142. Unfathomable Zealotry - WP

//In Africa, Asia, too much of the world -- it is Joseph Conrad much of the time: "The horror! The horror!".//

//In our boundless optimism, we consign them to the "too hard" file of horrors we cannot figure out: the Khmer Rouge, the Nazis, the communists of the Stalin period. Now, though, this awful thing returns and it is not just a single country that would kill a man for his beliefs but a huge swath of the world that would not protest. There can be only one conclusion: They were in agreement.//

Unfathomable Zealotry - Richard Cohen - WP

ஒரு குறிப்பிட்ட நாட்டைப் பற்றி கட்டுரையில் சொல்லப்பட்டிருந்தாலும், நம் நாட்டிலும் பல வடிவங்களின் இந்தக் கொடுமைகள் நடந்து வருகிறது. என்று திருந்தப் போகிறோமோ? இதை வெறும் 'வெள்ளைக்காரன் சொல்றான், நாம என்னத்த கேக்கறது, நம் பாரம்பரியம் என்ன, அவனோட கலாச்சாரம் என்ன' என்ற கண்ணோட்டத்தில் இல்லாமல் சிந்திப்பதற்கும் விவாதிப்பதற்கும் நம்மில் பலருக்கு கடினமாக, அதுவும் படித்த தமிழ் இணையத்தில் உள்ளவர்களுக்கே, இருக்கும்போது சாதாரணமான மக்களை பற்றி நினைத்தும் பார்க்க முடியவில்லை. மட்டுறுத்தல் வந்தவுடன் ஓரளவுக்கு குறைந்திருக்கிறதென்றாலும், இப்பவெல்லாம் பதிவர்கள் பதிவுகளிலேயே எழுத ஆரம்பித்துவிட்டனர்.

யார் என்ன எழுதினாலும், சொன்னாலும் உடனே அவன் முப்பாட்டனார் ஜாதகம் வரைக்கும் அலசி ஆராய்ந்து நீ அந்தப்பய மவந்தானே, வேறெப்படி பேசுவ என்று அகழ்வாராய்ச்சி செய்வதிலேயே இவ்விஷயங்களை பேசுவதில் பலனில்லாமல் போய்விடுகிறது.

அது என்ன அவ்வளவு paranoia-வோ? ஏன் மற்ற எல்லாருமே ஒரு டைமென்ஷனல் அஜெண்டாவோடு தான் இயங்குகிறார்கள் என்று ஒவ்வொரு்ம் முடிவு கட்டிக்கொண்டே தொடை தட்டுகிறோம்? இது ஒரு பரவலான வியாதியாகவே இருக்கிறது எனக்குத்தெரிந்த வரைக்கும்.

இன்னொன்று: sanctimonitis. இதன் தொல்லை தாங்க முடியவில்லை. எதைப் பற்றியும் எழுதும்போதும் அப் கோர்ஸ், வரையறை என்பது இருக்க வேண்டியதுதான். அது நிஜமாகவே கருத்துப் பரிமாற்றம் வேண்டும் என்று நினைக்கும் பதிவராக இருந்தால் அவர் பதிவை எழுதும்போதே லக்ஷமண ரேகை எங்கே என்று தெரியும். பின்னால் ஒருவர் வந்து சொல்லித்தான் பதிவின் தீவிரத்தைக் குறைக்க வேண்டும் என்பதில்லை. ஆனால், அப்படிப்பட்ட நியூட்ரலாக எழுதப்படும் பதிவுகளிலும், sanctimonious anonymous clubஇலிருந்து வரும் பின்னூட்டங்களும் பெரும்பாலும் வாதத்தை மேற்சொன்ன பாரனோயா பார்வையுடனே பதிவை படித்ததால் எழுதப்படுகின்றன. அதோடு விட்டாலும் பரவாயில்லையே. அவருக்கு பதில் கொடுக்க அந்தக் கூட்டத்துக்கு தனி எதிர்கோஷ்டி. மொத்தத்தில் சத்தியமூர்த்தி பவன் தான். இவை போதாதென்று தன்னார்வ தொண்டர்களும் சம்பந்தா சம்பந்தமில்லாமல் தனி ஆவர்த்தனம் நடத்துகின்றனர்.

பதிவோ பின்னூட்டமோ யாரைப் பற்றியோ எதைப் பற்றியோ எழுதும்போது எடுத்தவுடனேயே அவன் ஒரு ****** இவன் ஒரு ******** என்று ஏகவசனம், அது ஒரு குப்பை, இதைச் செய்பவன் முட்டாள் என்று ஆரம்பித்துவிட்டுதான் மற்றதே. ப்ரீஜுடிஸ் எல்லாருக்கும் இருப்பதுதான். அது நல்லவிதமாகவோ கெட்டவிதமாகவோ இருந்துவிட்டு போகலாம். ஆனால், நமக்கு கெடுதல் என்று தோன்றுவது அடுத்தவருக்கு நன்மையெனத் தெரியலாம். அதற்கு அவருக்கு தனிப்பட்ட சமூகக் காரணங்கள் இருக்கலாம். நம் ப்ரீஜுடிஸும் ஈகோவும் சேர்ந்து வலைப்பதிவர்களின் sensitivity-ஐ அழித்துவிட்டதோ என்று எனக்கு சந்தேகம் வரத்தோன்றியிருக்கிறது. ஒரு மேடையிலோ இல்லை நம் வீட்டிலோ கருத்துப் பரிமாற்றங்கள் நடந்து கொண்டிருக்கிறது. அங்கேயும் பெரும்பாலும் நாம் இங்கே பேசும் விஷயங்களை பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், வலையில் எழுதும்போது மட்டும் நம் தரத்தை நாமே குறைத்துக்கொள்வது ஏனோ? நம்மை யாருக்கும் தெரியாது என்கிற தைரியமும், நம் அடிமன வக்கிரங்களுக்கு அப்படி நம்மை யாருக்கும் தெரியாது என்பது மிகவும் சாதகமாக இருக்கிறது என்பதுமா?

எங்கெங்கோ இருக்கும் எவ்வளவோ புதுப்புது நண்பர்களையும் நல்லமனிதர்களியும் இவ்விணையம் அறிமுகம் செய்து பெற்றுத்தந்திருக்கிறது என்பதைத் தவிர எனக்கு வலைப்பூவில் எழுதுவதில் பெரிய பயனொன்றும் கிட்டியதாய்த் தெரியவில்லை. இந்த தமிழ்வலைப்பூக்கள் இல்லையென்றால் நம்மில் பலர் சந்தித்துக்கொண்டே இருந்திருக்க மாட்டோம். என்னளவிலே எடுத்துக்கொண்டால் நான் எழுதும் பொதுப்பாட்டு எனக்காகவே. ஆனால், இந்த வலைப்பூவை நான் இப்படித்தான் பார்க்கிறேன். நண்பர்களுக்கிடையில் ஸ்கூல காலேஜில் லஞ்ச் ப்ரேக்கிலும், இண்டர்வெல்லிலும் அரட்டை அடிப்பதைப்போல. இப்போது அந்தக் கட்டங்களைத் தாண்டி வந்த நமக்கு புது நண்பர்களை அடைய இது ஒரு அரிய வழி. நாம் பலரும் வெளியில் இருப்பதால் தமிழில் தமிழர்களோடு பேசுவதில் தனி சுகமும் அந்நியோன்யமும் ஏற்படுகிறது. அதுவே முதல் பயனாய்ப் பார்க்கிறேன். தமிழ் வளர்க்கிறேன் என்றெல்லாம் நான் ஜல்லியடிக்கப்போவதில்லை.

வளர்ப்போரை நான் குறை சொல்கிறேன் என்றில்லை. ஏதோ காரணத்தால் இயற்கையாய் ஒரு கூட்டம் சேர்ந்து விடுகிறது. எழுதும் விஷயங்களினால். அக்கூட்டத்திற்குள் நாம் பேசிக்கொள்ளும் போது என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம். நண்பர்கள் வட்டம் என்கிற உரிமையில். அதுவே என் பதிவில் நான் எழுதினால் அது எங்கே சென்று முடியும் என்று சொல்லித்தெரியவேண்டியதில்லை. இதுவே தான் ஒவ்வொரு குழுவிற்குள்ளும் நடக்கிறது என்று நினைக்கிறேன். மற்றவர்களை பற்றி எழுதுகையில் இன்னும் அதிக எச்சரிக்கையுடன் செயல்படவேண்டியிருக்கிறது. அது ஒருவிதத்தில் நல்லதுதான் என்றாலும் மேற்சொன்ன இருகாரணங்களினால் சிலவிஷயங்களை, கண்ணியமாக எழுதினாலும் அவற்றிற்கு வரும் எதிர்வினைகள் ஒரே விதமாகவே பெரும்பாலும் இருப்பதாய் தோன்றுகிறது. நான் ஒன்றும் அப்படி எழுதிக்கிழிக்கவில்லையென்றாலும், சார்புநிலை கொண்டிருந்தாலும் கண்ணியமாக எழுதுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் சிறுபான்மையினரோ என்று தோன்றும் வகையில் பலரின் பதிவுகளின் தலைப்பிலிருந்து, பின்னூட்டங்கள் வரை இருக்கிறது. sensationalism வைத்துதான் ஓட்டவேண்டும் என்ற அளவுக்கா இங்கே காம்பெடிஷன் இருக்கிறது? ஆயிரத்தைக் கூட தாண்டாத ஒரு கூட்டத்துக்குள் என்னவோ ஜன்மப்பகைகள் போல இத்தனை சண்டைகளா. தமிழ் நம்மை இணைத்துதானே இங்கே வந்தோம். அந்த இணைப்பு முற்றிலும் மறந்து வெறும் வெறுப்பு மட்டுமே மிஞ்சியிருக்கறாற் போல இருக்கிறது.

---
நானும் மேற்சொன்ன தவறுகளை அறிந்தோ அறியாமலோ செய்திருக்கலாம். இனிமேல் தவிர்க்க முயற்சிக்கவாவது செய்வேன்.

10 Comments:

  1. டிபிஆர்.ஜோசப் said...

    ஆனால் அவர்கள் சிறுபான்மையினரோ என்று தோன்றும் வகையில் பலரின் பதிவுகளின் தலைப்பிலிருந்து, பின்னூட்டங்கள் வரை இருக்கிறது. sensationalism வைத்துதான் ஓட்டவேண்டும் என்ற competetiveness ஓ என்று கூட சந்தேகமாக இருக்கிறது.//

    சரியாய்ச் சொன்னீர்கள் இராமநாதன்.


  2. G.Ragavan said...

    நல்ல பதிவு இராமநாதன்......ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து உண்டு. கருத்து வேறுபாடு என்பதை மனிதப் பகை வரை கொண்டு செல்வது மிகத் தவறு. வலைப்பூக்களில் அது நடப்பதை எல்லாரும் அறிவார்கள்.

    எல்லாருக்கும் ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன். ஒன்றை அழிப்பது எளிது. ஆக்குவது மிகக் கடினம். நல்லதையே நினைத்து நல்ல வழியிலேயே செல்வோம். அவ்வளவே. ஒவ்வொருவரும் தானிருக்கும் இடத்தில் அனைவரையும் ஒன்று சேர்க்கும் நல்ல வழக்கத்தைக் கொள்ள வேண்டும். ஒற்றுமையாக இருக்கும் இடத்தில் இனிய உளவாக இன்னாத சொல்லமை செய்தால் நன்மையே விளையும். அதை விடுத்து...ஆண்டவா!


  3. rv said...

    நன்றி ஜோசப் சார்.


  4. rv said...

    ஜிரா,
    //ஒற்றுமையாக இருக்கும் இடத்தில் இனிய உளவாக இன்னாத சொல்லமை//
    அதே.

    நன்றி


  5. குமரன் (Kumaran) said...

    நன்றாகச் சொன்னீர்கள் இராமநாதன். ஆனால் இந்தப் பதிவை தமிழ்மணத்தில் எத்தனை பேர் படித்தார்களோ தெரியவில்லை. பதிவின் தலைப்பு பயமுறுத்துகிறது. :-) ஆனால் இந்தப் பதிவை நிறைய பேர் படிக்கவேண்டும். இல்லாவிட்டால் தமிழ்மணத்தில் இருக்கும் மணம் காணாமல் போய் எல்லா இடத்திலும் தீய்ந்த நாற்றம் தான் அடிக்கும். ஏற்கனவே தமிழ்மணத்திற்கு வரவே பயமாய் இருக்கிறது.


  6. rv said...

    நன்றி குமரன்.

    வர வர பதிவுகளின் தலைப்புகளே அப்படி இருப்பது அருவருப்பையே தருகிறது. எல்லா விஷயங்களிலும் peaks and lows இருப்பது போல இங்கேயும் என்னவோ?


  7. ரங்கா - Ranga said...

    இராமநாதன்,

    மிக அழகான பதிவு; ஆழமான கருத்துகள். கலாச்சாரம்-நாகரீகம் சம்பந்தமாக கிட்டத்தட்ட இதே போன்ற எண்ணத்தில் எழுதியது இங்கே.

    தொலந்து போன தமிழ்நயத்தைப் பற்றி
    இங்கே.

    ரங்கா.


  8. Sivabalan said...

    A good one.


  9. கால்கரி சிவா said...

    இராமநாதன், நல்ல பதிவு. நான் தமிழ் மணத்திற்க்கு வந்து 3 மாதங்கள்தான் ஆகிறது. ஆனால் என்னை நாறடித்துவிட்டார்கள். சில நண்பர்கள் கிடைத்துள்ளனர். நிறைய எதிரிகள் கிடைத்துள்ளனர். இதுதான் தமிழர் மரபா?. எங்கே செல்கிறோம் நாம்?

    உங்களைப் போன்ற மூத்த பதிவாளர்கள் இந்த மாதிரி பதிவுகளை அடிக்கடி எழுதினால் தமிழ்மணத் தரம் உயரும் என நான் நம்புகிறேன்.


  10. rv said...

    ரங்கா,
    சுட்டிக்கு நன்றி. கண்டிப்பாக பார்க்கிறேன்.

    சிவபாலன், கால்கரிசிவா,
    நன்றி.


 

வார்ப்புரு | தமிழாக்கம்