தத்து(பி)த்துவம் - 2: பிஸியாலஜி

பிஸியாலஜி என்பது என்னன்னு உங்கள் பலருக்கும் தெரிந்திருக்கும். நம் உடலிலுள்ள உறுப்புகளின் செயற்பாடுகளை பற்றிய படிப்பாகும். (science of the normal functions of the body, its organs, systems : physios - nature; logos - study). ரொம்ப ரொம்ப சுருக்கமா கண்/பார்வை பற்றி. கொஞ்சம் ஆங்கிலத்திற்கு தாவலாமா? தங்கிலீஷுல எழுதறத விட இது மேல்னு நினைக்கிறேன். புரியறதுக்கு கஷ்டமா இருந்தா ரொம்ப வருத்தப்படாதீங்க. எவ்வளவு சிக்கலானது, எத்தனை நிலைகளுக்கு பின்னர் நாம் 'பார்க்கிறோம்' என்பதை காட்டவே பின்வருவது.

1. Retinal Photoreceptor layer

a. rods
i. absorb light
ii. do not differentiate color (only shades of greys)
iii. sensitive to low light levels
iv. more present in peripheral areas of retina (outside central fovea)

b. cones
i. absorb light of particular wavelengths (red, green, or blue)
ii. less sensitive in low light levels
iii. concentrated in central fovea

2. "Dark current" in photoreceptors

a. Na+ (sodium) stay open in photoreceptor when NO LIGHT is being absorbed
b. constant current of Na+ into cell keeps photoreceptor MOST ACTIVE IN DARKNESS
c. active photoreceptor (in dark) continually releases inhibitory neurotransmitters onto neuronal cells in retina

3. Light reactions

a. light photon absorbed by retinal
b. opsin releases "energetic" retinal ("bleaching")
c. opsin then activates transducin molecule
d. active transducin activates phosphodiesterase enzymes
e. active phosphodiesterase enzymes cause Na+ CLOSURE
f. Na+ channel closure reduces "dark current"
g. photoreceptor releases less of the inhibitory neurotransmitters onto neuronal retinal cells
h. neuronal retinal cells fire action potentials, carried by optic nerve to brain...

இது தான் 'பார்ப்பது'



இனி என்னென்ன பாகங்கள் சம்பந்தப்பட்டுள்ளன என்று பார்ப்போமா..
After passing through cornea, lens and finally Retina, the information is transmitted to the optic disc and onto the optic nerve. The Optic Nerves from both eyes are then criss-crossed and straightened out at a point called Optic Chiasma. From there, passes on to a part of brain called Thalamus. The thalamus then passes the information to visual cortex (occipital lobe: rear brain). Then midbrain also receives information from where reflexes are regulated.

என்ன, போரடிச்சுடுச்சா? இது ஒரு பெரிய கடலில் ஒரு சாம்பிள். இந்த மாதிரி உணர்வுகள், உணவு, மூச்சு, இதயம், ரத்தஓட்டம், வளர்ச்சி என்று ஏகப்பட்டவை இருக்கின்றன. இதெல்லாம் எதுக்கு இப்போ? தம்பட்டமா? இல்லை. இல்லை.. நம்ம தத்து(பி)த்துவத்துக்கு அடிப்படையே இதுதான். இத வச்சு பிஸியாலஜி பேராசிரியரை கலாய்ச்சதுண்டு.

அதாவது, பரிட்சையில் கேள்வி வருதுன்னு வச்சுக்குங்க. நாம எப்படி பார்க்கிறோம்-கறதுன்னு? அப்ப பதில் சொல்லத் தெரியலேன்னு வச்சுக்குங்க. ஆனாலும் அவங்க ஒங்களுக்கு 100/100 போட்டுத்தான் ஆகணும். எப்படின்னு யோசிச்சா அதுல தத்துவமே இருக்குது. மேலே சொன்ன பார்வை விஷயத்த பத்தி உங்களின் அறிவு 0. ரெட்டினான்னா என்ன ரொட்டியோட கஸினா, தாலமாஸ்னா பொடிமாஸ் மாதிரியா அப்படின்னு கேக்கற அளவு நம்ம அறிவுன்னு வச்சுக்குங்க. இருந்தாலும், 'பார்க்கிறோமா' இல்லியா? மேலே சொன்ன ஒரு விஷயமும் உங்களுக்கு சொல்லத்தெரியாட்டியும், உங்க மூளைக்கு என்ன செய்தா பாக்க முடியும்னு தெரியுமா தெரியாதா?

இன்னொரு உதாரணத்திற்கு இரத்த அழுத்தம் அதிகமாச்சுன்னு வச்சுக்கோங்க. அத எந்த பேரோமீட்டர் வச்சு அளக்கனும், எது நார்மல் அளவு, இவ்வளவுக்கு மேலே போனா எந்தெந்த ஸ்விட்ச தட்டிவிடனும், அதனால எப்படியெல்லாம் திரும்பவும் நார்மலுக்கு கொண்டுவரணும் எல்லாம் மூளைக்கு தெரியும்தானே?

படிக்கிறது எதுக்கு? மண்டையில ஏறறதுக்கு? ஏற்கனவே தெரிஞ்ச விஷயத்த திரும்ப படிக்க வேண்டிய அவசியமில்லேல்லியா? தெரிஞ்சிருக்கிற விஷயத்த வெளியில் எப்படி சொல்லணும்னு தெரியல அவ்ளோதான். அதுதானே பிரச்சனை? வெறும் communication gap மட்டுந்தானே? அதனால பிஸியாலஜி படிக்க தேவையில்ல. என்ன, லாடுலபக்கு சாயல் வருதா? :))

14 Comments:

  1. குமரன் (Kumaran) said...

    எங்க ஊருல இந்த மாதிரி பதிவுகளுக்கு தலையச் சுத்தி மூக்கைத் தொடுறதுன்னு சொல்லுவாங்க. :-)


  2. குமரன் (Kumaran) said...

    நம்ம இராமநாதன் போட்ட பதிவுங்கறதால + குத்தியாச்சு :-)


  3. துளசி கோபால் said...

    ராம்ஸ்,
    அங்கே ரொம்பக் குளுரா?
    வெளி உலகத்தைப் 'பார்க்க' முடியுதா?


  4. ENNAR said...

    நனறாக உள்ளது


  5. rv said...

    குமரன்,
    //தலையச் சுத்தி மூக்கைத் தொடுறதுன்னு //
    தலையச் சுத்தித்தான் பாக்கவே செய்யறோம். :))

    //+ குத்தியாச்சு //
    அதுக்கு ஒரு டாங்க்ஸ்.


  6. தாணு said...

    என்ன ராமநாதன், திடீர்னு தத்துவத்தில் இறங்கிட்டீங்க? பாடம் படிக்க கஷ்டப்பட்டுத்தான் ப்ளாக் வந்தேன், இங்கேயும் `கடி’க்கிறீங்களே?


  7. rv said...

    அக்கா,
    //அங்கே ரொம்பக் குளுரா?
    வெளி உலகத்தைப் 'பார்க்க' முடியுதா? //

    அப்பப்போ... நல்லா வெயில்ல காஞ்சிகிட்டிருந்துகிட்டு இப்படி என் வயித்தெரிச்சல கிளப்பறீங்க.

    என்னார்,
    நன்றி


  8. rv said...

    வாங்க வாங்க அத்தை,
    கடி இருக்கட்டும். எப்படி நம்ம தத்துவம்? கரெக்ட்தானே? அதச்சொல்லாம போனா எப்டி?


  9. ரங்கா - Ranga said...

    இராமநாதன்,

    ஒரு முறை ஒரு பயிற்சியில் (ட்ரெயினிங்) 'தெரிந்தது-தெரியாதது' பற்றி இந்த மாதிரி விளக்கம் அளித்தேன் (பாவம் வந்திருந்தவர்கள்)!

    மொத்த அறிவு = 100%
    மொத்த அறிவு = தெரிந்தது + தெரியாதது
    தெரிந்தது = தெரிந்து தெரிந்தது + தெரியாமல் தெரிந்தது
    தெரியாதது = தெரியாமல் தெரியாதது + தெரிந்து தெரியாதது
    மொத்த அறிவு = தெரியாமல் தெரியாதது + தெரிந்து தெரியாதது + தெரிந்து தெரிந்தது + தெரியாமல் தெரிந்தது

    உதாரணம்: சுவற்றில் மாட்டியிருக்கும் ஒரு அழகான படத்தைப் பார்க்கிறேன்.
    தெரிந்து தெரிந்தது = சுவரில் தெரியும் படம்
    தெரியாமல் தெரிந்தது = என் கண் எப்படிப் பார்த்து மூளை புரிந்து கொள்கிறது என்பது (உங்கள் வாதம் - மேற்புர அறிவுக்கு (Lateral Consiousness) கொண்டுவர வேண்டும்)
    தெரிந்து தெரியாதது = எப்படி அந்த வண்ணம் சித்திரத்தில் கொண்டு வந்தார் என்று (கொஞ்சம் முயன்றால் தெரிந்து கொள்ளலாம்; ஆனால் இப்போதைக்கு தெரியாது)
    தெரியாது தெரியாதது = எப்படி நான் சொல்ல முடியும்? எனக்குத்தான் தெரியாதே?

    ஒரு விஷயத்தைப் பற்றிய அறிவும் இப்படித்தான் நம்மை அடையும் - அந்த விஷயம் இருக்கிறதே தெரியாது; இருக்கிறது தெரியும் ஆனால் விபரம் தெரியாது; விபரமும் தெரியும்; நமக்குத் தெரியும் என்பதே தெரியாது.

    அதே சமயத்தில் அந்த விஷயத்தைப் பற்றி தெரியாதது என்ன என்பதே தெரியாது ஆகையால், எந்த ஒரு விஷயத்திலும் நாம் 100% அறிவை எட்ட முடியாது! ஒப்புக்கொள்கிறீர்களா?

    ரங்கா.

    பிகு: உங்கள் வலைத் தளத்திற்கு முதலில் நான் வந்ததற்கு காரணமே உங்கள் 'தெரியல' தலைப்புதான்.


  10. rv said...

    ரங்கா,
    நீங்கள் சொல்வதை ஒருவாறு புரிந்துகொண்டேன் என்று நினைக்கிறேன்.

    நீங்கள் ஒவியத்தைப் பற்றிக் கூறியிருக்கிறீர்கள். நான் இதைச் சொல்லவிட்டுவிட்டேன்.

    இந்த தத்துவத்தை அப்ளை செய்யப்போகும் விஷயத்தை நம்முள்ளே, நம்வெளியே என்று பிரித்துவிடலாம். வெளியே இருக்கும் பொருட்கள்க் குறித்து முனைப்புடன் விபரம் சேகரித்தால், அவற்றைப் பற்றி அறிந்து கொள்ளலாம். 100% அறிவை எட்டமுடியாது என்பதை ஒத்துக்கொள்கிறேன்.

    ஆனால், நம்முடலின் உள்ளே என்று வந்துவிட்டால். conscious, subconscious என்று பிரிக்கவேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் இருப்பது ஒரே hard drive தான். அதன் ஒரு பார்டிஷனில் இருக்கும் விபரம் மற்றொரு பார்டிஷனில் இல்லை. பார்டிஷன்களை பற்றிக் கவலைப்பட தேவையில்லை. ஹார்ட் ட்ரைவில் இருக்கிறதா இல்லையா என்பதுதான் முக்கியம். சரியா?

    தலைப்பு பொருத்தமானதுதான் என்பது என் பதிவுகள் சிலதைப் பார்த்தாலே புரிந்திருக்குமே! ;)


  11. G.Ragavan said...

    இராமநாதன், இன்னைக்கு என்னோட நாள்.

    குமரன் சொன்னத நானும் வழிமொழிகின்றேன்.
    குமரன் செஞ்சத நானும் வழிசெய்கின்றேன். :-)


  12. ரங்கா - Ranga said...

    //ஆனால், நம்முடலின் உள்ளே என்று வந்துவிட்டால். conscious, subconscious என்று பிரிக்கவேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் இருப்பது ஒரே hard drive தான். அதன் ஒரு பார்டிஷனில் இருக்கும் விபரம் மற்றொரு பார்டிஷனில் இல்லை. பார்டிஷன்களை பற்றிக் கவலைப்பட தேவையில்லை. ஹார்ட் ட்ரைவில் இருக்கிறதா இல்லையா என்பதுதான் முக்கியம். சரியா?//

    எனக்கென்னவோ பார்டிஷன்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டும் என்று தோன்றுகிறது. இலக்கை விட பயணம் சுகமானது , சில சமயங்களில். என் சொந்த அனுபவத்தில் சில தடைகள், கஷ்டங்களோடு பெற்ற பரிசுகளை விட, அவற்றை அடைந்த வழிகள் தந்த சுகங்கள் அதிகம்.

    ரங்கா.


  13. rv said...

    என்ன இராகவன்,
    வழிமொழியற நாளா? சரி சரி..
    //நானும் வழிசெய்கின்றேன்//
    குத்துக்கு நன்றி.

    ரங்கா,
    //இலக்கை விட பயணம் சுகமானது ,//
    இதுவும் உண்மைதான். ஆனால் இது இந்த டாபிக்குக்கு ஆஃப் லிமிட் என்று நினைக்கிறேன். :)


  14. ரங்கா - Ranga said...

    Agreed - it is off-limit ;-).


 

வார்ப்புரு | தமிழாக்கம்