டவரே! //

    கருமம், இந்த ஆக்கப்பட்டவரே என்பதை வாக்கப்பட்டவரே என்று படித்து தொலைத்து விட்டேன்.

    சாரி ராம்ஸ் & கொத்துஸ்


  53. நாகை சிவா said...

    //இங்க பாரு ராம்ஸ், நான் மனிதன்!!! பருந்தோ நட்டுவாக்காலியோ இல்லை -- கிசுகிசு சொல்ல! //

    அப்ப சாம்பும் மனிதம் இல்லைனு சொல்லுறீங்க..... ஏன் இந்த கொல வெறி... பினாத்துஸ்.


  54. நாகை சிவா said...

    //நண்பா.. நாகை சிவா! இந்த வஞ்சப்புகழ்ச்சியையும் உள்குத்துகளையும் சரியாக அடையாளம் கண்ட தோழா.. //

    உம்முடன் அளவாடிய சில மணி துளிகளிலே உம்ம வெள்ளை மனம் எனக்கு புரிந்து விட்டது பெனாத்துஸ்

    அதே வேளையில் இவருடன் தொல்லைப்பேசியில் அளவாடிய சில மணி நொடிகளிலே இவரின் நயவஞ்சகம் எனக்கு புலப்பட்டு விட்டது.

    (நயவஞ்சகம் உம்மக்கு மட்டும் தான்)


  55. rv said...

    //இந்த ஆக்கப்பட்டவரே என்பதை வாக்கப்பட்டவரே என்று படித்து தொலைத்து விட்டேன்.//

    கருமம் கருமம். பின்வாசல்னு அவர் எதோ கோக்குமாக்க சொல்ல அதவச்சு இப்படி அசிங்கபடுத்திறியே புலி.

    இருந்தாலும் ஒரு வீடு இருக்கு. ஆனா இருவாசல் இல்லியே. அதுனால பின்வாசல் வழியா நுழைஞ்சு நம்பர் 2 ஆகிட்டேன்னு நினைக்கிறேன். :))


  56. இலவசக்கொத்தனார் said...

    சின்ன மருத்துவர் ஐயா அவர்களே, பமகவின் கொபசவாகிய பெனாத்தலார் அவர்களே, நீங்கள் இருவரும் ஒரு பதிவில் பரஸ்பரம் குசலம் விசாரித்து எவ்வளவு காலம் ஆகிவிட்டது. கட்சிப்பணியாற்ற ஆளுக்கு ஒரு திசை சென்றுவிட்டீர்கள். அதனால் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு குறைந்துவிட்டது. உங்கள் இருவரின் டபுள்ஸ் ஆட்டம் பார்த்து நாளாகிவிட்டது எனத் தலைவரிடம் என் போன்ற அடிமட்டத் தொண்டர்கள் முறையிட்டதால் தலைவரே, பெனாத்தலாரின் பிறந்த நாளையும் ஆன்மீக சூப்பர் ஸ்டார் குமரனின் பிறந்த நாளையும் ஒரு சேரக் கொண்டாடி எழுச்சி நாள் என ஒரு கொண்டாட்டத்தையும் சேர்த்து முப்பெரும் விழாவாக கொண்டாடப் பணித்து இருக்கிறார்.

    ஒரு தலைவருக்கு இன்னொரு தலைவர் பிறந்த நாள் போஸ்டர் அடித்து ஒட்டும் ஒற்றுமைக் கலாச்சாரம் நம்மிடையே இருப்பதை பறைசாற்றும் வகையில் சின்ன ஐயா அவர்களே இந்த விழாக் கொண்டாட்டத்தை முன்னின்று நடத்தி வருகிறார்.

    இந்த முப்பெரும் விழா பெரும் வெற்றியடைய என் போன்ற தொண்டர்கள் பாடுபடுவோம் என சூளுரைத்து இன்றைய கொண்டாட்டங்களைத் தொடங்கி வைப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.


  57. இலவசக்கொத்தனார் said...

    சின்ன ஐயா கொடுத்த உரலை இடித்து வந்த பதிவைப் படித்தீரா? பமகவின் களப்பணியில் ஈடுபட எத்துணை கோடி பேர் ஆவலாக இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டீர்களா? அத்தனை பேரின் ஆசைக்கும் நாம் ஒரு வடிகால் தர வேண்டாமா? அன்றைக்கே அத்துணை பேர் இருந்தால் இன்று அதற்கும் மேல் பல கோடி தொண்டர்கள் கட்சியில் இணைந்து இருக்கின்றனரே. அவர்களுக்கு தங்கள் விசுவாசத்தைக் காண்பிக்க ஒரு சந்தர்ப்பம் கொடுக்க வேண்டாமா?

    ஆகவே ஒரு மாபெரும் பேரணி ஒன்றை நடத்துவோம், வரலாறு காணா பொதுக்கூட்டம் ஒன்றினைக் கூட்டுவோம்.

    வாழ்க பமக. வளர்க ஒற்றுமை.


  58. குமரன் (Kumaran) said...

    கொத்ஸ் சொல்றதைப் பாத்தா கொண்டாட்டமே இனிமே தான் தொடங்குற மாதிரி இருக்கே. கிழிஞ்சது போங்க.


  59. rv said...

    புலி,
    இத்தன பேரோட அளவாடினா 'A Tiger? in Africa?'னு பைத்தான் வசனம் நினைவுக்கு வரும் அதேவேளையில் எஸ்.டி.டியும் நினைவுக்கு வந்துதொலைக்கிறது.

    உங்களிடம் எஸ்.டி.டி பெசிலிடிஸ் இருக்கென்றால் நாங்கள் தள்ளி இருந்து எங்கள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.


  60. rv said...

    //அத்தனை பேரின் ஆசைக்கும் நாம் ஒரு வடிகால் தர வேண்டாமா?//
    அத்தனை பேரும் பின்வாசல் வழியே வந்தால் நாடு தாங்குமா நாம்தான் தாங்குவோமா என்று தயவுசெய்து ஒருநொடி சிந்திக்கவும் கொத்ஸு.


  61. இராம்/Raam said...

    /ததாவை பலமுறை தாத்தாவாக்கிய தம்பி இராம் அனைவருக்கும் நன்றி நன்றி நன்ற//

    ஹி ஹி சாரி ததா :))


  62. இராம்/Raam said...

    கமெண்டை வெச்சு் மாடு ஓட்டுறத தூக்கியாச்சா டாக்டரு???


  63. rv said...

    மாடு ஓட்டறது நிறுத்தியாச்சுப்பா.. நடுவுல யாராவது ஆட்டோ ஓட்டாம இருக்கணுமே..

    அதான் ஜாக்கிரதையா இருக்க வேண்டியிருக்கு. :((

    அப்புறம் இந்த மாடு, ஆடு ஓட்டறதெல்லாம் நிறுத்தினா பட்டையக் கழட்டிடுவாங்களா?


  64. ஜெயஸ்ரீ said...

    குமரன், சுரேஷ் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!


  65. முகமூடி said...

    பதவியால் தம்பியாக இருந்தாலும் வயதால் பெரியப்பாக்களாக இருவருக்கும் கள/கிழ சிங்கங்கள் இருவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

    // ஒரு தலைவருக்கு இன்னொரு தலைவர் பிறந்த நாள் போஸ்டர் அடித்து ஒட்டும் // ஒரு உரையில் ஒரு வாள்தான் இருக்க முடியும். குறுவாளாக இருந்தாலும் அது ஒரே வாளோடு ஒப்பிட முடியாது. அது போல ஒரு கட்சிக்கு ஒரு தலைவர்தான் என்பதை இந்த நேரத்திலே கட்சியின் நிரந்தர நம்பர் # வுக்கு சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்..

    ஆளுங்கட்சிக்கு ஆப்பு வைக்க சென்றதாலும் தொடர்ந்து வித்விதமாக ஆப்பு வைப்பதிலேயே நேரம் சரியாக இருப்பதாலும் கட்சி அலுவலகத்தில் சரியாக கவனம் செலுத்திட முடியவில்லை. அடுத்த வாரம் முதல் மீண்டும் பமக புத்துயிர் பெறும் என்பதை சொல்லிக்கொள்ள இந்த நேரத்திலே... (யப்பா ஒரு ஜோடா குடுங்கப்பா)


 

வார்ப்புரு | தமிழாக்கம்