ஆங்கிலத்திலிருந்து பலகவிதைகள் தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அதுபோலவே திருவள்ளவர் தொடங்கி பலர் எழுதிய இலக்கியங்கள் ஆங்கிலத்திற்கும் இன்னபிற மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இந்த மொழிபெயர்ப்பை நாமும் கொஞ்சம் முயற்சி செய்து பார்த்தால் என்ன என்ற ஆர்வம் பிறந்ததன் விளைவே இந்தப் 'படைப்பு'!
Moulded Jaggery Sugarcane! Oh! 5'O Clock Bud!
Like a knife you usuppufy me!
Slided down the scalp, crouched in the center, u swallow me crushingly!
I will take you to the Touring Talkies, Will you come?
Instead of the movie, I shall watch you...Will that be ok?
Place the bed properly after consulting Vaasthu
Two children will then be born, is it ok?
Lets rent a cotton mattress for (a? :)) ) living,
in broad daylight we shall catch a round moon!
Dont show film, Dont open shop, Dont increase weight!
I saw (your) neck that resembled a slide; I skidded and fell head over my heels!
(I) Was searching for something, crashed onto something else, lost myself someplace else!
with (your) Eyes grazing Without Shame, my saree seems stuck inescapably
I close something, I open something else, (am) kirangufying automatically!
To see (your) ankles that resemble small fish; my eyes fight among themselves and prowl!
Caught in those hairpin bends, my heart slowly melts!
I will take you to the Touring Talkies, Will you come?
Instead of the movie, I shall watch you...Will that be ok?
Place the bed properly after consulting Vaasthu
Two children will then be born, is it ok?
You make me look in all the wrong places; You make me speak nonsensical words!
Will it decrease if i take little, why be miserly?
You do put up a fine act like a chevalier! But U do have a duplicate key in your hands!
"Come, peacock put a feather" u always nag me!
Dont Have much desires my love, Just hundred chidren enough!
For all those to study together we need a separate school!
Moulded Jaggery Sugarcane! Oh! 5'O Clock Bud!
Like a knife you usuppufy me!
Slided down the scalp, crouched in the center, u swallow me crushingly!
I will take you to the Touring Talkies, Will you come?
Instead of the movie, I shall watch you...Will that be ok?
Place the bed properly after consulting Vaasthu
Two children will then be born, is it ok?
கவிதையின் சுவை கெடாமல் தரமுயற்சித்திருக்கிறேன் என்றே நினைக்கிறேன். மொழிபெயர்ப்பில் அதுதானே முக்கியம்?
186. கவிதை மொழிபெயர்ப்பு முயற்சி!
185. உத்திரட்டாதியில் புதிய உதயம்
சற்றுமுன் நடந்த ஒரு மகிழ்ச்சியான விஷயத்தைப் பற்றி பகிர்ந்துகொள்ளவே இப்பதிவு. எங்கள் வீட்டு குட்டிப்பெண்ணுக்கு தலைப்பிரசவம். சுகப்பிரசவமும் கூட.
இன்று நல்ல உத்திரட்டாதி நட்சத்திரம் மீன ராசியில மாலை சுமார் 530 மணிக்கு புதிய அங்கத்தினர் வருகை.
தாயும் சேய்களும் நலம்.
இதோ கையோடு எடுத்த படங்கள்.
மொத்தம் ஐந்தில் மூன்று பெண்கள், இரண்டு ஆண்கள். இன்னுமொரு குழந்தை பிறந்திருந்து அவர் ஸுவாஹா செய்யப்பட்டிருக்கலாம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து கிடைத்த செய்தி.
குட்டிகளைக் கண்டவுடன் தந்தையார் எஸ்கேப் ஆகிவிட்டார். சுமார் இரண்டு மணிநேரமாகியும் மறைந்திருந்து தாயையும் குழந்தைகளையும் பார்த்துக் கொண்டிருக்கிறாரேயொழிய அருகில் சென்று பார்க்க தைரியம் வரவில்லை. எப்படி படிக்க வைத்து வளர்த்து திருமணம் செய்துகொடுக்க போகிறோம் என்ற கவலையாக இருக்கலாம், பாவம்.கண் தொறக்க இன்னும் இரண்டு வாரங்களாவது ஆகும். அதுக்கப்புறம் வீடே களேபரம் தான். :))
184. பச்சைக்கிளி முத்துச்சரம்!

கவுதம் மேனன் இயக்கத்தில் மேக்கப்பில்லாத சரத், ஆண்ட்ரியா, மிலிந்த் சோமன் மற்றும் ஜோதிகா நடிக்க ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வந்திருக்கும் படம் 'பச்சைக்கிளி முத்துச்சரம்'. படத்திற்கான பப்ளிசிடி பயங்கரமாய் இருக்க படம் ரிலீஸான ரெண்டாவது நாளில் டிக்கட் கிடைக்குமா என்று அச்சத்துடன் சென்றால் சரத் ரசிகர்களைக் கூடக்காணோம். டிக்கட் எளிதாகக்கிடைக்க பால்கனியில் முன் சீட்டில் காலை நீட்டியவாறு சொகுசாய் இடம்பிடித்தோம் நானும் என் கஸினும்.
படம் ஆரம்பிக்குமுன்னர் வரும் வழக்கமான விக்கோவை காணோம். அதற்கு பதில் சச்சின் அவசர அவசரமாக வந்து ரேனால்ட்ஸ் வாங்கச் சொன்னார். அதற்கு Qube சினிமா வும் DTS ஒலிக்குமான விஷ் விஷ்கள். அதற்கும் விசிலடிக்கும் ரசிகர்களைக் கண்டு நோவதா என்பதற்குள் சார்மினார் பாக்ரவுண்டில் ஒரு சிறுவன் ஓடிவர கறுப்பு சாண்ட்ரோவிலிருந்து இறங்கும் சரத் பையனுக்கு ஊசி போட்டுவிட்டு அம்மாவைத் அழைத்துக்கொண்டு வருவோம் வா என்று சொல்ல, டைட்டில்கள்.
கதைச்சுருக்கம்: சரத் ஒரு மருந்துக்கம்பெனியில் ரெப். ஆண்ட்ரியா ஹோம் மேக்கர். அவர்களுக்கு அழகான பையன். க்யூட்டாய் டைட் க்ளோசப்பில் மூன்று பேரும் கட்டிக்கொண்டபடி சிரித்து பாட்டு பாடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் பூகம்பமாக மகனுக்கு type-I நீரிழிவு நோய் என்று தெரியவருகிறது.
மகனின் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கவேண்டி மூன்று வேளையும் இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ளவேண்டிய சூழ்நிலை. அப்பாவும் அம்மாவும் நொறுங்கிப்போகிறார்கள். அவர்களுக்குள் இருந்த சந்தோஷம், spark காணாமல் போகிறது. இதற்கு நடுவில் சரத் வழக்கமாய் பயணிக்கும் சபர்பன் ரயிலில் அதிரடி அழகு இராட்சசியாய் நுழைகிறார் ஜோதிகா.stolen looks மற்றும் இன்னபிற ரத்ன சுருக்க சம்பாஷணைகளுக்குப் பிறது சரத்தை பிடித்திருப்பதாக குண்டைத் தூக்கிப்போடுகிறார் ஜோதிகா. குழப்பத்தின் உச்சத்தில் இருக்கும் சரத், மனைவி சில விஷயங்களில் ஒத்துழைக்காமல் வேறு போக சபலப்பட்டு, ஜோதிகா ரூம் போட ஈ.சி.ஆர் ரோட்டிலுள்ள ரிசார்டுக்கு அழைக்க, போகிறார். அங்கு நடக்கும் விஷயத்தால் சரத் வாழ்க்கையில் அடிக்கும் புயலை எப்படி சமாளிக்கிறார் என்பதே பச்சைக்கிளி முத்துச்சரம்.
கவனம் தேவை: plot details maybe revealed.
படத்தின் தூண் என்றால் சரத். அடிதடி ஹீரோவுக்கான எந்த லாஜிக் அபத்தமும் இல்லாமல் மிட்-லைப் க்ரைஸிஸில் இருக்கும் ஒரு சாதாரண நடுத்தர வயது ஹீரோவாக: மனைவியிடமும் குழந்தையிடமும் காட்டும் அன்பிலாகட்டும்: ஜோ மீது ஏற்படும் ஈர்ப்பை தன்னாலேயே ஜீரணிக்க முடியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாய் தவிப்பதிலாகட்டும்:முட்டாள்தனமாக மாட்டிக்கொள்வதிலாகட்டும்: பிரச்சனைகளை சமாளிக்கத் தெரியாமல் கலங்குவதாகட்டும்: அசட்டுத் துணிச்சலாகட்டும்: அதன் பயனாய் குடும்பத்திற்கே ஆபத்து வருவதைக் கண்டு நொறுங்கிப்போய் பின்னர் பொங்குவது என எல்லா பரிமாணங்களிலும் பின்னி பெடலெடுத்திருக்கிறார் சரத். சரத், தைரியமாக இதுபோன்ற படங்களில் நடியுங்கள். 'சமுத்திரம், ஐயா'விலேயே நடிக்க நன்றாக வருமென்று காட்டினீர்கள். இதில் முத்திரையே பதித்தாகிவிட்டது. நடுவில் வந்த பஞ்ச் டயலாக், அடிதடி குப்பைகளை விட்டுத்தள்ளுங்கள்.
சரத்தின் மனைவியாய் வரும் ஆண்ட்ரியா அழகாக இருக்கிறார். பெரும்பாலும் சராசரி குடும்பத்தலைவி என்ன செய்வாரோ, சொல்வாரோ அதையே செய்கிறார். சரத் தன் பிரச்சனையைச் சொல்லி அழும்போது ஆறுதலாய் பேசுபவர் திடுதிப்பென்று சொல்லாமல் கொள்ளாமல் வீட்டைவிட்டு ஓடுவதெல்லாம் ஓவர். அதுவும் நோய்வாய்ப்பட்ட குழந்தைக்காக கருவையே கலைக்க முன்வருபவர் சரத்தின் வாக்குமூலத்திற்கு பிறகு குழந்தையையும் விட்டுச்செல்வது அபத்தம்.
ஜோதிகா: சுட்டுவிரலை நீட்டி நீட்டி, முழியை உருட்டி உருட்டி, தலை இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் ஆட்டினால் ஜோவின் நடிப்பு அகராதியில் முற்றிற்று வந்துவிடும்: இதற்கு மேல் நடிப்பு என்று இவரிடம் எதிர்பார்ப்பது முட்டாள்தனம் என்பதால் ஒன்றும் சொல்வதற்கில்லை. கடைசி காட்சிகளில் சந்திரமுகி - II. "I want to make love to you" என்று இப்படத்தில் சரத்திடம் சொல்கிறார். மிலிந்திடமும் இன்னொரு ராமச்சந்திரனிடமும் சொன்னதாகக்கூட நினைவு. இது காக்க காக்கவிலிருந்து சொல்லிவரும் டயலாக் என்பதால் அப்போதிலிருந்தே ஒரே ஸ்க்ரிப்டையே படித்துக்கொண்டிருக்கிறாரோ என்று எனக்கொரு சந்தேகம். அழகான ராட்சசியாய் இல்லாமல் படத்தில் பார்க்க கொஞ்சம் வயசானவராய்த் தெரிகிறார். காமிராக்காரரும் மேக்கப்மேனும் சதி செய்திருக்கிறார்கள்.
மிலிந்த் சோமன்: முன்னாள் சூப்பர் மாடல். மிரட்டுகிறார். குரல் (கவுதம் மேனன்) ஒரு மாதிரி இருக்கிறது. ஆனால் நிறைய காக்க காக்க ஜீவா சாயல். இது டைரக்டரின் தவறு. நடிகருடையதல்ல என்று நினைக்கிறேன்.
காமிரா: அரவிந்த் கிருஷ்ணா: காமிராவில் வித்தியாசப்படுத்திக்காட்ட வேண்டும் என்ற ஆவல் தெரிகிறது. முன்பாதியில் வரும் ரயில் காட்சிகள், சரத் குடும்ப காட்சிகள் போன்றவை முழுமையாய் அழகாய் இருக்கின்றன.
இசை: மின்னலே, காக்க காக்க தகடு வைத்திருந்தீர்களானால் புதிதாய் ஒன்றுமில்லை. வழக்கமான புரியாத பாஷையில் பிளிறல்கள், ஒரே மாதிரியான ஹை பிட்ச் ஆண் குரல் என்று போரடித்துத் தள்ளுகிறார் ஹாரிஸ். தீம் கூட வேட்டையாடு விளையாடுவை நினைவுபடுத்துகிறது.
கவுதம் மேனன்: பல இடங்களில் வசனங்கள் நெருடுகிறது. அவற்றின் contentஐ நான் குறை சொல்லவில்லை. ஆனால் revolutionary என்ற போர்வையில் அச்சுபிச்சுத்தனமாய் இருக்கிறது. த்ரில்லரை நன்றாகவே கொண்டு சென்றிருக்கிறார். பாதியிலேயே கதையை கெஸ் செய்ய முடிவது என் கோணங்கி புத்தியினால் கூட இருக்கலாம். முந்தைய படங்களை ரொம்பவே நியாபகப்படுத்தும் காட்சிகளையும், வசனங்களையும், லொக்கேஷன்களையும் தவிர்த்திருக்கலாம்.
பல இடங்களில் வில்லன்/ஜோவின் செயல்பாடுகள் நம்பமுடியாதவையாக இருக்கின்றன. அதற்கும் மேல் திடிரென சரத் hulk ஆக மாறுவதும் நம்பமுடியவில்லை.....ஜோவுடனான obsessionஐ விட வேண்டும். வேட்டையாடு விளையாடுவை பார்க்க இது நல்ல படமே தான்.
மொத்தத்தில்: ஒரு தடவை நிச்சயம் பார்க்கலாம். சரத்துக்காகவாது கண்டிப்பாக பார்க்க வேண்டும்.
---------------------------------------

(கொத்ஸின் ஆசைக்காக)
திமுக, அதிமுக என்று மாறி மாறி எந்தக்கட்சியிலிருக்கிறோம் என்றே தெரியாத குழப்பத்தில் இருந்த சரத்தை மேலும் குழப்பி, ஏமாந்த சமயத்தில் எனக்காக வோட்டு கேட்டு உங்களைக் கும்பிட்டபடி பிரச்சாரம் செய்ய போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.
எல்லோரையும் ஆசையுடன் வோட்டு போட அழைக்கும் முண்டக்கண்ணழகி (நன்றி: வெளிகண்டநாதர்) ஜோவுக்காகவாவது எனக்கே இண்டிப்ளாக்கீஸில் போடுங்கள். செவ்வாய் கடைசி!

ரஜினியையும் எனக்காக பிரச்சாரம் செய்யக் கூப்பிடப்போனேன்!!!
அவருடைய ரியாக்ஷனை அப்படியே படம் பிடித்தாகிவிட்டது.
படங்கள் உதவி: ஜோதிகா, சரத்
---------------------------------------------------------
பெனாத்தலாரின் கடைசி கட்ட அதிரடி பிரச்சார பதிவு: ரீமேக் திரைப்படங்கள் (1) - பராசக்தி
