185. உத்திரட்டாதியில் புதிய உதயம்

சற்றுமுன் நடந்த ஒரு மகிழ்ச்சியான விஷயத்தைப் பற்றி பகிர்ந்துகொள்ளவே இப்பதிவு. எங்கள் வீட்டு குட்டிப்பெண்ணுக்கு தலைப்பிரசவம். சுகப்பிரசவமும் கூட.

இன்று நல்ல உத்திரட்டாதி நட்சத்திரம் மீன ராசியில மாலை சுமார் 530 மணிக்கு புதிய அங்கத்தினர் வருகை.

தாயும் சேய்களும் நலம்.

இதோ கையோடு எடுத்த படங்கள்.

மொத்தம் ஐந்தில் மூன்று பெண்கள், இரண்டு ஆண்கள். இன்னுமொரு குழந்தை பிறந்திருந்து அவர் ஸுவாஹா செய்யப்பட்டிருக்கலாம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து கிடைத்த செய்தி.

குட்டிகளைக் கண்டவுடன் தந்தையார் எஸ்கேப் ஆகிவிட்டார். சுமார் இரண்டு மணிநேரமாகியும் மறைந்திருந்து தாயையும் குழந்தைகளையும் பார்த்துக் கொண்டிருக்கிறாரேயொழிய அருகில் சென்று பார்க்க தைரியம் வரவில்லை. எப்படி படிக்க வைத்து வளர்த்து திருமணம் செய்துகொடுக்க போகிறோம் என்ற கவலையாக இருக்கலாம், பாவம்.

கண் தொறக்க இன்னும் இரண்டு வாரங்களாவது ஆகும். அதுக்கப்புறம் வீடே களேபரம் தான். :))

13 Comments:

 1. இலவசக்கொத்தனார் said...

  வாழ்த்துக்கள் இராமநாத மாமா!

  தாயும் சேயும் நலமென அறிய சந்தோஷம். இச்செய்தியை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.


 2. பினாத்தல் சுரேஷ் said...

  தாயும் சேயும் நலம்லே ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லையா?


 3. Anonymous said...

  இதெல்லாம் ரொம்ப ஓவரு.....:)


 4. rv said...

  கொத்ஸூ,
  நன்றி.

  மாமாவாக்கியாச்சா? இனிமே எல்லாப்பசங்களும் லைன்கட்டி வந்து ஹெல்லோ சொல்லிட்டு போவாங்களா?

  அப்புறமா கொஞ்ச நாள் கழிச்சு ஜிராவ விட்டு "பெண்குட்டிபெற்றவன்"னு ஒரு பதிவு என் சார்புல போடச்சொல்றேன்.


 5. rv said...

  பெனாத்தலார்,
  ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா?

  நாயும் சேய்களுமா? நாயும் தாய்தானே ?

  பிகு: நான் கயமைத்தனம் பண்ணாட்டியும் நீர் செஞ்சு உம்ம பெருந்தன்மையை காட்டிட்டீரு. வாழ்க நீ எம்மான்!


 6. rv said...

  நாய்க்குட்டி,
  அஞ்சுதானே இருக்கு. அதுக்கே ஓவருன்னா எப்படி?? :)))))))))


 7. Jay said...

  படங்களைப் பார்க்கும் போது யாழ்ப்பாண வீட்டில் உள்ள லக்கரும், பிரவுணியும்தான் ஞாபகம் வருது... நல்ல சீவன்கள்... நன்றி மறவாதவை.. என் வாழ்த்துக்களை அம்மையாருக்குச் சொல்லிவிடுங்கள்... :)


 8. Anonymous said...

  உத்திரட்டாதியில் 'என்னை' மாதிரியே யாரோ ஒருவர் பிறந்திருக்கிறார் என ஆவலோடு வந்தால், பிறந்தவர்கள் யாரோ ஒருவர் இல்லை, பலர்?

  இதெல்லாம் ஓவரா இல்லை?


 9. rv said...

  ரொம்ப நன்றிங்க மயூரேசன்,

  இப்ப என்ன நாய்க்குட்டி வச்சுருக்கீங்க?


 10. rv said...

  அனானி,
  உங்களை மாதிரியா?? நீங்க?

  ஓவர் இல்லையே.. அஞ்சு தானே.. பத்து வரைக்கும் அலவுட். அதுக்கு மேல போனாத்தான் கோட்ட எக்ஸீடட்!


 11. Geetha Sambasivam said...

  ராமநாதன், எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம், நிஜமாவே அம்மா நாயோ அல்லது அம்மாப் பூனையோ தன்னோட முதல் குட்டியைத் தின்னுடுமா? இது எவ்வளவு தூரம் உண்மை? யாராவது பார்த்திருக்கீங்களா? இது ஒரு பொய்ச் செய்தி அதாவது myth என்று ஒரு புத்தகத்தில் படித்தேன். நீங்கள் ஒரு மருத்துவர் என்ற முறையில் இதற்கு ஏதும் அறிவியல் காரணம் இருக்குமானால் சொல்லுங்கள்.


 12. Geetha Sambasivam said...

  ராமநாதன், எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம், நிஜமாவே அம்மா நாயோ அல்லது அம்மாப் பூனையோ தன்னோட முதல் குட்டியைத் தின்னுடுமா? இது எவ்வளவு தூரம் உண்மை? யாராவது பார்த்திருக்கீங்களா? இது ஒரு பொய்ச் செய்தி அதாவது myth என்று ஒரு புத்தகத்தில் படித்தேன். நீங்கள் ஒரு மருத்துவர் என்ற முறையில் இதற்கு ஏதும் அறிவியல் காரணம் இருக்குமானால் சொல்லுங்கள்.


 13. Jay said...

  எங்க வீட்ல சாதாரண நாய்தான்...!!! :)


 

வார்ப்புரு | தமிழாக்கம்