இன்னைக்கு தமிழ்நாட்டுல புதுசா வெளி வர படங்க ரெண்டு நாள் ஓடினாலே வெற்றிகரமான ரெண்டாவது நாள் அப்படின்னு போஸ்டர் போட்டுக்கும் போது, ரெண்டாவது வருஷம் தொடர்ந்து மொக்கைப் பதிவுகளாப் போட்டு தள்ளிக் கொண்டிருக்கும் நம்ம டாக்டர் இராமநாதனுக்கு வாழ்த்துக்கள்!
ரெண்டு வருஷ நிறைவை சும்மா ஒரே ஒரு மொக்கைப் பதிவைப் போட்டு கொண்டாடினாப் போதுமா, அட்லீஸ்ட் ரெண்டு மொக்கைப் பதிவாவது போட வேண்டாமா அப்படின்னு கேட்ட நம்மளையே எழுதச் சொல்லிட்டாரு. இதைத்தான்யா நம்மாளுங்க சொ.செ.சூ வைச்சுக்கறது அப்படின்னு சொல்லறாங்க. சரி வாக்கு குடுத்துட்டோமேன்னு ரெண்டு வார்த்தை எழுதலாமுன்னு நினைச்சா அதுக்கே ரெண்டு நாள் ஆயிடுச்சு போங்க. சரி எழுதறதை எழுதியாச்சு, நீங்களும் ஒரு தடவைக்கு ரெண்டு தடவை படிச்சிட்டு, செய்ய வேண்டியதைச் செஞ்சுட்டுப் போங்க!
இந்த ரெண்டு அப்படிங்கிற நம்பர் இருக்கே. அது ரொம்ப கலக்கலான நம்பருங்க. நான் சொன்னா நம்பிக்கை இல்லைன்னா நம்ம முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கிட்ட கேட்டுப் பாருங்க. ஒரு நம்பர் டூவுக்கு உண்டான அருமை பெருமை எல்லாம் அவர் சொல்லுவாரு. அவரு கிடைக்கலைன்னா பெர்மனெண்ட் நம்பர் டூ பேராசிரியரைக்கூடக் கேட்கலாம். ஆனா இப்போ அவங்க ரெண்டு பேரும் இல்லாததுனால நானே சொல்லறேன்.
இந்த 2 என்ற வடிவம் எப்படி வந்தது தெரியுமா? முற்கால இந்தியர்கள் இரண்டு என்பதை = என இரு சமக்கோடுகள் கொண்டு எழுதினார்களாம். (விக்கிபீடியா இந்திய பிராமணர்கள் என எழுதி இருக்காங்க. நாந்தான் சேஃபா இந்தியர்கள் அப்படின்னு மாத்திட்டேன். ஏற்கனவே நமக்கு பல பட்டப் பெயர்கள். அந்த பயம்தான்). இன்னைக்கும் சைனாவிலும் ஜப்பானிலும் இரண்டை இப்படித்தான் எழுதறாங்களாம். இதையே கொஞ்சம் மாத்தி ரோமேனியர்கள் || இப்படி ரெண்டு போட்டாங்க. (யாருடா அது, விவேக் எப்படி ரெண்டு போடுவாருன்னு கேட்கறது? சரியான ரெட்டை வால் ரங்குடுவா இருப்பான் போல இருக்கே!) இந்த இரண்டு கோடுகள் எப்படி 2 ஆச்சுன்னு விக்கிப்பீடியாவில் பாருங்க.
பல சமுதாயங்களில் கடவுளின் படைப்புகள் அனைத்துமே இரண்டு விதமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். சீனர்கள் ஆகட்டும், யூதர்கள் ஆகட்டும் இந்த 'இரண்டு' கருத்தில் மிக நம்பிக்கை கொண்டவர்கள். நம்மவர்களை எடுத்துக் கொண்டாலும் ஆண் - பெண், சொர்க்கம் - நரகம், தேவர் - அசுரர், சைவம் - வைணவம், தென்கலை - வடகலை, ஆரியம் - திராவிடம், சில அரசியல் கட்சிகளின் இந்தக் கூட்டணி இல்லையென்றால் அந்தக் கூட்டணி என பல இடங்களில் இந்த இரண்டு விதங்களை நாம் பார்க்கின்றோம்.
இரண்டு என்ற எண்ணின் கணித சம்பந்தப்பட்ட விஷயங்கள் நிறையா இருக்கு. அது பத்தி பேசற அளவு நமக்கு சரக்கில்லை. அந்த விக்கி பக்கத்துல இருக்கு பாத்துக்குங்க. தமிழில்தான் வேணுமுன்னா சொல்லுங்க, நம்ம ரெட்டை மண்டை (அம்புட்டும் மூளை!) பெனாத்தலாரைக் கேட்க வேண்டியதுதான்.
விக்கியார் மேலும் சொல்லறாரு
- சைனாக்காரங்களுக்கு இந்த 2 ரொம்ப ராசியாம். அதனால அவங்க ஊரில் சாமானுக்கு பேரு வெச்சா இரட்டைப் பாம்பு, இரட்டைப் புலி இப்படிப் பேரு வரா மாதிரிதான் வைப்பாங்களாம்.
- பின்லாந்தில் சுதந்திர தினத்தன்று இரண்டு மெழுகுவர்த்தி ஏத்தி வைப்பாங்களாம். ஒன்று இரண்டாகப் பிரிந்ததை நினைவுபடுத்துவதற்காகத்தான் இப்படி.
- அப்புறம் நம்ம நோவா வந்து மிருகங்களைக் காப்பாத்த ரெண்டு ரெண்டாத்தானே தன் படகுல ஏத்துனாரு.
நம்ம வலையுலகின் மிகப் பெரும் கட்சியான ப.ம.க.வில் அண்ணன் இராமநாதன் தாங்க நம்பர் டூ!!
16 Comments:
நல்ல வேளை என்னமோ ரெண்டு பொண்டாட்டி கதைதான் வெளிய வருதோன்னு நினைச்சேன்.
பன்னீர்செல்வம், பேராசிரியரை எல்லாம் எப்ப பார்த்து இதைக் கேக்கறது?
பேசாம, மன்னன் கேஸெட்டைப் போட்டுப்பாருங்க!
சும்மா, நம்ம ஸூப்பர் ஸ்டார்,"ஒண்ணு பெருஸா, ரெண்டு பெருஸா"ன்னு ஒரு பெரிய டயலாக் வுடுவாரு!
அம்ஸமா இருக்கும்!
வாழ்த்துகள்!
ப.ம.க இன்னும் உசுரோடத் தான் இருக்கா? சொல்லவே இல்ல...
அட என்ன கொத்துஸ் சொல்ல வந்தது வெட்டு ஒன்னு துண்டு "இரண்டு" சொல்லாமா....
இப்ப என்ன "இரண்டு" வருசம் ஆச்சு, வந்ததுக்கு "இரண்டு" கமெண்ட் போட்டு போ அப்படிங்குறத தானே "இரண்டு" மணி நேரமா சொல்லிக்கிட்டு இருக்கீங்க......
அட என்ன கொத்துஸ் சொல்ல வந்தது வெட்டு ஒன்னு துண்டு "இரண்டு" சொல்லாமா....
இப்ப என்ன "இரண்டு" வருசம் ஆச்சு, வந்ததுக்கு "இரண்டு" கமெண்ட் போட்டு போ அப்படிங்குறத தானே "இரண்டு" மணி நேரமா சொல்லிக்கிட்டு இருக்கீங்க......
//ப.ம.க இன்னும் உசுரோடத் தான் இருக்கா? சொல்லவே இல்ல... //
அதானே... அதானே...
//ப.ம.க இன்னும் உசுரோடத் தான் இருக்கா? சொல்லவே இல்ல... //
அதானே... அதானே...
இதுக்கெல்லாம் முன்னாடி, இந்த பதிவு போட இன்ஸ்பிரேஷனா இருந்த பேராசிரியர் பெனாத்தலாருக்கு ஒரு நன்றி சொல்லியே ஆகணும்.
கட்சியின் இந்த நம்பர் டூவுக்கு வாழ்த்துக்கள் சொல்லிப் பதிவு போடக் காரணமா இருந்த அந்த நம்பர் டூவுக்கு என் நன்றிகள்.
ஆமாங்க. பமகவில் நம்பர் ஒன் ஒருத்தர்தான். ஆனா நம்பர் டூவா ரெண்டு பேர் இருக்கக்கூடாதா?
கொத்ஸ்,
எனக்கு இப்போ எல்லாமே 8 8ஆ தெரியுதுங்க :) ஏன்னு புரிஞ்சிருக்குமே?
இரண்டு கமெண்ட்ல முதல்
ரெண்டாவது கமெண்ட்.
:)
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
!!
:)
:)
இப்படிக்கு
இப்படிக்கு
தருமி
த்ருமி
ஆள விடுங்கப்பா !
ஆள விடுங்கப்பா !
அடடே! அப்படியா? அப்ப...நம்பர் டூவான இராமநாதன் யாரோட கால்ல விழனும்னும் சொல்லீருங்க. அதாய்யா...நம்பரு ஒன்னு யாரு?
ஹாய் உங்க ப்ளாக் சிறந்த ப்ளாகாக தேர்வு பெற்றதை கேள்வி ப் பட்டேன் ..வாழ்த்துக்கள்
தனிமடல் இரவி சார்,
ரெண்டு பெண்டாட்டி கதையா? கொத்தனார் க்ளோசட்டில் ஒரு எலும்புக்கூடுன்னு ஒரு திகில்படம் எடுக்கலாம் போலிருக்கே.
எஸ்.கே,
நன்றி.
ஆனா, கட்சிக்குள்ள கலகம் பண்ண பார்க்கறீங்களே. என்னிக்குமே தல ஒண்ணுதான். கைதான் ரெண்டு!
தேவு,
நாங்க அகில பிரபஞ்ச அரசியல்ல பிஸியா இருக்கோமப்பா. ஆனா பாரிஸ் அண்டர்கிரவுண்ட் மாதிரி வேலைகள் நடந்துகிட்டுதான் இருக்கு. அது எங்களத் தெரிஞ்சு பார்க்கறவங்களுக்கு புரியும். ;)
புலி,
இதெல்லாம் என்ன வெளிப்படையாவா கேப்பாங்க. கொத்ஸும் இருக்குற எல்லார் தலையும் சுத்தி மூக்க தொடுறாரு. நறுக்குன்னு கேட்டுபுட்டீரே!
அதானே அதானே ஆடாதேயும். சீக்கிரம் தமிழ் வலைப்பதிவுலகையே பிரட்டி போடப்போகும் பிரம்மாண்ட அறிவிப்பு வெளியாகப்போகிறது.
கொத்ஸு,
பதிவுக்கு ரொம்ப நன்றி. கட்சித்தோழர்கள்னா இப்படித்தான் இருக்கணும்.
பெனாத்தலார் ரொம்ப மிரட்டறாரா? என்ன பின்னூட்டத்துல கூட டிஸ்கி போட வேண்டிய அளவுக்கா நம்ம ஜனநாயகம் வளர்ந்துருச்சு? வெட்ட்ட்ட்கம்!
மணிகண்டன்,
8 8 ஆ தெரியுதா? கோணப்பார்வை தெரியும்.. இதென்னப்பா அஷ்ட கோணல் பார்வையா இருக்கு?
சிறில்,
இரண்டு கமெண்ட்களுக்கு ஒரே கமெண்டாக பதில் சொல்லவேண்டிய அவல நிலையை நினைத்து வெட்கப்படுகிறேன், வேதனைப்படுகிறேன், துக்கப்படுகிறேன். இதுவே முன்னரைப் போலிருந்தால் நீங்கள் தந்த இரண்டுக்கு பத்தே பதில் மரியாதையாக தந்திருப்போம். :(((
பெரீய்யப்பா,
எனக்கு எல்லாமே ரெண்டு ரெண்டாத்தான் தெரியுது. பதிவுக்கு தொடர்பான பின்னூட்டம் இட்ட பெரீய்யப்ப்பாவிற்கு ஒரு ஓ!
ஜிரா,
நான் முதல்ல கால்ல விழவேண்டிய ஆளு நீர்தானய்யா! பின்ன உம்மளப் போயி அகில உலக கர்நாடக மாவட்டத்தலைவரா போட்டோம் பாருங்க. மாவாட்டத்தலைவராட்டம் இப்படியொரு அபாண்டமான கேள்விய வந்து கேக்குறீரு?
கார்த்திக் பிரபு,
தேர்ந்தெடுக்கப்பட்டது பெனாத்தலாரோட பதிவு. நம்மோடது தேர்ந்தெடுக்க பரிந்துரைச் செய்யப்பட்டது. ஹி ஹி. சின்ன வித்தியாசம் தான். இருந்தாலும் உங்க பாராட்ட ஏத்துக்க மனசு வரலை. :))
Post a Comment