192. இருதிருவருளர் உதித்தனர்... உலகம் உய்ய!

இந்த நாள் உன் காலண்டர்ல குறிச்சு வச்சுக்கொள்! ஏன்னா இன்னிக்கு வாழ்க்கைல மறக்கமுடியாத நாள்! உன் விதியவே மாத்திப்போட்ட நாள்!

என்னென்னவோ செஞ்சுகிட்டிருக்கற நாம இன்னிக்கு.. இப்போ... டுடே கூடி கும்மியடிக்க இருப்பது எதுக்காக???

1. வலையுலக ஆன்மிக செம்மல் குமரன் இன்று திருவருளால் பூமியில் அவதரித்த நாள்!

2. பினாத்தலார் என்னும் இளங்(கிழச்)சிங்கம் பொறந்து உனக்கும் உங்க அப்பத்தாவுக்கும் தேதி குறித்த நாள்!

'நான் மனிதன்! நீ மிருகம்'னு கடவுளே பிறப்பில் பிரிச்ச நாள்!


இவ்விருவரும் பமகவின் இருபெரும் சொத்துக்கள்...ஆழ்கடல் காணா முத்துக்கள்...சேந்தனைச் சேரும் பக்தாக்கள்... சர்ரெனப் பாயும் தோட்டாக்கள்...மலையும் முழுங்கும் போக்தாக்கள்...தொடுவோரை பதம்பார்க்கும் கூர்முட்கள்.. வாள்வாளெனும் கொடுவாட்கள்.. மொத்தத்தில் எங்கள் படுவாக்கள்..எதிர்த்தவர் மேலெல்லாம் பத்துகள்....!

இவர்களை வாழ்த்த காய்ந்த காக்காக்கள் வேண்டாம்.. சோர்ந்த சோதாக்கள் வேண்டாம். வெறும் பனைமரக் கள் போதும். வாருங்கள்! வாழ்த்துவோம்!!

191. டேய்ய்ய்ய்ய்... யார்ரா நீயி?????

டேய்ய்ய்...யார்ரா நீயி? எங்கேர்ந்துடா வந்தே? ஏன்டா இப்படி பிரச்ன பண்ற இப்போ?

கில்லர்மோ கான்யாஸ்

உனக்கு இன்னாதான்டா வேணும்????

அய்யோ இப்டி டார்ச்சர் பண்றானே!

டேய் விட்டுர்றா..... தலைவர் ரொம்ப நல்லவர்டா!

190. இராம இராம!

இராம இராம இராம இராம இராம இராம இராம இராம இராம இராம இராம இராம இராம இராம இராம இராம இராம இராம!

ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய இராம!


இராமநாமமே துதிமனமே! க்ஷேமமுறவே தினமே! சீதா ராமநாமமே துதிமனமே!
இங்கே கேட்கலாம்.


பாலகிருஷ்ண சாஸ்திரிகளின் ஹரிகதை கேட்டாச்சு இல்லியா? கேக்கலேன்னா முதல்ல அத டவுன்லோட் பண்ணி கேளுங்க!

http://www.sangeethapriya.org/Downloads/tsb/tsb.html

நியமங்கள் வேண்டாம். தானதர்மங்கள் வேண்டாம். கர்மாக்கள் வேண்டாம். அவன் பேரைப் பாடுவதே போதுமானதுன்னு சொல்லிதான் திவ்யநாமமும் பஜனையும்னு சொல்லி ஈஸியா விட்டுட்டு போயிருக்காங்க.


அண்டங்களெல்லாம் தன் உடலின் ஒரு தூசிக்குக்கூட ஒப்பிலாத அப்பன் தன் அளப்பெரும் கருணையால் தாங்கிவந்த இராம வடிவத்தை நினைப்போரின், அவனைப் பற்றி பேசுவோரின் நெஞ்சமெல்லாம் நிறைந்து நிற்பான் அனுமன். ஆஞ்சநேயனை அதனால் தனியே வழிபடவே வேண்டாம்.



 

வார்ப்புரு | தமிழாக்கம்