182. செட்டிக்கோட்டையில் ஒரு வெட்டி - 2

காரைக்குடி திரும்பி வரும் வழியில், ஒரு கிராமத்தில் பெரிய மைதானத்தில் பள்ளிக்குழந்தைகள் உச்சிவெயிலையும் பொருட்படுத்தாமல் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தனர். லைவ் வர்ணனை எல்லாம் லவுட் ஸ்பீக்கரில் அமர்க்களப்பட்டுக்கொண்டு ஏதோ பள்ளி விழா போலிருந்தது. வேடிக்கை பார்க்க ரெண்டு நிமிடம் நிறுத்தினால் முன்பு அவ்வழியே சென்றபோது தென்படாத போர்ட் ஒன்று தென்பட்டது. அரண்மனைச் சிறுவயல் ஜமீன்தார் ப.முத்துராமலிங்கத்தேவர் நினைவுச்சின்னம் என்று.

மெயின் ரோட்டிலிருந்து சற்றே உள்ளடங்கினாற்போல ஒரு பீடம். அதன் மேல் ஒரு bust. தோளுக்கும் தலைக்கும் சம்பந்தமில்லாதாவாறு மேற்படி தேவரின் ஜென்மப்பகையாளி ஒருவர் செய்த காரிகேச்சர் போன்று இருந்ததை பார்க்க அருகில் சென்றால் வழக்கமாய் கவனிப்பாரற்று கிடக்கும் தமிழக சிலைகளுக்கு நடக்கும் அனைத்து டெக்கரேஷன்களோடும் சிரித்துக்கொண்டிருந்தார் தேவர். இவர் தான் அந்த பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரா என்று தெரியவில்லை. கண்டதேவி ஒன்றும் அவ்வளவு தூரத்தில் இல்லை. அவராகவும் இருக்கலாம் என்று மேலும் விவரமாக போர்ட் கிடைக்குமா என்று சுற்றுமுற்றும் தேடினால் இன்னும் சற்று உள்ளடங்கினாற்போல ஒத்தையடி பாதையின் கடைசியில் ஒரு வேலி. அதில் வரிசையாக துணிமணிகள் காயப்போடப்பட்டிருந்தன. அவற்றை விடவும் கண்களை பறித்தது சிதிலமடைந்த ஒரு மண்டபமும் தொல்லியல் துறையின் பளிச்சென்ற அறிவிப்புப்பலகையும். முட்புதர்கள் மண்டிக்கிடக்கும் அந்த மண்டபம் எந்நேரம் இடிந்து விழும் என்கிற துர்பாக்கிய நிலையிலும் சகலவிதமான எண்டர்டெயின்மெண்ட் செண்ட்ராக சிலர் பயன்படுத்திவருகின்றனர் என்பதற்கான ஆதாரங்கள் சுற்றிலும்.


போர்டிலிருந்த விவரம்: சிவகங்கை மன்னர்களால் கட்டப்பட்டு பின் மருதுபாண்டியர்களிடம் வந்துள்ள பெரிய கோட்டை. அவர்கள் பலசமயம் இங்கே தங்கி ஆங்கிலேயருக்கு எதிராய் போர் தொடுத்துள்ளனர். அப்படிப்பட்ட கோட்டை இன்றைக்கு வெறும் சிதிலமடைந்த மண்டபமாய் சுருங்கியிருக்கிறது. தமிழகத்தில் சுமாரான ஷேப்பில் கோட்டைகள் மற்றும் அரண்மனைகள் என்றால் விரல்விட்டு எண்ணிவிடலாம். சேர சோழ பாண்டிய காலத்து சமாச்சாரங்கள் முற்றிலுமாக அழிந்துவிட்டன. கோயில்கள் நிலைத்திருக்கும் அளவிற்கு கோவின் இல்லங்கள் நிலைக்காமல் போன மர்மம் என்னவோ?

எதிர்பாராமல் மருதுபாண்டியர்களின் வாழ்க்கையில் மற்றுமொரு லொகேஷனை பார்த்த திருப்தி. ஆனால் மருதுபாண்டியர்கள் பசிக்கு உதவுவார்களோ? அதனால் காரில் ஏறிய க்ஷணமே மருதுபாண்டியரை மறந்து சுபலட்சுமியைத் தேடி பயணம் தொடர்ந்தது. மதியம் ரெண்டு மணிக்கு ரெஸ்டாரண்டின் வாசலிலேயே நான்கு டேபிள் போட்டு கூரை வேய்ந்த உணவுக்கூடத்தில் அமர்ந்துகொண்டோம். செட்டிநாடு அரண்மனைகளுக்கு மட்டுமல்லாமல் உணவுக்கும் பிரபலமாயிற்றே. குழிப்பணியாரம், ஆப்பம், செட்டிநாட்டு 'கர்ரி'கள் பல. சைவபட்சினிகளுக்கு ஐட்டம்ஸ் கம்மிதான். மெட்ராஸிலும் இன்னும் எங்கெங்கேயெல்லாமோ செட்டிநாடு உணவு சாப்பிட்டிருந்தாலும் அவர்கள் ஊரில் சாப்பிடுவது போல வருமா என்று நல்ல பசிவேளையில் சித்தம் கலங்கி கனவு கண்டுகொண்டிருந்த எனக்கு பேரிடியாய் இன்முக சர்வர் வந்து மதியம் மூன்றுமணி மேல் சந்தியா வேளையில் சுபயோக நேரத்தில்தான் செட்டிநாடு உணவு கிடைக்கும் என்றார். இதைக் கேட்டு கடுப்பான என்னிடம் காரைக்குடியில் சாப்பிடும் நூடுல்ஸ் கூட செட்டிநாட்டு உணவுதானே என்று நேரம் காலம் புரியாமல் வேறு கடித்தார். ஒருவழியாக புலாவும் சில்லி பனீரும் அடித்துவிட்டு அடுத்து ஆயிரம் ஜன்னல் வீட்டிற்கு செல்வோமே என்று முடிவெடுத்தோம்.

சர்வர் அந்த ஹோட்டலுக்கு பக்கத்தில் தான் இருப்பதாக வேறு சொன்னார். வழி கண்டுபிடிப்பது ஒன்றும் அவ்வளவு சிரமமாக இல்லை. பல இடங்களில் நெடுஞ்சாலைத்துறையே ஆயிரம் ஜன்னல் வீடு என்று போர்டில் கோடு போட்டு ரோடு காண்பிக்கிறார்கள். ஒருவழியாக கண்டுபிடித்துச் சென்றால் வீடு ஒன்றும் அவ்வளவு பெரிதாக இல்லை வெளியிலிருந்து பார்க்க. இதில் எப்படி ஆயிரம் ஜன்னல் என்று எண்ணியவாறே கதவைத்தட்டினேன். ஒரு சிறுமி வந்தாள். இது ஆயிரம் ஜன்னல் வீடா என்றேன். சற்று முழித்துவிட்டு "யூ மீன் தவுசண்ட் விண்டோ ஹவுஸ்?" "யா" "யா, திஸ் இஸ் இட்". நாங்கள் வெளியூரிலிருந்து வந்த சுற்றுலாப்பயணி என்று அவளுக்கு புரியவைத்து சுற்றி உலாவலாமா என்றால் "திஸ் இஸ் அ ப்ரைவேட் ஹவுஸ்" என்று போடு போட்டாள். என்ன அம்மணி, ஊர் பூராவும் போர்ட் வைத்திருக்கிறார்களே, என்ன வெளியிலிருந்து பார்த்துச் செல்வதற்கு மட்டும்தானா என்று நான் கேட்டு அவளுக்கு புரியவா போகிறது என்று விட்டுவிட்டேன். வெளியிலிருந்தே பார்த்து ஒரு கும்பிடு போட்டாகிவிட்டது.

தமிழக சுற்றுலாத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறையினரின் நக்கலை நினைத்து கோபம் வந்தாலும் செய்வதற்கு ஒன்றுமில்லை. சுபலட்சுமி ஆசாமியும் முன்னரே சொல்லியிருக்கலாம். மறுபடியும் காரைக்குடியில் எங்களுக்குத் தெரிந்த ஓரே ஜீவன் சுபலட்சுமி சர்வரைப் பார்த்தால் 'சார், வேணாக்க ஆத்தங்குடி பெரிய மைனர் வீடு பாருங்களேன் ஆனால் திறந்துவிடுவார்களா என்று தெரியவில்லை' என்றார். அது எங்கேஎன்றால் சுமார் இருபது கிலோமீட்டர் செல்லவேண்டும் என்றார். ஆயிரம் ஜன்னல், ஏ.எம்.எம் போன்ற இன்னொரு அனுபவம் தேவையில்லை என்பதால் கானாடுகாத்தானுக்குச் செல்வோமென்று கிளம்பியாகிவிட்டது. காரைக்குடியிலிருந்து பத்துகிலோமீட்டரில் தான் அரியக்குடி இருக்கிறது. கர்நாட இசை லிஜண்ட் அரியக்குடி இராமானுஜையங்கார் ஊரான இதில் உள்ள நகரத்தார் கோயில் பிரசித்தம். முன்பொருசமயமே போயிருந்ததால் அதுவும் ஸ்கிப். அந்தக்கோயில் ஏன் நினைவுக்கு வருகிறதென்றால் கோபுரத்தின் மேல் அனுமாரா/கருடனா தெரியவில்லை. ஒருவர் இருப்பார். அவரைப் பார்த்து நாம் தேங்காயைக் கொண்டு சுவற்றில் போலிங்க் செய்யவேண்டும். தமாஷாக இருக்கும்.

எனிவே, இரண்டு நாள் தங்கியிருந்து பார்க்க விஷயம் இல்லாததால் பாக்கியிருந்த கானாடுகாத்தானைப் பார்த்துவிட்டு கிளம்புவதாக முடிவுசெய்தோம். அங்கேயாவது இதுவரை ஓவர் பில்டப் கொடுத்து கண்ணிலேயே காட்டாமல் விட்ட செட்டிநாட்டு அரண்மனையை பார்க்கவிடுவார்களா என்பது எம்.ஏ.எம் மீது பாரத்தைப் போட்டு கிளம்பினோம்.

(தொடரும்)
---
இன்னும் காளையார்கோயில் படங்கள்தொடர் என்று போட்டதால் மூன்றாவதாக ஒன்று இழுக்க வேண்டிய நிர்பந்தம். பொறுத்தருள்க.

--------
எம்.ஏ.எம் அருள்செய்தாரா இல்லையா? 'தாவணி போட்ட தீபாவளி'யும் 'கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா' என்று ஆடிய வண்ணத்துப்பூச்சியும் ஆடி அருளிய புனிதத்தலத்தை நான் காண முடிந்ததா இல்லையா? காத்திருப்பீர்! :)

58 Comments:

 1. துளசி கோபால் said...

  கோவில்ன்னா அங்கே சாமி.
  'கோ' இல்(லம்)ன்னா அங்கே "ஆ சாமி'

  அதான் அரண்மனைகளையெல்லாம் அடிச்சு நொறுக்கிடிடுச்சு நம்ம ஜனங்கள்.

  அப்ப 'செட்டிநாடு' ( இங்கே இப்படி ஜாதிப்பேரைச் சொன்னால் பரவாயில்லைதானே?)
  போனால் சினிமா வீடுகளைப் பார்க்க முடியாதா? (-:


 2. மணியன் said...

  நன்றாகவே ஊர் பொறுக்குகிறீர்கள் :))

  எவ்வளவு சிலைகள் அலங்கோலப்பட்டாலும் சிலை திறக்கும் ஆர்வம் மட்டும் தீராது நமக்கு.

  செட்டிநாட்டில்தான் ஏவிஎம் ஸ்டூடியோ ஆரம்பிக்கப் பட்டதாக சொல்வார்களே, பார்த்தீர்களா ? மனோரமா ஆச்சியின் பள்ளத்தூரும் வழியில் வந்ததா?


 3. தாணு said...

  இராமநாதன்,
  உண்மையாகவே உங்களுக்கு பொறுமையின் திலகம்னு பட்டம் கொடுக்கலாம். முட்டுற இடமெல்லாம் மூடியிருந்தாலும்கூட பயணத்தைத் `தொடர்'கிறீர்களே!!


 4. G.Ragavan said...

  அதெப்படிங்க. சரியா உள்ள விடாத எடமா வந்து ஒங்களுக்கு மாட்டீருக்கு! :-))

  முத்துராமலிங்கரோட படஹ்ட்தையும் போட்டிருக்கலாமே. எடுக்கலையா?

  செட்டிநாட்டுப் பொண்ணு இங்கிலீஸ் பேசுனாங்களா. ஆகா. எனக்குத் தெரிஞ்ச ஒரு செட்டியார் வீட்டுல ஒரு அம்மா ஜப்பான் மாதிரி இருந்தாங்க. அப்புறம் தெரிஞ்சது அந்த அம்மாவை அவங்க அப்பாம்மா தத்தெடுத்திருக்காங்கன்னு. ரங்கூன் மாதிரி வேற நாட்டுல தத்தெடுத்திருக்காங்க. ஏன்னா அந்த ஊர்லதான் இருந்திருக்காங்க. அவங்க தமிழ்தான் பேசுறாங்க. தமிழர் மாதிரிதான் நடப்பு செயல் எல்லாமே. அவங்க பிள்ளைங்களும் நல்லாத் தமிழ்த்தான். ஆனா பாக்க மட்டும் ரெண்டும் கலந்த மாதிரி இருப்பாங்க.


 5. rv said...

  அக்கா,
  என்ன வச்சு நீங்க சினிமா எடுத்தா தாராளமா பாக்கலாமே. :)) அடுத்த பதிவுல படம் காட்டறேன். என்னென்ன சினிமான்னு நீங்க தான் வந்து சொல்லனும். சரியா?

  //அப்ப 'செட்டிநாடு' ( இங்கே இப்படி ஜாதிப்பேரைச் சொன்னால் பரவாயில்லைதானே?)//
  இதுக்கு நான் பதில் சொல்லணுமா? அதான் நான் வுட்டது ரெட்டுல எழுதறேனே.. அது போதாதா?

  கிரகசாரம். பதிவு போட்டாலும் குத்தம். போடாட்டியும் குத்தம்.

  இத்தோடு இத்தருணத்தில் விட்டது சிவப்பு, விடாது கருப்பு, ஸ்பெஷல் / சாதா ஆப்பு, ராபின் ஹுட், வ. வா. ச, பா.கா.ச, சொ.செ.சூ, ராவணன், அசுரன், சாண்டா க்ளாஸ், அலாவுதீன், முகமது யூனுஸ், சர்வாண்டஸ், ராமதாஸ் ஐயங்கார், ராமகிருஷ்ண ஐயங்கார், லால் கிருஷ்ன அதவானி, எல்லாம் நானே என்றும் இப்பெயர்களின் கோப்பிரைர்கள் என்னிடம் உள்ளதால் இனி யாரும் சொம்பு, டபரா டம்ளர், டீ-ஷர்ட், பதிவு, கமெந்த்கள் என எங்கும் அனுமதியின்றி இவற்றை பயன்படுத்தக்கூடாதென்றும் இந்நேரத்தில் ப.ம.கவின் நம்பர் 2 என்ற முறையில் எச்சரிக்க ஆசைப்படுகிறேன். :))


 6. rv said...

  மணியன்,
  அதென்னவோ தெரியவில்லை. சிலை வைப்பதே அவமானப்படுத்தத்தானோ என்ற சந்தேகம் நெடுநாளாய் எனக்கு உண்டு.

  ஏ.வி.எம் வீடெல்லாம் அங்கே இருப்பதாக ஒருத்தர் கூட வாய்திறக்கவில்லியே?? :((((


 7. rv said...

  அத்தை,
  பொறுமையின் திலகம் பட்டம் உண்மையில் படிக்கிற உங்களப் போல வந்து படிக்கறவர்களுக்குத்தான் கொடுக்கணும்.. பின்ன "என்ன எழுதுனாலும் எவ்ளோ எழுதுனாலும் வந்து படிக்கிறீங்களே, நீங்க ரொம்ப நல்லவங்க". :)))))))))


 8. rv said...

  ஜிரா,
  //அதெப்படிங்க. சரியா உள்ள விடாத எடமா வந்து ஒங்களுக்கு மாட்டீருக்கு//
  ஹூம்.. ராசி நல்ல ராசிதான்!

  //முத்துராமலிங்கரோட படஹ்ட்தையும் போட்டிருக்கலாமே. எடுக்கலையா?//
  எடுக்கலையே.. யாரோ ஒரு பெரியவர இப்படி காமெடி பண்ணிட்டாங்களேன்னு ஒரு மாதிரி இருந்துச்சு.

  செட்டிநாட்டு பொண்ணுன்னா - பார்ன் & ப்ராட் அப் இன் சென்னை சிட்டி - மாதிரி இருந்துச்சு. பாவம் சின்னப் பொண்ணு, தமிழ்ல பேசிச்சு. ஆனா சில வார்த்தைகளத்தான் ஆங்கில மொழிபெயர்ப்பு - was chweet! :))

  செட்டியார்கள் பலரோட பேரே நல்ல தமிழ்ல தானே இருக்கும்.


 9. Unknown said...

  தலைவா,

  நல்லா எழுதறீங்க.நான் போனப்ப எல்லாம் காரைக்குடியில் சினிமா ஷூட்டிங் முதலில் நிறைய நடக்கும்.இப்ப நடக்குதான்னு தெரியல.


 10. தி. ரா. ச.(T.R.C.) said...

  அண்ணே ராவன்னா. இதான் நம்ம கிட்டே ஒரு வார்த்தை சொல்லியிருந்தீங்கன்ன ஐய்யா (ஏம் ஏ எம்) கிட்டே சொல்லி அரண்மனையைப் பார்க்க ஏற்பாடு செஞ்சிருப்போமில்லே.அப்படியே கால் போன போக்கிலே போனா அரண்மனையைக் காண்பிச்சுருவாங்களா.


 11. மது said...
  This comment has been removed by a blog administrator.

 12. Unknown said...

  ராமநாதன்,

  பயணக்குறிப்பும் படங்களும் நன்றாக இருக்கின்றன!!


 13. rv said...

  செல்வன்,
  நன்னி நன்னி.

  தமிழ்சினிமாவுல அந்தக்காலந்தொட்டு ஊர் பெரிய மனுஷரு வீடெல்லாம் காரைக்குடிலதான இருக்கு. இப்பவும் வருதே..


 14. rv said...

  தி. இரா. ச,
  ஐயா வரைக்கும் செல்வாக்கு பாயுமா? அதுனால என்ன? சொல்லிட்டே அடுத்த தடவை போனாப்போச்சு..

  அவங்களே காமிச்சாங்க. ஆனா முழுசா இல்ல.


 15. rv said...

  போலி மதுசூதனன்,
  போளி போடறதெல்லாம் இங்க வேணாமப்பா. நான் அறியாப்புள்ள.. என்னைய வச்சு காமெடி கீமடி செஞ்சுடாதீங்க.


 16. இலவசக்கொத்தனார் said...

  //கோப்பிரைர்கள், கமெந்த்கள் //

  இப்படின்னா என்ன? :)


 17. பத்மா அர்விந்த் said...

  இனிமையான பதிவுக்குறிப்புகள். இன்னும் தமிழ்நாட்டில்தானா? எத்தனை ஆண்டு விடுமுறை:)


 18. rv said...

  அருட்பெருங்கோ,
  ரொம்ப நன்றிங்க.

  காதல் க்ளாஸ் எடுப்பீங்களா? ப்ளாக் போர்டுல பெருசா எழுதிருக்கீங்க?


 19. rv said...

  கொத்ஸு,
  இவ்ளோ பெரிய பதிவ எழுதிருக்கேன். அதுல உமக்குத்தெரியறது ரெண்டே ரெண்டு வார்த்தைதானா?

  அதுவும் ஸ்மைலி போட்டுகினே.. குன்ஸா போடுறீரு..

  சும்மா சொல்லக்கூடாது, சாமி..நல்லா வூடு கட்டுறீரு!


 20. இலவசக்கொத்தனார் said...

  //அதான் நான் வுட்டது ரெட்டுல எழுதறேனே.. அது போதாதா?//

  நீரும் எழுதறீரா? நானும் எழுதறேனாமே! நம்ம எழுதற மத்த கட் பேஸ்ட் பதிவைப் படிச்சுக் கூடவே இப்படி எல்லாம் எழுத முடியுமுன்னு நினைக்கறாங்க.

  இனிமே கொஞ்சம் கெட்டப்பை மாத்தி, கலைந்த முடி (இருக்கும் கொஞ்சத்தைதான்), பெரீய்ய கண்ணாடி, நாலுநாள் தாடி, ஜிப்பா, ஜோல்னா பை, அழுக்கு ஜீன்ஸ், செருப்பு என இருக்கலாம் எனப் பார்க்கிறேன்.


 21. இலவசக்கொத்தனார் said...

  //அதுல உமக்குத்தெரியறது ரெண்டே ரெண்டு வார்த்தைதானா?//

  இல்லை இந்த மேட்டர் பத்தி எல்லாரும் மெட்ராஸ் பாசையிலேயே பேசிக்கினு கீறாங்க. நீ புச்சா ரூட் மாறி போறியா, அத்தான், இன்னாடா உள்குத்துன்னு தெரியாம முளிச்சேனா? சரி, கேட்டுடலாமுன்னு முடிவு பண்ணிக் கேட்டேன்.

  நீ இன்னாடான்னா பதில் சொல்லாத என்னவோ கத சொல்ற.


 22. rv said...

  தேன் துளி,
  நன்றி.

  இனிமே இந்தியாவே தான்.

  //எத்தனை ஆண்டு விடுமுறை:)//
  நீங்க வேற வெறுப்பேத்தாதீங்க. நானே லாங் ஹாலிடே முடிஞ்சு திரும்ப வந்தாச்சுன்னு வருத்தத்துல இருக்கேன். :((((


 23. rv said...

  //நானும் எழுதறேனாமே!//
  அட நீர் தானா அந்தக்குயில்...

  நான் கூட மேஸ்திரி சாஸ்திரின்னோன என்னவோன்னு நினச்சேன். பின்னூட்டமெல்லாம் சாஸ்திரி மாதிரி நின்னு ஆடுற மேஸ்திரின்னு அர்த்தமா??

  //பெரீய்ய கண்ணாடி, நாலுநாள் தாடி, ஜிப்பா, ஜோல்னா பை, அழுக்கு ஜீன்ஸ், செருப்பு என இருக்கலாம் எனப் பார்க்கிறேன்.//
  ப்ரோபைல்ல இருக்குற படமே ரீஜண்டா கீதுப்பா.. அதப்போயி ஏன் மாத்தணுங்குற? நமக்கு மேக்கப் ஏற்பாடு செய்யி கொஞ்சம்.


 24. rv said...

  //நீ இன்னாடான்னா பதில் சொல்லாத என்னவோ கத சொல்ற.//
  உண்மையச் சொல்லு.. நீ தான விடாது கருப்பு? விடாமா என்னையவே புடிச்சு கலாய்க்கிற?

  நியாயமா? அப்பாலிக்கா நான் அளுதுடுவேன்.


 25. rv said...

  //
  //பெரீய்ய கண்ணாடி, நாலுநாள் தாடி, ஜிப்பா, ஜோல்னா பை, அழுக்கு ஜீன்ஸ், செருப்பு என இருக்கலாம் எனப் பார்க்கிறேன்.////
  கேக்கணும்னூ நினச்சேன் கொத்ஸு.. ஏதாவது இளக்கியாவியாதி கூட்டம் போயிட்டு வந்தீரா? இப்டியெல்லாம் விபரீத ஆச ஏன் உமக்கு?


 26. இலவசக்கொத்தனார் said...

  //நமக்கு மேக்கப் ஏற்பாடு செய்யி கொஞ்சம்.//

  ஏற்பாடு பண்ணறேன். இரும். நம்ம உரு மாற்றி (அதான்யா மேக்கப்மேன், இப்போ எல்லாம் தமிழில்தான் சொல்லணுமாமே) தசாவதாரம் ஷூட்டிங் முடியற வரை பிஸி. அதுக்கு அப்புறம் அனுப்பறேன்.


 27. இலவசக்கொத்தனார் said...

  //நியாயமா? அப்பாலிக்கா நான் அளுதுடுவேன்.//

  அடப்பாவி, நீ எழுதுறது புரியாம கேள்வி கேட்டா, பதிலுக்கு நியாயமான்னு எதிர் கேள்வியாக் கேட்கற?

  அப்பாலிகா நீலி கண்ணீர் விடுவேன்னு பயமுறுத்தல் வேற.


 28. இலவசக்கொத்தனார் said...

  //இப்டியெல்லாம் விபரீத ஆச ஏன் உமக்கு? //

  நமக்கு சொந்தமா எழுத தெரியும். அப்படின்னு ஒரு இமேஜ் கிரியேட் ஆவுதுல்ல. அதுக்கு ஏத்தா மாதிரி இளக்கியவியாதி கெட்டப் இருந்தா நல்லாத்தானே இருக்கும். அதான்.

  ஒரு சாம்பிளுக்கு அந்த காலத்து சந்திரசேகர் போட்டோ ஒண்ணை எடுத்துப் பாரு.

  முன்ன சொன்னதுல ரெண்டு சேஞ்சு. ஜீன்ஸ் கூடாதாம்பா. அதுனால் நல்ல யானை கால் வெச்ச பெல் பாட்டம், அத்தோட நல்ல பெரூஊஊசா பக்கிள் இருக்கற பெல்ட் ஒண்ணு, அப்புறம் வெறும் செருப்புன்னு சொல்லிட்டேனே. அது தப்பாம். அது வந்து ஹவாய் செருப்பு.


 29. rv said...

  //அதான்யா மேக்கப்மேன், இப்போ எல்லாம் தமிழில்தான் சொல்லணுமாமே)//
  என்ன ஓவர் பாலிடிக்ஸ் பேசுறீரு.. தலைங்களெல்லாம் பாத்தா ஓரமா ஒக்காத்திவச்சுடுவாங்க. சாக்கிரதை.


 30. rv said...
  This comment has been removed by the author.

 31. rv said...

  //கண்ணீர் விடுவேன்னு பயமுறுத்தல் வேற.//
  யோவ்.. நம்ம பாலிஸி: எப்பவுமே நான் அடிப்பேன். ஆனா நீர் திருப்பி அடிக்க கூடாது. :P


 32. இலவசக்கொத்தனார் said...

  //எப்பவுமே நான் அடிப்பேன். ஆனா நீர் திருப்பி அடிக்க கூடாது. :P//

  இதெல்லாம் மட்டும் நல்லா கத்துக்கோங்க. இது தெரிஞ்சாச்சு இல்ல, இனி நீரும் வலையுலகின் செல்லப் பிள்ளைதான் போங்க! நாட்டாமை தீர்ப்பு இனி உம் பக்கம்தான்.


 33. இலவசக்கொத்தனார் said...

  //எப்பவுமே நான் அடிப்பேன். ஆனா நீர் திருப்பி அடிக்க கூடாது. :P//

  இதெல்லாம் மட்டும் நல்லா கத்துக்கோங்க. இது தெரிஞ்சாச்சு இல்ல, இனி நீரும் வலையுலகின் செல்லப் பிள்ளைதான் போங்க! நாட்டாமை தீர்ப்பு இனி உம் பக்கம்தான்.


 34. பத்மா அர்விந்த் said...

  ராமனாதன், நான் பதிவுலக விடுமுறைய கேட்டதா தப்பா நினைச்சுட்டீங்களா:) படிச்சு முடிச்சு தமிழ்நாட்டில வேலையா? நமக்கு ஊருக்கு போகவே விடுமுறை இல்லை, நீங்க யாரும் போகாத இடத்துக்கெல்லாம் போய் பதிவு போடறீங்களே என்ற நல்ல எண்ணம்தான். அப்புறம் இசை விழா பக்கம் போகலையா?


 35. இலவசக்கொத்தனார் said...

  //எப்பவுமே நான் அடிப்பேன். ஆனா நீர் திருப்பி அடிக்க கூடாது. :P//

  இதெல்லாம் மட்டும் நல்லா கத்துக்கோங்க. இது தெரிஞ்சாச்சு இல்ல, இனி நீரும் வலையுலகின் செல்லப் பிள்ளைதான் போங்க! நாட்டாமை தீர்ப்பு இனி உம் பக்கம்தான்.


 36. rv said...

  தேன் துளி,
  //படிச்சு முடிச்சு தமிழ்நாட்டில வேலையா? //
  அப்படியிருந்தா தமிழ்நாட்டு ஜனத்தொகையில் அதிசயத்தக்க மாற்றம்னு தலைப்புச்செய்தி வந்துருக்குமே! (அதானே!னு யாரோ ஈரோட்டுலேர்ந்து சொல்றாங்க பாருங்க!)

  //அப்புறம் இசை விழா பக்கம் போகலையா?/
  திருவயாறா? போயிட்டு ரெண்டு போஸ்ட் கூட போட்டேனே..

  தனிமடல் அனுப்பறேன்.


 37. ramachandranusha(உஷா) said...

  //அதான் நான் வுட்டது ரெட்டுல எழுதறேனே.. அது போதாதா?//

  //நானும் எழுதறேனாமே//

  யாரைத்தான் நம்புவதோ பேதையுள்ளம்
  அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம் :-)


 38. சின்னவன் said...

  என்னடா கொஞ்ச நாளாய் மெகாத் தொடரெல்லாம் இல்லாம போச்சேனு பார்த்தேன். நடாத்துங்க நடாத்துங்க !


 39. SP.VR. SUBBIAH said...

  உங்களுடைய 2 பதிவுகளையும் படித்தேன். சிறப்பாக எழுதியுள்ளீர்கள்.
  அடியவன் அந்தப் பகுதியைச் சேர்ந்தவன் தான்.காரைக்குடியில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தேவகோட்டையைச் சேர்ந்தவன்

  அந்தப் பகுதியில் மொத்தம் 75 ஊர்கள் உள்ளன மொத்தம் சுமார் 5,000 வீடுகள் உள்ளன. கலை நயம் மிக்க வீடுகள் என்றால் சுமார் 500 வீடுகள் தேறும்.

  முகூர்த்த நாளில் சென்றால் - அதுவும் அந்த ஊரில் உள்ள நண்பர் ஒருவரைப் பிடித்தால், ஆனந்தமாகச் சுற்றிப் பார்க்கலாம்.

  தமிழ நாடு அரசு சுற்றுலாத்துறை Chettinad Trips என்று ஒரு பயணத்திட்டம் வைத்திருக்கிறது. அவர்கள் மூலமாகவும் நீங்கள் சுற்றிப் பார்க்கலாம்


 40. rv said...

  கொத்ஸு,
  //நாட்டாமை தீர்ப்பு இனி உம் பக்கம்தான்.//
  நாட்டாமை கொஞ்ச நாளா தீர்ப்பு சொல்ல மாட்டேங்குறாருன்னு சொல்லித்தானே நிறைய பேரு டென்சன் ஆவறாங்க?

  அவர் எங்கேயாவது இங்க வந்து தீர்ப்பு சொல்லிடுவாருன்னு பயமாகீதுப்பா...


 41. rv said...

  ஒரே கமெண்டையே மூணு தடவை இட்டு பாசக்கார பயலுன்னு நிருபிச்ச கொத்ஸுக்கு ப.ம.க.வின் சார்பில் ஒரு ஷொட்டு!


 42. rv said...

  உஷா அக்கா,
  நீங்க புலிட்சர் எழுத்தாளினியா இருக்கும்போது நாங்க வுட்டது ரெட்டாக இருக்கக்கூடாதா?

  ஆமா, ஸ்மைலி எதுக்கு? அதப்பாத்தாதான் பயமா இருக்கு இப்போல்லாம். சிரிப்பான்.


 43. rv said...

  பா(ர்)டு,
  எப்படி கீற? இப்போதான் யுத்தகாண்டமே நடக்குதே. இதுக்குமேல சீரியல் வேற வேணுமாக்கும். அதான் கொஞ்சம் ஆப்ல இருந்தேன்.

  எது நடாந்ததோ நான்றாகவே நடாந்தது! எது நடாக்குதோ அதுவும் நான்றாகவே நடாக்கிறது! எது நடாக்க இருக்கிறதோ அதுவும் நடாக்கும்!


 44. rv said...

  சுப்பையா சார்,
  //கலை நயம் மிக்க வீடுகள் என்றால் சுமார் 500 வீடுகள் தேறும்//
  அவ்வளவு வீடுகள் இருக்கா? கல்யாண நேரமா பார்த்து போகணுமா? ஹூம். தி. இரா. ச தான் எம்.ஏ.எம்மைத் தெரியும் என்று சொல்லியிருக்கிறார். இனிமேல் அவரைத்தான் பிடிக்கவேண்டும்.

  தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை பல இடங்களில் வீடுகளின் உரிமையாளர்களைக் கேட்காமலேயே விளம்பரம் வைத்துள்ளது என்று நினைக்கிறேன். நீங்கள் சொன்னதைப் பற்றி தேடிப்பார்க்கிறேன்.

  மிக்க நன்றி.


 45. சேதுக்கரசி said...

  பதிவை அன்னிக்கே படிச்சிட்டேன். விளக்கமான (:-)) பின்னூட்டமிட நேரமின்மை. அப்புறம் வரேன்.


 46. rv said...

  சேதுக்கரசி,
  ரொம்ப நன்றி. அவசியம் வாங்க.

  ஆனா உங்க மேல லேசா எனக்கு ஒரு டவுட் வருது. அந்த 'டவுட்' சரிதானா? :)))))


 47. Anonymous said...

  எது நடாந்ததோ நான்றாகவே நடாந்தது! எது நடாக்குதோ அதுவும் நான்றாகவே நடாக்கிறது! எது நடாக்க இருக்கிறதோ அதுவும் நடாக்கும்//

  ஏண்டாப்பா, கால் உன்னுதான். அதுக்காக கன்னாபின்னான்னு போட்டா தப்பில்லையோ- சிரிப்பான்


 48. இலவசக்கொத்தனார் said...

  ஏம்பா அனானி அவர் எந்த பின்னூட்டத்துக்கு பதில் சொல்லி இருக்காரோ அதைப் பார்க்கலையா?

  அதெல்லாம் இல்லை,இது காலை மாத்திப்போடற விளையாட்டுன்னா நாங்க ஏற்கனவே விளையாடியாச்சேப்பா!!


 49. இலவசக்கொத்தனார் said...

  ராம்ஸு, அடுத்த பாகம் எப்போ ரிலீஸ்? நாங்க எல்லாம் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கோமில்ல. கொஞ்சம் சீக்கிரம் போடறது.


 50. இலவசக்கொத்தனார் said...

  50 அடிச்சுட்டேனா? இப்போ இந்தியா இன்னிங்க்ஸ்ல யாரு இப்படி அடிக்கப் போறாங்கன்னு பார்க்கலாம்.


 51. rv said...

  அனானி,
  ஆனாலும் இதை அனானியா வந்துதான் சொல்லணுமா?

  இல்லேன்னா நீங்க யாருன்னு எங்களுக்குத்தான் தெரியாதா?? வலைப்பதிவுகள் வஞ்சம் நிறைந்ததாக்கும்!


 52. rv said...

  //இது காலை மாத்திப்போடற விளையாட்டுன்னா நாங்க ஏற்கனவே விளையாடியாச்சேப்பா!!//
  சரியாச் சொன்னய்யா.. பொதுவாவே காலை வாருறது அதுக்கும் மசியலேன்னா காலை எடுக்கிறதுதான நம்ம பாரம்பரியம்.


 53. rv said...

  //அடுத்த பாகம் எப்போ ரிலீஸ்?//

  விரைவில் உலக வலைப்பூக்களில் நேரடி ரிலீஸ்! பாதியிலேயே எஞ்சின் ஸ்டக் ஆயிடுச்சி. இருந்தாலும் எப்போ அடுத்ததுன்னு கேட்டு என் மனசுல பால வார்த்துட்டீரு.

  writer's block கேள்விப்பட்டதில்ல? :P


 54. rv said...

  //50 அடிச்சுட்டேனா? //
  அடடா.. கணக்குல கண்ணாயிருக்கறய்யா.. அம்பதுக்கு வாழ்க.

  கைம்மாறா என் பேரச் சொல்லி அனானியா நீரே ஒரு பத்து பின்னூட்டம் போட்டுக்கங்க. இப்பத்தான் அதெல்லாம் பரவாயில்லியாமே!


 55. Anonymous said...

  மருத்துவர் ஐயா, புது பிளாக்கர் கணக்கு போவ மாட்டேன்னு அடம் பிடிச்சிச்சு. சரின்னு அனானிமஸ்ஸா
  போட்டேன். சிரிப்பான் கோட் வோர்ட், பய புரிஞ்சிப்பான்ன்னு தெரியாதா என்ன?


 56. rv said...

  பெனாத்தலார் மடலில் அனுப்பிய பின்னூட்டம்:

  பதிவெல்லாம் நல்லாத்தான் இருக்குன்னு நெனைச்சுகிட்டே வந்தா கீழே பின்னூட்டத்துல ராமநாதன் டச்!
  Writer's Block டாக்டர், கண்டக்டருக்கெல்லாம் வராது தம்பி, Writersக்கு மட்டும்தான் வரும்.
  நாம அதிலிருந்தெல்லாம் Excepted.


 57. சேதுக்கரசி said...

  //வீடு ஒன்றும் அவ்வளவு பெரிதாக இல்லை வெளியிலிருந்து பார்க்க. இதில் எப்படி ஆயிரம் ஜன்னல் என்று எண்ணியவாறே//

  ஆயிரம் ஜன்னல் வீட்டில் சரியா ஆயிரம் ஜன்னல்கள் இருக்கான்னு தெரியாது :-) ஆனா நீங்க வெளில இருந்து பார்க்கிற ஜன்னல்கள் தவிர வீடுகளுக்குள்ளேயும் நிறைய்ய்ய்ய ஜன்னல்கள் இருக்கும் பொதுவா (அந்த வீட்டை நானும் உங்களை மாதிரி வெளில தான் பார்த்திருக்கேன்...)

  பொதுவா செட்டிநாட்டு வீடுகளின் கட்டிட அமைப்பு அப்படி.. உள்ளேயும் எக்கச்சக்கமா ஜன்னல் இருக்கும்! சினிமால எல்லாம் பார்த்திருப்பீங்களே..


 58. rv said...

  அனானி அக்கச்சி,
  நன்னி. புரிஞ்சுடுச்சு!

  அதானே சீக்ரெட் கோட் வர்ட் ஓப்பனா யூஸ் செய்யுறாங்களே, இங்கன ஏதாவது இன்னொரு மயில் குயில் ஆன கதையா கந்தலாகிடப்போகுதுன்னு பயந்துகிட்டுருந்தேன். :))


 

வார்ப்புரு | தமிழாக்கம்