இன்று யாரென்று கண்டுபிடியுங்கள் பார்ப்போம்!
சங்கீத உலகின் ஸ்டார்கள் இவர்கள். பலரும் டிவியில் நேரில் பார்த்து பழகிய முகங்கள் தான். இதில் பலர் வாரிசுகள் என்பது கூடுதல் சிறப்பு. வாரிசு என்றாலும் தனித்தன்மையும் இருந்தாலேயொழிய வேலைக்குதவாது என்பதற்கு அருமையான உதாரணமும் இருக்கிறது. அது யார் என்று சொல்லி எதற்கு வம்பை விலை கொடுத்து வாங்குவானேன். நேராக கே.ஆர்.எஸ் ஸ்டைலில் இவர்கள் யாரென்று தெரிகிறதா பாருங்களேன்...
1. சிலவருடங்களுக்குமுன் ஓஹோவென்று பேசப்பட்ட இளம்பாடகர். இப்போது வெளியில் அவ்வளவு தெரியாவிட்டாலும் அருமையான குரல்வளம். அப்படியே பக்கவாத்தியக்காரர் யாரென்று தெரிகிறதா? மிருதங்க சக்கரவர்த்திகளில் ஒருவர் என்றே சொல்லலாம்.
பாடகர்: SP இராம்
மிருதங்கிஸ்ட்: ஸ்ரீமுஷ்ணம் இராஜாராவ்
சரியாக சொன்னவர்கள்:
பாடகர்: கொத்ஸ், கே.ஆர்.எஸ்
2. வளர்ந்துவரும் இளம்பாடகி. இவரின் தாயார் ஒரு பிரபலமான வாத்திய இசைக்கலைஞர்.
பிரபல வீணை இசைக்கலைஞர் ஹேமலதா மணியின் மகள்
3. இந்த சீசனின் ஹாட்டஸ்ட் டாலண்ட் இந்த 24 வயது இளைஞர்தான். இவரின் பரம்பரையும் பெரிய பரம்பரை. யார் இவர்? மிருதங்கக்காரர் முதல் படத்தில் இருப்பவர்தான். இதிலாவது தெரிகிறதா பாருங்கள். அப்படியே கூடவாசிக்கும் பிரபல வயலினிஸ்ட் யாரென்று சொல்வோருக்கு தனிஷொட்டு இருக்கிறது. :))
வயலின்: விட்டல் இராமமூர்த்தி
விடை சொன்னவர்கள்
பாடகர்: கே.ஆர்.எஸ், கொத்ஸ், ஸ்ரீதர் வெங்கட், இராதா ஸ்ரீராம்
வயலின்: கொத்ஸ்
4. இப்படத்தில் நீலக்கலர் சட்டையில் உள்ளவரைத்தெரியாமல் தமிழ்நாட்டில் யாருமே இருக்க முடியாது. பாடிக்கொண்டிருப்பவர் யாரென்று சொல்லுங்களேன். இவரை இதுவரையில் பார்க்காவிட்டாலும் கேட்டாவது இருப்பீர்கள். இவரின் தந்தை மிகவும் பிரபலமான 'பாடகர்'. அவரைத்தெரியாமலும் இங்கே யாரும் இருக்கவே மாட்டீர்கள் என்று சத்தியம் செய்கிறேன்.
நீலக்கலர் சட்டை: குன்னக்குடி வைத்தியநாதன்
சரியாகச்சொன்னவர்கள்: சின்ன அம்மணி, கொத்ஸ், ஸ்ரீதர் வெங்கட், கே.ஆர்.எஸ், இராதா ஸ்ரீராம், ஜிரா
5. இப்படத்தில் உள்ள மூவரில் பிரபலம் யார்? இவருடைய தாத்தா கர்நாடக சங்கீதத்தில் தமிழிசைக்கே தாத்தா போன்றவர். அவர் யார்?
பாபநாசம் சிவனின் பேரன்
விடையளித்தவர்கள்: கொத்ஸ், ஸ்ரீதர் வெங்கட், இராதா ஸ்ரீராம்
6. நவீன வயலின் மேதையென்றே சொல்லலாம். கட்டை பிரம்மச்சாரி. இவர் தாத்தாவும் வயலின் லிஜண்ட்.
ஆர். கே. ஸ்ரீராம்குமார்
வயலின் மேதை ஆர்.கே. வெங்கட்ராம சாஸ்திரியின் பேரன்
சரியாகச் சொன்னவர்கள்: கே.ஆர்.எஸ், கொத்ஸ்
7. இப்படத்தில் உள்ள ஒருவர் சீ.ஏ பட்டதாரி. கணீரென தொண்டையுடன் இவர் பாட ஆரம்பித்தால் அமர்க்களப்படும். இருவரில் யார்? பெயர்? (கண்டுபிடிப்பது மிகவும் சிரமம் தான். முயற்சிப்பதில் தவறில்லையே)
என்ன பரிசு என்று கேட்கிறீர்களா? உண்டு. ஆனால் என்னவென்று பின்னால் சொல்கிறேன்.
--------------------------------
11 ஜனவரி 2007
முதல் பரிசு:
இலவசக்கொத்தனார்: 9 புள்ளிகள் (வயலினாரைச் சொன்னதற்காக ஷொட்டு சொன்ன மாதிரியே :))
இரண்டாம் பரிசு:
கே.ஆர்.எஸ்: 8 புள்ளிகள்
மூன்றாம் பரிசு:
இராதா ஸ்ரீராம், ஸ்ரீதர் வெங்கட்: 5 புள்ளிகள்
ஆறுதல் பரிசு:
ஜிரா, சின்ன அம்மணி
நல்ல பரிசை ஏன் தனியாகக் கொடுப்பது? எல்லோருக்குமே தந்துவிடுகிறேனே.
முதல் பரிசாக கொத்ஸுக்கு இதோ விசாகா ஹரியின் இரண்டரை மணி நேர சொற்பொழிவு தியாகராஜரைப் பற்றி.
1, 2, 3, 4
இரண்டாம் பரிசாக கே.ஆர்.எஸ்-க்கு ஓ.எஸ். அருணின் கண்ணன் பாட்டு!
1
2
மூன்றாம் பரிசாக இராதா ஸ்ரீராம் மற்றும் ஸ்ரீதர் வெங்கட்டுக்கு சௌம்யாவின் ஜாவளி!
1
ஆறுதல் பரிசாக ஸ்பெஷல் ஸ்ரீராம் கங்காதரனின் 'சிதம்பரம் போகாமல்'!
1
-----------
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
பங்குகொண்ட அனைவருக்கு மிக்க நன்றி!