206. Star Cricket

டிஸ்கி முதலில் முழுசா படிக்கவும்.

_____________________________
இதவிட ஒரு pointless சானல் ஆரமிக்க முடியுமா? ரவி சாஸ்திரி அஞ்சு நாள் டொக்கு போட்டது முதக்கொண்டு பக்கத்துதெரு ஸ்கூல் பசங்க 88-ஆம் வருஷம் ஆடின டோர்னமெண்ட் வரைக்கும் ஒவ்வொண்ணுத்தையும் திரும்ப திரும்ப போட்டு அல்வா கிண்டுறாங்க.

ஸ்பான்சர்கள் தயவுக்காக இருக்கற இந்தியாவின் அதிக வருவாய்தர மாட்டை (அதான்பா cash cow) முழுக்க கறக்க ரூபர்ட் முர்டாக்குக்கு மற்றுமொரு சாதனம் (ஹி ஹி.. சிவப்பு மக்கள்ஸ்... அவுஸ்திரேலிய வெளிநாட்டு முதலாளிய திட்டியாச்சு. திருப்திதானே?).

ஏற்கனவே எந்த சானல், எந்த நியுஸ் பார்த்தாலும் இதே கிரிக்கெட்டின *ழவு. சச்சின் மூச்சா போனார், ட்ராவிட் டாட்டா காட்டினார்னுட்டு...

இதுக்கு நடுவுல தனி காமெடி ட்ராக்கா ICLனு என்னவோ சண்டை வேற. ஒரு pie அ பிரிச்சுக்கறதுக்கு எத்தன அடிதடி? அப்படியாவது விளையாடிக் கிழிக்கறாங்களான்னா அதுவும் இல்ல.

அவனவன் என்னமோ மகாவிஷ்ணுவோட அடுத்த அவதாரமாட்டம் டிவியிலும் பேப்பரிலும் விடுற பந்தா என்ன, அலப்பறை என்ன.. தாங்கலடா சாமீகளா!

ஆனா கிரிக்கெட்னு எழுதி சச்சின் பேரச் சொல்லி எலி புழுக்க வித்தாலும் வாங்கி வாயில் போட்டுக்குற ஜனங்க இருக்குற வரைக்கும் இவனுங்களச் சொல்லி என்ன? கம்பெனிகளையும் தப்பு சொல்லமுடியாது. ஆட்டக்காரங்களையும் தப்புச் சொல்லமுடியாது. வழக்கம்போல மக்கள்ஸ் மேலதான் தப்பு சொல்லணும். பின்ன, மேட்ச் பிக்ஸிங், டீம் பாலிடிக்ஸ், செலக்ஷன் பாலிடிக்ஸ், அட்வர்டைஸ்மெண்ட்ல மட்டும் பார்முன்னு அவங்க எத்தன அடி கொடுத்தாலும் நம்ம இந்திய மக்கள் நல்லவங்களாவே இருக்காங்களே.

கடசியா ஸ்டார் கிரிக்கெட்டுக்கு eat, live, sleep cricket 24x7 னு அட்வர்டைஸ்மெண்ட்ல சொல்றாங்க.

நான் சொல்றேன் - F*** cricket!

--------------------------
டிஸ்கி: ரொம்ப நாள் கோவம். அதுனால் கொஞ்சம் பிலோ தி பெல்ட் தான். வேண்டாதவங்க படிக்காம ஸ்கிப் செஞ்சிருங்க.

ரஜினியத்திட்டினா பெரியாள் ஆகலாம். இன்னும் சில ஆளுங்களத் திட்டினா அறிவுஜிவி ஆகலாம். அதுமாதிரி ரொம்ப நாள் கழிச்சுவந்து பப்ளிசிடிக்கு என்ன செய்யிறது? அதான் கிரிக்கெட்ட திட்டலாம்னுட்டு...சரிதானே?

5 Comments:

 1. Anonymous said...

  எனக்கென்னவோ இது ஜீ டிவி, ஸ்டார் டிவி போட்டியால வந்த வினை போல இருக்கு.

  ஜீ டிவி ICL ஐ ஆதரிக்க, ஸ்டார் டிவி BBCI யோட கூட்டு சேர....

  இன்னும் என்னென்ன கூத்து நடக்கபோகுதோ


 2. இலவசக்கொத்தனார் said...

  வந்தாச்சு சரி. அதுக்காக டெய்லி ஒரு பதிவு எல்லாம் போடக்கூடாது. வாரம் ஒரு பதிவு போதும். என்ன.


 3. கைப்புள்ள said...

  //ஆனா கிரிக்கெட்னு எழுதி சச்சின் பேரச் சொல்லி எலி புழுக்க வித்தாலும் வாங்கி வாயில் போட்டுக்குற ஜனங்க இருக்குற வரைக்கும் இவனுங்களச் சொல்லி என்ன?//
  LOL :)

  //ரொம்ப நாள் கோவம்.//
  //அதுமாதிரி ரொம்ப நாள் கழிச்சுவந்து பப்ளிசிடிக்கு என்ன செய்யிறது? அதான் கிரிக்கெட்ட திட்டலாம்னுட்டு...சரிதானே?//

  ஹி...ஹி...Everything is fair in Love and Blogs.
  :)


 4. rv said...

  மஸ்கிட்டோ மணி,
  ICLல யாரு விளையாடறாங்க.. என்ன செய்றாங்கன்னே ஒண்ணும் புரியமாட்டேங்குது..

  செப்டம்பர்ல தானே டோர்னமெண்ட்.. அதுக்குள்ள இன்னும் நிறைய தமாஷ் இருக்கும்...


 5. rv said...

  கொத்ஸ்,
  வாரம் ஒண்ணும் போதும்னா.. வேணாம்.. என் வாயக் கிண்டாதீரும்.

  உப்புமா போட கணக்கு உண்டா? காலம் உண்டா? எந்நேரமும் சுபவேளைதான்!


 

வார்ப்புரு | தமிழாக்கம்