171. எப்படி எப்படி எப்படி?

ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்
அது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்?

இந்தா இந்தா அங்கே பாரு தெரியும்
கண்ணை இழுத்து வளைச்சி படிச்சிப் பாரு புரியும்! - ஏய்
இந்தா இந்தா அங்கே பாரு தெரியும்
கண்ணை இழுத்து வளைச்சி படிச்சிப் பாரு புரியும்!

நினைக்க நினைக்க கிறுகிறுங்குது
கண்கள் பட்டதும் நினைப்பு வந்தது
கைகள் தொட்டதும் கனிந்துவிட்டது
ஒன்று பட்டது வென்று விட்டது

கிறுகிறுங்குது குறுகுறுங்குது
குளுகுளுங்குது ஜிலுஜிலுங்குது

இந்தா இந்தா அங்கே பாரு தெரியும்
கண்ணை இழுத்து வளைச்சி படிச்சிப் பாரு புரியும்!
ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்
அது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்?

இதுக்கும் அதுக்கும் சம்பந்தமே கிடையாது.


குறிப்பு:

இப்பதிவிற்கு கண்டிப்பாக பின்னூட்டம் இடக்கூடாது. மீறினால் தண்டிக்கப்படுவீர்!

20 Comments:

 1. இலவசக்கொத்தனார் said...

  ஏங்க பின்னூட்டம் போடக்கூடாது?


 2. நாகை சிவா said...

  எப்படி என்ன தண்டனை தான் கொத்துஸ்க்கு குடுக்க போறீங்க என்பதை பாக்க வந்து இருக்கேன் சாமியோவ்...


 3. நன்மனம் said...

  //குறிப்பு:

  இப்பதிவிற்கு கண்டிப்பாக பின்னூட்டம் இடக்கூடாது. மீறினால் தண்டிக்கப்படுவீர்! //

  இட்டாயிற்று... இப்பொழுது என்ன செய்வதாக உத்தேசம்....

  என்னாபா மீறினால் தண்டிக்கப்படுவீர்னு போட்டா அங்கிட்டு வந்து மீறலனா என்னா மனுஷம்பா அவன் தில்லில்லாம....

  :-)


 4. நன்மனம் said...

  //எப்படி என்ன தண்டனை தான் கொத்துஸ்க்கு குடுக்க போறீங்க என்பதை பாக்க வந்து இருக்கேன் சாமியோவ்... //

  ஒரு மார்கமாதான் திரியராய்ங்க பா...
  :-)


 5. rv said...

  கொத்ஸு,
  ஏன் போடக்கூடாதுன்னு கேட்டு ஒரு பின்னூட்டமா?

  எல்லா இடத்திலேயும் ஏன் கேப்பீங்களா?


 6. rv said...

  நாகை சிவா,
  கொத்ஸ வச்சு கொத்து பரோட்டா போடுவோம்னு நினச்சு வந்தீயளா புலியாரே? அங்கயும் இப்படித்தான் தலைவர் தலைவர்னு சொல்லிச் சொல்லி ஆப்பு வக்கறீங்க.


 7. rv said...

  நன்மனம்,
  // இப்பொழுது என்ன செய்வதாக உத்தேசம்....
  //
  அஸெர்பைஜான்லா இருந்தா ஆட்டோ வராதா? கறுப்பு மெர்சிடிஸ் ஜீப் வரும் தெரியும்ல?? நம்மூர்ப்பக்கம்லாம் அதானே "ஆட்டோ" :))


 8. rv said...

  நன்மனம்,
  //ஒரு மார்கமாதான் திரியராய்ங்க பா...
  //
  புலியார் யாரையாவது பிராண்டிகினே இருக்கணும்னு நினக்கிறார்.


 9. தொண்டன் said...

  \\இப்பதிவிற்கு கண்டிப்பாக பின்னூட்டம் இடக்கூடாது. மீறினால் தண்டிக்கப்படுவீர்!\\

  ஆமா! ஆமா தலை போட்ட அர்ஞ்சு ஜுஸ் குடிச்சு மயக்கமா இருக்கும். அதுனால்தானோ?.


 10. தாணு said...

  நியாயமா மருமகரே? என்னைக்கோதான் பதிவு பக்கம் வர முடியுது. பின்னூட்டம் கூடக் கொடுக்காட்டி idendity ஐ எப்படி வெளிப்படுத்தறது?


 11. கைப்புள்ள said...

  //இதுக்கும் அதுக்கும் சம்பந்தமே கிடையாது.//

  ஏங்க உங்க பேரும் தானே விகிபசங்கள்ல இருக்கு? இல்ல நீங்க விகிபசங்கள்ல கொத்ஸ் சமைச்சி வச்சா வந்து சாப்புட்டுட்டு மட்டும் போற விசிட்டிங் ஃபேகல்டியா?
  :)


 12. நாமக்கல் சிபி said...

  :))))


 13. நாமக்கல் சிபி said...

  :))))


 14. துளசி கோபால் said...

  பின்னூட்டம் கூடாதா?

  ஏன்? ஏன்?ஏன்?ஏன்?ஏன்?ஏன்?ஏன்?ஏன்?


 15. rv said...

  நாலு நாளா பெஞ்ச மழயில டெலிபோன் வயரெல்லம் நஞ்சு போச்சாம். அதுனால நம்ம வீட்டு நெட்டு அவுட்டு. உங்க பின்னூட்டத்துக்கெல்லாம் பதில் சீக்கிரம் போடுறேன், கோச்சுக்காதீங்க.

  (சுரதால இங்கிலிஷ்ல தட்டி அத தமிழ்ல மாத்தறதுக்குள்ள தாவு தேர்ந்துடுது)


 16. rv said...

  சடையப்பா,
  யாருய்யா நீர்? நம்ம மேட்டரெல்லாம் தெரிஞ்சு பின்னூட்டமிடறீரா இல்ல சும்மானாச்சுக்கும் சொல்லிவக்கிறீரான்னு எனக்கு அடிவயிறு கலங்குது!

  அதுனால இனிமே உமக்கு எல்லாமே 'நோ கமெண்ட்ஸ்' பாணி பதில் தான். :))


 17. rv said...

  அத்தை,
  அதான் ஏன் போடக்கூடாதுன்னு கேட்டு போட வச்சாச்சுல்ல.. ஆச்சு! ;)


 18. rv said...

  கைப்பு,
  விசிட்டிங் விக்கி டகால்டி. அவ்ளோதான்.

  சம்பந்தமில்லேன்னாலும், உருளக்கிழங்கு பொடிமாஸ் ஜாஸ்தி சாப்பிட்டா சிகுன் குனியா வருமான்னு கேக்கற மாதிரி கேட்டா என்ன சொல்றதாம்?


 19. rv said...

  சிபி,
  தங்களுடையதைப் போன்ற கருத்துள்ள பின்னூட்டங்கள் வலையுலக பின்னூட்டங்களை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்கின்றன என்று சொல்லி வாழ்த்துகிறேன். நன்றி! :))


 20. rv said...

  டீச்சர்,
  ஸ்டூடன்ட்ஸ் தான் ஏன்னு கேக்கணும். நீங்க கேக்குறீங்க?


 

வார்ப்புரு | தமிழாக்கம்