174. பூச்சி காட்டட்டுமா?

காமிரா வச்சுருக்கவங்க எல்லாரும் அப்பப்போ மாக்ரோ எடுத்து அலட்டறது வழக்கம். நான் மட்டும் விதிவிலக்கா என்ன? இதோ சில பூச்சீஸ்.

கைல எடுக்கறது பிடிக்காதுன்னாலும், பூச்சீஸ காமிரால்ல எடுக்க ரொம்பவே பிடிக்கும். எத்தன வண்ணங்கள் எத்தனை டிஸைன்கள்னு கணக்குவழக்கே இல்லாம படைச்சு வச்சுருக்கான். பூச்சிகள்னு சொன்னாலே பலருக்கு ஏதோ தங்க கைல தான் ஏதோ நெளியறாப்போல இருக்கும். ஆனா பாருங்க, அதுங்க இருக்கறது ஒரு தனி உலகம். honey i shrunk the kids னு அந்தக் காலத்துல ஒரு குழந்தைங்க படம் உண்டு. சைண்டிஸ்ட் அப்பா எதையோ செய்யப்போக குழந்தைங்க எல்லாம் அரிசி சைஸுக்கு ஆயிடுவாங்க. டினோசார் மாதிரி கட்டெறும்புகளும், திமிங்கிலம் மாதிரி கரப்பான்பூச்சிகளும், பெரிய பெரிய மரங்கள் மாதிரி புற்களும்னுட்டு பயங்கர தமாஷா இருக்கும்.

பூச்சிகளும் நாமளும் ஒரே பூமியில இருந்தாலும் நம்ம கண்ணுக்குத் தெரியாத உலகம் அதுங்களோடது. வீட்டுத் தோட்டத்துக்கு போய் ஒரு அஞ்சு நிமிஷம் நின்னு சுத்தி முத்தி பாத்தா தான் தெரியும். இக லோகம் பரலோகம் மாதிரிதான் தத்துவார்த்தமா சொன்னாக்க. நின்னு கவனிச்சாத்தான் கண்ணுக்கே புலப்படும். அவசர வாழ்க்கையில எங்க இருக்கு நேரம்?னு சலிச்சுக்கறீங்களா.. ஹூம்.. என்ன செய்ய..

அரேபிய பாலைவனங்களா, அமெரிக்க வைல்ட் வெஸ்டா, சைபீரியன் பைக்கல் ஏரியா, ஆர்க்டிக் பனிமலைகளா, இந்திய சமவெளிகளா, ஆஸ்திரேலியாவின் டவுன் அண்டரா, பிஜித்தீவுகளா, ஆப்பிரிக்க காடுகளா, ஸ்காண்டினேவியன் பியார்டுகளா, கனேடிய ராக்கீஸா, தென்னமெரிக்க அமேசோனா, கரீபியன் கடற்கரைகளா, மங்கோலியன் ஸ்டெப்பீஸா? எதைப் பார்ப்பது எதைவிடுவது என்று தெரியாமல் எத்தனை ஆயிரம் ஜென்மம் எடுத்தாலும் பார்த்து முடிக்க முடியாத அளவுக்கு எழிலும் வண்ணமும் கொஞ்சும் உலகத்துல பிறக்க கொடுத்துவச்சுருக்கோம். ஆனாலும் நின்னு நிதானமா ஒரு நொடி ரசிக்கக்கூட முடியாம அப்படி என்னதான் ஓட்டம் வேண்டிக்கிடக்கோ தெரியவேயில்லை. நாமளே ஏற்படுத்திகிட்ட ஓட்டம். எல்லையில்லா ஓட்டமாகி சற்று தள்ளியிருந்து பார்த்தால் கொஞ்சம் சாடிஸ்டிக்காகவும் இருக்கிறது. நாய்க்கு ஒருவேலையும் இல்லையாம், அலைச்சலுக்கு மட்டும் குறைச்சலும் இல்லையாம் னு சொல்ற மாதிரி ஒரு ஓட்டம்.

நான் என்னவோ எழுதிக்கிட்டிருக்கேன். நீங்களும் கடனேன்னு படிச்சுகிட்டிருக்கீங்க. இத்தோட ஸ்டாப்பு. இனி படம் மட்டும் பாருங்க.

20 Comments:

 1. இலவசக்கொத்தனார் said...

  என்னய்யா 'உம்ம' படத்தை மாத்திட்டீரு? நல்ல வேளை அங்கயும் ஒரு பூச்சியைப் போடாமப் போனீரே.

  சரிதான், மேட்டர் எதுவும் இல்லைன்னு இப்படி போட்டோவா போடறீரே. என்ன அக்குறும்பு இது?


 2. Anonymous said...

  படம் நல்லாருக்குங்க .சின்னதுல ஒரு கதை படித்ததாக ஞாபகம்.அதில் சின்ன பையன் ஒருத்தன் தாத்தாவோட மந்திர புத்தகத்தை படிச்சு சின்னதாகிடுவான்.தோட்டத்தில் இருக்கும் ஒவ்வொரு பூச்சியாய் பார்த்து அது எப்படி வாழும்ன்னு தெரிஞ்சுக்குவான். சுவர்கோழி வாயிலிருந்து சத்தம் குடுக்கல..அதோட காலும் இறக்கையும் உராயரதால தான் சத்தம் வருதுன்னு பார்த்துட்டு இத்தனை இருக்க ரசிக்க தெரியாம இருந்தோமேன்னு யோசிப்பான்.


 3. ramachandranusha(உஷா) said...

  ருஷ்யாக்காரரே, படம் ஓ.கே. ஆனா அது என்ன ஆரம்பத்துல ஓரே தத்துவ விசாரணை. இதுக்குத்தான் ஜிராமாதிரி ஆளுங்கக்கூட அதிக நட்புக்கூடாதுன்னு சொல்லுவது :-)))))))))))


 4. மணியன் said...

  நல்லாவே பூச்சி காட்டுறீங்க!! அண்ணாந்து பார்த்த கோபுரங்களுக்குப் பிறகு மண்ணில் தேடும்படி பூச்சிகளை காண்பித்து உங்கள் படம் பிடிக்கும் பரிமாணத்தை வெளிப்படுத்தியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்!

  அது எப்படி 175ஆம் இடுகைக்குப் பிறகு 174 வருகிறது ?


 5. ENNAR said...

  பரவாயில்லை சுமார் 25 மார்க் கொடுக்கலாம் இன்னனும் நல்லா நாங்கள் பார்க்காத பூச்சிகளை படம் பிடித்துப் போடுங்கள்


 6. குமரன் (Kumaran) said...

  படங்களை விட தத்துவார்த்தமா எழுதியிருக்கீங்களே அதைப் படிச்சு சிந்திக்கத் தொடங்கிவிட்டேன்.


 7. இயற்கை நேசி|Oruni said...

  //எல்லையில்லா ஓட்டமாகி சற்று தள்ளியிருந்து பார்த்தால் கொஞ்சம் சாடிஸ்டிக்காகவும் இருக்கிறது. நாய்க்கு ஒருவேலையும் இல்லையாம், அலைச்சலுக்கு மட்டும் குறைச்சலும் இல்லையாம் னு சொல்ற மாதிரி ஒரு ஓட்டம்.//

  ;-) இதுவும் நல்லாருக்கு. உங்கட ஃபோட்டோக்களும் நல்லாருக்கு. இரண்டாவது மாத்தோட படம் ரொம்பவே out of focusஆன மாதிரி இருக்குது. ஜமாய்ங்க...


 8. G.Ragavan said...

  இராமநாதன்...இந்தப் படமெல்லாம் நீங்களே எடுத்ததா? நல்லாவே வந்திருக்கு.

  // ramachandranusha said...
  ருஷ்யாக்காரரே, படம் ஓ.கே. ஆனா அது என்ன ஆரம்பத்துல ஓரே தத்துவ விசாரணை. இதுக்குத்தான் ஜிராமாதிரி ஆளுங்கக்கூட அதிக நட்புக்கூடாதுன்னு சொல்லுவது :-))))))))))) //

  ஆகா...உஷா....இதெல்லாம் நாயமா? நான் சரக்கே இல்லாம ஒன்னுமில்லாத விரிச்சி எழுதுறேன்னு நீங்கதான் சொன்னீங்க. அதான்...தீபாவளிக்கு ஊருக்குப் போன பதிவைச் சொல்றேன். இங்க என்னடான்னா தத்துவ விசாரணை என் தலைமேல நடக்குது!


 9. துளசி கோபால் said...

  த பாரோயர்ஸ் ( கடங்காரங்களா? ) ன்னு ஒரு புத்தகம் கிடைச்சாப் படிச்சு பாருங்க.

  படங்கள் சூப்பரா இல்லென்னாலும் சுமாரா 'நல்லாதான்
  இருக்கு.:-)))
  காக்கா புடிக்கிறதுக்குப் பூச்சி புடிக்கறது எவ்வளோ தேவலாம்தான்:-)


 10. ரங்கா - Ranga said...

  இராமநாதன்,

  இன்னும் அதிகமா படம் காமிங்க. சின்ன வயசுல Science for Childrenந்னு ஒரு திட்டத்துல சின்ன மைக்ராஸ்கோப் வாங்கி கொடுத்தார் எங்க அப்பா. அதை வச்சுக்கிட்டு எறும்பு, பேன், பேர் தெரியாத பூச்சிங்க இதெல்லாத்தையும் பாத்திருக்கேன். தக்குணூண்டுக்கு இருக்கும் ஒடம்புலயே எக்கச்சக்க சிக்கலான விஷயம் - கால், இறக்கை, மீசை மாதிரி - எல்லாம் பாத்து அசந்து போயிருக்கேன்.

  ரங்கா.


 11. rv said...

  கொத்ஸு,
  ஹி ஹி.. புதுப்படம் நல்லாருக்கா? நம்ம தலீவரு தான் இவ்ளோ பாஸ்டா ஓட்ட மாட்டேங்குறாரு. அதான் படமாவது போட்டுவைப்போம்னுட்டு.

  மேட்டர் இல்லேன்னா படம் காட்டுறது தொன்றுதொட்டு நடந்துவரும் விடயம் தானே. அதுக்காக சிலர் ஒண்ணுமே எழுதாம வெறும் போட்டோ பதிவு மட்டுமே வச்சுருக்காங்களேன்னு கேக்கப்படாது. ( பரணீ அடிக்க வர்றதுக்குள்ள எஸ்கேப்பு)


 12. rv said...

  லக்ஷ்மி,
  கதை நல்லாருக்கு. நாமும் அப்படியிருந்தா எப்படி இருந்திருக்கும்னு கற்பனை செஞ்சு பார்க்க இனிஷியலா நல்லாருந்தாலும், ராட்சச சைஸ்ல எட்டுக்கால்பூச்சியோடல்லாம் சண்டை பிடிக்கற நிலைமை வந்தா என்ன ஆவறதுன்னு நினச்சாலே குலை நடுங்குது. (காப்பாத்தறதுக்கு அழகான இளவரசியாட்டம் யாராவது இருந்தாலும் சந்தேகம் தான். பின்ன இவ்ளோ ரிஸ்க் எடுத்து காப்பாத்தி கல்யாணம் பண்றதுக்கு குடுத்துவைக்காம பூச்சி ஸ்வாகா செஞ்சுருச்சுன்னா?)


 13. rv said...

  உஷா அக்கா,
  தத்துவ விசாரணை எல்லாம் இருந்தாலே மெயில் அனுப்பிச்சு ஆள் பிடிக்க வேண்டியிருக்கு. (அஹெம்.. )அப்ப வெறும் படம் மட்டும் போட்டாக்க இந்த பதிவுக்கு ஒரு பின்னூட்டம் விடணும்னுட்டு உங்களுக்கு தோணியிருக்குமா?


 14. rv said...

  மணியன்,
  நீங்க அரசியல் பேச்சாளராப் போயிருக்கலாம். பின்ன
  //அண்ணாந்து பார்த்த கோபுரங்களுக்குப் பிறகு மண்ணில் தேடும்படி பூச்சிகளை காண்பித்து//
  னு எதேச்சையா நடந்ததுக்கெல்லாம் அர்த்தம் கண்டுபிடிச்சு இப்படி புல்லுலேர்ந்து எல்லாத்தையும் அரிக்க வைக்கறீங்க.

  நன்றி நன்றி நன்றி!!

  இது கொஞ்ச நாள் முன்னாடி ட்ராப்டா வச்சிருந்தது. அதுக்குள்ள கார்த்திகை சோமவாரம் வந்துட்டதுனால 175 முன்னாடி வந்துருச்சு. கணக்கெல்லாம் முன்ன பின்ன இருந்தா மன்னிச்சு விட்டுடக் கூடாதா?


 15. rv said...

  என்னார்,
  25 மார்க்கா.. ஜஸ்ட் பாஸுக்கே ரொம்ப மெனக்கெடணும் போலிருக்கே.


  நீங்க பார்க்காத பூச்சி எதுஎதுன்னு லிஸ்ட் கொடுத்தீங்கன்னா படம் புடிச்சு போடறதுக்கு வசதியா இருக்கும்..


  (கோச்சுக்காதீங்க என்னார்.. சும்மா டமாஸு)


 16. rv said...

  கும்ஸ்,
  உங்களுக்குத்தான் படம் காட்டினாலே புடிக்காதே.. உங்கள மாதிரி ஆளுகளுக்காகவே எழுதினதுதான். பாருங்க, நீங்க கூட ஏதோ மேட்டர் இருக்குன்னு நினச்சு ஏமாந்திட்டீங்க. :))


 17. rv said...

  இயற்கைநேசி,
  மிக்க நன்றி.

  அதுக்கு பேரு depth of field. super macro modeல எடுக்கையில அப்படிதான் வரும்.

  இங்க பாருங்க
  1
  2


 18. rv said...

  ஜிரா,
  நம்மள மாதிரி மெகா சீரியல் எழுத்தாளர்கள்னாலே சிற்றிலக்கியவாதிகளுக்கு இளக்காரமா போச்சுப்பா..!

  நாம என்ன எழுதினாலும் கிண்டல் செய்றாங்க.


 19. rv said...

  அக்கா,
  கடன்காரங்கள் பத்தின புஸ்தகத்த கடன் வாங்கியாவது பாக்கறேன்.

  //சூப்பரா இல்லென்னாலும் சுமாரா 'நல்லாதான்
  இருக்கு.//
  நன்னி.


  //காக்கா புடிக்கிறதுக்குப் பூச்சி புடிக்கறது எவ்வளோ தேவலாம்தான்:-)
  //

  :)))))))))


 20. rv said...

  ரங்கா,
  நீங்களாவது பரவாயில்ல. சும்மா பார்த்து விளையாடிருக்கீங்க.

  பிஸியாலஜில உயிருள்ள தவளைய தொட்டிக்குள்ளே இறங்கி புடிச்சு அது உசுரோட இருக்கறப்போவே வாய்க்குள்ள கத்தரியவிட்டு தலைய கட் பண்ணச்சொல்லி அதோட உயிரோட சேர்த்து நம்ம உயிரையும் வாங்குவாங்க. அதுக்கப்புறமும் எலெக்ட்ரோட் வச்சு அதோட myogram எடு, ஆக்ஷன் பொடென்ஷியல் என்னனு கண்டுபிடின்னு போட்டு படுத்துவாங்க. இந்த ஸ்டோரிய இதுக்கு மேல பொதுநலன் கருதி கண்டினியு பண்ணாம நிறுத்திக்கறேன்.

  நீங்க சொல்றா மாதிரி ஒவ்வொண்ணும் ஒரு அதிசயம் தான்.

  நன்றி


 

வார்ப்புரு | தமிழாக்கம்