காலம் மாறுகிறது - ஒரு கேள்வி

என்னடா இது கேள்வி மேல கேள்வி கேட்டுகிட்டுருக்கானேன்னு யோசிக்காதீங்க. மிகவும் அவசியமான, கேட்கப்படவேண்டிய கேள்வி இது. மக்கள் பலரும் இந்த மாதிரி கேள்வி கேட்டா நம்மகூட இனிமே யாரும் பேசவே மாட்டாங்கன்னு பயந்துகிட்டே பலவாண்டுகளாக கேட்கப்படாமல் இருக்கற கேள்வி இது. கொத்ஸு தான் புதிர் போடற ஆளாச்சே. அவரக் கேப்போம்னா அவருக்கே தீர்க்கமா பதில் சொல்லத்தெரியல.

கேள்வி இதுதான்.

ஒரு பேச்சுக்கு நியுஸிலாந்துல வோட்டு போடும் வயசு 18னு வச்சுக்கோங்க.

இப்போ நியுஸிக் குடிமகனான பையன் ஒருத்தன் அமெரிக்கால லாஸ் ஏஞ்சலீஸ்ல இருக்காரு. அவருக்கு வயசு இன்னைக்கு 17 வருஷம் 363 நாட்கள். சரியா. இன்னிக்கு திங்கள் இராத்திரி 930 மணிக்கு எல்.லே ப்ளைட் புடிச்சு நாளன்னிக்கு புதன் காலை 530 மணிக்கு போய்ச் க்ரைஸ்ட்சர்ச் சேர்ந்துடறாரு. மொத்த விமானப் பயண நேரம் : 12 1/2 மணி நேரம். அதோட நேர வித்தியாசத்தையும் சேத்துப்போம். நியுஸில இறங்குன அன்னிக்கு அவருக்கு வயசு என்ன இப்போ? 18 வயசு ஆச்சா? ஆனா, உண்மையான வயசென்ன? 17 வருஷம் 363 நாள் 12/12 மணி தான். இப்போ நியுஸில தேர்தல் நடக்குதுன்னா இந்த ஆளு வோட்டு போட முடியுமா?

அப்படியே 18 வயசாச்சுன்னு வோட்டு போடவிடறாங்கன்னு வச்சுப்போம். போட்டுட்டு உடனே அடுத்த ப்ளைட்ட பிடிக்கறாரு. புதன் கிழமை இரவு 930க்கு நியுஸிலேர்ந்து கிளம்பி, செவ்வாய்க்கிழமை எல்.ஏக்கு மத்தியானம் மூணு மணிக்கு செவ்வாய்க்கிழமை அன்னிக்கு வந்துடறாரு. இப்போ வயசு 17 வருஷம் 364 நாள் சொச்சம் மணி தான்.

இப்போ கேள்வி என்னன்னா, அவரு நியுஸில போட்ட வோட்டு செல்லுமா?

----
இந்த மாதிரி திடீர்னு ஏன் அறிவுப்பூர்வமா கேக்கறேன்னு நினைக்கறீங்களா. ஒண்ணுமில்ல எங்க ஊர்ல DST ஆப் பண்ணிட்டாங்க. ஒரு மணி நேர தூக்கம் போனதுங்கற கடுப்புல யோசிச்சது.

35 Comments:

  1. பொன்ஸ்~~Poorna said...

    கேள்வியே தப்புங்க.. 21னு சொல்றீங்க.. 18ன்னு சொல்றீங்க.. முன்ன பின்ன தப்பா இருக்கு..


  2. துளசி கோபால் said...

    ராம்ஸ்,

    அதென்னா ஓட்டுப் போட நியூஸிக்கு வர்றது?:-))))

    இதுக்குப் பதில் சொல்ல நாந்தான் சரியான ஆளு( இப்போதைக்கு)

    இங்கே ஓட்டுப்போடும் வயசு 21ன்னு நீங்களே எழுதிட்டு இப்ப பையனுக்கு 17 வயசு சில்லரைன்னா அது என்னா கணக்கு?

    அதை மொதல்லே க்ளியர் பண்ணுங்க. 21 வயசு ஆகட்டும்!

    ரொம்ப 'அறிவுபூர்வமாக்' கேட்டா இப்படித்தான்......


  3. rv said...

    அப்பாப்பா..
    குத்தம் கண்டுபிடிச்சே பேர் வாங்கும்.. சரி சரி..

    இப்ப திருத்திட்டேன்

    இப்ப பூன்ஸ், அக்கா ரெண்டு பேரும் ஒழுங்க என் சந்தேகத்த தீர்த்துவச்சுட்டு போங்க.


  4. துளசி கோபால் said...

    ராம்ஸ்,

    இங்கே 18 வயசுலே ஓட்டுப் போடலாம். எப்படி என்ரோல் செய்யணுமுன்னு எல்லாம் விளக்கமா இருக்கு.

    ஓட்டுப்போடறதுக்கு பாருங்க

    நியூஸி குடிமகளா இருந்துக்கிட்டு உங்களுக்கு உதவலேன்னா எப்படி?


  5. rv said...

    அக்கா,
    படுத்தறீங்களே. :))

    நானா வோட்டு போடப் போறேன்? பாவம், ப்ளைட் ஏறி 24 மணி நேரம் ட்ராவல் பண்ணி வோட்டு போட்டுட்டு வந்த புண்ணியாத்மா வோட்டு செல்லுமா செல்லாதான்னு டென்சன்ல இருக்காரு. அவர முதல்ல கவனிங்க.

    கேள்வியத்தான் சிவப்புல பளிச்சுன்னு போட்டுருக்கேனே. :))


  6. துளசி கோபால் said...

    பேசாம போஸ்ட்டல் ஓட்டுப் போட்டுருக்கலாம்.

    சரி சரி பதில் சொல்றேன். அவர் ஏற்கெனவே என்ரோல் செஞ்சிருக்கணும்.( இல்லேன்னா ஓட்டே போட முடியாது)
    அப்படிச் செஞ்சிருந்தா அந்த ஓட்டு செல்லும்.


  7. ilavanji said...

    ராம்ஸ், இங்க அவனவன் பக்கத்துவீட்டுல இருந்தவன், வெளியூரு போனவன் ,செத்தவன் இன்னும் பொறக்காதன்னு அத்தினி பேருக்கும் ரெவ்வெண்டு ஓட்டு போட்டுக்கிட்டு இருக்கோம்!! நீங்க என்னடானா ஒரு ஓட்டுக்கு ஏரோப்ப்ளேன் போய்வந்த கதையெல்லாம் சொல்லறீங்க!! :)

    ஆமா! உங்களுக்கு ஓட்டுப்போடற வயசாச்சா இல்லையா?


  8. டிபிஆர்.ஜோசப் said...

    துளசி,

    நீங்க என்னங்க.. இராமனாதன் கஷ்டப்பட்டு ராத்திரியில கண் முளிச்சி ஏதோ அறிவுபூர்வமா கேட்டா ஆளாளுக்கு கலாய்க்கறீங்களே.

    சரிங்க.. நீயிசியில என்ரோல் பண்றதுக்கு பதினெட்டு வயசாயிருக்கணுமா?

    இராமனாதன், உங்க கேள்வி உண்மையிலேயே ப்ளெயினானதா இல்ல உள்ளர்த்தம் ஏதாச்சும் (அதாங்க நம்ம உஷா பாணியில சொல்லணும்னா உள்குத்து) இருக்கா?


  9. rv said...

    அக்கா,
    //அவர் ஏற்கெனவே என்ரோல் செஞ்சிருக்கணும்.( இல்லேன்னா ஓட்டே போட முடியாது)
    அப்படிச் செஞ்சிருந்தா அந்த ஓட்டு செல்லும்.
    //
    இப்ப கேள்வியே, அவர் அமெரிக்கா போயிட்டா வயசு வரம்பு ஒத்துவராதே. அதான் மேட்டரு.


  10. rv said...

    இளவஞ்சி,
    //உங்களுக்கு ஓட்டுப்போடற வயசாச்சா இல்லையா?
    //
    இதெல்லாம் வெளியில சொல்ற மேட்டரா? இப்படி பப்ளிக்கா கேக்கறீங்களே.


  11. rv said...

    ஜோசப் சார்,
    நீங்களே கேளுங்க நியாயத்த. எவ்ளோ பெரிய அறிவுப்பூர்வமான கேள்வி. இதுல கிண்டலடிக்கறாங்க.

    உள்குத்துன்னா என்னா சார்?


  12. துளசி கோபால் said...

    என்னப்பா இது இவ்வளவு தூரம் அறிவுப்பூர்வமா இருக்கு! விடமாட்டீங்களே.

    இங்கே ஒருத்தருக்கு 18 வயசு ஆறதுக்கு ஒரு மாசம் முந்தியே கவர்மெண்ட்டுலே இருந்து ஒரு கடிதம் அனுப்புவாங்க.
    அவுங்களுக்கு அதுலேயே ஒரு ஃபார்ம் இருக்கும். பூர்த்தி செஞ்சு அனுப்பிரணும். ஸ்டாம்ப் ஒட்டவேணாம்:-)

    அதுக்கப்புறமும், இந்த நாட்டில் உள்ள ஓட்டுப்போடும் வயதுள்ள எல்லாருக்குமே எலக்ஷன் வரப்போறதுக்கு முந்தி, அதாவது எலக்ஷன் தேதி நிச்சயித்த உடனே
    ஒரு கடிதம் வரும். அதுலெ நாம ஏற்கெனவே கொடுத்த விபரம் எல்லாம் சரியான்னு கேட்டிருக்கும். சரின்னா அதைப் பார்த்துட்டுப் பேசாம இருந்துரலாம்.
    இல்லே அட்ரஸ் மாறி இருக்கு, மத்த விவரம் எதாவது மாறி இருக்குன்னா அதை மாத்தி எழுதி அனுப்பணும். இதுக்கும் தேவையான ஃபார்ம் உள்ளேயெ
    வச்சிருப்பாங்க. ஸ்டாம்பு ஒட்ட வேணாம்.

    அதுக்கப்புறம் எல்லா லைப்ரரிகளிலும் ஓட்டர் லிஸ்ட் வச்சிருப்பாங்க. அதைப்பார்த்து நம்ம பேர் இல்லேன்னா ஒரு டோல்ஃப்ரீ நம்பர் இருக்கும்.அதுக்கு ஃபோன் செஞ்சு
    நம்ம பேரைச் செர்த்துக்கச் சொல்லலாம். இப்பெல்லாம் இது நெட்டுலேயே வந்துருது.

    எலக்ஷன் சமயத்துலே நாம் இங்கே இருக்க மாட்டோமுன்னாலும், வேற காரணத்துக்காக ஓட்டுச் சாவடி போக முடியலைன்னாலும்., ஸ்பெஷல் ஓட்டுப் பிரிவுலே
    ரெண்டு வாரத்துக்கு முன்னாலேயே ஓட்டு போட்டுறலாம். நான் போன முறை இப்படித்தான் போட்டேன். இதுபத்தி
    தினசரிப்பேப்பர்களிலும், கம்யூனிட்டி பேப்பர்( இலவசம்) டிவியிலும் சொல்லிக்கிட்டேஏஏஏஏஏஏஎ இருப்பாங்க.

    இதுலே இருந்து 'நான் பார்க்கலை, தெரியாது'ன்னு சொல்லித்தப்பவே விடமாட்டாங்க:-)

    அதனாலே என்ரோல் பண்ணலேன்னா ஓட்டு கிடையாது.

    இது ராம்ஸ்க்கு,

    இங்கே நியூஸியிலே ஓட்டுப் போடவந்தவனுக்கு இங்கத்து 18 வயசு ஆயிருந்தாப் போதும். அமெரிக்காலே ஆகலேன்னா
    பரவாயில்லை. ஓட்டு நியூஸிக்குத்தானே? அமெரிக்காவுக்கு இல்லேல்லெ.


  13. ரங்கா - Ranga said...

    இராமநாதன்,

    நிஜத்துல இது நடக்க வாய்ப்பில்லை. எந்த ஊரிலுமே, வோட்டர் லிஸ்ட்ன்னு ஒண்ணு தயாரிப்பாங்க. அந்த லிஸ்ட் தேர்தலுக்கு முன்னமே பண்ணுவாங்க - அதற்கு அவங்க ஊர்நேரக் கணக்கு தான் பார்ப்பாங்க. அதால, நிஜ வயசு என்னங்கறது அவ்வளவு முக்கியமானது இல்லை...அவங்க பேரு லிஸ்ட்ல இருக்கா இல்லையாங்கறது தான் முக்கியம்.

    அதே சமயத்தில் உங்க கேள்விக்கு ஐன்ஸ்டினத்தான் கூப்பிடணும். அவர் தான் 'ஸ்பேஸ்-டைம்' பத்தியெல்லாம் ரொம்ப ஆராய்ச்சி பண்ணியிருக்கார்.

    ரங்கா.


  14. டிபிஆர்.ஜோசப் said...

    உள்குத்துன்னா என்னா சார்? //

    ரா.உஷாவுக்குத்தான் தெரியும். அவங்க ஊர்ல இல்ல போலருக்கே..

    வந்ததும் கேட்டுச்சொல்றேன்.


  15. பூனைக்குட்டி said...

    உள்குத்துக்கள்

    ஒரு கல்லில் ஒரு மாங்காய்
    அடித்துதான் பழக்கம்
    விழுந்தால் மாங்காய்
    போனால் ஒரு கல்
    ஒரு கல்லில் நான்கு
    மாங்காய் அடிப்பேன் என்றவனை
    மரியாதையுடன் பார்க்கும்பொழுது
    நான் ஆறு மாங்காய்கள்
    அடிப்பேன் என்றான் இன்னொருவன்
    அந்த சாமார்த்தியங்கள்
    முதலில் பிரமிக்க வைத்தாலும்
    ஒரு கல்லில் பல மாங்காய்கள்
    அடிக்க தலை பிய்த்துக்
    கொள்ள வேண்டும்
    திட்டங்கள் தீட்ட
    பல நாட்கள் தூக்கத்தை
    இழக்க வேண்டும்
    அடிக்க கையில்
    வலு கூட்ட வேண்டும்
    வேண்டாமைய்யா
    ஒரு கல்லில்
    ஒரு மாங்காய்
    அடிப்பதே உத்தமம்!

    எழுதியது உஷா,
    போட்டது நான்.


  16. பரஞ்சோதி said...

    இராமநாதன்,

    இது என்ன பிரமாதம், நான் 15 வயதிலேயே சட்டமன்றம் மட்டுமல்லாது பாராளுமன்றத்திற்கும் ஒட்டு போட்டிருக்கிறேன்.


  17. rv said...

    அக்கா,
    //இங்கே நியூஸியிலே ஓட்டுப் போடவந்தவனுக்கு இங்கத்து 18 வயசு ஆயிருந்தாப் போதும். அமெரிக்காலே ஆகலேன்னா
    பரவாயில்லை. ஓட்டு நியூஸிக்குத்தானே? அமெரிக்காவுக்கு இல்லேல்லெ.//
    சரி சரி.. சும்மா ஒரு வெளாட்டுத்தானே.. ஆனாலும் வயசு ஏறி இறங்குதுங்கறது தமாஷா இருக்கா இல்லியா.. அதுக்குத்தான் இந்தப் பதிவு.

    நியுஸி விதிமுறை விளக்கத்துக்கு நன்றி. ஓட்டு போடாம தப்பிக்கவே முடியாதா?


  18. rv said...

    ரங்கா,
    வாங்க வாங்க.

    //நிஜத்துல இது நடக்க வாய்ப்பில்லை/
    போன பின்னூட்டத்துல சொன்னா மாதிரி கான்செப்ட் வித்தியாசமா இருந்ததால.. சும்மா...

    பின்ன எப்படி வலைப்பதிவ ஓட்டறது?


  19. rv said...

    ஜோசப் சார்,
    //ரா.உஷாவுக்குத்தான் தெரியும். அவங்க ஊர்ல இல்ல போலருக்கே..

    வந்ததும் கேட்டுச்சொல்றேன்.//
    அநியாயத்துக்கு இன்னஸெண்டா இருக்கீங்க சார். :)))


  20. rv said...

    மோகன்தாஸ்,
    என்ன பெரிய விளக்கவுரையே விட்டுட்டுப்போயிருக்காங்களா..

    மறுபதிப்புக்கு நன்றி!


  21. rv said...

    பரஞ்சோதி,
    //நான் 15 வயதிலேயே சட்டமன்றம் மட்டுமல்லாது பாராளுமன்றத்திற்கும் ஒட்டு போட்டிருக்கிறேன்.//
    உங்கள மாதிரி ஆளுங்களால தான் நாலஞ்சு வருஷமாகியும் இன்னும் எனக்கெல்லாம் வாக்காளர் அட்டையே வந்து சேரல. :))


  22. சன்னாசி said...

    இது நினைவுபடுத்திய ஒரு கதை இங்கே


  23. ரங்கா - Ranga said...

    இராமநாதன்,

    இதே ரீதியில் ஒரு புதிர் படிச்சிருக்கேன். ஒரு நிறை மாத கர்பிணி ஒரு கப்பலில் நியூசிலாந்திலிருந்து ஹவாய் போறாங்க. உலக தினக்கோடுக்கு முன்னால் அவங்களுக்கு ஒரு குழந்தை பிறக்குது, அரை மணி கழித்து அவங்க கப்பல் உலக தினக் கோட்டைத் தாண்டின பிறகு இரண்டாவது குழந்தை பிறக்குது (இரட்டைக் குழந்தை). எந்தக் குழந்தை அண்ணன்?

    அதே புத்தகத்தில் இந்த இரண்டாவது புதிர். இரு சகோதரர்களால் நடத்தப் படும் ஒரு கப்பல் கட்டுமானத் துறையில் ஒரு கப்பல் சரி செய்யப்படுவதற்காக முதல் துறைக்கு வருகிறது. அந்தத் துறையில் அண்ணனின் சட்டம் எந்த ஒரு பாகம் கொஞ்சம் சேதமாயிருந்தாலும் மாற்றிவிடுவார். தம்பிக்கு இது பிடிக்கவில்லை. வந்த கப்பலில் எல்லாப் பாகங்களும் கொஞ்சமாவது சேதமாயிருக்கிறது. அண்ணன் ஒவ்வொரு பாகமாக மாற்றிக் கொண்டே வருகிறார். தம்பி அந்த பாகங்களை எல்லாம் எடுத்து சரி செய்து இரண்டாம் துறையில் ஒரு கப்பலைக் கட்டி விடுகிறார். முடிவில் இரண்டு துறைகளிலும் முழு கப்பல் இருக்கிறது. இப்போது கட்டுமானத்திற்கு வந்த கப்பல் முதல் துறையில் இருக்கிறதா? அல்லது இரண்டாவது துறையில் இருக்கிறதா?

    ரங்கா.


  24. பொன்ஸ்~~Poorna said...

    ரங்கா, உங்க கப்பல் கேள்விக்கு பதில்.. கப்பல் சொந்தக் காரருக்கு அனுப்பப் போகிற பில் படி ரெண்டு துறையில் உள்ள கப்பலுமே அவருடையது தான். இதுல அண்ணனைக் கேட்டீங்கன்னா கப்பல் முதல் துறையில் இருக்குன்னு சொல்வாரு.. தம்பிய கேட்டிங்கன்னா, "கட்டுமானத்த்துக்கு வந்த கப்பல் இரண்டாம் துறையில் இருக்கு, என்னோட கப்பல் தான் முதல் துறையில் இருக்கு"ன்னு சொல்லுவாரு..

    ராமனாதன், எப்படியோ.. பதில் தெரிஞ்ச, ஒரு கேள்விக்கு பதிவு போட்டு நேரத்த நல்லா ஓட்டிட்டீங்க..இதுல நான் தப்பு வேற கண்டுபிடிச்சேனே,. என்னை நினைச்சா எனக்கே சிரிப்பா வருது... ம்ம்ம்..


  25. rv said...

    சன்னாசி,
    சுட்டிக்கு நன்றி.

    ரொம்ப பெரிசா இருக்கு. பொறுமையாத்தான் படிக்கணும்.


  26. rv said...

    இரங்கா,
    நீங்க கேட்ட கேள்விகள் எலெக்ஷன் கேள்விய விட நல்லாருக்கு. அப்படின்னு சொல்லி நான் கழண்டுக்கறேன். பின்ன பதில் தெரியாட்டி வேறென்ன செய்யறதாம்? :))

    புதிருக்கு விடையும் சொல்லிட்டு போயிடுங்க. புண்ணியமாப் போகும்.


  27. rv said...

    poons, (தமிழ்ல எப்படி எழுதறதுன்னு சொல்லிடுங்க - போன்ஸா, பொன்ஸா? :) )

    //. பதில் தெரிஞ்ச, ஒரு கேள்விக்கு பதிவு போட்டு நேரத்த நல்லா ஓட்டிட்டீங்க..இதுல நான் தப்பு வேற கண்டுபிடிச்சேனே,. என்னை நினைச்சா எனக்கே சிரிப்பா வருது... ம்ம்ம்..//
    இங்க புதுசா நீங்க? :)) இந்த மாதிரி தத்துபித்துன்னு உளறிதானே ஒருவருஷம் ஓட்டிருக்கேன். அதெல்லாம் கண்டுக்காம பின்னூட்டம் மட்டும் போட்டுட்டு போயிகிட்டே இருக்கணும். :)


  28. துளசி கோபால் said...

    எப்பவுமே இந்தப் 'பொடி' எழுத்துலேதான் இருக்கும் சூட்சமம்.

    அதென்னவோப்பா, நியூஸிக்கு அப்படி ஒரு மகிமை. ரெட்டைக்கொழந்தை பெத்துக்கணுமுன்னாலும் சரி,
    ஓட்டுப் போடணுமுன்னாலும் சரி , ஜனங்க இங்கேதான் வருவேன்னு அடம் புடிக்குதுங்க:-)


  29. துளசி கோபால் said...

    நான்' பூன்ஸ்'ன்னு சொல்றேன். அவுங்கதான் பூனைப் பிரியராச்சே அதாலெ:-)


  30. பொன்ஸ்~~Poorna said...

    எப்படி வேணாலும் சொல்லலாங்க.. இப்படி ஒரு கேள்வி வந்துட்டதுனால, பொன்ஸ்னே என் டிச்ப்லய் நாம்-ஐ மாத்திட்டேன் :)


  31. rv said...

    அக்கா,
    //ஜனங்க இங்கேதான் வருவேன்னு அடம் புடிக்குதுங்க:-) //
    எல்லாம் நீங்க இருக்கீங்களேங்கற தைரியத்துலதான்.

    பூன்ஸா - இன்னொரு பூனை பிடிக்கற ஆளா? இணையம் தாங்காது. :))


  32. rv said...

    பொன்ஸ்,
    அப்பாடா. ஒருவழியா பெயர்க்குழப்பம் தீர்ந்தது..

    பூனை பிடிக்கற ஆளுன்னு அக்கா என்னமோ சொல்றாங்க.. நிஜமாவா?


  33. சுதாகர் said...

    அந்த ஆளு நியூசிலாந்து-ல பிறந்ததுனால, அவரோட வயசு 18 ஆச்சு. அதனால, அவருக்கு ஓட்டு போட உரிமை இருக்கு.


  34. rv said...

    சுதாகர்,
    ஒட்டு போட உரிமை இருக்குன்னு க்ரைஸ்ட்சர்ச் சாமிசெடி அக்காவே தீர்ப்பு சொல்லிட்டாங்க. அப்புறம் ஏது அப்பீல்?

    நீங்களும் அதேதான் சொல்றீங்க. எந்த ஊரு உங்களுக்கு? நியுஸியா?


  35. கலை said...

    இதே அடிப்படியில நான் வேறொரு விஷயத்தை நினைத்துப் பார்த்ததுண்டு.

    திரும்ப பெற முடியாதவற்றுள் ஒன்றாக நேரத்தை சொல்கின்றார்கள். ஆனால் கிழக்கிலிருந்து, மேற்கிற்கு விமான பயணம் செய்யும் ஒருவர் ஒரு சில மணித்தியாலங்களை திரும்ப பெறுகின்றார்தானே என்று தோன்றியிருக்கு. :)


 

வார்ப்புரு | தமிழாக்கம்