நான் ஒரு இந்து!

வலையில் மட்டுமில்லாம மிச்ச எல்லா இடத்திலேயும் இதப்பத்தி பேசிப்பேசி ஒய்ந்து விட்டிருப்பார்கள் என்றாலும் ப்ளாக் பண்ணனும்னு தோணினதால பண்றேன். நான் இந்து என்று சொல்வதற்கு நம்மில் பலரும் பெருமையாச் சொல்றதில்லைன்னு நினைக்கிறேன். இந்து என்றாலே இந்து அடிப்படைவாதிகள் என்ற நிலைப்பாட்டிலேயே பி.பி.சி போன்றவையே சொல்கின்றன. இத்தனைக்கும் மிகவும் tolerant-ஆன ஒரு மதத்தை வாய்க்கூசாமல் மற்றவர் சொல்லும் நிலைக்கு வந்துவிட்டோம். என்னைப் பொறுத்தவரை நான் ஒன்னும் பெரிய believer கிடையாது. கிட்டத்தட்ட humpty-dumpty நிலைதான் எனக்கும். இருந்தாலும் ஒரேயடியா இந்துமதமென்றாலே ஜாதியை மட்டுமே முன்னிறுத்தி தூற்றுவோர் நிறையப்பேராகி விட்டனர். இதில் பாதி உண்மை பாதி பொய். எது என்னவென்பது விளங்காததால் தான் purpose of life-ஐ தேடிக்கொண்டிருக்கிறோம். என்னைப்பொறுத்தவரை கடவுள்களை நம்பினாலும் நம்பாவிட்டாலும் இந்து என்பதை என்னுடைய identity-களுல் ஒன்றாக நினைக்கிறேன்.

அதென்னமோ விஹெச்பியை எதிர்க்கும் அளவுக்கு (அவர்கள் அடிப்படைவாதிகள் என்பதில் ஒரு சந்தேகமுமில்லை) மிச்சவற்றை பற்றி நாம் கவலைப்படுவதில்லை. இந்துக்களாகிய நாம் இந்த விஷயத்தில் post-war ஜெர்மனியர்கள் போல் 'நாங்கள் அவர்களில்லை' என்ற மனோபாவத்திலேயே நம் மதத்தை (இவ்விடத்தில் கலாச்சாரத்தை) தூற்றுகிறோமென்றே எனக்கு சில நேரம் படுகிறது. மீடியாவும் ஒரு வித pseudo-secular uber-sensitive attitude-ஐ இந்துக்களிடத்தில் காண்பிக்கின்றன. எல்லா மதங்களிலும் சில காலத்திற்கொவ்வாத விடயங்கள் இருக்கத்தான் செய்கின்றது. வர்ணாசிரமம் என்பது எதற்காக உருவாக்கப்பட்டது என்பதே சரியாக தெரியாத நிலையில் அதன் தற்போதைய கோர ரூபத்தை மட்டுமே கொண்டு இந்துக்கள் என்றாலே pagan and inferentially fundamentalists என்ற மேற்க்கத்திய நோக்கும் இதற்கு காரணமாக இருக்கலாம். இதில் மேற்க்கத்திய, குறிப்பாக ஐரோப்பிய நாடுகளுக்கு அவைகளின் மதங்களும் அதன் கடவுள்களுமே உண்மையான வழியென்றும் அதைப் பின்பற்றுவதாலேயே intellectual center of humanity அவைகளே என்ற நம்பிக்கையும் முக்கியமானது(கிரேக்கர்களும் இப்போது இ.யூ. வில்!). அப்படிப்பட்ட மேற்க்கத்திய ஆதிக்கநாடுகளுக்கு பலவாயிரம் ஆண்டுகளாய் continuous-ஆக அவற்றிற்கு இணையாகவும் சில விஷயங்களில் மேலாகவும் வேறோரு சமுதாயம் இருந்திருக்கிறது என்பது மட்டையடி போன்றது. இதனால் இப்போது பேசிப்பேசிப் புளித்துப்போய் விட்ட aryan invasion போன்ற விஷயங்களையும் கட்டவிழ்த்து விடுவதில் inherent bias இருந்திருக்கவேண்டும் என்பது லாஜிக்கலான விஷயம்.

அதனாலேயே வெறும் ஒரு விஷயத்திற்காக, உலகத்திற்கு அறிவியலில், தத்துவத்தில், தெய்வீகத்தில் இந்துக்களின் பங்களிப்பு இருட்டடிப்பு செய்யப்படுகின்றது. செய்பவர் பலர் நம்மாட்கள் தான். அதுதான் வருத்தமாயிருக்கிறது. நான் இந்து என்று பெருமைப்பட்டு சொல்வதினாலேயே நான் விஹெச்பி ஆளில்லை. இந்த புரிதலில்லாமல் இருப்பது ஒரு fashion ஆகவும் போய்விட்டது என்பதென் தாழ்ந்த கருத்து. இந்தியன், தமிழன் இப்டியெல்லாம் politically correct identity-களை விட்டு எதுக்கு இதப்பத்தி பதிவு என்று நீங்கள் நினைத்தால் அதற்கு பதில் நானல்ல.. அன்னி பெசண்ட் தருகிறார்.

"Hinduism is the soil into which India's roots are struck, and torn of that she will inevitably wither, as a tree torn out from its place. Many are the religions and many are the races flourishing in India, but none of them stretches back into the far dawn of her past, nor are they necessary for her endurance as a nation. Everyone might pass away as they came and India would still remain. But let Hinduism vanish and what is she? A geographical expression of the past, a dim memory of a perished glory, her literature, her art, her monuments, all have Hindudom written across them. And if Hindus do not maintain Hinduism, who shall save it? If India's own children do not cling to her faith, who shall guard it? India alone can save India, and India and Hinduism are one."

என்னமோ எழுதப்போய்.. ஒரு விஷயத்திலும் focus இல்லாம கச்சாமுச்சானு பதிவாக்கிவிட்டேன்..என்னடா இன்னோரு ஆர்.எஸ்.எஸ் invasion-ஆன்னு நீங்க தலையில் அடிச்சுக்கொள்வதற்கு முன்னர் ஓடிவிடுகிறேன். பலரும் தமிழ்மணத்தில் சுட்டி பார்த்து நினைத்திருப்பீர்கள். அதுதான் இந்தப்பதிவின் நோக்கே.

7 Comments:

 1. Thangamani said...

  //வர்ணாசிரமம் என்பது எதற்காக உருவாக்கப்பட்டது என்பதே சரியாக தெரியாத நிலையில்//

  Whether you don't know or you don't want to know.. That makes the difference.


 2. Narain Rajagopalan said...

  இந்த வார தெஹல்கா பாருங்கள் இராமநாதன். உங்களுக்கு விஷயம் புரியும். சும்மா யாரும் pseudo-secular uber-sensitive attitude காண்பிக்கவில்லை.
  நீங்கள் ஹிந்துவாக இருப்பதில் எவ்வித ஆட்சேபணைகளுமில்லை. ஆனால், ஹிந்துவாய்,மனிதனாய் இருங்கள் என்பது தான் நிறையபேரின் கூப்பாடு.


 3. Anonymous said...

  secularists oppose hindutva and other religious fundamentalisms, not hindu religion.secularists in india accept kabir,subramania bharathi,vallalar,guru nanak but reject rss and vhp.so try to understand the difference.


 4. Anonymous said...

  தலித் இலக்கியம்(சுய தம்பட்டம்) என்ற பெயரில் எழுதி வரும் பிரிவினை வாதிகளைப்பற்றி என்ன நினக்கிறீர்கள்?


 5. rv said...

  பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி. இதில் வர்ணாசிரமம் என்பது எல்லோருக்கும் புரியும் நிலையில் இல்லை என்பது என் கருத்து இன்னமும். பல நிலைகளில் முற்போக்கானதொரு மதம் ஏன் இன்னுமொரு ஒரு சில விஷயங்களில் பிற்போக்கானதொரு நிலைப்பாட்டை வைத்திருக்கும் என்பது புரியாத புதிர்.

  மேலும் தலித் மேம்பாட்டை எதிர்ப்போர் ப்ராமணர்கள் அல்லர். பிற்படுத்தப்பட்ட மிச்ச ஜாதிகளுக்கும் தலித்துகளுக்கும் போராட்டமேயன்றி, எவ்வகையிலும் இதில் பிராமணர்களுக்கும் இதில் சம்பந்தமில்லை. இதை எதிர்ப்போர் தேவர் மற்றும் ஏனைய சமூகங்களே. இது த்ற்போதைய நிலை.

  recent times-இல் பிராமணர்கள் எவ்வகையிலும் சாதி பிரச்சனையில் ஈடுபட்டதற்கான அறிகுறிகளில்லை எனபது தெள்ளத் தெளிவானதொரு விஷயம்.

  ஆனாலும் பிராமணர்களே எல்லாவற்றிற்கும் காரணமாக கருதப்படுவடுவது வருத்தற்குரியது.


 6. T.N.Neelan said...

  ஜாதிக்கலவரங்களின் 'கீ பிளான்' வர்ணாசிரமம் கொள்கை அல்லவா? அதனை தலையில் தூக்கி வைத்திருப்பது பிராமணியம் தானே?

  கண்டிக்கப்படுவது பிராமணியம் மட்டுமே. பிராமணர்கள் அல்ல.


 7. முத்துகுமரன் said...

  நீலன் சொன்னதில் நான் முழுமையாக ஒத்துப்போகிறேன்..

  சாதிய பிரச்சனைகளுக்குகு அடிப்படை காரணமே வர்ணாசிர்ம தர்மம்தான். அதுவகுத்த படிநிலைகளே இன்றும் இந்தியாவில் சாதி ஒழியாமைக்கு காரணம். நீங்கள் களத்தில் நிற்பவர்களை குற்றம் சாட்டுகிறீர்கள், ஆனால் வசதியாக அதற்கு காரணமானவர்களை விட்டுவிடச் சொல்லுகிறீர்கள்....

  நேரிடையாகவே சொல்லலாமா?. நீங்கள் குறிப்பிடுவர்கள் எப்போதுமே நேரிடையாக சண்டைக்கு வருவதில்லை. ஏனென்றால் அது அவர்கள் தொழிலல்ல. அதுவே அவர்களுக்கு வதிக்கப்பட்ட நீதி.

  வேறென்னத்த நான் சொல்ல எனக்கும் முத்திரை குத்திவிடுங்கள்...


 

வார்ப்புரு | தமிழாக்கம்