180. திருவையாத்து தண்ணிப்பக்கம் - 2

இன்று யாரென்று கண்டுபிடியுங்கள் பார்ப்போம்!

சங்கீத உலகின் ஸ்டார்கள் இவர்கள். பலரும் டிவியில் நேரில் பார்த்து பழகிய முகங்கள் தான். இதில் பலர் வாரிசுகள் என்பது கூடுதல் சிறப்பு. வாரிசு என்றாலும் தனித்தன்மையும் இருந்தாலேயொழிய வேலைக்குதவாது என்பதற்கு அருமையான உதாரணமும் இருக்கிறது. அது யார் என்று சொல்லி எதற்கு வம்பை விலை கொடுத்து வாங்குவானேன். நேராக கே.ஆர்.எஸ் ஸ்டைலில் இவர்கள் யாரென்று தெரிகிறதா பாருங்களேன்...

1. சிலவருடங்களுக்குமுன் ஓஹோவென்று பேசப்பட்ட இளம்பாடகர். இப்போது வெளியில் அவ்வளவு தெரியாவிட்டாலும் அருமையான குரல்வளம். அப்படியே பக்கவாத்தியக்காரர் யாரென்று தெரிகிறதா? மிருதங்க சக்கரவர்த்திகளில் ஒருவர் என்றே சொல்லலாம்.
பாடகர்: SP இராம்

மிருதங்கிஸ்ட்: ஸ்ரீமுஷ்ணம் இராஜாராவ்

சரியாக சொன்னவர்கள்:
பாடகர்: கொத்ஸ், கே.ஆர்.எஸ்2. வளர்ந்துவரும் இளம்பாடகி. இவரின் தாயார் ஒரு பிரபலமான வாத்திய இசைக்கலைஞர்.
சாருலதா மணி
பிரபல வீணை இசைக்கலைஞர் ஹேமலதா மணியின் மகள்


விடைசொன்னவர்: கே.ஆர்.எஸ்

3. இந்த சீசனின் ஹாட்டஸ்ட் டாலண்ட் இந்த 24 வயது இளைஞர்தான். இவரின் பரம்பரையும் பெரிய பரம்பரை. யார் இவர்? மிருதங்கக்காரர் முதல் படத்தில் இருப்பவர்தான். இதிலாவது தெரிகிறதா பாருங்கள். அப்படியே கூடவாசிக்கும் பிரபல வயலினிஸ்ட் யாரென்று சொல்வோருக்கு தனிஷொட்டு இருக்கிறது. :))

பாடகர்: சிக்கில் குருசரண் - சிக்கில் சகோதரிகள் லீலா குஞ்சுமணி- லீலாவின் பேரன்
வயலின்: விட்டல் இராமமூர்த்தி

விடை சொன்னவர்கள்
பாடகர்: கே.ஆர்.எஸ், கொத்ஸ், ஸ்ரீதர் வெங்கட், இராதா ஸ்ரீராம்
வயலின்: கொத்ஸ்


4. இப்படத்தில் நீலக்கலர் சட்டையில் உள்ளவரைத்தெரியாமல் தமிழ்நாட்டில் யாருமே இருக்க முடியாது. பாடிக்கொண்டிருப்பவர் யாரென்று சொல்லுங்களேன். இவரை இதுவரையில் பார்க்காவிட்டாலும் கேட்டாவது இருப்பீர்கள். இவரின் தந்தை மிகவும் பிரபலமான 'பாடகர்'. அவரைத்தெரியாமலும் இங்கே யாரும் இருக்கவே மாட்டீர்கள் என்று சத்தியம் செய்கிறேன்.
பாடகர்: விஜய் யேசுதாஸ்

நீலக்கலர் சட்டை: குன்னக்குடி வைத்தியநாதன்

சரியாகச்சொன்னவர்கள்: சின்ன அம்மணி, கொத்ஸ், ஸ்ரீதர் வெங்கட், கே.ஆர்.எஸ், இராதா ஸ்ரீராம், ஜிரா

5. இப்படத்தில் உள்ள மூவரில் பிரபலம் யார்? இவருடைய தாத்தா கர்நாடக சங்கீதத்தில் தமிழிசைக்கே தாத்தா போன்றவர். அவர் யார்?நடுவில் இருக்கும் மீசைக்காரர் - பாடகர் பாபநாசம் அசோக் ரமணி

பாபநாசம் சிவனின் பேரன்

விடையளித்தவர்கள்: கொத்ஸ், ஸ்ரீதர் வெங்கட், இராதா ஸ்ரீராம்
6. நவீன வயலின் மேதையென்றே சொல்லலாம். கட்டை பிரம்மச்சாரி. இவர் தாத்தாவும் வயலின் லிஜண்ட்.
ஆர். கே. ஸ்ரீராம்குமார்
வயலின் மேதை ஆர்.கே. வெங்கட்ராம சாஸ்திரியின் பேரன்

சரியாகச் சொன்னவர்கள்: கே.ஆர்.எஸ், கொத்ஸ்


7. இப்படத்தில் உள்ள ஒருவர் சீ.ஏ பட்டதாரி. கணீரென தொண்டையுடன் இவர் பாட ஆரம்பித்தால் அமர்க்களப்படும். இருவரில் யார்? பெயர்? (கண்டுபிடிப்பது மிகவும் சிரமம் தான். முயற்சிப்பதில் தவறில்லையே)வலதில் உள்ளவர்: பாடகர் ஸ்ரீராம் கங்காதரன்


என்ன பரிசு என்று கேட்கிறீர்களா? உண்டு. ஆனால் என்னவென்று பின்னால் சொல்கிறேன்.

--------------------------------
11 ஜனவரி 2007

முதல் பரிசு:
இலவசக்கொத்தனார்: 9 புள்ளிகள் (வயலினாரைச் சொன்னதற்காக ஷொட்டு சொன்ன மாதிரியே :))

இரண்டாம் பரிசு:
கே.ஆர்.எஸ்: 8 புள்ளிகள்

மூன்றாம் பரிசு:
இராதா ஸ்ரீராம், ஸ்ரீதர் வெங்கட்: 5 புள்ளிகள்

ஆறுதல் பரிசு:
ஜிரா, சின்ன அம்மணி

நல்ல பரிசை ஏன் தனியாகக் கொடுப்பது? எல்லோருக்குமே தந்துவிடுகிறேனே.


முதல் பரிசாக கொத்ஸுக்கு இதோ விசாகா ஹரியின் இரண்டரை மணி நேர சொற்பொழிவு தியாகராஜரைப் பற்றி.

1, 2, 3, 4


இரண்டாம் பரிசாக கே.ஆர்.எஸ்-க்கு ஓ.எஸ். அருணின் கண்ணன் பாட்டு!
1
2


மூன்றாம் பரிசாக இராதா ஸ்ரீராம் மற்றும் ஸ்ரீதர் வெங்கட்டுக்கு சௌம்யாவின் ஜாவளி!
1

ஆறுதல் பரிசாக ஸ்பெஷல் ஸ்ரீராம் கங்காதரனின் 'சிதம்பரம் போகாமல்'!
1

-----------
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
பங்குகொண்ட அனைவருக்கு மிக்க நன்றி!

40 Comments:

 1. Anonymous said...

  I can only identify Vijay Yesudas & Kunnakkudi Vaidyanathan.
  I'm one of those gnanasoonyams.


 2. Kannabiran, Ravi Shankar (KRS) said...

  1&2 Mridangam Gurumoorthy :-)
  Chumma
  - Tiruvarur Vaidyanathan?
  கையில் கட்டியுள்ள சிவப்புக் கயிறு வைத்து சொல்றேன்!

  1.Sriram Gangadharan
  2.
  3.Sikkil Gurucharan
  6.RK Sriram Kumar


 3. இலவசக்கொத்தனார் said...

  1) SP Ramh ??

  3) வயலின் வாசிப்பவர் நம்ம விட்டல்

  4) ஜேசுதாஸ் பையன்

  5) பாபனாசம் சிவன் பேரன் அசோக் ரமணி

  6) ஸ்ரீராம்குமார் (ஆனாலும் அநியாயத்துக்கு டேலண்டட்ப்பா)

  அம்புட்டுதான் தெரியும்.


 4. குமரன் (Kumaran) said...

  யாரையும் அடியேனுக்குத் தெரியவில்லை.


 5. rv said...

  சின்ன அம்மணி,
  நான்காவதுக்கு விடை சரிதான்.

  மிச்சதுக்கும் முயற்சி செய்யுங்க.

  நன்றி


 6. rv said...

  கே.ஆர்.எஸ்,
  வாங்க வாங்க. கைல சிவப்பு கயிற வச்செல்லாம் அடையாளம் சொல்வீங்களா? ஆனா தவறாச்சே! :(

  1. தவறு
  3. பாடகர் சரி (வயலினாரை விட்டுட்டீங்களே!) :))
  6. சரி


 7. rv said...

  கொத்ஸு,
  அப்படிப்போடுங்க அருவாள.

  1) சரி. கஷ்டம்னு நினச்சாக்க ஈஸியா சொல்லிட்டீங்க.

  3) வயலினார் சரி.
  பாடகர் & மிருதங்கிஸ்ட்???

  4) அப்பாவையே கண்டுபிடிச்சாச்சா.. ரைட் ரைட்

  5) அவரேதான். இதுவும் தாத்தாவ வச்சு கண்டுபிடிச்சதா?? :))

  6) அதே அதே. கரெக்ட்.

  அம்புட்டுதான்னா விட்டுடுவோமா? கொத்ஸே கேள்விக்கு விடை சொல்லலேன்னா அப்புறம் யாரு வந்து என்னத்த...??


 8. rv said...

  குமரன்,
  என்ன இப்படி கழண்டுக்கிறீங்க?

  சரி என்ன பரிசுன்னு சொல்லிடறேன்.

  தியாகராஜரப் பத்தின விசாகாவோட சொற்பொழிவுதான் :))

  இப்பவாவது முயற்சி செய்வீங்களான்னு பாப்போம். :)


 9. Anonymous said...

  1. Dr. Sriram
  2. தெரியவில்லையே...
  3. குருசரண்
  4. விஜய் ஜேசுதாஸ்?
  5. அஷோக் ரமணி (தாத்தா: பாபநாசம் சிவன்)
  6. துரைசாமி?
  7. தெரியவில்லையே...

  சரியோ தவறோ எல்லாம் அந்த ல்லிதாவிற்கே சமர்ப்பணம். ஹிஹி... அது என் மனைவிதாங்கோ...
  நமக்கு அவ்வளவு எல்லாம் ஞானம் கிடையாதுங்கோ...


 10. Anonymous said...

  1 & 3 - மிருதங்கம் - உமையாள்புரம் சிவராமன்


 11. இலவசக்கொத்தனார் said...

  சரிப்பா. இன்னும் ஒண்ணு.

  3) பாடறது சிக்கில் குருச்சரண். சரியா?


 12. rv said...

  ஸ்ரீதர் வெங்கட்,
  1. தவறு
  3. பாடகர் சரி. வயலின்?
  4. சரி
  5. சரி
  6. தவறு

  மிருதங்கம் நீங்கள் சொன்னவரில்லை. அவர் இன்னும் வயசானவர்! :)


 13. rv said...

  கொத்ஸு,
  5. அப்படிப்போடுங்க. சரியான விடை. இவர் பெயர எப்படி முததடவை மிஸ் பண்ணீங்க?


 14. Kannabiran, Ravi Shankar (KRS) said...

  1 SP Ram
  2 charulatha mani
  4 vijay yesudass ?


 15. Radha Sriram said...

  3) sikkil gurucharan(sikkil sister"s son)i think the mrindagist is T.K. Murthy

  5) Ashok Ramani, Nagamani Srinath is the lady

  6) Neyveli Santhanagopalan

  4) is it K.J. Yesudoss's son??


 16. rv said...

  கே.ஆர்.எஸ்,
  1. சரி
  2. அடிதூள். கஷ்டம்னு நினச்சேன். சரியான விடை.
  4. சரி

  இன்னும் மூணு தானே??


 17. rv said...

  வாங்க இராதா ஸ்ரீராம்,
  3. பாடகர் சரி. மிருதங்கிஸ்ட் தவறு.
  4. அவரேதான். சரி
  5. அடிச்சு பின்றீங்க. சரி.

  எனக்கே நீங்க சொன்ன ரெண்டாவதவரைத் தெரியாது. :)))
  6. என்னங்க வயலின கைல வச்சுருக்காரு. ரூட்டையே மாத்திட்டீங்க? :))


 18. Radha Sriram said...

  1) shnakaran namboodri??

  7) neyveli santhana gopalan?/

  Mirdangist?? trichy shankaran??


 19. rv said...

  Radha Sriram,
  1,2 and mridhangist thavaru-nga


 20. G.Ragavan said...

  4. விஜய் யேசுதாஸ்...இது ஒன்னுதான் தெரியுது.

  2. இவங்களப் பாத்தா புல்லாங்குழல் வாசிப்பாங்களே சிக்கில்...அவங்க மாதிரி இருக்குது.

  மத்ததெல்லாம் தெரியலைங்க.


 21. rv said...

  இராதா ஸ்ரீராம்,
  1 & 7 தவறு.
  மிருதங்கிஸ்ட்.. தவறு :(


 22. rv said...

  ஜிரா,
  4. சரி
  2. தவறு

  நீங்க சொன்ன ஆளுங்களோட சம்பந்தமுள்ளவரும் இப்படங்களில் இருக்கிறார். :))


 23. rv said...

  விடைகளை நாளை காலை சொல்லிவிடுகிறேன் என்று சொல்லும் சாக்கில் ஒரு பி.க


 24. Anonymous said...

  //மிருதங்கம் நீங்கள் சொன்னவரில்லை. அவர் இன்னும் வயசானவர்! :)
  //
  அவர் தஞ்சாவூர் சீனிவாசன்? நீங்கள் மிருதங்க சக்ரவர்த்திகளில் ஒருவர் என்று சொல்லியிருந்தீர்கள். அவர்தான் மிருதங்க சக்ரவர்த்தி திரைப்படத்தில் உமையாள்புரம் கூட வாசித்தார் என்று நினைவு.


 25. Radha Sriram said...

  1) madurai sundar??

  naan vida maatten!!! you dont know my driving test record!!he he he!!!


 26. rv said...

  அட ஸ்ரீதர் வெங்கட்,
  நீங்க அந்த "மிருதங்க சக்கரவர்த்தி"னு நினச்சுகிட்டீங்களா? நான் அவ்வளவு க்ரிப்டிக்காகவெல்லாம் க்ளூ கொடுக்கலை. :)

  சக்கரவர்த்தினா ரொம்ப பெரிய exponent என்றுதான் mean செய்தேன்!


 27. rv said...

  இராதா ஸ்ரீராம்,
  அப்படியா நவீன கஜினி பரம்பரையா? நடாத்துங்க. :P

  1) தவறு.

  ட்ரைவிங் டேஸ்ட் கதையென்னது?


 28. Radha Sriram said...

  1) Balaji shankar??!!

  mandai kaanchidum pola irukku.....


 29. rv said...

  விடைகளையும் போட்டியில் வெற்றிபெற்றவர்களையும் பதிவில் இட்டிருக்கிறேன்.

  நன்றி


 30. இலவசக்கொத்தனார் said...

  ராம்ஸ்,

  பரிசுக்கு நன்றி. தரவிறக்கம் தொடங்கிவிட்டது.

  இப்பொழுதுதான் ஒன்று பார்த்தேன். ஸ்ரீராம்குமார் படம் டி.எம்.கிருஷ்ணா கச்சேரியில் எடுக்கப்பட்டுள்ளது போல இருக்கே.

  எப்படிக் கண்டுபிடித்தேன் என்றால் அந்த பையன் (பெயர் ரித்விக் என நினைக்கிறேன்) அவருடைய சிஷ்யன் ஆயிற்றே. தம்புரா போடும் வெளிநாட்டு அம்மிணியும் அவரது சிஷ்யைதான்.

  கிருஷ்ணாவின் தரிசனமும் தந்திருக்கக் கூடாதோ! :))


 31. இலவசக்கொத்தனார் said...

  எஸ்.பி.ராம் லால்குடி ஜெயராமன் அவர்களின் சிஷ்யர். நல்ல திறமையான பாடகர். சில வருடங்கள் முன் நான் விரும்பிக் கேட்ட ஒரு பாடகர். ஆனால் அவ்வளவு பிரபல்யம் ஆகவில்லை. ஏன் என்று தெரியவில்லை.


 32. Radha Sriram said...

  thanks Ramanathan!!

  crap!!!!!! i dont know how i missed sriramkumar....


 33. Kannabiran, Ravi Shankar (KRS) said...

  ஆத்தா நான் பாசாயிட்டேன்! என்று கத்தலாமா?
  இல்லை...
  ராமநாதன் அகாடமியின் விருதுகள் வாங்கிவிட்டோம் என்று மகிழலாமா?

  சரி எப்படி இருந்தாலும் நம் ராமனாதன் அவர்களுக்கு நன்றி! பின்னே நமக்காக மெனக்கெட்டு திருவையாறு சென்று, இத்தனை பேரையும் நிக்க வச்சு போட்டோ எடுத்தாருன்னா சும்மாவா?:-)

  பரிசுகளுக்கு நன்றி ராமநாதன்! அடுத்த போட்டி என்னவோ?


 34. Anonymous said...

  நல்லதொரு போட்டிக்கும், அருமையான பரிசுகளுக்கும் நன்றிகள் பல!

  வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  SP ராம்-ஐ ஸ்ரீராம் என்று தவறாக சொல்லி, பின் சரியான விடை தெரிந்தவுடன் அசடு வழிந்ததற்கும், சாருலதா மணியை தாமதமாக அடையாள கண்டுபிடித்ததற்கும் எனது மனைவிக்கு கடுமையான கண்டனங்களை மனதுக்குள் தெரிவித்துக் கொண்டு (பின்ன அவங்கதானே சரியான விடைகளும் சொன்னது).....

  அடுத்த போட்டிக்காக வெய்டிங் டாக்டர்...


 35. rv said...

  கொத்ஸு,
  செம ஷார்ப்பாகத்தான் இருக்கீரு.

  கரெக்ட் அந்தப்பையன் கிருஷ்ணா கோஷ்டிதான். பெயர் தெரியவில்லை. கிருஷ்ணா, அசோக் ரமணி பற்றியெல்லாம் தனியாக பதிவிடுகிறேன். பொறுமை.

  எஸ்.பி. இராம் ஏன் பிரபலம் ஆகவில்லை என்று எனக்கும் புரியவில்லை.


 36. rv said...

  இராதா ஸ்ரீராம்,
  அப்பப்போ தெரிஞ்சவங்கள நேர்ல பார்த்தாகூட நினைவுக்கு வர்றதில்லை. அப்புறம் நம்மள திமிர் பிடிச்சவன்னு அவங்களும் நினச்சுப்பாங்க.

  அப்படி இருக்கறச்சே, போட்டோல பாத்து தெரியலேன்னா என்னாச்சு... ப்ரீயா விடுங்க.


 37. rv said...

  கே. ஆர். எஸ்,
  அகாடமி ராங்க் எடுத்து பாஸ் செஞ்சதுக்கு வாழ்த்துகள்!

  நிக்க வச்சு போட்டோ எடுத்தத தனியா போடறேன். (எல்லாப் பதிவும் ஏப்போ போடப்போறென்னு கேட்காதீங்க :))


 38. rv said...

  ஸ்ரீதர் வெங்கட்,
  கூட்டணி வெற்றியா? நடாத்துங்க. அதெப்படி திட்டு மட்டும் அவங்களுக்கு பரிசெல்லாம் உங்களுக்காமா? :))


 39. Anonymous said...

  //அதெப்படி திட்டு மட்டும் அவங்களுக்கு//

  என்னது இது சின்னபுள்ளத்தனமா இருக்கு....

  நமக்கு சொந்த ஊரு மதுரைங்கோ... மாட்டிவிட்டுடுவீங்க போல...


 40. Anonymous said...

  சரி... பரிசுகளை தரவிறக்க சுட்டி மட்டும் கொடுத்தா போதுமா... RapidSharel premium account கொடுங்க...

  இலவச சேவைல ஒவ்வொண்ணா தரவிறக்கறதுக்குள்ள தாவு தீந்துடும் போல இருக்கு...


 

வார்ப்புரு | தமிழாக்கம்