187. May Your Soul Rest in Peace, Oh Dear Tamil


இந்தத் வருத்தமான நேரத்தில் அன்னாரின் பெருமைகளையும், அவளின் புதல்வர்களின் பண்பாட்டையும் நினைத்து பெருமிதம் கொள்ளும் விதமாக, ஒருநிமிடம் மவுனம் காத்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தானை செய்வோம்!

Mei Uw Rust van de Ziel in Vrede!

Mai votre repos d'âme dans la paix !

Mai Ihr Seele Rest im Frieden!

Maggio il vostro resto di anima nella pace!

Май ваши остальные души в мире!

1. கொஞ்ச நேரம் கொஞ்சும் நேரம்

2. ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடிக்கவும் - இராதா ஸ்ரீராம்

SUPPORT UNICEF for free!!

37 Comments:

 1. குமரன் (Kumaran) said...

  அதுக்குள்ள நீங்க பதிவு எழுத வந்து ரெண்டு வருடம் ஆச்சா? வாழ்த்த முடியாத மாதிரி இடுகையைப் போட்டுட்டீங்களே? :-(


 2. இலவசக்கொத்தனார் said...

  கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் இருந்த தமிழை இப்படி மண்ணுக்குள்ள புதைச்சு கல்லும் நட்டுட்டையேய்யா!!!

  நல்லா இரு சாமி, நல்லா இரு!!


 3. மணியன் said...

  எட்டு கோடிமக்களின் இதயத் தாமரையை உங்கள் மருத்துவச் சோதனைக்கு ஆளாக்கி விட்டீர்களே, ஐயகோ :(

  இந்த சோதனையை மூன்றாவது வருடமும் தொடரப் போகிறீர்களா :(((

  வைதாரையும் வாழவைக்கும் முருகன்போல கொன்றாரையும் தமிழ்த்தாய் காப்பாள் என்ற தைரியம் தானே !


 4. இலவசக்கொத்தனார் said...

  கொன்னுட்டீங்க போங்க! :))


 5. இராம்/Raam said...

  //187. May Your Soul Rest in Peace, Oh Dear Tamil //

  அடடா என்ன அழகா சுத்த தமிழிலே எழுதியிருக்கீங்க :)


 6. பினாத்தல் சுரேஷ் said...

  கொன்னுட்டியேப்பா!!!!!

  தமிழுக்கு ரெண்டாண்டு தண்டனை போதாதா??

  இப்படி எவ்வளவோ எழுதணும்..

  இந்தப்பதிவோடவோ முடிஞ்சுடப்போகுது கொண்டாட்டங்கள்? அப்பால பாக்கலாம்.


 7. Boston Bala said...

  :)


 8. ஜெயஸ்ரீ said...
  This comment has been removed by the author.

 9. Geetha Sambasivam said...

  சிரிக்கலாம்னு தான் வந்தேன், ஆனால் இந்த மாதிரி விழா எடுத்து இருக்கீங்களே? அப்போ நாங்க எல்லாம் எப்படி விழா எடுக்கிறதுன்னு யோசனை வந்துடுச்சு; போகட்டும், கொஞ்சமாச் சிரிக்கிறேன் :)


 10. ஜெயஸ்ரீ said...

  யாருக்கு என்ன ஆச்சோன்னு பதறிப்போய்
  வந்து பாத்தா ....

  போன பதிவுல ரெண்டாவது தெவசம் வருதுன்னு சொன்னப்பவே கேக்கணும்னு நினச்சேன். உங்க வலைப்பக்கத்துக்கு பிறந்தநாள் னா அது எதுக்கு (அபசகுனமா யாருக்குன்னு கேக்கவேண்டாம் னுதான்) தெவசம் னு ))

  தமிழ்த்தாய் எதையெதையோ தாங்கியிருக்கிறாள். உம் வலைப்பக்கம் அவளை என்ன செய்துவிடும் ?

  இரண்டாவது பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!


 11. தாணு said...

  கல்லறை get-up, super. தமிழ் அத்தனை சீக்கிரம் அழியுமா? திட்டத் திட்ட திண்டுக்கல்லுன்னு தெரியாதா?


 12. சின்னவன் said...

  வோல்காவில் இருந்து காவேரி வரை !

  ஆறுகள்
  உலகின் அழகு அதிசயங்கள்
  கால வெள்ளம் அடித்துச் செல்லும்
  நீல பாதைகள்.
  ஒருவகையில் நம்பிக்கை.
  ஒருவகையில் எச்சரிக்கை.
  நீ ஆறுகளின் காதலன்.
  இல்லை ஆறுகளின் பைத்தியம்.


  வோல்காவில் வோட்கா குடித்தவன் நீ
  காவிரியில் கஞ்சிக் குடித்தவன் நீ

  சொந்தத்தில் செல்போன்
  வாங்கலாம். அனுபவம் வாங்க
  முடியுமா?

  எழுத்து ஒரு விசித்திரமான
  மாயமான். அது தன்னைத்
  துரத்துபவனுக்குக்
  குட்டி போட்டுவிட்டு
  ஓடிக்கொண்டேயிருக்கிறது.
  குட்டிகளில் திருப்தி அடையாத
  மனிதன் தாய்மானைப் பிடிக்கும்
  வேட்டையில் தவிக்கத் தவிக்க
  ஓடிச் செத்துப் போகிறான்.


  தூண்டில்களின் எண்ணிக்கை
  அதிகமானதற்காய் மீன்களின்
  எண்ணிக்கை
  குறைந்துவிடவில்லை.

  உள்ளே எதையும் ஒளிக்காதே.
  துணிந்துவிடு. துப்பிவிடு.

  ஆசையைத் துப்பு.
  ஞானம் வரும்.
  அச்சம் துப்பு.
  வீரம் வரும்.
  ரகசியம் துப்பு. தூக்கம்
  வரும்.
  எழுத்தை தூப்பு
  செருப்போடு பாராட்டு வரும் !
  மரம் வளர். கூடவே மனித மூளையும் வளர் !

  வாழ்க வள்ர்க !


 13. பத்மா அர்விந்த் said...

  கிட்டதட்ட ஒரே சமயம் பிளாக ஆரம்பித்திருக்கிறோம்:) வாழ்த்துக்கள்


 14. சேதுக்கரசி said...

  இது ஆனாலும் கொஞ்சம் ஓவர்.. சொல்லிப்புட்டேன்.


 15. Unknown said...

  ஹா..ஹா:))சூப்பர்.சிரிச்சு சிரிச்சு வயித்து வலியே வந்துடுச்சுப்பா.....

  வெற்றிகரமான மூன்றாம் ஆண்டு அமைய வாழ்த்துக்கள்


 16. சேதுக்கரசி said...

  நம்ம பின்னூட்டத்தைக் காணோமே?


 17. G.Ragavan said...

  ம்ம்ம்....ஆனாலும் ஒங்களுக்குப் பேராசை ரொம்ப. பொறுப்பு முழுசையும் நீங்களே ஏத்துக்கனும்னு நெனைக்கிறீங்களே. அது நல்லாயில்லை சொல்லீட்டேன். நீங்க எடுத்த வேலையில பக்கத்துணையா இருந்து பின்னூட்டமிட்டு வளர்த்த எங்களையெல்லாம் மறக்கலாமா? நியாயமா? செப்புக நண்பா செப்புக!


 18. G.Ragavan said...

  ஒரு சின்ன திருத்தம்

  நீங்க எடுத்த வேலையில பக்கத்துணையா இருந்து பின்னூட்டமிட்டு வளர்த்த இன்னமும் வளர்க்கப்போகும் எங்களையெல்லாம் மறக்கலாமா? நியாயமா? செப்புக நண்பா செப்புக!


 19. துளசி கோபால் said...

  நடப்பது நடந்தே தீரும்.
  எதுவும் நம் கையில் இல்லைன்னு அப்பவே( ???) சொல்லிவச்சுருக்காங்க
  பெரியவுங்க.

  மூணாம் வருஷம் ஆரம்பிச்சுருச்சு:-)

  வாழ்த்து(க்)கள்.


 20. Unknown said...

  ஜி.ரா ரைட்டாத் தான் சொல்லியிருக்கார்.. அப்படி எல்லாம் மொத்தப் பெருமையையும் ஒருத்தரேத் தட்டிட்டுப் போக விட்டுருவோமா.....சரி சரி ஆனது ஆயிடுச்சு ஆக வேண்டிய காரியத்தைப் பாருங்க..


 21. Geetha Sambasivam said...

  "சின்னவரா" இருந்தாலும் "பெரியவர்" மாதிரிக் கவிதை எழுதி இருக்கார். கொஞ்சம் போஸ்டை குமரன் சொன்ன மாதிரி நல்லாவே போட்டிருந்திருக்கலாம். இன்னும் கொஞ்சம் பேர் வாழ்த்தி இருப்பாங்க! நேத்திக்கு வந்துட்டுப்போனதும் வாழ்த்தவே இல்லையேனு மனசு உறுத்தலா இருந்தது. வாழ்த்துக்கள்.


 22. ramachandranusha(உஷா) said...

  வாழ்த்துகள் ஐயா வாழ்த்துக்கள். ஆனால் நீ போட்ட படத்தின் கருத்தை நான் வன்மையாய் கண்டிக்கிறேன்.(என்னமோ என்னை சொல்லுகிறா மாதிரி இருக்கு) அப்படி செப் ஒத்து நைனா.
  ராதா, ரஷ்யாக்கு படிக்க போனா ரஷ்யக்களை வந்துடுமா? ஏதோ ஒரு காராசேவ் படம்னுக்கூட தெரியாத அப்பாவியா இருக்கீங்களே
  இந்த படத்தை காட்டி பொண்ணு கேட்கும் அக்காக்கள் பார்வைக்கு- அப்படியோ வோட்கா மகாத்மியம்னு பய, ஒரு பதிவு போட்டானே அதையும் காப்பி எடுத்து பொண்ணு வூட்டுக்காரங்களுக்கு அனுப்பிடுங்க :-)


 23. ilavanji said...

  ராம்ஸ்,

  படம் கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு! :(

  இரண்டாமாண்டு நிறைவுக்கு வாழ்த்துக்கள்! நீங்க எனக்கு ஜீனியரா?! என்ன ஆச்சரியம்! :)


 24. வல்லிசிம்ஹன் said...

  இரண்டு பேரும் ஒன்றா!!!
  அட ராமனாதா.

  நல்லாத்தானே எழுதரீங்க. எதுக்கு இந்த அடக்க சீனெல்லாம்:-0
  இன்னும்ம்நிறைய எழுதி சிரிக்க வைக்கணும்.
  உடனடியாப் பொறந்தநாள் கொண்டாட்டம்னு பதிவு போடுங்க.


 25. rv said...

  குமரன்,
  ஆச்சுங்க. ஹி ஹி. கலிங்கத்துப்பரணி மாதிரி வெற்றிய பறைசாற்ற பா எழுதலாமே? ஓவராத்தான் போறேனோ? :))

  கொத்ஸு,
  கல்தோன்றி மண்தோன்றா காலத்துக்கு முன்னாடியே பொறந்துட்டனதால கல், மண் எல்லாம் எப்படி இருக்கும்னு காமிக்க வேணாமா? அதான் சிம்பாலிக்கா..

  பார்த்தீரா, நம்ம கலிகாலம், ஒரே பின்னூட்டத்துலேயே எல்லாருக்கும் பதில் சொல்ல வேண்டியிருக்கு, :))

  மணியன்,
  ஹி ஹி.. எல்லாமே ப்ராப்பரா சோதனை செஞ்சாத்தானே. இங்கேயே தொடரலாம்னுட்டுதான் ஐடியா. தெய்வானையா வள்ளியா சர்ச்சை முடியறவரைக்கும் முருகன் வந்து பொதுப்பாட்டு பாடச்சொல்லணும்.

  கொத்ஸு,
  கூட்டணில நீரும் இருக்கீரா இல்லியா?

  இராம்,
  இங்க எழுதறதே சுட்டத்தமிழு! இதுல என்ன சுத்தம் வேண்டிக்கிடக்குன்னுட்டுத்தான் போட்டேன்! தார்டின் கொண்டு வந்திருந்தா க்யூ ப்ளீஸ்!! :)))))))


 26. rv said...

  பினாத்தலார்,
  கொண்டாட்டங்கள் தானே! இன்னும் இருக்கு! வெயிட்டீஸ்!

  பாபா,
  தமிழெதிரின்னு முத்திரை குத்திடப்போறாங்க.

  கீதா சாம்பசிவம்,
  அட என்னங்க இவ்ளோ டச்சியா இருக்கீங்க? சும்மா டமாஸுக்கு. கண்டுக்கப்படாது!

  ஜெயஸ்ரீ,
  //தமிழ்த்தாய் எதையெதையோ தாங்கியிருக்கிறாள். உம் வலைப்பக்கம் அவளை என்ன செய்துவிடும் ?//
  ஹி ஹி. எதையும் தாங்கும் இதயம்னு தமிழ்ல தானே இருக்கு. :))

  நன்றி

  அத்தை,
  திட்ட திட்ட திண்டுக்கல்லா? அப்படின்னா என்ன அர்த்தம்? திண்டுக்கல் ஆளுங்கள்லாம் கல்நெஞ்சம் படைச்சவங்களா? :P
  நன்னி.


 27. rv said...

  பவுர்ணமி பாண்டியனே!
  என்னே நின் புலமை! என்னே நின் மொழிவளம்! என்னே நின் சொற்குவை!

  "எடுத்தது கண்டனர்! இற்றது கேட்டனர்!" என்பதைப்போல இமைப்பொழுதில் கவிதை புனைந்த நீரும் என்னோடு சேர்ந்து பலகாலம் வாழ்வீராக! :)

  தேன் துளி,
  ஒரே சமயத்திலா? நீங்க உருப்படியா ப்ளாச் எழுத ஆரமிச்சதுக்கு opposite reactionஆ என்னையும் எழுத வச்ச (நியுட்டனின்) விதிய நினச்சு அதிசயமாத்தான் இருக்கு. :)

  சேதுக்கரசி,
  எல்லாமே ஓவராயிட்டதால தான புதைச்சு கல்ல நட்ருக்கோம்!

  அ.உ.ஆ.செ.கு.மு.க செயலாளரே,
  நன்றி நன்றி

  சேதுக்கரசி,
  பின்னூட்ட நோட்ஸெல்லாம் ஒழுங்கா படிக்காம இப்படி அப்பாவியா கேள்வி கேக்கறீங்களே! :))


 28. rv said...

  ஜிரா,
  உங்களுக்கும் பங்கு வேணும்கறீங்களா? உயிர் போற நேரத்துலயும் நீங்களும் குமரனும் சொல் ஒரு சொல்னெல்லாம் CPR செஞ்சும் காப்பாத்த முடியலியே!

  இன்னமும் வளர்க்கபோகும்னு சொல்றீங்க. ஆனா ரொம்ப வளர்க்கக்கூடாதுன்னு ரூல்ஸெல்லாம் போட்டுருக்காங்களே!

  அக்கா,
  //நடப்பது நடந்தே தீரும். எதுவும் நம் கையில் இல்லைன்னு அப்பவே( ???) சொல்லிவச்சுருக்காங்க
  பெரியவுங்க.
  //
  ஹூம். என்ன செய்யிறது? தெரிஞ்சுத்தான் சொல்லிட்டு போயிருக்காங்க.

  தேவ்,
  //அப்படி எல்லாம் மொத்தப் பெருமையையும் ஒருத்தரேத் தட்டிட்டுப் போக விட்டுருவோமா//
  கூட்டணி வப்போமான்னு கேக்கறீங்களா? இடஒதுக்கீடு வேணுமின்னு கேக்குறீங்களா? :))

  கீதா சாம்பசிவம்,
  வாழ்த்துகளுக்கு நன்னி! தமிழ் எதையும் தாங்கும். இதையும் தாங்கும். இல்லாமல்யே இத்தன வருஷம் இருக்கு??


 29. rv said...

  உஷாக்கா,
  எல்லாருக்கும் அவங்களப்பத்தி சொல்ற மாதிரியே இருக்கே. அதான் ஏன்? இதான் ஒண்ணு சொல்வாங்க. "நாம என்ன செஞ்சோம்னு அடுத்தவங்களா சொல்லணும். நமக்கே தெரியாதா?"ன்னுட்டு. ஹி ஹி.

  பட விவகாரத்த கிளறி நான் கொடுத்துகிட்டிருந்த அல்வாவ கல்லாக்கினதே நீங்கதான். இதுல என்னோட அஞ்சால் அலுப்பு மருந்து மேட்டரெல்லாம் வேற மறக்காம நியாபகம் வச்சு இன்றைக்கு பமகவின் நம்பர் டூவான என்னை தாக்கிவிடறது தற்செயல்தானா முன்னாள் பமக செயலாளினி அவர்களே?

  இளவஞ்சி,
  நன்றி! சீனியர் ஜூனியர்னு வித்தியாசம் பார்க்காம எல்லாரும் சேர்ந்து தமிழ ராக் பண்ணிருக்கோம் போல! :)

  வல்லிசிம்ஹன்
  உங்க பெருந்தன்மையா இல்ல எதுனாச்சும் வஞ்சப்புகழ்ச்சியா? நாளைக்கே யாராவது வந்து உங்க பின்னூட்டத்துல இருக்கிற உள்குத்த எடுத்துக்காட்டி காத்து பிடுங்கறவரைக்கும் நான் கொஞ்சம் சந்தோஷப்பட்டுக்கறேன்.

  நன்றி. நன்றி.


 30. நாமக்கல் சிபி said...

  தமிழைக் கொலை செய்யும் தொழிலா உம்முடையது? அதுவும் இரண்டு ஆண்டுகளாகவா?

  சரி.சரி.. வாழ்த்துக்கள்!


 31. வல்லிசிம்ஹன் said...

  உள்குத்து எல்லாம் எழுதற அளவு எனக்குப் போதாது .
  போட்டோலே இருக்கிறவரும் நீங்களும் ஒண்ணானு எழுதிட்டேன்.

  நான் சாதுனு ,
  ரங்கா இருக்கார் இல்லியா, அவர்கிட்டே கேளுங்க.சொல்லுவார்:-)
  மீண்டும் வாழ்த்துக்கள். நமக்கு இந்த க்ரேவ்யார்டு,கல்லு இதெல்லாம் கொஞ்சம் பயம். :-) அதுதான்...


 32. Anonymous said...

  அட பாவிங்களா! கன்னித் தமிழைக் கற்பழிச்சிங்க. இரத்தக் கண்ணீர் வடிச்சேன். இப்போ கொண்டு புதைச்சிட்டீங்களா?. கடன்காறப் பசங்களா!
  பாருங்கடா! உங்க எல்லோரையும் முட்டிக்கு முட்டி தட்டி உள்ளுக்கு தள்ளுறன்.

  புள்ளிராஜா


 33. VSK said...

  அடுத்த தெவசம் யாருக்கு?

  வரிசையா வருதே!

  அழுது அழுது கண்ணு வீங்கிப் போச்சு!

  நல்லா இருங்க சாமி!

  :((


 34. கார்த்திக் பிரபு said...

  neenga than ilavasa kothnaarunnu iththani nal theiryama poche


 35. Hariharan # 03985177737685368452 said...

  இராமநாதனின் 200வது பதிவுக் கொண்ட்டாட்டக் கல்லறையை இலவசமாகக் கட்டியது கொத்தனாரா??

  "ஜீன்ஸ்" போட்டுத் திரிந்தாலும் ஜீன்கள் வழியாக தமிழ்மக்களின் உள்ளங்களில் குடியிருக்கும் தமிழைப் புதைத்து அஞ்சலி செலுத்தும் பதிவுக்குள்ளே ஒரே குடியிருந்த கோவில் எபெக்ட்டா இருக்குதே!

  வாழ்த்துக்கள்! வெற்றிகரமான ரெட்டைக் குதிரைச்சவாரிக்கும் சேர்த்துத்தான் :-))


 36. Hariharan # 03985177737685368452 said...

  இராமநாதனின் 2வது ஆண்டு வலைப் பதிவுக் கொண்ட்டாட்டக் கல்லறையை இலவசமாகக் கட்டியது கொத்தனாரா??

  "ஜீன்ஸ்" போட்டுத் திரிந்தாலும் ஜீன்கள் வழியாக தமிழ்மக்களின் உள்ளங்களில் குடியிருக்கும் தமிழைப் புதைத்து அஞ்சலி செலுத்தும் பதிவுக்குள்ளே ஒரே குடியிருந்த கோவில் எபெக்ட்டா இருக்குதே!

  வாழ்த்துக்கள்! வெற்றிகரமான ரெட்டைக் குதிரைச்சவாரிக்கும் சேர்த்துத்தான் :-))


 37. rv said...

  சிபி,
  நன்றி.

  வல்லிசிம்ஹன்,
  போட்டோல இருக்கறவரும் நானும் ஒண்ணா? இன்னும் இந்த சந்தேகமே தீரலியா? :)))

  உள்குத்து மேட் ஈஸின்னு புத்தகம் போட்ட மகளிரணியே நிறைய இருக்காங்க. (இதுக்கு யார்கிட்டேர்ந்து நானில்லை பின்னூட்டம் வரும்னு கெஸ் பண்ணுங்க பார்ப்போம்) :)))))))))))

  புள்ளிராஜா,
  தமிழுக்கு நீங்களும் புள்ளிகுத்தணும் பார்த்திருக்கீங்க. சரி கொடுப்பினை இல்லை போனாப்போவுது விடுங்க.

  எஸ்.கே,
  திவச சாப்பாடில் எதுக்கு அழுகை வருது. காரம், உப்பே மட்டாத்தானே இருக்கும் இந்தப்பதிவ போல? :))))

  கார்த்திக் பிரபு,
  நான் தான் கொத்தனார். இல்லேன்னு கொத்தனார ப்ரூவ் பண்ணச்சொல்லுங்க. :))

  ஹரிஹரன்
  கட்டினது நான் தான். ஆனா பேரு மட்டும் கொத்தனாருது. என்ன அக்கிரமம் பாருங்க.
  நன்றி.


 

வார்ப்புரு | தமிழாக்கம்